Thursday, February 26, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 3

· 13 comments

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களது பேட்டியின் மூன்றாம் பகுதியுடன் தொடர் நிறைவு பெறுகிறது. வேண்டுகோளின் பேரில் பேட்டியின் ஒலிவடிவம் மின்மடலாக அனுப்பிவைக்கப்படும்.

வி டுதலைப் புலிகளின் தற்போதைய பின்னடைவு எத்தகையது? இதில் இந்திய, இலங்கை அரசுகள் நிம்மதி களிப்பை அடைய உண்மையில் ஏதேனும் இருக்கிறதா? புலிகள் எதற்காகவாவது காத்திருக்கிறார்களா?

பாகிஸ்தான், இந்திய உட்பட பல்வேறு நாட்டு படையினரை எதிர்த்து புலிகள் தனியாக போரிட்டு வருகிறார்கள். படைவீரர்களின் எண்ணிக்கை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதுகிறோம். இது செட் பேக் அல்ல. ஒரு போர்த்தந்திரம். இதை இந்திய அரசும், சிங்கள அரசும் தங்களது வெற்றியாகக் கருதுகின்றன. நிலப்பகுதிகள் சிங்களபடையினர் கைகளுக்கு மாறுவது உண்டு. பிறகு மீண்டும் புலிகள் கைப்பற்றுவார்கள். தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மீது விடுதலை சிறுத்தைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுப்பார்கள்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் அல்ல என்று நிரூபிக்க விடுதலை புலிகளும் முயற்சிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை அறிந்து கொள்ள காங்கிரசும் விரும்பவில்லை. இவற்றிற்கு என்ன காரணம்?

து ஒரு முக்கியமான கேள்வி. படுகொலை நடந்த சமயத்தில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அம்மறுப்பு அறிக்கையோடு அவ்விசயம் நின்றுவிட்டது. பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரன் அதை ஒரு துன்பியலான சம்பவம் என்பதோடு சுருக்கிவிட்டார். தங்கள் நிலையை விளக்க ஏன் அவர்கள் முன்வரவில்லை

ஈழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவை பகைத்துக் கொள்ளவே கூடாது என்று நினைப்பவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் ராஜீவ் காந்தி கொலையை செய்திருப்பார்களா என்பதுதான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி. இதை வெளிப்படையாக விளக்கி இருக்கவேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் கருத்துமாகும்.

உண்மையான குற்றவாளிகளை அறிந்துகொள்ள காங்கிரஸ் ஏன் விரும்பவில்லை என்ற கேள்வியும் எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு. நரசிம்மராவ் பிரதமராவதற்காக அவரது நண்பர் சந்திராசாமி அமெரிக்க உளவு நிறுவனத்துடன் சேர்ந்து சதி செய்து இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. சுப்பிரமணியன் சாமி எழுதிய புத்தகத்தில் படுகொலையில் சோனியா காந்தி அம்மையாருக்கே தொடர்பிருக்கும் என்று எழுதியிருக்கிறார். அது அச்சில் வந்திருக்கிறது.

காங்கிரஸ்காரனே ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்தான் என்பது வெளிப்பட்டுப் போனால் அது காங்கிரசுக்கே பேரிழப்பாகும். இதுதான் உண்மைநிலையை அறிய காங்கிரஸ் விரும்பாததன் அரசியல் காரணம் ஆகும்.

டுக்கப்பட்டோர் நலன், ஈழம் தொடர்பில் திமுக அனுதாபிகளை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்துவிட்டது. இனி திராவிட அரசியலில் ஒரு உறுதிப்பாட்டை கைகொள்வதன் மூலம் திமுக -விற்கு ஒரு முழுமையான மாற்று நீங்கள் என்பது அறுதியாகுமல்லவா? அதற்கான முயற்சிகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?

ழ ஆதரவு போராட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் காட்டும் முனைப்பு திமுக தொண்டர்களையும் ஈர்த்திருக்கிறது என்பது உண்மை. நீங்கள் சொல்வதுபோல் திமுக தொண்டர்களை விடுதலை சிறுத்தைகள் வென்றெடுத்திருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஆனால் அதற்காக திமுக -விற்கு மாற்று விடுதலை சிறுத்தைகள் தான் என்று சொல்லிக்கொள்ளவோ காட்டிக்கொள்ளவோ நாங்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் உண்மையான, நேர்மையான ஈடுபாடு போன்றவற்றால் உங்களைப்போன்ற தமிழ்சொந்தங்கள் ஒரு அரசியல் அங்கீராம் அளித்தாலே அதை ஒரு மகத்தான வெற்றியாக நாங்கள் கருதி மகிழ்ச்சியடைவோம். எதிர்காலத்தில் நீங்கள் சொல்லுகிற இடத்தை விடுதலை சிறுத்தைகள் அடையும், தமிழகத்தில் ஒரு முன்னிலை அரசியல் சக்தியாக எழுச்சி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.

னைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும்போதே ஒடுக்கப்பட்டவர்களின் நலனை காத்து நிற்க முடியுமா? பகுஜன் சமாஜ் கட்சி -யை எவ்வாறு எதிர் கொள்ளுவீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் தற்போது அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் மொழியை காப்பதில், தமிழ் இனத்தை காப்பதில், தமிழ் மண்ணைக் காப்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து செயல் திட்டங்களை வகுத்து போராடி வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் முன் முயற்சியில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, நாடுதழுவிய அளவில் எழுச்சியை உருவாக்கியது. இப்போது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. இதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு தளம் விரிவடைந்துள்ளது. தலித்துகளின் நன்மதிப்பை பெற்றுள்ள எங்கள் இயக்கம் இவற்றால் மேலும் மத்திப்பை அடையும். பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை பின்னுக்கு தள்ள முடியாது. அதற்கு வாய்ப்பு இல்லை. அதை எதிர்கொள்ளுவதில் சிக்கலும் இல்லை.

லையுலகில் இன்றைய தேதியில் மிக நல்ல சிந்தனைப்போக்கும், பல விவாதங்களும் நடைபெறுகின்றன. இவற்றை நீங்கள் அவதானிகின்றீர்களா? எனில், அவற்றை விடுதலை சிறுத்தைகள் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்?

ணைய தளங்களில் நடைபெறும் விவாதங்களை தொடர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெறவில்லையென்றாலும் அவ்வப்போது அதை அறிந்து கொண்டு வருகிறோம். இணையத்தளங்களில் இயங்கும் தோழர்களோடு கலந்து உரையாடுகிறோம். இனி வரும் காலங்களில் இணையதள ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளவும், ஈடுபாடு கொள்ளவும் விடுதலை சிறுத்தைகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதை தோழமையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். தொடர்ந்து உங்களைப் போன்றோர் எங்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டு நேர்முகத்தை நிறைவு செய்கிறேன். அடுத்தமுறை நேரில் சந்திக்கும்போது விரிவாக பேசுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர் தமிழ்வேந்தன் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்தார்; அவரது இறுதி அஞ்சலிக்காக கடலூர் சென்று கொண்டிருந்த வழியில் திருமா அவர்கள் நமக்காக பேட்டி அளித்துள்ளார். தற்போதைய சூழலில், தினமும் ஓரிரு மணி நேரங்களே உறங்க வாய்க்கும் நிலையில் அவர் தனது ஓய்வு நேரத்தை கணிசமாக நமக்கு அளித்ததற்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்

Read More......

Tuesday, February 24, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 2

· 6 comments

தொல். திருமாவின் பேட்டியின் இரண்டாம் பகுதி இப்பதிவில் வெளியாகின்றது. நேர்முகத்தின் ஒலிவடிவம் இறுதிப் பகுதியுடன் சேர்த்து வெளியாகும்.

திமுக கூட்டணியில் இருப்பதனால், விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் வீரியம் இருக்காது என்ற ஐயப்பாட்டுக்கு விடையளிக்கையில் "பிறர் விரும்புவதற்கு ஏற்றவாறெல்லாம் செயல்பட விடுதலை சிறுத்தைகள் ஒன்றும் தொங்கு சதைகள் அல்ல. தனித்து இயங்கவும், சிந்திக்கவும் விடுதலை சிறுத்தைகளுக்கு வலிமையும் உரிமையும் உண்டு" என்று கூறுகிறார் திருமா. திமுகவோ அல்லது வேறெந்த கட்சியோ விடுதலை சிறுத்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது.

சென்ற பதிவின் பேட்டியின் தொடர்ச்சி...


முத்துகுமாரின் மரணத்திற்குப் பிறகு ஈழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க முடியுமா? இல்லை என்றால் அவரவர் அணியில் இருந்து தேர்தலை சந்திப்பதால் ஈழப் பிரச்சினையில் என்ன திருப்பம் வந்துவிடப் போகிறது?

முத்துக்குமாரின் மரணத்திற்குப் பிறகு தமிழீழ ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கக் கூடிய அணியில் அதிமுக -வை இணைக்க முடியாது என்பது அறிந்த செய்தி. பாமக, மதிமுக, இந்திய பொதுவுடைமை கட்சி, பாஜக ஆகியவை தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஐயா நெடுமாறன் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்துள்ளது மகத்தான ஒன்று. இந்த அணி

பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
அப்படியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நியாயமானதுதான். ஆனால் எந்தளவுக்கு அது நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. தேர்தலில் வெல்வதுதான் முக்கிய இலக்கு. தனித்து நின்றால் வெற்றி பெறமுடியாது. பாமக, மதிமுக, வி.சி மற்றும் சிபிஐ ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும். முத்துகுமாரால் ஏற்பட்ட இந்த இணைப்பு எதிவரும் நாடாளுமன்றத்தேர்தலால் சிதைந்து போய்விடக் கூடாது என்று உங்களைப் போலவே நாங்களும் எண்ணுகிறோம்.

