ஈழ(இலங்கை)த் தமிழருக்காக வரும் பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான உரையை முந்தைய நாள் இரவு வரை தயாரிக்காமல் இருந்தால் எவ்வாறு தவித்துப் போவார் என்று யோசித்து பார்த்ததில்...
சசி: யக்கா! என்னா இது, விளையாட்டா?
ஜெ: என்னடி சொல்ற?
சசி: உண்ணாவிரதம் -ன்னா என்னன்னு தெரியுமா? நீபாட்டுக்கு அறிக்கை உட்டிருக்க!
ஜெ: ஓ! அதுவா? உன்னாவிரதம்னா பொதுவிடத்துல போய் சாப்பிடாம ஒக்காந்திருக்கனுண்டி, அதுதான் உண்ணாவிரதம்!
சசி: செங்கோட்டையன் வேறமாதிரி சொல்ராருக்கா?
ஜெ: வெளங்காத வெண்ணை என்னா சொல்லுது?
சசி: பொதுவிடத்துல மட்டுமில்ல, மறைவாக்கூட சாப்பிடக் கூடாதாம்!
ஜெ: அதுக்கென்ன இப்ப, ஒருவேள சாப்பிடாம இருக்க மாட்டியா?
சசி: நான் இருப்பேன், நீங்க இருப்பீங்களா?
ஜெ: அதுக்கென்ன பண்றது, இருந்துதான் ஆகணும், சும்மா வருவாளா சுகுமாரி?
சசி: யாரு சுகுமாரி? அவ எதுக்கு இங்க வரணும்? அதுவும் சும்மா!, அதுதான் நான் இருக்கேனே! அவ வேற எதுக்கு?
ஜெ: இவ ஒருத்தி, கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி! நானே ஒரு பெரிய கவலையில இருக்கேன்! சும்மா நொய் நொய் -னு!
சசி: என்னக்கா கவலை? அதான் பட்டினி கிடக்கரத பத்தியே நீங்க கவலை படல! சோத்துக் கவலையைவிட பெரிய கவலை என்ன?
ஜெ: காலையில உண்ணாவிரத மேடையில என்ன பேசறதுன்னு தெரியலையே? அறிக்கை எழுதித் தர பசங்கள வேற மத்தியானமே துரத்தி உட்டாச்சி, இப்ப என்ன பண்றது?
சசி: விடுக்கா, நாமே ஏதாவது யோசிப்போம்.
ஜெ: என்ன நக்கலா?..., அதெல்லாம் வேலைக்காவது, எவனுக்காவது ஃபோன் பண்ணு! எவன் எடுத்தாலும் நாலு வரி சொல்லச் சொல்லி ஒரு பேப்பர்ல எழுதிக்கோ!
சசி: சரிக்கா!...
(யாருக்கோ ஃ போன் பண்ணுகிறார்)
சசி: யக்கா... காழியூர் நாராயணன் லைன்ல இருக்கார்... பேசுறியா?
ஜெ: நடு ராத்திரியில தூங்காம என்னா பண்ணுது அந்த இம்சை... சரி நீயே பேசு, அவன் சொல்றத எழுதிக்கோ!
எதிர் முனை: நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில்...
சசி: யோவ்... உண்ணாவிரத மேடையில பேசறத்துக்கு ஏதாவது சொல்லுய்யான்னா, பல்லு வெளக்க நல்லநேரம் பாக்க சொன்ன மாதிரி நீ பாட்டுக்கு அடிச்சு உடற...
எதிர்முனை: ஒ! அப்படியா? நீங்க சொல்லவே இல்லையே, சரி... எதுக்கு உண்ணாவிரதம்?, எத பத்தி பேசணும்?
சசி: ஒரு நிமிஷம் இரு!..., யக்கா எதுக்கு உண்ணாவிரதம் -னு கேட்கறார்?
ஜெ: கிழிஞ்சுது... அந்தாள ஃபோனை வச்சிட்டு போய் தூங்கச் சொல்லுடி... இருக்குற இம்சையில இவனுங்க வேற!,
சசி: யக்கா, யாரோ மோகன் கந்தசாமியாம், பிளாக் எல்லாம் எழுதறாராம், ஏதாவது உதவி வேணுமான்னு கேட்கறார்.
ஜெ: சரி, ஸ்பீக்கர் -ல போடு
ஸ்பீக்கர்: என்னமா நல்லாருக்கீங்களா? சாப்டிங்களா? உடம்ப பாத்துக்குங்க! ஆப்பரேசன் பண்ண உடம்பு, ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, எந்த உதவி வேனுன்னானும் ஃபோன் பண்ணுங்க, ஃபோன் பண்ண முடியலன்னா நம்ப நர்ஸ் சசி கிட்ட சொல்லுங்க, அவங்க எனக்கு போன் பண்ணி சொல்வாங்க, சரியா?...
சசி: யோவ்... என்னய்யா பேசுற நீ? நீ யாருகிட்ட பேசற தெரியுமா?
ஸ்பீக்கர்: தெரியுமே! எங்கம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, நீங்க நர்ஸ் சசி தானே?
