Thursday, September 17, 2009

போலிடோண்டு விவகாரம் - பேட்டி 1, செந்தழல் ரவி, பகுதி 1

·

தொடர் பேட்டியின் முதலில் பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி வெளியாகிறது. தொடர்ந்து சிலரது பேட்டிகளும், எஞ்சிய பாகங்களும் வலையேற்றப் படும். இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


1.மூர்த்தியுடன் உங்கள் நட்பு முறிந்தபோது அவன் எவ்வாறு பதிவுகளில் எழுதிவந்தான்? ஆபாசங்களை தொடங்கியிருந்தானா? இல்லையா?

ஆபாச சைபர் கிரிமினல் மூர்த்தியுடன் 'நட்பு' என்ற சொல் அருவருப்பை தருகிறது. நான் பதிவுலகின் உள்ளே நுழைந்தபோதே மூர்த்தி ஆபாசங்களை தொடங்கியிருந்தான். டோண்டு பதிவுக்கு பின்னூட்டினால், ஆபாச அர்ச்சனைகள் பின்ன்னூட்டமாக வரும். டோண்டு அவர்கள் ஒவ்வொரு பதிவாக சென்று, தன்னுடைய கண்டுபிடிப்பான எலிக்குட்டி சோதனை பற்றி விளக்கிக்கொண்டிருப்பார். என்னுடைய இரண்டாவது பதிவில் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html பின்னூட்டம் இட்ட ஒரே ஆளும் அவர்தான். போலி டோண்டு இவரா அவரா என்று என்னுடைய சம காலத்தில் பதிவுலகுக்கு வந்த லக்கிலுக்கும் நானும் அரட்டையில் விவாதித்துக்கொண்டிருப்போம். அதற்கு அடுத்த வாரத்தில் Doondu என்ற நபர் தான் போலி என்று கண்டுகொண்டேன். சாதாரனமான பின்னூட்டங்கள் வரும் http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_26.html (இதில் Doondu வை நான் போலி என்றே விளித்து எழுதியுள்ளதை பார்க்கலாம்) மற்றும்
http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_25.html போன்ற பதிவுகளை பாருங்கள். இதே நேரத்தில், போலி டோண்டு தளத்தில் இருந்து வரும் பின்னூட்டங்களின் மூலம், டோண்டு என்பவர், ஆண் பெண் கற்புநிலை பற்றி கேவலமாக எழுதுவதாகவும், சாதி வேறுபாட்டை மருபடி கொண்டுவர முயல்வதாகவும், இதனை தாங்கள் ஒரு குழு அமைத்து எதிர்த்து வருவதாகவும் அறிவித்தனர். டோண்டு பதிவில் பின்னூட்டம் எதுவும் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது அந்த பின்னூட்டங்கள். போலி டோண்டு யார் என்று கண்டுபிடிக்க ஆவல் இருந்ததால், டோண்டு பதிவில் பின்னூட்டங்கள் எதுவும் போடாமல் அமைதி காத்தேன். அதனால் என்னுடைய மின்னஞ்சலும், அவர்களுடைய லிஸ்டில் சேர்ந்தது. இது தான் நீங்கள் சொல்லும் தொடர்பு. மற்றபடி நடவடிக்கைகளை அறிய முயன்று, டோண்டுவை எதிர்ப்பது போன்று ஒன்றிரண்டு மின்னஞ்சல்களும் என்னுடைய முகவரியில் இருந்து அனுப்பியுள்ளேன்.

2. நட்பு முறிய உடனடிக் காரணம் என்ன?

சென்ற கேள்வியின் நீட்சியாக இதற்கு பதில் அளிக்கலாம். இந்த நேரத்தில் நான் பார்ப்பணீய எதிர்ப்பு, வெங்காயம், பெரியார், கடவுள் நம்பிக்கை துறப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்று கொஞ்சம் ட்ரான்ஸ்பார்ம் ஆகியிருந்தேன்.

ஜெயராமனை கேள்வி எழுப்பி பதிவு http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_22.html, இந்த பதிவில் ஜெயராமன் சொல்லியிருப்பது உண்மையான உண்மைகளே. என்னுடைய புரிதல் தவறு என்று பின்னால் உணர்ந்தேன்.

டெலிமார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று கும்மியடித்த டோண்டு மற்றும் ம்யூஸை நோக்கி http://tvpravi.blogspot.com/2006/08/blog-post_19.html , இந்த பதிவின் பின்னூட்டத்தில் கும்மிகளும் ஆரம்பம்.

விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று நம்பி http://tvpravi.blogspot.com/2006/07/blog-post_28.html அவரது விடாப்பிடியான தேவையில்லாத பார்ப்பன எதிர்ப்பை சாடும் விதத்தில். இதில் விடாது கருப்பு மூர்த்தியின் பின்னூட்டத்தில், பார்ப்பன ஜாதியை தாழ்ந்த சாதி என்று எழுதியதை பார்த்தவுடன், விடாது கருப்புவின் உண்மையான நோக்கத்தில் சந்தேகம் வந்தது. அவனுக்கும் மூர்த்திக்கும் தொடர்பு இருக்கும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தேன்.

இருந்தாலும், அவ்வப்போது வரும் பார்வேர்டு பின்னூட்டங்களை படிப்பது, மற்றும் போலி யார் என்று ஷார்ட் லிஸ்ட் செய்ய முயல்வது, வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் என்ற முயற்சி, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்விக்கு உதவிய முயற்சி, திடீரென ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, ஓடிப்போறேன்யா பதிவுலகத்தில் இருந்து என்று ஒரு பதிவு போட்டுவிட்டு அப்புறம் அமைதி, பிறகு ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இராது என்பதுபோல மீண்டும் மொக்கைகள்.

எல்லோரும் அய்யோ அம்மா என்று புலம்பும் ஆபாச அர்ச்சனைகள் எனக்கு வருவதில்லை, காரணம் டோண்டு பதிவில் பொதுவாக நான் பின்னூட்டம் போடுவதில்லை. ஒருவகையில் பயம், ஒருவகையில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணம், ஒருவகையில், போலியார் சாதி ஒழிப்பு விடுதலை இயக்கத்தால் கட்டமைக்கப்பட்ட டோண்டு என்ற கிழட்டுப்பார்ப்பன சாதிவெறி மிருகம் எக்கேடோ கெட்டுப்போவுது என்ற அலட்சியம். இருந்தாலும் டோண்டு ஏதாவது தவிர்க்கமுடியாத வகையில் பதிவை போட்டுவிடுவார், அதில் பின்னூட்டம் போட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் பின்னூட்டம் போட்டோம் என்றாலும், அதற்கும் இரண்டொரு ஆபாச அர்ச்சனைகள் வரும். வேலைப்பளுவும், வெவ்வேறு திசைகளில் பயணிக்கவேண்டிய கட்டாயங்களும் அதனை தொடர்ந்து பாலோ செய்யவிடாமல் தடுத்தன.

இதன்பின் விடாது கருப்புவுக்கு எதிராக விட்டது சிகப்புவும், மூர்த்தியின் இன்னொரு தளமான ஸ்பெஷல் ஆப்புவும், மூர்த்தியின் போலி தளமான கரு.மூர்த்தி என்ற தளமும், டூண்டு தளத்தின் தினம் ஒரு ஆபாச அர்ச்சனைகளும் ஆரம்பமாயின. வஜ்ரா சங்கர், என்றென்றும் அன்புடன் பாலா, அன்னியன் ரமணி, முகமூடி, திருமலை, காசி என்று போலி மூர்த்தியை கருத்தளவில் எதிர்த்தவர்கள் அத்துனைபேருக்கும் போலி தளங்கள், டோண்டு பதிவில் பின்னூட்டம் போட்டதால் கே எஸ் அதியமானுக்கு போலி தளம், அரவிந்தன் நீலகண்டனுக்கு போலி தளம் என்று டாப் கியர் எடுத்திருந்தது போலி பிரச்சினை.

ராபின்ஹூட் ஒரு படி மேலே போய், மூர்த்தியின் திருமண போட்டோவை இணையத்தில் வெளியிட்டு, போலி டோண்டு என்பது மூர்த்தி தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். ராபின்ஹூட் மகேஷ், நீங்கள் ஏற்கனவே அவர் பெயரை ஒரு பதிவில் குறிப்பிட்டுவிட்டதாக நியாபகம், பெங்களூரில் இருப்பதால், அது அருண் ஆக இருக்ககூடும் என்று மூர்த்தி சந்தேகப்பட்டு, அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான். நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே என்னையும் அவனது சந்தேக வட்டத்தினுள் கொண்டுவந்திருந்தான்.