ண்ணாவிரத மேடையில் நீங்கள் பேசியபோது இனி காங்கிரசுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறினீர்கள். எனில், நீங்கள் தற்போது உள்ள அணியில் தொடர்ந்துகொண்டே எவ்வாறு தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள்?

ண்ணாவிரத மேடையில் இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது உண்மை.காங்கிரஸ் கட்சியை அம்பலப் படுத்துவோம், தனிமைப் படுத்துவோம் என்று சொன்னது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறவேண்டும் என்பதற்காகத்தான். அது ஏனோ நடைபெறவில்லை. மற்றபடி காங்கிரசுடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமும் இல்லை. அரசியல் ரீதியான முரண்பாடுகள்தான். இந்நிலையில் திமுகவும் காங்கிரசும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் உங்கள் நிலை என்ன என்பதுதான் உங்கள் கேள்வி. திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தனித்தே இதுவரையில் இயங்கிவருகிறோம். விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும், என்னை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் திமுக வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

மாநில அளவில் திமுக ஒரு கூட்டணி அமைத்துள்ளது. தேசிய அளவில் அக்கூட்டணியில் உள்ள பாமக போலல்லாமல் பல சிறிய கட்சிகள் மாநில அளவில் கூட்டணியில் உள்ளன. காங்கிரசுடன் அவற்றிற்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த பட்டியலில் விடுதலை சிறுத்தைகளும் அடங்கும் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன். எனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எங்களுக்கு தொடர்பில்லை. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்தான் நாங்கள் இணைந்திருக்கிறோம். எதிவரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இதே கூட்டணியில் நீடிக்க நேர்ந்தால் அது எங்களுக்கு எந்த நெருக்கடியும் தராது. ஒருவேளை காங்கிரசுக்கு அஞ்சி விடுதலைசிறுத்தைகளை திமுக கைவிட்டால் தனித்தே தேர்தலை சந்திப்போமே ஒழிய ஈழத்தமிழருக்கு எதிரான அதிமுகவோடு தேர்தல் உறவை விரும்பமாட்டோம்.

மொழிப்போர்களால் பலனடைந்த திமுக இந்திய அரசியலில் தமிழர் நலனை பெரும்பாலான சமயங்களில் காத்து வந்துள்ளது. இன்று ஈழம் தொடர்பாக அக்கட்சி வெளிப்படையாக கைவிரித்துவிட்ட நிலையில், தற்போதைய ஈழ ஆதரவை ஒன்று திரட்டி விடுதலை சிறுத்தைகளை முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக்க முடியுமா?

ழப் தொடர்பாக திமுக வெளிப்படையாக கைவிரித்துவிட்டது; இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் முழுமையான தமிழர் பிரதிநிதிகளாக முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளது எங்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது. விடுதலை சிறுத்தைகள் தமிழர்களின் தனித்துவமான பிரதிநிதிகளாக நாங்கள் விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் மட்டுமே போராடி ஈழத் தமிழருக்கு உறுதுணையாக இருக்கமுடியாது. தமிழீழ ஆதரவு என்பது ஒட்டுமொத்த தமிழரின் ஆதரவாக இருக்கவேண்டும். விடுதலை சிறுத்தைகளை விட மூத்த கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. அவர்களை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பங்களிக்கும். ஈழத்தமிழர்கள் ஒரு சுமூகமான அரசியல் தீர்வை காணும் வரை எல்லோருடனும் இணைந்து செயல்படுவது எமது கடமை என உணர்கிறோம்.

மீபத்தில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினீர்கள். தனி ஈழம் தவிர்த்த எந்த தீர்வும் ஏற்க முடியாதா? தமிழீழம் வேண்டுமானால் விடுதலைப் புலிகளை ஆதரித்தாக வேண்டும். போராட்டங்கள் மூலம் சர்வதேசத்தில் ஈட்டப்படவிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவை எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மாற்றிவிட முடியும்?

