Saturday, June 28, 2008

நான் சார்ந்துள்ள துறை பற்றி...

·

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.

பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.

அவரது முதல் மடல்.

அன்பு நண்பரே வணக்கம்.
நீங்கள் பயோ-டெக் துறையில் பணி செய்வதாக அறிந்தேன்.
** *** தற்போது +2 படிக்கிறாள். அவளுக்கு பயோடெக் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
அதை பற்றிய மேலதிக தகவல்களையும், அந்த துறையில் எதிர்காலம் எப்படி என்பதை பற்றியும் கொஞ்சம் விளக்கமாக எழுதவும்.

எனது வலைப்பதிவு: www.manjoorraja.blogspot.com
குழுமம்: *********
நன்றி.

எனது பதில் மடல்:

அதற்கு முன் என்னைப் பற்றி: நான் பயோ-இன்பார்மேடிக்ஸ் முதுகலை பட்டதாரி. எனது இளங்கலை முழுதும் மருத்துவம் சார்ந்தது. முதுகலையில் முதல் ஒன்னரை வருடம் Rutgers University -யில் பயோ டெக்னாலஜியும், இறுதி வருடம் NJIT -யில் கணிப்பொறி அறிவியலும் படித்தேன். தற்போது Insili***** ****** நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.

நண்பரே, வணக்கம்!
நான் பணிபுரியும் துறை பயோ-இன்பர்மேட்டிக்ஸ். பயோ-டெக்னாலஜி அல்ல. **** -ல் நான் எனது ************* டிகிரியை முடிக்கும் போது எனக்கு பயோ-டெக்னாலஜி -ல் ஒரு முதுகலை பட்டப்படிப்பை தொடர ஆர்வம் இருந்தது. பயோ-டெக்னாலஜி சம்பந்தமான வணிக (டெக்னிக்கல் அல்ல) இதழ்களை ஆராய்ந்த போது, பயோ-டெக்னாலஜி துறையில் அனைத்து முயற்சிகளும் ஆராய்ச்சி என்ற அளவிலேயே இருப்பதாக அறிந்தேன். இன்றும் அப்படித்தான். எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு இந்த துறைக்கு (அதன் கண்டு பிடிப்புகளுக்கு) மக்கள் எதிர்ப்பு இருப்பதாலும் வணிக ரீதியிலான வெற்றிக்கு இத்துறை மிகுந்த போராட்டத்தை சந்தித்து வருகிறது. ஆட்சி மாற்றங்களால் வணிகத்துறையை விட மிகவும் பாதிக்கப் படும் துறையும் இதுவேயாகும். உணவு பதப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற்சாலை நுட்பவியல்(industrial biotechnology) மற்றும் வெகு சில பிரிவுகளில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கிடைத்துள்ளது. உணவு உற்பத்தி மற்றும் ஹெல்த் போன்றவற்றில் மிக மிகக் கடுமையான நெருக்கடிகளை(மக்கள் எதிர்ப்பு) சந்தித்து வருகிறது. சில வணிக நிறுவனங்கள் திடீர் திடீரென தங்கள் புராஜெக்ட்டுகளை கைவிடுகின்றன.

இத்துறையில் வேலை வாய்ப்பு என்று பார்த்தோமானால், ஆராச்சி மாணவர்களுக்கும், அனுபவஸ்தர்களுக்கும், பல்கலை கழக ஆசிரியர்களுக்கும் கொள்ளை சம்பளத்தில் வேலை கிடைக்கின்றன. சில நிறுவனங்கள் கணிசமான தொகையை முதலிலேயே கொடுத்து பின் சம்பளமும் தருகின்றன. ஆனால் ஒரு டிகிரியை மட்டும் வைத்துக் கொண்டுள்ள மாணவனுக்கு வேலை அரிதிலும் அரிது. அம்மாணவன் தனியாக ஒரு புராஜெக்டை தானே செய்து, ஒரு 5-6 வருடங்கள் பல்கலை கழக ஆசிரியர்களுடன் சொற்ப தொகைக்கு பணி புரிந்து தன்னை நிரூபித்த பிறகே வாய்ப்புகள் கிட்டும். மைக்ரோ சாப்ட் பயோ-டெக்னாலஜி -யில் நுழையவிருப்பதாக அறிவித்து வருடம் மூன்றாகிறது. இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. முன்பெல்லாம் நோவார்ட்டி சில ப்ராஜெக்ட்டுகளை முதுகலை மாணவர்களுக்கு அளித்து வந்தது. இப்போது நிறுத்திவிட்டது. ஆனால் அரசு நிறுவனங்களிடம் இருந்து இன்றும் பெருந்தொகைகளை கிராண்ட் -ஆக பெறமுடியும். எனினும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டியது மிக அவசியம். மற்ற துறைகளைப் போல தகுதிக்கு ஏற்ற ஏதோ ஒரு வேலை இதில் கிடைப்பதில்லை.

