மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)
காட்சி 1:
அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.
அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!
காட்சி 2:
புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.
மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?
காட்சி 3:
தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!
அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்!
மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?
அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!
திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?
டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!
காட்சி 4:
வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...
சார், மே ஐ கமின்?
வாங்க தோழர், என்ன விஷயம்?
ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?
ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.
நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?
கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!
அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!
14 comments:
ம்ம்ம்ம்....
reality?
very close to reality!
திருமா, வைகோ, வ. கம்யூனிஸ்ட், ராமதாசின் பாமக இவர்கள் ஓரணியில் திரள்வதுதான் ஈழப் பிரச்சனையை தேர்தல் அரசியல் பிரச்சனையாக்கும் (கெரகம், வேணும்னா பாஜகவும் இருந்துட்டுப் போகட்டும்!). நிச்சயம் நல்ல பலன் இருக்கும் - ஜெயித்த பிறகு என்ன செய்வார்கள் என்பது வேறு கதை!
இது குறித்து இன்று ஒரு பதிவிட்டிருக்கிறேன் - நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.
ஹிஹிஹிஹிஹி.....
தலைப்பு அட்டகாசம்....
http://tholthiruma.blogspot.com/2009/03/blog-post_02.html
Your "GREAT" leader agreed to have a tie up with Congress (in a backdoor way) through DMK... so Please ditch him also...
அட்டகாசம்!
////ம்ம்ம்ம்....///
ஆஹா ஜெகதீசு, வாறது வந்த மாமணியே! வாங்க!
reality?
very close to reality!
:-))))
////இது குறித்து இன்று ஒரு பதிவிட்டிருக்கிறேன் - நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.///
வந்து கொண்டே இருக்கிறேன்
//ஹிஹிஹிஹிஹி.....//
வாங்க மதி...
////தலைப்பு அட்டகாசம்....///
:-))))
////அட்டகாசம்!///
என்ன ஜோ, இப்பல்லாம் பதிவு எழுதறது இல்லையே
////http://tholthiruma.blogspot.com/2009/03/blog-post_02.html
Your "GREAT" leader agreed to have a tie up with Congress (in a backdoor way) through DMK... so Please ditch him also...////
வந்துட்டிங்களாடா??!! எங்கருந்துடா வரீங்க!
Post a Comment