Tuesday, September 30, 2008

குஷ்வந்த் சிங்கின் மனைவியை குடிகாரியாக்கிய இடி அமீன்

· 2 comments

குஷ்வந்த் சிங்கிற்கு போன போட்டு மூலக்கட போட் ஹவுசுக்கு வரச்சொல்லிவிட்டு நார்த் ஆர்ளிங்க்டன் பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தார் இடி அமீன். இன்று தெர்மல் போட மறந்துட்டதால மைனஸ் அஞ்சுக்கே காது விறைத்தது. "இவ வேற எத்தன டி.என்.ஏ கொண்டாராள்னு தெரியலையே!" ன்னு சலிச்சுகிட்டே டைம் பார்த்தார். இன்னும் அறை லைட் இயர் -ல பஸ் வந்துடும். சிங்க வேற இன்னும் காணம். அத்தனை டி.என்.ஏ வையும் கைல புடிச்சிகிட்டு, சிங் வரவரைக்கும், ரெண்டுபேரும் எவ்லநேரம் நிக்க முடியும்.

கொர்நிக்கொவுக்கு மலாயும் தெரியாது, எத்தியோப்பியனும் தெரியாது. இவருக்கு ரெண்டும் தவிர வேறேதும் தெரியாது. எப்படி டி.என்.ஏ-வ வண்டியிலேத்துரதுங்கரதவிடவும் இவளிடமிருந்தொருபதிலறிவதென்பதுதானிங்குப்பிரச்சினையெ.

ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து சிங் தயவால்தான் பேச்சு வார்த்தையே நடக்குது. சும்மா சொல்லக்கூடாது....சிங் நல்லாவே ருமேனியன் பேசுவான். சிங்கோட தெலுங்கு ஆக்சன்ட் ருமேனியன் தான் கொர்நிக்கொவுக்கு இடி அமீன பிடிக்கவச்சது. சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். இதத்தான் அடிக்கடி சொல்வான். கொர்நிக்கொவ கல்யாணம் பண்ண புதிசில இவர் பய்யனுக்கும் கொர்நிக்கோ அம்மாவுக்கும் வந்த பிரச்சினைய இத சொல்லித்தான் பெருசு படுத்தினான். இந்த மாதிரி சிறு சிறு உதவிகளால்தான் இவர்களது லவ்விங் பாண்ட் ஆப் மேரீட் லைப் தொடர்ந்து மூணு லிட்டராக நிலைத்திருக்கிறது.

போன் பன்னப்பவே ரெண்டு நாள்ல வரன்னான். எட்டு நிமிஷமாச்சு, இன்னும் காணம்.
இதற்குள் பஸ் வந்து விட்டது. அவர் எதிர்பார்த்த படியே முப்பத்தறைக்கால் மூனேமுக்கால் ஆர்.என்.ஏ-வை தூக்க முடியாமல் தூக்கி வந்தாள் கொர்நிக்கொவா. இன்று கடலில் உப்பு அதிகம் இருந்ததால் பஸ் அதிகமாக தள்ளாடியதென்றும், அதனால் எளிரண்டேகால் ஆர்.என்.ஏ. ஆவியாகி விட்டதாகவும் சொன்னாள். பார்ப்பன ஊதுகுழல் ஒருத்தியை வன்புணர்ச்சி செய்துகொண்டிருந்த திராவிட திம்மி ஒருவன் மொழிபெயர்த்து சொல்லிவிட்டு சென்றான். அவன் அக்குள் வியர்வையே அவன் ஒரு பிராங்கோ-எத்தியோப்பியன் என்று காட்டியது.

ஒருவழியாக சிங் வந்து சேர்ந்தான். சீசன் டிக்கெட்ட மறந்துவச்சிட்டு வந்திட்டேன், ஜீசஸ் பெட்ரோல் போடமாட்டேன்னுட்டார்...அதான் லேட் -ன்னு புருடா விட்டான். சீசன் டிக்கெட்டு இல்லன்னா எவனும் லிப்ட் தான் தரமாட்டான். பெட்ரோல் -லுமா போடமாட்டன்னு இடி அமீன் அவனை மடக்கினார். பதில் சொல்லாமல் சீராத்தி தார வோகா. மாரத்தே தாரி காக்கரூம். மலாய் -லிருந்து ருமேனியனுக்கு மாறினான்.
அருவக்கத்தாடி 亞細亞 亚细亚 yàxìyà எழுவக்கமைனா எட்டாஸ்-கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கி ராஜா மொழம்'பழம்'' என்று சொல்லி இவள் ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ வென சிரித்தாள்.

இருவரும் தன்னை குதூகலப்படுத்த முயற்சிப்பதாக நினைத்தார் இடி அமீன். அதற்குள் அந்த திராவிட திம்மியின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது. குஷ்வந்த் சிங்கின் மனைவியை தான் ஒரு குடிகாரியாக்கிவிட்டதற்காக அவர் இப்போது 0xffffff முறையாக வருந்தினார்.

இது ஒரு மீள்பதிவு

Read More......

Thursday, September 25, 2008

புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும் - இறுதி பாகம்

· 48 comments

ண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையின் இறுதி பகுதியை வெளியிடுகிறேன். முதல் பகுதி சென்ற பதிவில்.

தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இனைந்து "சுயமரியாதை-சமதர்ம இயக்கம்" என்ற இயக்கத்தை தோற்றுவித்தனர்.இந்த இயக்கும் தோன்றுவதற்கு முன் 1927 ல் மே தினத்தன்று அவருடைய குடியரசு இதழில் இப்படி எழுதுகிறார்.

"பொதுவாக எனது பிரசங்கத்தில் அரசியல் தலைவர்களை, மதத்தை, குருக்களை, கோவிலை, அரசாங்கத்தை, நீதிஸ்தலத்தை, தேர்தல் அமைப்பை, இன்னும் பிறவற்றை, யார் யாரையோ எதுஎதற்கோ கண்டித்து இருக்கிறேன். நான் கண்டிக்காத திட்டமோ, இயக்கமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படவே மாட்டேன் என்கிறது" என எழுதிய பெரியாரின் கண்களில் பட்டது சிங்காரவேலரின் இயக்கமும், திட்டமும்,யோசனையும்.

இருவரின் கூட்டு முயற்சியால் சுயமரியாதை இயக்கத்தவரிடையேயும், பொதுமக்களிடமும் கம்யூனிசக் கருத்துக்கள் விரிவாக பரவத்துவங்கின. ஈரோட்டுப் பாதை என பின்னால் பெயர் பெற்ற திட்டத்தை சிங்காரவேலரும்,பெரியாரும் உருவாக்கினார்கள்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக "தென்னிந்திய சமதர்ம கட்சி" என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி துவங்கவும் ஏற்பாடு நடந்தது. இதையடுத்து நடந்த கூட்டங்களில் பெரியாரின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதுவரை சாதி, மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு போன்ற சமூக பிரச்சனைகளை மட்டுமே பேசப்பட்ட நிலைமாறி அரசியல், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகளும் முன்னிறுத்தப்பட்டன. ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும் போது "பொதுவுடமை அரசுமுறை இந்தியாவில் ஏற்பட என்ன தடை என்று தெரியவில்லை. பொதுவுடமையை ஏன் விரும்புகின்றோம் எனச் சொல்ல பயப்படத் தேவை இல்லை. எல்லோரும் புரட்சிக்குத் தயாராக இருக்க வேண்டும்.பயப்படக் கூடாது. அதனால் என்ன பின்விளைவு ஏற்பட்டாலும் சரி. இதை புரட்சி என்றால் பயப்படாதீர்கள். இது நடக்கும்! நடந்தே தீரும்!" என முழங்கினார்.

இதே நேரத்தில் சிங்கார வேலர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அவர் எழுதிய 'பொதுவுடமை விளக்கம்' என்ற புத்தகத்தில் கம்யூனிசத்தை வெறும் அரசியல்,பொருளாதார சித்தாந்தமாக சுருக்கிக் கூறாமல் சமூகவியல், பண்பாடு போன்ற அனைத்தையும் தழுவிய சித்தாந்தமாக அவர் சித்தரித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஜீவா சிங்காரவேலருடன் தொடர்பில் இருந்து தமிழகம் முழுவதும் சென்று சமதர்ம சங்கங்களை அமைக்க வழிகாட்டினார்.

இப்படிப்பட்ட போக்குகள் அனைத்தையும் கண்டு அஞ்சிய வெள்ளையர் அரசு தனது தாக்குதலைத் துவங்கியது. "இன்றைய ஆட்சி ஏன் போக வேண்டும்?" என்ற குடியரசு இதழின் தலையங்கத்தை காரணம் காட்டி பெரியாரையும் அவர் சகோதரி கண்ணம்மாவையும் 1933 டிசம்பர் 30 நாள் சிறையில் அடைத்தனர். பெரியார் சிறைப்பட்ட போதும் அதற்குப் பின்பும் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன்.பகத்சிங்கின் "நான் ஏன் நாத்தீகன் ஆனேன்" என்ற புத்தகத்தை மொழி பெயர்த்தற்காக தோழர் ஜீவாவையும், ஈ.வெ.கிருட்டிணசாமியையும் 1935 பிப்ரவரி முதல் வாரத்தில் அரசு கைது செய்தது. ஜாமீனில் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கூறியபடி இருவரும் அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். இந்த நிகழ்வு கம்யூனிஸ்டுகளிடையே கோழைத்தனமான செயலாக பார்க்கப்பட்டு பெரியார் மேல் வெறுப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை பெரியார் வெளியிடுகிறார். முதல் அறிக்கை 10/03/1935 அன்றும் இரண்டாவது அறிக்கை 31/03/1935 அன்றும் குடியரசு இதழில் வெளியாயின.


முதல் அறிக்கையில் "மேல்சாதி ஆதிக்க காங்கிரஸை எதிர்ப்பதும், அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் சாதி, மத பேதங்களை அகற்றுவதும், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், பொருளியலில் சமதர்மமே ஆகும். இவற்ரைப் பற்றி பிரசாரம் செய்யவும், அமுல்படுத்தவும் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டீஷ் ஆட்சியே மேலானது என்பது எனது அபிப்ராயம் ஆகும்" என்றார்.


இரண்டாவது அறிக்கையில் "ஈ.வெ.கிருஷ்ணசாமி, ப.ஜீவானந்தம் ஆகிய இரு தோழர்களும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்கு நானே ஜவாப்தாரி என அறிவித்துக் கொள்கிறேன். இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும் அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேஸையே பொறுத்தது மாத்திரம் அல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். மக்களுக்கு சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல பொருளாதார கொடுமைகளும் தீர வேண்டியது அவசியம் என நாம் கருதியதால் பொருளாதாரம் சம்மந்தமாக சிறிது பிரச்சாரம் செய்ய ஆரமித்தோம். என்றாலும் அரசாங்கத்தார் தப்பபிப்ராயத்தைக் கொண்டு இயக்கத்தை அடக்குமுறைப் பிரயோகம் கொண்டு முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர். சர்க்காரோடு இந்த மாதிரி ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சத்தில் சர்க்கருக்கும், நமக்கும் வீண் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்திற்கு வர வேண்டியுள்ளது." எனக் குறிப்பிட்டார்.

அதாவது கம்யூனிச சார்புடைய எந்த இயக்கத்தையும் எப்படியும் அழித்து விடுவது என்ற நிலையில் பிரிட்டீஷ் அரசாங்கம் இருந்ததால் பெரியார் அரசோடு மோதி ஆரம்ப நிலையிலேயே இயக்கம் அழிந்து விடாமல் அரசின் போக்கிலேயே விட்டுப்பிடித்து முதலில் இயக்கத்தை காப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்கு சிங்காரவேலர், ஜீவா மற்றும் பலர் எதிப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் சிங்காரவேலர் 'புதூலகம்' என்ற இதழைத் 1935 மே தினத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்தும் தீவிர கம்யூனுசத்தை வலியுறுத்தியும் கட்டுரைகளை எழுதிவந்தார். பெரியாரின் போக்கை எதிர்த்த ஜீவா போன்றோரும் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினர். கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் கருவாகி உருவாகும் நேரத்தில் குறைப் பிரசவக் குழந்தையாய் சுயமரியாதை-சமதர்ம இயக்கம் முடிந்து போனது.