மிழீழத்தை தவிர எந்தத்தீர்வையும் ஈழச்சிக்கலில் காணமுடியாது. தனிஈழம் ஒன்றே நிரந்தரத் தீர்வு. ராணுவத்தைக் கொண்டு ஈழப்போராட்டத்தை நசுக்கி விடமுடியும் என்று சிங்கள இனவெறி அரசு நம்புகிறது. தனிஈழத்திற்கு சிங்கள அரசை எவ்வாறு உடன்பட வைக்க முடியும், பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை எப்படி பெறமுடியும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. அதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுப்படுத்தினால் தான் முடியும். ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ அல்ல. விடுதலை புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்; அதை தமிழகம், தமிழீழம் தாண்டி அனைத்துத் தமிழரும் அதை ஏற்கிறார்கள் என்ற நிலையை ஏற்படுத்தினால்தான் சிங்கள இனவெறி நடத்துகிற கொடூரமான அடக்குமுறையை தடுக்கமுடியும். பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வுகான்கிற அழுத்தத்தை கொடுக்கமுடியும்.

இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்
எனவே நமது போராட்டம் சர்வதேசத்திலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டமாக அமைந்திடவேண்டும். அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் மீது கூட்டாக விதித்துள்ள தடையை நீக்கவைக்க முடியும். வெளிப்படையாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதன் மூலம் தான் சிங்கள அரசை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும்.

ன்று, இந்திய அரசு போராளிகளை ஊக்குவித்ததும் தன் நலனுக்கே! இப்போது அவர்களை நசுக்குவதும் அதன் நலனுக்கே! எனில், இந்திய தேசியத்தில் தமிழக தமிழரின் நிலை என்ன?

ந்திய அரசு போராளிகளுக்கு ஆயுத பயுற்சி மட்டுமல்லாமல் ஆயுதங்களையும் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜெயவர்த்தனே அரசு இந்திய அரசுக்கு பணியவில்லை என்பதனால் இந்திய அரசு போராளிக்குழுக்களை ஆதரித்தது. இந்திய அரசின் ஆதிக்கத்தை இலங்கை வரை விரிவு படுத்தும் முயற்சியாகவே அது இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவிட்டது, பலம் பெற்றுவிட்டார்கள் என்ற நிலையில் இலங்கை அரசு இந்திய அரசின் உதவியை நாடியது. அவ்வாறு நாடியபோது புலிகளை நசுக்குவதில் தீவிரம் காட்டத்தொடங்கியது. புலிகளை ஆதரித்தால் இலங்கைக்கு இந்தியா பகைநாடாகும். இந்தியாவின் பகைநாடுகளின் ஆதரவு இலங்கைக்குக் கிடைக்கும். பகைநாடுகள் இலங்கையில் ராணுவத்தளம் அமைக்கும். அது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு கணக்குப் போட்டு சிங்கள அரசை வலிந்து வலிந்து வலிந்து ஆதரிக்கிறது.

கைநாடுகளை பணிய வைக்க போராளிகளை ஆதரித்த இந்திய அரசு இன்று நேரடியாகவே களத்தில் இறங்கி தமிழர்களை அழித்தொழிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்திய தேசியத்தில் தமிழகத்தமிழரின் நிலை என்ன என்பது உங்கள் கேள்வியாக உள்ளது. மிகவும் சரியான கேள்வி. தமிழகத் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், உணர்வுகள் அவமதிக்கப் படுகின்றன. கோரிக்கைகள் புந்தள்ளப் படுகின்றன. காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழருக்கு எதிராக செயல்படுகிறது. பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் ஆந்திர அரசை கண்டிக்க முன்வரவில்லை. இவ்வாறு இந்தியாவிற்குள்ளேயே உள்ள விவகாரங்களில் இந்திய அரசு தமிழருக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர் விவகாரத்தில் முற்றிலும் எதிராக இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேசியம் தமிழருக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது. நம் நலன் குறித்த கேள்விக்குறிக்கு இளைஞர்களின் எழுச்சியால் பதில் சொல்லமுடியும். இந்திய தேசியத்தை தமிழர்கள் எந்தளவுக்கு மதிக்கப்போகிறார்கள், அதை உள்வாங்கப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்லும்.


[தொடரும்]

டுத்த பகுதி விரைவில்...

Read More......

Sunday, February 22, 2009

தொல். திருமாவளவன் பேட்டி, பகுதி - 1

· 24 comments

மிழகத்தின் எதிர்காலம் என இளைஞர்களால் வருணிக்கப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் நம் வலைப்பூவிற்கு நேர்முகம் அளித்துள்ளார். அப்பேட்டியை வாசகர்களுக்கு ஒரு தொடராக அளிக்கவிருக்கிறேன். தொடர்ந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிகுமார் அவர்களும், பதிவரும் முன்னாள் போராளியுமான திரு. சாத்திரி அவர்களும், பதிவுலக பிரபலம் செந்தழல் ரவி அவர்களும் அளித்த / அளிக்கவிருக்கும் பேட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன.

