Monday, September 1, 2008

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, இறுதி பாகம்

·

பதிவர் கோவி கண்ணன்

கோவி கண்ணன் அவர்களின் பேட்டியின் முதல் மற்றும் இரண்டாவது பாகங்களைத் தொடர்ந்து இறுதி பாகத்தை இப்போது வெளியிடுறேன்.

பெண்கள் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்துள்ளோர், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைபாடுவோர் போன்றோரின் உண்மை முகம் போலிடோண்டுவின் இரண்டாம் முகத்தில் இருந்து ஏதாகிலும் வேறானதா?

துபற்றி அண்மையில் ஒரு விவாதம் ஓடியது, பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவதால் பெண்களின் குரல்களுக்கு பின்னனி கொடுக்கும் அளவுக்குக் கூட அவர்களின் எழுத்தின் தன்மை இல்லை என்றும் சொல்லப்பட்டது. பெண்களின் சிந்தனையும் அவர்களின் உணர்வுகளும் வேறானது. ஒரு பெண் அவளுக்கான உரியமையுடைய பெயரில் ஆண்கள் எழுதுவதென்பதை ஆணின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தவிர்த்து வேறு பெண்கள் பெருமையானதாக கருதவில்லை என்றே சொல்கிறார்கள். பெண் பெயரில் எழுதுபவர்களில் பெண்ணுக்காக எழுதுபவகளின் விழுக்காடு மிக மிக குறைவே. அதிலும் பெண் பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டு வசைபாடுதல், பின்னூட்டத்திற்கென்றே வலைப்பூ தொடங்கி வசைப்படுபதல் என்பது தன்னை மறைத்துக் கொண்டு வசைபாடும் போலி டோண்டு வகையராக்களின் செயலை ஒத்தது தான். ஒரே பெரிய வேறுபாடு போலி டோண்டுவின் வலைப்பதிவு வசையின் தொகுப்பாக இருந்தது. இவர்கள் அந்த அளவுக்கு அதற்காக நேரம் ஒதுக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம். அப்படியும் முயன்றிருக்கிறார்கள் அதற்கு நல்லொதொரு உதாரணம் சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாமியர்களைத் திட்டி எழுதப்பட்ட பதிவு. மேலும் ஒரு பெண் பதிவரின் பெயரில் போலிப் பதிவு ஆரம்பிக்கப்பட்டதும் அதை எழுதியவர் யார் என்று வெளியே தெரிந்ததும் பதிவர்கள் அறிந்ததே.

ன்னரை ஆண்டுகளுக்கு முன்பு, போலிடோண்டுவை ஒத்தோ முரண்பட்டோ தங்கள் போலிப்பதிவுகள் மூலம் பல பெண் பதிவர்களை வெளியேற்றி, வலையெங்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதுதான் வலைக்கலகம் செய்தோரின் வெற்றி. இப்போது, தமிழ்மணத்தை நிர்மூலமாக்கும் ஒற்றை குறிக்கோளுடன் இயங்கும் சிலரின் போலிப்பதிவுகளும் அதை ஒத்தே இருக்கின்றன. அவ்வகையில், தமிழ்சூழலில் திடீரென கிடைத்த இந்த எழுத்து சுதந்தரத்தின் மீது இரண்டாம் முறை சம்மட்டி விழும் என நினைக்கிறீர்களா?

போலி டோண்டுவை ஒழிக்கிறேன் என்ற பேரி்ல் மற்ற பதிவர்களின் மீது சிலர் ஆயுதம் வீசினார்கள், அதில் குறிப்பிடக்கூடிய சொல்லாடல் 'க்ராஸ் பயர்' என்பது. இந்த தாக்குதலின் இலக்கு என் மீதும் விழுந்திருக்கிறது. இந்த தாக்குதலை என்மீது தொடுத்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே மதித்து எதிர்வினை ஆற்றினேன். ஏனென்றால் அவர் என்னுடன் மணிக்கணக்காக பேசி இருக்கிறார். மற்ற இருவரில் ஒருவர் அந்த வார வீக் எண்ட் ஜொள்ளுக்கு கவர்ச்சி படம் கிடைக்காத கடுப்பில் என் மீது எரிந்துவிழுந்து, அதனை அவரது அரங்கில் 'A' படம் ஓட்டுவதற்கான விளம்பர போஸ்டராகவே பயன்படுத்தினார். நோக்கம் தெரிந்த பிறகு அதற்கு எதிர்வினை ஆற்றி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மற்றோருவர் அவர் தான் பழகியதே துப்பறியத்தான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு என்னைப் பற்றி 100 விழுக்காடு பொய்யான தகவலை பதிவில் எழுதினார். அவரே என்னுடன் பழகியது ஒருபோலியான, திட்டமிட்ட ஒன்று என்பதை அறிவித்துவிட்ட பிறகு, உணர்ச்சிவசப்பட்டு, அவரை மதித்து எதிர்வினையாற்றும் அளவுக்கான தகுதி்யைக் கூட நான் அவருக்கு கொடுக்க விரும்பவில்லை.

இதுபோன்றே பலருக்கும் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தே வருகிறது. அண்மையில் நண்பர் டிபிசிடி சென்னை சென்றிருந்த போது, எனக்கு நெருங்கியவர் என்ற காரணத்தால் 'அவரை சந்திக்கவேண்டாம், எச்சரிக்கை!' என்றெல்லாம் குறுந்தகவல் அனுப்பினார்கள். வசந்த ரவி என்ற பெயரில் எழுதிய பதிவர் 'போலி' என்று கிளப்பிவிட அவர் அந்த பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார். பதிவர் கவிதா மீது போலிஸ் வழக்கு பாயும் என்று மிரட்டப்பட்டார். அவர் அதற்கு பயப்படாவிட்டாலும் 'தாதா'க்கள் உலாவும் இடத்தில் தானும் இருக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

போலியின் செயல் இழிவானது, போலி பக்கத்திற்கு சென்று படிக்கும் போது அங்கே ஆபாச அரங்கேறியிருப்பது தெரியும். இங்கே தமிழ் திரட்டியில் பலரையும் தனிமனித தாக்குதல்களாக திட்டிக் கொண்டே பதிவுகள் வரும் போது அதனை படிப்பவர்களும் மிக அதிகமே. அடுத்தவரின் மனைவியின் பெயரில், குறிப்பாக, போலியாக செயல்பட்டார் என்ற குற்றச் சாட்டை கூறி மூர்த்தியின் மனைவி புகைப்படத்தைப் போட்டு திட்டி எழுதப்பட்ட பதிவுகளை திரட்டியிலேயே பார்த்திருக்கிறோம். பலர் அறியும்படி, நடவடிக்கை என்ற பெயரில் இதை செய்து வந்தனர் சிலர். திரட்டி நிர்வாகம் கூட இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்ததா என்று தெரியவில்லை. இடுகையை நீக்காமல் மெளனம் சாதித்தார்கள். பிரச்சனைக்குரியவர் மூர்த்திதான், மூர்த்தியின் மனைவி அல்ல. அவன் செய்தான் நான் செய்தேன்; இதே குற்றச் சாட்டுகளைத்தான் இருபக்கம் சொல்லிவருகிறார்கள்.