பயோ-இன்பார்மேட்டிக்ஸ் துறை சற்றே ஆறுதல் தரும் துறை. பயோ-டெக்னாலஜி ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கு மென்பொருள் செய்து தருவது இத்துறை. இதில் வேலை பெறுவது கூட நாம் படிக்கும் பல்கலைகழகத்தை பொறுத்தே இருக்கிறது.

இந்தியாவில் வேலை இதற்கு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், இவ்வகை வேலை வாய்ப்பைத்தரும் பயோ-இன்பார்மேட்டிக்ஸ் நிறுவனங்கள் யாவும் இந்தியாவிலுள்ள பயோ-டெக்னாலஜி நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கின்றன. இத்துறைகளில் அவுட்-சோர்சுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், இந்திய பயோ-டெக்னாலஜி நிறுவனங்கள் வலுப்பெறும் வரை பொறுத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் சிதம்பரத்தின் கடந்த மூன்று பட்ஜெட்டிலும் இல்லை. அவர் முதல் பட்ஜெட்டில் கூறியவற்றையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஒரு விவாதத்தில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னார் "என் இதயம் இடது பக்கம் இருக்கிறது. நீங்கள் ஆய்வகத்தில் இட்லியையும் சாம்பாரையும் தயாரித்துக் கொண்டிருக்கும் வரை என்னால் எதுவும் செய்யமுடியாது". அவர் சொன்னது என்னைப் பொறுத்தவரை நியாயமானது. நாம் தகவல் தொழில் நுட்பத்துறையில் பிரபஞ்சத்தையே மறு உருவாக்கம் செய்பவர்களாக இருக்கலாம்(இது போன்ற உளறல்களை நாம் எப்போதும் கேட்க முடியும்). ஆனால் பயோ-டெக்னாலஜி -யில் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது. வெறுமனே ஒரு பெருந்தொகையை யாரை நம்பி ஒதுக்க முடியும். கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு முழுமூச்சாய் எதிர்த்தவர்கள்தான் இப்போது இத்துறைக்கு பெரும் தொகையை கேட்கிறார்கள். செயற்கை விவசாயத்திற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து போராடும் இடது சாரிகள் எக்காலத்திலும்(இந்த ஆட்சியில் மட்டுமல்ல) இவ்வகை செலவுகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள். இதைத்தான் சிதம்பரமும் சொன்னார். முதலில் இந்திய பயோ-டெக்னாலஜி துறை தன்னை ஆய்வகத்தில் நிரூபிக்க வேண்டும், இரண்டாவது உண்மையில் மக்களுக்கு (இடைத்தரகர்களுக்கு அல்ல) நேரிடையாக பயன்தரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி கன்வின்ஸ் செய்ய வேண்டும். எனவே நம் நாட்டில் இத்துறை வளர்ச்சி பெற சில காலம் பிடிக்கலாம்.

அடுத்து அவுட்-சோர்ஸ் வாய்ப்பு எப்படி என்று பார்த்தோமானால், இதற்கு வாய்ப்புகள் மிக அரிது. உதாரணமாக, ஒரு ஆய்வாளர் ஒரு புதிய டி.என்.ஏ. -வை கண்டுபிடித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதை ஏற்கனவே உள்ள டி.என்.ஏ. -களுடன் ஒப்பிட்டு அதை வகைப் படுத்த வேண்டும். இதை ஆய்வகத்திலும் செய்யமுடியும், கணிப்பொறியிலும் செய்ய முடியும். எனினும் இது ஒரு போரடிக்கின்ற வேலை. இவ்வகை வேலைகளை அவர்கள் அவுட்-சோர்ஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். அதற்கு ஒரு இந்திய பயோ-இன்பார்மேட்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை ஒப்பந்தம் செய்கிறார் எனக்கொண்டால், அந்த நிறுவனம் பணியை அவுட்-சோர்ஸ் செய்த ஆய்வாளருக்கு நிகரான சில பணியாளர்களை(ஆய்வாளர்கள்) நியமிக்க வேண்டும். எவ்வகை மென்பொருளையும் தயாரிக்க திறன் உங்களுக்கு இருந்தாலும் அது தரும் ரிசல்டுகளை சரிபார்க்க இவ்வகை பணியாளர்கள்(ஆய்வாளர்கள்) அவசியம். இதைசெய்ய எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்?. இதனால் பயோ-இன்பார்மேட்டிக்ஸ் பணிகளுக்கும் வாய்ப்பு குறைவு. பயோ-இன்பார்மேட்டிக்ஸ் என்பது ஒரு கம்பச் சித்திரம் அல்ல. ஆனால் பயோ-டெக்னாலஜி அப்படித்தான்.