டைசி மக்களுக்கான கட்சியே விடுதலை சிறுத்தைகள் இயக்கமாகும். வஞ்சிக்கப் பட்ட மக்களை அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க தோன்றிய இயக்கம் என அக்கட்சியின் அதிகாரப் பூர்வ வலைத்தளம் கூறுகிறது. 1982 -ல் தோன்றிய இவ்வியக்கம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருந்து இன்றைய தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையின் கீழ் வளர்ந்து வருகிறது (பார்க்க பெட்டி செய்தி). கொள்கைக்காரக் கட்சிகளெல்லாம் மானம் என்னும் தங்கள் வேட்டியை அவிழ்த்து தரையில் போட்டு ஓட்டுப் பிச்சை எடுத்து வருகின்ற நிலையில் தமிழகத்தின் நம்பிக்கை ஒளியாய் திகழும் விடுதலை சிறுத்தைகளின் தோள்களை பலப் படுத்துவது நம் வரலாற்றுக் கடைமை ஆகிறது.

பேட்டியிலிருந்து சில...



ழம் தொடர்பாக எண்பதுகளில் நிலவிய மக்கள் ஆதரவானது, அரசியல் கட்சிகளுக்கு ஈழ அரசியலை தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கியது. ஆனால் தற்போதைய நிலவரம் பெரும்பாலான கட்சிகளை பீதி கொள்ளவே செய்வது ஏன்?

ழச்சிக்கல் தொடர்பாக தமிழகக் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அதனால் எண்பதுகளில் நிலவிய வீரியமான எழுச்சி இப்போது இல்லை என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டுடன் இருந்தன. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் ஈழ ஆதரவில் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய அரசும் புலிகள் மீது தடை விதித்தது. புலிகளை தீவிரமாக ஆதரித்த அதிமுக இப்போது நேரெதிரான நிலைப்பாட்டுடன் உள்ளது. முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே, புலிகள் தலைவரை இந்தியாவில் விசாரிக்க வேண்டுமென்று பேசினார். போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்; அதற்கென்ன செய்ய முடியும் என்று இப்போது பேசிவருகிறார்.

திமுக -வை பொறுத்த வரையில், 'ஈழத்தை ஆதரிக்கிறோம், ஈழ மக்களை காக்கவேண்டும் என்பதில் உடன்பாடு கொள்கிறோம், ஆனால் புலிகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்' என்ற நிலைப்பாட்டுடன் உள்ளது. இருபெரும் கட்சிகளும் இத்தகு நிலைபாட்டில் இருப்பதால், ஈழ ஆதரவு உணர்வுள்ள அதிமுக தொண்டர்கள் வெளிப்படையாக செயல்பட முடியாமலும், திமுக தொண்டர்கள் கட்சி அறிவிக்கின்ற போராட்டங்களில் பங்குகொள்வது என்ற அளவிலும் தேங்கிவுள்ளனர். ஆனால் மதிமுக, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகியவை வெளிப்படையாக செயல்படுகின்றன. இது தவிர பாஜக, இடதுசாரிகள் போன்றவை போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளவையாக இருந்தாலும் ஈழத்தையோ, புலிகளையோ ஆதரிக்கூடிய நிலைப்பாட்டை ஏற்கவில்லை.

இவ்வாறு கட்சிகளிக்கிடையே பல்வேறு நிலைப்பாடுகள் நிலவுவதால் எண்பதுகளில் இருந்த வேகம் இப்போது வெளிப்படவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ஈழ ஆதரவு உணர்வு உள்ளது என்பது உண்மை. அதனால்தான் ஈழத்தமிழரை காக்க வலியுறுத்தி முத்துக் குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன் என்று வரிசையாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்குகிற இவ்வேளையில் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் மக்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்ற எண்ணமும் கட்சிகளிடையே உள்ளது, அதிமுக -வை தவிர. இதனால் தான் காங்கிரஸ் கூட புலிகளை எதிர்த்தாலும், ஈழ விடுதலையை மறுத்தாலும் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று இப்போது கூறிவருகிறது.

ஆனால், இதையெல்லாம் மீறி தமிழ்மக்களை பொறுத்தவரை ஈழச்சிக்கலில் ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டுமென்பதிலும், ஈழவிடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்பதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக உள்ளனர் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.


டக்கு முறைகளுக்கு அஞ்சாத தலைவர்கள் கூட மக்களின் தற்போதைய ஈழ ஆதரவை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கத் தயங்குகின்றனர். வெளிப்படையான மற்றும் உண்மையான ஈழ ஆதரவு அவர்களுக்கு அரசியல் லாபத்திற்கு பதிலாக அரசியல் தற்கொலைக்கு இட்டுச்சென்று விடுமா என்ன?

