நட்சத்திர வாய்ப்பை முழுதாக பயன்படுத்தாத பதிவர்களில் நானும் ஒருவன் என்பது வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் தமிழ்மணத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெகுநாட்கள் ஆவலாக எதிபார்த்த ஒன்று; ஏற்கனவே நிலுவையில் இருக்கும் பதிவுகளை வலை ஏற்றவே வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது கவலையாக உள்ளது. தா. பாண்டியனின் பேட்டியை வலை ஏற்ற ஆயத்தமாகும் முன் அது காலாவதி ஆகிப்போனது கொடுமை. MLA ரவிக்குமாரின் பேட்டி தட்டச்சு செய்யப்படாமல் கிடக்கிறது. மேலும், என் சில கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்த பதில்கள் மொழி பெயர்கப்படாமல் உள்ளன. அதுமட்டுமல்லாமல், செந்தழல் ரவியின் பேட்டி முழுமையாக கைக்கு வரவில்லை. மிகுந்த பிரயத்தனம் செய்து அனுமதி பெற்ற தமிழச்சியின் பேட்டிக்கு கேள்விகள் தயாரிக்கமலே இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் ரஃப் காப்பி என்னும் அளவிலேயே கிடக்கின்றன. இதற்கிடையே 'கவிச்சை' என்னும் வலைப்பூவை உருவாக்கி இந்தியாவிலுள்ள நண்பரிடம் அதை முற்றாக ஒப்படைத்து என் பதிவுகளை தட்டச்சு செய்து வலையேற்ற கோரியிருந்தேன். சில பதிவுகளுக்கு பிறகு அதிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது.
பத்து வருடங்களுக்குள்ளாகவே கணிப்பொறி சார்ந்த பணி எனக்கு மிகுந்த சேதாரத்தை செய்துவிட்டதாகவே உணர்கிறேன். தொடர்ச்சியாக கணிப்பொறி முன் அமர்ந்திருந்தால் கழுத்து தசைகள் அதீதமாக சோர்வுற்று தலையின் மொத்த எடையும் கழுத்துப்புற தண்டு வடத்தின் மீது வீழ்ந்து நரம்புகளை அழுத்துகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நரம்புகளில் ஒன்றான அல்னார் நரம்பு சிறிது நேரத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மரக்கச்செய்து விடுகின்றன. வெறும் மூன்று விரல்களைக்கொண்டு தட்டச்சு செய்வது இயலாத காரியம். தொடர்ந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு பெரும் அவதியைத்தருமே ஒழிய முக்கிய பணிகள் முடங்கிப் போகும்.
ஊரில் சிறிதுகாலம் இயல் முறை மருத்துவராக நான் பணி புரிந்தபோது இது போன்ற பிணிகளை தீர்த்திருக்கிறேன். எனினும் இதை காசால்ஜியாவாக முற்றும் வரை விட்டுவைத்திருப்பது கொடுமைதான். என் நலனில் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இதற்காக என்னை கடிந்து கொள்வது உண்டு. பதிவுலகிலும் அக்கறை கொண்ட தோழர்களின் பட்டியல் இருக்கிறது. ஆச்சர்யமாக,இப்போது அந்த பட்டியலில் புதிதாக ஒரு நண்பர் இணைந்திருக்கிறார். அவருக்கு என் பதிவுகள் சுவாரசியமில்லாமல் இருப்பது மிகுந்த கவலையைத் தந்திருக்கிறது. காற்று வாங்கும் நிலையில் என் வலைப்பூவை நான் வைத்திருப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்!. கடிந்து கொள்கிறார். பதிவு எழுத மேட்டர் இல்லை என்று நான் சொன்ன சால்ஜாப்பை கேட்டு அவருக்கு கோபம் கூட வருகிறது. ஆனால் என்ன முயன்றாலும் எனக்கு அவரைப் போல சுவாரசியமாக எழுதவே வராது என்று அவர் புரிந்து கொள்ளவே இல்லை.