நிற்க, பெரிதாக வேலை வாய்ப்பைத் தரும் நிலையில் பயோ-டெக்னாலஜி இன்னும் 5 முதல் 10 பத்தாண்டுகளுக்கு இல்லை என்ற நிலையில், மாணவர்களுக்கு அதன் மீது ஆர்வம் என்பது குறைவதில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு துறையில் பட்டம் பெற்றால் முன்னங்கால்களில் கண்களைக்கொண்ட ஒரு எலியை உங்களால் உருவாக்க முடியும் என்று அறிகிற போது அத்துறையில் இயல்பாக ஆர்வம் பிறக்கும். மரபனுவியலில் பாலபாடமான "மேண்டலிசம்" பற்றி படிக்கும் உயர் நிலைப் பள்ளி மாணவன், ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் இனப்பெருக்கத்தை ஒரு ஆய்வாளர் கட்டுக்குள் வைக்கிறார் என்று அறியும்போது ஒரு கூரியாசிட்டி அவனுக்கு ஏற்படுகிறது. இயற்கையின் ரகசியத்தை அறிந்தது போல் உற்சாகம் ஏற்படுகிறது. இந்த ஆர்வம் ஒரு நான்கு வருட டிகிரி முடியும்போதும் இருக்க வேண்டும். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முதுகலை முடிக்கும்போதும் இருக்க வேண்டும். பிறகு ஆய்வகத்திலும், programming -லும் (பயோ-இன்பார்மேட்டிக்ஸ் படித்தால்) தன்னை நிரூபிக்க சில காலம் ஆகலாம்.

இவையெல்லாம் பயோ-டெக்னாலஜி படிக்க விரும்பும் மாணவனை பயமுறுத்துவதற்கு நான் சொல்லவில்லை. உண்மையில் ஆர்வம் உள்ள ஒரு மாணவனுக்கு இது ஒரு தகவலாக மட்டுமே இருக்கும், ஆர்வத்தை குறைக்காது. ஆனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் எதிகாலம், வேலை வாய்ப்பு எல்லாவற்றையும் யோசிக்கக் கூடியவர்கள். மிடில் கிளாஸ் பெற்றோர்களாகிய என் தாய் தந்தையரை கன்வின்ஸ் செய்ய அதிகம் போராடினேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, ஆலோசனை என்றில்லாமல், ஒரு கருத்து என்ற வகையில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பயோ-டெக்னாலஜி -யில் ஆர்வம் உள்ள பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் அதை ஒரு கரியர் -ஆக தேர்ந்தெடுக்கும் முன் தங்கள் ஆர்வம் எவ்வளவு ஆழமானது என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு வெளிநாடுகளில் சென்று படிக்க பெற்றோர்களிடம் அனுமதி பெற்றிட வேண்டும். குறைந்தது 7-8 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.

நன்றி,
மோகன் கந்தசாமி.

அவரது அடுத்த மடல்:

