Sunday, May 25, 2008

புழக்கடை மனிதர்கள்

· 6 comments

காலச்சுவடு இதழில் ரவிக்குமார் எழுதிய "புழக்கடை மனிதர்கள்" என்ற கட்டுரையை படித்ததும் என் மனதில் தோன்றியதை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் சொந்தகதை, எனவே போரடித்தால் மன்னிக்க.

எனது ஆறு வயது முதல் (நினைவு தெரியத்தொடங்கும் வயது) பதினாறு வயது வரை வாரநாட்களில் காலை 7.30 -லிருந்து இரவு 8 மணி வரை என் தாய் என்னிடம் பேசுவது "டேய் எழுந்திரு", "புக்ஸ் எடுத்துவை", "பஸ் வெளிய கை நீட்ன கொன்னுடுவன்", "ஏன் மதிய சாப்பாடு மிச்சம் இருக்கு?", "இன்னைக்கும் என்ன பிரச்சினை!" என்பன போன்ற ஒரு சில வழமைகள் தான். வேறு எதையும் பேச மாட்டாள், நாங்கள் பேசினாலும் பதில் வராது. எங்கள் கடமைகளை நாங்களே வழக்கம்போல் செய்துவிடுவோம் அல்லது செய்துகொள்வோம். அதிலேதேனும் சந்தேகங்களிருந்தால் எங்களுக்குள் தீர்த்துக்கொள்வோம், இல்லை என்றால் இருக்கவே இருக்கு "டிரையல் அண்ட் எரர்". புருவத்தை உயர்த்தி, இடது கையை மடித்து இடுப்பில் வைத்து, பற்களை நர நர வென கடித்தாள் என்றால் தவறிய கடமைகள் சட்டென நினைவுக்கு வந்துவிடும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், குடும்பத்தலைவியின் கடமைகள் எனக்கூறிக்கொண்டு முழுநேர வேலைக்காரியாக இல்லாமல் அவரவரே அவர்கள் வேலைகளை செய்யப் பணித்திருந்தாள் என்பதைத்தான். இப்போது என் அறை நண்பரை பார்க்கும் போது அவரது தாயின் உழைப்பை எவ்வாறெல்லாம் சுரண்டி சுகவாசியாக வாழ்ந்திருப்பார் என தெளிவாக புரிகிறது. அசுத்தமான அவரது அறை, குவியல் குவியலாக அழுக்கு உடைகள் என பல விஷயங்களில் அதை நிரூபிப்பார். கொடுமை என்ன வென்றால் இன்னமும் தம் வேலையை தாமே செய்ய கற்றுக்கொள்ளாமல் வரப்போகும் மனைவியிடம் டிரான்ஸ்பர் செய்ய காத்திருக்கிறார்.

அது சரி, இக்காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு இம்சைபடுகிறார்களா? பெரும்பாலும் இல்லை என்பது சந்தோஷம் தான். ஆனால், அவ்வேலைகள் எல்லாம் குடும்பத்தில் உள்ளோர் பகிர்ந்துகொள்ளுகிறார்களா என்றால் இல்லை, அவை வேலைக்காரர்களிடம் மடைமாற்றப்படுகிறது. பெண்கள் உழைப்பை சுரண்டும் ஆண்களும், அந்த சுரணை அற்ற பெண்களும் ஓவர் நைட் -ல் திருந்த போவதில்லை என்பதால், வேலைக்காரர்கள் வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது "எசன்சியல் கம்மாடிட்டி" -யாக இல்லாமல் "லக்சுரி ஐட்டம்" -ஆகா இருக்க வேண்டும். அதாவது வேலைக்காரர்களின் குறைந்த பட்ச சம்பளம் அரசு அலுவலர்கள் சம்பளம் போல் இருக்க வேண்டும். அவர்கள் யூனியன் மூலமே வேலைக்காரர்களை பெறவேண்டும். ஒருவேளை உணவும், ஹெல்த் இன்சூரன்சும் அளிக்கப்படவேண்டும். சட்டப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக "டிரீட்மன்ட்" பழுதில்லாமல் இருக்கவேண்டும். மொத்தத்தில் "ஆள உடுங்கடா சாமி, என் வேலைய நானே செஞ்சிக்கறேன்" -என்ற வகையில் இருக்கவேண்டும்.