மார்க்சியமும், பெரியாரியமும் இனைந்து செயல்படத் துவங்கி சுயமரியாதை-சமதர்ம இயக்கமாக மலர்ந்து வெற்றிகளைக் குவித்து, எதிரிகளை அஞ்சி நடுநடுங்கச் செய்த அந்த அற்புதமான வரலாறு 3 ஆண்டுகளுக்குள் (1933-36) முடிந்து போனது. பெரியாரியமும்,மார்க்சியமும் தொடர்ந்து இனைந்து இருந்தால், மண்ணுக்கேத்த மகத்தான் அந்த இயக்கம் தொடர்ந்து நீடித்து இருந்தால், அப்போது உருவாகி வந்த எஃகு போன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த இயக்கத்தோடு இனைந்து செயல்பட்டு இருந்தால் ஒரு வேளை தமிழகத்தின் வரலாறே பிரம்மிக்கத்தக்க அளவில் மாறிப்போய் இருக்கும்.

அன்று மக்கள் விருப்பத்தை, மாற்றத்தை கணிக்கத்தவறியதன் விளைவு தான் இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளை பின்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றது. நாட்டில் மதவாதம் பல தரப்பிலும் தலை தூக்கும் இன்றைய நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு சாரார் மட்டுமே மேலும் மேலும் பயனடையும் இன்றைய சூழ்நிலையில், கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் என்று பெரும்பான்மையான மக்கள் இன்றும் நல்லெண்னம் கொண்ட இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் நாளுக்கு நாள் தேய்ந்தே போகும் காரணம் என்ன என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமதர்மம் என்ற பெயரில் மேலே இருப்பவனை கீழே இழுக்க நினைத்தது கம்யூனிஸ்டு இயக்கம். ஆனால் சமதர்மம் என்ற பெயரில் கீழே இருப்பவனை மேலே இருப்பவனோடு சமமாக அமர வைத்தது திராவிட இயக்கம். இன்றும் கூலி உயர்வு மட்டுமே கேட்டுக் கொண்டு இருக்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்க்கும் வாரியம் அமைத்து குறைந்தபட்சக் கூலியை சட்டமாக்கி வைத்தது திராவிட இயக்கம். இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கான தேவை இன்னமும் மிச்சம் இருக்கின்றது.... என்ன செயவதென்று யோசியுங்கள் தோழர்களே!

(முற்றும்)

Read More......

Wednesday, September 24, 2008

புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும்

· 31 comments

ண்பர்களே! ச்சும்மா ட்டமாஷ் - 50 வரிசையில் பதிவர் புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரையை வெளியிடுகிறேன்.


"திராவிடம் ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த எழுச்சி!

கம்யூனிசம் ஒரு வர்கத்தின் அறிவார்ந்த கிளர்ச்சி!"

திராவிடமும் கம்யூனிசமும் என்று எழுதத் துவங்கினால் பதிவல்ல,ஒரு புத்தகமே போடலாம். ஆனால் நான் எழுதப்போவது ஒரு பெரிய சைஸ் பின்னூட்டம் தான்.மோகன் கந்தசாமி சொன்னதுபோல ஆராய்ச்சியெல்லாம் கிடையாது. அதுனால தைரியமா மேல படிங்க.

திராவிட இயக்கத்தின் நோக்கங்களுக்கும்,கம்யூனிச இயக்கத்தின் நோக்கங்களுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் இருப்பது இல்லை. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான இயக்கமாகத்தான் இரண்டும் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே தங்கள் இயக்கங்களையும் நடத்தின. ஒரே மக்களிடம் கிட்டத்தட்ட ஒத்த கருத்தோடு தங்கள் பணியைச் செய்த இரு இயக்கங்களில் ஒரு இயக்கமான கம்யுனிசத்துக்கு பின்னடைவு.ஆனால் திராவிட இயக்கத்திற்கு இன்றும் போட்டியே இல்லாத நிலை.

கம்யூனிச இயக்கம் தமிழகத்தில் தங்கள் மக்கள் பணியைத் துவங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திமுக துவங்கப்பட்டது.ஆனால் அடுத்த பதினெட்டாண்டுகளில் மக்கள் மனதிலும் ஆட்சியிலும் முதற்பெரும் சக்தியாகி அரியணையில் அமர்ந்தது. ஆனால் தமிழகத்தின் இரண்டாம் பெரும் சத்தியாக இருந்த கம்யூனிச இயக்கம் இன்று எத்தனையாவது சக்தி?

தங்களை எப்போதும் சுத்த சுயம்புக்களாக நினைத்துக் கொள்வதால் எந்த இடத்தில்,எந்த நிலையில் இருந்தோம், இப்போது இருக்கின்றோம் என்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் உணர்வதே இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தின் மேல் ஈடுபாடும் ஆதரவும் உடைய பலருக்கும் நம்மைப் போலவே போராட்ட குணமும்,சிந்தனையும் உடைய கம்யூனிச இயக்கம் ஏன் பெரிய அள்வில் வளராமலேயே போனது என்ற எண்னம் எப்போதும் உண்டு.நாடு சுதந்திரம் அடையவிருந்த காலகட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! இன்றைக்கும் காவல்துறையினர் கைவைக்க சற்றே அஞ்சும் அளவிற்கு தீரமுடை ஒரு இயக்கம்! வறுமையையும் கம்பீரத்தோடு எதிர்கொள்ளும் தலைவர்களைக் கொண்டிருந்த ஒரு இயக்கம்! வீட்டைவிட நாடே பெரியது, அனைத்தையும்விட இயக்கமே பெரிது என்ற எண்ணம் உடையவர்களை மட்டுமே தொண்டர்களாய்க் கொண்ட ஒரு இயக்கம்! சாமானியன் ஒருவன் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும் அவன் சார்பாய் ஒலிக்கும் முதல் குரலை தன் குரலாய் கொண்ட ஒரு இயக்கம் திராவிட இயக்கத்தைவிட எங்கு பின்னடைந்தது என்பதை அறிய சில தத்துவங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உலகின் எந்தப் பிரச்சனையின் மூலமும் இரண்டு தத்துவங்களுக்குள் அடங்கிவிடும். ஒன்று கருத்து முதல்வாதம், மற்றொன்று பொருள்முதல்வாதம்.( அண்ணே! எங்க ஓடுறீங்க? சும்மா பயப்படாம நில்லுங்க. நானே ஒரு மொக்கச்சாமி. ஆளு மிரண்டு போற அளவுக்கெல்லாம் எழுதவும் வராது,தெரியவும் தெரியாது. முடிஞ்ச அளவு எளிமையாவே விளக்கிடுறேன்)

கருத்து முதல் வாதம்னா வேற ஒன்னும் இல்ல, கருத்துங்கிற வார்த்தைக்கு பதிலா கடவுள்ங்கிற வார்த்தையைப் போட்டுப்பாருங்க.கடவுள் முதல்வாதம்னு ஆகுதா? அவ்வளவுதான் மேட்டரு.அவனின்றி ஓர் அணுவும் அசையாதுன்னு நம்ப பக்தி இலக்கியமெல்லாம் சொல்லுதுல்ல.அதுதான். அதாவது உலகத்துல எந்தப் பிரச்சனை நடந்தாலும், பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய எதிர்த்த வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போனாக்கூட அதுகெல்லாம் காரணம் கடவுள்தான்.ஒருத்தன் ஏழையா இருந்தா அதுக்கு காரணம் ஆண்டவன் அவனுக்கு போட்ட விதி. பணக்காரணா இருந்தா ஆண்டவன் அவனுக்கு போட்ட நல்ல விதி. உழைப்பு,அறிவு,திறமை இந்த மண்ணாங்கட்டியெல்லாம் காரணம் இல்ல. அரைகுறையா விளங்குனமாதிரி இருந்துச்சா? இதுதான் கருத்துமுதல் வாதம்.


பொருள்முதல் வாதம்னா என்ன? பேரே சொல்லுதா என்னான்னு!. அதேதான். எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது பொருளே. பொருட்களின்(பணத்தின்) பங்கீட்டில் எழும் சிக்கலே அனைத்து சிக்கலுக்கும் ஆதார சிக்கலாய் உள்ளது என்று சொல்வது பொருள்முதல் வாதம். அதாவது காசேதான் கடவுளடா! அது கடவுளுக்கே தெரியுமடாங்கற கதைதான்.

சரி! இந்த ரெண்டு தத்துவத்துக்கும் தமிழ்நாட்ல கம்யுனிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் வளராமல் போனதுக்கும் என்ன சம்மந்தங்குறீகளா? இருக்கே மேட்டரு! நம்ப காரல் மார்க்ஸ் அண்ணன்( நம்பள பத்திதான் தெரியுமே உங்களுக்கு! நமக்கு எல்லோரும் அண்ணந்தான்) அவர் ஊர்ல உள்ள நடப்ப ஒட்டி சில விஷயங்கள சொன்னாரு.அதை இங்கே உள்ள கம்யூனிஸ்டுகள் நம்ம மண்ணோட தன்மைக்கேறப அணுகவில்லை. மார்கஸ் அண்ணே ஊருல சாதி பேதம் கிடையாது. அங்க ஆண்டான் அடிமை முறை மட்டும்தான். அந்த அடிமையும் தன் உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி கொஞ்சம் காசோ நிலமோ பார்த்துவிட்டால் அடுத்த நொடியே அவனும் ஆண்டான் ஆகிவிடுவான். ஏற்கனவே உள்ள பழைய ஆண்டானும் நம்ப புது ஆண்டானும் இமிடியேட்டா சம்மந்தி ஆயிரலாம்.


ஆனா இங்க பிரச்சனையே வேற! மேல்சாதி,கீழ்சாதி வித்யாசம். நிலமும் காசும் ஆதிக்க சாதிகளிடத்தில். உழைப்பும்,வறுமையும் அடக்கப்பட்ட சாதிகளிடத்தில். இங்க வறுமைங்கிறது சாதியோட சம்மந்தப்பட்டதா இருந்தது.ஒரு சூத்திரன் தனது உழைப்பாலோ அல்லது கடவுள் அருளாலோ முன்னேறி விட்டால் அவன் மேல்சாதி அந்தஸ்தைப் பெறுவானா என்றால் பதில் எப்போதும் கிடையாது என்பதுதான். எளிய நிலையில் உள்ள ஒரு பிராமணர் லட்சாதிபதியான ஒரு சூத்திரரை விட எப்பொழுதும் அந்தஸ்தில் உயர்ந்தவர்.

அடிமை சாதிகளான பிற்பட்ட தாழ்தப்பட்ட சாதிகள் எந்தக்காலத்திலும் பொருளின் பெயரால் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளமுடியாது. அந்தஸ்தும், கவுரவமும் பிறப்பின் பெயரால் சாதியின் பெயரால் வருபவை. இந்த வித்யாசத்தை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட தவறி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதைத்தான் கையில் எடுத்தது திராவிட இயக்கம்.

கம்யூனிச இயக்கம் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தபோது ஆந்திராவில் இருந்து இங்கு வந்து இயக்கப்பணி செய்த சீனிவாசராவ் போன்ற தோழர்கள் தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களிடையே கூலி உயர்வு பற்றிய சிந்தனையை எழுப்பினர். பின்னர் இவை மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவி தொழிலாளர்கள் இடையே கம்யூனிச இயக்கத்திற்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.

இந்நிலையில் 1925 ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவக்கி கெளரவம் என்பது காசில் பொதுவுடமையாக இருப்பது மட்டும் அல்ல சமூக சமதர்மத்திலும்தான் என்று சுயமரியாதைப் பிரசாரம் செய்யத் துவங்கினார். மனித மனம் இயல்பாகவே விரும்பும் சுயமரியாதையை, ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்து இழந்து போன சுயகவுரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழ் சமுதாயம் வர்க்க பேதமின்றி திராவிட இயக்கத்தின் பின் பெரியார் தலைமையில் மெல்ல மெல்ல அணி வகுக்கத் துவங்கியது.


அப்பொழுதுகூட இந்த மனமாற்றத்தை கம்யூனிஸ்டுகள் உணரவில்லை. அது எப்படி என்பதற்கு ஒரு பெரிய வரலாற்று உதாரணமும் இருக்கு. ஒரு கட்டத்தில் பொதுவுடமை இயக்கமும்,சுயமரியாதை இயக்கமும் கை கோர்த்தன. ஆனால் கம்யூனுஸ்டுகளின் அவசர முடிவால் குறுகிய காலத்திலேயே அக்கைகள் பிரிந்து போயின.

