Thursday, September 17, 2009

போலிடோண்டு விவகாரம்-பேட்டி-1,செந்தழல் ரவி,பகுதி3

·

பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.

உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.


15. TBCD உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?

குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?

16. TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்?

நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

17. நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?

விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.

18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?

எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?

19. சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?

தெரியாது.

20. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?

உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.

21. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?

என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான்.

மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.

ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

22. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும்.

[முற்றும்]

12 comments:

TBCD said...
September 18, 2009 at 5:20 AM  

:)

ரவி said...
September 18, 2009 at 6:15 AM  

கோவியின் பதிவில் டோண்டு ராகவன் மனைவி மகள் பற்றிய ஆபாச பதிவை நான் எழுதவில்லை என்று தெரியும் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் இதே அவதூறான தகவலை வைத்து டோண்டு ராகவனை அசிங்கப்படுத்தி ஒரு பதிவு எழுதினாரே ?

இதனால் நானும் டோண்டு ராகவனும் அடைந்த மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ?

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 1:59 PM  

//கோவியின் பதிவில் டோண்டு ராகவன் மனைவி மகள் பற்றிய ஆபாச பதிவை நான் எழுதவில்லை என்று தெரியும் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் இதே அவதூறான தகவலை வைத்து டோண்டு ராகவனை அசிங்கப்படுத்தி ஒரு பதிவு எழுதினாரே ?

இதனால் நானும் டோண்டு ராகவனும் அடைந்த மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ?
//

மிஸ்டர் ஆறுமுகம், என்னைப் பற்றி அவதூறு எழுதும் முன்பு நீர் எழுதி இருப்பதெல்லாம் சரிதானா ? என்று தெரிந்து கொண்டு தான் எழுதினீரா ? அல்லது என்னிடம் அனுமதி பெற்று எழுதினீரா ?

அல்லது இட்லி வடைக் குழுமம் கணிணியை வேவு பார்பதாக கற்பனையாக எழுதிய போது அவர்களிடம் அனுமதி பெற்று தான் எழுதினீரோ.

டோண்டுவைப் பற்றி நீர் கவலைப்படுவது ஆடு ஓநாய் கதையாக இருக்கிறது. மூர்த்தியிடம் டோண்டு தான் உம்ம திருமணத்தைப் பற்றிப் போட்டுக் கொடுத்தார் என்று அவர் செய்திருந்தாலும் கூட நீர் அதை வெளிப்படையான குற்றச் சாட்டாகவே சொல்லி இருப்பதைவிடவா அவரது மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்று நான் எழுதினேன்.

எனக்கும் தான் மனம் இருக்கிறது. மன உளைச்சலும் மனமும் உமக்கு மட்டும் இல்லை என்று நம்புங்கள் மிஸ்டர் ஆறுமுகம்.

உம்மால் மன உளைச்சலுக்கு ஆளான பதிவர்கள் எத்தனையோ பேர். அதில் பெண்களும் உண்டு மிஸ்டர் ஆறுமுகம்.

உமக்கு ஊகமாக தோன்றுவதையெல்லாம் தான் தோன்றித்தனமாக பதிவும் திரட்டியும் இருக்கிறதே என்பதற்காக எத்தனை அவதூறுப் பதிவுகளை எழுதி இருக்கிறீர்கள் என்று பாருங்கள் மிஸ்டர் ஆறுமுகம்

கோவி.கண்ணன் said...
September 18, 2009 at 2:07 PM  

//கோவியின் பதிவில் டோண்டு ராகவன் மனைவி மகள் பற்றிய ஆபாச பதிவை நான் எழுதவில்லை என்று தெரியும் என்று ஒத்துக்கொண்டுள்ளார்.//

பதிவில் எழுதி இருந்த மற்றதையெல்லாம் மறுக்காமல், இதை மட்டும் நீர் குறிப்பிட்டு இருந்ததால், 'நம்புகிறேன்' என்று சொல்லி இருக்கிறேன். நீர் அவ்வாறு எழுதவில்லை என்பது எனக்கு தெரியும் என்று சொல்லவில்லை ஆறுமுகம்.

கோவி.கண்ணன் said...
September 19, 2009 at 12:17 AM  

//18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?

எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?
//

ஆறுமுகம் ஐயா என்ன சொல்றார், டோண்டுவுக்கு சென்னை / பெங்களூர் கிளை பற்றி தெரியலாம் என்று ஊகிக்கிறாரா ? அல்லது சென்னை / பெங்களூர் கிளையில் டோண்டு சார் செயல்பட்டு வந்ததாக ஊகிக்கிறாரா ?

புரியலையே.

ரவி said...
September 19, 2009 at 5:58 AM  

மூர்த்தி, பல ஆபாச பதிவுகளை என்னை பற்றி எழுதியபின், முதலும் கடைசியுமாக என்னுடன் செய்த சேட் தான் நீங்கள் போட்டது.

நீங்கள் அதை முழுமையாக போடவேண்டும். அப்போது தான், அவனது ஆபாசம் உலகறியும்.

அதே சமயம், வாயால் பேசுபவர்களிடம் வாயாலும், கையால் பேசுபவர்களிடம் கையாலும் பேசுவது என்னுடைய பழக்கம்.

போலி டோண்டு செய்த அளவுக்கு வன்முறையான பதிவுகளை கோவியவர்கள் எழுதுகிறார். ஆக எதிரி க்கு என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை அவரே தீர்மானித்து சொல்கிறார்.

