Monday, April 27, 2009

கருணாநிதி - ஓரங்க நாடகம்

·

அண்ணா சமாதியில் தலைவர் தலுக்காக அமர்ந்து விட, விஷயம் தெரிந்ததும் ஸ்டாலின் பதைபதைத்துப் போய் கோபாலபுரத்திற்கு தொலைபேசுகிறார்.

ஸ்டாலின்: அம்மா! அம்மா! ஐயய்யோ! இவரு திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரும்மா!!!

தயாளு: என்னாச்சுப்பா! யாரு ஆரம்பிச்சிட்டா!

ஸ்டாலின்: அப்பாதான்மா!! அவருக்கு நீயே கால் போட்டு பேசு! நான் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்!!!

(கருணாநிதியின் செல் போனுக்கு தயாளு டயல் செய்கிறார்)

கருணாநிதி: அதெல்லாம் நிறுத்த முடியாது. சாயந்தரம் வரை... ச்சே சாகும் வரை உண்ணா விரதம்தான்...

தயாளு: ஐயோ! நாந்தாங்க பேசுறேன். என்ன இதெல்லாம்?!!

கருணாநிதி: அட நீயா!! நான் டெல்லி காலுக்கு வெயிட் பண்ணறேன், உன்கிட்ட அப்புறம் பேசறேன், போன வை..

தயாளு: என்னமோ போங்கோ! மதியத்துக்குள்ள டிவியில சீரியல் வந்துடனும், சொல்லிட்டேன், ஆமா!

ராமநாதன்: அய்யா! டெல்லியிலருந்து கால்...

கருணாநிதி: ரொம்ப நன்றி சோனியாஜி! என் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிப்பளித்து போரை நிறுத்தியதற்கு நன்றி. "மேரா பாரத் மாக்கான், ஜெய் ஹிந்த்!!!"

சோனியாஜி: இருங்க அவசரப் படாதிங்க! முந்தாநாள் ஒத்துகிட்டவர் இப்ப முரண்டு பிடிக்கிறார் ராஜ பக்சே!... நாங்கதான் உண்ணாவிரதத்திற்கு டைம் சொல்றோம்னு சொன்னோமே! அதுக்குள்ள ஏன் திடீர்னு ஆரம்பிச்சிங்க!

கருணாநிதி: ஏதோ தெரியாம ஆரம்பிச்சிட்டேன்... அம்மா தாயே நீங்கதான் காப்பாத்தனும்!!

சோனியா: உங்களோட ஒரே ரோதனையா போச்சு! நீங்க என்னடான்னா இங்க உண்ணாவிரதம் இருந்து உசுர வாங்குறீங்க! அவர் சீனாவில போய் உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்டுறாரு! கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!

கருணாநிதி: நீங்க எதுக்கு ஜெயலலிதாவுக்கு நம்ம பிளானை கசிய விட்டீங்க? அதுனாலதான் நான் அவசர அவசரமா....

சோனியா: நான் எங்க கசிய விட்டேன், ரா -வில் இருக்கிற ஜெ விசுவாசி எவனோ இந்த வேலையை செஞ்சிருக்கான்.

கருணாநிதி: அதெல்லாம் இருக்கட்டும், நாங்க என்ன போர் நிறுத்தமா கேட்டோம், போர் நிறுத்தம்னு அறிக்கைதான கேட்டோம், அதுகூட ராஜபக்சேவால் முடியாதாமா? தமிழனை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டாரா

சோனியா: சரி.. சரி.. எல்லாரும் சேர்ந்து பிளானையே குழப்பிட்டீங்க! இனிமேலாவது ஒத்திகைப்படி நடந்துக்குங்க! "போர் நிறுத்தம் பெற்றாயிற்று, உண்ணாவிரதம் வாபஸ்" -னு தங்கபாலுவை கூப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிங்க! அதுக்குள்ள நாங்க கொழும்புக்கு கால் போட்டு பாக்கறோம்!

(10 ஜன்பத் ரோடு, டெல்லி - இத்தாலி மொழியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சோனியா திட்ட, மன்மோகன் சிங் அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் கொழும்புக்கு கால் செய்கிறார்)

சிங்: ஹலோ!

பக்சே: ம்ம்... இப்ப என்ன!

சிங்: टाइटलर मामले में ठुकरा दी थी अधिकारियों की राय

பக்சே: No

சிங்: मनमोहन पर जूता फेंकने का प्रयास

பக்சே: No

சிங்: जूता फेंकने वाले को मनमोहन ने किया माफ

பக்சே: No

சிங்: अच्छा चुनावी शिगूफा है काले धन का मुद्दा

பக்சே: No

சிங்: सद्दाम के नक्शेकदम पर मायावती

பக்சே: මේ සුනාමියේ සුන්බුන් මතින් නැගිටි අධිෂ්ඨානයේ කතාව කියා පාන තවත් සංකේතයකි. සුනාමියෙන් පානදුරයට කළ ලොකුම විපත වුයේ සුමංගල විද්‍යාලයට වූ හානියයි. පානදුරේ ශ‍්‍රී සුමංගල විද්‍යාලය නැවත ගොඩනඟා දීමට ඒ අතර ජපන් රජය ඉදිරිපත් විය. එහෙත් ඔවුන් කියා සිටියේ සුනාමි අනතුරු කලාපයෙන් පිටත භූමියක මේ විදුහල ගොඩනඟන්නේ නම් පමණක් ඒ සඳහා රුපියල් ලක්ෂ 5000ක මුදලක් ප‍්‍රදානය කිරීමට කැමැති බවයි.