ஜெ: டேய்! ஏண்டா இம்சை பண்றீங்க, ஃபோன வைடா!
ஸ்பீக்கர்: கவலைபடாதிங்கம்மா நான் இருக்கேன், நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன், சசி ஒழுங்கா பாத்துக்கலன்னா சொல்லுங்க வேற நர்ஸ அப்பாயிண்ட் பண்ணிடலாம், எனக்கு நீங்கதான் முக்கியம், அப்பறம்...
(சசி ஓடிவந்து ஸ்பீக்கரை கட் பண்ணுகிறார்)
ஜெ: யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...
சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?
ஜெ: வேணான்னா விடவா போற, சொல்லு!
சசி: பேசாம அறிவாலயத்துக்கே ஃபோன் பண்ணிடுவோமா?
ஜெ: சரி போடு, ஆனா பேசறது யாருன்னு சொல்லாத!
சசி: சரிக்கா...
(ஃபோன் செய்கிறார்)
சசி: ஹலோ, அறிவாலயமா?
எதிர்முனை: ஆமா, நீங்க யாரு? என்ன விஷயம்?
சசி: நாங்க அன்டார்ட்டிகா தமிழ்ச் சங்கத்தில் இருந்து பேசறோம், தலைவருக்கு பாராட்டு விழா நடத்தனும், டேட் கிடைக்குமா?
எதிர்முனை: நிச்சயமா கிடைக்கும், எங்க விழா நடத்தப் போறீங்க?
சசி: ஆர்ட்டிக் பெருங்கடல் நடுவுல மேடை போட்டுறலாம்...
எதிர்முனை: என்ன நக்கலா?... நடுக்கடல்ல வச்சா எப்படிங்க வரமுடியும்? கடற்கரையில வைங்க... கட்டவுட், சீரியல் லைட்டெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?
சசி: அது இருக்கட்டுங்க, விழா மலர்ல போடறத்துக்கு தலைவர் உரை வேணும், அதை வாங்கி கொடுங்க, முதல்ல அச்சடிச்சிடறோம், தலைவர் கையால வெளியிட்டிடலாம்...
எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?
சசி: டெம்ப்ளேட்டா?
எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...
சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...
எதிர்முனை: சொல்றேன் எழுதிக்குங்க...
"ஈழத்தில் தினம் தினம் செத்து மடியும் எம்குல கொழுந்துகளை காக்க என் இன்னுயிரையும் தருவேன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம்; கங்கை கொண்டான், கடாரம் வென்றான்...
சசி: (ரிசீவரில் கைவைத்து பொத்திய படி) யக்கா... மேட்டர் கெடைச்சிடுச்சி...நிம்மதியா போய் தூங்கு... நான் முழுசா எழுதி வைக்கிறேன், காலையில மனப்பாடம் பண்ணிக்கலாம்...
(தொடர்ந்து பேசச்சொல்லி சசிக்கு சைகை காட்டிவிட்டு பூனைபோல(?) நடந்து படுக்கைக்கு செல்கிறார் ஜெ)
45 comments:
:):):):)
சூப்பரோ சூப்பர்!
Ha..ha... kalakkal!
ஆனாலும் அம்மாவை கொஞ்சம் அதிகமாகவே லந்து பண்ற மாதிரி இருக்கு... அப்புறம் சென்னை விமான நிலையத்தில் இறங்க முடியாது.. பார்த்துக்கங்க.. :)))
கலக்கல்....
:)
எழுதிக் கொடுக்குறதுக்குத் தான் வைகோ இருக்காரே...
அப்புறம் நம்ம மருத்துவர் வேற அங்க போகப் போறாரு...
:P
//
பூனைபோல(?)
//
:))))))))))
நல்ல கற்பனை :-D
ஆமா, 'ஓரங்க நாடகம்'னா என்ன சார்?
வாங்க ஜோதி பாரதி!
நன்றி தமிழ் பிரியன்
///Ha..ha... kalakkal!//
ஆஹா! இந்தியன் நக்கல் பன்றமாதிரி இருக்கே! :-))))
///ஆனாலும் அம்மாவை கொஞ்சம் அதிகமாகவே லந்து பண்ற மாதிரி இருக்கு... அப்புறம் சென்னை விமான நிலையத்தில் இறங்க முடியாது.. பார்த்துக்கங்க.. :)))///
ஆமாங்க, சென்னை விமான நிலையத்துல இறங்க வேணாம்னு அம்மா சொல்லிட்டாங்க! பாம்பே -வுல இரங்கி டிரெயின்ல வரச்சொல்லிட்டாங்க!
///கலக்கல்....
:)
எழுதிக் கொடுக்குறதுக்குத் தான் வைகோ இருக்காரே...
அப்புறம் நம்ம மருத்துவர் வேற அங்க போகப் போறாரு...
:ப//
அட ஆமால்ல! மறந்தே போச்சு! நியாபகம் இருந்திருந்தா அவங்களுக்கும் டயலாக் கொடுத்திருக்கலாம்.
//////
பூனைபோல(?)
