Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Saturday, June 6, 2009

கருணாநிதியிடம் 32 -கேள்விகள்

· 134 comments


தமிழ்மணத்தின் அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை வெளியிடுகிறேன். 'முப்பத்திரண்டு கேள்விகள்' என்ற இந்த சங்கிலித்தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த கோவி கண்ணனுக்கு ஒரு நன்றி. அக்கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதைவிட நம் தமிழினத்தலைவர், தமிழக முதல்வர், திமுக தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பதில் அளிப்பது சாலப் பொருத்தம் என நான் கருதியதன் விளைவே இந்த இம்சை.


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனது உண்மையான பெயர் தட்சிணா மூர்த்தி. தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன். இது மட்டும் என்ன தமிழ் பெயரா என்று கேட்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே!. மேலும், கருணாநிதி என்று விளித்தால் பிடிக்காது கலைஞர் கருணாநிதி என்று அழைத்தால் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்போது?
நிஜமாக அழுததா அல்லது முதலைக் கண்ணீர் வடித்ததா? நிஜமாக அழுதது பல ஆண்டுகளுக்கு முன். பொய்யாக அழுதது நேற்று சாயுங்காலம். இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன். அது இரவு கலைஞர் செய்திகளில் வரும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
எனக்கு பிடிக்காமலா!! ஆனால் ஆரியர்களுக்கு இந்த தமிழனின் கையெழுத்து பிடிப்பதில்லை. பிடித்திருந்தால் நான் அனுப்பிய ஒரு கடிதத்தையாவது டெல்லிக்கார ஆரியர்கள் படித்திருப்பார்களே! எனவே தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்.

4.பிடித்த மதிய உணவு!
உண்ணா விரதத்திற்கு முன் ரெண்டு இட்லி. உண்ணாவிரதத்திற்கு பின் கொஞ்சம் ஜூஸ். தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.

5. நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனேவெல்லாம் வைக்க முடியாது. ஜாதி ஓட்டு வைத்திருக்க வேண்டும். கொடுக்கிற சீட்டை வாங்கிக்கணும். நான் சொல்லும்போது 'தமிழ் தமிழ்' என்று தெருவில் இறங்கி கத்தவேண்டும். நான் போதும் என்றால் உடனே நிறுத்தவேண்டும். இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
சேதுக்கடல், ஹோக்கேனக்கள் அருவி இரண்டும் பிடிக்கும். அதில் வந்து சேர வேண்டிய பணம் வரும் வரை பிடிக்கும். மற்ற படி அவற்றில் குளிக்கவேல்லாம் பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?
சட்டைப் பையை கவனிப்பேன். கட்சி நிதிக்கு கூட காசில்லாதவர்களை கவனித்து என்ன செய்வது?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எனது நடிப்பாற்றல், திரைக்கதை புருடா வசனம் எழுதுவது போன்றவை எனக்கு பிடிக்கும். ஆனால் எனது பிள்ளைகளிடம் என் பருப்பு வேகுவதில்லை. இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம் என்ன?
சரிபாதி என்று சொல்லமுடியாது. சரி குவாட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் பிடித்தது ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் இருப்பது. பிடிக்காதது எப்போதும் சண்டை போடும் பிள்ளைகளை பெற்றது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் மஞ்சள் துண்டு. நான் தோள் துண்டிற்காக வேட்டியை இழந்துவிட்டேன் என்று விமர்சிக்கிறார்கள். அந்த நெசவாளர்கள் ... சாரி ... வசவாளர்கள் வாழ்க!!!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க!
நான் எங்கே பாட்டு கேட்கிறேன்??!! என் பாட்டைத்தான் ஊரே கேட்கிறதே!!! இதோ நீங்களும் கேளுங்கள்!!

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு தங்கப் பேனாவை பரிசளியுங்கள். பிறகு எந்த வண்ண பேனாவாக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறேன்!

14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.

15.நீங்க அழைக்க விருக்கும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?

உடன் பருப்பு: இவரை அறிவாலயம் வாசலில் நிற்க வைத்து டவுசர் கிழித்தாலும் அசராமல், அகலாமல் அங்கேயே நிற்பார். இதுதான் இவரை அழைக்க காரணம்.

குத்து தெலுங்கினி: இவர் நிரம்ப யோசிப்பதால் லாஜிக் இல்லாமல் திமுக -வை ஆதரிப்பார்.

பொடி டப்பா: இவர் திமுக -வை ஆதரிக்க எந்த காரணமும் தேவை இல்லை. அதனால் இவரை அழைக்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

17.பிடித்த விளையாட்டு?
தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும். எல்லா உடன்பிறப்புகளுக்கும் இது பிடிக்க வேண்டும்.

18.கண்ணாடி அணிபவரா?
என்னய்யா கேள்வி இது!! அதை அணியவில்லை என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டரியல் ஆகும் பொது அது கண்ணில் தெரிந்துவிடாதா?!!

