இன்றைய "தி நியூ யார்க் டைம்ஸ்" நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் கீழே!
காயமுற்ற நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு இலங்கை மருத்துவமனையில் ஞாயிறு இரவு மூன்று எறிகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக சர்வதேச அமைப்புகளும் மருத்துவ ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். முதலிரண்டு தாக்குதல்களில் குறைந்தது ஏழுபேர் இறந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் நிகழ்ந்த தாக்குதல்களில் இறந்தவர்களை எண்ணும் பணி திங்கள் வரையிலும் தொடர்வதாக கூறப்படுகிறது.
உலகிலேயே மிக நீண்ட காலம் நடைபெறும் மக்கள் போராட்டங்களில் ஒன்றான இதில் பிரிவினைவாத எல்.டி. டி. இ - யினரை ஒரு சிறிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் முடக்கிய பிறகு இது போன்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. எந்தப்பகுதியில் இருந்து எறிகணைகள் வருகின்றன என்று கணிப்பது கடினமாக உள்ளது.
புது குடுயிருப்பு பகுதியில் உள்ள அந்த மருத்துவமனையில் நடைபெற்ற முதல் தாக்குதலில் இருவர் இறந்ததாகவும் ஐவர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டு அமைப்பு ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இரண்டாவது தாக்குதலில் ஐவர் இறந்தாக மருத்துவ ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி ஒருங்கிணைந்த ஊடகம் (Associated Press) தெரிவித்துள்ளது. இரவு 11.45 -க்கு குழந்தைகள் பிரிவு தாக்கப் பட்டதாக கொழும்பில் இருக்கும் ஐ.நா. செய்தி தொடர்பாளர் கார்டன் வீயஸ் திங்களன்று தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். "பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தாக்கப்பட்டது. கடவுளே! இதை விவரிக்க வார்த்தைகளே வரவில்லையே! இன்னும் இறந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டுள்ளோம்" -என ஐ.நா. பணியாளர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, காயமுற்றவர்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பி போராளிகளுக்கு அனுதாபத்தை காட்டும் வெளிநாட்டு ராஜதந்திரிகள், உதவி அமைப்புகள் மற்றும் செய்தியாளர்களை வெளியேற்றப் போவதாக அரசு அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்.
"தி ஐலேண்டு" இதழுக்கு அளித்த நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே சி.என்.என், பி.பி.சி, அல்ஜசிரா ஆகிய மூன்று ஊடகங்களை பெயர் குறிப்பிட்டு சாடியுள்ளார். "அம்மூன்று ஊடகங்களும் விரட்டி அடிக்கப்படவிருக்கிறார்கள்" என்று அவர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசுக்கும் போராளிகளுக்கும் சண்டை வலுத்துள்ள நிலையில் இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளார். வேகமாக சுருங்கி வரும் விடுதலைப் புலிகளின் வசமுள்ள வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கதி குறித்து அபாயம் அதிகரித்துள்ளது.
இராணுவம் அழைத்துச்செல்லும் பகுதிகள் தவிர வேறெங்கும் பத்திரிகைகள் அனுமதிக்கப் படாததால் போர்முனையில் என்ன நடக்கின்றது என்பது வெளியுலகில் அறியப்படாமலேயே உள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்த மருத்துவமனை அதன் கொள்ளளவுக்கு மீறி காயமடைந்த ஐந்நூறு நோயாளிகளுக்கும் மேல் மருத்துவம் செய்து வந்ததாக அம்மருத்துவமனையை நடத்தும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது. கட்டாந்தரைகளிலும், கூரைப் பாய்களிலும் நோயாளிகள் கிடத்தப்பட்டும் பலர் வரிசைகளில் காத்திருந்தனர். அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிவேண்டி நீண்ட வரிசையில் இன்னமும் காத்திருப்பதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

4 comments:
cluster bombs கூட போடப்படுகிறது.உலக நாடுகள் ஒன்று சேர்ந்து இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறானா குண்டுகளை போடும் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா தங்களது உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும்.
வைத்தியசாலையில் இருந்து இன்று காலை al-jazeera சேனல் ஒரு exclusive ஒளிபரப்பினார்கள். புலிகளிடம் அவர்களது உறவினர்கள் இருப்பதால், வைத்திய சாலையில் இருக்கும் மக்கள் அதை விட்டு நகர மறுப்பதாக.(caritas தொண்டு நிறுவனம் ) இதுவரை இந்த சேனல் ஓரளவேனும் நடுநிலையாகவே செய்தி போட்டு வந்து உள்ளனர். அந்த வைத்தியசாலையில் இருக்கும் அனைவரையும் ஒரு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும். (அங்கே வைத்தியம் செய்ய வசதிகள் எல்லாம் இப்பொழுது இல்லை) அதே போன்று, விடுதலைபுலிகள் civiliansai உபயோகப்படுத்த கூடாது. அவர்களிடம் அதை வலியுறுத்தும் முயற்சியில் ஈழ தமிழர்கள் தான் ஈடுபட முடியும்.
///விடுதலைபுலிகள் civiliansai உபயோகப்படுத்த கூடாது. அவர்களிடம் அதை வலியுறுத்தும் முயற்சியில் ஈழ தமிழர்கள் தான் ஈடுபட முடியும்.//
இலங்கை அரசின் பரப்புரை யுத்தத்துக்கு பலியான இன்னொரு ஜீவன்...
i am not in india and i do not follow even a single channel there and i have seen and talked a lot of srilankan tamils over here in europe and i do understand on their allegiance to LTTE and noone is forcing them to take their stance. So, i clearly understand that more than 95% of srilankan tamils do support them and that too with a reason and also wholeheartedly.
Today morning, i saw the al-jazeera exclusive on that hospital and it was so bloody pathetic. on practical terms, bloody srilankan army is not going to stop bombing the place and so the only way to stop more killing of those kids and women is to move them out of that place. Barbara traschel from caritas aid group (they are with redcross0 interviewed a few people over there and she made the same complaints that people are not moving as other members of the family is struck with LTTE. At this point of time, i think civilians (old people, women, kids) need to get out of that place. And the facilitation for that should also come from LTTE. Hopefully there is another time to restart this fight.
மிக்க நன்றி மணிகண்டன் மற்றும் செந்தழல் ரவி
Post a Comment