வேலைக்காரர்(கள்) அமர்த்தப்படுவதற்கான அத்தனை தேவைகளும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. குடும்ப வேலைகள், அரசுப்பணி, பெண்டு கழற்றும் வேலைகள் நிறைந்த ஒரு சுயதொழில், வாரம் ஒரு முறையாவது வெளியூர் செல்ல வேண்டிய ஒரு பொதுப்பணி என எனது பெற்றோர்கள் பம்பரமாக சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். எனினும் வீட்டு வேலைக்கு யாரையும் அமர்த்தவில்லை. என் சகோதரிகளும் தங்கள் திருமணத்திற்கு பிறகு என் தாய் வழியையே பின்பற்றுகிறார்கள், நானும் என் வேலைகளை எவருக்கும் இட்டதில்லை இதுவரை, இனிமேலும் மாட்டேன்.

ரவிகுமார் கட்டுரை படித்தபிறகு, ஒரு முடிவு செய்துள்ளேன். என் அறை நண்பனை மாற்ற முயற்சி செய்வது அல்லது, அறையை காலி செய்வது என்பதுதான் அது.

Read More......

Saturday, May 24, 2008

இந்த வார தளபோட்ச்த்ரி - "தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்"

· 2 comments

...சனிக்கிழமை...ஹோபோக்கன் பார்....பாத் டிரெயின்....பென் ஸ்டேஷன்...நியூ யார்க்...வாசிங்க்டன் டி. சி.....ஒபாமாவா? ஹிலாரியா?......காங்கிரஸா? பா.ஜா.க வா?....யார் வந்தா நமக்கென்ன?....ஹோக்கேனக்கள் டேக் ஆப் தான்....சேது சமுத்ரம் என்னாச்சு?.....ஏர்போர்ட் புராஜக்ட் மீண்டும் டிலே?....கத்திபாரா -வில இன்னமும் இம்சையா?....விஜயகாந்த் மண்டபம் முழுசா இடிச்சாச்சா?....கூவம் கரையெல்லாம் இனி எக்ஸ்ப்ரஸ் ரோடாமே?....எளிவேட்டட் காரிடருக்கு எவ்ளோ ஆச்சு?....அப்புறம் மெட்ரோ டிரெயின்....ஜப்பான் பேங்க்....கவுஷா மினகவா....மீட்டிங் வித் அன்பழகன்...கலைஞர் பிறந்தநாள்...."தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்".....என்பத்தஞ்சா?....அய்யய்யோ அடுத்து யாரு?....ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?....ஸ்டாலின பத்தி யாருக்கு தெரியும்....திராவிட கொள்கைல எவ்ளோ பிடிப்பு?....இட ஒதுக்கீட்டுல என்ன நிலைப்பாடு?.....பாலம் கட்னா போதுமா?....ம்ம்ம்ம்ம்ம்....பெரம்பூர் பிரிட்ஜ்?.....பேசின் பிரிட்ஜ்....கேம்பிரிட்ஜ்....லண்டன்....ரவுடி தமிழர்கள்....இம்சை படும் ஈழத்தமிழர்கள்....ஐ.நா. மனித உரிமை கழகம்....இலங்கைக்கு ஆப்பு...

Read More......

Thursday, May 22, 2008

சிங்கை, பெங்கை மற்றும் மங்கள் பாண்டே டொப்பி

· 5 comments
சிங்கப்பூர் ஸ்காட்ஸ் டவர்

ஒட்டு வாங்கி பின் ஆட்சிக்கு வந்ததும் அல்வா பல்க் ஆர்டர் செய்து கடைக்கோடி குடிமகனுக்கும் கிடைக்கும்படி விநியோகிப்பது தான் உலகெங்கும் உள்ள ஜனநாயக நெறிமுறை. ஆனால் கர்நாடகத்தை பொறுத்தவரை அல்வா வழங்கும் காண்ட்ராக்ட் இப்போதே சி.என்.என்-ஐ.பி.என் -கு கொடுக்கப்பட்டு விட்டது. யார் வந்து சாங்க்ஷன் செய்வது என்பதுதான் முடிவு செய்ய வேண்டும்.

