நேற்று விடியற்காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேசாத என் அம்மா அழைத்திருந்தார். எனது திருமண முயற்சிகளில் சொர்ந்துபோனவர் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று எல்லாவற்றையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கடந்தமுறை கூட என் திருமண விஷயமாக எங்களிருவருக்கும் பெருத்த சண்டையாகி தொலைபேசி இணைப்பை பாதியிலேயே துண்டித்திருந்தார். இம்முறை அழைப்பு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை சொல்வார் என்று நினைத்திருந்தேன்.
"டேய், இதுதான் ஃபோன் நம்பர். அஞ்சே அஞ்சு நிமிஷந்தான், அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பேசினன்னு தெருஞ்சுதுன்னா கொன்னுடுவேன்!" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதற்கு முன் பலமுறை பெண் பார்த்து படங்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை திறந்து கூட பார்க்காமலே "அந்த அஞ்சு நிமிஷ மேட்டர் என்னாச்சு என்று தான் கேட்பேன். நான் முதலில் ஒகே சொன்னால் அஞ்சு நிமிஷம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்பார். இது வேலைக்காகாது, முதலில் அஞ்சு நிமிஷம், பிறகுதான் ஓகே என்று வாதிட்டுப் பார்த்தேன். விடாப்பிடியாக நிராகரித்துவிட்டு அடுத்த பெண் தேட ஆரம்பித்துவிடுவார். பெண் அழகாக இருந்தால் நான் அஞ்சு நிமிஷ மேட்டர் பற்றி எதுவும் பேச மாட்டேன் என நினைத்துவிட்டார் போலிருக்கு.
நல்ல ஃபிகரெல்லாம் இப்படியே கைநழுவிப்போக, வேறொரு உபாயம் செய்தேன். சும்மானாச்சும் ஓகே சொல்லி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு பிறகு பிடித்தால் ஒப்புக்கொள்வோம், இல்லாவிட்டால் இழுவையாக நீட்டி பிறகு மறுத்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஒரு சுமாரான ஃபிகர் படம் வந்தபோது ஓகே சொல்லிவிட்டு அஞ்சு நிமிஷத்திற்கு அனுமதி வாங்கினேன். நிச்சயம் நிராகரிக்கும் எண்ணத்துடன் பேச்சை தொடங்கினேன்.
என்ன பேசினோம் என்பதை கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக்குள் என் மனசாட்சி.
"ஹலோ!, நான் மோகன் பேசறேன், நியூ ஜெசியிலேர்ந்து, மிஸ். கவிதாகிட்ட பேசமுடியுமா?"
"ஹாங்... நான்தான் பேசறேன், எப்படி இருக்கீங்க? அப்பா எட்டு மணிக்கு போன் பண்ணுவீங்கன்னு சொன்னாரு?!"
(எட்டு அஞ்சு தான ஆகுது! இதுவே லேட்டா?) ஏன், வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?
அதெல்லாம் இல்ல, ஃபிரன்ஸ் கால் பண்ணுவாங்க, மிஸ் பண்ண முடியாது!
(நியூஜெர்சி கால் -ஐ விட சைதாபேட்டை கால் முக்கியமா?) அப்படியா? சாரி!
"சரி விடுங்க! ஃபோன்ல பேசினா ஒன்னு கேட்கனும்னு இருந்தேன், நீங்க சிகரெட் பிடிப்பீங்களா!"
(வாட் ஏ டெட்லி கொஸ்டின் ?!?)"சிகரெட்டா! நானா!..ஏன் கேட்கிறீங்க!"
"சும்மாதான் கேட்டேன்"
"இல்ல தம் அடிக்கமாட்டேன்!"
"அப்புறம் ஏன் உங்களுக்கு தொண்டை பெருசாயிருக்கு?"
"தொண்டையா?, சிகரெட் பிடிச்சா தொண்டை பெருசாகும்னு யாரு சொன்னா?,(பயங்கர கண்டுபிடிப்பா இருக்கே!) உதடுதான் கறுப்பாகும்!"
