இறந்து கிடக்கும் ஈழத்தமிழனின் தீராப் பகையாளி ஒருவர் அவன் இழவை எடுக்க வீடுதேடி வந்திருக்கிறார். சும்மா வரவில்லை, கையில் சீட்டுக்கட்டுடன் வந்திருக்கிறார். இதுவரை பிணத்தின் அருகில் நின்று கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உறவினர் ஒருவர் சீட்டுகட்டை கண்டதும் கடைசியாக ஒருமுறை மூக்கை சிந்திவிட்டு தனக்கும் ஒரு கை போடச்சொல்லி சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார். இழவு வீட்டில் ஆரவாரமாக அரங்கேறும் சீட்டுக்கச்சேரி பிணத்தின் அருகாமையால் எவ்விதத்திலும் சோடை போகவில்லை. பகையாளி நபருடன் இழவு வீட்டுக்கு மீண்டும் வந்த முன்னாள் உறவினர் ஒருவர் எல்லோருக்கும் ரம்மி சேர்த்து கொடுத்துக் கொண்டு ஆட்டத்தின் விறுவிறுப்பு குன்றாமல் பார்த்துக் கொள்கிறார்.
இவ்வளவையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தலைவர் வெகுண்டெழுந்துவிட்டார். இழவு வீட்டில் இவர்கள் நடத்தும் சீட்டு கச்சேரி அவருக்கு மிகுந்த வேகாளத்தை உருவாக்குகிறது. தான் பலமுறை அழைத்தும் சீட்டாட வராதவர்கள் இப்போது மும்முரமாக ஆட்டத்தில் லயித்துவிட்டார்களே என்பதுதான் இவரது கோபம். இழவு விழுந்தது தன் வீட்டில்தான் என்பதை சுத்தமாக மறந்துபோனார் இந்த பிதாமகர். ஒரு பொறாமைக்காரியின் முனகலைப் போல பொறுமுகிறார்.
இதற்கிடையே பிணத்தை எடுக்கவிடாமல் அழிச்சாட்டியம் செய்யும் கடன்காரனை எப்படி சமாளிப்பது? மழுப்பலான பதிலை கடன்காரனுக்கு தந்தவாறே உள்ளக்குமுறலை அடக்கிக்கொண்டு பிணத்தை அடக்கம் செய்ய ஆகவேண்டியதை பார்த்துகொண்டிருக்கிறார் ஒரு நபர். எதிர்காலம் பற்றிய அயர்ச்சியுடனும் நிகழ்காலப் பொறுப்புடனும் அந்த நபர் நடந்து கொள்ளும்விதம் இழவு கொடுக்க வந்த அந்த சிறு கூட்டத்தின் மனத உருகச் செய்துவிடுகிறது.
சமீபகாலமாக வலையுலக உடன்பிறப்புகளின் பதிவுகளை நோட்டம்விட்டால் அவர்கள் ஒருகருத்தை விடாமல் அங்கலாய்ப்பது புரியும். அம்மா ஆட்சியில் அடங்கி இருப்பவர்கள் இவர்களது ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்களாம்!!. இந்திய கூட்டமைப்பு தரும் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தை இவர்கள் என்னவோ கோபாலபுரத்தின் கொல்லைப் புறத்தில் உற்பத்திசெய்து அறிவாலையம் வழியாக டிஸ்ட்ரிபியூட் செய்கிறவர்கள் போல ஒரே பெருமிதம்தான் போங்கோ!! அம்மா ஆட்சியானாலும் அவங்க ஆண்டை ஆட்சியானாலும் சமூக அக்கறை உள்ளவர்களை கட்டிப்போட முடியாது. இவர்களை எதைச்செய்தாலும் சட்டவிரோதமாகத்தான் செய்யவேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சமூக விரோதிகளுக்கும் சட்டவிரோதங்களுக்கும் சராசரி இந்தியன் பயந்த காலம் மலையேறிவிட்டது என்பதை பெரிய அண்ணன்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கூடவே சிலர் ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு எனவும் அது கருணாநிதிக்கு வேண்டியது இல்லை என்றும் அருட்பேருரை நிகழ்த்துகிறார்கள். விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வேறுவேறு என்று கூறிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இவர்கள் உண்மையில் இருவரும் ஒருவரே என்பதை ஆணித்தரமாக நம்புகிறவர்களாவர். போரில் ஈழத்தமிழன் செத்தாலும் விடுதலைப்புலி செத்தாலும் அதை வேறுபடுத்தி பார்க்காத ஜடங்கள். அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம்.
26 comments:
யெப்பே...............ஏன் இந்த கொல வெறி?????????
வாங்க மதிபாலா,
கொலைவெறி எல்லாம் இல்ல!!
பிறகு, நலமா?
**அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம்.**
உணர்வின் கடுமை... - இக்கால் இது தேவை!
எந்த வரம்புக்கும் உட்படாத கொடுமைகள் நடக்கும்போது -
எவனும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது -
இந்தச் சூழலிலும் தன்னலமே கருதி போலித்தனத்தோடும் பொய்யோடும்
மாந்த நேயமின்றி நடித்து நாடகமாடும் போது -
இந்தக் கடுமை பெரிதன்று!
நலமே , நீங்க எப்படி ?
ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதித்திருப்பதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வது அபத்தமானது. சீட்டுக் கச்சேரி எடுத்துக்காட்டு மூலம் அப்பட்டமாக விளக்கி இருக்கிறீர்கள்.
விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய சூழலுக்கு காரணம் என்றுரைப்பவர்களுக்கும் காங்கிரசுகாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
நா அப்பீட்டு தல
:)
நல்ல பதிவு!
