Monday, September 1, 2008

சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-2

·

பதிவர் கோவி கண்ணன்

தமிழ்வலைப்பூக்களில் திராவிட எழுத்து முன்னோடிகளில் ஒருவரான கோவி கண்ணன் அவர்களின் பேட்டியை 'சும்மா ட்டமாஷ்' வலைப்பூவில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மின்னஞ்சலில் அவர் அளித்த பேட்டியின் முதல் பாகத்தை சென்ற பதிவில் வெளியிட்டேன். இது பாகம் இரண்டு

டந்த அரைநூற்றாண்டு முன்புவரை மற்றவரை அடிமைப்படுத்த அதிகாரத்திற்கு கூழைக்கும்பிடு போட்ட ஆதிக்க வர்க்கம் இன்று உ.பி -யில் தலித்துகளுக்கும் சலாம் போடுகிறது. நவீன தீண்டாமை தொடங்கிவிட்டதா?

லித்தவரை எதிரியின் மீது பாய்ந்துப்பார், பலிக்காவிட்டால் எதிரியிடம் மண்டியிட்டு படையலைப் போடு என்பது போன்றது தான் இந்த மண்டியிடல். வெளித் தோற்றத்துக்கு தலித்துக்களை மதிப்பது போல் தோன்றினாலும் அவர்களின் தயவில்லாமல் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது, ஆதாயம் பெற முடியாது என்பதுதான் அவர்கள் எண்ணம். உண்மையான அரவணைப்பு என்பது அவை சாதி அடையாளங்களைத் துறந்தால் மட்டுமே ஏற்படும். இல்லை என்றால் அவை தன் சாதிப்பெருமை சேர்ப்பதற்காக செய்யும் மற்றொரு இழிசெயல். இவற்றினால் பேதங்கள் என்றுமே ஒழியாது, நவீன தீண்டாமையின் தொடக்கமே அவை. 'நவீன தீண்டாமை' மிக ஆழமாக ஒரே சொல்லில் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

லித் வினய் கட்டியாரின் தலைமையில் அன்று பெரியார் சிலையை எதிர்த்த பார்ப்பனர்கள் இன்று மாயாவதியின் உடனிருந்தே அதை செய்கின்றனர். "பெரியார் தென்னகத்தை சேர்ந்தவர், ஏதேனும் பயனிருக்கும் என்றால் தென்னாட்டில் அவர் சிலையை நிறுவுவோம்" என்று முழங்கிய மாயாவதியுடன் செல்வப்பெருந்தகை இணைந்ததை பற்றி உங்கள் கருத்தென்ன? பெரியாருக்கு பிறகான ஒரு புள்ளியில் இருந்து தலித் விடுதலையை தமிழகத்தில் தொடங்க முடியுமா?

மாயாவதியுடன் தன்னை இணைத்துக் கொள்வது செல்வப்பெருந்தகையின் விளம்பர அரசியல் தான். தலித் விடுதலைக்குப் பாடுபடுபவர் எனில் திருமாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் திருமாவுடன் இணைந்தே போராடிக் கொண்டு இருக்கவேண்டும். தலித் அமைப்புகளின் பல்வேறு தலைவர்கள் பிரிவதால் ஒட்டுமொத்தமாக இருக்கும் அவர்களின் வாக்கு சக்தி பலவீனமடைக்கிறது.

தலித்துகள் தவிர்த்து பிறர் தற்போதைய பல்வேறு அரசியல் சூழல் காரணமாக ஒரே புள்ளியில் இணைதல் என்பதற்கான தேவை மிகக் குறைவே. தமிழ்நாட்டு பிரச்சனைக்கு ஒரே புள்ளியில் இணையவே முடியாது. தற்போதும் கூட தமிழர்களின் ஒட்டுமொத்த குரல் காவேரி போன்ற வெளிப்பிரச்சனைகளால் தானே இணைகிறது? தலித் என்று ஒரே சொல்லில் சொன்னாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கிருஷ்ணசாமி, திருமா ஆகியவர்களின் தலையில் பிரிந்தே இருக்கிறார்கள். இராமதாசுடன் இணைந்து அரசியல் நடத்தும் திருமா, கிருஷ்ணசாமி போன்றவர்களுடன் இணைந்து தலித் அமைப்புகளை ஒன்றிணைத்தால் நீங்கள் சொல்வது நடக்கலாம். மற்ற தலைவர்களை விட திருமாவின் செயல்பாடுகள், போராட்ட குணம் அனைவராலும் கவரப்படுபவை.