இந்த குறிப்பிட்ட பதிவை நான் இட்டது தான் நானும் இந்த சுழலில் சிக்க காரணம். http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html இந்த பதிவில் தொடர்ச்சியாக ஆபாச தாக்குதல்களுக்கு உள்ளானேன். அவை பொதுவாக வருவன போல் அல்லாமல் என்னுடைய மிக அதீதமான தனிப்பட்ட தகவல்களோடு இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டேன். இந்த நேரத்தில் மூர்த்தி என்பவர் தான் போலி டோண்டு என்றும், கோவி கண்ணன் அவர் நன்பர் என்றும் அறிந்துகொண்டேன். கோவி கண்ணனும், தன்னுடைய சட்னிவடை என்ற பதிவை பற்றி சொல்லியிருந்தார், அதிலும் ஆபாச தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன. என்னுடைய இந்த பதிவில் ஆபாச அர்ச்சனை செய்தது போலி டோண்டு மூர்த்தி தான் என்று கோவியாரிடம் சொல்ல, இல்லை என்று அவர் சாதித்தார். அதற்குள் போலி டோண்டுவை தொலைபேசியில் அழைத்து ஒரு பிரபல பதிவர் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். அது நான் தான் என்றும் அவனது சந்தேகம். என்னுடைய நம்பரை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கோவி கண்ணன் அளித்தார். மேலும் என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட பெண்குரலில் ஒரு அழைப்பு வந்தது, அதில் தான் தான் போலியார் என்றும், என்னுடைய பதிவில் ஆபாச பின்னூட்டங்களிட்டது பார்ப்பணர்களின் வேலை என்றும், உன்னுடைய ஸ்டேட் கவுண்டரில் என்னுடைய ஐபி இல்லை, அதாவது அதற்குள் கோவியார் அதனை போலி மூர்த்தியிடம் பாஸ் செய்திருந்தார், ஆகவே தமிழ் இணைய பிதாவான தன்னிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்ரு எச்சரித்தார் போலியார். கொஞ்சம் கூட ஆண்மையற்ற அந்த குரல் போலியுடையதாக இருக்காது என்று நினைத்திருந்தேன். ஏன் என்றால் போலிக்கு கொடுக்கப்பட்டிருந்த பில்டப் அப்படி.

அதன்பின் டோண்டுவுக்கு ஒரு பின்னூட்டம் இட, ஆட்டோமெட்டிக்காக உருவானது என்னுடைய போலி வலைப்பதிவும், http://tvpravi.blogspot.com/2007/07/blog-post.html போலி பின்னூட்டங்களும்.

இவன் தான் போலி என்று தெரிந்துவிட்டதால்

மலேசியா மனநோயாளி என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html
ரீட் நோட்டிபை மூலம் அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை விடாது கருப்புவும், டூண்டுவும் ஓரே ஐபியில் இருந்து திறந்ததால் விடாது செருப்பு என்று எழுதி நான் போட்ட பதிவு http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_8094.html
அப்போது போலியார் என்றெல்லாம் எழுதி லக்கிலுக் பதிவு எழுதியதால் லக்கிலுக் மீதும் டென்ஷன், இணையத்தில் சைக்கோக்களின் ஆதிக்கம் http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_6734.html, பின்னால் லக்கிலுக் பதிவு நீக்கப்பட்டது. அதன்பிறகு லக்கிலுக்கையும் க்ளோஸாக வாட்ச் செய்து, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கண்டுகொண்டதால் மட்டுமே அவருடன் நட்பை தொடர்ந்தேன்.

டோண்டு ராகவன் ஒரு பதிவில் சொன்னது போல ப்ரவுணி புள்ளிகளுக்காக லக்கிலுக் போலி டோண்டு மூர்த்தியுடன் இணைந்தாரா, அதன் பின் மூர்த்தியால் ப்ளாக் மெயில் செய்யப்பட்டாரா என்பது எல்லாம் எனக்கு தெரியாது.

3. 'அதனை கண்டுபிடிக்கும் அசைன்மெண்டை எனக்கு அனுப்பியிருந்தான்' என்று கூறுகிறீர்கள். எப்படி அனுப்பினான்? மடலிலா. அரட்டையிலா அல்லது தொலைபேசியிலா? அந்த அசைன்மேன்டின் உள்ளடக்கம் என்ன? அவன் ஏன் உங்களுக்கு அனுப்பி இருந்தான்?