"என்ன பிரச்சினை -னு நீ இதுவரைக்கும் சொல்லல..." என்று கோபப்படுபவர்கள் சற்றே பொறுங்கள். நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா கட்சிகளும் தங்கள் அல்வா வகைப்பட்டியலில் மறக்காமல் சேர்த்திருந்த அல்வா "அடுத்த 5 ஆண்டுகளில் பெங்கையை சிங்கை ஆக்குவோம்" என்ற அல்வா தான். சிங்கப்பூர் சிங்கை என்றால் பெங்களூர் பெங்கை தானே? கோதாவில் உள்ள ஒரு முக்கிய கட்சி ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவாக தனது 5 ஆண்டுகால மத்திய ஆட்சியில் மாற்றி சாதனை படைத்திருக்கிறது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்து "யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இண்டியா" என பெயர் மாற்றம் செய்வதுதான் பாக்கி. கூடவே பெங்களூருக்கும் பெயர் மாற்றம் செய்து "பெங்கை" ஆக்கிவிட்டால் பணி முற்றுப்பெறும்.பெங்களூர்

இவர்கள் மனசில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பன்னாட்டு சாப்ட்வேர் பசங்களுக்கு சிட்டி -யை வாடகைக்கு விட்டுவிட்டால் பெங்களூர் சிங்கப்பூர் ஆகிவிடுமா? அல்லது பிரிகேட் ரோட்டில் எலக்ட்ரானிக் பார்க்கிங் மீட்டர் வைத்துவிட்டால் போதுமா? சில சாப்ட்வேர் புனிதப்பசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை மிரட்டும் அளவிற்கு நிலைமை கொண்டுவந்து விட்டபிறகு சிங்கப்பூர் என்ன, கோயம்புத்தூர் -மாதிரி கூட ஆகமுடியாது.

"சென்னையை ஐ.டி -யில் முதன்மை நகரமாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட போது ஒருமுறை தமிழக ஐ.டி செயலர் சொன்னார், "வி டோன்ட் வான்ட் டு பி எ குயின் இன் த மிடில் ஆப் த க்வாலம்ஸ் (qualms)". ஆனால், பெங்களூர் இப்படித்தான் இன்றைய தேதியில் இருக்கிறது. உள்ளாடைகள் ஏதும் போடாமல் கோட் சூட் போட்டுக்கொண்டு வெளியே வந்தாயிற்று. இப்போது திரு திரு விழிகளுடன் நெளிந்து கொண்டு நிற்கிறது. இனி கோட் கோட் சூட் கழற்றாமல் உள்ளாடைகளை போட முடியாது, உள்ளாடைகளை போடாமல் இப்படியே தொடரவும் முடியாது. கோட் சூட் கழற்றினால் டைரக்டா அம்மனம்தான். ஐ.டி. இல்லன்னா பெங்களூர் ஜீரோ தான்.


மங்கள் பாண்டே டொப்பி

இதுல, உல்ட்டா ஜால்ரா போடரத்துக்குன்னே ஒரு கும்பல் எப்பவும் தயாரா இருக்கும். யாருன்னு நான் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தே ஆர் நன் அதர் தேன் நார்த் இண்டியன்ஸ் லைக் சி.என்.என்-ஐ.பி.என். இவனுங்களுக்கு சவுத் இந்தியான்னா பெங்களூர் -வும் ரஜினிகாந்த்தும் தான். இப்படி கூலிவாங்காம மாரடிக்கிரவனுங்க லிஸ்ட் ரொம்ப பெருசு. டைம்ஸ் நவ், எக்கானமிக்ஸ் டைம், இந்தியா டுடே மற்றும் பெரும்பாலான ஆங்கில, இந்தி மொழி பேப்பர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாக்கள்.


