தமிழகத்தின் எதிர்காலம் என இளைஞர்களால் வருணிக்கப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் நம் வலைப்பூவிற்கு நேர்முகம் அளித்துள்ளார். அப்பேட்டியை வாசகர்களுக்கு ஒரு தொடராக அளிக்கவிருக்கிறேன். தொடர்ந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிகுமார் அவர்களும், பதிவரும் முன்னாள் போராளியுமான திரு. சாத்திரி அவர்களும், பதிவுலக பிரபலம் செந்தழல் ரவி அவர்களும் அளித்த / அளிக்கவிருக்கும் பேட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன.
கடைசி மக்களுக்கான கட்சியே விடுதலை சிறுத்தைகள் இயக்கமாகும். வஞ்சிக்கப் பட்ட மக்களை அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க தோன்றிய இயக்கம் என அக்கட்சியின் அதிகாரப் பூர்வ வலைத்தளம் கூறுகிறது. 1982 -ல் தோன்றிய இவ்வியக்கம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருந்து இன்றைய தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையின் கீழ் வளர்ந்து வருகிறது (பார்க்க பெட்டி செய்தி). கொள்கைக்காரக் கட்சிகளெல்லாம் மானம் என்னும் தங்கள் வேட்டியை அவிழ்த்து தரையில் போட்டு ஓட்டுப் பிச்சை எடுத்து வருகின்ற நிலையில் தமிழகத்தின் நம்பிக்கை ஒளியாய் திகழும் விடுதலை சிறுத்தைகளின் தோள்களை பலப் படுத்துவது நம் வரலாற்றுக் கடைமை ஆகிறது.
பேட்டியிலிருந்து சில...
ஈழம் தொடர்பாக எண்பதுகளில் நிலவிய மக்கள் ஆதரவானது, அரசியல் கட்சிகளுக்கு ஈழ அரசியலை தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கியது. ஆனால் தற்போதைய நிலவரம் பெரும்பாலான கட்சிகளை பீதி கொள்ளவே செய்வது ஏன்?
ஈழச்சிக்கல் தொடர்பாக தமிழகக் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அதனால் எண்பதுகளில் நிலவிய வீரியமான எழுச்சி இப்போது இல்லை என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டுடன் இருந்தன. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் ஈழ ஆதரவில் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய அரசும் புலிகள் மீது தடை விதித்தது. புலிகளை தீவிரமாக ஆதரித்த அதிமுக இப்போது நேரெதிரான நிலைப்பாட்டுடன் உள்ளது. முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே, புலிகள் தலைவரை இந்தியாவில் விசாரிக்க வேண்டுமென்று பேசினார். போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்; அதற்கென்ன செய்ய முடியும் என்று இப்போது பேசிவருகிறார்.
திமுக -வை பொறுத்த வரையில், 'ஈழத்தை ஆதரிக்கிறோம், ஈழ மக்களை காக்கவேண்டும் என்பதில் உடன்பாடு கொள்கிறோம், ஆனால் புலிகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்' என்ற நிலைப்பாட்டுடன் உள்ளது. இருபெரும் கட்சிகளும் இத்தகு நிலைபாட்டில் இருப்பதால், ஈழ ஆதரவு உணர்வுள்ள அதிமுக தொண்டர்கள் வெளிப்படையாக செயல்பட முடியாமலும், திமுக தொண்டர்கள் கட்சி அறிவிக்கின்ற போராட்டங்களில் பங்குகொள்வது என்ற அளவிலும் தேங்கிவுள்ளனர். ஆனால் மதிமுக, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை வெளிப்படையாக செயல்படுகின்றன. இது தவிர பாஜக, இடதுசாரிகள் போன்றவை போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளவையாக இருந்தாலும் ஈழத்தையோ, புலிகளையோ ஆதரிக்கூடிய நிலைப்பாட்டை ஏற்கவில்லை.
இவ்வாறு கட்சிகளிக்கிடையே பல்வேறு நிலைப்பாடுகள் நிலவுவதால் எண்பதுகளில் இருந்த வேகம் இப்போது வெளிப்படவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ஈழ ஆதரவு உணர்வு உள்ளது என்பது உண்மை. அதனால்தான் ஈழத்தமிழரை காக்க வலியுறுத்தி முத்துக் குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன் என்று வரிசையாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்குகிற இவ்வேளையில் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் மக்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்ற எண்ணமும் கட்சிகளிடையே உள்ளது, அதிமுக -வை தவிர. இதனால் தான் காங்கிரஸ் கூட புலிகளை எதிர்த்தாலும், ஈழ விடுதலையை மறுத்தாலும் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று இப்போது கூறிவருகிறது.