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு புலிகளை முழுமையாக நசுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. புலிகளை ஆதரித்தால் இந்திய அரசுக்கெதிராக அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. இதனால் அரசியல் ஆதாயம் பாதிக்கப் படும் என்று கூட சில சமயங்களில் எண்ணுகின்றன. ஆனால் தமிழீழ விடுதலை புலிகளை ஆதரிக்கும் கடசிகளுக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்குவார்கள் என்பதுதான் உண்மை. அரசியல் கட்சிகளின் தலைமைகள் இதை உணராமல் இருக்கலாம். அரசும் கடுமையான சட்டப்பிரிவுகள் மூலம் அடக்குமுறை செய்துள்ளது. தமிழ்நாட்டு ஊடகங்களும் புலிகள் ஆதரவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவனமாக செயல்படுகின்றன.

ஆகவே கட்சிகளுக்கு அச்சம் உள்ளது உண்மைதான். அது அரசியல் தற்கொலையாக ஆகிவிடுமோ என்றும் சில கருதுகின்றன.

ந்தியாவை பணிய/ஒதுக்கி வைத்து விட்டு அமெரிக்கா உள்ளிட்ட எந்த சர்வதேச சக்தியும் ஈழப் பிரச்சினையில் ஆக்கப் பூர்வமாக தலையிட முடியாது என்ற நிலையில் தற்போதைய போராட்டங்கள் எதை இலக்காக வைத்து முன்னெடுக்கப் படவேண்டும்?

ற்போதைய போராட்டம் இந்திய அரசை பணிய வைத்து சிங்கள அரசை நெருக்கடி செய்து போர் நிறுத்தத்தை செய்ய வைப்பதையே இலாக்காக கொள்ளவேண்டும். இலங்கைப்பிரச்சினையில் தனியாக தமிழகம் தலையிடமுடியாது. இந்திய அரசுதான் தலையிட்டாகவேண்டும். இந்திய அரசோ சிங்களவருக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவிற்கு அண்டையில் சீனாவும் பாகிஸ்தானும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. தெற்கே இலங்கையும் பகைநாடாகிப் போனால் பாகிஸ்தானோ, சீனாவோ அல்லது வேறெந்த பகைனாடோ அங்கு ராணுவத்தளம் அமைத்துவிடக்கூடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உள்ளது. இந்த அச்சம் நியாமானதுதான் என்றாலும் சிங்களனுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழர்களை அழித்தொழிப்பது நியாமானதல்ல.

மேலும், ஒருபுறம் அச்சம். மறுபுறம் அதன் ஆதிக்க வெறி. இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளை தம் கட்டுப் பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற ஆதிக்க வெறி. தான் நினைப்பதையே தீர்வாக வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான், ஈழச்சிக்கலில் தலையிட்டு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தந்தத்தை உருவாக்கியது. அதுதான் அத்துணை சிக்கல்களுக்கும்

அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!

1982 -ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கார் மனைவி சவீதா அம்மையார் தலைமையில் பாரதீய தலித் பாந்தர் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

மாநில பொறுப்பாளர் 1989 -ல் அ. மலைச்சாமி மரித்த பிறகு, தொல். திருமாவளவனுக்கு அப்பொறுப்பு 1991 -ல் வழங்கப்பட்டது.


பாரதீய தலித் பாந்தர் என்ற பெயரை மாற்றி ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் 1990 ஏப்ரல் 14 முதல் அழைக்கப்பட்டது.

1991 -ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் என்று பெயர் மாற்றம் பெற்றது.

1999 முதல் தேர்தல் அரசியலில் ஈடுபடுகிறது

தற்போதைய சட்ட மன்றில் தன் கட்சி சார்பில் இரு உறுப்பினர்களை கொண்டுள்ளது

மிக அடிப்படையான காரணமாக அமைந்துவிட்டது. இப்பிரச்சினை இவ்வளவுகாலமாக தீர்க்கமுடியாமல் புரையோடிப்போயிருக்கிறது என்றால் இந்திய அரசின் அரசின் அச்சம் மற்றும் ஆதிக்கவெறியின் விளைவால் அது செய்த தலையீடுகள்தான்.இப்போது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய அரசிடம்தான் கோரிக்கை வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சிங்கள அரசுடன் சேர்ந்து அதன் நட்பு நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை அல் கொய்தா போன்ற இயக்கங்களுடன் இணைத்துபார்கின்ற நிலைக்கு சர்வதேச நாடுகளை மாற்றியுள்ளன. இதனால் சர்வதேச சமூகம் சிங்கள அடக்குமுறைக்கு உதவுகின்றது அல்லது வேடிக்கைப்பார்கின்றது. புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்க வேண்டும் என்பதே நம் போராட்டத்தின் இலக்கு.