ஒருமுறை சஞ்சய் மன்ஜ்ரேக்கர் சின்னசாமி ஸ்டேடியம் கமெண்ட்ரி பாக்ஸ் -ல உட்காந்துகிட்டு சொல்றார், "பெங்களூர், அன்-டிஸ்பூட்டட் ஐ.டி. கேபிட்டல் ஆப் இண்டியா". என்னவோ மத்த சிட்டி எல்லாம் இந்த விசயத்தை டிஸ்பூட் பண்ற மாதிரியும், இவுரு சொம்புல தண்ணி புடிச்சுகிட்டு, தோள்ல துண்ட போட்டுக்கிட்டு, ஆலமரத்தடிக்கு பஞ்சாயத்து பண்ண வந்த மாதிரியும் இருக்கு இவர் பேச்சு.


சரி, இவனுங்கள பத்திதான் தெரியுமே, உருப்படியா வேற எதாவது பேசுவோம். இப்ப, பெங்கையை எப்படி சிங்கையா மாத்தரதுன்னு நம்ம குத்து ரம்யா தாத்தாவுக்கும்(S.M. கிருஷ்ணா), நம்ம எட்டு பாட்டி ராசாவுக்கும்(எட்டியூரப்பா) ஐடியா கொடுப்போமா?

1. சிங்கையில் சீனாக்கார்கள் ஜாஸ்த்தி என்பதால் ரெண்டு லோடு சீனாக்காரங்கள இம்போர்ட் பண்ணி சிட்டி புல்லா சுத்த விட்டா இம்மீடியட்டா சிங்கப்பூர் லுக் வந்துடும்.2. சிட்டி ட்ராபிக் போலிஸ் தொப்பி மங்கள் பாண்டே டொப்பி போல இருப்பதால் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்கள் தொழில் தொடங்க வந்து விடுகிறார்கள். காஷ்ட்யூமை சிங்கப்பூர் போலிஸ் மாதிரி மாற்றுவது நல்ல தீர்வு.3. இந்தமாதிரி படங்களை கிராபிக்ஸ் செய்து நெட் முழுக்க பரப்பிவிட்டு இதுதான் பெங்களூர் என்று மொள்ளமாரித்தனம் செய்துவிட்டால் பிறகு சிங்கை எப்படி பெங்கை ஆவது என யோசிக்க ஆரம்பித்துவிடும். நாமும் நிரந்தரமாக காவிரிபிரச்சினையிலேயே பொழுதை கழிக்கலாம்.

உங்ககிட்ட ஏதும் ஐடியா இருக்கா?

Read More......

Wednesday, May 21, 2008

ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி அன்பார்சுநேட்லி!

· 9 comments

நான் புலம் வந்த பிறகு இதுவரை தினமும் இதை இரு முறையாவது சொல்ல நேர்ந்திருக்கிறது. பெரும்பாலும் வட இந்திய 'தேசி' நண்பர்கள் எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் என்னிடம் இந்தியில் பேசதொடங்கும்போது எனக்கு எரிச்சல் தான் வரும். நாக்கின் நுனிவரை வரும் 'அன்பார்லிமேண்டரி' வார்த்தைகளை இடது புறம் திரும்பி லோ டெசிபலில் உமிழ்ந்துவிட்டு மீண்டும் ஒரு முறை சொல்வேன்,

"ஐம் சாரி, ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி, ஐ கஸ் யு நோ தட்". (ங்கோத்தா... )

"தட்ஸ் ஓகே, டோன்ட் வொறி"

(யாருக்குடா இப்ப 'வொறி', வென்று!) "...................."

"பட் ஸ்டில், யு ஆர் ஹியர் டூ இயர்ஸ் நவ் ரைட்"

(அதுக்கென்னடா இப்ப!) "யா, பட் ஐ நெவெர் பீல் லைக் ஐ ஹாவ் டு"

"வொய்?"