ஆனால், இதையெல்லாம் மீறி தமிழ்மக்களை பொறுத்தவரை ஈழச்சிக்கலில் ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டுமென்பதிலும், ஈழவிடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்பதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளனர் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
அடக்கு முறைகளுக்கு அஞ்சாத தலைவர்கள் கூட மக்களின் தற்போதைய ஈழ ஆதரவை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கத் தயங்குகின்றனர். வெளிப்படையான மற்றும் உண்மையான ஈழ ஆதரவு அவர்களுக்கு அரசியல் லாபத்திற்கு பதிலாக அரசியல் தற்கொலைக்கு இட்டுச்சென்று விடுமா என்ன?
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு புலிகளை முழுமையாக நசுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. புலிகளை ஆதரித்தால் இந்திய அரசுக்கெதிராக அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. இதனால் அரசியல் ஆதாயம் பாதிக்கப் படும் என்று கூட சில சமயங்களில் எண்ணுகின்றன. ஆனால் தமிழீழ விடுதலை புலிகளை ஆதரிக்கும் கடசிகளுக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்குவார்கள் என்பதுதான் உண்மை. அரசியல் கட்சிகளின் தலைமைகள் இதை உணராமல் இருக்கலாம். அரசும் கடுமையான சட்டப்பிரிவுகள் மூலம் அடக்குமுறை செய்துள்ளது. தமிழ்நாட்டு ஊடகங்களும் புலிகள் ஆதரவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவனமாக செயல்படுகின்றன.
ஆகவே கட்சிகளுக்கு அச்சம் உள்ளது உண்மைதான். அது அரசியல் தற்கொலையாக ஆகிவிடுமோ என்றும் சில கருதுகின்றன.
இந்தியாவை பணிய/ஒதுக்கி வைத்து விட்டு அமெரிக்கா உள்ளிட்ட எந்த சர்வதேச சக்தியும் ஈழப் பிரச்சினையில் ஆக்கப் பூர்வமாக தலையிட முடியாது என்ற நிலையில் தற்போதைய போராட்டங்கள் எதை இலக்காக வைத்து முன்னெடுக்கப் படவேண்டும்?
தற்போதைய போராட்டம் இந்திய அரசை பணிய வைத்து சிங்கள அரசை நெருக்கடி செய்து போர் நிறுத்தத்தை செய்ய வைப்பதையே இலாக்காக கொள்ளவேண்டும். இலங்கைப்பிரச்சினையில் தனியாக தமிழகம் தலையிடமுடியாது. இந்திய அரசுதான் தலையிட்டாகவேண்டும். இந்திய அரசோ சிங்களவருக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவிற்கு அண்டையில் சீனாவும் பாகிஸ்தானும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. தெற்கே இலங்கையும் பகைநாடாகிப் போனால் பாகிஸ்தானோ, சீனாவோ அல்லது வேறெந்த பகைனாடோ அங்கு ராணுவத்தளம் அமைத்துவிடக்கூடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உள்ளது. இந்த அச்சம் நியாமானதுதான் என்றாலும் சிங்களனுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழர்களை அழித்தொழிப்பது நியாமானதல்ல.
மேலும், ஒருபுறம் அச்சம். மறுபுறம் அதன் ஆதிக்க வெறி. இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளை தம் கட்டுப் பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற ஆதிக்க வெறி. தான் நினைப்பதையே தீர்வாக வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான், ஈழச்சிக்கலில் தலையிட்டு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தந்தத்தை உருவாக்கியது. அதுதான் அத்துணை சிக்கல்களுக்கும்
அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!
1982 -ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கார் மனைவி சவீதா அம்மையார் தலைமையில் பாரதீய தலித் பாந்தர் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
மாநில பொறுப்பாளர் 1989 -ல் அ. மலைச்சாமி மரித்த பிறகு, தொல். திருமாவளவனுக்கு அப்பொறுப்பு 1991 -ல் வழங்கப்பட்டது.
பாரதீய தலித் பாந்தர் என்ற பெயரை மாற்றி ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் 1990 ஏப்ரல் 14 முதல் அழைக்கப்பட்டது.
1991 -ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் என்று பெயர் மாற்றம் பெற்றது.