அரட்டையில் இல்லை. மடலில்.

4. 'என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.' என்று கூறுவதில் உள்ள முரணை விளக்குங்கள்? யாரென்றே தெரியாத நபரிடம், அதுவும் ஆபாசங்களை செய்துவரும் நபருக்கு எவ்வாறு பாஸ்வேர்டை தந்தீர்கள்? இது உலகில் எவருமே செய்யத்துணியாத ஒன்று அல்லவா? மேலும் உங்கள் ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வைத்து போலி என்ன செய்தான்?

இது என்ன ஸ்விஸ் வங்கி பாஸ்வேர்டா யாருமே செய்யத்துணியாத என்று பில்டப் எல்லாம் ? அதுவும் எனக்கு நன்கு பழக்கமான கோவியார் கேட்கிறாரே என்று கொடுத்தேன். அவன் அதை வைத்து என்ன செய்தான் என்று தெரியது.

5.போலியின் குணாதிசியம் பற்றி உங்கள் தெரிந்தவை என்ன?
கேள்விக்கு கேள்வி சைக்கோ என்ற வார்த்தைக்கு என்ன குணாதிசியங்கள் அகராதியில் உள்ளன ?

[தொடரும்]

12 comments:

கோவி.கண்ணன் said...
September 17, 2009 at 9:08 PM  

அவதூறு ஆறுமுகத்தின் அவதூறுகள் பற்றி விளக்கமாகப் ஒரு பதிவு போடனும் ஆசை, ஆனால் ஆறுமுகத்தின் எழுத்து பார்ம் போய் ரொம்ப நாளாச்சு, எதுக்கு அனாவசிய விளம்பரம் கொடுக்கனும் என்று பார்க்கிறேன்.

TBCD said...
September 17, 2009 at 11:58 PM  

Ullen Iyya !

ரவி said...
September 18, 2009 at 2:22 AM  

போலி அளவுக்கு அவதூறு எழுத உங்களால் தானே முடியும் ? தொடர்ந்து டோண்டு குடும்பத்தை தவறாக எழுதியது நான் தான் என்று உளறி வருகிறீர்கள்.

எனக்கு என்ன மோட்டிவ் இருக்கமுடியும் என்று கூட டோண்டு யோசிக்கமாட்டாரா ?

ILA (a) இளா said...
September 18, 2009 at 3:01 AM  

சாக்கடைய நோண்டியா சந்தனம் வரும்னு நினைக்கிறீங்களா? ..நரகல் மேல கல்லெறிஞ்சி உள்ளே என்ன இருக்குன் பார்க்குறீங்களா? இதை விட கேவலாம் கேட்கத் தோணுது . நட்பு அதைத் தடுக்குது. இதுக்குப் பேருதான் ஆறிப்போன புண்ணை நோண்டி திங்கறதுன்னு சொல்லுவாங்க. வேணாம்.. இத்தோட உங்க பதிவுக்கு வாரத நிறுத்தின்னோனும்.. கடுப்பாவுது..

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 5:39 AM  

//போலி அளவுக்கு அவதூறு எழுத உங்களால் தானே முடியும் ? தொடர்ந்து டோண்டு குடும்பத்தை தவறாக எழுதியது நான் தான் என்று உளறி வருகிறீர்கள்.

எனக்கு என்ன மோட்டிவ் இருக்கமுடியும் என்று கூட டோண்டு யோசிக்கமாட்டாரா ?
//

அற்ப சந்தோசம் என்பதைத் தவிர, அரிப்பு எடுப்பவருக்கெல்லாம் என்ன மோட்டிவ் இருக்க முடியும் ? என்னமோ டிடெக்ட்வ் மாதிரி நினைத்துக் கொண்டு எழுதுவதில் உமக்கிருந்த ஆனந்தம் எல்லாம் சேர்ந்து தான் உம்மை போலிக் குழுவில் தீவிரமாக செயல்பட வைத்தது.