போலி விவாகரத்துக்குள், ஏன் திடீர் எதிர்ப்பு தோன்றியது? அதுபற்றி நன்கு தெரிந்தாலும் அதனுள் செல்ல எனக்கு விருப்பமுல்லை. போலி விவாகரம் முற்றுவதற்கு முன்பு, அடுத்த பிரிவினருக்கு ஆதரவுடன் செயல்படுவதாக மூர்த்தி மற்றும் மூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னோர் என இருப்புறத்தாரும் என்னை குற்றம்சாட்டினர். நான் நடிப்தாகவும் கிளப்பிவிட்டனர். பைசாவுக்கு பிரோயனம் இல்லாத இந்த குற்றச் சாட்டால் அவர்களது சந்தர்பவாதம் எத்தகைய மோசமானது என்று புரிந்துகொண்டேன். அவரவருக்கான ஞாயங்கள் என்ற பெயரில் எல்லோரும் தாக்குதல் தொடுத்தனர். என்னைப் பற்றிய தூற்றல்களை பதிவர்கள் புறம் தள்ளினார்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். தமிழ் பதிவுகளில் தங்கள் எழுத்திற்கு கிடைத்த மரியாதையை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டு, தங்களை வலையுலகின் காவலர்களாக நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாகவே கண்டபடிக்கு நடந்து கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களுக்கான அடையாளாமாக மாறி போலி டோண்டுவைப் போலவே பலரால் வெறுக்கப் படுவபவர்களாக அவர்களின் நிலையும் செல்லக்கூடும். இங்கே எவரையும் இதை எழுதாதே என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒருவரின் எழுத்துக்கு மாற்று கருத்து இருந்தால் நாகரீகமாக எதிர்வினை ஆற்றலாம். சில தாதாக்கள் வெளிப்படையாகவே 'நீ எழுதாதே மூடிக் கொண்டு போ' என்றெல்லாம் எழுதுவதைப் பார்த்து பதிவர்கள் முகம் சுழிப்பது குறைவு; ஆனால் பலரும் அதைப் பார்த்து சிரி.......க்கிறார்கள்.

தாதாக்கள் என்று தெரிந்தே இருந்தாலும் பதிவுலகில் யாரும் புறக்கணிக்கமாட்டார்கள். அவை மனநலமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. நாளைக்கே விடாது கருப்பு பதிவு தமிழ்மணம் அனுமதியுடன் இணைக்கப்பட்டால் நாலுபேர் அதைப் படித்து கருத்தும் சொல்வார்கள். அவர்களிடமெல்லாம் சென்று உனக்கு வரலாறு தெரியுமா / புவியியல் தெரியுமா என்றேல்லாம் கேட்கவோ அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பவோ முடியாது. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன்? பல தாதாக்கள் மீண்டும் பவிசாக எழுதும் போது பதிவர்கள் பழசை மறந்து அவர்களுக்கு பின்னூட்டம் போடவே செய்கிறார்கள்.

தாதாக்களின் அச்சுறுத்தல்களைப் பதிவர்கள் புறம் தள்ளுவார்கள்,அது நடந்தேறி வருகிறது. அண்மையில் என்னுடன் சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவரிடம் "கோவி மலேசிய பதிவரைப் பற்றிச் மறைக்காமல் சொன்னாரா?, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே" என்றெல்லாம் குழப்பி விட முயன்றார்கள். அதை அந்த பதிவர் புறம்தள்ளிவிட்டார். ஒருவரின் எழுத்துச் சுதந்திரம் சில சைக்கோக்களால் முடங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு பதிவுலகம் பலவீனமானதல்ல என்பதே என்கருத்து.

போலி செய்த அதே போலிப்பதிவு வேலையை இவர்களும் இவர்களுக்கான ஞாயங்களின் பேரில் செய்துவருவது நகைமுரண் தான். தமிழ்மணத்தை ஒழிக்கிறேன் என்று செயல்படுபவர்களின் செயலுக்கான காரணம் மிக வெளிப்படையானது என்பதை தமிழ்மண திரட்டி நிர்வாகமும் பதிவர்களும் அறிவார்கள். அதற்கான எதிர்வினையை தமிழ்மணமும், தமிழ்மணத்தால் வளர்ந்த பதிவர்கள் சிலரும் சரியாக செய்துவருகிறார்கள். அதுபற்றி கருத்துக் கூற ஒன்றும் இல்லை.

குசேலன் தோல்வியடைய குசேலன் தான் காரணமா?

ங்கேயும் குசேலன் பற்றிய கேள்வியா ? படத்தில் கதையில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளிப்படம் போன்றது தான் குசேலன், இதை தோல்வி என்றே சொல்ல முடியாது, ஏனெனில் இதுவரை 20 கோடி வசூல் செய்யப்பட்டு இருக்கிறதாம். படத்தயாரிப்பாளர்களின் இலக்கு, பேராசை 100 கோடி லாபம் ஈட்ட வேண்டுமென்பதே, அவ்வளவு பணம் ஈட்ட, தரம் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை. இந்த திரைப்படத்திற்கு ஆன செலவுகள் உச்ச நடிகரின் சம்பளத்தைத் தவிர்த்து 5 கோடி ஆகி இருந்தால் கூட இவர்கள் அதற்கு மேலும் 15 கோடி லாபம் பார்த்து இருக்கிறார்கள். பொதுவாக் சினிமாவில் 1 : 2 தான் லாப பார்முலா, அந்த வகையில் பார்த்தால் செலவுகளைவிட 3 பங்கு லாபம் ஈட்டி இருக்கிறது. 'தோல்வி' என்பதெல்லாம் எதிர்தரப்பும், பேராசைக்கார தயாரிப்பாளர்களின் புலம்பலே அன்றி வேறெதும் இல்லை. 5 கோடி செலவு செய்துவிட்டு 15 கோடி லாபம் பெற்ற பிறகு படத்தின் தோல்வி / வெற்றி என்ற விவாதமெல்லாம் அபத்தம் தானே. குசேலனுக்கு 20 கோடி வசூல் மிக மிக அதிகம். குசேலன் தயாரிப்பாளர்கள் திரை ரசிகர்களை ஏமாற்ற முயன்றதில் பாதி அளவுககு வெற்றிதான் பெற்றிருக்கிறார்கள்.

முழுக்க ஏமாறாமல் திரைரசிகர் சுதாரித்துக் கொண்டதைப் படத்தின் தோல்வி என்று சொல்ல முடியுமா?

விஜயகாந்த்தின் குறிக்கோள் என்னவாக இருக்கும்?கட்சி தொடங்கும் போது எம்ஜியாருக்கும் கொள்கையென்று ஏதும் இருக்கவில்லையா?