த்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கலைஞரின் ஆளுமை இப்போது திருமாவிடம் தென்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் எதிர்காலம் யார்கையில் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

காமராஜர் சிறப்பாக ஆட்சி நடத்தினார். திருமணம் கூட அவர் செய்து கொள்ளவில்லை. வாரிசுகள் வந்துவிட்டால் சுயநலம் மேலோங்கிவிடும். கலைஞர் அரசியலில் இது கண்கூடு. திருமா இதுவரை திருமணம் செய்து கொள்ளாததைப் பார்க்கும் போது காமராஜரின் வழியை பின்பற்றி முழுமூச்சாக தன்னை அற்பணித்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆனால் திராவிடக் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திருமாவின் தலைமையில் இணைவது கடினம். திருமா தமிழ்மொழி உணர்வு, ஈழம் என பல்வேறு தளங்களில் போராடினாலும் திருமாவை ஒரு தலித் இன போராளியாகவே மட்டுமே பார்க்கிறார்கள்.

மீப காலமாக பெரியாரிஸ்டுகளாக உருமாற்றம் அடைந்த கம்யூனிஸ்ட்டுகள் திமுக இளைஞர்களை ஈர்க்கமுடியவில்லையே! திருமா அதில் வெற்றி பெறுவாரா?

சீனாவில் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறை, வடகொரியாவின் தனிமை, சீனாவின் திபெத் ஆக்ரமிப்பு, ரஷ்ய சிதைவு, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் இவையே கம்யூனிஸ்டுகளைப் பற்றி நினைக்கும் போது ஏற்படுபவை. இளைஞர்களின் மனதில் கம்யூனிசம் என்பது தடைசெய்யப்பட்ட நக்சல் இயக்கம் போன்றது என்ற நினைப்பையே விதைத்திருக்கிறது. மேலும்ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு, வேறொரு மாநிலத்தில் கூட்டு என்பதாக கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை இவையெல்லாம் கம்யூனிஸ்டுகளுக்கு பின்னடைவுதான்.

திருமா கடந்த 25 ஆண்டுகால அரசியல் வாழ்கையில் தலித் விடுதலைக்காக இளைஞர்களை தயார்படுத்தி இருக்கிறார். இனி தலித் விடுதலைக் குறித்த கவலைகளை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விட்டுவிட்டு, பொதுவான தமிழர் பிரச்சனையில் ஈடுபத்திக் கொண்டால் நீங்கள் சொல்வது சாத்தியமே.

வேறுவழியில்லாது, ஜனநாயகத்தில் வாய்ப்புள்ள எல்லாவகை குட்டிக்கரண அரசியலையும் செய்யும் திமுக மற்றும் பாமக, எதிப்பரசியலில் சமூகத்தொண்டு ஆற்றும் பொதுவுடமைவாதிகள் என எல்லோரும் இயன்ற நல்லதை தமிழகத்திற்கு செய்யும்போது அதிமுக வின் சுயநல அரசியலையும் மதிமுக வின் குழப்ப அரசியலையும் எவ்வகையில் சேர்ப்பது?

விளக்கமான கேள்வியிலே பதிலையும் சொல்லிவிட்டு அதை கேள்வியாக்கி இருக்கிறீர்கள். ஈழவிடுதலைக் குறித்த ஜெவின் நிலைப்பாடும் மற்றும் வைகோவின் நிலைப்பாடு ஆகியவை ஒன்றுகொன்று எதிரானவை. இவர்கள் ஒன்றாக இருப்பதால் ஈழத்தமிழ் விடுதலைக்கு எதுவும் பயன் உண்டா ? வேறு சில ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் என்னும் அடையாளத்தில் வலம் வருகிறார்கள் அவ்வளவுதான்!

