"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பேட்டியின் முதல் பாகம் இங்கே. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.
இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் முன்னேற்றம் விரைவாக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? அல்லது இருக்கிறதா?
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிச்சயமாக அதிகம். இவ்விஷயத்தில் தமிழகத்தோடு ஒப்பிடும் அளவுக்கு மகாராஷ்டிரா மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக தானிருக்கிறது.
கம்யூநிஷ்ட்டுகளும் பகுத்தறிவாளர்களும் இணையும் அந்த ஆதிக்க எதிர்ப்பு என்ற புள்ளியை பற்றி விளக்குங்கள்.
எந்தப் புள்ளியில் சரியாக இணைகிறார்கள் என்ற தெளிவு எனக்கில்லை. நானெல்லாம் கூட பிறக்கும் போதே அமெரிக்கா ஒழிக என்று சொல்லிக் கொண்டு தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆதிக்க எதிர்ப்பு தான் கம்யூனிஸம் என்றால் திராவிட இயக்கத்தார் அனைவருமே கம்யூனிஸ்ட்டுகள் தான்
கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் பற்றி உங்கள் அறிதலை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இந்த கேள்வியை வாசிக்கும்போது எனக்கு வாசிப்பு பத்தாது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்தாவது இந்த கேள்விக்கு என்ன பொருள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
இப்போதெல்லாம் சென்னைவாசிகள் மெட்ராஸ் பாசையில் பேசுவதில்லை. எல்லோரும் வடிவேல் பாசையில் பிதற்றுகிறார்கள். தங்கள் சுய அடையாளத்தை இழக்கும் இப்போக்கு ஆபத்தானதா?
எல்லோரும் நினைக்கும் மெட்ராஸ் பாஷை என்பதே மிகைப்படுத்தப்பட்டு சினிமாவிலும், ஊடகங்களிலும் சொல்லப்படும் ஒரு பாஷை. அதுமாதிரி பாஷை பேசுபவர்களை மெட்ராஸில் காண்பது அரிதிலும் அரிது. என்ன மெட்ராஸ்காரன் என்ன பேசினாலும் முன்னாடி 'ஓத்தா' போட்டு பேசுவான். அது தான் ஒரிஜினல் மெட்ராஸ் பாஷை.
சென்னை மற்றும் பெங்களூரை அரசியல் தாண்டி ஒப்பிடுங்களேன்!
பெங்களூர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே நன்கு முன்னேறிய நகரம் என்பதாக சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக அறிய முடிகிறது. சென்னை கடந்த பண்ணிரண்டு ஆண்டுகளாக தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. இரு நகரங்களுக்கும் பொதுவான அம்சம் போக்குவரத்து நெரிசல் என்பதாக அறிந்திருக்கிறேன். பெங்களூரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பதாக தெரிகிறது. சென்னை இந்த விஷயத்தில் கொஞ்சம் சுமார் தான்.
முன்னேற்றம் என்பது எது? IT பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கிடைப்பதா? அல்லது 12 -ம் வகுப்பு படித்தவர்க்கும் வேலை கிடைப்பதா? பெங்களூர் பற்றி சுஜாதா அப்படி என்னதான் சொன்னார்?
முன்னேற்றம் என்பது எல்லாத்தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதாக தான் பொதுக்கருத்து இருக்கிறது. பெங்களூரில் மக்களின் வாழ்க்கைத்தரம் இப்போது சென்னை மக்களுக்கு இருக்கும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டிவிட்டதாக சுஜாதா சொல்லியிருந்தார்.
சென்னை பைலட் தியேட்டரில் உலக சினிமா ஏதும் பார்த்ததுண்டா?
கடைசியாக 'இண்டியானா ஜோன்ஸும், கபால முத்திரையும்' பார்த்தேன். அது உலக சினிமாவா என்று தெரியாது. உலக சினிமா என்பதற்கு எது அளவுகோல்?