விஜய்காந்தின் அரசியலை ஒரு நல்ல அரசியலாக நான் எனது பதிவுகளில் எழுதியதே இல்லை. 'மதச்சார்பற்றது' என்று கூறிக்கொண்டு கட்சி ஆரம்பித்தவர் நாள் தேதி, நட்சத்திரம், எண்கணிதம் பார்த்து கட்சிப்பெயரை வைத்தார். அவ்வாறே கட்சியையும் தொடங்கியவர் என்பதால் தனது திறமை என்று மக்களை கவர என்ன சொல்லப் போகிறார் இவர் என்பதே பெரிய கேளவியாக எழுந்தது. கட்சி தொடங்கிய அன்று புதுமனைப் புகுவிழா போலவே நெற்றியில் திருநீற்றுடன் காணப்பட்டார். இதை மாற்று மதத்தினர் ரசிக்கவில்லை. ஹீரோவாகவே நடித்தவர் மார்கெட் இழந்தால் என்ன செய்வதென்ற கேள்விக் குறியில் எழுந்ததே வி.காந்ததின் அரசியல் பிரவேசம் என்கிறார்கள். வி.காந்தின் அலுவலகத்தில் வேலைசெய்வோர் அவர் சாதியைச் சேர்ந்தவர் என்ற குற்றச் சாட்டு இருக்கிறது, பாமக சாதிக்கட்சி என்று அறிவித்து வெளிப்படையாக செயல்படுவதைப் போல் இவர் செய்தால் விமர்சனம் வருவது குறையும். குடும்ப கட்சி என்று பிறர் கட்சிகளை குற்றம் சொல்லும் இவரின் கட்சியும் அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் படியே இயங்குகிறது என்றே சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்யும் போது இவருக்கான கொள்கைகள் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஈழத்தமிழ்ர்கள் பற்றி உருகுகிறார், இந்தியா இலங்கைக்கு ஆயுதம் விற்பதை எதிர்க்காமல் சப்பைப் கட்டுகிறார். எல்லாவற்றிலுமே இரட்டை நிலைப்பாடு. விஜயகாந்த் தன் கொள்கைகளால்(!) வளரும் வாய்ப்பு குறைவே, திராவிடக் கட்சிகள் தங்களின் போட்டி அரசியலால் பாமக வை வளர்த்தது போல் வளர்த்துவிட்டால் உண்டு.

திரை நாயகன் பற்றிய புரிதல்கள் எம்ஜிஆர் காலத்திற்கும் வி.காந்த் காலத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் ஏற்பட்ட வெறுப்பில் தங்களின் விருப்பம் (சந்தர்ப்பம் வேண்டி) நாடி சென்ற ரசிகர்கள் தான் வி.காந்த் கட்சியில் இருக்கும் தொண்டர்களில் குறிப்பிட்ட விழுக்காடு என்றே சொல்லப்படுகிறது. வி,காந்தின் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அளவுக்கு பற்று கொண்டவர்கள் அல்ல.

ங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?

ண்மையில் சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதிய போது 'நீங்களெல்லாம் இதை பெரியவிசயமாக எழுதுகிறீர்களே' என்று உயர்வைக் கற்பித்து ஒரு கேள்வியும் இட்டு இருந்தனர். மனிதர்கள் எல்லோருக்குமே கலை, இலக்கியம், இசை இதில் எதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்கும். பொருளீட்டல் தவிர்த்து அன்றாட வாழ்வில் பொழுது போக்கும் ஒரு அம்சம் தானே. அதில் முதன்மையாக வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டவை திரைபடங்கள். திரைததுறையில் பணி புரியும் பல்வேறு திறமையால் சாதனை புரிபவகளில் பலரை எனக்கு பிடிக்கும். பாடகர்கள் எஸ்பிபி, டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சின்ன குயில் சித்ரா, பி.சு்சீலா, நடிகர் / நடிகைகளில்
பத்மினி, நாகேஷ், சிவாஜி கனேசன், நாசர், ரகுவரன், கமலஹாசன் ஆச்சி மனோரமா, சில்க்ஸ்மிதா, நதியா, ரீமா சென், ஸ்ரீதேவி,வைகைபுயல், கவுண்டர், விவேக், 'படிக்காதவன்' வரை ரஜினிகாந்த் என பிடித்தவர்களின் பட்டியல் நீளும். ஏபிநாகரஜனின் வசனங்கள் பிடித்தவை, தில்லான மோகானாம்பாள், முதல்மரியாதை, சேது, அழகி, கமலின் கமர்சியல் கலந்த கலைப்படங்கள், இன்னும் நிறைய படங்கள்.. இங்கே எழுதி மாளாது. சுருக்கமாக சொல்வதென்றால் நல்ல படைப்புகள், படைப்பாளிகள் என பொதுவாக ரசிக்கப்படுவையே தான் எனது விருப்பங்களும்.

'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?

ட்டாமாஷ் என்ற பெயரில் வலைப் பதிவு இருந்தாலும், பதிவில் இடுகைகளில் பெரும்பாலானவை எல்லாம் சீரீயஸ் பட்டாசு வகையாகவே இருக்கிறது. ஒரு வரி எழுத்தினாலும் அதன் பொருளை நகைச்சுவை வடிவிலோ, அழுத்தம் கொடுத்தோ எழுதும் உங்கள் எழுத்துக்கள் அதிலுள்ள கருப்பொருளை பதியவைத்திருக்கிறது. நான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் போது கண்ணில் பட்ட இடுகை பெங்களூரை சீரழித்துவரும் வடநாட்டவர் பற்றியது.

"இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ."

அதை படு கமாடியாக நீங்கள் எழுதி பதிவு செய்திருப்பதைப் படித்த போதே தெரிந்தது, வாசகர் நாடி அறிந்து சரியான எழுத்தில் தனது கருத்தைக் கொண்டு சேர்ப்பவர் இவர் என்றே அறிந்து கொண்டேன்.

நான் பதிவுலகிற்கு வந்த பிறகு வந்த பதிவர்களில், எழுத ஆரம்பித்து வெகு சில நாட்களிலேயே அனைவராலும் படிக்கப்படும் வெட்டிப்பயல் பாலாஜி, டிபிசிடி, பெ.மகேந்திரன், மோகன் கந்தசாமி மற்றும் பரிசல்காரன் ஆகியோர் அனைவரின் கவனத்தைக் ஈர்த்தவர்கள் என்று மற்ற பதிவர்களிடம் சொல்வதுண்டு. தளபோட்சுத்ரி என்ற இலக்கிய வடிவத்தை நீங்கள் எழுதிய போதுதான் அப்படி ஒன்று இருப்பதை அறிந்து கொண்டேன்.

