விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.
பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?
நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.
போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?
போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.
விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?
விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?
விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.
சர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
சர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.
அடேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
அடேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?
தமிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்
ஊறிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.
சகோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?
எடுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)
ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?
ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?
உண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.
தனிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?
தமிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.
தனிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.
1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!
முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.
தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?
80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.
மக்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?
அதாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.
வலைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!
தமிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?
நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.
நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.
உங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.
நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.
60 comments:
அருமையான பேட்டியை வழங்கிய மோகன் கந்தசாமிக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள். சாத்திரி அவர்களின் பதில்கள் பல இடங்களில் நெத்தியடியாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.
////அருமையான பேட்டியை வழங்கிய மோகன் கந்தசாமிக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்///
நன்றி தமிழ் நாடன்
///சாத்திரி அவர்களின் பதில்கள் பல இடங்களில் நெத்தியடியாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.///
வழமைதானே!!??!!!!
//ஈழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?
உண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.
//
அது துன்பியல் சம்பவம் என்று முடித்துக் கொண்டதுடன்,அதில் இந்திய அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றி பிராபகரன் தெரிவிக்காதது ஏன் ? இவ்வளவு இக்கட்டான சூழல், லட்சக்கணக்கான தமிழர் உயிர் இவற்றைக் காட்டிலும் அந்த ரகசியங்களும், அவற்றிற்கான ஆதாரங்களும் மேலனானவையா ?
விடுதலைப் புலி இயக்கத்தினர் இராஜிவ் கொலையில் உள்ள மர்மங்களை வெளி இட மறுப்பதேன்.
Thanks to konw about Chatthri - Eela Tamilan - wishing all the best wishes to his efforts for the tamil eelam cause...
பேட்டிக்கு நண்றி..
//அது துன்பியல் சம்பவம் என்று முடித்துக் கொண்டதுடன்,அதில் இந்திய அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றி பிராபகரன் தெரிவிக்காதது ஏன் ? இவ்வளவு இக்கட்டான சூழல், லட்சக்கணக்கான தமிழர் உயிர் இவற்றைக் காட்டிலும் அந்த ரகசியங்களும், அவற்றிற்கான ஆதாரங்களும் மேலனானவையா ?.//
இதுக்கு நான் பதில் சொல்லலாமா...??
புலிகள் எப்போதும் ஒரு கருத்தை மக்களிடம் திணித்தது இல்லை... தாங்கள் செய்வது சரியா பிழையா என்பதை கூட அவர்கள் மக்களின் முடிவுகளுக்கே விட்டு விடுகிறார்கள்..
உங்களுக்கே தெரிகிறது இராசீவ் படுகொலை செய்ய பட்ட வேளை கூட்டணியின் கட்ச்சி தலைவி ஜெயலலிதா உட்ப்பட காங்கிரசின் தமிழக முக்கிய தலைவர்கள் யாரும் அவரின் அருகில் இருக்க வில்லை...
ஆகவே தமிழர்கள் நீங்கள் தான் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்...
இங்கே பலர் புலிகள் அது ஒரு துன்பியல் சம்பவம் எண்று சொன்னதினால் அவர்கள் கொலை செய்ததாக ஒத்து கொள்கிறார்கள் என்கிறார்கள்....
துன்பியல் எண்றால் என்ன தூக்கமான சம்பவம் என்பதுதானே...?? இராசிவின் மரணம் துக்க கரமானது எண்று சொன்னால் அதை புலிகள் செய்ததாக அர்த்தமா...???
சோனியா கலைஞர் கூடத்தான் சொல்கிறார்கள் தமிழர்கள் படு கொலைச்செய்ய படுவது கவலை அளிக்கிறது எண்று அதுக்காக அவர்கள்தான் ஈழத்தவர்களை படுகொலை செய்கிறார்கள் எண்று ஈழத்தவர் சொல்ல முடியுமா...???