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
திரைக்கதை எழுதுவதோடு சரி. அதை படத்தில் பார்த்து ஆயுளை குறைத்துக் கொள்ள என்னால் முடியாது. அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே! அத்திரைப் படங்களை பார்க்கும் அனைவருக்கும் என் இதயத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் இலவச இடமுண்டு. அவசர ஆம்புலன்ஸ் வசதியோடு!

20.கடைசியாக பார்த்த படம்?
கடைசியாக பார்த்த குத்தாட்டம் எதுவென்று கேட்டால் சரியாக இருக்கும். மானாட மயிலாட வெண் திரையில் வெளியிட்டால் அதை பார்ப்பேன். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமருக்கும் அன்னை சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
நேரு எழுதிய இராமாயணம்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தையெல்லாம் மாற்றுவது இல்லை. கொள்கையை மட்டும் தான் மாற்றுவேன். அடிக்கடி!!

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்!
ஷெல்லடிக்கும் போது மக்கள் அலறும் சத்தம் மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சதா அடித்துக்கொண்டு எழுப்பும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு!
வேறெங்கே! டெல்லிதான்.

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பதாக உலகம் இன்னும் நம்புகிறது.

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்?
நான் தமிழினத் தலைவர் என்பதை உடன்பிறப்புகளே ஏற்க மறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்?
உள்ளே வேறு சாத்தான் வேண்டுமா? நாங்களே அப்படித்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
டெல்லியும் ஜன்பத் இல்லமும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. ஆனால் எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு என்பதை அடக்கத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
அவர்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. நிம்மதியாக உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க!!
வாழ்க்கை ஒரு வட்டிக் கடை போன்றது. தேவையற்றதை அடகு வைத்து தேவையானதை பெறலாம். அவை மீண்டும் தேவைப்படும் போது மீட்டுக்கொள்ளலாம். இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி. கொள்கையை அடகு வைத்து மூழ்கிவிட்டதால் மீட்க முடியாமலே போய் விட்டது வேதனை.

Read More......

Monday, April 27, 2009

கருணாநிதி - ஓரங்க நாடகம்

· 16 comments

அண்ணா சமாதியில் தலைவர் தலுக்காக அமர்ந்து விட, விஷயம் தெரிந்ததும் ஸ்டாலின் பதைபதைத்துப் போய் கோபாலபுரத்திற்கு தொலைபேசுகிறார்.

ஸ்டாலின்: அம்மா! அம்மா! ஐயய்யோ! இவரு திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரும்மா!!!

தயாளு: என்னாச்சுப்பா! யாரு ஆரம்பிச்சிட்டா!

ஸ்டாலின்: அப்பாதான்மா!! அவருக்கு நீயே கால் போட்டு பேசு! நான் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்!!!

(கருணாநிதியின் செல் போனுக்கு தயாளு டயல் செய்கிறார்)

கருணாநிதி: அதெல்லாம் நிறுத்த முடியாது. சாயந்தரம் வரை... ச்சே சாகும் வரை உண்ணா விரதம்தான்...

தயாளு: ஐயோ! நாந்தாங்க பேசுறேன். என்ன இதெல்லாம்?!!

கருணாநிதி: அட நீயா!! நான் டெல்லி காலுக்கு வெயிட் பண்ணறேன், உன்கிட்ட அப்புறம் பேசறேன், போன வை..

தயாளு: என்னமோ போங்கோ! மதியத்துக்குள்ள டிவியில சீரியல் வந்துடனும், சொல்லிட்டேன், ஆமா!

ராமநாதன்: அய்யா! டெல்லியிலருந்து கால்...

கருணாநிதி: ரொம்ப நன்றி சோனியாஜி! என் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிப்பளித்து போரை நிறுத்தியதற்கு நன்றி. "மேரா பாரத் மாக்கான், ஜெய் ஹிந்த்!!!"

சோனியாஜி: இருங்க அவசரப் படாதிங்க! முந்தாநாள் ஒத்துகிட்டவர் இப்ப முரண்டு பிடிக்கிறார் ராஜ பக்சே!... நாங்கதான் உண்ணாவிரதத்திற்கு டைம் சொல்றோம்னு சொன்னோமே! அதுக்குள்ள ஏன் திடீர்னு ஆரம்பிச்சிங்க!

கருணாநிதி: ஏதோ தெரியாம ஆரம்பிச்சிட்டேன்... அம்மா தாயே நீங்கதான் காப்பாத்தனும்!!

சோனியா: உங்களோட ஒரே ரோதனையா போச்சு! நீங்க என்னடான்னா இங்க உண்ணாவிரதம் இருந்து உசுர வாங்குறீங்க! அவர் சீனாவில போய் உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்டுறாரு! கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!

கருணாநிதி: நீங்க எதுக்கு ஜெயலலிதாவுக்கு நம்ம பிளானை கசிய விட்டீங்க? அதுனாலதான் நான் அவசர அவசரமா....

சோனியா: நான் எங்க கசிய விட்டேன், ரா -வில் இருக்கிற ஜெ விசுவாசி எவனோ இந்த வேலையை செஞ்சிருக்கான்.

