Thursday, February 26, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 3

·

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களது பேட்டியின் மூன்றாம் பகுதியுடன் தொடர் நிறைவு பெறுகிறது. வேண்டுகோளின் பேரில் பேட்டியின் ஒலிவடிவம் மின்மடலாக அனுப்பிவைக்கப்படும்.

வி டுதலைப் புலிகளின் தற்போதைய பின்னடைவு எத்தகையது? இதில் இந்திய, இலங்கை அரசுகள் நிம்மதி களிப்பை அடைய உண்மையில் ஏதேனும் இருக்கிறதா? புலிகள் எதற்காகவாவது காத்திருக்கிறார்களா?

பாகிஸ்தான், இந்திய உட்பட பல்வேறு நாட்டு படையினரை எதிர்த்து புலிகள் தனியாக போரிட்டு வருகிறார்கள். படைவீரர்களின் எண்ணிக்கை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதுகிறோம். இது செட் பேக் அல்ல. ஒரு போர்த்தந்திரம். இதை இந்திய அரசும், சிங்கள அரசும் தங்களது வெற்றியாகக் கருதுகின்றன. நிலப்பகுதிகள் சிங்களபடையினர் கைகளுக்கு மாறுவது உண்டு. பிறகு மீண்டும் புலிகள் கைப்பற்றுவார்கள். தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மீது விடுதலை சிறுத்தைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுப்பார்கள்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் அல்ல என்று நிரூபிக்க விடுதலை புலிகளும் முயற்சிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை அறிந்து கொள்ள காங்கிரசும் விரும்பவில்லை. இவற்றிற்கு என்ன காரணம்?

து ஒரு முக்கியமான கேள்வி. படுகொலை நடந்த சமயத்தில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அம்மறுப்பு அறிக்கையோடு அவ்விசயம் நின்றுவிட்டது. பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரன் அதை ஒரு துன்பியலான சம்பவம் என்பதோடு சுருக்கிவிட்டார். தங்கள் நிலையை விளக்க ஏன் அவர்கள் முன்வரவில்லை

ஈழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவை பகைத்துக் கொள்ளவே கூடாது என்று நினைப்பவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ராஜீவ் காந்தி கொலையை செய்திருப்பார்களா என்பதுதான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி. இதை வெளிப்படையாக விளக்கி இருக்கவேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் கருத்துமாகும்.

உண்மையான குற்றவாளிகளை அறிந்துகொள்ள காங்கிரஸ் ஏன் விரும்பவில்லை என்ற கேள்வியும் எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு. நரசிம்மராவ் பிரதமராவதற்காக அவரது நண்பர் சந்திராசாமி அமெரிக்க உளவு நிறுவனத்துடன் சேர்ந்து சதி செய்து இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. சுப்பிரமணியன் சாமி எழுதிய புத்தகத்தில் படுகொலையில் சோனியா காந்தி அம்மையாருக்கே தொடர்பிருக்கும் என்று எழுதியிருக்கிறார். அது அச்சில் வந்திருக்கிறது.

காங்கிரஸ்காரனே ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்தான் என்பது வெளிப்பட்டுப் போனால் அது காங்கிரசுக்கே பேரிழப்பாகும். இதுதான் உண்மைநிலையை அறிய காங்கிரஸ் விரும்பாததன் அரசியல் காரணம் ஆகும்.

டுக்கப்பட்டோர் நலன், ஈழம் தொடர்பில் திமுக அனுதாபிகளை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்துவிட்டது. இனி திராவிட அரசியலில் ஒரு உறுதிப்பாட்டை கைகொள்வதன் மூலம் திமுக -விற்கு ஒரு முழுமையான மாற்று நீங்கள் என்பது அறுதியாகுமல்லவா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?

ழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆனால் அதற்காக திமுக -விற்கு மாற்று விடுதலை சிறுத்தைகள் தான் என்று சொல்லிக்கொள்ளவோ காட்டிக்கொள்ளவோ நாங்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் உண்மையான, நேர்மையான ஈடுபாடு போன்றவற்றால் உங்களைப்போன்ற தமிழ்சொந்தங்கள் ஒரு அரசியல் அங்கீராம் அளித்தாலே அதை ஒரு மகத்தான வெற்றியாக நாங்கள் கருதி மகிழ்ச்சியடைவோம். எதிர்காலத்தில் நீங்கள் சொல்லுகிற இடத்தை விடுதலை சிறுத்தைகள் அடையும், தமிழகத்தில் ஒரு முன்னிலை அரசியல் சக்தியாக எழுச்சி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

னைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும்போதே ஒடுக்கப்பட்டவர்களின் நலனை காத்து நிற்க முடியுமா? பகுஜன் சமாஜ் கட்சி -யை எவ்வாறு எதிர் கொள்ளுவீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் தற்போது அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் மொழியை காப்பதில், தமிழ் இனத்தை காப்பதில், தமிழ் மண்ணைக் காப்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து செயல் திட்டங்களை வகுத்து போராடி வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் முன் முயற்சியில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, நாடுதழுவிய அளவில் எழுச்சியை உருவாக்கியது. இப்போது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு தளம் விரிவடைந்துள்ளது. தலித்துகளின் நன்மதிப்பை பெற்றுள்ள எங்கள் இயக்கம் இவற்றால் மேலும் மத்திப்பை அடையும். பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை பின்னுக்கு தள்ள முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. அதை எதிர்கொள்ளுவதில் சிக்கலும் இல்லை.

லையுலகில் இன்றைய தேதியில் மிக நல்ல சிந்தனைப்போக்கும், பல விவாதங்களும் நடைபெறுகின்றன. இவற்றை நீங்கள் அவதானிகின்றீர்களா? எனில், அவற்றை விடுதலை சிறுத்தைகள் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்?

ணைய தளங்களில் நடைபெறும் விவாதங்களை தொடர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெறவில்லையென்றாலும் அவ்வப்போது அதை அறிந்து கொண்டு வருகிறோம். இணையத்தளங்களில் இயங்கும் தோழர்களோடு கலந்து உரையாடுகிறோம். இனி வரும் காலங்களில் இணையதள ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளவும், ஈடுபாடு கொள்ளவும் விடுதலை சிறுத்தைகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதை தோழமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொடர்ந்து உங்களைப் போன்றோர் எங்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டு நேர்முகத்தை நிறைவு செய்கிறேன். அடுத்தமுறை நேரில் சந்திக்கும்போது விரிவாக பேசுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர் தமிழ்வேந்தன் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்தார்; அவரது இறுதி அஞ்சலிக்காக கடலூர் சென்று கொண்டிருந்த வழியில் திருமா அவர்கள் நமக்காக பேட்டி அளித்துள்ளார். தற்போதைய சூழலில், தினமும் ஓரிரு மணி நேரங்களே உறங்க வாய்க்கும் நிலையில் அவர் தனது ஓய்வு நேரத்தை கணிசமாக நமக்கு அளித்ததற்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்

13 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...
February 26, 2009 at 11:27 PM  

மிக நல்லதொரு முயற்சி மோகன். வாழ்த்துக்கள்..

மோகன் கந்தசாமி said...
February 26, 2009 at 11:39 PM  

வாங்க ஸ்ரீதர்! நலமா?
கடைசியாக ஈ-மெயிலில் தொடர்பு கொண்டது!

எம்.எம்.அப்துல்லா said...
February 26, 2009 at 11:53 PM  

மோகன் அண்ணே நீங்க வலைப்பூ துவங்கிய நாளில் இருந்து உங்க வலைப்பூவிற்கு வரும் வருகையாளன். ஆரம்பத்திற்கும் இப்போதும் எவ்வளவு வித்தியாசம்??? இந்த உயர்வு கண்டு மனமாரப் பாராடுகிறேன்.

//ஒடுக்கப்பட்டோர் நலன், ஈழம் தொடர்பில் திமுக அனுதாபிகளை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்துவிட்டது //

ஈழ விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மேல் எங்களுக்கு மன ரீதியான நெருக்கம் ஏற்பட்டது உண்மை. ஆனால் வி.சி. எங்களை வென்றெடுத்தது என்ற பதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்ரீதர்கண்ணன் said...
February 27, 2009 at 12:28 AM  

உங்கள் அன்புக்கும் என்னை நினைவில் வைத்தமைக்கும் நன்றிகள்.