(வொய்யா, இதென்ன காசியாபாத் கடைவீதி -ன்னு நெனைச்சியாடா, பர்கர் மண்டையா?) "ஐ டோன்ட் நோ"

"ஐம் சாரி மென்..பெட்டர் லேர்ன் ஹிந்தி"

(யான்டா, இல்லன்னா சாமி கண்ணா குத்திடுமா?) "....................."

"யு நோ ஹிந்தி இஸ் அவர் நேசனல் லாங்குவேஜ்"

(சரி அதை அப்புறம் பாக்கலாம், இப்ப உனக்கு என்ன வேணும்?) "ஓகே, ஸீ ய லேட்டவ்"

இதன் பிறகு தமிழ் பற்றிய அவர்களின் வழக்கமான கிண்டல் எனக்கு புரியாத பக்கிரி பாஷையில்(அதாங்க ஹிந்தி...) அவர்களுக்குள் தொடரும். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெள்ளைக் காரன்களுடன் அமர்ந்து அந்த டோமர் பசங்களை அவர்கள் காது படவே, அவர்களும் புரிந்து கொள்ளும் மொழியில் விமர்சிப்பதுண்டு. ஒரு தமிழன் புதிதாக கிடைத்துவிட்டால் போதும், தேன் சொரியும் சென்னைத்தமிழில் கிளப்பி வைத்துவிடுவேன் அவர்கள் .....யில். காத்திருக்கிறேன், லெட்ஸ் ஸீ!.

Read More......

Tuesday, May 20, 2008

தமிழன் - மற்றவர் பார்வையில் மற்றும் மற்றவர் - தமிழன் பார்வையில்.

· 10 comments

தமிழனை பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டால் என்ன பதில் வரும் என்று ஒரு சிறு கற்பனை...

மலையாளி பார்வையில்: தமிழன் ஒரு ஏமாளி...
தெலுங்கர் பார்வையில்: தமிழன் ஒரு தற்பெருமை பார்ட்டி...
கன்னடர் பார்வையில்: தமிழன் ஒரு ஈனப்பிறவி...
பொதுவாய் வடவர் பார்வையில்: தமிழன் ஒரு பிரிவினைவாதி...
குறிப்பாய் குஜராத்தி பார்வையில்: தமிழன் ஒரு தேச துரோகி...
பம்பைகாரன் பார்வையில்: தமிழன் ஒரு கலீஜ் பார்ட்டி...
பெங்கால்காரன் பார்வையில்: தமிழன் ஒரு அறிவாளி...
மற்ற வடவர் பார்வையில்: தமிழன் ஒரு வெளிநாட்டுக்காரன்...
வட கிழக்கு மாகானத்தவர்: தமிழன் ஒரு முன்னுதாரணம்...
பிராமணர் பார்வையில்: தமிழன் தீண்டத்தகாதவன்...
சிங்களன் பார்வையில்: தமிழன் ஒரு தீவிரவாதி...
பாகிஸ்தானி பார்வையில்: தமிழனா? இவன் ஏதோ பரவாயில்ல...
மலேசியாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு கலகக்காரன்...
வெள்ளைக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு உழைப்பாளி...
ஸ்பானிஷ் காரன் பார்வையில்: தமிழன் ஒரு பெரிய மனுஷன்...
சைனாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு சாப்ட்வேர் கை...
கருப்பன் பார்வையில்: தமிழனா?...யார்ராவன்?
பொதுவாய் அனைவர் பார்வையும்: தமிழன் ஒரு மொழி வெறியன்....


