Friday, June 20, 2008

லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி.

·

"ச்சும்மா ட்டமாஷ்." வலைப்பூவின் வெள்ளிவிழா பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் லக்கி லுக் -இன் பேட்டியை வெளியிடுகிறேன். பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார். வழக்கம்போல் மட்டுறுத்தலை நான் மேற்கொள்கிறேன்.


ர்சனல் கேள்விகளை இறுதியில் வைத்துக்கொண்டு, உங்களைப் போன்றே அதிரடியாக விசயத்திற்குச் செல்வோம். அனானிகள் வந்தால் பெரும்பாலான பதிவர்கள் கதவை இழுத்து சாத்திவிட நீங்கள் மட்டும் அவர்களை உள்ளே கூப்பிட்டு உதைக்கிறீர்களே ஏன்?

ண்மையை சொல்லப் போனால் நான் வெளியிடுவதை விட ரிஜெக்ட்டு செய்யும் அனானி கமெண்டுகள் தான் அதிகம். அனானிகளும் வலைப்பதிவுலகின் ஒரு அங்கம். நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த ஒரு வாரம் மட்டுமே அனானி-அதர் ஆப்ஷனை மூடி வைத்திருந்தேன். சில நேரங்களில் அனானி ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பல நேரங்களில் எரிச்சலை கிளப்புவதும் உண்மை!

"கும்மி", "டவுசர் கிழியுது", "தாவு தீருது" போன்ற சொற்றொடர்களை பதிவுலகில் பிரபல படுத்தியதில் உங்கள் பங்கு என்ன? உங்கள் மற்ற கண்டு பிடிப்புகளை பட்டியலிட முடியுமா?

வை ஏற்கனவே என் மாணவப் பருவத்தில் பயன்படுத்திய சொற்றொடர்கள் தான். எதையெல்லாம் இப்போது பயன்படுத்துகிறேனோ அதெல்லாம் ஏற்கனவே இங்கே இருப்பவை தான் என்பதால் என்னுடைய பங்கு என்று எதுவுமில்லை. நான் கண்டுபிடிப்பாளன் அல்ல, காப்பி அடிப்பவன் என்பதால் எதையும் பட்டியலிட்டு சொந்தம் கொண்டாட முடியாது.

"காண்டு கஜேந்திரன்" என்ற பாத்திரத்தை நீங்கள் உருவாக்கி பிரபல படுத்தியுள்ளீர்கள், அதேபோல் "கஜக்கோல் பாண்டியன்" பாத்திரத்தை உருவாக்கி வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "ஸ்டேட்ஸ் மேன்" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் இந்த பேட்டியில் உறுதி செய்யமுடியுமா?

ஜக்கோல் பாண்டியன் என்ற பாத்திரம் அருமையான கற்பனையாக இருக்கிறது. மேட்டர் கதைகளில் தான் இதுபோன்ற பாத்திரங்கள் இருக்கும். எனக்கு மேட்டர் கதை எழுத வராது.

"பெயரிலி" உடனான பிரச்சினைக்கு பிறகு நீங்கள் "ரூம் போட்டு அழுத" தாக வந்த வதந்தியைப் பற்றி.

பெயரிலியோடு எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. தமிழச்சி பதிவுக்கு நான் பின்னூட்ட ஆதரவு தந்து வந்ததால் அவர் என்னை திட்டினார். பதிலுக்கு திருப்பி திட்டினேன். டோண்டு பதிவுக்கு பின்னூட்டம் போட்டவர்களை போலி டோண்டு திட்டியது போலவே இது ஒரு பாசிஸ நடவடிக்கையாக எனக்கு பட்டதால் என் எதிர்ப்பை முழுமூச்சாக காட்டினேன். மற்றபடி பெயரிலி அண்ணனை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கட்டியணைத்து வரவேற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவருக்கு இருக்காது என்று நம்புகிறேன்.

ங்கள் வலைப்பூவை பிரபலப் படுத்த ஏதேனும் அஜண்டா தயாரித்தீர்களா அல்லது "மகா யக்ன யாகம்" செய்தீர்களா?

ரம்பத்தில் நிறைய பேருக்கு அதிரடியாக பின்னூட்டங்கள் போட்டுவந்தேன். அதை தவிர வேறு எதுவுமில்லை.