மதிபாலா said...
February 27, 2009 at 4:15 AM  

ஈழ விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மேல் எங்களுக்கு மன ரீதியான நெருக்கம் ஏற்பட்டது உண்மை. ஆனால் வி.சி. எங்களை வென்றெடுத்தது என்ற பதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.//

நண்பர் அப்துல்லாவின் கருத்தினை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. திமுகவிற்கு மாற்றான தலைமையை நாம் இன்னமும் முழுதுமாக கண்டிடவில்லை என்பதைத் தான் நமது அரசியல் சூழல் உணர்த்துகிறது.

தமிழர்களின் உரிமையைப் பறிக்கின்ற காங்கிரஸோடு திமுக வைக்கின்ற உறவு எங்களைக் காயப்படுத்துகிறது.

அவ்வாறு வெளியே வராத திமுகவோடே கூட்டுச் சேரும் வி.சிறுத்தைகளை எப்படி மாற்றுத்தலைமையாக இருக்க முடியும்?

முரண்தானே?

ஒருவேளை நம் இணைய திமுக அனுதாபிகள் அனைவரும் வி.சிறுத்தைகளின் நிலையைக் கண்டபின் அரவணைக்கத் தயார் என்று சொன்னதை வைத்தே நண்பர் மோகன் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கக் கூடும்.....!

ஆனால் தோழர் திருமாவின் பதிலும்( அதாவது திமுகவுடன் மட்டுமே கூட்டணி , காங்கிரஸுடன் அல்ல என்ற வாதம் ) , காங்கிரஸுடன் கூட்டணி - திமுகவுடன் இல்லை என்ற மருத்துவரின் நிலைக்கும் , அதிமுகவுடன் அரசியல் கூட்டணி மட்டுமே - கொள்கைக்கூட்டணி அல்ல என்று சொல்லும் வைகோவிற்கும் எந்தவொரு பெரிய வேறுபாட்டையும் காண முடியவில்லை.

மோகன் கந்தசாமி said...
February 27, 2009 at 10:19 PM  

////உங்கள் அன்புக்கும் என்னை நினைவில் வைத்தமைக்கும் நன்றிகள்.////

நன்றி ஸ்ரீதர்.

மோகன் கந்தசாமி said...
February 27, 2009 at 11:08 PM  

/////மோகன் அண்ணே நீங்க வலைப்பூ துவங்கிய நாளில் இருந்து உங்க வலைப்பூவிற்கு வரும் வருகையாளன். ஆரம்பத்திற்கும் இப்போதும் எவ்வளவு வித்தியாசம்??? இந்த உயர்வு கண்டு மனமாரப் பாராடுகிறேன்.////

அப்து அண்ணா! தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

///ஈழ விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மேல் எங்களுக்கு மன ரீதியான நெருக்கம் ஏற்பட்டது உண்மை. ஆனால் வி.சி. எங்களை வென்றெடுத்தது என்ற பதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது///

அது எப்படி முடியும்? திமுக -விற்கு வாழ்க்கைப் பட்டு விட்டீர்களே! :-)))

மோகன் கந்தசாமி said...
February 28, 2009 at 12:20 AM  

////தமிழர்களின் உரிமையைப் பறிக்கின்ற காங்கிரஸோடு திமுக வைக்கின்ற உறவு எங்களைக் காயப்படுத்துகிறது.

அவ்வாறு வெளியே வராத திமுகவோடே கூட்டுச் சேரும் வி.சிறுத்தைகளை எப்படி மாற்றுத்தலைமையாக இருக்க முடியும்?///

கொஞ்சம் கஷ்டம் தான். ஒப்புக்கொள்கிறேன்.