மற்றவரை பற்றி தமிழன் என்ன நினைக்கிறான் என்ற கற்பனை கீழே:

மலையாளி ஒரு சந்தர்பவாதி...
தெலுங்கன் ஒரு ஜாதி வெறியன்...
கன்னடர் ஒரு அடியாள் கூட்டம்...
வடவர் ஆதிக்கவாதிகள்...
குஜராத்தி ஒரு மத வெறியன்...
பம்பைகாரன் ஒரு ச்சில்ற...
பெங்கால்காரன் ஒரு பொழைக்க தெரியாதவன்...
வட கிழக்கு மாகானமா? அது எந்த டைம் சோன்?
பிராமணன் ஒரு விசச்செடி...
சிங்களன் ஒரு பொட்டபய...
பாகிஸ்தானி ஒரு வட இந்தியன்
மலேசியாக்காரன் ஒரு ஓரவன்ஜன பார்ட்டி
வெள்ளைக்காரன் ஒரு கொள்ளைக்காரன்...
ஸ்பானிஷ் காரன் ஒரு தத்தி...
சைனாக்காரன் பொழைக்க தெரிஞ்சவன்...
கருப்பன் ஒரு காட்டு மிராண்டி...
பொதுவாய் எல்லாரும் நமக்கு கீழே...

Read More......

Monday, May 19, 2008

தளபோட்சுத்ரி - ஒரு புதிய இலக்கிய வடிவம்.

· 23 comments

பிரபலமான இலக்கிய வடிவங்களான கதை, கவிதை போன்றவற்றை போல தளபோட்சுத்ரி -யையும் ஒரு இலக்கிய வடிவமாக நான் பார்க்கிறேன். மொழி என்பது மோட் ஆப் கம்மூனிக்கேசன் என்றால் இலக்கியம் மீன்ஸ் ஆப் எக்ஸ்ப்ரஸன் எனலாம். வேறு அர்த்தம் இருக்குமானால் அது பற்றி எனக்கேதும் தெரியாது.


தளபோட்சுத்ரி என்பது யாது?

தளபோட்சுத்ரி என்பது ஒன்றுக்கொன்று தொடர்பான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை அடுத்தடுத்து அமைத்து சங்கிலித்தொடரின் இறுதியில் சற்றும் தொடர்பில்லாத வார்த்தையை அடைவது ஆகும்.
(உ-ம்)
.....கமலகாசன்....தசாவதாரம்....ஜாக்கிசான்....குங்பூ...கராத்தே...கராத்தே தியாகராஜன்....மாநகராட்சி...சட்டசபை...முதல்வர்...கழுத்துவலி...கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம்....ஹாரி பெஞ்சமின் சிண்ட்ரோம்....மூன்றாம் பாலினம்....சட்ட அங்கீகாரம்....நல வாரியம்....கிரிக்கெட் வாரியம்.....டுவென்டி20....

இந்த தளபோட்சுத்ரி கமலகாசனில் தொடங்கி டுவென்டி20 யில் முடிகிறது. உண்மையில் டுவென்டி20 தாண்டியும் இதை நீட்டிக்க முடியும்.

அடுத்தடுத்த உருப்படிகள் ஒன்றோடொன்று தொடர்பிலிருந்தாலும் முதலும் இறுதியும் தொடர்பற்றவை.

ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வருவதும் ஏற்புடையதே.


தளபோட்சுத்ரி எவ்வாறு இலக்கிய வடிவமாக கொள்ளப்படுகிறது?

மேற்கண்ட உதாரணத்தில் நாம் சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தைகளில் தொடங்கி விளையாட்டில் முடிக்கிறோம். இடையில் அரசியல், மருத்துவம் மற்றும் நடப்பு செய்திகள் என சிலவற்றை தொட்டு செல்கிறோம். பொதுவாக நாம் அறிந்த விசயத்தை ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட்டு அடுத்தவிசயத்திற்கு நகர்கிறோம். இவ்வாறான வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தலைப்பாக வைத்து ஒரு பதிவே எழுத முடியும். ஆனால் மொத்தத் செய்தியையும் ஓரிரு வார்த்தையில் குறிப்பால் உணர்த்திவிட தளபோட்சுத்ரி -யில் முடிகிறது.

மேலும் நமது சொந்த கருத்துக்களை இடையில் சேர்க்கவும் முடியும். உதாரணமாக கீழ்கண்ட தளபோட்சுத்ரி -யை எடுத்துக்கொள்வோம்.

