Monday, June 8, 2009

இந்தியா, எரிச்சலூட்டும் கோமாளி

·

எனது மற்றொரு வலைப்பூவான 'கவிச்சை' -யில் வெளிட்ட பதிவை மீண்டும் இங்கு மீள் பதிவிடுகிறேன்.

இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. இதற்கு அன்றும் இன்றும் அது தந்து வரும் ஒரே பதில் தேச நலன்.

அப்படி என்ன இந்திய தேச நலனை காங்கிரஸ் கட்டிக் காத்துவிட்டது என்றால் தொன்னூறுகளில் மொத்தமாக திவாலாகி துண்டு துண்டாக சிதறவிருந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை மீட்டது ஒன்றுதான். ஏனைய எல்லா சந்தர்பங்களிலும் எதையாவது செய்து எங்காவது சூடு பட்டுக்கொண்டு மக்களை இம்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவது என்பதைத் தவிர மாற்று கொள்கைகளை தேர்ந்தெடுக்க இந்தியா தயாரில்லை அல்லது தைரியமில்லை. தமிழர் நலனை ஒழித்து காஷ்மீரத்தை காப்பதும் இலங்கைக்கு உதவி சீனாவை கட்டுப்படுத்துவதும் தான் இந்தியாவிற்கு தற்போதுள்ள ஒரே வழி என்ற கருத்தை எனது பேராசிரியர் மறுக்கிறார்.

2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.

விடுதலைப் புலிகள் வெற்றிகளை குவித்தபோது அமெரிக்க போர்கப்பல் மத்திய ஆசியப் பகுதியில் நங்கூரமிட்டது. இதனால் நம் கடல் பகுதியில் சீனாவின் எதிர் நடவடிக்கையை எதிர்பார்த்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச்சொன்னது இந்திய அரசு. இதற்கு பதிலாக வேறு உபாயங்களை கண்டிருக்க முடியும் என்றாலும் புலிகள் உடனடியாக கேட்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தது இந்தியா.

அதுபோல் இந்தியாவின் மின்சார தேவை என்ற முற்றிலும் லாஜிக் இல்லாத காரணத்தை கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா இன்று அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளது. தில்லுமுல்லுகள் என்று அந்த ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றையும் குறிப்பிடமுடியாத நிலையில் என்னவோ பரம ரகசியம் போல் பதுங்கிப் பதுங்கி முக்காடு போட்டவாறு அதை டீல் செய்தது. கடைசியில் ஒப்பந்த வரைவை நம் கண்ணில் காட்டியபோது இதற்குத்தானா இந்த பீட்டர் என்று எண்ணத்தோன்றியது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, அதிரடி தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்பு ஏற்பட்டால்தான் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.

இந்தியாவின் கோமாளித்தனத்தை இந்திய மேதாவிகள் வானளாவ புகழ்ந்தாலும் விஷயமறிந்தவர்கள் தலையிலடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். பாஜக ஆட்சியில், ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தை முழு அளவில் தயாராக நிறுத்தி, போர் பயம் காட்டி, சர்வதேசத்தை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது இந்தியா. பத்துவருட ராணுவ பராமரிப்புச் செலவை ஒருவருடத்தில் முடித்துவிட்டு பலனேதுமின்றி படைகளை பின்வாங்கியது. சர்வதேச ஊடகங்கள் எல்லாம் எள்ளி நகையாடிய தருணத்தில் இந்திய வலது சாரி ஊடகங்கள் (வேறு எந்த சாரி -யிலாவது ஊடகங்கள் இருக்கின்றனவா?) வெற்றி முரசு கொட்டின அல்லது குதம் கிழிந்து அவஸ்தை பட்டன. இம்மாதிரியான கோமாளித்தனங்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் பலமுறை செய்திருந்தாலும் இந்திய குடிமகன் என்ற ரீதியில் நாமும் சப்பைகட்டி விட்டு நமக்குள் சிரித்துக்கொள்வதொடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இன்று ஐநா -வில் அடிக்கும் அடுத்த கேலிக்கூத்து நம் வயிறெரியச் செய்கிறது.

லட்சக்கணக்கில் தங்கள் குடிமக்கள் தெருக்களில் ஆர்பாட்டம் செய்துவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின. (அவையெல்லாம் ஜனநாயக நாடுகளாம்! மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.