இந்த இடத்தில கம்யூனுஸ்டுகளின் ஆரம்ப நிலையை மிகச் சுருக்கமா பார்த்துவிடுவோம். காங்கிரஸ் கட்சியின் மாநாடு பீகாரில் உள்ல கயாவில் 1922 ம் ஆண்டு நடந்தது. அதில் பங்குபெற்ற "சிந்தனைச் சிற்பி" சிங்காரவேலர் தனது இடி முழக்கத்தால் அனைவரையும் கிடுகிடுக்க வைத்தார். அனைவரும் மகாகணம் பொருந்திய என்று பேச்சைத் துவங்கிய போது கிங்காரவேலர் " தோழர்களே" என தன் பேச்சை ஆரமித்தார். " உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இங்கு வந்துள்ளேன்" என மகா துணிச்சலுடன் அறிவித்தார். இதில என்ன துணிச்சல் வேண்டி இருக்குன்னு நினைக்கிறீர்களா? அன்றைய பிரிட்டீஷ் அரசில் யாராவது கம்யூனிஸ்ட்டுன்னு தெரிஞ்சா அவன் வாழ்க்கை அத்தோட தரிசு. இந்தியாவிலேயே நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாகவும் தைரியமாகவும் அறிவித்த முதல் இந்தியர் சிங்காரவேலர்தான்.


இந்தியாவிலேயே உலகத் தொழிலாலர்களின் ஒற்றுமை தினமான "மே தினத்தை" முதன் முதலில் கொண்டாடிய சிரப்பைப் பெற்றவர் சிங்காரவேலர். கொண்டாடிய சிறப்பைப் பெற்ற நகரம் நம்ப சென்னை நகரம். கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் விடத்துவங்கியதை அறிந்த வெள்ளையர் அரசு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது சொல்லில் வடிக்க இயலாத அடக்குமுறையை ஏவத்துவங்கியது.

1928 -ம் ஆண்டில் நடைபெற்ற புகழ்பெற்ற இரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டு சிங்காரவேலர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு கடும்காவல் தண்டணை பெற்றார். பின் மேல் முறையீட்டில் 2 ஆண்டு ஆக்கப்பட்டு 1930 ல் விடுதலை ஆனார். இதற்கிடையே 1925 ல் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கம் மக்களிடையே முழுமையாக சென்று அடைந்திருந்த நேரம். ஒருபுறம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!மறுபுறம் சமதர்மச் சுடரொளி சிங்காரவேலர்! இரண்டு சரித்திரங்களும் இணைந்தன! பிறந்தது சுயமரியாதை-சமதர்ம இயக்கம்.

(தொடரும்)


பகுதி - 2

Read More......

Wednesday, September 10, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50: ஜ்யோவ்ராம் சுந்தர் கவிதைகள்

· 11 comments


னது வலைப்பூவில் கவிதைகள் எழுதி பெருமை சேர்த்த எழுத்தாளர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு நன்றி. அவருடனான மின் அரட்டை என்னை பரவசப்படுத்தி உள்ளது. எனது எழுபத்தைந்தாவது பதிவிற்காக நேர்முகம் அளிக்க ஒப்புக்கொண்டமைக்கு மீண்டும் ஒரு நன்றி.
இருள் சூழ்ந்த புதர்லையில் பாதி வழுக்கையும்

தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த

அவன் பெயர் பார்திபனாம்.

அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்

எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்

பன்னிரெண்டாவது வரை

ஒன்றாகப் படித்தோமாம்

என் ஞாபக அடுக்குகளில்

மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்

பள்ளி - மதிய உணவு

ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி

பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை

இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்,

இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்

வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது

பேருந்தில் செல்லும் ராதிகாவை

சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது

பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்

மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி

அவசரமாய் ரயிலேறிப் போனான்

இரவில் மனைவியிடம் தன் பால்யகால

நண்பனைச் சந்தித்ததை

அவன் விவரித்து மகிழக்கூடும்

என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை

என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்


-ஜ்யோவ்ராம் சுந்தர்ரொம்ப அழகு


சீறிப் பாயும் மழை அழகு

கழுவி விடப்பட்ட சாலை அழகு

இருளாய் இருக்கும் வானழகு

வெளிச்சங்களைச் சிதறும்

சோடியம் விளக்குகள் அழகு

விளம்பரப் பலகைகளின்

நீல மஞ்சள் பச்சை

பிம்ப பிரதிபலிப்புகள் அழகு

எதிர்ச் சாரியில் விரையும்

ரெயின் கோட் கணவன் அழகு

இடுப்பை அணைத்து

முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு

சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்

கறுப்பு யமாஹா அழகு

ரத்தத்தை உறைய விடாமல்

அடித்துச் செல்லும் நீரழகு

கவிழ்ந்து விழுந்திருப்பவனின்

சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு

வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்

வாகனங்களின் டயர் ஒலி அழகு

அழகு அழகு அழகு


-ஜ்யோவ்ராம் சுந்தர்அடுத்து, புதுகை அப்துல்லா எழுதும் கட்டுரை இடம் பெறவுள்ளது.

Read More......

Saturday, September 6, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50: லொடுக்கு சுந்தரிகள் - ஒரு பார்வை, வெட்டி ஆபிசர்.

· 211 comments

லையுலக தோழர் தோழிகளே, பதிவர் திருமதி ராப் எழுதும் இப்பதிவு ஒரு முழுமையான கும்மிப்பதிவு. பதிவின் பின்னூட்டங்களுக்கு பதிவாசிரியர் பதிலளிப்பார். இப்பதிவைத்தொடர்ந்து எழுத்தாளர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் எழுதிய இரு கவிதைகளை வெளியிடவுள்ளேன். அடுத்து புதுகை அப்துல்லாவின் ஆராய்ச்சி கட்டுரை வரவிருக்கின்றது. வழக்கம் போல் ச்சும்மா ட்டமாஷ் வலைப்பூவிற்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

லொடுக்கு சுந்தரிகள்! நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட இவர்களைப் பற்றிய ஒரு சரியான ஆராய்ச்சிக் கட்டுரை இதுவரை வந்ததுண்டா எனத்தெரியவில்லை, இந்தப் பதிவு அதற்கான ஒரு சிறிய முயற்சிதான்.

லொடுக்கு சுந்தரிகள் என்பவர்கள் யார்? அல்லக்கைகளின் பெண்பால் தான் லொடுக்கு சுந்தரிகள் எனப் பலர் தவறாக எண்ணியுள்ளனர். உண்மை அதுவா என்றால், இல்லை. அல்லக்கைகள் பெரும்பான்மையாக காதல் பட விருச்சிககாந்த் போல இருப்பார்கள், மீதி கொஞ்சமே கொஞ்சம் அல்லக்கைகள்தான் சுப்பிரமணியபுரம் கஞ்சாகருப்பு போல வாழ்வியல் ரசனையோடு இருப்பார்கள். அது மட்டுமன்றி இவர்கள் எல்லா இடங்களிலும் பராக்குப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரி, வேலைப் பார்க்குமிடம், சில மணித்துளிகள் பயணம் செய்யும் பொதுப் போக்குவரத்து ஊர்திகளான பஸ், இரயில், ஐந்து பத்து நிமிடங்களே லிப்ட் கேட்டு பயணிக்கும் இரண்டு சக்கர வாகனம், அவ்வளவு ஏன் தங்களுடய அடையாளங்களை காமிக்கும் அவசியமில்லாத இந்த வலையுலகு என நீக்கமற அனைத்து இடங்களிலும் அல்லக்கைகளாக இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள். அல்லக்கைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் அல்லக்கைகளாக இருப்பதிலேயே பிறவிப்பயனை அடைகிறார்கள்.


ஆனால் லொடுக்கு சுந்தரிகளின் வாழ்க்கையோ இது எல்லாவற்றையும் தாண்டி புனிதமானது. இவர்களை நீங்கள் அதிகமாக பார்க்கும் காலகட்டம் அவர்களின் பனிரெண்டு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான். வெகு சிலரே இதில் விதிவிலக்கானவர்களாகும். இவர்களுடைய பொற்காலம் என்பது கல்லூரிக்காலம் எனலாம். லொடுக்கு சுந்தரிகள் எத்துனை நாட்களானாலும் தனியாக இயங்கும் ஆற்றல் படைத்தவர்கள், இருந்தும் அவர்கள் ஏன் லொடுக்கு சுந்தரி அவதாரமெடுத்தார்கள் என்ற உங்களின் ஐயம் புரிகிறது, அதற்குரிய பதில் என்னவென்றால், அவர்கள் சுயம்பு கிடையாது. அவர்களை உருவாக்கியது இந்த சமுதாயம்தான்.

இதைப் பற்றி ஒரு லொடுக்கு சுந்தரியிடம் விவாதிக்கும்போது அவர் ஆத்திரத்தோடு கூறிய வார்த்தைகள் என்னவென்றால், "ரோசரியில் +2 படிச்ச ஒரே காரணத்துக்காக பிஎஸ்பிபி கல்லூரியில் படிச்ச என்னை மாமின்னு கூப்பிடறதை மாத்திக்கச்சொல் நான் மாத்திக்கறேன், ஊர் உலகத்தில் கிடைக்கற டிசைனர் டிரஸ்ஸையும் ஆக்சசரீசையும் பொறுக்கிப் போட்டுக்கிட்டு வந்தாலும், ஒரே இத்துப்போன காட்டன் சல்வாரையும், சாக்குப்பயையும் மாட்டிக்கிட்டு வந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா டிரெண்டை மாத்திக்கிட்டிருக்காங்களே அவங்களை மாத்திக்கச்சொல், நான் மாத்திக்கறேன், இதெல்லாத்துக்கும் மேலா வருஷக்கணக்கா பிராக்கெட் போட்டு, நண்பா நண்பான்னு உருகி, அவனோட இத்துப்போன அறுவ டைமிங் சென்ஸை பொறுத்துக்கிட்டு, தண்ணியடிக்க, பெட்ரோல் போடன்னு காசையும் வாராவாரம் தண்டம் அழுதுன்னு நாங்க என்னென்னமோ செஞ்சாலும், எங்கள விட்டே வேறொருத்திக்கு(பொதுவாக தல)காதல் தூது போகச் சொல்றாங்களே சில பாடிசூடா பசங்க, அவங்களை மாத்திக்கச்சொல்லு நான் மாத்திக்கறேன்". இவர்களின் வலி உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கறேன்.

இவர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டே இன்றைய சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் பிழைத்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனினும் நிஜ வாழ்வில் இவர்கள் சத்தம்போட்டோ, வாய்விட்டோ சபதமெடுத்து காமடி செய்வதில்லை, இவர்களின் பாணி சைலண்டாக சூனியம் வைப்பதாகும். இந்த சைலண்டாக சூனியம் வைக்கும் கலை ஒரு உன்னத கலையாகும். இதனை, கொச்சைத்தமிழில் 'கூட இருந்தே குழிப்பறிப்பது' எனவும் கூறலாம்.

இவர்களின் தல உருவாக மிக மிக அல்ப காரணி போதும். எப்படியென்றால், கொஞ்சம் பார்க்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் தான்தோன்றித்தனமான கேரக்டர், உலகத்தில் தன்னை விட புத்திசாலி யாரும் இல்லை என்ற மிதப்பில் இருக்கும் தன்மை, விதண்டாவாதம் மற்றும் எதிர்கருத்துடயவர்களை பரமவைரியாகக் கருதும் குணம் என்ற சில குவாலிபிகேஷன் உள்ள சிலரை முதலில் லொடுக்கு சுந்தரிகள் தேர்வு செய்வார்கள். பின்பு 'தல'யாக அவரை ஏற்றுக்கொள்ளலாமா என கள ஆய்வு மேற்கொள்ளுவர். பொதுவாக இதில் வெற்றியே கிட்டும் எனலாம். பின்னர் லொடுக்கு சுந்தரிகளின் தொண்டினை அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது. 'டெடிகேஷன்' என்ற சொல்லுக்கு இவர்களின் தொண்டு ஒரு வாழ்வியல் உதாரணமாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் அல்லக்கைகளுக்கு அரசியல் உலகில் சிறந்த உதாரணம் என்றால் திரு. ஆற்காடு வீராசாமியும்(லொடுக்கு சுந்தரிகளுக்கே சவால் விடும் ரசனயானக் கலைஞர்), லொடுக்கு சுந்தரிகளுக்கு சிறந்த உதாரணம் திருமதி. சசிகலா(விதிவிலக்காக இருப்பினும், மிக மிகச் சிறப்பாக செயல்படுபவர்) அவர்களுமாகும். இவர்களிருவரும் எப்படி தங்கள் 'தல'யை விட அதிக அதிகாரம் பெற்று, அவர்களையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்களோ, அதுப்போலவே, இளம் அல்லக்கைகள் சிலரும், இளம் லொடுக்கு சுந்தரிகள் பலரும் அவரவர்களுடைய 'தல'யின் காதல் வாழ்க்கையை டீல் செய்கிறார்கள். இதனை ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால், சாமி வரங்கொடுத்தாலும் பூசாரியான இவர்களின் ஒத்துழைப்பில்லாமல் ஒன்றும் நடக்காது.