மிழ் வலைப்பதிவுகளின் வீச்சு என்ன என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

ருவரின் எழுத்து திறன், அதற்கான அங்கீகாரங்களையும் வெகு ஜன ஊடகங்கங்கள் தீர்மாணித்துவிட முடியாது என்பதே வலைப்பதிவுகள் மூலம் தெரிய வரும் உண்மை. எண்ணங்களை கோர்வையாக எழுதும் எவரும் எழுத்தாளர்களே. கோர்வையாக எழுத முடியாவிட்டாலும் எண்ணங்களை பதிய வைக்கும் முயற்சியில் வலைப்பதிவாளர்கள் அனைவருமே தத்தம் வழியில் அதனை நல்ல முறையில் செய்துவருகின்றனர். ஒரு காலத்தில் பேனா நண்பர்கள் இணைப்பு என்பதாக பல்வேறு வியாரபார நோக்கு நிறுவனங்கள் செயல்பட்டு அறிமுகம் இல்லாதவ்ர்களை ஒன்றிணைக்க முயன்றிருந்தாலும் அதன் வீச்சு அவ்வளவாக இருக்கவில்லை. நல்லதொரு பேனா நண்பர்கள் ஆகுவதற்கு இருவருக்குமான புரிந்துணர்வை ஏற்படும் காலம் மிக மிக நீளம். அந்த நட்பு நீடித்த நட்பாக நிலைத்திருந்ததா என்றும் தெரியவில்லை.

ஆனால் வலையுலகில் நட்பாக மாறும் இருவர், எழுத்தின் வழி எண்ண ஓட்டங்களை அறிந்து கொண்டு விருப்பத்தின் பெயரிலேயே நட்பாக இணைகின்றனர், தொடர்கின்றனர். இந்த நட்பிற்கான காரணம் மிக வெளிப்படையானது. எழுத்து இங்கே நட்பாக இணைவதற்கு (ஒருவருக்கு முதலில் கிடைப்பது நல்ல நட்புகளே) மிக முக்கிய காரணம் அவரும் தமிழர், தமிழ் மீது பற்றுக் கொண்டுள்ளதால் தமிழ் எழுதுகிறார் என்பதே. வலையுலகில் தனிப்பட்ட மனிதர்களின் நட்பு நலம் என்பது தவிர்த்து, வலைப்பதிவுகளின் மிக மிக முதன்மைப் பயனாக நான் நினைப்பது, வெவ்வெறு இடங்களில் வாழும் தமிழர்களை எண்ணத்தில் ஒன்றாகவும், மாறுபட்ட எண்ணம் கொண்ட தமிழர்களின் தொ்குப்பாகவும் ஆக்குகிறது.

வெகு ஜன ஊடகங்களின் வழி வாசகருக்கு வாசிப்பு அனுபவம் என்பதைத் தவிர அவை வாசகர்களின் இணைப்பு பாலம் ஆக அமையும்படி அதன் இயல்பான தன்மைகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

ஆக வலைப்பதிவுகளின் வீச்சு என்பது வெறும் எழுத்து என்பதைத் தாண்டி வெறொரு தளமான தமிழர்களுக்கான ஒற்றுமை என்பதில் நன்கு வளர்ந்தே நிற்கிறது. இதுவே அடித்தளமாக இருப்பதால், வலைப்பதிவுகள் எதிர்காலத்தில் மக்கள் பிரச்சனைக்கு ஆலோசனை தரும் அமைப்பாகவும், இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய களமாகவும் அமையும்.

மிழ் வலைப்பூக்களால் வணிக ரீதியில் பாதிக்கப்பட்டோர்(?) தாங்களாகவே வலைப்பூக்கள் தொடங்கி பாதிப்புகளை குறைக்க முயல்கின்றனர். (உ - ம்: பிரமிட் சாய் மீரா, வானத்தின் கீழே). வரதட்சனை தடுப்பு சட்டம் பற்றிய வலைப்பூ -கூட (பாதிக்கப்பட்ட தரப்பில்?) இருந்து வந்தது. வலைப்பூக்கள் சமுகத்தை பாதிக்கத்தொடங்கிவிட்டதா?