தற்போதைய தமிழ்மண சூப்பர் ஸ்டார் பரிசல்காரனும் நானும் ஒரே சமயத்தில் பதிவெழுத வந்தோம். ஒன்னரை வருடத்தில் அவர் சென்றுள்ள தூரத்தில் பகுதி அளவு கூட நான் முயற்சிக்க வில்லை. ஏனெனில் சுட்டுப்போட்டாலும் எனக்கு வரவே வராத வகைமாதிரி அவருடையது. சுவாரசியமாக எழுதவேண்டுமானால் பஜார் புத்தகங்கள் முதல் பன்னாட்டு இலக்கியங்கள் வரை நிறைய படிக்கவேண்டும். நான் படித்ததெல்லாம் பத்திரிக்கைகளும் படிப்பு சம்பந்தமான ஆய்வு புத்தகங்களும்தான். அவற்றில் இருக்கும் மொன்னையான எழுத்து நடை தான் எனக்கு கைகூடி உள்ளது. பதிவுகள் தவிர்த்து வேறெங்கும் எழுதியதில்லை. பல்கலைக்கழக உள்சுற்று சஞ்சிகைகளில் வாரம் ஒருமுறை எதையாவது எழுதியாகவேண்டும். எவரையும் கவர்ந்தாக வேண்டியதில்லை. நாலைந்து பெருசுகளை திருப்தி படுத்தினால் போதும். இந்நிலையில் சுவாரசியமான பதிவுகளுக்கு நான் எங்கே போவது? நானும் உடன் பிறப்பு பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரது சுண்டி இழுக்கும் எழுத்து நடை எனக்கு வாய்க்கவே இல்லையே!
மேலும், தமிழ்மணத்தில் இணையும் முன்பே, ஏன் பதிவெழுதும் முன்பே பல பதிவர்களை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அசுரன், திராவிட தமிழர்கள், கோவிகண்ணன், லக்கிலுக், குழலி, வரவனையான், ரவி, பொட்'டீ'கடை சத்யா, டிபிசிடி, தமிழ் சசி, செல்லா, தமிழச்சி, கிழுமத்தூரார் என்று பலரையும் புக் மார்க் செய்து வைத்ததுண்டு. ஆனால் எவர் நடையையும் நான் சுவீகரிக்கவில்லை. கிழுமத்தூரார் போல் எழுதுவதாக குசும்பனும் கோவியும் கூறியதுண்டு. பொட்'டீ'கடை சத்யாவை ஒத்தது என்று ரவி ஒரு முறை சொன்னார். ஆனால் உண்மையில் என் பதிவுகள் பரீட்சை விடைத்தாளில் இருக்கும் வாக்கியங்களை போன்றவை. ஆனால், ஊடே மிகை உணர்ச்சிகள் நிறைந்த வாரிகளை மெனக்கெட்டு திணிப்பது உண்டு. பதிவுகளை சுவாரசியமாக்க எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான். என் விமர்சனப் பதிவுகள் அவ்வகையானவை. அடாவடி நிறைந்தவை. அளப்பரையானவை. மேலும் அவை விரும்பியே செய்யப்பட்டவை. எனினும் சத்தியாவின் பதிவுகளை ஒப்பிட்டால் எனது பதிவுகள் வெறுமையானவை என்பதை எளிதில் உணரலாம்.
ஆனால், சிலருக்கு அவரது பதிவுகள் ஏற்படுத்தாத எரிச்சலை என் பதிவுகள் ஏற்படுத்துகின்றன. திமுக -வை விமர்சித்தும் அதன் தலைவரை செத்துதொலையச் சொல்லியும் அவர் எழுதியபோது வராத கோபம் இந்த அல்லக்கைக்கு என் மீது வருகிறது. ஏன் அவரைப்போய் நொட்ட வேண்டியதுதானே?! அது முடியாது! ஏனென்றால் அவர் விமர்சித்தது திமுக -வை மட்டும். நான் அல்லக்கைகளின் நிலைப்பாட்டையும் சேர்த்து கேள்வி கேட்பது குடைச்சலைத் தருகிறது போலும். குடைச்சல் தாழாமல் அழும்போது மட்டும் திமுக -வின் பதிவுலக அறங்காவலர் போல பிஸ்த்து கிளம்புகிறது. திமுக எனக்கு பதிவுலக வாழ்வு தருவதாக அதை நம்பியே வாழும் அடிவருடிகள் கூறுவது விந்தைதான். திமுக கருணாநிதியின் தனி சொத்தாகியது போல் பதிவுலகில் அது இவருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டதோ ஒருவேளை!