இந்திய உளவுத்துறை ஒரு கடிதம் வைத்து இருக்கிறதாம் புலிகளின் தலைவர் சிவராசனுக்கு எழுதிய கடிதம்... அதுதான் புலிகள் கொலையாளியோடு சம்பத பட்டதுக்கான சாட்ச்சி...
புலிகளின் நவீன ரக தொலைத்தொடர்பு சாதனங்களை எல்லாம் அந்த கொலையின் பின்னர் கையக படுத்தியது தமிழக காவல்த்துறை... அப்படியான தொலைத்தொடர்புகளை எல்லாம் வைத்து கொண்டு பிரபாகரன் கடிதம் வரைந்தார் எண்று சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது....
நல்ல பேட்டி மோகன். எங்க ஊருல இருக்கற ஒரு முன்னாள் போராளியும் இதற்கு ஒத்த கருத்தோட தான் இருக்கார்.
உங்க கேள்விகள open endedaa வச்சிக்கோங்க. உங்களோட கருத்த எடுத்து சொல்ற கேள்விகள் இல்லாம பாத்துக்கோங்க.
**
தனிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.
**
**
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!
**
//........இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?....//
சோகமான உண்மை.
பேட்டிக்கு நன்றி மோகன், சாத்திரி.
Pathivu miga arumai
:-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
சாத்திரியின் பேட்டி சிறப்பாக இருக்கு.
//மணிகண்டன் said.
**
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!//
முஸ்லீம்களை புலிகள் வெறுப்பது என்பது ஏற்படுத்த பட்ட துரோகம்...
முன்னாள் போராளி, அதுவும் புலநாய்வு துறையில் வீசாரணக்களில் உதவிக்கு இருந்த ( சார் எழுத்தாளனாக) என்னால் நம்பிக்கையாக சொல்ல முடியும்...
மாத்தையா எனும் மகேந்திரராசா புலிகளின் அரசியல் தலைவராகவும் உபதலைவராக இருந்த காலத்தில் இளைக்க பட்ட தூரோகம் அது... பின் புலமாக இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை முழுமையாக மகேந்திர ராசாவினதும் மற்றும் கேடி எனும் கேதீஸ், இந்தியாவில் இருந்து தப்பிவந்ததாக கதை விட்ட இராசீவ் கொலை சந்தேக நபர் கிருபன், இன்னூம் சிலர்., ஆகியவர்களின் வாக்கு மூலங்கள புலிகளிடம் ஒலி களாகவும் ஒளிப்படங்களாகவும் இருக்கின்றன...
அமிர்தலிங்கம் படுகொலை முதல் முஸ்லீம் போராளிகள் படுகொலை, யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளீயேற்றம் எல்லாம் திட்ட மிட்டு கொடுத்தவர்கள் வேறு... செயல் படுத்திய புலிகளின் உபதலைவர் மாத்தையா என்பவர் பொம்மை...
தன் பின்னர்தான் மாத்தையா பதவி இறக்க பட்டார்... உறுதி படுத்திய பின்னர் கைத்து செய்ய பட்டார்...
இந்தியாவின் புலிகள் மீதான கோபத்துக்கும் காரணமும் அதுதான்...
பேட்டி அருமை.. நண்றி சாத்து & மோகன்..
மிக நல்ல முயற்சி. நடுநிலைத்தன்மையான கேள்விகள். நன்றியும் வாழ்த்துக்களும்.
திரு. சாத்திரி அவர்களின் பேட்டி நன்று!
பகிர்வுக்கு நன்றி மோகன்தாஸ்
நல்ல பேட்டி...!
////விடுதலைப் புலி இயக்கத்தினர் இராஜிவ் கொலையில் உள்ள மர்மங்களை வெளி இட மறுப்பதேன்.///
கோவி, உங்கள் கேள்வி சாத்திரிக்கு திருப்பிவிடப்படுகிறது.