திரடியாக பின்னூட்டம் என்றால், ஜல்லி பின்னூட்டமா, கலாய்த்தல் பின்னூட்டமா அல்லது அட்டன்டன்ஸ் பின்னூட்டமா?

ல்லா மாதிரி பின்னூட்டமும். அட்டணண்ட்ஸ் பின்னூட்டம் போட்டால் பேக் பயர் ஆக வாய்ப்புண்டு.

தி. மு. க -வின் வருங்கால தலைவருக்கு எதிர்காலத்தில் பிரச்சினை தரப்போவது யார்? ஜெயலலிதா வா? விஜய காந்த் -ஆ? வீர பாண்டியாரா? அல்லது டோண்டு சாரா?

டந்த கால் நூற்றாண்டாக திராவிட இயக்க சிந்தனைகள் நீர்த்து வருவதாக அல்லது முழுமுனைப்போடு சிந்திக்கப்படாததாக தோன்றுகிறது. இதுதான் எதிர்கால திமுக தலைவருக்கு பிரச்சினையை தரும் என்று கருதுகிறேன். திராவிட இயக்க சிந்தனைகளை தவிர்த்துப் பார்த்தால் திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.

லந்தூர் சட்டமன்ற தொகுதி டிக்கெட் உங்களுக்கு தரப்பட்டால் எத்தனை லட்சம் செலவு செய்வீர்கள்? ப்ளாக்கில் விற்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

நான் இப்போது இருப்பது தாம்பரம் தொகுதி. அதுவும் அடுத்த தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியாக மாறப்போகிறது. ஆலந்தூரில் எனக்கு எப்படி சீட்டு தருவார்கள்? திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நடிகர் சந்திரசேகர் சொன்னதை தான் நானும் சொல்லமுடியும். "தலைவர் தான் செலவு செய்யணும்!"

ரே நேரத்தில் பத்து ஆட்டோக்கள் வந்தால் உங்கள் வீட்டு வாசலில் நிறுத்த இடமிருக்கிறதா?

நிறுத்த இடமிருக்கிறது. வந்த ஆட்டோக்களை நொறுக்கித்தள்ள ஆள்பலமும் இருக்கிறது.

லைவர் கலைஞர் திருக்குறளை கையாள்வதில் லாவகம் மிக்கவர் என்பது எல்லோரும் அறிவர். உங்களுக்கு அதில் பரிச்சயம் உண்டா? சான்றாண்மை அதிகாரத்தில் ஒரு குறளை சொல்லி விளக்குங்கள்.

"ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை."


வல்லவராக இருப்போரின் வல்லமையே பணிவோடு நடந்துகொள்வதுதான். எதிரிகளை கூட இந்த அணுகுமுறை மூலமாக நண்பர்களாக்கி கொள்ள முடியும்.

எனக்கு குறளில் அவ்வளவு பரிச்சயமில்லை. பள்ளிப் பருவத்தில் ப்ரேயர் மீட்டிங்கில் குறள்விளக்கம் சொன்னதால் சில குறள்கள் மட்டும் நினைவிலிருக்கிறது.

திராவிட இயக்கம் ஒரு வெற்றி பெற்ற கருத்தாக்கம் என்கிறார் இதழியலாளர் ஏ. கே. பன்னீர்செல்வம். உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக. கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மவுனப்புரட்சியின் வித்து திராவிட இயக்க சிந்தனைகளே. இன்று ஏராளமான தலித்கள் வழக்குரைஞர்களாக, வங்கிப் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக பணியாற்றுவதை பார்க்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமேயில்லாத விஷயங்களாக இருந்தவை இவை.


(தொடரும்)


இப்பேட்டியின் தொடர்ச்சி இன்னும் சில மணிநேரங்களில் வலையேற்றப்படும். ஷகிலா, நமிதா, எதிர் வீட்டு ஜன்னல், டோண்டு, உண்மைத்தமிழன், கம்யூனிசம் என விலாவாரியாக பதிலளித்து உள்ளார்.


தனது செப்டம்பர் 9 பதிவின் பின்னூட்டத்தில் தன் சாதியை வெளியிட்டதற்காக லக்கிலுக்கிற்கு எனது கண்டனங்கள் - மோகன் கந்தசாமி |செப்டெம்பர் 10, 2008

15 comments:

கோவி.கண்ணன் said...
June 20, 2008 at 1:21 AM  

//மற்றபடி பெயரிலி அண்ணனை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கட்டியணைத்து வரவேற்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. //

இதுபோன்ற காட்சிகளை சமீபத்தில் எங்கேயாவது பார்த்த அனுபவம் உண்டா ?