இப்போது மொத்த பேரும் ஈழப்பேரழிவிற்கு இந்தியாவை ஒற்றை பொறுப்பாளி (அதுதானே உண்மை!) ஆக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தேசிய இன பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கருதினாலும் இது பற்றி எச்சரிக்கையாகக் கூட வாய்திறக்கவில்லை. ஏற்கனவே மதக்கலவரங்கள் பற்றி இங்கிலாந்து அமைச்சர் ஏதோ 'இந்திய தேசியம்... இந்து-முஸ்லிம்... மாநில அரசு... இந்திய ஒன்றியம்... என்றெல்லாம் வார்த்தைகள் போட்டு அறிக்கை வெளியிட்டுவிட அதற்கு பதிலடியாக இந்தியா 'ராபர்ட் கிளைவ்... கிழக்கிந்திய கம்பெனி... அஸ்தமனம் ஆகிவிட்ட பிரிட்டன்... என்றெல்லாம் வார்த்தைகளைப் போட்டு எதிர் அறிக்கை விட்டு பொரிந்து தள்ளிவிட்டது. இனி எக்கேடு கேட்டாலும் இவர்கள் தலையிடப் போவதில்லை.

இவ்வாறு இந்தியா என்னும் பித்துக்குளி செய்யும் வேலைகள் எல்லாம் தமிழனை காவு வாங்கிக்கொண்டிருக்க, இந்தியாவில் தூண்டப்பட்டு விட வாய்ப்புகள் நிறைய உள்ள தேசிய இன பிரச்சினையை அதன் தலையில் எத்தி, நியாபகம் ஊட்டி, தன் சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.

26 comments:

எம்.எம்.அப்துல்லா said...
June 8, 2009 at 11:37 PM  

//இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.

//

இந்த பயம் எனக்கும் உண்டு மோகண்ணே. காலம் அதை நோக்கித்தான் தள்ளுகின்றது

:(

ஆ.ஞானசேகரன் said...
June 9, 2009 at 12:44 AM  

நல்ல அலசலான பகிர்வு

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...
June 9, 2009 at 1:10 AM  

என்னய்யா நீ,காரசாரம் இல்லாம இருக்கு. இதுல கருணாநிதிய கோத்துவிடாம விட்டுட்ட.ஒண்ணும் ஒப்பல.

முத்துமால திட்டமே கருணாநிதி சதியால உருவானதுதான்னு சைசா அடிச்சு விட்டுருந்தா ஆட்ட சூடுபுடுச்சிருக்கும்ல.

லக்கிலுக் said...
June 9, 2009 at 1:24 AM  

ஒரிஜினல் மனிதனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். எனக்கு கூட ஒரு சந்தேகம் உண்டு. நம்ம கருணாநிதியும் ஒருவேளை ராவில் ரகசியமாகப் பணியாற்றுகிறாரோ? கொஞ்சம் புலனாய்வு செய்து வெளியிடுங்கள் மோகன்!

Anonymous said...
June 9, 2009 at 1:51 AM  

அல்கயிதா, தாலிபான்,நாசமாப்போன கே.ஜி.பி. மொஸாத் போன்றவற்றின் உயர்நிலைசெயற்குழு திட்டத்தலைவரும்,

பின்லேடரின் பிதாமகருமான தலைவரை "ரா"வில் பணியாற்றுகிறார் என்று கொச்சைப்படுத்திய லக்கியை வன்மையாக கண்டிக்கிறேன்.

ttpian said...
June 9, 2009 at 2:23 AM  

தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்....

Gokul said...
June 9, 2009 at 11:23 AM  

அருமையான பதிவு "எரிச்சலூட்டும் கோமாளி" என்பது உண்மைதான் , என்றாலும் இந்த எரிச்சலூட்டும் கோமாளி தந்திருக்கும் நமது தினசரி வாழ்விற்கும் பெருத்த தொடர்பு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

நாம் அதாவது இந்தியர் (பெரும்பான்மையான) இந்தியர் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பொறுப்பு அற்று இருக்கிறோம், எப்படி பிற மனிதரின் கொடுமைகளை கண்டு உணர்வற்று இருக்கிறோம், ஏற்றுக்கொண்ட தேர்தல் முறையை கேலிகூத்தாக்கொண்டு இருக்கிறோம் என்று பார்த்தோமானால் இந்த கோமாளி தனத்திற்கு அர்த்தம் புரியும் , அமைச்சர்களோ, I.F.S அதிகாரிகளோ வானில் இருந்து குதித்து விட வில்லையே , இங்கே இருந்துதானே வந்து இருக்கிறார்கள், கோமாளி நாட்டில் இருந்து கோமாளிகள்தான் வருவார்கள்.