////Thanks to konw about Chatthri - Eela Tamilan - wishing all the best wishes to his efforts for the tamil eelam cause...////
கிருஷ்ணா, ஆதரவிற்கு நன்றிகள்
////தாங்கள் செய்வது சரியா பிழையா என்பதை கூட அவர்கள் மக்களின் முடிவுகளுக்கே விட்டு விடுகிறார்கள்..////
எல்லாம் சரிதான்,
புலிகளின் இன்றைய பின்னடைவுக்கு காரணம் இலங்கைக்கு கிடைத்துவரும் இந்திய போர்க்கருவிகளும் படையுதவிகளும். இந்தியா இதை செய்வதற்கு காரணம் ராஜீவ் கொலை. உண்மையான காரணங்கள் வேறானாலும் இதை கூறித்தான் எல்லோரும் சப்பைகட்டுகிறார்கள். மேலும் புலிகளுக்கு கிடைத்துவந்த தமிழக தமிழரின் வெளிப்படையான ஆதரவு ராஜீவ் காந்தி படுகொலையால்தான் மட்டுப்பட்டது. இன்றைய இக்கட்டான சூழலில் புலிகள் இதை தெளிவுபடுத்தினால் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு திருப்பம் வரக்கூடும்.
படுகொலையில் எங்களுக்கு தொடர்பில்லை, அல்லது முக்கிய குற்றவாளிகள் நாங்கள் இல்லை என்று புலிகள் நிரூபிக்கட்டும். பிறகு பாருங்கள், தமிழகத்தில் ஏற்படுகிற எழுச்சியை!!!, ஒரு காங்கிரஸ் பயல் கூட தமிழ் நாட்டில் இருக்கமாட்டான். அல்லது காங்கிரசில் இருக்கமாட்டான். ஈழப்பிரச்சினையை தீர்க்காமல் சோறு தின்னக்கூட பிரதமரை விடமாட்டோம். காங்கிரஸ் அடிப்பொடிகள் தொடங்கி தலைவி வரை அனைவரையும் மன்னிப்பு கேட்கவைப்போம். கடல் கடந்து சென்று எதிரிகளை தென்கோடிக்கு விரட்டுவோம். ஈழத்தை இனிதே மலரவைப்போம்.
///இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள். ///
கருத்து மட்டுமல்ல மணிகண்டன், வார்த்தைகள் கூட என்னுடையதல்ல. தீவிரமாக சிந்திக்கின்ற அரசியல் நோக்கர்கள், வெளிப்படையான அரசியல்வாதிகள், அரசியல் சார நியாயவாதிகள் போன்றோரின் கருத்து இது. அதற்கு சாத்திரியின் பதில் என்னவாயிருக்கும் என்று அறிய முயன்றேன். அவரும் அதைத் தொடாமல் சென்றுவிட்டார்.
////
பேட்டிக்கு நன்றி மோகன், சாத்திரி.////
நன்றி சேவியர்.
////Pathivu miga அருமை///
நன்றி சுரேஷ்.
:-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.////
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
////சாத்திரியின் பேட்டி சிறப்பாக இருக்கு.////
நன்றி பிரபா.
கண்டிப்பாக உங்களை போன்ற எழுத்துக்கள் என்னை தூண்டியது
தலைவா, நல்ல எழுத முயற்சி செய்கிறேன்
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி
முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
/////மணிகண்டன் said.
**
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!//
முஸ்லீம்களை புலிகள் வெறுப்பது என்பது ஏற்படுத்த பட்ட துரோகம்...
முன்னாள் போராளி, அதுவும் புலநாய்வு துறையில் வீசாரணக்களில் உதவிக்கு இருந்த ( சார் எழுத்தாளனாக) என்னால் நம்பிக்கையாக சொல்ல முடியும்...