"ஆமாம் உங்க உதடு கருப்பாதான் இருக்கு! நீங்க சிகரெட் பிடிப்பீங்கதான?"
(என்னங்கடா இது!!)"இத பத்தி அப்புறம் பேசுவோம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"
"நீங்கதான சம்பாதிக்கப் போறிங்க, நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அத சொல்லுங்க!"
"MS"
"எந்த ஃபீல்டு?"
(ம்ம்..என்ஃபீல்டு)" ஐடி"
"என்ன டெக்னாலஜி"
"ஜெ2ஈஈ"
"ஒ! அப்படியா? ஸ்பெஸிபிக்கா என்ன?"
(ஏன், வேற வேல வாங்கித்தரப் போறியா!) "Struts, Hibernate"
"Struts ஒண்ணா டூவா"
(ஆஹா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?!!?) "ஒன் பாயின்ட்..."
"ஓல்டு டெக்னாலஜி" -இன்னுமா அப்டேட் பண்ணல?"
"(சரி, அந்த வெள்ளக்காரன்கிட்ட மாத்த சொல்றேன்!) சரி உங்களப் பத்தி சொல்லுங்களேன்!"
அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?
"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?"
"அங்க யாரையாவது லவ் பண்ணிங்களா!"
"(லவ்தான!!) ஆமா, இப்ப ஒரு ஸ்பானிஷ் காரிய லவ் பண்றேன்! இதுக்கு முன்னாடி ஒரு கருப்பிய லவ் பண்ணேன், அதுக்கு முன்னாடி..."
"சும்மா கத உடாதிங்க, நீங்க ஒரு தொட நடுங்கின்னு உங்கம்மா சொல்லிட்டாங்க!"
"சரி... நிறைய பேசிட்டம்னு நினைக்கிறேன்... என் அம்மா கிட்ட சொல்லி உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ண சொல்றேன்!, வச்சிடவா?"
"அதெல்லாம் வேணா எதுக்கு! நான் எங்கப்பாகிட்ட என் முடிவ சொல்லிட்டேன்!"
"(முடிவே பண்ணியாச்சா!)என்ன சொன்னீங்க!"
"வேற இடம் பாக்க சொல்லி!"
"வேற எடமா? அப்பறம் என்ன ம்ம்..மசி... எதுக்கு போன் ல பேசின!"
"எனக்கு இஷ்டமில்ல, உங்க வீட்லதான் திரும்ப திரும்ப கால் பண்ணாங்க!"
"ஆ.!!?!?..."
அப்போது பல்பு வாங்கியவன்தான், அதன் பிறகு இந்த அஞ்சு நிமிஷ மேட்டர் வேலைக்காகாது என்று முடிவெடுத்து இருந்தேன். ஆனால் இந்த முறை எப்படியாவது தெளிவா பேசிடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்து, மனதிற்குள் ஓரிரு முறை சொல்லிப்பார்த்து இருக்கிறேன். என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது. இம்முறை எப்படியும் ஃபிகர மடிச்சிட... மன்னிக்கவும் பெண்ணிற்கு பிடித்த மாதிரி பேசி அசத்த வேண்டும். இந்த முறையும் பல்பு வாங்கினால் அம்மா பார்க்கும் பெண்ணை ஃபோட்டோ
பார்க்காமலே கூட திருமணம் செய்ய வேண்டிவரலாம்.
நம் பதிவுலகில் தங்க மணிகள் பற்றிய அனுபவப்பதிவுகள் நிறைய வந்துள்ளன. திருமணத்திற்கு முன் இவ்வாறு பல்பு வாங்கி பிறகு மீண்டவர்கள் யாராவது இருந்தால் ஐடியா கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை, அதான் ஒரு சிறு மொக்கை. பொறுத்ததருள்வீராக! தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை என்று ஏதாவது பஜார் புத்தக மேதாவிகள் சொல்லக்கூடும். இதற்கும் ஒரு மாப்பு கேட்டுக்கிறேன்!