....மோகன் கந்தசாமி....கருத்து கந்தசாமி....விவேக்....அப்துல் கலாம்....பூணூல் போட்ட முஸ்லீம்....ஹிந்து முஸ்லீம் பாய் பாய்....தலைப்பாகட்டு பிரியாணி கடை..பெரம்பூர் இட்லிகடை...பெரம்பூர் MLA...கந்து வட்டி...வட்டி பிசினசு....

இது எனது பெயரில் தொடங்கி 'வட்டி பிசினசு' வழியாக தொடரும் ஒரு தளபோஸ்த்ரி.

மோகன் கந்தசாமி....கருத்து கந்தசாமி: இரு சொற்றோடரிலும் இரண்டாம் வார்த்தை ஒன்றே என்ற வகையில் ஒன்றுக்கொன்று தொடர்பானவை.
கருத்து கந்தசாமி....விவேக்: தமிழ் சினிமாவில் கருத்து கந்தசாமி -யாக வலம் வருபவர் விவேக்.
விவேக்....அப்துல் கலாம்: அப்துல் கலாம் பற்றி அதிகம் பிரசிகிப்பவர் விவேக்.
அப்துல் கலாம்....பூணூல் போட்ட முஸ்லீம்: அப்துல் கலாம் ஒரு முஸ்லிமாக இருப்பினும் ஒரு ஹார்டு கோர் பிராமினருக்கு நிகராக, பா.ஜா.க. -வுக்கு ஆதரவாக அவர் கருத்துகள் இருப்பதாக நான் கருதுகிறேன். போது சிவில் சட்டம், பிராந்திய கட்சிகளுக்கு எதிரான நிலை, வெளிநாட்டுக்காரர்கள் உயர் பதவி வகிப்பதில் பா.ஜா.க. -வுக்கு உள்ள சங்கடங்களை தானும் பகிர்ந்துகொள்வது போன்றவை சில உதாரணங்கள்.

இவ்வாறாக நமது கருத்துகளை தளபோட்சுத்ரி -யில் இணைக்கவும் முடியும். பெரம்பூர் -ஐ சேர்ந்த புரசைவாக்கம் எம்.எல்.ஏ கந்து வட்டி பிசினஸ் செய்தவர் என்பதையும் என் கருத்தாக கூறியிருக்கிறேன்.


தளபோட்சுத்ரி -எவ்வகையில் சுவாரசியமானது?

வார்த்தைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும் விதத்தில் தளபோட்சுத்ரி -யை சுவாரசியமாக்கலாம். சில குசும்புகளை இடையில் செருகலாம். நக்கல் நையாண்டிகள் போன்றவைக்கும் நிறைய இடமுண்டு. சூட்சமங்களை இடையில் தைத்து வாசகரை யோசிக்க வைக்கலாம். இன்னபிற...


தளபோட்சுத்ரி -பெயர்க்காரணம் தருக.

தளபோட்சுத்ரி -க்கு லிட்டரல் அர்த்தம் 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு எகத்தாளமாய் பதில் தருவது' என்று பொருள் கொள்ளலாம். மைக்கேல் மதன காமராஜனில் தீயணைப்பு வீரரான கமல் ஆறு லட்சத்தை லவட்டி விட்ட அவினாசியின் செயலை 'தளபோட்சுத்ரி' என்பார். முழு அர்த்தத்தையும் ஓரிரு வார்த்தைகளில் மறைமுக சொன்னாலும் எல்லாம் தெளிவாகவே விளங்கும். ஆனாலும் எழுத்து ஒற்றுமையை காரணம் காட்டி சப்பை கட்டலாம். இவ்வாறாக தளபோஸ்த்ரி பெயர்க்காரணம் கொள்ளப்படுகிறது.