மாத்தையா எனும் மகேந்திரராசா புலிகளின் அரசியல் தலைவராகவும் உபதலைவராக இருந்த காலத்தில் இளைக்க பட்ட தூரோகம் அது... பின் புலமாக இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை முழுமையாக மகேந்திர ராசாவினதும் மற்றும் கேடி எனும் கேதீஸ், இந்தியாவில் இருந்து தப்பிவந்ததாக கதை விட்ட இராசீவ் கொலை சந்தேக நபர் கிருபன், இன்னூம் சிலர்., ஆகியவர்களின் வாக்கு மூலங்கள புலிகளிடம் ஒலி களாகவும் ஒளிப்படங்களாகவும் இருக்கின்றன...
அமிர்தலிங்கம் படுகொலை முதல் முஸ்லீம் போராளிகள் படுகொலை, யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளீயேற்றம் எல்லாம் திட்ட மிட்டு கொடுத்தவர்கள் வேறு... செயல் படுத்திய புலிகளின் உபதலைவர் மாத்தையா என்பவர் பொம்மை...
தன் பின்னர்தான் மாத்தையா பதவி இறக்க பட்டார்... உறுதி படுத்திய பின்னர் கைத்து செய்ய பட்டார்...
இந்தியாவின் புலிகள் மீதான கோபத்துக்கும் காரணமும் அதுதான்...///
காத்து,
புலிகள் - முஸ்லிம்கள் தொடர்பாக தெளிவுற ஒரு பதிவை இட்டு விளக்குங்களேன். அல்லது பின்னூட்டத்தில் ஆதி அந்தமாக தெளிவுபடுத்துங்கள் சார். தமிழகத்தில் முஸ்லிம்களை எந்த தமிழனும் வேறாகப் பார்க்கமாட்டான்.
ஆதரவுக்கு நன்றி நண்பரே!
////மிக நல்ல முயற்சி. நடுநிலைத்தன்மையான கேள்விகள். நன்றியும் வாழ்த்துக்களும்.////
நந்தா, தொடர்ந்த ஆதரவிற்கு நன்றிகள்
////திரு. சாத்திரி அவர்களின் பேட்டி நன்று!////
நன்றி ஜோதி பாரதி!
////பகிர்வுக்கு நன்றி மோகன்தாஸ்
நல்ல பேட்டி...!///
தமிழன் கறுப்பி சார்,
ஆதரவுக்கு நன்றி.
மேலும், என்பெயர் மோகன் கந்தசாமி. மோகன்தாஸ் அல்ல. அந்த பெயரில் ஒரு சுஜாதா தாசர் இருந்தார். அவர் இப்போது பதிவு எழுதுவது இல்லை போலிருக்கு.
நன்றிகள்.
////முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்///
போட்டாச்சி!! போட்டாச்சி!!
வாழ்த்துக்கள்.
Excellent Interview.Thank you Saaththiriyar When you come to Toronto
Canada
Gopal Toronto
மோகன்,
எனக்கு உங்க கருத்துல உடன்பாடு உண்டு /இல்லை என்று சொல்ல முயலவில்லை. உங்க கேள்விகள் open endedaa இருக்கலாமே என்று தோன்றியதால் அவ்விரு கேள்விகளையும் குறிப்பிட்டேன். அவ்வளவே. (அவ்விரு கேள்விகள் மட்டுமே அப்படி இருந்தது.)
சொல்லவருவதை இன்னமும் எனக்கு சரியா எழுத தெரியல. அதான் பிரச்சனை.
பெரிய சுத்தந்திர போராட்ட தியாகி
ஒரு வேலையும் இல்லாம புலி பெயரை சொல்லி பணம் வேண்டி தின்னும் ஒரு பினாமிக்கு இத்தனை விளம்பரமா?
//தமிழகத்தில் முஸ்லிம்களை எந்த தமிழனும் வேறாகப் பார்க்கமாட்டான்.