//
:))))))))))////
என்ன சிரிப்பு? :-)))
////நல்ல கற்பனை :-D
ஆமா, 'ஓரங்க நாடகம்'னா என்ன சார்?///
அங்கத்தினர் மாறாமல் ஒரு காட்சி மட்டும் கொண்ட நாடகம்.
எலேய்...வெயிட் பண்ணு அடுத்த மாசக் கடசீல உன் டவுசர் கிழியுண்டி
//அங்கத்தினர் மாறாமல் ஒரு காட்சி மட்டும் கொண்ட நாடகம்.//
அப்போ மோனோ ஆக்டிங்னா என்னா?
///எலேய்...வெயிட் பண்ணு அடுத்த மாசக் கடசீல உன் டவுசர் கிழியுண்டி///
அப்புடியா???!! அவ்ளோ நாளாகுமா?
///அப்போ மோனோ ஆக்டிங்னா என்னா?//
மோனோ ஆக்டிங் னா, ஒருத்தர் மட்டும் பேசி நடிக்கிறது,
//மோனோ ஆக்டிங் னா, ஒருத்தர் மட்டும் பேசி நடிக்கிறது,//
தமில்படுத்தவும் பிலீஸ்
இது ஓரங்க நாடகம் மாதிரி தெரியலையே பல அங்க(ம்) நாடகம் மாதிரியிருக்கு.:):)
//////மோனோ ஆக்டிங் னா, ஒருத்தர் மட்டும் பேசி நடிக்கிறது,//
தமில்படுத்தவும் பிலீஸ்///
அந்த அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனா ஒன்னு புரியுது, நீங்க இந்த பதிவு ஓரங்க நாடகம் இல்லன்னு நிரூபிக்க முயற்சி பண்றீங்க !
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/raman1.jpg
இந்த லிங்க் ல இருக்கிறது ஓரங்க நாடகம்னா என்னுதும் ஓரங்க நாடகம்தான்.
////இது ஓரங்க நாடகம் மாதிரி தெரியலையே பல அங்க(ம்) நாடகம் மாதிரியிருக்கு.:):)////
:-))))
வாங்க சாத்திரி...
//யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி
இருக்கு...
சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க
மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?//
அட இன்னா மேரி மேட்டருப்பா,
சும்மா லெப்ட்டுல பூந்தது ரைட்டுல
வந்தா மேரி கலக்கிட்டப்பா,
நம்ப ஏரியா பக்கம் வந்தா நம்பல
கண்டுக்கப்பா ! வர்ட்டா....
[ஜெ: ]யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...
:)
கலக்கலா இருக்கு.... !!!!!!!!
அருமை!
Very good
வாய்ப்பே இல்லை. அருமையோ அருமை.
:-))))))))))))
அட்டகாசம்!
கலக்கல் மோகன்
தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத்
தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி
என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம்
கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.
எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.
அண்ணே இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.
(ஆமா ஃபோன் பண்ணுனா எடுக்க மாட்டீங்களா??)
///அட இன்னா மேரி மேட்டருப்பா,
சும்மா லெப்ட்டுல பூந்தது ரைட்டுல
வந்தா மேரி கலக்கிட்டப்பா,////
நன்றி அதே கண்கள், முதல் வருகை போல!!?!
////நம்ப ஏரியா பக்கம் வந்தா நம்பல
கண்டுக்கப்பா ! வர்ட்டா....///
கண்டிப்பா நைனா!!!
////[ஜெ: ]யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...///
ஆமாம் ஞான சேகரன், நன்றி.
////:)
கலக்கலா இருக்கு.... !!!!!!!!//
நன்றி பதி
///அருமை!///
நன்றி யோகன்
//// Very good////
நன்றிங்கண்ணா
////வாய்ப்பே இல்லை. அருமையோ அருமை.
:-)))))))))))////
வாங்க சின்ஸ், நலமா?
///அட்டகாசம்!///
நன்றி பழைமைபேசி அண்ணே!!
////கலக்கல் மோகன்///
நன்றி நசரேயன் ஜி,
எனக்கு ஒரு சந்தேகம், அம்பது வயசுலயும் தளபதி -ன்ற பட்டப்பேரோட எப்படி இருக்கீங்க!!!
:-)))))
///ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது///
நெசம்மாத்தான் சொல்றீங்களா அனானி சார்?
////அண்ணே இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.///
நல்லா சிரிங்கன்னே!!!,
நன்றி அண்ணே!
(ஆமா ஃபோன் பண்ணுனா எடுக்க மாட்டீங்களா??)///
மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்கண்ணே!
எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?
சசி: டெம்ப்ளேட்டா?
எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...
சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...
Super :)))))
///எலேய்...வெயிட் பண்ணு அடுத்த மாசக் கடசீல உன் டவுசர் கிழியுண்டி///
அப்புடியா???!! அவ்ளோ நாளாகுமா?
முடியல மோகன் :)))))))))))))))))
///முடியல மோகன் :)))))))))))))))))///
ஹா ஹா ஹா, இதுக்கே முடியலன்னா எப்படி ஸ்ரீதர், எலக்சன் முடியறவரைக்கும் இப்படித்தான!
Post a Comment