இந்த வார தளபோட்சுத்ரி

......டுவென்டி20....நைட் ரைடர்ஸ்....சவ்ரவ் கங்குலி....ஏ கே கங்குலி....உயர் நீதி மன்றம்....உச்ச நீதிமன்றம்....நாடாளு மன்றம்....பிரதமர் பதவி.....ஜெயலலிதா...ஆச யார வுட்டுது....முதல்வர் பதவி.....பா.ம.க....மதுவிலக்கு.....கள்ளச்சாராயம்.....ஓசூர்...ஹோகனக்கள்.....வாட்டாள்...ரஜினிகாந்த்....பரட்டை.....பரட்டை அரசியல்....மருத்துவர் ராமதாஸ்......அன்புமணி ராமதாஸ்....AIIMS வேனுக்கோபால்.....பாப்பார பசங்கோ...சு.சாமி....டாக்டர் பூங்கோதை...ஆலடி அருணா....S. A. ராஜா...வடக்கன் குளம்....சாத்தான் குளம்...அப்துல் ஜப்பார்...கிரிக்கெட் கமெண்டரி....டுவென்டி20....

கொஞ்சம் பழைய தளபோட்சுத்ரி
இன்னொரு தளபோட்சுத்ரி
ஜ்யோவ்ராம் சுந்தர்
செந்தழல் ரவி
லக்கிலுக்

(இணைப்பு - மே 21, 2008)


தளபோட்சுத்ரி -யின் வரலாறு என்ன?

இன்றைய தேதியில் தளபோட்சுத்ரி ஒரு புதிய இலக்கிய வடிவமாக கொள்ள நேர்ந்தாலும் இதன் வரலாறு சங்க இலக்கியங்களில் தொடங்குகிறது. அந்தாதி வகை பாடல்கள் இவ்வாறனவை. அந்தாதியில் ஒவ்வொரு உருப்படியும் ஒரு பாடலாக அமையப்பெற்றிருக்கும். முந்தய பாடலின் கடைசிச்சொல்லும் அடுத்த பாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பாடுபொருளை கொண்டிருக்கும். முதல் கடைப்பாடல்கள் தமது மையக்கருத்தில் பெருத்த வேறுபாடுகளை கொண்டிராது. இதுவே தளபோட்சுத்ரி -யை அந்தாதியில் இருந்து வேறுபடுத்தி காட்டும்.

நிற்க, சூலை 2005 -ல் பதிவர் நாராயணன் தனது 'உருப்படாதது' என்ற வலைப்பூ -வில் 'கடை நவீனத்துவம்' என்னும் தலைப்பில் தளபோட்சுத்ரி -யை ஒத்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உருப்படிகள் யாவும் வெறும் சொற்கள் அல்லது சொற்றொடர்களாக இல்லாமல் பத்திகளாக அமைந்த்திருக்கும். முந்தய பத்தியின் கடைசி வாக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் வேர்ச்சொல்லும் அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வார்த்தையின் வேர்ச்சொல்லும் ஒன்றாக இருக்கும். முதல் மற்றும் கடைசி பத்திகள் மட்டுமின்றி அடுத்தடுத்த பத்திகளும் வெவ்வேறு விசயங்களை பேசுவனவாகும்.

தளபோட்சுத்ரி -யின் இன்றைய வடிவத்தை பெரும்பான்மையாக ஒத்த ஒரு குறிப்பு ஒன்று மேலே குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டத்தில் காணக்கிடைக்கின்றது. பினாத்தல் சுரேஷ் என்ற பதிவர் இட்ட அந்த பின்னூட்டம் தளபோட்சுத்ரி -யின் இலக்கணங்களை ஒருவாறாக கொண்டிருக்கிறது.

....டிவி தொடர் மெட்டி ஒலியைப்பற்றியும், மெட்டி வாங்கிய வெள்ளி விலை பற்றியும், விலைவாசி ஏற்றத்தைப்பற்றியும், கிராம எற்றங்கள்.....

இவ்வாறாக தளபோட்சுத்ரி போதிய வரலாற்று பின்னணியை கொண்டிருப்பினும் எஞ்சிய வரலாற்றை வலைத்தளங்களை முறையாக ஆய்வதன் மூலம் கண்டெடுக்க முடியும்.

நன்றி: நாராயணன், பினாத்தல் சுரேஷ்

Read More......