//
மோகன் அண்ணே அப்பிடின்னா தமிழ்நாட்டுல ஹிந்துக்களும்,மற்ற மதத்தவர்களும்தான் தமிழர்களா? தமிழைத் தாய்மொழியாக கொண்ட, 100 ,200 வருடங்களுக்கு முன் இஸ்லாமை தழுவிய எனக்கு ”தமிழர்” என்ற அடைமொழி கிடையாதா?? அல்லது அதற்கு நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களா??
நீங்கள் சொல்ல வந்த கருத்து எப்படி இருக்குன்னா இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல ஆனால் தமிழர்களால் அவர்கள் தமிழர்களாகவே நினைக்கப்படுகின்றனர் என்பதாக உள்ளது.
”தமிழகத்தில் உள்ள இஸ்லாமியத் தமிழர்களை பிற தமிழர்கள் வேறாக பார்க்க மாட்டார்கள்” என்று நீங்கள் எழுதி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களைப் பற்றி சுருக்கமாகவே சொல்கின்றேன்,
“நாங்கள் பிறப்பால் இந்தியர்கள், இனத்தால் திராவிடர்கள், தாய்மொழியால் தமிழர்கள், தழுவிய ஏற்றுக் கொண்ட மதத்தால் இஸ்லாமியர்கள்.
மீண்டும் இந்த தொணியில் எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன் அண்ணே.
சாத்திரி பேட்டி மிகவும் அருமை.
புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் இணைந்து பணியாற்றியது போய் அவர்களிடையே கருத்து வேறுபாடு தோன்ற ஆரம்பகாலங்களில் மாத்தையாவும் பின்பு கருணாவும் சிங்கள அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு விலை போய் தலைமைக்குத் தெரியாமல் சில காரியங்களைச் செயததாக படித்ததாக நினைவு. அது பற்றி அண்ணன் சாத்திரி விரிவாக கூறினால் நலம்.
****
நீங்கள் சொல்ல வந்த கருத்து எப்படி இருக்குன்னா இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல ஆனால் தமிழர்களால் அவர்கள் தமிழர்களாகவே நினைக்கப்படுகின்றனர் என்பதாக உள்ளது.
****
மோகன் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல.
//மோகன் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல.
//
மணிகண்டன் அண்ணே,
மோகன் அண்ணனை நானும் என்னை அவரும் முழுதாக அறிவோம். அப்படி ஒரு எண்ணத்தில் அவரிடத்தில் கிஞ்சித்தும் இல்லை என்பதனை நான் அறிவேன். நன்றாக படியுங்கள் “தொணி” என்ற வார்த்தையைத்தான் நான் சொல்லி உள்ளேன். மோகனின் ”கருத்து” என்று சொல்லவில்லை. சில இடங்களில் பிரயோகிக்கும் வார்த்தை பொருளை மார்றிவிடும். அதுதான் நான் கூற வந்தது. பிறருக்கு அவ்வாறு தவறாக புரியவில்லை என்பது உங்கள் பதிலில் தெரிகின்றது. இது போதும் எனக்கு.
///எம்.எம்.அப்துல்லா said...
//தமிழகத்தில் முஸ்லிம்களை எந்த தமிழனும் வேறாகப் பார்க்கமாட்டான்.
//
மோகன் அண்ணே அப்பிடின்னா தமிழ்நாட்டுல ஹிந்துக்களும்,மற்ற மதத்தவர்களும்தான் தமிழர்களா? தமிழைத் தாய்மொழியாக கொண்ட, 100 ,200 வருடங்களுக்கு முன் இஸ்லாமை தழுவிய எனக்கு ”தமிழர்” என்ற அடைமொழி கிடையாதா?? அல்லது அதற்கு நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களா??
நீங்கள் சொல்ல வந்த கருத்து எப்படி இருக்குன்னா இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல ஆனால் தமிழர்களால் அவர்கள் தமிழர்களாகவே நினைக்கப்படுகின்றனர் என்பதாக உள்ளது.