:)

VIKNESHWARAN ADAKKALAM said...
June 20, 2008 at 2:06 AM  

நீங்கள் அனானியாக சென்று பின்னூட்டம் போட்டு உதை வாங்கி இருக்கிங்களா?

வெங்க்கி said...
June 20, 2008 at 2:20 AM  

கொஞ்ச நாளா வலை பதிவுகளில் ரொம்ப செலவு செய்து (??) அடுத்தவர் வலைப்பூவுக்கு கேள்வி ங்கற பேர்ல.. சூனியம் வைக்கிறதே வேலையா போச்சு..யார் இந்த வேலையை ஆரம்பிச்சது ??

:))...=))

ரவி said...
June 20, 2008 at 2:52 AM  

எக்ஸலண்ட்...!!! சமீபகாலங்களில் மிகவும் ரசித்த ஒன்று...!!!!

புதுகை.அப்துல்லா said...
June 20, 2008 at 2:59 AM  

"தலைவர் தான் செலவு செய்யணும்!//

லக்கியண்ணே!
ரொம்ப உஷாரா பதில் சொல்லி இருக்கீங்க. உங்களை விட நம்ப தலைவர் ரொம்ப உஷாரு..உங்களுக்கு எந்த ஜென்மத்திலயும் சீட் தர மாட்டாரு

Anonymous said...
June 20, 2008 at 3:11 AM  

லக்கி லுக் அய்யா,


சமீபத்துல எங்க புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா ஒரு புரட்சிகர கருத்தை சொன்னார்."மக்கள் பெரியாரிய நச்சு முறிவு மருந்தை உண்ணாதவரை அவர்களுக்கு உய்வில்லை" என்பது தான் அந்த கருத்து.கட்சியோட உண்மையான தொண்டனாகிய எனக்கு சில கேள்விகள் தோன்றின.
1)பெரியாரிஸ்ட்களிடம் அப்படிப் பட்ட சக்தி இருக்கிறதா?
2)ஏன் ஓவ்வொரு ஹெல்த் சென்டரிலும் ஒரு பெரியாரிஸ்டை வேலைக்கு அமர்த்தி,நஞ்சுண்டவர்களை கடிக்க வைத்து, நச்சை முறிக்கக் கூடாது?(வேலையத்த பெரியாரிஸ்ட்களுக்கு வேலையும் போட்டுக் கொடுத்த மாறி இருக்கும் அல்லவா?)
3)பாம்பின் பல்லை பிடுங்கி நஞ்சு எடுத்து மருந்தாக விற்கப்படுவது போல்,ஏன் பெரியாரிஸ்ட்களோட பல்லைப் பிடுங்கி நச்சு முறிவு மருந்தை எடுத்து,மறுகாலனி ஆதிக்க சக்திகளுக்கு வித்து பணம் பண்ணி அவங்களுக்கே ஆப்பு வைக்கக்கூடாது?(விலைவாசி விஷம் போல் உயர்ந்ததால் நொந்து போய் வருத்தத்தில் இருக்கும் எம் மக்களுக்கு இந்த பொக்கை வாய் பெரியாரிஸ்ட்கள் காமெடி விருந்து படைத்து வேதனையை மறக்க கொஞ்சமாவும் உதவுவார்களே).
4) இந்த யோசனயை வைத்து இதான் சாக்குன்னு நம்ம சின்ன மருத்துவர் அய்யா,தி மு க,தி க கும்பலோட, பல்லை பிடுங்கி வாக்சின் எடுத்து விக்கற வியாபாரத்தை ஆரம்பித்தா உங்க நிலமை என்ன ஆகும்?

விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பாலா

Anonymous said...
June 20, 2008 at 3:18 AM  

லக்கி லுக் அய்யா,

ஒரு சில கேள்விகள்.

1) ம க இ க நக்சல் தீவிரவாத கும்பலில்,ப சிதம்பரம் அய்யாவைவிட, சிறந்த நிதி அமைச்சராக நாட்டுக்கு தொண்டு செய்ய வல்லவர் யார்?
சம்பூகன்?ஏகலைவன்?அசுரன்?பனியன் தியாகு?தோழர் மருதையன்?