பொதுவாக பாலியல் சார்ந்த வற்றைப் பொதுவில் பேசினால் தன்னைப்பற்றிய பிம்பம் நசுங்கிவிடுமே என்று பலபதிவர்கள் எழுதத் தயங்குவர்; நீங்கள் ஒரு வெளிநாட்டு பாலியல்தொழிலியாளியிடம் பேட்டியை தமிழில் மொழிப் பெயர்த்துப் போட்டு பதிவு செய்திருந்தீர்கள். தன்னைப்பற்றிய இமேஜ் இது என்று எவரும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வகையில் நீங்கள் எதையும் மிகத் துணிவாக எழுதுவது பாராட்டக் கூடியது. இதுபோன்று பிம்பத்துக்குள் சிக்காமல் பதிவு எழுதுபவர்கள் லக்கிலுக் மற்றும் ஜ்யாவ்ராம் சுந்தர் ஆகியோர் மட்டுமே எனக்கு தெரிகிறார்கள்.

உங்கள் கேள்விகளைப் பார்த்த போது இவ்வளவு தெரிந்தவருக்கு எனது பதில்கள் எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஐயப்பட்டே பதில் அளித்தேன். நான் அங்கே எழுதியிருப்பவையாவும் பதிவுலகில் எழுத வந்த பிறகு அறிந்து கொண்டவைதான். எனது வாசிப்பு அனுபவங்களின் வழி எனக்கு ஏற்பட்ட சமூகம் தொடர்பான எண்ணங்களை வைத்தே உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். பதிவுலகிற்கு வந்து குறுகிய காலத்தில் சமூக நலன் தொடர்பாகவும், அரசியல் தொடர்பாகவும் பலவற்றைத் தொட்டு கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது, பதிவுலகம் உங்களுக்கு மற்றொரு களம் தான். மற்றபடி அரசியல், சமுகம் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர் என்றே உங்களின் எழுத்துக்கள் வழி உங்களைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் எழுதுவது பயனா என்று ஆராயாமல் நமது கருத்துக்களை விதையாக்கினால் என்றோ ஒரு நாள் நல்ல சூழலில் அது முளைவிட்டு பயிராகும். உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து விதையாக்குங்கள். வாழ்த்துக்கள்.

வார இருதிநாட்களை எனக்காக ஒதுக்கிய நண்பர் கண்ணனுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வலைப்பூவின் 75 -வது பதிவில் மீண்டும் அவரது பங்களிப்பைக் வேறொரு வடிவத்தில் கோருவோம்.

46 comments:

Anonymous said...
September 2, 2008 at 1:18 AM  

இவர் ரொம்ப நல்லவராக இருக்கிறாரே ? இது இவ்வளவு நாள் தெரியாமலேயே பூடுச்சே !!!!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 1:23 AM  

///செந்தழல் ரவி said...///

அடடே! என்னா ஸ்பீடு, இன்னும் தமிழ்மணத்துல இணைக்கவே இல்ல, அதுக்குள்ள கமெண்ட்டா?

நன்றி செந்தழல் ரவி.

லக்கிலுக் said...
September 2, 2008 at 1:41 AM  

நல்ல மசாலா படத்துக்கான க்ளைமேக்ஸ் தரத்தோடு தொடர் பேட்டி முடிந்தது. நன்றி மோகன் கந்தசாமி & கருத்து கந்தசாமி :-)

ஜெகதீசன் said...
September 2, 2008 at 1:48 AM  

கலக்கல் கேள்விகள்!
பதில்களும் கலக்கல்!
:)

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:15 AM  

////நல்ல மசாலா படத்துக்கான க்ளைமேக்ஸ் தரத்தோடு தொடர் பேட்டி முடிந்தது. நன்றி மோகன் கந்தசாமி & கருத்து கந்தசாமி :-)////

அடுத்த பதிவு சரவெடியாக இருக்கும்.

நன்றி லக்கி லுக்.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:16 AM  

////கலக்கல் கேள்விகள்!
பதில்களும் கலக்கல்!
:)/////

நன்றி ஜெகதீசன்

விஜய் ஆனந்த் said...
September 2, 2008 at 6:36 AM  

பேட்டி நல்லா இருந்தது...கேள்விகள், பதில்கள்....ரெண்டுமே!!!!

rapp said...
September 2, 2008 at 7:23 AM  

நிஜ பெண் பதிவர்கள் கொஞ்சம் தயங்கி பின்னூட்டம் இடுவது, பதிவிடுவது உண்மைதான். ஆனால் அவர்கள் வித்தியாசமான அனைத்து வகை பதிவுகளையும் படிச்சிட்டு சொந்த கருத்துக்களும் வைத்துள்ளார்கள். இதை நான் சிலரிடம் பேசியபோது உணர்ந்தேன். அதுமட்டுமில்லாமல், சில சமயங்களில் வேடிக்கையாக பின்நூட்டமிட்டாலோ, ஆண்கள் ஜாலியாகப் பேசும் சில விஷயங்களில் பின்னூட்டமிடும்போதும் தேவையில்லாமல் கடுமையாக சில நண்பர்கள் பதில் பின்னூட்டமிடுகிறார்கள். இது சிலருக்கு(குறிப்பாக பெண் பதிவர்கள் சிலருக்கு) நாம் ஏன் மற்றவர்களிடம் தேவையில்லாமல் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும், எனும் எண்ணத்தை ஏற்படுத்தி தடுத்துவிடுகிறது. இன்னொரு விஷயம் இங்கு பதிவர்கள் என்ன பாலினத்தை சேர்ந்தவர்கள் என்பதை தேவைக்கும் அதிகமாக கவனித்து, எதை எழுதினாலும் அவர்களின் பெர்சனல் வாழ்க்கைக்கும், கேரக்டருக்கும் சம்பந்தப் படுத்தி பார்க்கும் போக்கு கொஞ்சம் ஜாஸ்தியாக உள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், பெர்சனல் காரெக்டர் அனாலிசிஸ் செய்வது ஜாஸ்தியாக இருக்கிறது.

ஆனால் நாம் எல்லாரும் பதிவுலகிற்கு வந்தே சில ஆண்டுகள்தான் ஆகியுள்ளதால், இன்னும் சிறிது நாட்களில் இந்தத் தேவையில்லாதப் போக்கு நன்றாகக் குறைந்து, இன்னும் ஆரோக்கியமான சூழ்நிலை மலரும் என்பது என் நம்பிக்கை:):):)

rapp said...
September 2, 2008 at 7:26 AM  

எனக்கென்னமோ குசேலனுக்கும் முத்து, அருணாச்சலம் போன்ற படங்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அதிலும் சிலர் பாபா படத்தை விட இது மோசம் என்று கூறுவது அவர்களின் விமர்சனம் எந்த அடிப்படையில் என்று ஆச்சர்யப்படுத்துகிறது

rapp said...
September 2, 2008 at 7:29 AM  

ஹி ஹி, விஜயகாந்த் செஞ்ச ஒரே சூப்பர் காரியம், எம்ஜிஆர் மிக நல்ல அரசியல்வாதியா எங்கள மாதிரிப்பட்ட திமுக காரங்களையும் ஏங்க வெச்சதுதான்

Anonymous said...
September 2, 2008 at 7:31 AM  

வசந்த ரவி மடியில் கனம் இல்லை என்றால் ஏன் அவருக்கு வழியில் பயம் கோவியாரே? ஏன் அவருடைய பதிவு உடனே Draft ஆனது ? இன்றைக்கும் Draft ஆகவே இருக்கிறது ? தொடர்ந்து எழுதவேண்டியது தானே அவர் ?