44 comments:
சரி விடுங்க மோகன்.. நான் எல்லாம் அடியே வாங்கி இருக்கேன். கண்டிப்பா பதிவு போட்டு யோசனை சொல்லுறேன், இதை வச்சி ஒரு நாலு பதிவு போடுறேன்
///சரி விடுங்க மோகன்.. நான் எல்லாம் அடியே வாங்கி இருக்கேன். ///
ஆஹா! என்ன இது!
///கண்டிப்பா பதிவு போட்டு யோசனை சொல்லுறேன்,///
போடுங்கண்ணே! போடுங்கண்ணே!
///இதை வச்சி ஒரு நாலு பதிவு போடுறேன்///
நாலா??!! நன்றி அண்ணாச்சி!
\\அதான் "ஃ போட்டோ பின்னாடி டீடைல் -லா எழுதி இருந்தேனே! படிக்கலையா?
"(ங்கோத்தா... இன்னைக்கு எவன் முகத்துலடா முழிச்சேன்!)"சரி வேறேதாவது கேட்கனுமா?" \\
கல்யாணத்திற்கு முன்னர் இந்த பெண்ஆதிக்கம்தான் பின்னர் ஆணாதிக்க குணத்தை வளர்க்க அஸ்திவாரம் போடுகிறது.
நல்ல சுவையான பதிவுதான்., தொடருங்கள் வாழ்த்துக்கள்
இதையும் படித்துப்பார்க்கவும் நண்பா
நல்ல பதிவு... ஒவ்வொரு தடவையும் ஃபோன்ல பேசுனீங்கன்னா இந்த மாதிரி பதிவு போடுங்க..
//
என்ன எதிர்கேள்விகள் வரக்கூடும், எந்த கேள்விக்கு எந்த பதில் சொல்லவேண்டும் என்று ஓரளவுக்கு யோசித்து ஒப்பேற்றி ஆகிவிட்டது.
//
என்ன கொடுமை சார் இது?
சும்மா இப்படி பதிவு போட்டுக்கினே இருப்பா. 5 நிமிசம் தாண்டாமா பாத்துக்கோ,இல்லாட்டி 5 நிமிசம் கூட நிம்மதி கெடக்காது
தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை
இப்படிக்கு
பஜார் புத்தக மேதாவி
:))
//மேலும், நட்சத்திர வாரத்தில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை //
யோவ் அண்ணாத்த,
கெடைக்காத சான்ஸ்சு கிடைச்சு இருக்கு எத்துனா எல்துவியா அத்தவுட்டுகினு சொம்மா பொலம்பிகினுகீர...
(நம்மளையெல்லாம் எந்த ஜென்மத்திலும் நசத்திரமாக்க மாட்டாங்க.உங்களுக்கு கிடைச்சு இருக்கு.கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்துங்க)
:-)))
:-)))
எனக்கும் என் அம்மா 5 வருடம் போர்த்தீவிரத்தோடு பொண்ணு பார்த்தாங்க.
கொஞ்சம் சுமாரா பொறந்து தொலைச்சிருந்தோமுன்னா இந்த மாதிரி நம்முடைய தெய்வத்தாய்கள் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். :-(
ஆஹா !!!!!!!!!!!!!!!!!
சரியான நகைச்சுவைப் பதிவு.
//
"எந்த ஃபீல்டு?"
(ம்ம்..என்ஃபீல்டு)"
//
செம நக்கல்!
;)
நல்லா இருக்கு பதிவு. பொண்ணுங்க இந்த அளவு கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்களா.... அடுத்த முறை பல்பு வாங்காம இருக்க வாழ்த்துக்கள்.
//@எம்.எம்.அப்துல்லா said...
யோவ் அண்ணாத்த,
கெடைக்காத சான்ஸ்சு கிடைச்சு இருக்கு எத்துனா எல்துவியா அத்தவுட்டுகினு சொம்மா பொலம்பிகினுகீர...
(நம்மளையெல்லாம் எந்த ஜென்மத்திலும் நசத்திரமாக்க மாட்டாங்க.உங்களுக்கு கிடைச்சு இருக்கு.கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்துங்க)//
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது.