ஒரு நட்டு மக்களுக்கு என்ன தகுதியோ அதற்கு தகுந்த தலைவன் வருவான், தலைவனுக்கு அந்த தகுதியோ அதற்கு தகுந்த அதிகாரிகள்தான் வருவார்கள் , ஒரு அதிகாரிக்கு அந்த தகுதியோ அதற்கு தகுந்த பணியாளர்கள்தான் வருவார்கள் , ஆக கோமாளி கூட்டத்திற்கு கோமாளி தலைவர்கள் வந்து கோமாளி வெளியுறவு கொள்கை வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

நண்பன் said...
June 9, 2009 at 1:51 PM  

கனவுகளைக் கலைக்காதீர்கள்

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:18 PM  

////நல்ல அலசலான பகிர்வு///

நன்றி ஞான சேகரன்!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:28 PM  

///என்னய்யா நீ,காரசாரம் இல்லாம இருக்கு. இதுல கருணாநிதிய கோத்துவிடாம விட்டுட்ட.ஒண்ணும் ஒப்பல.///

இப்படி சொன்னா நீங்க நல்லவைங்களாகிடுவீரா! போதுமைய்யா உங்க ரீலு அந்து
போச்சு!!

//முத்துமால திட்டமே கருணாநிதி சதியால உருவானதுதான்னு சைசா அடிச்சு விட்டுருந்தா ஆட்ட சூடுபுடுச்சிருக்கும்ல.///

ஏற்கனவே அவருக்கு பிடித்த சூட்டினால்தான் பித்தம் தலைக்கேறி எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று தந்தி, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம் என அல்லாடிகிட்டு இருந்தார். அப்பவெல்லாம் ஒருவரும் வாயைத் திறக்கவில்லையே! இப்போது சூடு வேண்டுமா?!!?!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:37 PM  

////ஒரிஜினல் மனிதனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.///

பாவம்!, வேறென்ன பண்ணுவீங்க நீங்க!

///எனக்கு கூட ஒரு சந்தேகம் உண்டு. நம்ம கருணாநிதியும் ஒருவேளை ராவில் ரகசியமாகப் பணியாற்றுகிறாரோ?///

ராவில் பணியாற்றினாரா அல்லது பகலில் முக்காடு போட்டுக்கொண்டு பணியாற்றினாரா என்பதெல்லாம் தெரியாது!, ஆனால் ஆற்றவேண்டியத்தை சரியாக ஆற்றி பலனை கைமேல் கண்டுவிட்டார். இல்லை என்கிறீர்களா??!!

///கொஞ்சம் புலனாய்வு செய்து வெளியிடுங்கள் மோகன்!//

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு??

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:39 PM  

///பின்லேடரின் பிதாமகருமான தலைவரை "ரா"வில் பணியாற்றுகிறார் என்று கொச்சைப்படுத்திய லக்கியை வன்மையாக கண்டிக்கிறேன்.///

ஓ! இது வேறயா??!! சரிதான்!!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:43 PM  

///தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்.////

நேரடியாய் தாக்குவது ஓநாய், கமுக்கமாக கழுத்தை கவ்வுவது குள்ளநரி; எது ஓநாய்? எது குள்ள நரி?

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:52 PM  

///கொடுமைகளை கண்டு உணர்வற்று இருக்கிறோம், ஏற்றுக்கொண்ட தேர்தல் முறையை கேலிகூத்தாக்கொண்டு இருக்கிறோம் என்று பார்த்தோமானால் ////

அந்த கூத்தில் கெலித்து விட்டோம் என்று சமீபகாலமாக குத்தாட்டம் போட்டுவரும் நம்மவர்களுக்கு உணர்வற்றுப் போய்விட்டது அறிந்ததே!

///கோமாளி கூட்டத்திற்கு கோமாளி தலைவர்கள் வந்து கோமாளி வெளியுறவு கொள்கை வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.///

ஆகா! நூற்றில் ஒன்று, பொட்டில் அறைந்தாற்போல்!

நன்றி கோகுல்!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:53 PM  

////இந்த பயம் எனக்கும் உண்டு மோகண்ணே. காலம் அதை நோக்கித்தான் தள்ளுகின்றது

:(///

அது நடக்கிறதோ இல்லையோ அதை காட்டி பயமுறுத்தியாவது நம் நலனை பேண வேண்டியது அவசியம். ஆனால் அதை செய்ய வேண்டியவர்களுக்கு வேறொன்று தான் அவசியம். என்னது...அது என்னவா? அட போங்கண்ணே! :-))

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 6:57 PM  

///கனவுகளைக் கலைக்காதீர்கள்//

வல்லரசு கனவுதானே! இந்த ரேஞ்சில் போனால் அது கனவாய்தான் முடியும்!!