நடிகை ஷகீலா உங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் வாசலை இடித்து கட்டுவது குறித்து பரிசீலிப்பீர்களா?
ஷகீலாவுக்காக என் வீட்டுக்கு எதிரில் புதியதாக ஜோதிமஹால் கட்டுவேன். கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு இடைசெறுகல் : இப்போது ஜோதி தியேட்டரில் 'மிஸ் ஷகிலா' என்ற உலக சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது
உங்கள் முழுப்பெயர், பணி, ஊர், குடும்பத்தினர், எதிர் வீட்டு பிகர் பற்றி வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?
என்னுடைய முழுப்பெயர் 'சிறுணை இல.மோகன கிருஷ்ணகுமார்', என்னுடைய பணி விளம்பர ஆலோசகர், ஊர் மடிப்பாக்கம், உலகமே என் குடும்பம் தான், கடந்த மாதம் புதியதாக எதிர்வீட்டுக்கு ஒன்றல்ல, ரெண்டு ஃபிகர் குடிவந்திருக்கிறது. ஒரு ஃபிகர் திராவிட ஃபிகர் லுக்கிலும், அவளுடைய தங்கை ஆரிய ஃபிகர் லுக்கிலும் இருக்கிறாள்கள். இன்னும் பெயர் இத்யாதி விவரங்கள் விசாரிக்கவில்லை.
உங்கள் படிப்பு மற்றும் தனித்திறமைகள்?
அரசியல் இளங்கலைப் பட்டம், இதைப் படிப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது :-) ஃபிகர் மடிப்பதும் தனித்திறமையில் சேருமென்றால் சுமாரான பர்சனாலிட்டியை வைத்தே நான் ஐந்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க ஃபிகர்களை மடக்கியதை என் திறமை மூலமாக சாதித்ததாக சொல்லலாம்.
பதிவுலகிலும் பொதுவிலும் உங்கள் நெருங்கிய நண்பர் இருவர், தூரத்து எதிரிகள் இருவர் பற்றி குறிப்பிடுங்கள்.
எதிர்கருத்து கொண்டவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்களே. உச்சநீதி, உயர்நீதி என்று நீதியை தரம் பிரித்து வைத்திருப்பது போல நெருங்கிய, தூரத்து என்று நண்பர்களை தரம் பிரிக்க விரும்பவில்லை
ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?
நாமெல்லாம் இலக்கியம் படைக்க இங்கே வரவில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்த இன்னொரு வலைப்பூ.
புதிதாக பதிவெழுத வருவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?.
பதிவெழுதுவதை விட அதிகமாக படிக்கவும். அருள் எழிலன், சுகுணா திவாகர், பைத்தியக்காரன், வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், சாரு நிவேதிதா, ஜி.கவுதம், பா.ராகவன், பத்ரி, டாக்டர் ப்ரூனோ, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், அய்யனார் போன்றவர்களின் வலைப்பூக்களை தவறாது வாசிக்கவும். புதிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வாக்கியங்களை எளிமையாக அமைக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ள முடியும். ஆனால் எதை வாசித்தாலும் உங்களுக்கென்று இருக்கும் இயல்பினை இழந்துவிட வேண்டாம். உங்கள் இயல்பு தான் உங்கள் முகவரி
அழகிரி? ஸ்டாலின்?
அரசியலுக்கு முன்னவர். ஆட்சிக்கு பின்னவர்.
ஷகிலா? நமீதா?
பீப்பாய், அண்டா!!
உண்மைத்தமிழன்? டோண்டு?
பிளேடு பக்கிரி, இண்டர்நேஷனல் மாஃபியா!
சுண்டை கஞ்சி? பதிவர் கூட்டம்?
மப்பு, பிளேடு!!
பரங்கிமலை ஜோதி? ராயப்பேட்டை பைலட்?
ஷகீலா, ஷரன் ஸ்டோன்!
தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008
Read More......