சரி இந்தத் 'தல'கள் திடீரென்று போதி மரத்தின் கீழ் உட்காரும் விபத்து ஏற்படுமானால் லொடுக்கு சுந்தரிகள் மற்றும் அல்லக்கைகளின் கதி என்னவாகும் என்ற கேள்வியும் ஐயப்பாடும் நியாயமானதே. இதை சிந்திக்கும் காலக்கட்டத்திற்கு அவர்களும் தங்களை தயார்படுத்திக்கொண்டுள்ளனர் எனக் கூறலாம். இதனை சிரமமில்லாமல் விளக்கவேண்டுமென்றால், ஒரு சிறு உதாரணம், ஜெயலலிதா அவர்கள்தான் மாயாவதியின் தயவில் லொடுக்கு சுந்தரியாக வாழ விரும்ப மாட்டார், முடியவும் முடியாது(ஒரு உரையில் இரு கத்திகள் உறங்குவது போல) , ஆனால் சசிகலா அவர்கள் இராசாத்தி அம்மாவிற்கோ, கனிமொழிக்கோ ஒரு லொடுக்கு சுந்தரியாக வாழ்வாங்கு வாழ இயலும். இருப்பவர்க்கு ஒரு வீடு, இல்லாதவர்க்கு பல வீடு!

சரி சினிமாவிலாவது இவர்களின் வாழ்க்கையை சரியாக கூறியுள்ளார்களா என்றால், இல்லை. எப்பொழுதுப் பார்த்தாலும் கதாநாயகனும் நாயகியும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள் போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி, லொடுக்கு சுந்தரிகளின் சமுதாயத்தை புறக்கணிக்கின்றனர் அல்லது இழுவுப்படுத்துகின்றனர் எனலாம். அவர்களின் இந்தக் குமுறல் திரைத்துறையினருக்கு இனியாவது போய் சேர்ந்து, இவர்களின் வரலாற்றை முழுமையாக பதிய முயற்சி எடுக்க வேண்டும் என இந்த ஆய்வுக் கட்டுரையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக ஒரு டிஸ்கி: நீங்கள் கேட்கலாம், உனக்கேன் இந்த அக்கறை ஊரில் எந்த 'தலைக்கும்', 'லொடுக்கு சுந்தரிக்கும்' இல்லாத அக்கறை என்று, உங்களுக்கெல்லாம் என பதில், "நானே பாதிக்கப்பட்டேன், நேரிடையாக பாதிக்கப்பட்டேன், இந்த தலைகளின் அட்டகாசத்திலிருந்தும், லொடுக்கு சுந்தரிகளின் ஆப்பிலிருந்தும் தப்பித்து ஓடினேன் ஓடினேன் கல்யாணம் ஆகும்வரை ஓடிக்கொண்டே இருந்தேன், இதன் காரணமாக தலயாக சிலக்காலமும், லொடுக்கு சுந்தரியாக சிலக் காலமும் அந்நியனாக மாறி மாறி நடிக்கும் கொடுமைக்குத் தள்ளப்பட்டதால், அவர்களின் வலி எனக்கு முழுமையாகத் தெரியும். அதிலிருந்து சிறு பகுதியையே இதில் பதிந்துள்ளேன்".

Read More......

Wednesday, September 3, 2008

ச்சும்மா ட்டமாஷ்-50:லக்கிலுக் எழுதும் அரசியல் கட்டுரை.

· 19 comments

ண்பர்களே, லக்கி லுக் அவர்கள் எழுதிய இந்த அரசியல் கட்டுரையை எனது வலைப்பூவில் ஐம்பது பதிவுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெளியிடுகிறேன். பதிவர் திருமதி ராப் எழுதும் 'லொடுக்கு சுந்தரிகள்: ஒரு பார்வை' என்ற கும்மிப் பதிவும், புதுகை அப்துல்லா எழுதும் ஆராய்ச்சி கட்டுரையும் தொடரவிருக்கின்றன.

தளபதி - காலத்தின் கையில்!!

து 1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை.

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் நடப்பு ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்! எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர். தளபதி மு.க. ஸ்டாலின்!!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன் தளபதி மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் தளபதியும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் தளபதியின் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் தளபதி துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமேயென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, தளபதி மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் தளபதியும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம். சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் தளபதி ஆனார். திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக தளபதி ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

தளபதியோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரது வெள்ளைமனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் தளபதி குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற தளபதியும் துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

தளபதியோடு தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமாவை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. குறிஞ்சிமலர் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தளபதியோடு, பாத்திமா இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. குறிஞ்சிமலரில் பாத்திமா நடித்துக் கொண்டிருந்ததால் செய்திகளில் தலைகாட்டவில்லை. உடனே ஸ்டாலின் பாத்திமாவை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று தளபதி சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

தளபதிக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. தளபதியின் தந்தை கலைஞர் தனது 85வது வயதிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக தளபதி இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான்.

வாழைமரத்துக்கு கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் தளபதி இன்னேரம் இன்னொரு மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக கட்சியில் இன்னமும் பத்தோடு பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பது கண்கூடு.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் தளபதிக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இப்போது 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்போம் என்று தளபதி கேட்டுப் பெற முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே தயாநிதி முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போல தந்திரங்கள் மென்மையான குணம் கொண்ட தளபதிக்கு கைவரவில்லை.

1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் தளபதி மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது தளபதியின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி தளபதி ஸ்டாலின் தான். தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த தளபதி, பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார். எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் தளபதியிடம் இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு தளபதிக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் தளபதி இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

தளபதி இவ்வளவு பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

தளபதியையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து தளபதி அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் தளபதியும் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய தளபதி போல அரசியல் பூனையாக பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தளபதி ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்கும் என்று நம்புவோம்.தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

Read More......

Monday, September 1, 2008

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, இறுதி பாகம்

· 46 comments

பதிவர் கோவி கண்ணன்

கோவி கண்ணன் அவர்களின் பேட்டியின் முதல் மற்றும் இரண்டாவது பாகங்களைத் தொடர்ந்து இறுதி பாகத்தை இப்போது வெளியிடுறேன்.

பெண்கள் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துள்ளோர், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைபாடுவோர் போன்றோரின் உண்மை முகம் போலிடோண்டுவின் இரண்டாம் முகத்தில் இருந்து ஏதாகிலும் வேறானதா?

துபற்றி அண்மையில் ஒரு விவாதம் ஓடியது, பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவதால் பெண்களின் குரல்களுக்கு பின்னனி கொடுக்கும் அளவுக்குக் கூட அவர்களின் எழுத்தின் தன்மை இல்லை என்றும் சொல்லப்பட்டது. பெண்களின் சிந்தனையும் அவர்களின் உணர்வுகளும் வேறானது. ஒரு பெண் அவளுக்கான உரியமையுடைய பெயரில் ஆண்கள் எழுதுவதென்பதை ஆணின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தவிர்த்து வேறு பெண்கள் பெருமையானதாக கருதவில்லை என்றே சொல்கிறார்கள். பெண் பெயரில் எழுதுபவர்களில் பெண்ணுக்காக எழுதுபவகளின் விழுக்காடு மிக மிக குறைவே. அதிலும் பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டு வசைபாடுதல், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைப்படுபதல் என்பது தன்னை மறைத்துக் கொண்டு வசைபாடும் போலி டோண்டு வகையராக்களின் செயலை ஒத்தது தான். ஒரே பெரிய வேறுபாடு போலி டோண்டுவின் வலைப்பதிவு வசையின் தொகுப்பாக இருந்தது. இவர்கள் அந்த அளவுக்கு அதற்காக நேரம் ஒதுக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம். அப்படியும் முயன்றிருக்கிறார்கள் அதற்கு நல்லொதொரு உதாரணம் சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாமியர்களைத் திட்டி எழுதப்பட்ட பதிவு. மேலும் ஒரு பெண் பதிவரின் பெயரில் போலிப் பதிவு ஆரம்பிக்கப்பட்டதும் அதை எழுதியவர் யார் என்று வெளியே தெரிந்ததும் பதிவர்கள் அறிந்ததே.

ன்னரை ஆண்டுகளுக்கு முன்பு, போலிடோண்டுவை ஒத்தோ முரண்பட்டோ தங்கள் போலிப்பதிவுகள் மூலம் பல பெண் பதிவர்களை வெளியேற்றி, வலையெங்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதுதான் வலைக்கலகம் செய்தோரின் வெற்றி. இப்போது, தமிழ்மணத்தை நிர்மூலமாக்கும் ஒற்றை குறிக்கோளுடன் இயங்கும் சிலரின் போலிப்பதிவுகளும் அதை ஒத்தே இருக்கின்றன. அவ்வகையில், தமிழ்சூழலில் திடீரென கிடைத்த இந்த எழுத்து சுதந்தரத்தின் மீது இரண்டாம் முறை சம்மட்டி விழும் என நினைக்கிறீர்களா?

போலி டோண்டுவை ஒழிக்கிறேன் என்ற பேரி்ல் மற்ற பதிவர்களின் மீது சிலர் ஆயுதம் வீசினார்கள், அதில் குறிப்பிடக்கூடிய சொல்லாடல் 'க்ராஸ் பயர்' என்பது. இந்த தாக்குதலின் இலக்கு என் மீதும் விழுந்திருக்கிறது. இந்த தாக்குதலை என்மீது தொடுத்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே மதித்து எதிர்வினை ஆற்றினேன். ஏனென்றால் அவர் என்னுடன் மணிக்கணக்காக பேசி இருக்கிறார். மற்ற இருவரில் ஒருவர் அந்த வார வீக் எண்ட் ஜொள்ளுக்கு கவர்ச்சி படம் கிடைக்காத கடுப்பில் என் மீது எரிந்துவிழுந்து, அதனை அவரது அரங்கில் 'A' படம் ஓட்டுவதற்கான விளம்பர போஸ்டராகவே பயன்படுத்தினார். நோக்கம் தெரிந்த பிறகு அதற்கு எதிர்வினை ஆற்றி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மற்றோருவர் அவர் தான் பழகியதே துப்பறியத்தான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு என்னைப் பற்றி 100 விழுக்காடு பொய்யான தகவலை பதிவில் எழுதினார். அவரே என்னுடன் பழகியது ஒருபோலியான, திட்டமிட்ட ஒன்று என்பதை அறிவித்துவிட்ட பிறகு, உணர்ச்சிவசப்பட்டு, அவரை மதித்து எதிர்வினையாற்றும் அளவுக்கான தகுதி்யைக் கூட நான் அவருக்கு கொடுக்க விரும்பவில்லை.