கூட்டம் கூடுமிடத்தில் அவர்களின் தேவையறிந்து கடை திறப்பதுதானே விற்பனையாளர்களின் திறமை?
கூகுள் நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாருங்கள் ஒருவர் தேடும் தகவலைப் பொருத்தே அவர்களின் விளம்பரங்கள் அங்கே காட்டப்படும். உயிர்புடன் (ஆக்டிவ்) தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்கள் சுமார் 5000 இருக்கும் என்றால் நாள்தோறும் அதனை படிக்கும் வாசகர்கள் ஒரு லட்சம் வரையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். இவை அன்றாடம் நடப்பவை, வாசிப்பு அதிகம் இருக்கும் இடத்தில் தங்களைப் பற்றியும் சொன்னால் அது அன்றே சென்றடைந்துவிடும். மேலும் குறிபிட்ட வகையான செய்திகளைப் படிப்பவர்கள் என்கிற வட்டம் எதுவும் இல்லாததால் வலைப்பதிவின்வழி பலரையும் சென்றடைய வைக்கும் முயற்சியாக வியாபார நிறுவணங்களின் வலைப்பதிவுகள் இயங்குவதாக நினைக்கிறேன். நோக்கம் அதுவென்றாலும் பொதுவானவற்றையும் அவர்கள் எழுதிவந்தால், அவர்களது பதிவுகள் வியாபார நோக்கம் என்றே தெரிந்தாலும் வலைப்பதிவில் அதுவும் ஒருவகை என்று பதிவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றின் நுழைவு வலைப்பதிவு உலகத்தைப் பாதிக்காது, இங்கே பதிவர்கள் / வாசகர்கள் தங்களுக்கு எது தேவையோ அவற்றை மட்டுமே படிக்கிறார்கள். அதுதானே வலைப்பதிவின் சிறப்பும்.

மற்றொரு அறிவிக்கப்படாத வியாபார உத்தி, அண்மைகாலமாக சூடான தலைப்புகள் பதிவர்களின் கவனம் பெறுகின்றன. நாளிதழ் தலைப்புச் செய்தி போடுவது போன்றே உத்தியுடன் வலைப்பதிவாளர்கள் செய்துவருகிறார்கள். நானும் அவ்வாறே செய்வது உண்டு. ஆனால் அவ்வாறு சூடான தலைப்புகள் வைக்கும் போது வாசகர்களை ஏமாற்ற வண்ணம் எதாவது பதிவிலும் எழுதப்பட்டு இருக்கவேண்டும், இல்லை என்றால் நாளடைவில் சூடான தலைப்பு மட்டுமே வைப்பவர் என்ற அடையாளத்தில் அந்த பதிவர்கள் புறக்கணிக்கப்படுவர்.


பேட்டியின் இறுதி பாகம் அடுத்த பதிவாக சிலமணி நேரங்களில் வெளியிடப்படும்.

11 comments:

விஜய் ஆனந்த் said...
September 1, 2008 at 10:19 PM  

:-)))...

சூடா இருக்கு...

ஜோசப் பால்ராஜ் said...
September 1, 2008 at 10:20 PM  

நல்லா இருக்கு. ரொம்ப ஆழமா சிந்திச்சு கேள்வி கேக்குறாரு மோகன், கோவி.கண்ணண் மிக அர்தபூர்வமா பதில் சொல்லுறாரு. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

அடுத்த பேட்டி லக்கி லுக், பால பாரதி, ஆசிப் மீரன் என தொடருங்க மோகன். பேட்டி எடுப்பதே ஒரு தனித்திறமை. உங்களுக்கு அது ரொம்ப நல்லா வருது.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 1:00 AM  

///:-)))...

சூடா இருக்கு...////


நன்றி விஜய் ஆனந்த்

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 1:12 AM  

////நல்லா இருக்கு. ரொம்ப ஆழமா சிந்திச்சு கேள்வி கேக்குறாரு மோகன், கோவி.கண்ணண் மிக அர்தபூர்வமா பதில் சொல்லுறாரு. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.////

நன்றி ஜோசப் பால்ராஜ்.