நல்ல பதிவு!
அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமும் தான்...
எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் இப்படி குப்புற விழுவார்கள் என்று எண்ணவில்லை !!!!
/////உணர்வின் கடுமை... - இக்கால் இது தேவை!
எந்த வரம்புக்கும் உட்படாத கொடுமைகள் நடக்கும்போது -
எவனும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது -
இந்தச் சூழலிலும் தன்னலமே கருதி போலித்தனத்தோடும் பொய்யோடும்
மாந்த நேயமின்றி நடித்து நாடகமாடும் போது -
இந்தக் கடுமை பெரிதன்று!////
வாங்க சிக்கி முக்கி!! இதற்கெல்லாம் கவலைப்பட்டால் பிழைப்பு ஓடுமா! மேலும் இந்த கடுமையான பதிவு அவர்கள் பெரியமனது செய்து எனக்களித்த சுதந்திரம். அதற்கு ஒரு நன்றி சொல்வோம்!!
///நலமே , நீங்க எப்படி ?///
நலம், நலமே விழை(ளை)க!
////ஜனநாயக நாட்டில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதித்திருப்பதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வது அபத்தமானது.////
சாதனை மட்டுமில்லையாம். பெருந்தன்மை வேறாம்!
///சீட்டுக் கச்சேரி எடுத்துக்காட்டு மூலம் அப்பட்டமாக விளக்கி இருக்கிறீர்கள்.//
நன்றி முத்து.
/////விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய சூழலுக்கு காரணம் என்றுரைப்பவர்களுக்கும் காங்கிரசுகாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.///
கரைவேட்டியும் கதர் குல்லாவும் இரண்டற கலந்துவிட்டன!
////நா அப்பீட்டு தல
:)////
தெரியுமே! திமுக வை விமர்சித்தால் நீங்க அப்பீட்டுதானே! ஓ!! வார்த்தைகளின் கடுமைக்கு அப்பீட்டா??!!?!! ஓகே ஓகே!
////நல்ல பதிவு///
நன்றி லக்கி!!!
///நல்ல பதிவு!///
ரெண்டாவது வாட்டி சொல்றத பாத்தா, நக்கல் பண்ற மாதிரியே இருக்கு!!! :-))))
////அருமை, உங்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, உதாரணமும் தான்...///
நன்றி பொற்கோ!!
///எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள் இப்படி குப்புற விழுவார்கள் என்று எண்ணவில்லை !!!!///
:-((
//அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு //
திருமாவளவனையா சொல்கிறீர்? பாவமய்யா.. அவரும் அரசியல்வாதி தானே.. :)))
ஒருவேளை வைகோவா இருக்குமோ? ;(
இல்லை இருவருமா?
( இதற்கும் காங்கிரஸ்காரனை திட்டி தான் பதில் வருமோ) :))
//எவ்வளவு வீரம் காட்டிய விடுதலை சிறுத்தைகள்//
ஹாஹாஹா ;))
//////அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு //
திருமாவளவனையா சொல்கிறீர்? பாவமய்யா.. அவரும் அரசியல்வாதி தானே.. :)))///
அவர் அரசியலை தொடங்கியநாளில் இருந்து ஈழ ஆதரவை மேற்கொள்கிறார். அவ்வப்போது அல்ல. மேலும் அவர் இப்போதும் ஈழ ஆதரவு பொறுப்புடன் தான் பேசுகிறார். பொறுப்பை விடுதலைப் புலிகளிடம் விட்டுவிடவில்லை. சர்வாதிகாரி என்று ஒரு அறிக்கையில் சொல்லிவிட்டு அடுத்த அறிக்கையில் தளபதி என்று சொல்வது யாரோ அவரை குற்றம் சுமத்தினேன்.
////ஒருவேளை வைகோவா இருக்குமோ? ;(
இல்லை இருவருமா?
( இதற்கும் காங்கிரஸ்காரனை திட்டி தான் பதில் வருமோ) :))////
கவலைப் படாதிங்க! காங்கிரஸ் காரர்களுக்கெல்லாம் ட்டமாஷ் பதில்தான். திட்டுவதில்லை. திமுக காரர்களைத்தான் திட்டுவேன்! ஏன்னா அவங்கதான் கருத்து சுதந்திரம் தராங்க! :-)))
/திமுக காரர்களைத்தான் திட்டுவேன்! ஏன்னா அவங்கதான் கருத்து சுதந்திரம் தராங்க! :-))) //
:))
சூடான பதிவு....
ஆனால், யாருக்கும் உரைக்கப் போவது இல்லை....
ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீர்களா? சூப்ப்ரப்பு
ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதிவு எழுதுறது? நாங்க யாரன்னு புரிஞ்சுக்கிறது.. ;-)
வாங்க பதி!!
சுரணை லேதண்டி!!! அப்பறம் எங்க உரைக்கும்!!
///ஆகவே புர்ச்சிதலைவிக்கு ஓட்டு போடுங்கள் என்கிறீர்களா? சூப்ப்ரப்பு///
அனானி!! பிளேட்ட மாத்தாத சாமி!
///ஏன்ண்ணே! திருமா போட்டோ போட்டு விட்டு இப்படி பதிவு எழுதுறது? நாங்க யாரன்னு புரிஞ்சுக்கிறது.. ;-)///
தமிழ் பிரியன் அண்ணாச்சி! திருமா வைத்தவிர எல்லோரையும் குற்றம் சொல்லி இருக்கேன்! கரெக்டா அவர மட்டும் நீங்க கேட்கிறீர்கள்! :-))))
Post a Comment