இதுபோன்றே பலருக்கும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தே வருகிறது. அண்மையில் நண்பர் டிபிசிடி சென்னை சென்றிருந்த போது, எனக்கு நெருங்கியவர் என்ற காரணத்தால் 'அவரை சந்திக்கவேண்டாம், எச்சரிக்கை!' என்றெல்லாம் குறுந்தகவல் அனுப்பினார்கள். வசந்த ரவி என்ற பெயரில் எழுதிய பதிவர் 'போலி' என்று கிளப்பிவிட அவர் அந்த பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார். பதிவர் கவிதா மீது போலிஸ் வழக்கு பாயும் என்று மிரட்டப்பட்டார். அவர் அதற்கு பயப்படாவிட்டாலும் 'தாதா'க்கள் உலாவும் இடத்தில் தானும் இருக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

போலியின் செயல் இழிவானது, போலி பக்கத்திற்கு சென்று படிக்கும் போது அங்கே ஆபாச அரங்கேறியிருப்பது தெரியும். இங்கே தமிழ் திரட்டியில் பலரையும் தனிமனித தாக்குதல்களாக திட்டிக் கொண்டே பதிவுகள் வரும் போது அதனை படிப்பவர்களும் மிக அதிகமே. அடுத்தவரின் மனைவியின் பெயரில், குறிப்பாக, போலியாக செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டை கூறி மூர்த்தியின் மனைவி புகைப்படத்தைப் போட்டு திட்டி எழுதப்பட்ட பதிவுகளை திரட்டியிலேயே பார்த்திருக்கிறோம். பலர் அறியும்படி, நடவடிக்கை என்ற பெயரில் இதை செய்து வந்தனர் சிலர். திரட்டி நிர்வாகம் கூட இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்ததா என்று தெரியவில்லை. இடுகையை நீக்காமல் மெளனம் சாதித்தார்கள். பிரச்சனைக்குரியவர் மூர்த்திதான், மூர்த்தியின் மனைவி அல்ல. அவன் செய்தான் நான் செய்தேன்; இதே குற்றச் சாட்டுகளைத்தான் இருபக்கம் சொல்லிவருகிறார்கள்.

போலி விவாகரத்துக்குள், ஏன் திடீர் எதிர்ப்பு தோன்றியது? அதுபற்றி நன்கு தெரிந்தாலும் அதனுள் செல்ல எனக்கு விருப்பமுல்லை. போலி விவாகரம் முற்றுவதற்கு முன்பு, அடுத்த பிரிவினருக்கு ஆதரவுடன் செயல்படுவதாக மூர்த்தி மற்றும் மூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னோர் என இருப்புறத்தாரும் என்னை குற்றம்சாட்டினர். நான் நடிப்தாகவும் கிளப்பிவிட்டனர். பைசாவுக்கு பிரோயனம் இல்லாத இந்த குற்றச் சாட்டால் அவர்களது சந்தர்பவாதம் எத்தகைய மோசமானது என்று புரிந்துகொண்டேன். அவரவருக்கான ஞாயங்கள் என்ற பெயரில் எல்லோரும் தாக்குதல் தொடுத்தனர். என்னைப் பற்றிய தூற்றல்களை பதிவர்கள் புறம் தள்ளினார்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். தமிழ் பதிவுகளில் தங்கள் எழுத்திற்கு கிடைத்த மரியாதையை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டு, தங்களை வலையுலகின் காவலர்களாக நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாகவே கண்டபடிக்கு நடந்து கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களுக்கான அடையாளாமாக மாறி போலி டோண்டுவைப் போலவே பலரால் வெறுக்கப் படுவபவர்களாக அவர்களின் நிலையும் செல்லக்கூடும். இங்கே எவரையும் இதை எழுதாதே என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒருவரின் எழுத்துக்கு மாற்று கருத்து இருந்தால் நாகரீகமாக எதிர்வினை ஆற்றலாம். சில தாதாக்கள் வெளிப்படையாகவே 'நீ எழுதாதே மூடிக் கொண்டு போ' என்றெல்லாம் எழுதுவதைப் பார்த்து பதிவர்கள் முகம் சுழிப்பது குறைவு; ஆனால் பலரும் அதைப் பார்த்து சிரி.......க்கிறார்கள்.

தாதாக்கள் என்று தெரிந்தே இருந்தாலும் பதிவுலகில் யாரும் புறக்கணிக்கமாட்டார்கள். அவை மனநலமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. நாளைக்கே விடாது கருப்பு பதிவு தமிழ்மணம் அனுமதியுடன் இணைக்கப்பட்டால் நாலுபேர் அதைப் படித்து கருத்தும் சொல்வார்கள். அவர்களிடமெல்லாம் சென்று உனக்கு வரலாறு தெரியுமா / புவியியல் தெரியுமா என்றேல்லாம் கேட்கவோ அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பவோ முடியாது. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன்? பல தாதாக்கள் மீண்டும் பவிசாக எழுதும் போது பதிவர்கள் பழசை மறந்து அவர்களுக்கு பின்னூட்டம் போடவே செய்கிறார்கள்.

தாதாக்களின் அச்சுறுத்தல்களைப் பதிவர்கள் புறம் தள்ளுவார்கள்,அது நடந்தேறி வருகிறது. அண்மையில் என்னுடன் சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவரிடம் "கோவி மலேசிய பதிவரைப் பற்றிச் மறைக்காமல் சொன்னாரா?, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே" என்றெல்லாம் குழப்பி விட முயன்றார்கள். அதை அந்த பதிவர் புறம்தள்ளிவிட்டார். ஒருவரின் எழுத்துச் சுதந்திரம் சில சைக்கோக்களால் முடங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு பதிவுலகம் பலவீனமானதல்ல என்பதே என்கருத்து.

போலி செய்த அதே போலிப்பதிவு வேலையை இவர்களும் இவர்களுக்கான ஞாயங்களின் பேரில் செய்துவருவது நகைமுரண் தான். தமிழ்மணத்தை ஒழிக்கிறேன் என்று செயல்படுபவர்களின் செயலுக்கான காரணம் மிக வெளிப்படையானது என்பதை தமிழ்மண திரட்டி நிர்வாகமும் பதிவர்களும் அறிவார்கள். அதற்கான எதிர்வினையை தமிழ்மணமும், தமிழ்மணத்தால் வளர்ந்த பதிவர்கள் சிலரும் சரியாக செய்துவருகிறார்கள். அதுபற்றி கருத்துக் கூற ஒன்றும் இல்லை.

குசேலன் தோல்வியடைய குசேலன் தான் காரணமா?

ங்கேயும் குசேலன் பற்றிய கேள்வியா ? படத்தில் கதையில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளிப்படம் போன்றது தான் குசேலன், இதை தோல்வி என்றே சொல்ல முடியாது, ஏனெனில் இதுவரை 20 கோடி வசூல் செய்யப்பட்டு இருக்கிறதாம். படத்தயாரிப்பாளர்களின் இலக்கு, பேராசை 100 கோடி லாபம் ஈட்ட வேண்டுமென்பதே, அவ்வளவு பணம் ஈட்ட, தரம் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை. இந்த திரைப்படத்திற்கு ஆன செலவுகள் உச்ச நடிகரின் சம்பளத்தைத் தவிர்த்து 5 கோடி ஆகி இருந்தால் கூட இவர்கள் அதற்கு மேலும் 15 கோடி லாபம் பார்த்து இருக்கிறார்கள். பொதுவாக் சினிமாவில் 1 : 2 தான் லாப பார்முலா, அந்த வகையில் பார்த்தால் செலவுகளைவிட 3 பங்கு லாபம் ஈட்டி இருக்கிறது. 'தோல்வி' என்பதெல்லாம் எதிர்தரப்பும், பேராசைக்கார தயாரிப்பாளர்களின் புலம்பலே அன்றி வேறெதும் இல்லை. 5 கோடி செலவு செய்துவிட்டு 15 கோடி லாபம் பெற்ற பிறகு படத்தின் தோல்வி / வெற்றி என்ற விவாதமெல்லாம் அபத்தம் தானே. குசேலனுக்கு 20 கோடி வசூல் மிக மிக அதிகம். குசேலன் தயாரிப்பாளர்கள் திரை ரசிகர்களை ஏமாற்ற முயன்றதில் பாதி அளவுககு வெற்றிதான் பெற்றிருக்கிறார்கள்.

முழுக்க ஏமாறாமல் திரைரசிகர் சுதாரித்துக் கொண்டதைப் படத்தின் தோல்வி என்று சொல்ல முடியுமா?

விஜயகாந்த்தின் குறிக்கோள் என்னவாக இருக்கும்?கட்சி தொடங்கும் போது எம்ஜியாருக்கும் கொள்கையென்று ஏதும் இருக்கவில்லையா?

விஜய்காந்தின் அரசியலை ஒரு நல்ல அரசியலாக நான் எனது பதிவுகளில் எழுதியதே இல்லை. 'மதச்சார்பற்றது' என்று கூறிக்கொண்டு கட்சி ஆரம்பித்தவர் நாள் தேதி, நட்சத்திரம், எண்கணிதம் பார்த்து கட்சிப்பெயரை வைத்தார். அவ்வாறே கட்சியையும் தொடங்கியவர் என்பதால் தனது திறமை என்று மக்களை கவர என்ன சொல்லப் போகிறார் இவர் என்பதே பெரிய கேளவியாக எழுந்தது. கட்சி தொடங்கிய அன்று புதுமனைப் புகுவிழா போலவே நெற்றியில் திருநீற்றுடன் காணப்பட்டார். இதை மாற்று மதத்தினர் ரசிக்கவில்லை. ஹீரோவாகவே நடித்தவர் மார்கெட் இழந்தால் என்ன செய்வதென்ற கேள்விக் குறியில் எழுந்ததே வி.காந்ததின் அரசியல் பிரவேசம் என்கிறார்கள். வி.காந்தின் அலுவலகத்தில் வேலைசெய்வோர் அவர் சாதியைச் சேர்ந்தவர் என்ற குற்றச் சாட்டு இருக்கிறது, பாமக சாதிக்கட்சி என்று அறிவித்து வெளிப்படையாக செயல்படுவதைப் போல் இவர் செய்தால் விமர்சனம் வருவது குறையும். குடும்ப கட்சி என்று பிறர் கட்சிகளை குற்றம் சொல்லும் இவரின் கட்சியும் அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் படியே இயங்குகிறது என்றே சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்யும் போது இவருக்கான கொள்கைகள் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஈழத்தமிழ்ர்கள் பற்றி உருகுகிறார், இந்தியா இலங்கைக்கு ஆயுதம் விற்பதை எதிர்க்காமல் சப்பைப் கட்டுகிறார். எல்லாவற்றிலுமே இரட்டை நிலைப்பாடு. விஜயகாந்த் தன் கொள்கைகளால்(!) வளரும் வாய்ப்பு குறைவே, திராவிடக் கட்சிகள் தங்களின் போட்டி அரசியலால் பாமக வை வளர்த்தது போல் வளர்த்துவிட்டால் உண்டு.

திரை நாயகன் பற்றிய புரிதல்கள் எம்ஜிஆர் காலத்திற்கும் வி.காந்த் காலத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் ஏற்பட்ட வெறுப்பில் தங்களின் விருப்பம் (சந்தர்ப்பம் வேண்டி) நாடி சென்ற ரசிகர்கள் தான் வி.காந்த் கட்சியில் இருக்கும் தொண்டர்களில் குறிப்பிட்ட விழுக்காடு என்றே சொல்லப்படுகிறது. வி,காந்தின் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அளவுக்கு பற்று கொண்டவர்கள் அல்ல.

ங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?

ண்மையில் சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதிய போது 'நீங்களெல்லாம் இதை பெரியவிசயமாக எழுதுகிறீர்களே' என்று உயர்வைக் கற்பித்து ஒரு கேள்வியும் இட்டு இருந்தனர். மனிதர்கள் எல்லோருக்குமே கலை, இலக்கியம், இசை இதில் எதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்கும். பொருளீட்டல் தவிர்த்து அன்றாட வாழ்வில் பொழுது போக்கும் ஒரு அம்சம் தானே. அதில் முதன்மையாக வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டவை திரைபடங்கள். திரைததுறையில் பணி புரியும் பல்வேறு திறமையால் சாதனை புரிபவகளில் பலரை எனக்கு பிடிக்கும். பாடகர்கள் எஸ்பிபி, டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சின்ன குயில் சித்ரா, பி.சு்சீலா, நடிகர் / நடிகைகளில்
பத்மினி, நாகேஷ், சிவாஜி கனேசன், நாசர், ரகுவரன், கமலஹாசன் ஆச்சி மனோரமா, சில்க்ஸ்மிதா, நதியா, ரீமா சென், ஸ்ரீதேவி,வைகைபுயல், கவுண்டர், விவேக், 'படிக்காதவன்' வரை ரஜினிகாந்த் என பிடித்தவர்களின் பட்டியல் நீளும். ஏபிநாகரஜனின் வசனங்கள் பிடித்தவை, தில்லான மோகானாம்பாள், முதல்மரியாதை, சேது, அழகி, கமலின் கமர்சியல் கலந்த கலைப்படங்கள், இன்னும் நிறைய படங்கள்.. இங்கே எழுதி மாளாது. சுருக்கமாக சொல்வதென்றால் நல்ல படைப்புகள், படைப்பாளிகள் என பொதுவாக ரசிக்கப்படுவையே தான் எனது விருப்பங்களும்.