ழப் பிரச்சினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையின் சொந்தப் பிரச்சினையாகிப் போய்விட்ட நிலையில் அந்த செவிட்டு அரசு மக்கள் கருத்தை காதில் வாங்குமா?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை புலிகளை அழிக்க வேண்டும், பழிக்கு பழி வாங்கவேண்டும் என்று கனவு கண்டுவருவதுடன் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள்ளது என்பது அதன் தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஈழத்தில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றின. சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சிக் குழு பிரதமரை சந்தித்து முறையிட்டது. தமிழ்நாட்டிலே ஒவ்வொரு கட்சியும் தத்தமது வலிமைக்கேற்ப போராட்டங்களை நடத்தின. இவ்வளவுக்குப் பிறகும் இந்திய அரசு சிங்கள அரசை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தவில்லை என்பது அந்நாட்டின் இறையாண்மையில் இடையீடு செய்யக் கூடாது என்பதற்காக அல்ல, இப்பிரச்சினையை காங்கிரஸ் கட்சியின் சொந்தப் பிரச்சினையாக கொண்டு பழிவாங்கவே என்று நம்பக்கூடியதாக அதன் செயல்பாடு உள்ளது. இந்நிலையில் மக்களின் கருத்தை இவ்வரசு உள்வாங்குமா என்றால் வாங்காது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இதற்காக நாம் போராடாமல் இருக்கமுடியாது; குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது. இடைவிடாமல் போராடுவதன் மூலம் இந்திய அரசை செயல்பட வைக்கமுடியும் என்று நம்புகிறோம்.

விடுதலை சிறுத்தைகள் ஏன் ஈழ ஆதரவு அரசியலை தனியாக முன்னெடுக்ககூடாது? ஜெயலலிதாவுடன் இணைந்து வைகோ எவ்வாறு ஈழ ஆதரவு போக்கை தொடரமுடியாதோ அதுபோல் திமுக -வுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகளும் இவ்விசயத்தில் உறுதியாக இயங்க முடியாதல்லவா?

ழ ஆதரவுப் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் ஏன் தனியாக முன்னெடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புவது ஒருவகையிலே சரிதான். தமிழகக் கட்சிகளையெல்லாம் ஒருகாலத்தில் ஒன்று சேர்ப்பது என்பது பெரும்பாடாக உள்ளது என்பதை அண்மையில் உணர்ந்தோம். விடுதலை சிறுத்தைகள் தனித்தே செயல்பட்டு ஈழ ஆதரவு போராட்ட களங்களில் போராடி வந்திருக்கிறது. எத்தனையோ உண்ணாவிரத போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் என விடுதலை சிறுத்தைகள் செயலாற்றி வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு முழுதும் ரயில்மறியல் போராட்டம் நடத்தி பெரும் எழுச்சியை உண்டுபண்ணியது. பிறகு மகளிர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும், தொழிலாளர் அணியின் சார்பில் தொடர்முழக்கப் போராட்டமும், மாணவர் அணி சார்பில் பேரணிகளும் சென்னை மாநகரில் நடத்தப் பட்டன. பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அணிதிரட்டு வகையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்தினோம். 'இந்திய அரசே போரை நிறுத்து; ஈழத்தமிழரை காப்பாற்று' என்ற வாசகம் தாங்கிய அட்டையை சட்டையிலே குத்திக் கொண்டு ஒருமாத காலம் அதை பிரச்சாரமாக முன்னெடுத்துச் சென்றோம். பிற கட்சிகளும் அவ்வாறு போராடி வந்தன.

பிறகு, ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டோம். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. அதிமுக, சிபிஎம் போன்றவை இதில் பங்கெடுக்காவிட்டாலும், அதில் சிபிஎம் கட்சி போரை நிறுத்தம் என்பதிலே உடன்பாட்டுடன் உள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் உண்ணாவிரத மேடையிலே என்னை சந்தித்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். ஆனால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைத்து செயல்பட்டாலொழிய பலன்கள் இருக்காது. எனினும் இதனால் விடுதலை சிறுத்தைகள் தனித்தே போராடித்தான் வந்துள்ளது. திமுக கூட்டணியில் இருப்பதனால் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் சுணக்கம் ஏபடும் என்று யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

[தொடரும்]

டுத்த பகுதி இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாகும்

Read More......

Sunday, February 8, 2009

தொல். திருமாவளவன் பேட்டி

· 40 comments

பதிவுலக நண்பர்களே!

தமிழகத்தில் மீண்டும் தன்னெழுச்சியாக பீறிடும் ஈழ ஆதரவு தகுந்த தலைமை இல்லாதுபோனால் அடங்கிப்போய்விடக்கூடும் என்ற அச்சம் பரவலாக உணரப்படுகிறது. தொடர்ச்சியாக ஈழ ஆதரவுடனும் உண்மையான அக்கறையுடனும் தமிழக அரசியல் அரங்கில் நிலையான திசைவேகத்தில் வளர்ந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த எழுச்சியை முன்னெடுத்துச் செல்லாதா என்ற ஏக்கம் இளைஞர்களிடம் தென்படுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் பேட்டி சில தெளிவுகளை தரக்கூடும். 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவிற்காக ஈழம் தொடர்பில் அவரையும், விடுதலை சிறுத்தைகளின் இயக்கம், கொள்கை தொடர்பில் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு. இரவிக்குமார் அவர்களையும் நேர்முகம் கண்டு விரைவில் வெளியிட இருக்கிறேன்.