கருணாநிதி: அதெல்லாம் இருக்கட்டும், நாங்க என்ன போர் நிறுத்தமா கேட்டோம், போர் நிறுத்தம்னு அறிக்கைதான கேட்டோம், அதுகூட ராஜபக்சேவால் முடியாதாமா? தமிழனை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டாரா

சோனியா: சரி.. சரி.. எல்லாரும் சேர்ந்து பிளானையே குழப்பிட்டீங்க! இனிமேலாவது ஒத்திகைப்படி நடந்துக்குங்க! "போர் நிறுத்தம் பெற்றாயிற்று, உண்ணாவிரதம் வாபஸ்" -னு தங்கபாலுவை கூப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிங்க! அதுக்குள்ள நாங்க கொழும்புக்கு கால் போட்டு பாக்கறோம்!

(10 ஜன்பத் ரோடு, டெல்லி - இத்தாலி மொழியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சோனியா திட்ட, மன்மோகன் சிங் அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் கொழும்புக்கு கால் செய்கிறார்)

சிங்: ஹலோ!

பக்சே: ம்ம்... இப்ப என்ன!

சிங்: टाइटलर मामले में ठुकरा दी थी अधिकारियों की राय

பக்சே: No

சிங்: मनमोहन पर जूता फेंकने का प्रयास

பக்சே: No

சிங்: जूता फेंकने वाले को मनमोहन ने किया माफ

பக்சே: No

சிங்: अच्छा चुनावी शिगूफा है काले धन का मुद्दा

பக்சே: No

சிங்: सद्दाम के नक्शेकदम पर मायावती

பக்சே: මේ සුනාමියේ සුන්බුන් මතින් නැගිටි අධිෂ්ඨානයේ කතාව කියා පාන තවත් සංකේතයකි. සුනාමියෙන් පානදුරයට කළ ලොකුම විපත වුයේ සුමංගල විද්‍යාලයට වූ හානියයි. පානදුරේ ශ‍්‍රී සුමංගල විද්‍යාලය නැවත ගොඩනඟා දීමට ඒ අතර ජපන් රජය ඉදිරිපත් විය. එහෙත් ඔවුන් කියා සිටියේ සුනාමි අනතුරු කලාපයෙන් පිටත භූමියක මේ විදුහල ගොඩනඟන්නේ නම් පමණක් ඒ සඳහා රුපියල් ලක්ෂ 5000ක මුදලක් ප‍්‍රදානය කිරීමට කැමැති බවයි.

சிங்: (எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?) ரொம்ப நன்றி ஜி, நாங்க இங்க "போர் நிறுத்தம்" -னு அறிவிச்சிடறோம். எப்பவும்போல அங்க உங்க வேலைய அறிக்கையில காட்டுங்க! (உங்கள எவன் கேட்க முடியும்?) அடுத்த வாட்டி 'வென் ஜியாபோ' வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க!!!

(எல்லாம் இனிதே முடிந்ததாக எல்லோரும் அவரவர் இடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்)

சோனியா: எப்பா! எவ்ளோ இம்சை இந்தாளு கூட! எலக்சன் முடிஞ்சதும் இந்தாள முதல்ல வீட்டுக்கு அனுப்பனும்!

சிங்: ஏம்பா செக்ரட்டரி, மொழி பெயர்க்கச்சொல்லி ஒரு சிங்கள டெக்ஸ்ட் கொடுத்தேனே, என்னாப்பா ஆச்சு!!!

கருணாநிதி: ராம நாதா!! அந்த கெட்டி சட்னி எடுத்துட்டுவா!

தயாளு: நல்லவேளை, சீரியல் மிஸ்ஸாகல!!

உடன்பிறப்பு: தலைவா! உங்க கூட சேர்ந்து மத்தியானம் வரை கொலை பட்னி இருந்தோமே! எங்கே தலைவா எங்கள் பிரியாணி??

(எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரத்திற்கு ஒரு கால் வருகிறது)

சிபிசிஐடி: சார், இங்க ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் "ராஜ பக்சேவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவருவேன்" -அப்படின்னு முழங்கறாங்க சார்!!!

கருணாநிதி: அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு, "ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" அறிக்கை கொடு. (நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க போலருக்கே!!!)

Read More......

Tuesday, March 10, 2009

தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருணாநிதி கைது!

· 29 comments

சென்னை: 12 மார்ச், 3011: தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வருணாநிதி இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்ததற்காகவும், தமிழுணர்வாளர்களை ஒடுக்கியதற்காகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் குற்றவாளிக்கு அவர் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் மன்ற குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அவ்வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணாநிதி: மக்கள் மன்றம்..., விச்சித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. மோசமான அரசியல்வாதிகளை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் அவ்வளவு மோசமான அரசியல்வாதியும் அல்ல. தமிழக அரசியலிலே, சர்வசாதாரணமாக தென்படக்கூடிய அரசியல் வியாதிகளிலே நானும் ஒருவன். ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்தேன். தமிழுணர்வாளர்களை ஒடுக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. ஈழ ஆதரவிலே குழப்பம் விளைவித்தேன். ஆதரவு கூடாது என்பதற்காக அல்ல. திமுக அரசு கவிழக்கூடாது என்பதற்காக. தமிழுனர்வாளர்களை ஒடுக்கினேன். அவர்கள் உண்மைத்தமிழர்கள் என்பதற்காக அல்ல. தமிழுணர்வு கிளர்ந்து அது காங்கிரஸ்காரன் டவுசரை கிழிக்கக்கூடாது என்பதற்காக.

(அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வருணாநிதியிடம் ஏதோ சொல்ல முனைகிறார்.)

வருணாநிதி: உனக்கேன் இவ்வளவு அக்கறை. காங்கிரஸ்காரனுக்கே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே என் குடும்ப நலமும் கலந்திருக்கிறது. கட்சிக்காக தங்கள் குடும்பத்தை மறந்து கட்சி நலனே கதி என்று கிடக்கிறார்களே உண்மைத்தொண்டர்கள், அவர்களைபோல் அல்ல.

இதற்கே இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே, இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையிலே சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் அவன் நடத்தி வந்துள்ள நாடகங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். எளிதாக கரவொலியை பெற்றதில்லை நான். அரிதாரம் பூசி நடிக்க வேண்டியிருந்தது. எளிதாக ஓட்டுகளை பெற்றதில்லை நான். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டியிருந்தது. கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழகத்திலே, திருக்குவலையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். ஊரை ஏய்த்து சொத்து சேர்க்க இன்னொரு ஊர். தமிழக அரசியலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சென்னை...! கட்சியை எனக்கு தாரைவார்த்தது. காங்கிரஸ் கூட்டணியை தந்தது. இன்று கூட்டணிக்கு ஆளாய் பறக்கிறாளே என் தங்கை 'சாணி'யா அவளை ஜெயிக்க வைக்க மீண்டும் மக்களிடம் ஓடோடி வந்தேன். மோசடி அரசியல் அரசியல் செய்து ஓட்டு பொறுக்குகிறாளே, இதோ இந்த ஜாலக்காரி பயலலிதா, இவளது அரசியல் சதிவலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஓட்டு வங்கியை பறிகொடுத்தேன், ஆட்சியை இழந்தேன், கடைசியில் பதவிப் பைத்தியமாக மாறினேன். கூட்டணிக்கு வந்த தங்கையை சந்தித்தேன். பல் பிடுங்கிய பாம்பாக. ஆம். பொக்கையாக!

தங்கையின் பெயரோ 'சாணி'யா! டெரரான பெயர். கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கண்ணிலோ பழியுணர்வு, கையிலே தமிழன் ரத்தம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அலைந்தாள், அவளுக்காக நான் அலைந்தேன். அவளுக்கு கூட்டணி ஆசை காட்டினர் பலர். அவர்களில் பேராசை பிடித்த சிலர் கைமாறாக அதிக இடங்கள் கேட்டனர். பம்மாத்து அரசியல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறானே இந்த கொடியவன் விஜயகோந்து, ஐஸ் வைத்து மடக்கமுயன்றான் என் தங்கையை. நான் மட்டும் தடுத்திராவிட்டால் அவள் அப்போதே அவனுடன் கூட்டணியை அறிவித்திருப்பாள். அவளது பதிவிரதம் பற்றி கேள்வி எழுப்பியவர்களும் கூட்டணிக்காக வந்தனர், தீவிரவாதத்தின் பெயரால், இந்திய தேசியத்தின் பெயரால். பிரதியுபகாரமாக என்னை கூட்டணியிலிருந்து கழட்டி விடச்சொன்னார்கள். மாநில அளவில் பிரச்சனை செய்தாலும் டெல்லியிலாவது என்னுடன் அனுசரணையாக இருந்திருப்பார்கள் காங்கிரசார். அவர்களை தூண்டிவிட்டது பயலலிதாதான்.

நிம்மதியிழந்த என்தங்கை அரசியலைவிட்டே செல்ல முடிவெடுத்தாள். காங்கிரசை செல்வாக்கற்ற தமிழ்நாட்டிலே அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. அவளே அழித்து முடித்து விட்டாள். சொந்த கட்சியையே அழிக்க முயல்வது ஒன்றும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அகிம்சா மூர்த்தி, ஜீவ காருண்ய சீலர், அவரே சுதந்திரத்திற்குபின் காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதத்தான் 'சாணி'யாவும் செய்து கொண்டிருக்கிறாள். அது எப்படி குற்றமாகும்?

கூட்டணிக்காக பாமக விரட்டியது, பயந்தோடினாள்; தேமுதிக துரத்தியது, மீண்டும் ஓடினாள்; அதிமுக என் தங்கையை பயமுறுத்தியது; ஓடினாள், ஓடினாள், அறிவாலயத்தின் குட்டிச்சுவர் வரை ஓடினாள். திமுகவிற்கு வேறு நாதியில்லாததால் கூட்டணியை தொடர்ந்தாள்.