///ஒருவேளை நம் இணைய திமுக அனுதாபிகள் அனைவரும் வி.சிறுத்தைகளின் நிலையைக் கண்டபின் அரவணைக்கத் தயார் என்று சொன்னதை வைத்தே நண்பர் மோகன் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கக் கூடும்.....!
////

ஒரு பிளாக்கருக்கு தரும் பேட்டியில் ஒரு முக்கிய முடிவை அவர் எடுப்பார் என்று நம்பமுடியாது. அவர் ஒரு உத்தேசக் கூட்டணியை பற்றியும் கூறியிருந்தார். பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

நன்றி மதிபாலா

வெண்பூ said...
February 28, 2009 at 5:03 AM  

நல்ல பேட்டி.. ஆங்காங்கே வழக்கமான அரசியல் பேட்டிக்கே உரிய மழுப்பல்கள் இருந்தாலும் பெரும்பாலும் வெளிப்படையான பதில்கள்.. கேள்விகள் அருமை (ஒருசில இடங்களில் உங்கள் மனதில் இருப்பதும் வெளிவந்ததை தவிர்த்திருக்கலாம், உ.ம். செவிட்டு அரசாங்கம்..)

அப்துல்லா பதிவுலகத்தில் முதல்முறையாக வெளிப்படையாக தான் ஒரு திமுக என்று அறிவித்திருக்கிறார், அவருக்கே தெரியாமல் நடந்ததா இது என்று தெரியவில்லை. :))

அதே நேரம், திமுகவிற்கு வி.சி. மாற்று என்று கூறுவதெல்லாம் எந்த அளவிற்கு நடக்கக்கூடியது என்று புரியவில்லை..

தமிழகத்தின் ஒரு மிக முக்கிய அரசியல் தலைவரை பதிவுலகத்திற்கு இழுத்து வந்தது உங்கள் சாதனைதான்.. பாராட்டுகள்..

மோகன் கந்தசாமி said...
March 2, 2009 at 12:01 AM  

/////நல்ல பேட்டி.. ஆங்காங்கே வழக்கமான அரசியல் பேட்டிக்கே உரிய மழுப்பல்கள் இருந்தாலும் பெரும்பாலும் வெளிப்படையான பதில்கள்.. /////

நன்றி திரு வெண்பூ,

தாமதமான பதில் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், வரலாறு காணாத நேரமின்மையால் தவிக்கிறேன். :-)))

///ஒருசில இடங்களில் உங்கள் மனதில் இருப்பதும் வெளிவந்ததை தவிர்த்திருக்கலாம், உ.ம். செவிட்டு அரசாங்கம்..///

எவ்வளவு கவனமாக இருந்தாலும் என் சொந்த கருத்தும் சில சமயம் நுழைந்து விடுகிறது.

///அப்துல்லா பதிவுலகத்தில் முதல்முறையாக வெளிப்படையாக தான் ஒரு திமுக என்று அறிவித்திருக்கிறார், அவருக்கே தெரியாமல் நடந்ததா இது என்று தெரியவில்லை. :))///

இதுவரையில் அது உங்களுக்கு தெரியாதா!!

////அதே நேரம், திமுகவிற்கு வி.சி. மாற்று என்று கூறுவதெல்லாம் எந்த அளவிற்கு நடக்கக்கூடியது என்று புரியவில்லை..////

அறிகுறிகள் தென்படுகின்றனவே!

////தமிழகத்தின் ஒரு மிக முக்கிய அரசியல் தலைவரை பதிவுலகத்திற்கு இழுத்து வந்தது உங்கள் சாதனைதான்.. பாராட்டுகள்..///

உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் நண்பரே!

தமிழன்-கறுப்பி... said...
March 2, 2009 at 9:50 AM  

எனக்கெல்லாம் கேட்க மட்டும்தான் தெரியும் சொல்லிக்கொண்டிருந்தேன் ம்ஹீம் அது கூட ரொம்ப கஷ்டம்தான் மோகன்...

தமிழன்-கறுப்பி... said...
March 2, 2009 at 9:51 AM  

பகிர்வுக்கு நன்றி...

மோகன் கந்தசாமி said...
March 2, 2009 at 11:01 AM  

/////எனக்கெல்லாம் கேட்க மட்டும்தான் தெரியும் சொல்லிக்கொண்டிருந்தேன் ம்ஹீம் அது கூட ரொம்ப கஷ்டம்தான் மோகன்...///

கேட்பது எளிது தான் நண்பரே. ஆனால் தகுந்த வார்த்தைகளை தேடிப்பிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

//பகிர்வுக்கு நன்றி..//

நன்றி