இது குறித்து இனியும் என்னுடைய நேரத்தை இதில் செலவழிக்க விரும்பவில்லை. ஆயிரம் பணிகள் உண்டு. சில நூறுபேர் அறிந்த இந்த வலைப்பதிவுலகம் இப்போது சில ஆயிரங்களாகும், பின் பல்லாயிரமாகும். இது போன்ற சில்லறை பிரச்சினைகளில் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று சாட்டில் சொன்ன நன்பருக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...
September 19, 2009 at 11:24 AM  

//நீங்கள் அதை முழுமையாக போடவேண்டும். அப்போது தான், அவனது ஆபாசம் உலகறியும்.//

உம்ம கதையையும், போலி டோண்டு கதையையும் உலக லெவலுக்கெல்லாம் இழுத்துச் சொல்லுவது ஓவராக இல்லை ?

போலி டோண்டுவாக அவனது ஆபாசம் பலரும் குறிப்பாக தமிழ் பதிவுலகம் அறிந்தது தான், ஆனால் அந்தச் சாட்டைப் போட்டால் உம்ம ஆபாசம் தான் வெளியே வரும். நீர் அப்படிப் பேசக் கூடியவர் அல்லர் என்று யாரையாவது சொனனால் நான் அதை அவர்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைப்பதில் தயக்கமே இல்லை.

அந்த கருமாந்திரத்தை வலையில் ஏற்றி என் வலைப் பக்கத்தை ஆபாசமாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை, என்பதிவில் ஏற்றவேண்டும் என்று 'யோக்கியவான்' நீர் கட்டாயப்படுத்தவும் முடியாது.

//அதே சமயம், வாயால் பேசுபவர்களிடம் வாயாலும், கையால் பேசுபவர்களிடம் கையாலும் பேசுவது என்னுடைய பழக்கம்.
//

நீர் எதால் பேசினால் எனக்கு என்ன ?என்னைப் பற்றிப் பேச உமக்கு நான் அனுமதிக் கொடுக்கவில்லை

//போலி டோண்டு செய்த அளவுக்கு வன்முறையான பதிவுகளை கோவியவர்கள் எழுதுகிறார்.//

கோபுரத்தின் மீது ஏறி கூவவும்.

// ஆக எதிரி க்கு என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை அவரே தீர்மானித்து சொல்கிறார். //

உம்மையெல்லாம் நான் எதிரி அளவுக்குக் கூட மதிக்கவில்லை. நான் பதிவிட்டது உம்மை மதித்து அல்ல என்று சொல்லி இருக்கிறேன். உம்முடைய நம்பகத் தன்மையின், பதிவில் நீர் அவதூறுகளாகக் கிறுக்கிவருவதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதினேன்.

//இது குறித்து இனியும் என்னுடைய நேரத்தை இதில் செலவழிக்க விரும்பவில்லை. ஆயிரம் பணிகள் உண்டு. சில நூறுபேர் அறிந்த இந்த வலைப்பதிவுலகம் இப்போது சில ஆயிரங்களாகும், பின் பல்லாயிரமாகும். இது போன்ற சில்லறை பிரச்சினைகளில் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று சாட்டில் சொன்ன நன்பருக்கு நன்றி.
//

வாழ்த்துகள்.

உமக்கெல்லாம் நண்பர் பெயரைப் போட்டுக் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவுரை சொல்வது அவர்களுக்கே அசிங்கம் என்பதால் தனியாகச் சொல்கிறார்கள் போலும்.

இனிமேலாயினும் மனிதத் தன்மையை வளர்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் அவரது முகத்திலும் நீர் கரியை பூசாமல் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டிக் கொள்வது நல்லது.

ரவி said...
September 19, 2009 at 12:52 PM  

உமக்கெல்லாம் நண்பர் பெயரைப் போட்டுக் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவுரை சொல்வது அவர்களுக்கே அசிங்கம் என்பதால் தனியாகச் சொல்கிறார்கள் போலும்///

:))))))

ரவி said...
September 19, 2009 at 12:57 PM  

போலியார் சாரி கோவியார், மற்ற விசயங்களையும் எழுதுமாறு தூண்டவேண்டாம். போய் புள்ள குட்டியை படிக்கவைக்கும் வழியை பார்க்கவும்.

கோவி.கண்ணன் said...
September 19, 2009 at 1:07 PM  

//செந்தழல் ரவி said...
போலியார் சாரி கோவியார், மற்ற விசயங்களையும் எழுதுமாறு தூண்டவேண்டாம்.
//

மிஸ்டர் அவதூறு,

உம்ம மிரட்டலைத்தான் துடைத்துப் போட்ட தாளாக உம்மீதே வீசி இருக்கிறேனே. போதவில்லையோ, கவலைப்படாதீர், நீர் யார் யாரிடம், எங்கெல்லாம் வால் ஆட்டுகிறீரோ அங்கெல்லாம் தேவைப் படுவோர் அவற்றை எடுத்து ஒட்டி உம் யோக்கிதையை அவ்வப்போது வெளிச்சமிடுவார்கள். அதுமட்டுமின்றி உன் அவதூறுகளால் பாதிக்கப்பட்டோர், இனி பாதிக்கப் படுவோர் இனி உம்மை சகித்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்.

//போய் புள்ள குட்டியை படிக்கவைக்கும் வழியை பார்க்கவும்.//

யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்குக் கூட உமக்கு அருகதைக் கிடையாது.

samundi said...
September 21, 2009 at 5:54 AM  

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

வால்பையன் said...
September 21, 2009 at 10:55 AM  

// samundi said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html//


மூர்த்தியோட அப்பாவுக்கும் , இணையத்துக்கும் என்ன தொடர்பு!?