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

வருணாநிதி: இல்லை அதுவும் என் வழக்குதான். காங்கிரஸ் இலங்கைக்கு ஆயுதம் தந்தது ஒரு குற்றம், ஈழ ஆதரவில் நான் குழப்பம் விளைவித்தது ஒரு குற்றம், தமிழுனர்வாளர்களை ஒடுக்கியது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார், யார் காரணம்? அப்பாவிகள் ஈழத்திலே சாகிறார்களே, அது யார் குற்றம்? எங்களின் குற்றமா? அல்லது எங்கள் மீது அபரிதமான நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்களே, அவர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர்த்தது யார் குற்றம்? குடும்பத்துக்கு ஒருபவுன் வாங்கும் வாக்காளர்கள் குற்றமா? அல்லது வாக்குகளை வாங்கி குடும்பத்துக்கு பதவிகள் தரும் எங்களின் குற்றமா? இந்த அரசியல் பெருச்சாளிகள் களையப்படும்வரை ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் படும் துயர் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் அரசியல் வரலாற்றில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் சுயநலம், சூழ்ச்சி, அக்கிரமம் நிறைந்த அரசியல் தத்துவம்.

நீதிபதி: உன்வாதம் பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் உன் மீது குற்றம் சாட்டி கூண்டிலேற்றினால், நீ எங்கள் மீதே குற்றம் சுமத்தக்கூடாது. எங்கள் பிட்டை எடுத்து எங்களுக்கே போடுவது டகால்டி வேலை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ உன்னை தமிழினத்தலைவர் என்று நீயே கூறிக்கொள்றாய் என்பது உண்மையா?

வருணாநிதி: என்னை தமிழினத்தலைவர் என்பது உங்களுக்கே வேடிக்கையாய் தெரியவில்லை!!?!

வழக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதிவரை ஒத்தி வைக்கப் படுகிறது.

Read More......

Thursday, March 5, 2009

ஜெ - சசி, ஓரங்க நாடகம்

· 45 comments


ஈழ(இலங்கை)த் தமிழருக்காக வரும் பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான உரையை முந்தைய நாள் இரவு வரை தயாரிக்காமல் இருந்தால் எவ்வாறு தவித்துப் போவார் என்று யோசித்து பார்த்ததில்...

சசி: யக்கா! என்னா இது, விளையாட்டா?

ஜெ: என்னடி சொல்ற?


சசி: உண்ணாவிரதம் -ன்னா என்னன்னு தெரியுமா? நீபாட்டுக்கு அறிக்கை உட்டிருக்க!


ஜெ: ஓ! அதுவா? உன்னாவிரதம்னா பொதுவிடத்துல போய் சாப்பிடாம ஒக்காந்திருக்கனுண்டி, அதுதான் உண்ணாவிரதம்!


சசி: செங்கோட்டையன் வேறமாதிரி சொல்ராருக்கா?


ஜெ: வெளங்காத வெண்ணை என்னா சொல்லுது?


சசி: பொதுவிடத்துல மட்டுமில்ல, மறைவாக்கூட சாப்பிடக் கூடாதாம்!


ஜெ: அதுக்கென்ன இப்ப, ஒருவேள சாப்பிடாம இருக்க மாட்டியா?


சசி: நான் இருப்பேன், நீங்க இருப்பீங்களா?


ஜெ: அதுக்கென்ன பண்றது, இருந்துதான் ஆகணும், சும்மா வருவாளா சுகுமாரி?


சசி: யாரு சுகுமாரி? அவ எதுக்கு இங்க வரணும்? அதுவும் சும்மா!, அதுதான் நான் இருக்கேனே! அவ வேற எதுக்கு?


ஜெ: இவ ஒருத்தி, கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி! நானே ஒரு பெரிய கவலையில இருக்கேன்! சும்மா நொய் நொய் -னு!


சசி: என்னக்கா கவலை? அதான் பட்டினி கிடக்கரத பத்தியே நீங்க கவலை படல! சோத்துக் கவலையைவிட பெரிய கவலை என்ன?


ஜெ: காலையில உண்ணாவிரத மேடையில என்ன பேசறதுன்னு தெரியலையே? அறிக்கை எழுதித் தர பசங்கள வேற மத்தியானமே துரத்தி உட்டாச்சி, இப்ப என்ன பண்றது?


சசி: விடுக்கா, நாமே ஏதாவது யோசிப்போம்.


ஜெ: என்ன நக்கலா?..., அதெல்லாம் வேலைக்காவது, எவனுக்காவது ஃபோன் பண்ணு! எவன் எடுத்தாலும் நாலு வரி சொல்லச் சொல்லி ஒரு பேப்பர்ல எழுதிக்கோ!


சசி: சரிக்கா!...


(யாருக்கோ ஃ போன் பண்ணுகிறார்)


சசி: யக்கா... காழியூர் நாராயணன் லைன்ல இருக்கார்... பேசுறியா?


ஜெ: நடு ராத்திரியில தூங்காம என்னா பண்ணுது அந்த இம்சை... சரி நீயே பேசு, அவன் சொல்றத எழுதிக்கோ!



எதிர் முனை: நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில்...