”தமிழகத்தில் உள்ள இஸ்லாமியத் தமிழர்களை பிற தமிழர்கள் வேறாக பார்க்க மாட்டார்கள்” என்று நீங்கள் எழுதி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களைப் பற்றி சுருக்கமாகவே சொல்கின்றேன்,
“நாங்கள் பிறப்பால் இந்தியர்கள், இனத்தால் திராவிடர்கள், தாய்மொழியால் தமிழர்கள், தழுவிய ஏற்றுக் கொண்ட மதத்தால் இஸ்லாமியர்கள்.
மீண்டும் இந்த தொணியில் எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன் அண்ணே.///
இதை அப்படியே வழிமொழிகின்றேன். நாங்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழர்கள் தாம்.
ஈழம் - தமிழர்கள் - முஸ்லிம்கள் இதை இன்னும் விரிவாக விளக்கி நம்மிடையே உள்ள பழைய காழ்ப்புணர்வுகள் விலகினால் மிக மகிழ்வேன். இதில் ஒரு சாராரை மட்டும் தூக்கிப் பிடிப்பதையும் விரும்புவதில்லை. இரு புறமும் தவறுகள் இருக்கலாம்.
இங்கு கருத்து தெரிவித்த அனைவரிற்கும் நன்றிகள்.. இங்கு பலர்முன்னர் நடந்த இசுலாமியர்கள் மற்றும் புலிகளுடனான முரண்பாடுகளை பற்றி கேள்விகளை எழுப்பியிருந்தனர். நேரம் கிடைக்கும் பொழுது நிச்சமாய் விரிவாக எழுதுகிறேன் நன்றிகள்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
///மோகன் கந்தசாமி said...
காத்து,
புலிகள் - முஸ்லிம்கள் தொடர்பாக தெளிவுற ஒரு பதிவை இட்டு விளக்குங்களேன். அல்லது பின்னூட்டத்தில் ஆதி அந்தமாக தெளிவுபடுத்துங்கள் சார். தமிழகத்தில் முஸ்லிம்களை எந்த தமிழனும் வேறாகப் பார்க்கமாட்டான்.
ஆதரவுக்கு நன்றி நண்பரே!///
எழுதுகிறேன் எழுதி உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன்...!!
எனக்கு பதிலாக நீங்கள் பீரசுரிப்பீர்கள்தானே...??
சர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.//
இதுதான் உண்மை.
தமிழன் தன் பலத்தை நிருபித்தால் மட்டுமே உலகம் திரும்பிப் பார்க்கும்.
அதற்கு உலகெலாம் வாழும் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும்..
நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
அருமையான பேட்டி ,
வாழ்த்துக்கள் மோகன் கந்தசாமி.!
நண்பர் சாத்திரி அவர்களீன் தெளிவான கருத்துக்களை நாம் முடிந்தளவு தமிழகத்தின் அச்சு ஊடகங்களுக்கு கொண்டு சேர்க்க முயல வேண்டும்.
///Excellent Interview.Thank you Saaththiriyar When you come to Toronto
Canada
Gopal டொரோண்டோ///
நன்றி கோபால்.
/////உங்க கேள்விகள் open endedaa இருக்கலாமே என்று தோன்றியதால் அவ்விரு கேள்விகளையும் குறிப்பிட்டேன்////
ஆலோசனைக்கு நன்றிகள் மணிகண்டன். முயற்சி செய்கிறேன்.
///நீங்கள் சொல்ல வந்த கருத்து எப்படி இருக்குன்னா இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல ஆனால் தமிழர்களால் அவர்கள் தமிழர்களாகவே நினைக்கப்படுகின்றனர் என்பதாக உள்ளது.///
நான் அப்படி சொல்லவில்லை. வார்த்தைகள் அப்படி வந்து விட்டன போலும். மன்னிக்க.
அப்துல்லா, Err is human.