'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?

ட்டாமாஷ் என்ற பெயரில் வலைப் பதிவு இருந்தாலும், பதிவில் இடுகைகளில் பெரும்பாலானவை எல்லாம் சீரீயஸ் பட்டாசு வகையாகவே இருக்கிறது. ஒரு வரி எழுத்தினாலும் அதன் பொருளை நகைச்சுவை வடிவிலோ, அழுத்தம் கொடுத்தோ எழுதும் உங்கள் எழுத்துக்கள் அதிலுள்ள கருப்பொருளை பதியவைத்திருக்கிறது. நான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் போது கண்ணில் பட்ட இடுகை பெங்களூரை சீரழித்துவரும் வடநாட்டவர் பற்றியது.

"இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ."

அதை படு கமாடியாக நீங்கள் எழுதி பதிவு செய்திருப்பதைப் படித்த போதே தெரிந்தது, வாசகர் நாடி அறிந்து சரியான எழுத்தில் தனது கருத்தைக் கொண்டு சேர்ப்பவர் இவர் என்றே அறிந்து கொண்டேன்.

நான் பதிவுலகிற்கு வந்த பிறகு வந்த பதிவர்களில், எழுத ஆரம்பித்து வெகு சில நாட்களிலேயே அனைவராலும் படிக்கப்படும் வெட்டிப்பயல் பாலாஜி, டிபிசிடி, பெ.மகேந்திரன், மோகன் கந்தசாமி மற்றும் பரிசல்காரன் ஆகியோர் அனைவரின் கவனத்தைக் ஈர்த்தவர்கள் என்று மற்ற பதிவர்களிடம் சொல்வதுண்டு. தளபோட்சுத்ரி என்ற இலக்கிய வடிவத்தை நீங்கள் எழுதிய போதுதான் அப்படி ஒன்று இருப்பதை அறிந்து கொண்டேன்.

பொதுவாக பாலியல் சார்ந்த வற்றைப் பொதுவில் பேசினால் தன்னைப்பற்றிய பிம்பம் நசுங்கிவிடுமே என்று பலபதிவர்கள் எழுதத் தயங்குவர்; நீங்கள் ஒரு வெளிநாட்டு பாலியல்தொழிலியாளியிடம் பேட்டியை தமிழில் மொழிப் பெயர்த்துப் போட்டு பதிவு செய்திருந்தீர்கள். தன்னைப்பற்றிய இமேஜ் இது என்று எவரும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வகையில் நீங்கள் எதையும் மிகத் துணிவாக எழுதுவது பாராட்டக் கூடியது. இதுபோன்று பிம்பத்துக்குள் சிக்காமல் பதிவு எழுதுபவர்கள் லக்கிலுக் மற்றும் ஜ்யாவ்ராம் சுந்தர் ஆகியோர் மட்டுமே எனக்கு தெரிகிறார்கள்.

உங்கள் கேள்விகளைப் பார்த்த போது இவ்வளவு தெரிந்தவருக்கு எனது பதில்கள் எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஐயப்பட்டே பதில் அளித்தேன். நான் அங்கே எழுதியிருப்பவையாவும் பதிவுலகில் எழுத வந்த பிறகு அறிந்து கொண்டவைதான். எனது வாசிப்பு அனுபவங்களின் வழி எனக்கு ஏற்பட்ட சமூகம் தொடர்பான எண்ணங்களை வைத்தே உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். பதிவுலகிற்கு வந்து குறுகிய காலத்தில் சமூக நலன் தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் பலவற்றைத் தொட்டு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது, பதிவுலகம் உங்களுக்கு மற்றொரு களம் தான். மற்றபடி அரசியல், சமுகம் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்றே உங்களின் எழுத்துக்கள் வழி உங்களைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் எழுதுவது பயனா என்று ஆராயாமல் நமது கருத்துக்களை விதையாக்கினால் என்றோ ஒரு நாள் நல்ல சூழலில் அது முளைவிட்டு பயிராகும். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து விதையாக்குங்கள். வாழ்த்துக்கள்.

வார இருதிநாட்களை எனக்காக ஒதுக்கிய நண்பர் கண்ணனுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வலைப்பூவின் 75 -வது பதிவில் மீண்டும் அவரது பங்களிப்பைக் வேறொரு வடிவத்தில் கோருவோம்.

Read More......

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-2

· 11 comments

பதிவர் கோவி கண்ணன்

தமிழ்வலைப்பூக்களில் திராவிட எழுத்து முன்னோடிகளில் ஒருவரான கோவி கண்ணன் அவர்களின் பேட்டியை 'சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மின்னஞ்சலில் அவர் அளித்த பேட்டியின் முதல் பாகத்தை சென்ற பதிவில் வெளியிட்டேன். இது பாகம் இரண்டு

டந்த அரைநூற்றாண்டு முன்புவரை மற்றவரை அடிமைப்படுத்த அதிகாரத்திற்கு கூழைக்கும்பிடு போட்ட ஆதிக்க வர்க்கம் இன்று உ.பி -யில் தலித்துகளுக்கும் சலாம் போடுகிறது. நவீன தீண்டாமை தொடங்கிவிட்டதா?

லித்தவரை எதிரியின் மீது பாய்ந்துப்பார், பலிக்காவிட்டால் எதிரியிடம் மண்டியிட்டு படையலைப் போடு என்பது போன்றது தான் இந்த மண்டியிடல். வெளித் தோற்றத்துக்கு தலித்துக்களை மதிப்பது போல் தோன்றினாலும் அவர்களின் தயவில்லாமல் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது, ஆதாயம் பெற முடியாது என்பதுதான் அவர்கள் எண்ணம். உண்மையான அரவணைப்பு என்பது அவை சாதி அடையாளங்களைத் துறந்தால் மட்டுமே ஏற்படும். இல்லை என்றால் அவை தன் சாதிப்பெருமை சேர்ப்பதற்காக செய்யும் மற்றொரு இழிசெயல். இவற்றினால் பேதங்கள் என்றுமே ஒழியாது, நவீன தீண்டாமையின் தொடக்கமே அவை. 'நவீன தீண்டாமை' மிக ஆழமாக ஒரே சொல்லில் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

லித் வினய் கட்டியாரின் தலைமையில் அன்று பெரியார் சிலையை எதிர்த்த பார்ப்பனர்கள் இன்று மாயாவதியின் உடனிருந்தே அதை செய்கின்றனர். "பெரியார் தென்னகத்தை சேர்ந்தவர், ஏதேனும் பயனிருக்கும் என்றால் தென்னாட்டில் அவர் சிலையை நிறுவுவோம்" என்று முழங்கிய மாயாவதியுடன் செல்வப்பெருந்தகை இணைந்ததை பற்றி உங்கள் கருத்தென்ன? பெரியாருக்கு பிறகான ஒரு புள்ளியில் இருந்து தலித் விடுதலையை தமிழகத்தில் தொடங்க முடியுமா?

மாயாவதியுடன் தன்னை இணைத்துக் கொள்வது செல்வப்பெருந்தகையின் விளம்பர அரசியல் தான். தலித் விடுதலைக்குப் பாடுபடுபவர் எனில் திருமாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் திருமாவுடன் இணைந்தே போராடிக் கொண்டு இருக்கவேண்டும். தலித் அமைப்புகளின் பல்வேறு தலைவர்கள் பிரிவதால் ஒட்டுமொத்தமாக இருக்கும் அவர்களின் வாக்கு சக்தி பலவீனமடைக்கிறது.

தலித்துகள் தவிர்த்து பிறர் தற்போதைய பல்வேறு அரசியல் சூழல் காரணமாக ஒரே புள்ளியில் இணைதல் என்பதற்கான தேவை மிகக் குறைவே. தமிழ்நாட்டு பிரச்சனைக்கு ஒரே புள்ளியில் இணையவே முடியாது. தற்போதும் கூட தமிழர்களின் ஒட்டுமொத்த குரல் காவேரி போன்ற வெளிப்பிரச்சனைகளால் தானே இணைகிறது? தலித் என்று ஒரே சொல்லில் சொன்னாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கிருஷ்ணசாமி, திருமா ஆகியவர்களின் தலையில் பிரிந்தே இருக்கிறார்கள். இராமதாசுடன் இணைந்து அரசியல் நடத்தும் திருமா, கிருஷ்ணசாமி போன்றவர்களுடன் இணைந்து தலித் அமைப்புகளை ஒன்றிணைத்தால் நீங்கள் சொல்வது நடக்கலாம். மற்ற தலைவர்களை விட திருமாவின் செயல்பாடுகள், போராட்ட குணம் அனைவராலும் கவரப்படுபவை.

த்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கலைஞரின் ஆளுமை இப்போது திருமாவிடம் தென்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் எதிர்காலம் யார்கையில் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

காமராஜர் சிறப்பாக ஆட்சி நடத்தினார். திருமணம் கூட அவர் செய்து கொள்ளவில்லை. வாரிசுகள் வந்துவிட்டால் சுயநலம் மேலோங்கிவிடும். கலைஞர் அரசியலில் இது கண்கூடு. திருமா இதுவரை திருமணம் செய்து கொள்ளாததைப் பார்க்கும் போது காமராஜரின் வழியை பின்பற்றி முழுமூச்சாக தன்னை அற்பணித்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆனால் திராவிடக் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திருமாவின் தலைமையில் இணைவது கடினம். திருமா தமிழ்மொழி உணர்வு, ஈழம் என பல்வேறு தளங்களில் போராடினாலும் திருமாவை ஒரு தலித் இன போராளியாகவே மட்டுமே பார்க்கிறார்கள்.

மீப காலமாக பெரியாரிஸ்டுகளாக உருமாற்றம் அடைந்த கம்யூனிஸ்ட்டுகள் திமுக இளைஞர்களை ஈர்க்கமுடியவில்லையே! திருமா அதில் வெற்றி பெறுவாரா?

சீனாவில் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை, வடகொரியாவின் தனிமை, சீனாவின் திபெத் ஆக்ரமிப்பு, ரஷ்ய சிதைவு, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் இவையே கம்யூனிஸ்டுகளைப் பற்றி நினைக்கும் போது ஏற்படுபவை. இளைஞர்களின் மனதில் கம்யூனிசம் என்பது தடைசெய்யப்பட்ட நக்சல் இயக்கம் போன்றது என்ற நினைப்பையே விதைத்திருக்கிறது. மேலும்ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு, வேறொரு மாநிலத்தில் கூட்டு என்பதாக கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை இவையெல்லாம் கம்யூனிஸ்டுகளுக்கு பின்னடைவுதான்.

திருமா கடந்த 25 ஆண்டுகால அரசியல் வாழ்கையில் தலித் விடுதலைக்காக இளைஞர்களை தயார்படுத்தி இருக்கிறார். இனி தலித் விடுதலைக் குறித்த கவலைகளை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விட்டுவிட்டு, பொதுவான தமிழர் பிரச்சனையில் ஈடுபத்திக் கொண்டால் நீங்கள் சொல்வது சாத்தியமே.

வேறுவழியில்லாது, ஜனநாயகத்தில் வாய்ப்புள்ள எல்லாவகை குட்டிக்கரண அரசியலையும் செய்யும் திமுக மற்றும் பாமக, எதிப்பரசியலில் சமூகத்தொண்டு ஆற்றும் பொதுவுடமைவாதிகள் என எல்லோரும் இயன்ற நல்லதை தமிழகத்திற்கு செய்யும்போது அதிமுக வின் சுயநல அரசியலையும் மதிமுக வின் குழப்ப அரசியலையும் எவ்வகையில் சேர்ப்பது?

விளக்கமான கேள்வியிலே பதிலையும் சொல்லிவிட்டு அதை கேள்வியாக்கி இருக்கிறீர்கள். ஈழவிடுதலைக் குறித்த ஜெவின் நிலைப்பாடும் மற்றும் வைகோவின் நிலைப்பாடு ஆகியவை ஒன்றுகொன்று எதிரானவை. இவர்கள் ஒன்றாக இருப்பதால் ஈழத்தமிழ் விடுதலைக்கு எதுவும் பயன் உண்டா ? வேறு சில ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் என்னும் அடையாளத்தில் வலம் வருகிறார்கள் அவ்வளவுதான்!