சசி: யோவ்... உண்ணாவிரத மேடையில பேசறத்துக்கு ஏதாவது சொல்லுய்யான்னா, பல்லு வெளக்க நல்லநேரம் பாக்க சொன்ன மாதிரி நீ பாட்டுக்கு அடிச்சு உடற...


எதிர்முனை: ஒ! அப்படியா? நீங்க சொல்லவே இல்லையே, சரி... எதுக்கு உண்ணாவிரதம்?, எத பத்தி பேசணும்?


சசி: ஒரு நிமிஷம் இரு!..., யக்கா எதுக்கு உண்ணாவிரதம் -னு கேட்கறார்?


ஜெ: கிழிஞ்சுது... அந்தாள ஃபோனை வச்சிட்டு போய் தூங்கச் சொல்லுடி... இருக்குற இம்சையில இவனுங்க வேற!,


சசி: யக்கா, யாரோ மோகன் கந்தசாமியாம், பிளாக் எல்லாம் எழுதறாராம், ஏதாவது உதவி வேணுமான்னு கேட்கறார்.


ஜெ: சரி, ஸ்பீக்கர் -ல போடு

ஸ்பீக்கர்: என்னமா நல்லாருக்கீங்களா? சாப்டிங்களா? உடம்ப பாத்துக்குங்க! ஆப்பரேசன் பண்ண உடம்பு, ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, எந்த உதவி வேனுன்னானும் ஃபோன் பண்ணுங்க, ஃபோன் பண்ண முடியலன்னா நம்ப நர்ஸ் சசி கிட்ட சொல்லுங்க, அவங்க எனக்கு போன் பண்ணி சொல்வாங்க, சரியா?...


சசி: யோவ்... என்னய்யா பேசுற நீ? நீ யாருகிட்ட பேசற தெரியுமா?


ஸ்பீக்கர்: தெரியுமே! எங்கம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, நீங்க நர்ஸ் சசி தானே?


ஜெ: டேய்! ஏண்டா இம்சை பண்றீங்க, ஃபோன வைடா!


ஸ்பீக்கர்: கவலைபடாதிங்கம்மா நான் இருக்கேன், நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன், சசி ஒழுங்கா பாத்துக்கலன்னா சொல்லுங்க வேற நர்ஸ அப்பாயிண்ட் பண்ணிடலாம், எனக்கு நீங்கதான் முக்கியம், அப்பறம்...


(சசி ஓடிவந்து ஸ்பீக்கரை கட் பண்ணுகிறார்)


ஜெ: யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...


சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?


ஜெ: வேணான்னா விடவா போற, சொல்லு!


சசி: பேசாம அறிவாலயத்துக்கே ஃபோன் பண்ணிடுவோமா?


ஜெ: சரி போடு, ஆனா பேசறது யாருன்னு சொல்லாத!


சசி: சரிக்கா...


(ஃபோன் செய்கிறார்)


சசி: ஹலோ, அறிவாலயமா?


எதிர்முனை: ஆமா, நீங்க யாரு? என்ன விஷயம்?


சசி: நாங்க அன்டார்ட்டிகா தமிழ்ச் சங்கத்தில் இருந்து பேசறோம், தலைவருக்கு பாராட்டு விழா நடத்தனும், டேட் கிடைக்குமா?


எதிர்முனை: நிச்சயமா கிடைக்கும், எங்க விழா நடத்தப் போறீங்க?


சசி: ஆர்ட்டிக் பெருங்கடல் நடுவுல மேடை போட்டுறலாம்...


எதிர்முனை: என்ன நக்கலா?... நடுக்கடல்ல வச்சா எப்படிங்க வரமுடியும்? கடற்கரையில வைங்க... கட்டவுட், சீரியல் லைட்டெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?


சசி: அது இருக்கட்டுங்க, விழா மலர்ல போடறத்துக்கு தலைவர் உரை வேணும், அதை வாங்கி கொடுங்க, முதல்ல அச்சடிச்சிடறோம், தலைவர் கையால வெளியிட்டிடலாம்...


எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?


சசி: டெம்ப்ளேட்டா?


எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...


சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...


எதிர்முனை: சொல்றேன் எழுதிக்குங்க...


"ஈழத்தில் தினம் தினம் செத்து மடியும் எம்குல கொழுந்துகளை காக்க என் இன்னுயிரையும் தருவேன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம்; கங்கை கொண்டான், கடாரம் வென்றான்...


சசி: (ரிசீவரில் கைவைத்து பொத்திய படி) யக்கா... மேட்டர் கெடைச்சிடுச்சி...நிம்மதியா போய் தூங்கு... நான் முழுசா எழுதி வைக்கிறேன், காலையில மனப்பாடம் பண்ணிக்கலாம்...


(தொடர்ந்து பேசச்சொல்லி சசிக்கு சைகை காட்டிவிட்டு பூனைபோல(?) நடந்து படுக்கைக்கு செல்கிறார் ஜெ)

Read More......

Monday, March 2, 2009

ஈலட்டமிளர் பிளாட்ஃபார்ம் -க்கு ஸ்கோப் என்ன?