உம் உளரல்களுக்கெல்லாம் என்னால் தகுந்த பதில் சொல்லிக் கொண்டு இருக்க எனக்கு விருப்பம் கிடையாது. என்னிடம் பழகுவோருக்கு நான் எதையும் நிரூபணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

நீர் டோண்டுவையோ, போலி டோண்டுவையோ பற்றி எதுவேண்டுமானாலும் எழுதிக் கொள் அதை நான் கேட்கப்போவதில்லை, என்னைப் பற்றிய அவதூறுகள் தொடர்ந்து கூறுவதை எனது இன்றைய பதிவுக்கு பிறகு நிறுத்துவீர் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 5:52 AM  

//என்னுடைய நம்பரை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கோவி கண்ணன் அளித்தார். மேலும் என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பார்வேர்டை போலி கேட்கிறான், அதனை கொடுத்துவிட்டால் பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அதனையும் கோவியாரிடம் கொடுத்தேன்.
//

என்னிடம் நீர் கொடுத்தீரா இல்லையா என்பது எனக்கு நினைவு இல்லை, சாட்டுகளைத் தேடிப் பார்க்க வேண்டும்,

ஆனால்

ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை - நீராகவே மூர்த்திடம் உரையாடியில் கொடுத்திருப்பதற்கான சாட் விவரங்களை இன்றைய பதிவில் வெளி இட்டு இருந்தேன் மிஸ்டர் ஆறுமுகம். (வேறு சிலத் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததைக் குறிப்பிட்ட உமது வேண்டுகோளால் எனது பதிவில் அழிக்கப்பட்டது )

உமக்கும் போலி டோண்டுவிற்கும் இருந்த தொடர்புகளை மறைத்து எழுதி புனிதராக முயற்சிக்கும் உம் எண்ணத்தை நான் குறை சொல்லவில்லை. நீர் உத்தமராகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது உமது உரிமை, அதில் எனக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் அதற்காக என் மீதும் எனது சில நண்பர்கள் மீதும் புளுதி வாறித் தூற்றுவது சரி இல்லை மிஸ்டர் ஆறுமுகம்

ரவி said...
September 18, 2009 at 6:19 AM  

அன்புள்ள கந்தசாமி ?

நானும் மூர்த்தியும், அதாவது அவன் அப்போது தான் தான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல் ஆபாச பதிவுகள் எழுதிவந்தான். பேசிய சாட் உரையாடலை எப்படி உங்களால் போடமுடியும் ? அப்படியென்றால் நீரும் அவரும் ஒருவரோ ?

ஸ்டாட் கவுண்டரை கொடுத்துவிட்டு, ஓன் ஐபி காட்டுமாறு சொல்லிவிட்டு, நிமிடத்துக்கு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தேன்,. அப்போது உங்களது ஐப்பியும், மலேசியா ஐபியும் வந்தது.

ஆக நீரும் போலி டோண்டுவாக முகத்தை மறைத்து ஆபசமாக எழுதிவந்த மூர்த்தியும் இணைந்துதான் பல செயல்களை செய்கிறீர்கள் என்று பிடித்தேன்.

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 11:10 AM  

//அன்புள்ள கந்தசாமி ?

நானும் மூர்த்தியும், அதாவது அவன் அப்போது தான் தான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல் ஆபாச பதிவுகள் எழுதிவந்தான். பேசிய சாட் உரையாடலை எப்படி உங்களால் போடமுடியும் ? அப்படியென்றால் நீரும் அவரும் ஒருவரோ ?

ஸ்டாட் கவுண்டரை கொடுத்துவிட்டு, ஓன் ஐபி காட்டுமாறு சொல்லிவிட்டு, நிமிடத்துக்கு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தேன்,. அப்போது உங்களது ஐப்பியும், மலேசியா ஐபியும் வந்தது.

ஆக நீரும் போலி டோண்டுவாக முகத்தை மறைத்து ஆபசமாக எழுதிவந்த மூர்த்தியும் இணைந்துதான் பல செயல்களை செய்கிறீர்கள் என்று பிடித்தேன்.
//

ஹலோ ஆறுமுகம், மூர்த்தி தன் மின் அஞ்சல் மூலம் தான் நீர் அவனுடன் ஆபாசமாகப் பேசிக் கொண்டதை எனக்கும் லக்கிக்கும், பாலபாரதிக்கும் மின் அஞ்சலில் அனுப்பினான் என்று அந்தப் பதிவிலேயே எழுதி இருந்தேனே. பதட்டத்தில் படிக்காமல் விட்டுவிட்டாயா ?

நாளை காலை வரை பதிவை திறந்து வைக்கிறேன். ஒரு 10 தடவைப் படித்துவிட்டு எதும் தடயம் கிடைக்குதான்னு முயற்சி செய்யவும்.