வன்மமும், வக்கிரமும், வசவும் நிறைந்த அறிக்கைகளுக்காக அதை விரும்பாதவர்களால் கருணாநிதி தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். இதிலெல்லாம் அனுபவம் நிறைய உண்டு அவருக்கு. நம் டமாஷ் பாண்டிகள் அடுத்தமுறை அறிவாலயத்திற்கு காவடி தூக்கும்போது தனி மனித தாக்குதல் குறித்த வரையறையை அவரிடமே பயின்றுவிட்டு வரலாம். இல்லாவிட்டால் எப்போதும்போல் பாப்பான் மாட்டினால் கும்மிக் கொண்டு பொழுதை ஓட்டலாம். இவற்றையெல்லாம் விட இன்னொரு வழியுமுண்டு. கொஞ்சம் கஷ்டமானது. உணவில் சிறிது உப்பை சேர்த்து அருந்திப் பார்க்கலாம். ஒரு முயற்சிதான்! முடியாவிட்டால் பரவாயில்லை, இருக்கவே இருக்கு எலும்புத் துண்டு. அதைக் கவ்விக்கொண்டு, வருவோர் போவோர் மீது விழுந்து பிடுங்கலாம்.
Read More......

ஒப்பீட்டளவில் அறுபது ஆண்டுகாலம் என்பது ஜனநாயகப் பரிணாமத்திற்கு மிகக்குறைவு. உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம் இன்னும் குழந்தைதான் என்றாலும் அது ஒரு சவலைக் குழந்தை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இன்னும் நூறாண்டுகாலம் வளர்ந்தபின்னும் அது சவலையாகத் தான் இருக்கும். அடிப்படை நேர்மை இல்லாத கட்சிகள் நிறைந்த மக்களாட்சியில் ஒன்று மற்றதற்கு முன் உதாரணமாக அமைந்து, சுயநலத்தைப் பொறுத்த அளவில் எங்கும் ஒரே கூட்டுக்கும்மியாக உள்ளது. அதிலுள்ள ஓட்டைகள் அனைத்தும் அகலமானவை. ஓட்டரசியலுக்கு புதிதாக வரும் கட்சிகள் யாவும் உடனடியாக ஒருமுறை அதில் விழுந்து எழுந்தால் பிறகு கூச்சமின்றி, விமர்சனத்திற்கு கவலைப்படாமல் அப்படியே தொடர்கின்றன. பெரும்கட்சிகளிடம் அவை ஏகலைவன் போல் பாடம் கற்றுக்கொள்கின்றன. பித்தலாட்ட அரசியலை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்றவை திமுக -வின் அடியொற்றி செய்தாலும் குடும்ப அரசியலுக்கு காங்கிரஸ்தான் திமுகவின் முன்னோடி. காமராஜர் தொடங்கிவைத்த வாரிசு அரசியல் திமுக வை குட்டிச்சுவராக்கி உள்ளது.
மாநிலத்தில் திமுகவின் அடுத்த தலைமை ஸ்டாலின் கையில் என்பது முடிவாகிவிட்ட நிலையில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அவர் உடனடியாக விளக்கியாக வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் அவரைப்பற்றி உடன்பிறப்புகளுக்கே முழுதாகத் தெரியுமா என்பது கேள்விக்குறியே! திராவிடம் குறித்து அவர் மேடையில் எங்காவது பேசினாரா என்பதுபற்றியும் தகவல் இல்லை. முதல்வரானால் மத்திய அரசிடம் இவர் எதை வலியுறுத்துவார்? அதிக நிதி வேண்டும் அல்லது குறிப்பிட்ட திட்டங்கள் தமிழகத்திற்கு வேண்டும் என வலியுறுத்தக்கூடும். நிதிக்கொள்கையிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ இவரது தலையீடு அல்லது வலியுறுத்தல் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. 
எனது மற்றொரு வலைப்பூவான
2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை "இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை "ஒரு சுவாரசியமான சரடு" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.

சொல்லக்கூடாதல்லவா? அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.
சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார்? சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார்? விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார்? அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி!!) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்..jpg)