· 14 comments


மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)


காட்சி 1:
அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.


அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!


காட்சி 2:
புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.

மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?

காட்சி 3:
தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!

அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்!

மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?


அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!


திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?

டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!

காட்சி 4:
வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...

சார், மே ஐ கமின்?

வாங்க தோழர், என்ன விஷயம்?

ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?

ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.

நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?

கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!

அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!

Read More......

Tuesday, September 30, 2008

குஷ்வந்த் சிங்கின் மனைவியை குடிகாரியாக்கிய இடி அமீன்

· 2 comments

குஷ்வந்த் சிங்கிற்கு போன போட்டு மூலக்கட போட் ஹவுசுக்கு வரச்சொல்லிவிட்டு நார்த் ஆர்ளிங்க்டன் பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தார் இடி அமீன். இன்று தெர்மல் போட மறந்துட்டதால மைனஸ் அஞ்சுக்கே காது விறைத்தது. "இவ வேற எத்தன டி.என்.ஏ கொண்டாராள்னு தெரியலையே!" ன்னு சலிச்சுகிட்டே டைம் பார்த்தார். இன்னும் அறை லைட் இயர் -ல பஸ் வந்துடும். சிங்க வேற இன்னும் காணம். அத்தனை டி.என்.ஏ வையும் கைல புடிச்சிகிட்டு, சிங் வரவரைக்கும், ரெண்டுபேரும் எவ்லநேரம் நிக்க முடியும்.

கொர்நிக்கொவுக்கு மலாயும் தெரியாது, எத்தியோப்பியனும் தெரியாது. இவருக்கு ரெண்டும் தவிர வேறேதும் தெரியாது. எப்படி டி.என்.ஏ-வ வண்டியிலேத்துரதுங்கரதவிடவும் இவளிடமிருந்தொருபதிலறிவதென்பதுதானிங்குப்பிரச்சினையெ.

ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து சிங் தயவால்தான் பேச்சு வார்த்தையே நடக்குது. சும்மா சொல்லக்கூடாது....சிங் நல்லாவே ருமேனியன் பேசுவான். சிங்கோட தெலுங்கு ஆக்சன்ட் ருமேனியன் தான் கொர்நிக்கொவுக்கு இடி அமீன பிடிக்கவச்சது. சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். இதத்தான் அடிக்கடி சொல்வான். கொர்நிக்கொவ கல்யாணம் பண்ண புதிசில இவர் பய்யனுக்கும் கொர்நிக்கோ அம்மாவுக்கும் வந்த பிரச்சினைய இத சொல்லித்தான் பெருசு படுத்தினான். இந்த மாதிரி சிறு சிறு உதவிகளால்தான் இவர்களது லவ்விங் பாண்ட் ஆப் மேரீட் லைப் தொடர்ந்து மூணு லிட்டராக நிலைத்திருக்கிறது.

போன் பன்னப்பவே ரெண்டு நாள்ல வரன்னான். எட்டு நிமிஷமாச்சு, இன்னும் காணம்.
இதற்குள் பஸ் வந்து விட்டது. அவர் எதிர்பார்த்த படியே முப்பத்தறைக்கால் மூனேமுக்கால் ஆர்.என்.ஏ-வை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் கொர்நிக்கொவா. இன்று கடலில் உப்பு அதிகம் இருந்ததால் பஸ் அதிகமாக தள்ளாடியதென்றும், அதனால் எளிரண்டேகால் ஆர்.என்.ஏ. ஆவியாகி விட்டதாகவும் சொன்னாள். பார்ப்பன ஊதுகுழல் ஒருத்தியை வன்புணர்ச்சி செய்துகொண்டிருந்த திராவிட திம்மி ஒருவன் மொழிபெயர்த்து சொல்லிவிட்டு சென்றான். அவன் அக்குள் வியர்வையே அவன் ஒரு பிராங்கோ-எத்தியோப்பியன் என்று காட்டியது.

ஒருவழியாக சிங் வந்து சேர்ந்தான். சீசன் டிக்கெட்ட மறந்துவச்சிட்டு வந்திட்டேன், ஜீசஸ் பெட்ரோல் போடமாட்டேன்னுட்டார்...அதான் லேட் -ன்னு புருடா விட்டான். சீசன் டிக்கெட்டு இல்லன்னா எவனும் லிப்ட் தான் தரமாட்டான். பெட்ரோல் -லுமா போடமாட்டன்னு இடி அமீன் அவனை மடக்கினார். பதில் சொல்லாமல் சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். மலாய் -லிருந்து ருமேனியனுக்கு மாறினான்.
அருவக்கத்தாடி 亞細亞 亚细亚 yàxìyà எழுவக்கமைனா எட்டாஸ்-கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கி ராஜா மொழம்'பழம்'' என்று சொல்லி இவள் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ வென சிரித்தாள்.

இருவரும் தன்னை குதூகலப்படுத்த முயற்சிப்பதாக நினைத்தார் இடி அமீன். அதற்குள் அந்த திராவிட திம்மியின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது. குஷ்வந்த் சிங்கின் மனைவியை தான் ஒரு குடிகாரியாக்கிவிட்டதற்காக அவர் இப்போது 0xffffff முறையாக வருந்தினார்.