யோவ் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னய்யா சம்பந்தம்?
வேணாம், ஒழுங்கா மார்கெட் இருக்கப்பவே நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கங்க. ரொம்ப போட்டோல்லாம் பார்த்துட்டு ரிஜெக்ட் பண்ண நல்லாத்தான் இருக்கும். அப்பால யாராச்சும் ஒருத்தர கண்ணாலம் கட்டித்தான் ஆவோணும். அப்பாலிக்க அடடா அந்தப் பொண்ண வேணாம்ணு சொன்னோமே, இந்தப் பொண்ண வேணாம்ணு சொன்னோமேன்னு ஃபீலிங்ஸ் ஆயிரும்.
அண்ணே உங்களுக்கு பின்னூட்டம் போட யோசிச்சு ஒரு பதிவே போட்டுட்டேன்.
இன்னொரு பதிவும் தயாராகிட்டு இருக்கு, நீங்க போன்ல பேசினபோது கவிதா என்னெல்லாம் நெனச்சிருப்பாங்க, அவங்க மனசாட்சி என்ன பேசி இருக்கும்ன்னு, நீங்க சரின்னு சொன்னா அதையும் போட்டுடலாம்... :-)
:-))
சிரிப்ப அடக்க முடியலை! பொண்ணு பார்க்கறதுல இவ்ளோ பிரச்சினை இருக்குதா..
நான் அப்புறமா இன்னொரு பதிவு போடுறேன். இதைப்பத்தி :)
// செந்தழல் ரவி said...
ஆஹா !!!!!!!!!!!!!!!!!//
ரவி! நீயெல்லாம் ஆஹா போட்டு வருத்தப்படத்தான் முடியும் :)))
:))))))))))))
இது இவ்ளோ சிக்கலான மாட்டரா!!!
:))
///கல்யாணத்திற்கு முன்னர் இந்த பெண்ஆதிக்கம்தான் பின்னர் ஆணாதிக்க குணத்தை வளர்க்க அஸ்திவாரம் போடுகிறது.
நல்ல சுவையான பதிவுதான்., தொடருங்கள் வாழ்த்துக்கள்//
நன்றி நண்பரே!
////இதையும் படித்துப்பார்க்கவும் நண்பா///
படித்தேன் நண்பரே!. சில புரிதல்களைத் தருகிறது உங்கள் பதிவு! மிக்க நன்றி!
/////
என்ன கொடுமை சார் இது?//
ஹா ஹா! எனக்கே அசிங்கமாகத்தான் இருக்கு! என்ன செய்வது வெண்பூ!
///சும்மா இப்படி பதிவு போட்டுக்கினே இருப்பா. 5 நிமிசம் தாண்டாமா பாத்துக்கோ,இல்லாட்டி 5 நிமிசம் கூட நிம்மதி கெடக்காது///
என்ன குடுகுடு அண்ணே! நிலைமை கவலைக்கிடம்தானா பிறகு!
////தலைப்புக்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை
இப்படிக்கு
பஜார் புத்தக மேதாவி
:))///
வாங்க, மேதாவி அண்ணே! :-)))
///:-)))///
வாங்க முரளிகண்ணன்.
///:-)))/
நன்றி சரவண குமரன்
///எனக்கும் என் அம்மா 5 வருடம் போர்த்தீவிரத்தோடு பொண்ணு பார்த்தாங்க.
கொஞ்சம் சுமாரா பொறந்து தொலைச்சிருந்தோமுன்னா இந்த மாதிரி நம்முடைய தெய்வத்தாய்கள் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். :-(////
அய்யயோ! இப்படி பயமுறுத்துகிறீர்களே லக்கி!,
///ஆஹா !!!!!!!!!!!!!!!!!///
என்ன ரவி!, நீங்க எப்பவாவது, பல்பு வாங்கி இருக்கிறீர்களா?!!
///சரியான நகைச்சுவைப் பதிவு.
//
"எந்த ஃபீல்டு?"