///மீண்டும் இந்த தொணியில் எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன் அண்ணே.///
hi hi :-)) sorry
////மாத்தையாவும் பின்பு கருணாவும் சிங்கள அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு விலை போய் தலைமைக்குத் தெரியாமல் சில காரியங்களைச் செயததாக படித்ததாக நினைவு. அது பற்றி அண்ணன் சாத்திரி விரிவாக கூறினால் நலம்.////
பதிவர் காத்து அதுபற்றி எழுதுவதாய் சொல்லி இருக்கிறார், பார்க்கலாம்.
மோகன் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல.
:-)))
//மோகன் அண்ணனை நானும் என்னை அவரும் முழுதாக அறிவோம். அப்படி ஒரு எண்ணத்தில் அவரிடத்தில் கிஞ்சித்தும் இல்லை என்பதனை நான் அறிவேன். ///
ஆமாண்ணே! ஒரு சுமால் மிஸ்டேக் ஆயிடுச்சு!
////ஈழம் - தமிழர்கள் - முஸ்லிம்கள் இதை இன்னும் விரிவாக விளக்கி நம்மிடையே உள்ள பழைய காழ்ப்புணர்வுகள் விலகினால் மிக மகிழ்வேன். இதில் ஒரு சாராரை மட்டும் தூக்கிப் பிடிப்பதையும் விரும்புவதில்லை. இரு புறமும் தவறுகள் இருக்கலாம்.///
ஆமாம் தமிழ்பிரியன். வேறு சிலர் இது பற்றி தெளிவு படுத்துவார்கள் என நம்புகிறேன். வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்.
////இங்கு கருத்து தெரிவித்த அனைவரிற்கும் நன்றிகள்.. இங்கு பலர்முன்னர் நடந்த இசுலாமியர்கள் மற்றும் புலிகளுடனான முரண்பாடுகளை பற்றி கேள்விகளை எழுப்பியிருந்தனர். நேரம் கிடைக்கும் பொழுது நிச்சமாய் விரிவாக எழுதுகிறேன் நன்றிகள்.///
வாருங்கள் சாத்திரி. அதற்கு உங்களுக்கு நேரம் வாய்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். உங்கள் விரிவான கருத்தை எதிர் பார்க்கிறோம்.
///எழுதுகிறேன் எழுதி உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன்...!!///
நன்றி நண்பரே!
////எனக்கு பதிலாக நீங்கள் பீரசுரிப்பீர்கள்தானே...??///
நிச்சயமாக...
///இதுதான் உண்மை.////
துரதிஷ்டவசமாக அதுதான் உண்மை. நம்மால் ஏதேனும் பலனிருந்தால் மட்டுமே சர்வதேசம் திரும்பி பார்க்கும்.
//தமிழன் தன் பலத்தை நிருபித்தால் மட்டுமே உலகம் திரும்பிப் பார்க்கும்.
அதற்கு உலகெலாம் வாழும் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும்..////
இன்னொரு முறை சொல்லுங்கள் மதிபாலா!
///நண்பர் சாத்திரி அவர்களீன் தெளிவான கருத்துக்களை நாம் முடிந்தளவு தமிழகத்தின் அச்சு ஊடகங்களுக்கு கொண்டு சேர்க்க முயல வேண்டும்.///
அச்சு ஊடக நண்பர்களின் தொடர்பு வேண்டும். அதற்கான முயற்சிகளையும் தொடங்குவோம். சாத்திரியின் கருத்துகள் மட்டுமல்ல, வலையுலக்ல் சிந்திக்கப் படும் யாவையுமே அச்சேற்றலாம். அது பற்றி கலந்து யோசிக்கலாம்.
அச்சு ஊடக நண்பர்களின் தொடர்பு வேண்டும். அதற்கான முயற்சிகளையும் தொடங்குவோம். சாத்திரியின் கருத்துகள் மட்டுமல்ல, வலையுலக்ல் சிந்திக்கப் படும் யாவையுமே அச்சேற்றலாம். அது பற்றி கலந்து யோசிக்கலாம்.//
அந்த முயற்சிகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்கத் தயார்.