இது ஒரு மீள்பதிவு

Read More......

Saturday, March 1, 2008

குஷ்வந்த் சிங்கின் மனைவியை குடிகாரியாக்கிய இடி அமீன்.

· 7 comments

குஷ்வந்த் சிங்கிற்கு போன போட்டு மூலக்கட போட் ஹவுசுக்கு வரச்சொல்லிவிட்டு நார்த் ஆர்ளிங்க்டன் பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தார் இடி அமீன். இன்று தெர்மல் போட மறந்துட்டதால மைனஸ் அஞ்சுக்கே காது விறைத்தது. "இவ வேற எத்தன டி.என்.ஏ கொண்டாராள்னு தெரியலையே!" ன்னு சலிச்சுகிட்டே டைம் பார்த்தார். இன்னும் அறை லைட் இயர் -ல பஸ் வந்துடும். சிங்க வேற இன்னும் காணம். அத்தனை டி.என்.ஏ வையும் கைல புடிச்சிகிட்டு, சிங் வரவரைக்கும், ரெண்டுபேரும் எவ்லநேரம் நிக்க முடியும்.
கொர்நிக்கொவுக்கு மலாயும் தெரியாது, எத்தியோப்பியனும் தெரியாது. இவருக்கு ரெண்டும் தவிர வேறேதும் தெரியாது. எப்படி டி.என்.ஏ-வ வண்டியிலேத்துரதுங்கரதவிடவும் இவளிடமிருந்தொருபதிலறிவதென்பதுதானிங்குப்பிரச்சினையெ.
ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து சிங் தயவால்தான் பேச்சு வார்த்தையே நடக்குது. சும்மா சொல்லக்கூடாது....சிங் நல்லாவே ருமேனியன் பேசுவான். சிங்கோட தெலுங்கு ஆக்சன்ட் ருமேனியன் தான் கொர்நிக்கொவுக்கு இடி அமீன பிடிக்கவச்சது. சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். இதத்தான் அடிக்கடி சொல்வான். கொர்நிக்கொவ கல்யாணம் பண்ண புதிசில இவர் பய்யனுக்கும் கொர்நிக்கோ அம்மாவுக்கும் வந்த பிரச்சினைய இத சொல்லித்தான் பெருசு படுத்தினான். இந்த மாதிரி சிறு சிறு உதவிகளால்தான் இவர்களது லவ்விங் பாண்ட் ஆப் மேரீட் லைப் தொடர்ந்து மூணு லிட்டராக நிலைத்திருக்கிறது.
போன் பன்னப்பவே ரெண்டு நாள்ல வரன்னான். எட்டு நிமிஷமாச்சு, இன்னும் காணம்.
இதற்குள் பஸ் வந்து விட்டது.
அவர் எதிர்பார்த்த படியே முப்பத்தறைக்கால் மூனேமுக்கால் ஆர்.என்.ஏ-வை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் கொர்நிக்கொவா. இன்று கடலில் உப்பு அதிகம் இருந்ததால் பஸ் அதிகமாக தள்ளாடியதென்றும், அதனால் எளிரண்டேகால் ஆர்.என்.ஏ. ஆவியாகி விட்டதாகவும் சொன்னாள். பார்ப்பன ஊதுகுழல் ஒருத்தியை வன்புணர்ச்சி செய்துகொண்டிருந்த திராவிட திம்மி ஒருவன் மொழிபெயர்த்து சொல்லிவிட்டு சென்றான். அவன் அக்குள் வியர்வையே அவன் ஒரு பிராங்கோ-எத்தியோப்பியன் என்று காட்டியது.
ஒருவழியாக சிங் வந்து சேர்ந்தான். சீசன் டிக்கெட்ட மறந்துவச்சிட்டு வந்திட்டேன், ஜீசஸ் பெட்ரோல் போடமாட்டேன்னுட்டார்...அதான் லேட் -ன்னு புருடா விட்டான்.
சீசன் டிக்கெட்டு இல்லன்னா எவனும் லிப்ட் தான் தரமாட்டான். பெட்ரோல் -லுமா போடமாட்டன்னு இடி அமீன் அவனை மடக்கினார். பதில் சொல்லாமல் சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். மலாய் -லிருந்து ருமேனியனுக்கு மாறினான்.
அருவக்கத்தாடி 亞細亞 亚细亚 yàxìyà எழுவக்கமைனா எட்டாஸ்-கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கி ராஜா மொழம்'பழம்'' என்று சொல்லி இவள் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ வென சிரித்தாள்.
இருவரும் தன்னை குதூகலப்படுத்த முயற்சிப்பதாக நினைத்தார் இடி அமீன். அதற்குள் அந்த திராவிட திம்மியின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது. குஷ்வந்த் சிங்கின் மனைவியை தான் ஒரு குடிகாரியாக்கிவிட்டதற்காக அவர் இப்போது 0xffffff முறையாக வருந்தினார்.

Read More......