மிழ் வலைப்பதிவுகளின் வீச்சு என்ன என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

ருவரின் எழுத்து திறன், அதற்கான அங்கீகாரங்களையும் வெகு ஜன ஊடகங்கங்கள் தீர்மாணித்துவிட முடியாது என்பதே வலைப்பதிவுகள் மூலம் தெரிய வரும் உண்மை. எண்ணங்களை கோர்வையாக எழுதும் எவரும் எழுத்தாளர்களே. கோர்வையாக எழுத முடியாவிட்டாலும் எண்ணங்களை பதிய வைக்கும் முயற்சியில் வலைப்பதிவாளர்கள் அனைவருமே தத்தம் வழியில் அதனை நல்ல முறையில் செய்துவருகின்றனர். ஒரு காலத்தில் பேனா நண்பர்கள் இணைப்பு என்பதாக பல்வேறு வியாரபார நோக்கு நிறுவனங்கள் செயல்பட்டு அறிமுகம் இல்லாதவ்ர்களை ஒன்றிணைக்க முயன்றிருந்தாலும் அதன் வீச்சு அவ்வளவாக இருக்கவில்லை. நல்லதொரு பேனா நண்பர்கள் ஆகுவதற்கு இருவருக்குமான புரிந்துணர்வை ஏற்படும் காலம் மிக மிக நீளம். அந்த நட்பு நீடித்த நட்பாக நிலைத்திருந்ததா என்றும் தெரியவில்லை.

ஆனால் வலையுலகில் நட்பாக மாறும் இருவர், எழுத்தின் வழி எண்ண ஓட்டங்களை அறிந்து கொண்டு விருப்பத்தின் பெயரிலேயே நட்பாக இணைகின்றனர், தொடர்கின்றனர். இந்த நட்பிற்கான காரணம் மிக வெளிப்படையானது. எழுத்து இங்கே நட்பாக இணைவதற்கு (ஒருவருக்கு முதலில் கிடைப்பது நல்ல நட்புகளே) மிக முக்கிய காரணம் அவரும் தமிழர், தமிழ் மீது பற்றுக் கொண்டுள்ளதால் தமிழ் எழுதுகிறார் என்பதே. வலையுலகில் தனிப்பட்ட மனிதர்களின் நட்பு நலம் என்பது தவிர்த்து, வலைப்பதிவுகளின் மிக மிக முதன்மைப் பயனாக நான் நினைப்பது, வெவ்வெறு இடங்களில் வாழும் தமிழர்களை எண்ணத்தில் ஒன்றாகவும், மாறுபட்ட எண்ணம் கொண்ட தமிழர்களின் தொ்குப்பாகவும் ஆக்குகிறது.

வெகு ஜன ஊடகங்களின் வழி வாசகருக்கு வாசிப்பு அனுபவம் என்பதைத் தவிர அவை வாசகர்களின் இணைப்பு பாலம் ஆக அமையும்படி அதன் இயல்பான தன்மைகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

ஆக வலைப்பதிவுகளின் வீச்சு என்பது வெறும் எழுத்து என்பதைத் தாண்டி வெறொரு தளமான தமிழர்களுக்கான ஒற்றுமை என்பதில் நன்கு வளர்ந்தே நிற்கிறது. இதுவே அடித்தளமாக இருப்பதால், வலைப்பதிவுகள் எதிர்காலத்தில் மக்கள் பிரச்சனைக்கு ஆலோசனை தரும் அமைப்பாகவும், இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய களமாகவும் அமையும்.

மிழ் வலைப்பூக்களால் வணிக ரீதியில் பாதிக்கப்பட்டோர்(?) தாங்களாகவே வலைப்பூக்கள் தொடங்கி பாதிப்புகளை குறைக்க முயல்கின்றனர். (உ - ம்: பிரமிட் சாய் மீரா, வானத்தின் கீழே). வரதட்சனை தடுப்பு சட்டம் பற்றிய வலைப்பூ -கூட (பாதிக்கப்பட்ட தரப்பில்?) இருந்து வந்தது. வலைப்பூக்கள் சமுகத்தை பாதிக்கத்தொடங்கிவிட்டதா?

கூட்டம் கூடுமிடத்தில் அவர்களின் தேவையறிந்து கடை திறப்பதுதானே விற்பனையாளர்களின் திறமை?
கூகுள் நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாருங்கள் ஒருவர் தேடும் தகவலைப் பொருத்தே அவர்களின் விளம்பரங்கள் அங்கே காட்டப்படும். உயிர்புடன் (ஆக்டிவ்) தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்கள் சுமார் 5000 இருக்கும் என்றால் நாள்தோறும் அதனை படிக்கும் வாசகர்கள் ஒரு லட்சம் வரையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். இவை அன்றாடம் நடப்பவை, வாசிப்பு அதிகம் இருக்கும் இடத்தில் தங்களைப் பற்றியும் சொன்னால் அது அன்றே சென்றடைந்துவிடும். மேலும் குறிபிட்ட வகையான செய்திகளைப் படிப்பவர்கள் என்கிற வட்டம் எதுவும் இல்லாததால் வலைப்பதிவின்வழி பலரையும் சென்றடைய வைக்கும் முயற்சியாக வியாபார நிறுவணங்களின் வலைப்பதிவுகள் இயங்குவதாக நினைக்கிறேன். நோக்கம் அதுவென்றாலும் பொதுவானவற்றையும் அவர்கள் எழுதிவந்தால், அவர்களது பதிவுகள் வியாபார நோக்கம் என்றே தெரிந்தாலும் வலைப்பதிவில் அதுவும் ஒருவகை என்று பதிவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றின் நுழைவு வலைப்பதிவு உலகத்தைப் பாதிக்காது, இங்கே பதிவர்கள் / வாசகர்கள் தங்களுக்கு எது தேவையோ அவற்றை மட்டுமே படிக்கிறார்கள். அதுதானே வலைப்பதிவின் சிறப்பும்.

மற்றொரு அறிவிக்கப்படாத வியாபார உத்தி, அண்மைகாலமாக சூடான தலைப்புகள் பதிவர்களின் கவனம் பெறுகின்றன. நாளிதழ் தலைப்புச் செய்தி போடுவது போன்றே உத்தியுடன் வலைப்பதிவாளர்கள் செய்துவருகிறார்கள். நானும் அவ்வாறே செய்வது உண்டு. ஆனால் அவ்வாறு சூடான தலைப்புகள் வைக்கும் போது வாசகர்களை ஏமாற்ற வண்ணம் எதாவது பதிவிலும் எழுதப்பட்டு இருக்கவேண்டும், இல்லை என்றால் நாளடைவில் சூடான தலைப்பு மட்டுமே வைப்பவர் என்ற அடையாளத்தில் அந்த பதிவர்கள் புறக்கணிக்கப்படுவர்.


பேட்டியின் இறுதி பாகம் அடுத்த பதிவாக சிலமணி நேரங்களில் வெளியிடப்படும்.

Read More......

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-1

· 23 comments

பதிவர் கோவி கண்ணன்

தமிழ்வலைப்பூக்களில் திராவிட எழுத்து முன்னோடிகளில் ஒருவரான கோவி கண்ணன் அவர்களின் பேட்டியை 'சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மின்னஞ்சலில் அவர் அளித்த பேட்டியின் முதல் பாகத்தை தற்போது பதிவிடுகிறேன். பேட்டியின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், லக்கிலுக்கின் அரசியல் கட்டுரை, பதிவர் ராப் எழுதும் பதிவு (இன்னும் உறுதியாக வில்லை), வேற்று மொழி பின்நவீனத்துவ வீடியோவின் தமிழ் மொழியாக்கம் ஆகியன வரவிருக்கின்றன.


ங்கள் முழுப்பெயர், சொந்தஊர், வாழிடம், பணி மற்றும் நெருங்கிய நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

னது பல்வேறு எண்ணங்களைப் ஒட்டுமொத்தமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கும் நண்பர் மோகனுக்கு மிக்க நன்றி. இங்கே கேள்விகளைப் பார்க்கும் போது ஒரு தேர்ந்த ஆசிரியர் மாணவனைப் சோதிப்பது போன்று உள்ளது. கேள்வி கேட்பதுதான் கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் கேள்விகளில் நீங்கள் கேட்டிருப்பதெல்லாம் உங்களுக்கு இருக்கும் சமூக உயர்வுக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இவை வெறும் கேள்வியாக ஓர் இரவில் எழுந்தாக நம்ப முடியவில்லை. நல்லது !

எனது முழுப்பெயர் கண்ணன், தந்தைப் பெயர் கோவிந்தராஜூ. பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினம் தான். அதன் பிறகு சென்னையில் ஒரு 10 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கையில் இல்லத்தினருடன் வசிக்கிறேன். சென்னையில் இருந்தவரை எனது பணி மின்னனு தொழில் நுட்பம் சார்ந்தவையாக இருந்தது, சிங்கைக்கு பணியில் சேர்ந்த பிறகே தன்னார்வத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு எனது முழுமுயற்சியினால் மாறினேன். கடந்த 8 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றான சிஸ்டம் என்ஜினியாராக சீன நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
பதிவுலகம் சாராத நெருங்கிய நண்பர்கள் பலருண்டு, குறிப்பிட்டு அவர்களின் பெயரைச் சொன்னாலும் அவர்களை இங்கு யாருக்கும் தெரியாது என்பதால் பெயர்களை விட்டுவிடுகிறேன். செயலால், நடவெடிக்கைகளால் மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்த்து இவர் எனக்கான நண்பர் என்று மனதில் நினைத்தே அவர்களுடன் பழகுகிறேன். அவ்வாறு நானே விரும்பிப் பழகியவர்களே எனது நண்பர்களாக இருக்கிறார்கள். பதிவுலகில் எல்லோருமே நண்பர்கள் என்று நினைத்தாலும், பாசத்துடன் 'அண்ணன்' என்று என்னை அழைக்கும், அதே போன்று அன்புத் தம்பி என்ற உணர்வில் என்னால் ஒருமையில் அழைக்கப்படும் நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு.

திவுலகில் உங்கள் முன்னோடி யார்? ஆதிக்க எதிர்ப்பை பதிவுகளில் எப்போது தொடங்கினீர்கள்?

நான் பதிவுலகை வாசிக்க வந்த பொழுது மதச் சண்டைகளே பெரிதாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் விவாதங்கள் சுவையார்வமாக இருந்ததுடன் பல்வேறு மதங்களைப் பற்றி தெரிந்து கொள்ளூம் வாய்ப்பாக அமைந்தது, எழுத வரும் முன் பதிவில் இந்து மதத்தை இழிவு படுத்தி சிலர் எழுதுவதைக் கண்டு எரிச்சல் அடைந்திருக்கிறேன், காரணம் அண்ணன் ஆர்எஸ்எஸில் முன்பு ஒரு 10 ஆண்டுகள் இருந்து இருக்கிறார், அதனால் பலமுறை காவல் துறையால் முன்னெச்சரிக்கை நடவெடிக்கையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டார், தற்போது அவருக்கு காவல் துறை கெடுபிடிகள் எதுவும் கிடையாது. நானும் பட்டயப்படிப்பு படிக்கும் காலத்தில் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தில் சேர்ந்து உழவாரப்பணி ஆற்றி இருக்கிறேன். இதன் பின்னனியில் இந்துமதம் பற்றிய உயர்வான எண்ணம் இருந்தது, இந்துமதத்தைக் குறை சொல்பவர்கள் குறித்து எரிச்சலும் இருந்தது. இங்கே பதிவுலகில் வாசிக்க வந்த பிறகே இந்துமதத்தை தாங்கி எழுதுபவர்களின் நோக்கம் முற்போக்கானது அல்ல என்றதை படித்து உணர்ந்து கொண்ட போதுதான் நான் எழுதவே தொடங்கினேன்.குறிப்பாக விடாது கருப்பில் எழுதப்பட்டிருந்த இடுகைகள், திராவிட சிந்தனையாளர்களின் பெரியார் கருத்துக்கள் பற்றிய பதிவுகளை வாசிக்கும் பொழுது ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் கருத்துக்களைத்தான் பதிவில் எழுதவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

இதற்கு உரமாக அமைந்தது பதிவுகளை வாசித்து ஏற்படுத்திக் கொண்ட எனது தமிழ் உணர்வும், ஆர்வமும் தான். அதன் பிறகு தேவநேய பாவாணர் போன்ற தமிழறிஞர்களின் நூல்களை வாசித்த போது தமிழின் தொன்மை பெருமையெல்லாம் தெரிந்தது, இறந்து போன மொழியை தேவபாஷை என்று போற்றிக் கொண்டே தமிழை நீஷ பாஷை என்று இகழ்ந்து கூறும் அவர்கள் மொழியை அவர்கள் உயர்வாக கூறிக் கொள்ளும் போது, ஒரு தமிழன் என்ற உணர்வில் தமிழ்மொழி மீதான அவதூறுகளை மறுக்க வேண்டும், தமிழ் மொழி விழிப்புணர்வும், தமிழின் பயன்பாடு குறித்து எழுதுவது என்றும் முடிவு செய்தேன். ஆங்கிலம் தவிர்த்து அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தால் தமிழ் எவ்வாறெல்லாம் சீர்கெடுகிறது, புறக்கணிக்கப்படுகிறது என்றெல்லாம் எனது பதிவுகளில் எழுதி வந்திருக்கிறேன். சிதம்பரம் கோவில் நிகழ்வுகளில் தமிழ் மொழி தீண்டாமை வெளிப்படையாக பேசப்பட்ட போது அதனை எதிர்த்து நிறைய இடுகைகள் எழுதி இருக்கிறேன். செந்தமிழில் எழுதுவதற்கும், பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும் எனக்கு பெரிதும் பயனளித்தது இராமகி ஐயாவின் பதிவுகளே. எனது எழுத்தின் ஒரு குறிப்பிட்ட நோக்கமாக. ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான எனது கருத்துக்களை பதிய தொடங்கியது முதலே எழுதிவருகிறேன்.