நன்றி நண்பன்!

மதிபாலா said...
June 10, 2009 at 3:01 AM  

ஆஹா...ஆஹா....

எனது நண்பர் மோகன் கந்தசாமி அவர்கள்தான் இந்த வார விண்மீனா???

அடிச்சி தூள் கிளப்பிடுவோம் கும்மிய.

அதுக்கு தனியா ஒரு பதிவு போடுங்க.

நட்சத்திர கும்மி என்ற நவீன கால கும்மியை அண்ணன் முரளிகண்ணன் பதிவில் ஆரம்பித்த பெருமை அடியேனைச் சாரும்.

இந்தப் பதிவினை "கவிச்சை"யில் படித்து அங்கேயே பின்னூட்டம் போட்டு விட்டதால் இங்கே எஸ்கேப்.

Anonymous said...
June 10, 2009 at 3:25 AM  

I love original manithan's comment.

Anonymous said...
June 10, 2009 at 12:34 PM  

போடா லூசு. நாட்டை விட்டு ஓடி போன நீயெல்லாம் பேசற போடா பரதேசி

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:11 PM  

//எனது நண்பர் மோகன் கந்தசாமி அவர்கள்தான் இந்த வார விண்மீனா???///

ஆமாங்க மதி! நம்மையும் ஆட்டத்தில சேர்த்திட்டாங்க!!

///அடிச்சி தூள் கிளப்பிடுவோம் கும்மிய.

அதுக்கு தனியா ஒரு பதிவு போடுங்க. ///

ஆகா! போட்டிடலாம் அண்ணே!

////நட்சத்திர கும்மி என்ற நவீன கால கும்மியை அண்ணன் முரளிகண்ணன் பதிவில் ஆரம்பித்த பெருமை அடியேனைச் சாரும்.///

அண்ணே, அடடா, வழக்கம்போல் தவற விட்டாச்சா!

///இந்தப் பதிவினை "கவிச்சை"யில் படித்து அங்கேயே பின்னூட்டம் போட்டு விட்டதால் இங்கே எஸ்கேப்.///

நன்றி அண்ணே!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:12 PM  

///I love original manithan's comment.//

நல்லது!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:13 PM  

///போடா லூசு. நாட்டை விட்டு ஓடி போன நீயெல்லாம் பேசற போடா பரதேசி///

உங்களுக்கு ரொம்ப கோவம் வருது! பார்த்துன்னே! உடம்பு சவுரியமில்லாம போயிடப்போகுது!

கோவி.கண்ணன் said...
June 11, 2009 at 11:09 PM  

மோகன்,

வின்மீன் கிழமைகளின் மிகவும் எதிர்பார்த்தேன்.

தமிழச்சி பேட்டி அது இதுன்னு பேட்டிகள் எடுத்தாவது போட்டு இருக்கலாம். இன்றோடு 3 நாள் இருக்கு.

ttpian said...
June 13, 2009 at 2:41 AM  

(In Australia)அடி வாங்குவது இந்தியந்தானே?
வாங்கட்டுமே?
தமிழ் இனம் அழிந்தபோது,சந்தோசப்பட்டது இந்தியர்கள்:
இவர்கள் உதைபடும்போது தமிழனாகிய எனக்கு பரம சந்தோசம்>
காரைக்காலில் இருந்து....கோ.பதி

ttpian said...
June 14, 2009 at 4:43 AM  

அல்வா கொடுப்பதில் மஞ்சள் துண்டு கில்லாடி....
சோனிய தியாக திருவிளக்கு
ராகுல் இளஞ்சிங்கம்
சண்டையை பார்க்காத தனது மகன்கள்
1)இளைய தலபதி
2)தென்மண்டல தளபதி

சரி,நமக்கு என்ன பட்டம்?

பரமார்த்த குருவின் சீடர்கள் அல்லது
கேனையர்கள் கூட்டம்

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 9:31 PM  

////மோகன்,

வின்மீன் கிழமைகளின் மிகவும் எதிர்பார்த்தேன்.

தமிழச்சி பேட்டி அது இதுன்னு பேட்டிகள் எடுத்தாவது போட்டு இருக்கலாம். இன்றோடு 3 நாள் இருக்கு.///

முடியவில்லை கண்ணன், பெரும்பாடாய் இருக்கிறது.!!