ரத்னேஷ் கானாமல் போனதுமாதிரி அவரும் கானாமல் போய்விட்டாரே?

rapp said...
September 2, 2008 at 7:31 AM  

நான்கூட உங்களோட அந்தப் பதிவை படிச்சித்தான் தொடர்ந்து உங்க பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். உங்களோட சூப்பர் நக்கல் வகை பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும்

Anonymous said...
September 2, 2008 at 7:38 AM  

//பதிவர் கவிதா மீது போலிஸ் வழக்கு பாயும் என்று மிரட்டப்பட்டார். அவர் அதற்கு பயப்படாவிட்டாலும் 'தாதா'க்கள் உலாவும் இடத்தில் தானும் இருக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.//

அவர் எந்த தவறும் செய்யாதவர் எனில் ஏன் அவர் வெளியேறவேண்டும்?

//பிரச்சனைக்குரியவர் மூர்த்திதான், மூர்த்தியின் மனைவி அல்ல//

உங்களுக்கு இதுவும் தெரிகிறது,

///போலியின் செயல் இழிவானது, போலி பக்கத்திற்கு சென்று படிக்கும் போது அங்கே ஆபாச அரங்கேறியிருப்பது தெரியும்///

இதுவும் தெரிகிறது.

ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்று நடிக்கவும் தெரிகிறது.

///என்னைப் பற்றிய தூற்றல்களை பதிவர்கள் புறம் தள்ளினார்கள்.//

இதனை இப்படி எழுதலாம்.

என்னைப் பற்றிய தூற்றல்களை (ஒன்றும் தெரியாத, புதிய) பதிவர்கள் புறம் தள்ளினார்கள் (என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்)

பரிசல்காரன் said...
September 2, 2008 at 7:46 AM  

அரை செஞ்சுரியில் தனது ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் மூலம் கவர்ந்துவிட்டார்கள் மோகனும், கண்ணனும்!

சூப்பர் ஐடியா நண்பா!(மோகன்)

நல்ல பதில்கள் கோவிஜி!

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 9:53 AM  

//Anonymous said...
வசந்த ரவி மடியில் கனம் இல்லை என்றால் ஏன் அவருக்கு வழியில் பயம் கோவியாரே? ஏன் அவருடைய பதிவு உடனே Draft ஆனது ? இன்றைக்கும் Draft ஆகவே இருக்கிறது ? தொடர்ந்து எழுதவேண்டியது தானே அவர் ?

//

வசந்தம் ரவி எழுதாமல் போனதில் எனக்கும் வருத்தம் தான், மடியில் டன் கணக்கில் கனம் இருப்பவர்களே எழுதும் போது வசந்தம் ரவி எழுதாமல் போனது தூரதிஷ்டவசமானது :(

//ரத்னேஷ் கானாமல் போனதுமாதிரி அவரும் கானாமல் போய்விட்டாரே?
//

ரத்னேஷ் காணாமல் போகவில்லை, மீண்டும் வருவார். மின் அஞ்சலில் எனக்கு உறுதி அளித்திருக்கிறார்.

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 9:59 AM  

//Anonymous said...

அவர் எந்த தவறும் செய்யாதவர் எனில் ஏன் அவர் வெளியேறவேண்டும்?//

இதுபோன்ற தாக்குதல்களால்
சிலர் ஒதுங்கிப் போவார்கள், சிலர் வேறு பாதையை தேர்ந்தெடுப்பார்கள், கவிதாவின் விருப்பம் எதுவோ அதைத்தான் அவர் செய்து இருக்கிறார்.

////பிரச்சனைக்குரியவர் மூர்த்திதான், மூர்த்தியின் மனைவி அல்ல//

உங்களுக்கு இதுவும் தெரிகிறது,

///போலியின் செயல் இழிவானது, போலி பக்கத்திற்கு சென்று படிக்கும் போது அங்கே ஆபாச அரங்கேறியிருப்பது தெரியும்///

இதுவும் தெரிகிறது.

ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்று நடிக்கவும் தெரிகிறது.//

என் மீது புழுதிவாரி இரைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், அவர்களிடம் நடிப்பதற்கு எனக்கு அவசியம், செல்லாக் காசு அளவுக்கு பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

/////என்னைப் பற்றிய தூற்றல்களை பதிவர்கள் புறம் தள்ளினார்கள்.//

இதனை இப்படி எழுதலாம்.

என்னைப் பற்றிய தூற்றல்களை (ஒன்றும் தெரியாத, புதிய) பதிவர்கள் புறம் தள்ளினார்கள் (என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்)

September 2, 2008 7:38 AM//

புதுப்பதிவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக 'தூற்றல்களை' 'போற்றல்கள்' என்ற பெயரில் இணைத்து வைத்து இருக்கிறேன். எனது பக்கதில் feedjit க்கு அருகில் இணைப்பு இருக்கிறது சென்று பார்க்கவும்.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 10:48 AM  

விஜய் ஆனந்த்,

////பேட்டி நல்லா இருந்தது...கேள்விகள், பதில்கள்....ரெண்டுமே!!!!////

மிக்க மகிழ்ச்சி நண்பா, தொடர்ந்த உங்கள் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 11:38 AM  

ஹாய் வெட்டி ஆபிசர்,
////சில சமயங்களில் வேடிக்கையாக பின்நூட்டமிட்டாலோ, ஆண்கள் ஜாலியாகப் பேசும் சில விஷயங்களில் பின்னூட்டமிடும்போதும் தேவையில்லாமல் கடுமையாக சில நண்பர்கள் பதில் பின்னூட்டமிடுகிறார்கள்.////

இது தான் பெண்பதிவர்களுக்கு மிகப்பெரும் பிரச்சினை. வேடிக்கையாக பலவிஷயங்களை ஆண்கள் எழுதும்போது அது பிடிக்காதவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் அல்லது டிப்ளமேட்டிக்காக எதிர்வினையாற்றுகிறார்கள். கடுமையாக எதிர்வினையாற்றினால் பதில் இன்னும் கடுமையாக இருக்கும் என்ற அச்சம் தான். ஆனால் பெண்கள் அவ்விஷயங்களை எழுதும் போது ஆண்கள் அமைதியாக இருப்பதோ டிப்ளமேட்டிக்காக எதிர்வினையாற்றுவதோ இல்லை. ஏதோ கலாச்சார பாதகம் அவர்கள் செய்ததுபோல் எரிந்து விழுவார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்க பதிவர் தமிழச்சி போன்றோர் பாணிதான் சரியாக வரும். மேலும் அச்சமயங்களில் ஏனைய பெண் பதிவர்கள் அப்பெண்பதிவருக்கு ஆதரவு பின்னூட்டமோ ஆண்களின் கடுமையான எதிர்வினைகளுக்கு எதிர்வினையோ ஆற்றினால் ஆண் பதிவர்களுக்கு கொஞ்சம் பயம் வரலாம்.