திராவிடமும் பார்ப்பனீய எதிர்ப்பும் எவ்வாறு தொடர்புடையன? ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்க முடியாதா?

திராவிட சிந்தனை என்பது ஒரு கருத்தாக்கம் தான், தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பே திராவிட சிந்தனைகளின் தொகுப்பு எனலாம், பெரியாருக்கு முன்னோடியான அயோத்திதாச பண்டிதர் தான் திராவிட சிந்தனைகளின் விதை. எந்த கொள்கையும் தோன்றும் காலத்தில் தான் அவை சிறப்பிக்கப்படும், காரணம் கொள்கைகள் தோன்றுவது திட்டமிட்ட ஒன்று அல்ல, அதற்கான தேவை இருப்பதால் அவை இயற்கையாகவே யாரோ ஒருவரின் முன்னெடுப்பில் தோன்றி அதுபற்றிய ஏக்கம் இருப்பவர்களால் உள்வாங்கப்பட்டு வளர்ச்சி பெரும். நாளடைவில் கொள்கை தோன்றியதன் நோக்கம் ஓரளவு நிறைவேறிவிட்ட பொழுது மூலக் கொள்கைகல் திரிய ஆரம்பித்துவிடும். தோன்றிய காலத்தில் இருந்த அதே இறுக்கம் இருப்பதற்கான தேவை இல்லாது போவதும் ஒருகாரணம்.
திராவிடம் கருத்தாக்கம் தோன்றிய காலத்தில் பார்பனிய எதிர்பாகவே இருந்தது காரணம் அன்றைய உயர்சாதியினர் அனைவருமே தாங்கள் செய்வது கொடுமை என்றெல்லாம் உணர்ந்திருந்தது இல்லை. இன்றைக்கு 50 விழுக்காட்டிற்கும் மேல் நிலைமை மாறி இருக்கிறது. பலர் உணர்ந்துவிட்டார்கள். பலர் இன்னும் பழைய பெருமையிலேயே இருக்கிறார்கள். எனவே முழுக்க முழுக்க இன்றைய பார்பனிய எதிர்ப்பு என்பது பார்பனர்களை மட்டுமே குறிவைக்காமல் உயர்சாதியினர் யாராக இருந்தாலும் அவர்களை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது, கீழவெண்மணி, கண்டதேவி, பாப்பாரப்பட்டி, இரட்டை தம்ளர் ஆகியவற்றிற்கான ஞாயம் கற்பித்து எழுதும் பதிவர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் இவற்றிற்கு எதிர்பாக நூற்றுக்கணக்காண இடுகைகள் பல்வேறு பதிவர்கள் பதிந்து இருக்கிறார்கள், சூழ்நிலை மாற்றத்திற்கான கருத்து விதைகளை பலரும் விதைத்துவிட்டார்கள், நிலைமை மெதுவாக மாறும் ஏனென்றால் படித்த பார்பனர்களே சாதிகளை பிடித்து தொங்கிக் கொண்டு உயர்வு பேசும் போது படிக்காத பாமரர்கள் சாதிப் பெருமையை மறப்பதற்கான வாய்ப்பை காலம் தான் கொடுக்கும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம், உரிமைக்காக சாதி பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகள் தவிர்த்து திராவிடம் பேசும் பதிவர்கள் தங்கள் சாதிகளின் பெருமை பேசுவதில்லை.

கேள்வியை விட்டு சற்றுவிலகி சென்றுவிட்டேன், திராவிடம் என்பது பார்பனியத்துக்கு எதிரான சிந்தனைக் கொண்டது என்றே சொல்கிறார்கள். ஆதிக்கச் சக்திகளின் சாதிகள் எதுவாக இருந்தாலும் அவை பார்பனியமே என்றே சொல்கிறார்கள். பார்பனிய எதிர்ப்பே திராவிடம் என்றாலும் அதில் தமிழர் நலனும் அடங்கி இருக்கிறது. பார்பனீயம் என்றுமே தமிழ்மொழிக்கான ஆதரவு நிலை எடுத்தது இல்லை. அவர்கள் பேசுவதெல்லாம் தேசியம்.

பார்ப்பனீயம் இப்போது கைமாறி திராவிட பார்ப்பனீயர்களிடம் வந்துவிட்டதை பற்றி யாரும் விசனப்படுவதில்லையே ஏன்? மறைமுக தீண்டாமையை எல்லா மட்டங்களிலும் செய்து வரும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் பார்ப்பனர்களை வைவது நகை முரண் தானே?

ரிதான். பார்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் இவர்களே ஒருவருக்கொருவர் கை நீட்டிக் குற்றம் சொல்வது மாற்றத்துக்கான அறிகுறிதானே. நீ மட்டும் ஒழுங்கா ? என்று அவர்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் முன்பு போல் இருவரும் இணைந்தே தீண்டாமை போற்றுவோம் என்றெல்லாம் செய்யத் துணிவது இல்லை. ஆக ஆதிக்க சக்திகளை ஆதிக்க சக்திகளே அடையாளம் காட்டுவது அவர்களின் ஆளுமை சக்தியை நீர்த்துப் போகவைக்கும் பலவீனம் தானே!

பொருளாதார இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டிற்கு காலநிர்ணயம், மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை முழுமையாக சென்று சேர்த்தல் போன்றவற்றில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

"பொருளாதார இட ஒதுக்கீடு" இந்த சொல்லாடல் பற்றி அறிவு ஜீவிகள் பேசுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்வுணர்ச்சி முற்றிலும் விடுபட ஒருதலைமுறை இட ஒதுக்கீடு என்னைப் பொறுத்து சரியான தீர்வு அல்ல. என்னுடன் மாலை நேர (என்ஜினியரிங்க் டிகிரி) வகுப்பில் படித்த மாணவர்கள் எல்லோருமே வேலைபார்த்துக் கொண்டே படித்தவர்கள், அவர்களில் பலர் அரசு வேலையில் இருந்தார்கள், பிற்பட்ட வகுப்பினருக்கு இல்லாத தாழ்வுணர்ச்சி தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இருந்தது, தங்களால் மற்ற பிரிவு மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் பெற முடியாது என்றே நினைத்து அதில் சில மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இருப்பதே (டிப்ளமோ) போதும் என்று சென்றுவிட்டார்கள். ஓரளவு படித்து இருந்தாலும் தங்களுக்கு போட்டியிடும் தன்மை இல்லை என்றெல்லாம் தாழ்வாக நினைக்கும் நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பொருளாதார இட ஒதுக்கீடு என்று முட்டுக்கட்டைப் போட்டால் இதுவரை படித்ததே போதும் என்று சென்றுவிடுவார்கள்.

மூன்று தலைமுறைகளுக்கு (பாட்டன், தந்தை, மகன்) படிப்பு பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் இட ஒதுக்கீட்டை முற்றிலும் எடுக்க முடியும். இவர்கள் இட ஒதுக்கீட்டில் வந்துவிட்டால் மகனின் குழந்தைக்கு 'நோ' சொல்லிவிடலாம். இது கிரிமீ லேயர் போன்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமான கட்டுபாடுதான். அது போன்றே அதே சாதிப்பிரிவில் உள்ள மற்றவர்களும் மூன்று தலைமுறை வாய்பை எட்டிவிட்டார்களா என்று கண்காணிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் வழியாக படிப்படியாக படித்தவர்கள் மிகும் போது அந்த பிரிவின் ஒதுக்கீட்டு அளவை குறைத்துக் கொண்டே பொதுப் பிரிவை கூடுதலாக்கலாம். மொத்தமாக இட ஒதுக்கீட்டை நீக்குவதில் உடன்பாடு இல்லை. இதுவரையில் இருந்ததைக் கண்காணித்து சீர்த்திருத்துவது சமூகத் தேவைதான்.

திராவிட கட்சிகளின் செயல்பாடு சமூக நீதியோடு முடிந்து போகிறதா? அல்லது ஈழம் போன்ற பிரச்சினைகளுக்கு காத்திருக்க வேண்டுமா? அல்லது ஈழம் நம் பிரச்சினை இல்லையா?

திராவிட என்னும் சொல் திராவிட இன ரீதியானது என்றாலும் தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்வது இல்லை. தமிழகத்தின் தமிழர்களின் நலன் மட்டுமின்றி அனைத்துலக தமிழர்கள் அனைவரின் நலன் குறித்த சொல்லாக பயன்படுத்துவேண்டும். ஈழப்போராட்டமும், சிங்களரின் ஆதிக்கமும் இன ரீதியானது என்பது தானே உண்மை?

சோ மற்றும் சில ஊடகங்கள் ஈழ மக்கள் விரோதத்தையும் உள்ளார்ந்த திராவிட எதிர்ப்பையும் எவ்வித சங்கோஜமோ சங்கடமோயின்றி தொடர்ந்து பதிவு செய்துவர முடிவது எதனால்? ஜனநாயகத்தில் இது சகஜம் என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஆதரவென்று ஏதும் இருப்பதாலா? அல்லது ஆரியக்கூத்து புடக்காலியில் அரங்கேறுகிறதா?

சோமற்றும் உயர்சாதியினர் நடத்தும் ஊடகங்கள் எப்போதும் இந்துத்துவ சார்புள்ளவை, அவற்றிற்கு மதிப்புக் கொடுக்காமல் விட்டாலே விஷம பிரச்சாரங்கள் நாளடைவில் குறைந்து போகும்.

சேது சமுத்திரத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் நடக்கும் ஆரிய சதியை முறியடிக்க சுற்றுப்புற சூழல் காரணங்களை ஒதுக்கிவிட்டாவது திட்டத்தை நிறைவேற்றுவது அவசியமல்லவா?

ண்டங்களை பிளந்து சூயஸ் கால்வாய், பனாமா என்றெல்லாம் அமைத்து தங்கள் நாட்டின் வியாபாரத்தையும் போக்குவரத்தையும் வளர்த்து உலக நாடுகள் வெற்றிபெற்றி இருக்கிறது. இங்கே பழைய பஞ்சாங்கத்தைக் காரணம் காட்டி ஒரு திட்டம் நிராகரிக்கப்படுவது கேலிக் கூத்து. இன்னும் பழமை வாதங்களில் மக்கள் இருந்தால் தான் தங்களால் இந்துமதத்துக்குள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றே ஆதிக்க சக்திகள் நினைக்கின்றன. அவர்களின் எண்ணம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று, மக்கள் வாழ்வாதரமான பொருளாதார நலன் கருதி, சேது திட்டம் அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும்.


பேட்டியின் அடுத்த மற்றும் இறுதி பாகங்களில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு தொல்.திருமாவளவன் மற்றும் செல்வப்பெருந்தகை பற்றியும் போலிடோண்டு விவகாரம், தற்போதைய பதிவு நற்சூழலின் எதிரிகள் பற்றியும் விவாதம் இடம்பெறுகிறது.

Read More......


கிடங்கு