////அடுத்த பேட்டி லக்கி லுக், பால பாரதி, ஆசிப் மீரன் என தொடருங்க மோகன். பேட்டி எடுப்பதே ஒரு தனித்திறமை. உங்களுக்கு அது ரொம்ப நல்லா வருது////

நண்பரே! லக்கியின் பேட்டி ஏற்கனவே வெளியிட்டுள்ளேன் . கீழ்க்கண்ட இணைப்புகளை பார்வையிடுங்களேன்!

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி-1

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி-2

Anonymous said...
September 2, 2008 at 1:19 AM  

கருத்து கந்தசாமியின் மொத்த கருத்துக்களையும் ஓரே இடத்தில் வெளியிட்டமைக்கு நன்றி...!!!

லக்கிலுக் said...
September 2, 2008 at 1:34 AM  

தோழர் செந்தழல் ரவியின் தொடர் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது :-)))))

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 2:49 AM  

/////கருத்து கந்தசாமியின் மொத்த கருத்துக்களையும் ஓரே இடத்தில் வெளியிட்டமைக்கு நன்றி...!!!///

உங்கள் பின்னூட்ட ஆதரவிற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

Unknown said...
September 2, 2008 at 6:24 AM  

//இனி தலித் விடுதலைக் குறித்த கவலைகளை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விட்டு விட்டு, பொதுவான தமிழர் பிரச்சனையில் ஈடுபத்திக் கொண்டால்//
அவர்தான் உருப்படியாக செய்கிறார் என்றால் அதிலேயே அவர் தொடர்வதே சிறந்தது என்பதே என் கருத்து ஜி.கே. இன்னும் தலித்கள் முழு விடுதலை பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

மோகன் கந்தசாமி said...
September 2, 2008 at 12:00 PM  

////அவர்தான் உருப்படியாக செய்கிறார் என்றால் அதிலேயே அவர் தொடர்வதே சிறந்தது என்பதே என் கருத்து ஜி.கே. இன்னும் தலித்கள் முழு விடுதலை பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.////

என் கருத்தும் இதுதான். தலித் விஷயங்களில் கலைஞரும் சமரசம் தான் செய்கிறார். தீர்க்கமான முடிவுகள் கிடையாது. திருமா தான் இதற்கு சரியான ஆள்.

கோவி.கண்ணன் said...
September 2, 2008 at 12:13 PM  

(((அவர்தான் உருப்படியாக செய்கிறார் என்றால் அதிலேயே அவர் தொடர்வதே சிறந்தது என்பதே என் கருத்து ஜி.கே. இன்னும் தலித்கள் முழு விடுதலை பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.////

என் கருத்தும் இதுதான். தலித் விஷயங்களில் கலைஞரும் சமரசம் தான் செய்கிறார். தீர்க்கமான முடிவுகள் கிடையாது. திருமா தான் இதற்கு சரியான ஆள்.
)))

சுல்தான் ஐயா, மற்றும் மோகன்,

திருமா முற்றிலுமாக தலித் போராட்டங்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் நான் சொல்லவில்லை, தலித் போராளி என்பது மட்டுமின்றி தமிழ் பாதுகாப்பு குழுவில் இடம் பெற்றிருப்பது போலவே அனைத்து தமிழர்களின் நலனுக்காக ஈடுபடுத்துக் கொண்டால் பெரியாரைப் போலவே ஒரு பொதுவான திராவிடத் தலைவராக வருவார் என்ற பொருளில் தான் சொன்னேன்.

திருமா தன் மாணவ பருவத்திலேயே 'போராளிகள் உண்ணாவிருதம் இருக்கலாமா ?' என்று புலித்தலைவர் பிராபகரன் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த போது சந்தித்து கேள்வியால், சிந்திக்க வைத்தவர் என்று சொல்கிறார்கள்.

திருமா திராவிடத்தலைவராக வரக்கூடிய ஆற்றல் அனைத்தும் உள்ளவர்

குடுகுடுப்பை said...
September 30, 2008 at 1:34 PM  

//திருமா திராவிடத்தலைவராக வரக்கூடிய ஆற்றல் அனைத்தும் உள்ளவர்//

எனக்கு திருமாவை தமிழக முதல்வராக பார்க்க ஆசை.நடக்குமா?கிடங்கு