வழக்கம்போல் உங்கள் ஆதரவையும் பின்னூட்ட விவாதத்தையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Read More......

Monday, February 2, 2009

[தி நியூ யார்க் டைம்ஸ்]: "சி.என்.என், பி.பி.சி, அல் ஜசிராவை விரட்டி அடிப்போம்" - ராஜ பக்சே

· 4 comments

இன்றைய "தி நியூ யார்க் டைம்ஸ்" நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் கீழே!

காயமுற்ற நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு இலங்கை மருத்துவமனையில் ஞாயிறு இரவு மூன்று எறிகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக சர்வதேச அமைப்புகளும் மருத்துவ ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். முதலிரண்டு தாக்குதல்களில் குறைந்தது ஏழுபேர் இறந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் நிகழ்ந்த தாக்குதல்களில் இறந்தவர்களை எண்ணும் பணி திங்கள் வரையிலும் தொடர்வதாக கூறப்படுகிறது.

உலகிலேயே மிக நீண்ட காலம் நடைபெறும் மக்கள் போராட்டங்களில் ஒன்றான இதில் பிரிவினைவாத எல்.டி. டி. இ - யினரை ஒரு சிறிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் முடக்கிய பிறகு இது போன்ற தாக்குதல்கள் தொடர்கின்றன. எந்தப்பகுதியில் இருந்து எறிகணைகள் வருகின்றன என்று கணிப்பது கடினமாக உள்ளது.

புது குடுயிருப்பு பகுதியில் உள்ள அந்த மருத்துவமனையில் நடைபெற்ற முதல் தாக்குதலில் இருவர் இறந்ததாகவும் ஐவர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் பன்னாட்டு அமைப்பு ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இரண்டாவது தாக்குதலில் ஐவர் இறந்தாக மருத்துவ ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி ஒருங்கிணைந்த ஊடகம் (Associated Press) தெரிவித்துள்ளது. இரவு 11.45 -க்கு குழந்தைகள் பிரிவு தாக்கப் பட்டதாக கொழும்பில் இருக்கும் ஐ.நா. செய்தி தொடர்பாளர் கார்டன் வீயஸ் திங்களன்று தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். "பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தாக்கப்பட்டது. கடவுளே! இதை விவரிக்க வார்த்தைகளே வரவில்லையே! இன்னும் இறந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணிக்கொண்டுள்ளோம்" -என ஐ.நா. பணியாளர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, காயமுற்றவர்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்பி போராளிகளுக்கு அனுதாபத்தை காட்டும் வெளிநாட்டு ராஜதந்திரிகள், உதவி அமைப்புகள் மற்றும் செய்தியாளர்களை வெளியேற்றப் போவதாக அரசு அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்.

"தி ஐலேண்டு" இதழுக்கு அளித்த நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே சி.என்.என், பி.பி.சி, அல்ஜசிரா ஆகிய மூன்று ஊடகங்களை பெயர் குறிப்பிட்டு சாடியுள்ளார். "அம்மூன்று ஊடகங்களும் விரட்டி அடிக்கப்படவிருக்கிறார்கள்" என்று அவர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசுக்கும் போராளிகளுக்கும் சண்டை வலுத்துள்ள நிலையில் இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளார். வேகமாக சுருங்கி வரும் விடுதலைப் புலிகளின் வசமுள்ள வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கதி குறித்து அபாயம் அதிகரித்துள்ளது.

இராணுவம் அழைத்துச்செல்லும் பகுதிகள் தவிர வேறெங்கும் பத்திரிகைகள் அனுமதிக்கப் படாததால் போர்முனையில் என்ன நடக்கின்றது என்பது வெளியுலகில் அறியப்படாமலேயே உள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்த மருத்துவமனை அதன் கொள்ளளவுக்கு மீறி காயமடைந்த ஐந்நூறு நோயாளிகளுக்கும் மேல் மருத்துவம் செய்து வந்ததாக அம்மருத்துவமனையை நடத்தும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது. கட்டாந்தரைகளிலும், கூரைப் பாய்களிலும் நோயாளிகள் கிடத்தப்பட்டும் பலர் வரிசைகளில் காத்திருந்தனர். அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிவேண்டி நீண்ட வரிசையில் இன்னமும் காத்திருப்பதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

Read More......