2) ம க இ க பொலிட்பீரோவில பதவி வேண்டும் என்றால்,என்ன தகுதி வேண்டும்?கேள்வி கேட்பவர்களை "ஏண்டா அம்பி,குடுமியை மறைச்சுக்கோடா" என்று அதி புத்திசாலித்தனமாய் மடக்கத் தெரிந்தால் போதுமா?

பாலா

வால்பையன் said...
June 20, 2008 at 10:49 AM  

நமக்கு நாமே தூக்கி விடும் திட்டமா இது?
ஆனாலும் நல்லருக்கு

வால்பையன்

பரிசல்காரன் said...
June 20, 2008 at 11:56 AM  

//அதேபோல் "கஜக்கோல் பாண்டியன்" பாத்திரத்தை உருவாக்கி வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "ஸ்டேட்ஸ் மேன்" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் இந்த பேட்டியில் உறுதி செய்யமுடியுமா?//

அந்த ஸ்டேட்ஸ் மேன் மேட்டர் - சூப்பர் ஐடியா மோகன்.. கிரேட்!

பதில்கள் எந்தவிதப் பூச்சும் இல்லாமல் யதார்த்தமாக உள்ளன!

Unknown said...
June 21, 2008 at 10:25 AM  

ஜாலி ஜம்பருக்கும் உங்களூக்கும் என்ன தொடர்பு

Anonymous said...
June 21, 2008 at 11:45 AM  

//ஜாலி ஜம்பருக்கும் உங்களூக்கும் என்ன தொடர்பு//

ஜெய்ஷங்கர் ஜகன்னாதன் அய்யா,
இது என்ன கேள்வி?இரண்டும் பிரியாணி குஞ்சுகள்;மஞ்ச துண்டு அய்யாவோட உடன் பிறப்புக்கள்.அந்த தொடர்பு போதாதா?

பாலா

புருனோ Bruno said...
June 22, 2008 at 10:38 PM  

பேட்டி அருமையிலும் அருமை.... அதைப்போல் வடிவமைப்பு (லே ஒவுட்) செய்யப்பட்டிருப்பது தங்களின் கடும் உழைப்பை காட்டுகிறது

மோகன் கந்தசாமி said...
June 23, 2008 at 2:58 AM  

கோபப்படாதீங்க கீ - வென்,
இன்னும் கொஞ்ச நாளைக்கு கேள்வி பதில் பதிவு நான் படல.

மோகன் கந்தசாமி said...
June 23, 2008 at 3:39 AM  

நன்றி கோவி!
நன்றி விக்கி,
நன்றி செந்தழல் ரவி,
உங்க மொக்கை இடத்தை நான் பிடித்துவிடலாம் என்று பார்த்தால் அதற்குள் திரும்ப வந்து விட்டேர்களே!, நான் வலைப்பூ தொடங்காமல் வெறுமனே படித்துக்கொண்டிருந்த சமயங்களில் உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பேன்.

பிறகு, தமிழ் சினிமாவுக்கான சக்சஸ்ஃபுல் ஃபார்முலாவை அடையாளம் கண்டு விட்டீர்களா(using datamining)?

நன்றி புதுகை.எம்.எம்.அப்துல்லா,
நன்றி வால்பையன்,
நன்றி பரிசல்காரன்
நன்றி ஜெயசங்கர்,
நன்றி புருனோ,
////அதைப்போல் வடிவமைப்பு (லே ஒவுட்) ////
வடிவமைப்பு குறித்து ஏதேனும் பின்னூட்டம் வருமென்று கடந்த ஐந்து பதிவுகளாக காத்திருந்தேன். கடைசியில் வந்தே விட்டது. நன்றி திரு புருனோ.

குபீர் குப்பண்ணா said...
May 23, 2009 at 2:56 AM  

இந்த கேள்வியை கேளுங்க பிரதர். !

பிராபகரன் பற்றி ஏன் இன்னும அதிரடி அரசியல் விஞ்ஞானி அதிஷா
பதிவு போட்டு விளக்கவில்லை?(வந்துட்டானுங்க ஆட்டிகினு)

கேட்டா புண்ணியாம பூடும் பிரதர்.



கிடங்கு