(ம்ம்..என்ஃபீல்டு)"
//
செம நக்கல்!//
வாங்க ஜோ!
///;)///
Thanks PASAKI
///நல்லா இருக்கு பதிவு. பொண்ணுங்க இந்த அளவு கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்களா.... ///
போன நூற்றாண்டிலேயே ஆரம்பிச்சிட்டாங்க என்று நினைக்கிறேன்.
///அடுத்த முறை பல்பு வாங்காம இருக்க வாழ்த்துக்கள்.///
நன்றி விக்னேஷ்வரி!
///யோவ் அண்ணாத்த,
கெடைக்காத சான்ஸ்சு கிடைச்சு இருக்கு எத்துனா எல்துவியா அத்தவுட்டுகினு சொம்மா பொலம்பிகினுகீர...///
என்ன பண்றது அண்ணே!
(நம்மளையெல்லாம் எந்த ஜென்மத்திலும் நசத்திரமாக்க மாட்டாங்க.உங்களுக்கு கிடைச்சு இருக்கு.கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்துங்க)///
விரைவில் உங்கள் முறை வரவிருக்கிறது அண்ணே!
/////@எம்.எம்.அப்துல்லா said...
யோவ் அண்ணாத்த,
கெடைக்காத சான்ஸ்சு கிடைச்சு இருக்கு எத்துனா எல்துவியா அத்தவுட்டுகினு சொம்மா பொலம்பிகினுகீர...
(நம்மளையெல்லாம் எந்த ஜென்மத்திலும் நசத்திரமாக்க மாட்டாங்க.உங்களுக்கு கிடைச்சு இருக்கு.கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்துங்க)//
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது.///
வாங்க தராசு!!
///யோவ் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னய்யா சம்பந்தம்?///
எதுவும் இல்லை மேதாவி சார்! :-))
////வேணாம், ஒழுங்கா மார்கெட் இருக்கப்பவே நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கங்க. ரொம்ப போட்டோல்லாம் பார்த்துட்டு ரிஜெக்ட் பண்ண நல்லாத்தான் இருக்கும். அப்பால யாராச்சும் ஒருத்தர கண்ணாலம் கட்டித்தான் ஆவோணும். அப்பாலிக்க அடடா அந்தப் பொண்ண வேணாம்ணு சொன்னோமே, இந்தப் பொண்ண வேணாம்ணு சொன்னோமேன்னு ஃபீலிங்ஸ் ஆயிரும்.////
மனசுக்குள் லேசா கிலி கேளம்புதே!!
///அண்ணே உங்களுக்கு பின்னூட்டம் போட யோசிச்சு ஒரு பதிவே போட்டுட்டேன்.
//
படித்தேன் கல்கி! உபோகமான ஒன்று!
///இன்னொரு பதிவும் தயாராகிட்டு இருக்கு, நீங்க போன்ல பேசினபோது கவிதா என்னெல்லாம் நெனச்சிருப்பாங்க, அவங்க மனசாட்சி என்ன பேசி இருக்கும்ன்னு, நீங்க சரின்னு சொன்னா அதையும் போட்டுடலாம்... :-)///
ஆஹா! சீக்கிரம் வலையேற்றுங்கள் நண்பரே!
///:-))
சிரிப்ப அடக்க முடியலை! பொண்ணு பார்க்கறதுல இவ்ளோ பிரச்சினை இருக்குதா..///
டயல் பண்ணும் முன்பே தெரியாம` போச்சு சென்ஷி!
நான் அப்புறமா இன்னொரு பதிவு போடுறேன். இதைப்பத்தி :)///
வெயிட்டீஸ்!
////// செந்தழல் ரவி said...
ஆஹா !!!!!!!!!!!!!!!!!//
ரவி! நீயெல்லாம் ஆஹா போட்டு வருத்தப்படத்தான் முடியும் :)))////
:-)))
///:))))))))))))///
வாங்க சிவா!
வாங்க தமிழன் கறுப்பி,
//////இது இவ்ளோ சிக்கலான மாட்டரா!!!
:))//////
அப்படித்தான் தோனுது!
Post a Comment