மொத்தமே 200 பேர்தான் அந்தப் பதிவைப் படித்திருக்கிறார்கள் என்பதால் நீக்கியதால் எனக்கும் வருத்தமே. உமக்கு நன்றாக மண்டையில் ஏறவேண்டும் என்பதற்காக மீண்டும் நீக்கியதைச் சேர்த்துவிடுகிறேன்.

****

யாருன்னு யாரும் அறிந்திடாத 'முகமூடி'ப் பதிவர் உமக்கும் போலிக்கும் தொடர்பு இல்லை என்று ஞானஸ்தானம் வழங்கி இருக்கிறார் என்று எழுதி இருக்கிறீரே ? பரிதாபாம் ஐயா.

உம் கூட பழகும் ஒருவர் கூட உமக்கும் போலிக்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல முன் வரமாட்டாங்களா ?


கடைசியில் நீர் போலியை துப்பறியத்தான் அவனுடன் இணைந்தாய் என்பதை யாரும் நம்பவில்லையே மிஸ்டர் ஆறுமுகம்

ரவி said...
September 19, 2009 at 5:43 AM  

பொதுவாக என்னை பக்கம் பக்கமாக திட்டுவதை சரிவர படிக்கும் பழக்கம் எனக்கில்லை..

:))

கோவி.கண்ணன் said...
September 21, 2009 at 2:20 AM  

//எனக்கு நன்கு பழக்கமான கோவியார் கேட்கிறாரே என்று கொடுத்தேன். அவன் அதை வைத்து என்ன செய்தான் என்று தெரியது.//

இந்த வெண்ணை என் மீது சந்தேகக் கண்ணோடு தான் பழகியதாக தன் பதிவிலேயே வாக்குமூலம் கொடுத்தது, இது என்னை நம்பி பாஸ்வேர்ட் கொடுத்ததாம்.

அவ்வ்வ்வ்வ்வ்

//இத்தனைகாலம் இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருந்த திரு.கோவி.கண்ணன் அவர்களுடன் பழகிய நாட்களை நானும் நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன்...

http://osaichella.blogspot.com/2008/02/blog-post_9599.html

போலி டோண்டு பற்றி நான் ஆராய்ச்சி செய்தபோது அதிகமாக கிராஸ் செய்தவர்கள் சிலர்...

ஒருவர் துபாய் முத்துக்குமரன். மற்றவர் திரு. கோவிக்கண்ணன். போலிடோண்டு இவராக இருக்கலாம் என்று நான் எடுத்துவைத்த லிஸ்ட் ஒன்றில் - நம்பினால் நம்புங்கள் - முதலில் இருந்தவர் - திரு.கோவி.கண்ணன்...
//

இந்த வெண்ணை முன்னுக்கு பின் முரணாக ஒரே பதிவில் உளறியருப்பதைப் பாருங்கள்.

முதலில் என்னுடன் 'பழகிய நாட்களை எண்ணிப் பெருமூச்சு விட்டதாம்'

அதே பதிவில் என்னுடன் பழகியதே என் பின்புலத்தைக் கண்டுபிடிக்கத்தான் பழகியதாம்.

இது தன்னை சிஐடி ஆக நினைத்துக் கொண்டு என்னுடன் பழகி என்னைக் கண்டு பிடிக்கலாம் என்று துவங்கியது எப்படி 'பழகிய நாட்கள்' பட்டியலில் மலரும் நினைவுகள் போல் வரும்.

முடியலடா சாமி.

அவதூறு ஆறுமுகம் முன்னுக்கு பின் உளரக்கூடியவர் என்று ஒரே ஒரு பதிவைப் படித்தாலே போதும்.

அந்த சமயத்திலேயே என்காலில் கிடப்பதைக் கழட்டலாம் என்று தான் இருந்தேன். இருந்தாலும் நல்ல சமயமாக அமையட்டும் என்றே விட்டு வைத்திருந்தேன்.

'நான் பொறுக்கித்தனம் தான் செய்தேன்' என்று வெளிப்படையாகச் சொல்லி பாவமன்னிப்புக் கேட்பதைத் தடுப்பது எது மிஸ்டர் ஆறுமுகம் ?

samundi said...
September 21, 2009 at 5:55 AM  

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

வால்பையன் said...
September 21, 2009 at 9:32 AM  

கேள்விகளில் காரம் பத்தலையே!

வாசகர்களும் கேள்வி கேட்கலாம்னு ஒரு ஆப்சன் வச்சிருக்கலாம்!