சிங்: (எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?) ரொம்ப நன்றி ஜி, நாங்க இங்க "போர் நிறுத்தம்" -னு அறிவிச்சிடறோம். எப்பவும்போல அங்க உங்க வேலைய அறிக்கையில காட்டுங்க! (உங்கள எவன் கேட்க முடியும்?) அடுத்த வாட்டி 'வென் ஜியாபோ' வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க!!!

(எல்லாம் இனிதே முடிந்ததாக எல்லோரும் அவரவர் இடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்)

சோனியா: எப்பா! எவ்ளோ இம்சை இந்தாளு கூட! எலக்சன் முடிஞ்சதும் இந்தாள முதல்ல வீட்டுக்கு அனுப்பனும்!

சிங்: ஏம்பா செக்ரட்டரி, மொழி பெயர்க்கச்சொல்லி ஒரு சிங்கள டெக்ஸ்ட் கொடுத்தேனே, என்னாப்பா ஆச்சு!!!

கருணாநிதி: ராம நாதா!! அந்த கெட்டி சட்னி எடுத்துட்டுவா!

தயாளு: நல்லவேளை, சீரியல் மிஸ்ஸாகல!!

உடன்பிறப்பு: தலைவா! உங்க கூட சேர்ந்து மத்தியானம் வரை கொலை பட்னி இருந்தோமே! எங்கே தலைவா எங்கள் பிரியாணி??

(எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரத்திற்கு ஒரு கால் வருகிறது)

சிபிசிஐடி: சார், இங்க ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் "ராஜ பக்சேவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவருவேன்" -அப்படின்னு முழங்கறாங்க சார்!!!

கருணாநிதி: அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு, "ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" அறிக்கை கொடு. (நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க போலருக்கே!!!)

16 comments:

Machi said...
April 27, 2009 at 10:40 PM  

:-))

புரியாத மொழியில் இருப்பதை தமிழில் (அடைப்புக்குறிக்குள்) சொன்னா நல்லா இருக்கும்.

Anonymous said...
April 27, 2009 at 10:57 PM  

அடோ மன்மோகன் உம்பட்ட பிசுதா? வேசிக்க புத்தா? (இதுதான் அந்த புரியாத மொழியின் மொழிபெயர்ப்பு)

Suresh said...
April 27, 2009 at 11:17 PM  

எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?)

ha haa haaa

Machan here tamil font problem sariya kalachivita ha ha nalla rasikum padiyavum unmaiyai uraka sollitinga

Suresh said...
April 27, 2009 at 11:17 PM  

Hindi namaluku nagi athahai

so tamil la sonna rasipom la bracketla

Suresh said...
April 27, 2009 at 11:18 PM  

அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு

ha ha ha amma ku than thanks solanum kalaingar unnavarathathuku

கோவி.கண்ணன் said...
April 27, 2009 at 11:22 PM  

//கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!
//

:)

Anonymous said...
April 27, 2009 at 11:22 PM  

இதுதான் உண்மையாக நடந்தது நடந்தை அப்படியே பார்த்ததுபோல் எழுதியிருக்கின்றீர்கள் மோகன். கவனமாக இருங்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவார்கள். இணையத்தில் கூட சில திமுக குண்டர்கள் ஸாரி தொண்டர்கள் இருக்கின்றார்கள்.

மதிபாலா said...
April 27, 2009 at 11:43 PM  

அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்.

:)

Bharath said...
April 28, 2009 at 3:39 AM  

”நச்”சோ நச்...

பதி said...
April 28, 2009 at 5:23 AM  

:)

உங்கள் உளவுப் படையின் மூலம் உண்மையை வெளிக் கொண்டுவந்ததிற்கு நன்றி !!!!!!

ஆனால், இந்த 1/4 மணி நேரக் காமெடிக்கு கொலைஞர் டிவி மொதலாளியொட அடிப்பொடிங்க பதிவுலகத்துல பண்ணுன அட்டகாசம் இருக்கே...

முடியலை....

Unknown said...
April 28, 2009 at 10:26 AM  

ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே படிச்சேன்
மிகவும் அருமை இப்படி பதிவுகள் தொடர்ந்து வருவது பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது குறைந்த பட்சம் பதிவர்களாவது அவருடைய நாடகத்தை புரிந்து கொள்கிறார்களே என்று

பாரதி.சு said...
April 28, 2009 at 2:52 PM  

//"ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" //
ஹா..ஹா..இவன் எதுக்கு வைக்கனும்...???அதான் நம்ம தலையை டெய்லி வைக்கிறாரே??
இப்பவும் இவன் கூட உடன் கட்டை ஏறுத்துடிக்கும் உடன்பிறப்புகளினை என்ன செய்வது??

Anonymous said...
April 28, 2009 at 3:08 PM  

கருணாநிதியின் அடுத்த போராட்டம் சென்னை விமான நிலையத்தில் ஓடும் விமானத்தின் முன்னால் தலையை வைத்துப்படுப்பது.

வால்பையன் said...
May 8, 2009 at 7:10 AM  

என் தானைத்தலைவி தமிழச்சியின் பேட்டி எப்போ வரும்!

Anonymous said...
May 8, 2009 at 9:15 PM  

/ரொம்ப நேரம் சிரிச்சுக்கிட்டே படிச்சேன்/

னிலைமை கவலைக்கிடம்.

மோகன் கந்தசாமி said...
May 17, 2009 at 11:17 PM  

நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தங்கள் பின்னூட்டங்களுக்கு தக்க சமயத்தில் பதில் அளிக்க முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். நேரமின்மை மிகக்கொடியது. பல முக்கிய விசயங்களை தவற விடுவதுபோல் இணையத்தையும் நான் தவற விட நேர்வதை தவிர்க்க முடியவில்லை. விரைவில் இணையத்துடன் மீண்டும் இரண்டற கலப்பேன். நன்றி.