என்னைப்பொறுத்தவரை, பொதுவாழ்க்கையில் பெண்களை (எதிர் பாலினரை) டீஸ் செய்யும்போது மற்றும் இயல்பான காரணங்கள் தவிர வெறேப்போதும் பால்பேதம் பார்ப்பதில்லை. வாலன்டீனா தமிழரசி பற்றி நான் அடாவடி பதிவிட்டது கூட அவர் புதிய பதிவர் என்பதால் (புதிய பதிவர்களுக்கு ஈகோ பிரச்சினை இருக்காது என கருதுவதால்) தான். பெண் என்பதால் அல்ல. இதேவகை அடாவடி பதிவுகளை புதுகை அப்துல்லா பற்றியோ, பரிசல்காரனைப் பற்றியோ என்னால் இடமுடியும் (சீனியர் பதிவர் இளா -வுக்கு கூட அடாவடி பின்னூட்டங்கள் இட்டுள்ளேன்) அவர்களாலும் அதுமுடியும்.


////கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், பெர்சனல் காரெக்டர் அனாலிசிஸ் செய்வது ஜாஸ்தியாக இருக்கிறது.////

பதிவர்களின் பதிவுக்கருத்துக்களைக் கொண்டு அவர்களின் பர்சனல் காரக்டர்களை அனுமானம் செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன். அது அவர்கள் ஒரு குழுவாக செயல்படவும் (குழுவாக செயல்படுவது எல்லா சமயங்களிலும் சரியல்ல) நட்புகளை பேணவும் உதவும். ஆனால் அனுமானம் செய்தவற்றை வைத்து டிஸ்கிறிமினேசன் செய்வது, சொந்த வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வது தேவையற்றது. பெண்கள் சிலர் "சீ நீ ரொம்ப கெட்டவன்" என்று என் பழக்கத்தை நிறுத்திக்கொண்ட சம்பவமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

நன்றி ராப்.
Back to position?

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 11:41 AM  

/////எனக்கென்னமோ குசேலனுக்கும் முத்து, அருணாச்சலம் போன்ற படங்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அதிலும் சிலர் பாபா படத்தை விட இது மோசம் என்று கூறுவது அவர்களின் விமர்சனம் எந்த அடிப்படையில் என்று ஆச்சர்யப்படுத்துகிறது////

முத்து தவிர நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய படங்களை முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு நான் பார்க்க வில்லை.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 11:46 AM  

/////என்னைப் பற்றிய தூற்றல்களை (ஒன்றும் தெரியாத, புதிய) பதிவர்கள் புறம் தள்ளினார்கள் (என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்)////

அனானியா வந்தால் எப்படி எல்லாரைப்பற்றியும் புதிய பதிவர்கள் தெரிந்துகொள்வது? மடியில் கணம் கான்சப்ட் அனானியாக வரவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கும் பொருந்துமா?

நன்றி அனானி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 11:48 AM  

////ஹி ஹி, விஜயகாந்த் செஞ்ச ஒரே சூப்பர் காரியம், எம்ஜிஆர் மிக நல்ல அரசியல்வாதியா எங்கள மாதிரிப்பட்ட திமுக காரங்களையும் ஏங்க வெச்சதுதான்////
:-)))))

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 11:55 AM  

////அரை செஞ்சுரியில் தனது ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் மூலம் கவர்ந்துவிட்டார்கள் மோகனும், கண்ணனும்!

சூப்பர் ஐடியா நண்பா!(மோகன்)

நல்ல பதில்கள் கோவிஜி!////


லாங் லெக் -ல் நீங்கள் நின்று கொண்டு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பற்றி புகழ்கிறீர்கள். பந்தை அற்புதமாக பீல்ட் செய்து ஏற்கனவே நீங்கள் ஸ்டார் ஆகிவிட்டீர்கள். :-))))

நன்றி பரிசல்.

Anonymous said...
September 2, 2008 at 12:28 PM  

//அனானியா வந்தால் எப்படி எல்லாரைப்பற்றியும் புதிய பதிவர்கள் தெரிந்துகொள்வது? மடியில் கணம் கான்சப்ட் அனானியாக வரவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? //

பொருந்தும் விழய்ம் அல்ல.

மகேஷ்.

Anonymous said...
September 2, 2008 at 12:31 PM  

//என் மீது புழுதிவாரி இரைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், அவர்களிடம் நடிப்பதற்கு எனக்கு அவசியம், செல்லாக் காசு அளவுக்கு பயன் இருப்பதாகத் தெரியவில்லை.///

நீங்கள் தினமும் சொல்லும் கருத்துக்களில் கூடத்தான் செல்லாக்காசு பயன் இல்லாமலிருக்கிறது. அதுக்காக நீர் கருத்து சொல்லாமல் இருக்கிறீரா என்ன? அலுவலகத்தில் வேலை பார்க்கிறீரோ இல்லையோ, கலைஞரையோ, வைகோவையோ, பிள்ளையாரையோ, பாஜகவையோ, சோவையோ, மன்மோகன்சிங்ஜியையோ இழுத்து பதிவுகளை எழுதி தள்ளிக்கொண்டுதானிருக்கிறீரல்லவா?

மகேஸ்

Anonymous said...
September 2, 2008 at 12:35 PM  

///என் மீது புழுதிவாரி இரைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், ///

@கோவி கண்ணன்

நீர் எழுதிய மின்னஞ்சல் மற்றும் CHAT Messages ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது, அதில் இருந்து உங்கள் உண்மை முகத்தை அறிந்தேன். யார் சந்தர்ப்பவாதிகள் என்றும் அறிந்தேன். தமிழ் வலையுலகில் இப்போது உள்ள ஆரோக்கிய மிதவாத சூழல் நீடிக்கவேண்டும் என்றால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமலிருப்பதே நலம் என்று இப்போது நினைக்கிறேன்.

@ பெயர் வேண்டாமே

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 1:09 PM  

////நீர் எழுதிய மின்னஞ்சல் மற்றும் CHAT Messages ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது, அதில் இருந்து உங்கள் உண்மை முகத்தை அறிந்தேன். யார் சந்தர்ப்பவாதிகள் என்றும் அறிந்தேன். தமிழ் வலையுலகில் இப்போது உள்ள ஆரோக்கிய மிதவாத சூழல் நீடிக்கவேண்டும்/////

நிச்சயம் நீடிக்கவேண்டும். ஆனால் இப்படி சங்கேத பாஷையில் பேசினால் கோவி அவர்களுடன் மட்டுமே உரையாட முடியும். "எனது நோக்கம் அம்பலப்படுத்துதல்(?) தான், மற்றோருடன் விவாதிக்க விரும்பவில்லை" என்றால் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். பிறகு இதுவும் செல்லாக்காசுதான்.