1999 முதல் தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறது
தற்போதைய சட்ட மன்றில் தன் கட்சி சார்பில் இரு உறுப்பினர்களை கொண்டுள்ளது
சிங்கள அரசுடன் சேர்ந்து அதன் நட்பு நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை அல் கொய்தா போன்ற இயக்கங்களுடன் இணைத்துபார்கின்ற நிலைக்கு சர்வதேச நாடுகளை மாற்றியுள்ளன. இதனால் சர்வதேச சமூகம் சிங்கள அடக்குமுறைக்கு உதவுகின்றது அல்லது வேடிக்கைப்பார்கின்றது. புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்க வேண்டும் என்பதே நம் போராட்டத்தின் இலக்கு.
ஈழப் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் சொந்தப் பிரச்சினையாகிப் போய்விட்ட நிலையில் அந்த செவிட்டு அரசு மக்கள் கருத்தை காதில் வாங்குமா?
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை புலிகளை அழிக்க வேண்டும், பழிக்கு பழி வாங்கவேண்டும் என்று கனவு கண்டுவருவதுடன் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள்ளது என்பது அதன் தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றின. சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சிக் குழு பிரதமரை சந்தித்து முறையிட்டது. தமிழ்நாட்டிலே ஒவ்வொரு கட்சியும் தத்தமது வலிமைக்கேற்ப போராட்டங்களை நடத்தின. இவ்வளவுக்குப் பிறகும் இந்திய அரசு சிங்கள அரசை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தவில்லை என்பது அந்நாட்டின் இறையாண்மையில் இடையீடு செய்யக் கூடாது என்பதற்காக அல்ல, இப்பிரச்சினையை காங்கிரஸ் கட்சியின் சொந்தப் பிரச்சினையாக கொண்டு பழிவாங்கவே என்று நம்பக்கூடியதாக அதன் செயல்பாடு உள்ளது. இந்நிலையில் மக்களின் கருத்தை இவ்வரசு உள்வாங்குமா என்றால் வாங்காது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இதற்காக நாம் போராடாமல் இருக்கமுடியாது; குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இடைவிடாமல் போராடுவதன் மூலம் இந்திய அரசை செயல்பட வைக்கமுடியும் என்று நம்புகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் ஏன் ஈழ ஆதரவு அரசியலை தனியாக முன்னெடுக்ககூடாது? ஜெயலலிதாவுடன் இணைந்து வைகோ எவ்வாறு ஈழ ஆதரவு போக்கை தொடரமுடியாதோ அதுபோல் திமுக -வுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகளும் இவ்விசயத்தில் உறுதியாக இயங்க முடியாதல்லவா?
ஈழ ஆதரவுப் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் ஏன் தனியாக முன்னெடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புவது ஒருவகையிலே சரிதான். தமிழகக் கட்சிகளையெல்லாம் ஒருகாலத்தில் ஒன்று சேர்ப்பது என்பது பெரும்பாடாக உள்ளது என்பதை அண்மையில் உணர்ந்தோம். விடுதலை சிறுத்தைகள் தனித்தே செயல்பட்டு ஈழ ஆதரவு போராட்ட களங்களில் போராடி வந்திருக்கிறது. எத்தனையோ உண்ணாவிரத போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் என விடுதலை சிறுத்தைகள் செயலாற்றி வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு முழுதும் ரயில்மறியல் போராட்டம் நடத்தி பெரும் எழுச்சியை உண்டுபண்ணியது. பிறகு மகளிர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும், தொழிலாளர் அணியின் சார்பில் தொடர்முழக்கப் போராட்டமும், மாணவர் அணி சார்பில் பேரணிகளும் சென்னை மாநகரில் நடத்தப் பட்டன. பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அணிதிரட்டு வகையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினோம். 'இந்திய அரசே போரை நிறுத்து; ஈழத்தமிழரை காப்பாற்று' என்ற வாசகம் தாங்கிய அட்டையை சட்டையிலே குத்திக் கொண்டு ஒருமாத காலம் அதை பிரச்சாரமாக முன்னெடுத்துச் சென்றோம். பிற கட்சிகளும் அவ்வாறு போராடி வந்தன.
பிறகு, ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. அதிமுக, சிபிஎம் போன்றவை இதில் பங்கெடுக்காவிட்டாலும், அதில் சிபிஎம் கட்சி போரை நிறுத்தம் என்பதிலே உடன்பாட்டுடன் உள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் உண்ணாவிரத மேடையிலே என்னை சந்தித்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். ஆனால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைத்து செயல்பட்டாலொழிய பலன்கள் இருக்காது. எனினும் இதனால் விடுதலை சிறுத்தைகள் தனித்தே போராடித்தான் வந்துள்ளது. திமுக கூட்டணியில் இருப்பதனால் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் சுணக்கம் ஏபடும் என்று யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அடுத்த பகுதி இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாகும்
24 comments:
இடம் காலியாயிருக்கு.முதல்ல துண்டு போட்டுக்கிறேன்.