நமக்கு இப்போதைக்கு இருக்கும் வாய்ப்புக்கள் புலனாய்வுப் பத்திரிக்கைகள்தான். நக்கீரன் , குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை...
நாம் நக்கீரனில் முயற்சிக்கிறோம். திரு. சாத்திரி / மோகன் கந்தசாமி அனுமதித்தால்..!
///நாம் நக்கீரனில் முயற்சிக்கிறோம். ///
ஆஹா, நன்றி, நன்றி, முயற்சியுங்கள் மதிபாலா!
/// திரு. சாத்திரி / மோகன் கந்தசாமி அனுமதித்தால்..!///
அனுமதியா? என்னங்க நீங்க! :-)))
//நான் அப்படி சொல்லவில்லை. வார்த்தைகள் அப்படி வந்து விட்டன போலும். மன்னிக்க.
//
அட என்னங்க மன்னிப்பு,கின்னிப்புனுகிட்டு... உங்களைத் தெரியாதா எனக்கு! தொணி அந்த மாதிரி அமைந்ததுன்னு சொன்னேனே தவிர உங்க கருத்துன்னா சொன்னேன்??
://மதிபாலா said...
March 3, 2009 5:50 AM
அச்சு ஊடக நண்பர்களின் தொடர்பு வேண்டும். அதற்கான முயற்சிகளையும் தொடங்குவோம். சாத்திரியின் கருத்துகள் மட்டுமல்ல, வலையுலக்ல் சிந்திக்கப் படும் யாவையுமே அச்சேற்றலாம். அது பற்றி கலந்து யோசிக்கலாம்.//
அந்த முயற்சிகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நான் வழங்கத் தயார்.
நமக்கு இப்போதைக்கு இருக்கும் வாய்ப்புக்கள் புலனாய்வுப் பத்திரிக்கைகள்தான். நக்கீரன் , குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை...
நாம் நக்கீரனில் முயற்சிக்கிறோம். திரு. சாத்திரி / மோகன் கந்தசாமி அனுமதித்தால்..!//மதிபாலா நான் சகொதர யுத்தம் பற்றிய பதிவினை வெளியிடுவீர்களா?? என்று குமுதம் றிப்போட்டர்.மற்றும் நக்கீரன் என்பனவற்றிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் வராததனால் நானே என்னுடைய பதிவில் வெளியிட்டேன். முடிந்தால் நீங்கள் முயற்சியுங்கள். நன்றி
மிக அவசியமான பேட்டிகளை வெளியிடுகிறீர்கள் மோகன்.
பின்னுட்டங்களில் கிடைக்கும் கருத்துக்களை அப்படியே கப்பென்று பற்றி மற்றோர் திரி கொளுத்திவிடுங்க.
வாழ்த்துக்கள்
ஃஃஃஃஃ
புலிகள் ஆதரங்களை வெளியிட்டால் தான் என்ன என்பது பலருடைய அவா..அதையே நீங்களும் பிரதிபலித்திருக்கின்றீர்கள்....நன்றி
///அட என்னங்க மன்னிப்பு,கின்னிப்புனுகிட்டு... உங்களைத் தெரியாதா எனக்கு! ///
:-)))
/////மிக அவசியமான பேட்டிகளை வெளியிடுகிறீர்கள் மோகன்.
வாழ்த்துக்கள்////
ஆதரவுக்கு நன்றி டிபிசிடி,
நாம் தொலைபேசி வெகுநாட்கள் ஆகிவிட்டனவே! நலமா?
///பின்னுட்டங்களில் கிடைக்கும் கருத்துக்களை அப்படியே கப்பென்று பற்றி மற்றோர் திரி கொளுத்திவிடுங்க.//
:-)) நன்றிகள் டிபிசிடி
Post a Comment