கருத்துக்களின் வலிமையால் மிதவாத சூழல் மறையுமா? சொல்லும் விதத்தில் தானே பிரச்சினை. சில பல எட்டிக்விட் -களை அனுசரித்தால் பிரச்சினை இருக்காது. நீங்கள் பேசுவதும் தெளிவாகவே உள்ளது. நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியுமா? முடிந்தால்....

புதுகை.அப்துல்லா said...
September 2, 2008 at 2:28 PM  

என் கருத்தும் இதுதான். தலித் விஷயங்களில் கலைஞரும் சமரசம் தான் செய்கிறார். தீர்க்கமான முடிவுகள் கிடையாது. திருமா தான் இதற்கு சரியான ஆள்.
//

மோகன் அண்ணா காலத்தில் தி.மு.க திமுகாவாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கலைஞ்ர் தலைமை ஏற்ற பின் அவர் எடுத்த தொடர் தாழ்தப்பட்டோர் ஆதரவு நடவடிக்கைகளால் தி.மு.க என்பது தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற நிலையை அடைந்தது. அதனால் தெற்கே முக்குலத்தோர்,மேற்கே கவுண்டர் போன்ற ஆதிக்க சமுதாயத்தினரால் பெரும்பாலும் திமுக வெறுக்கப்படத் துவங்கியது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் துவங்கியபோது இயல்பாகவே இந்த சமுதாயத்தினரின் ஆதரவு அங்கு செல்லத் துவங்கியது. ஓரணியில் நின்று திமுக வை ஆதரிக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட சமுதாயம் கல்வியின்மையாலோ, அறியாமையாலோ சினிமாக் கவர்ச்சியில் மயங்கி எம்ஜிஆரை ஆதரிக்கத் துவங்கி விட்டது. விளைவு கலைஞருக்கு வனவாசம். சூடுபட்ட கலைஞர் சமரசம் செய்கிறார்.

புதுகை.அப்துல்லா said...
September 2, 2008 at 2:34 PM  

கட்சி தொடங்கும் போது எம்ஜியாருக்கும் கொள்கையென்று ஏதும் இருக்கவில்லையா?
//

உங்க கட்சியின் சித்தாந்தம் என்ன? என்று நிருபர்கள் கேட்டபோது எம்ஜிஆர் அண்ணாயிசம் என்றார். அண்ணாயிசம் என்றால் என்ன என்று கடைசிவரை கூறாமலேயே மறைந்து விட்டார்.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:50 PM  

////நான்கூட உங்களோட அந்தப் பதிவை படிச்சித்தான் தொடர்ந்து உங்க பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். உங்களோட சூப்பர் நக்கல் வகை பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கும்/////

அறிவேன். உங்கள் "ஏ காவ் மே ஏ கிசான் ரகு தாத்தா" பதிவு எப்படியோ அப்படித்தான் எனது அந்த பதிவும். என்ன ஒரு சின்கொரனைசெஷன்!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:52 PM  

///தெற்கே முக்குலத்தோர்,மேற்கே கவுண்டர் போன்ற ஆதிக்க சமுதாயத்தினரால் பெரும்பாலும் திமுக வெறுக்கப்படத் துவங்கியது. ///

கருத்து டக்கர். உண்மையும் கூட!

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:56 PM  

////உங்க கட்சியின் சித்தாந்தம் என்ன? என்று நிருபர்கள் கேட்டபோது எம்ஜிஆர் அண்ணாயிசம் என்றார். அண்ணாயிசம் என்றால் என்ன என்று கடைசிவரை கூறாமலேயே மறைந்து விட்டார்./////

ஆனால் ஈழ ஆதரவும் சத்துணவும் (ஒரிஜினல் இல்லையென்றாலும் வால்யூ ஆடட் தானே!) எம்ஜிஆரை என்றும் நினைக்கூர வைப்பவை.

நன்றி புதுகை.

புதுகை.அப்துல்லா said...
September 2, 2008 at 3:05 PM  

ஆனால் ஈழ ஆதரவும்
//

அது கலைஞர் அவரை மலையாளி என்று பிரசாரம் செய்ததால் தானும் தமிழன் என்று காட்ட எடுத்த நிலை.


//சத்துணவும் //

சத்துணவு விஷயத்தில் மனிதாபிமானம் உள்ள யாராலும் எம்.ஜி.ஆர் சொண்டுவந்த அந்த திட்டத்திற்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்க முடியாது.

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 8:28 PM  

//உண்மை அறிந்தவன் said...

///என் மீது புழுதிவாரி இரைத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், ///

@கோவி கண்ணன்

நீர் எழுதிய மின்னஞ்சல் மற்றும் CHAT Messages ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்தது, அதில் இருந்து உங்கள் உண்மை முகத்தை அறிந்தேன். யார் சந்தர்ப்பவாதிகள் என்றும் அறிந்தேன். தமிழ் வலையுலகில் இப்போது உள்ள ஆரோக்கிய மிதவாத சூழல் நீடிக்கவேண்டும் என்றால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமலிருப்பதே நலம் என்று இப்போது நினைக்கிறேன்.

@ பெயர் வேண்டாமே//

நான் பெயரைப் போட்டு தானே எழுதுகிறேன். பெயரோடே சொல்லலாமே. நான் எழுதிய மின் அஞ்சலைப் போட வேண்டியதுதானே. என்னிடமே 100க் கணக்கான மின் அஞ்சல் குப்பைகள் இருக்கிறது. இங்கு எழுதப்பட்ட விசயமே வேறு. பழசை நோண்ட வேண்டாமென்பதால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே விடையளித்துள்ளேன். நீங்கள் குறிப்பிடும் மின் அஞ்சலை இங்கே போடுங்கள், நான் பிறழ்ந்து எழுதுகிறேனா என்பதை நானே சோதனை செய்து கொள்கிறேன்.

மூர்த்தி - மற்றும் மூர்த்தி எதிர்ப்பு கோஷ்டிகள் என்னைப் பொருத்து ஒன்றுதான், என்னை சமாதனம் செய்யச் சொன்னதும் இல்லாமல், ஒருவரை ஒருவர் எதிர்க்க துணிவில்லாமல் என்மீது பாய்ந்தனர். பெரியவர் தனியாக போராடி வந்த போது அவருக்கு அளிக்கப்படாத ஆதரவும், திடிரென போலி எதிர்ப்பு ஏன் வந்தது என்றெல்லாம் யாருமே கேட்டுக் கொள்வதில்லையோ ?. குப்பைகளைக் கிளர எனக்கும் விருப்பம் இல்லை.