சிறப்புப் பேட்டிக்கு நன்றிகள்! முழுவதையும் பொறுமையுடன் அவதானிக்க ஆவலாக இருக்கின்றோம்... ஈழ உறவுகளின் நிம்மதியான வாழ்க்கையை விரும்புவனாக...
அருமை, வாழ்த்துக்கள்!
ஏன் ஞாயிறு அன்று ரிலீஸ்! மக்கள் பலர் லீவில் இருப்பார்களே!
பேட்டி அருமை, ஒலிநாடாவை வெளியிடும் எண்ணம் உண்டா ?
நன்றி..நன்றி..
உங்கள் கேள்விகளும் சரி, அண்ணன் திருமாவின் பதிலும் சரி...
அருமை!அருமை!அருமை!
அடுத்த பகுதியை இன்றே வெளியிட வேண்டாம். ஞாயிறு என்பதால் பலரது கவனத்திற்கு வராமலேயே போய்விடும். தயை கூர்ந்து நாளை வெளியிடுங்கள்.
//விடுதலை சிறுத்தைகள் செயலற்று வந்துள்ளது// correct this
கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கின்றது தொடர்க உங்கள் பணி
"அட" போட வைக்கின்றன உங்கள் கேள்விகள்..வாழ்த்துகள்
////இடம் காலியாயிருக்கு.முதல்ல துண்டு போட்டுக்கிறேன்.//
வாங்க ராஜ நடராஜன்
////ஈழ உறவுகளின் நிம்மதியான வாழ்க்கையை விரும்புவனாக...//
நன்றி தமிழ்பிரியன்
///அருமை, வாழ்த்துக்கள்!
ஏன் ஞாயிறு அன்று ரிலீஸ்! மக்கள் பலர் லீவில் இருப்பார்களே!////
குசும்பன்,
அடுத்த பகுதியை வேலை நாளில் வெளியிடுகிறேன்.
////பேட்டி அருமை, ஒலிநாடாவை வெளியிடும் எண்ணம் உண்டா ?///
இறுதிப் பகுதியுடன் சேர்த்து வெளியிடுகின்றேன் ரவி.
////நன்றி..நன்றி..//
நன்றிகள் முபாரக்
///உங்கள் கேள்விகளும் சரி, அண்ணன் திருமாவின் பதிலும் சரி...
அருமை!அருமை!அருமை!///
நன்றி அப்துல்லா!
///அடுத்த பகுதியை இன்றே வெளியிட வேண்டாம். ஞாயிறு என்பதால் பலரது கவனத்திற்கு வராமலேயே போய்விடும். தயை கூர்ந்து நாளை வெளியிடுங்கள்.///
நாளையே வெளியிடுகின்றேன்
///////விடுதலை சிறுத்தைகள் செயலற்று வந்துள்ளது// correct திஸ்////
corrected, thanks
////கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கின்றது தொடர்க உங்கள் பணி///
ஆதரவுக்கு நன்றி சாத்திரி.
/////"அட" போட வைக்கின்றன உங்கள் கேள்விகள்..வாழ்த்துகள்///
மிக்க நன்றி ஆதவன்
இளைஞர்களின் எழுச்சிதான், என்று அவர் கருணாநிதியை விட்டு வரப்போகிறார்.
அருமை, வாழ்த்துகள்!
ஆற அமர எல்லாப் பகுதிகளை படிச்சிட்டு, அப்புறமா வர்றேன்! ஒரு வேண்டுகோள். உங்கபதிவுக்கான மறுமொழிகள் திரட்டப்படுதான்னு பாத்துகிடுங்க...
நான் ஒரு தமிழ்மண வாக்கு அளிச்ச ஒடனேதான் வருது...இஃகிஃகி!
///அருமை, வாழ்த்துகள்!///
வாங்க உடன்பிறவா உடன்பிறப்பே!
////நான் ஒரு தமிழ்மண வாக்கு அளிச்ச ஒடனேதான் வருது...இஃகிஃகி!///
நன்றி!!...நன்றி!!
////இளைஞர்களின் எழுச்சிதான், என்று அவர் கருணாநிதியை விட்டு வரப்போகிறார்.//
வந்தால் நன்றாக இருக்கும், நன்றி திலீபன்
Post a Comment