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 8:31 PM  

//நிச்சயம் நீடிக்கவேண்டும். ஆனால் இப்படி சங்கேத பாஷையில் பேசினால் கோவி அவர்களுடன் மட்டுமே உரையாட முடியும். "எனது நோக்கம் அம்பலப்படுத்துதல்(?) தான், மற்றோருடன் விவாதிக்க விரும்பவில்லை" என்றால் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். பிறகு இதுவும் செல்லாக்காசுதான்.

கருத்துக்களின் வலிமையால் மிதவாத சூழல் மறையுமா? சொல்லும் விதத்தில் தானே பிரச்சினை. சில பல எட்டிக்விட் -களை அனுசரித்தால் பிரச்சினை இருக்காது. நீங்கள் பேசுவதும் தெளிவாகவே உள்ளது. நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியுமா? முடிந்தால்....
//

மோகன்,
:)

நானும் எதிர்ப்பார்கிறேன்.

குமரன் (Kumaran) said...
September 2, 2008 at 10:49 PM  

மூன்று பாகங்களும் நன்றாக இருந்தன மோகன் கந்தசாமி.

கோவி.கண்ணனைத் தொடர்ந்து படித்து வருவதால் எல்லா பதில்களும் ஏற்கனவே படித்த மாதிரியே இருந்தன. :-)

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 10:53 PM  

//குமரன் said...மூன்று பாகங்களும் நன்றாக இருந்தன மோகன் கந்தசாமி.

கோவி.கண்ணனைத் தொடர்ந்து படித்து வருவதால் எல்லா பதில்களும் ஏற்கனவே படித்த மாதிரியே இருந்தன. :-)
//

நன்றி குமரன்,

சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும் !
:)

Anonymous said...
September 2, 2008 at 11:45 PM  

//கட்சி தொடங்கிய அன்று புதுமனைப் புகுவிழா போலவே நெற்றியில் திருநீற்றுடன் காணப்பட்டார். இதை மாற்று மதத்தினர் ரசிக்கவில்லை. //

அதில் என்ன தப்பைக் கண்டீ(டா)ர்கள்?

Anonymous said...
September 2, 2008 at 11:48 PM  

///கருத்துக்களின் வலிமையால் மிதவாத சூழல் மறையுமா? சொல்லும் விதத்தில் தானே பிரச்சினை. சில பல எட்டிக்விட் -களை அனுசரித்தால் பிரச்சினை இருக்காது. நீங்கள் பேசுவதும் தெளிவாகவே உள்ளது. நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியுமா? முடிந்தால்....///

why not ? sure...

ஆனால் வசந்தம் ரவி, ரத்னேஷ் போல மோஹன் கந்தசாமி இன்னொரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி ஆசாமியில்லையே? உங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடவும், உங்களை அழைத்து உறுதிசெய்துகொண்டுவிட்டபிறகு உங்கள் மடலுக்கு அவ்வாறானவைகளையனுப்புகிறேன்

TBCD said...
September 3, 2008 at 4:29 AM  

மோகன்,
இப்படி ஏதாவது வருமென்று முன்னரே நான் சொன்னதை நினைவுறுத்துகிறேன்.....

ஆனால், சுண்டெலிகளுக்கு பயந்து வீட்டை விட்டு போக முடியும்மா...

நீங்க அடிச்சி ஆடுங்க..

கேள்வி பதில் அட்டகாசம்...

மோகன்/கோவி..வாழ்த்துக்கள்...


///Anonymous said...
ஆனால் வசந்தம் ரவி, ரத்னேஷ் போல மோஹன் கந்தசாமி இன்னொரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி ஆசாமியில்லையே? ///

மோகன் கந்தசாமி said...
September 3, 2008 at 4:35 PM  

///ஆனால் வசந்தம் ரவி, ரத்னேஷ் போல மோஹன் கந்தசாமி இன்னொரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி ஆசாமியில்லையே? உங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடவும், உங்களை அழைத்து உறுதிசெய்துகொண்டுவிட்டபிறகு////

நல்லது!, மெட்டல் டிடக்டர் சோதனை ஏதும் உள்ளதா? முகமென்று ஏதேனும் இருந்தால் காட்டுங்கள், இல்லையென்றால் ஆளை விடுங்கள்!

மோகன் கந்தசாமி said...
September 3, 2008 at 4:38 PM  

////மோகன்,
இப்படி ஏதாவது வருமென்று முன்னரே நான் சொன்னதை நினைவுறுத்துகிறேன்.////

ஞாபகம் இருக்கிறது TBCD அவர்களே!

///ஆனால், சுண்டெலிகளுக்கு பயந்து வீட்டை விட்டு போக முடியும்மா...////
கரைக்ட்டு தான!


/////நீங்க அடிச்சி ஆடுங்க..
கேள்வி பதில் அட்டகாசம்...
மோகன்/கோவி..வாழ்த்துக்கள்...////

நன்றி நண்பரே!

கோவி.கண்ணன் said...
September 3, 2008 at 8:47 PM  

மோகன்,

பேனர் விளம்பரம் கலக்கி இருக்கிங்க,
லக்கி லுக் கட்டுரை படு சூடாக இருக்கும் போல இருக்கிறது.

மோகன் கந்தசாமி said...
September 3, 2008 at 11:36 PM  

/////பேனர் விளம்பரம் கலக்கி இருக்கிங்க,////

நன்றி கோவி கண்ணன்

///லக்கி லுக் கட்டுரை படு சூடாக இருக்கும் போல இருக்கிறது.///

ஆம் இன்னும் சிறிது நேரத்தில் வலை ஏற்றுகிறேன்.

குசும்பன் said...
September 4, 2008 at 12:35 AM  

மகேந்திரன் என்று ஒரு பதிவரை போல் இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.
செம ஹாட்டு மச்சி:))

மோகன் கந்தசாமி said...
September 4, 2008 at 2:01 AM  

///மகேந்திரன் என்று ஒரு பதிவரை போல் இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.
செம ஹாட்டு மச்சி:))///

வாருங்கள் குசும்பரே! கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ் மகேந்திரனா? அவர் பதிவுகளை படித்துள்ளேன். எனக்கு அப்படி தோன்ற வில்லையே. கோவி கண்ணன் கூட அப்படி சொன்னார். இன்னும் வேறு சிலர் இதைப்போல் சொல்கிறார்களா என்று பார்க்கிறேன்!.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
September 26, 2008 at 4:15 AM  

சிவபெருமான் : கேள்வியை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
தருமி: நானே கேட்கிறேன் எனக்கு கேள்வி கேட்கமட்டும் தான் தெரியும்.

சிவபொருமான் சொன்னது கந்தசாமிகளுக்குப் பொருந்தும்.
தருமி சொன்னது பொருந்தவே பொருந்தாது.

அருமையான கேள்வி பதில் தொகுப்பு, பதிவுலக வி.ஐ.பி யின் அடுத்த முத்திரை! அழியா முத்திரை!!

எனக்கும் கோவியாரிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.கிடங்கு