அன்பு நண்பரே மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. இதையே ஒரு பதிவாகவும் நீங்கள் போடலாம்.
** *** தற்சமயம்+2வில் Maths, Chemistry, Physics and Biology பாடங்களை எடுத்து படித்துக்கொண்டிருக்கிறாள். அவளை மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற விருப்பம் ****** இருக்கிறது. ஆனால் அவளது மதிப்பெண்களை பொருத்தே நல்ல கல்லூரி அல்லது பல்கலை கழகம் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம்.
சில நண்பர்களிடம் கேட்டப்போது பயோமெடிகல் இஞ்ஜினியரிங் படிப்பு பற்றி சொன்னார்கள். எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் சேர்ந்துவிடலாமென்றும், அல்லது தனியாகவும் சிறிய அளவில் தொழில் தொடங்க முடியுமென்றும் சொன்னார்கள். வெளிநாடுகளிலும் அதிகவாய்ப்பு இருக்கிறது எனவும் சொன்னார்கள்.
MSc. molecular biology என்னும் படிப்பை மைசூர் பல்கலைகழகம் இந்த வருடம் முதல் ஆரம்பித்திருக்கிறது. இதை பற்றி எனக்கு அதிக விவரம் தெரியவில்லை. (4 வருடம்)
Bits Pilaniயில் M.Sc.(Hons.): Biological Sciences என்னும் படிப்பு உள்ளது.
இவற்றை படிப்பதால் என்ன நன்மை, எதிர்காலம் எந்த அளவு இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்.
இதை தவிர வேறு என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ள ஆசை.
உங்களுக்கு தொந்தரவாக இல்லையெனில் கொஞ்சம் விவரத்தை எழுதவும்.
நன்றி.


பயோ மெடிக்கல் பற்றி ஆராய்ச்சி மாணவர் திரு. அளிசான்றோ -வை தொடர்பு கொண்டு கேட்டேன்.

Alessandro to me
show details 06/25/08 Reply
My cell phone died, so when you come by, call me at extension 264. If
that doesn't work, try the lab extension, 253.
Sorry about that. (Hope you get this in time!)
See you soon,
-Alessandro

On Jun 25, 2008 8:07 PM, Alessandro <*********@gmail.com> wrote:
> Hey Alessandro,
> 11 is too late for me today. How about 9?
> Mohan (Rutgers)

பயோ-மெடிக்கல் என்பது என்ன?

இது ஒரு இன்டர் டிசிப்பிளினரி துறை. மருத்துவத்துறை, உயிரியல் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு உதவிக் கருவிகளை உருவாக்கித்தரும் துறையாகும். எனவே உயிரியல் மற்றும் மருத்துவம் தெரிந்த பொறியாளர்களை உருவாக்குவது பயோ-மெடிக்கல் கல்லூரிகளின் பணி என நாம் கருதலாம்.

வேலை வாய்ப்பு கண்ணோட்டத்தில் இத்துறையை நீங்கள் விவரிக்க முடியுமா?

இதுபற்றி நான் எதுவும் சொல்லுவதற்கு முன் நான் ஒரு ஆராய்ச்சி மாணவன் என்பதை தெரிவித்து விடுகிறேன். நான் இது குறித்தது எது சொன்னாலும் அது இந்த வருடத்து நிலைமையாகும். அடுத்த வருடம் பற்றி நீங்கள் இந்த வருட இறுதியில் தான் கேட்க வேண்டும்.
தற்போது இயல் முறை மருத்துவத்திற்கான கருவிகள் அதிகம் தேவைப்படுகின்றன. மெடிகல் இமேஜிங் பிரிவுகளில் அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளன. எனது ஜூனியர் மாணவர் எழுவருமே இத்துறையில் தான் பணிபுரிகின்றன.

ஏன் பயோ-மெடிக்கல் படிக்கவேண்டும்? மற்ற துறைகளை விட இது எவ்வாறு அதிக வேலை வாய்ப்புகளைத் தரக்கூடும்?

நான் மற்ற துறைகளை விட அதிக வேலைவாய்ப்பு இதில் உண்டு எனக்கூறவில்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வேலை வாய்ப்பை குறித்து எந்த பயமும் இல்லாமல் படிக்கலாம். மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் தொடக்க நிலை பணியாளர் எவ்வாறு ஜாப் சாடிஸ்பாக்ஷனுடன் பெறுவாரோ அதுபோல்தான் இதிலும். மேலும், முக்கியமான ஒன்று, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவை பொறுத்து ப்ரோகிராமிங் செய்யவேண்டியும் வரலாம்.

அப்படியென்றால் மென்பொருள் மேம்பாடு சார்ந்த வகுப்புகளில் அமர வேண்டியிருக்குமா?

அவசியமில்லை, தேர்ந்தெடுத்தால் நல்லது. நீங்கள் எந்த மென்பொருளையும் மேம்பாடு செய்யத்தேவை இல்லை. ஆனால் மேட்லாப், எக்ஸ்.பி.பி., சாஸ் போன்றவற்றை பயன்படுத்தியாக வேண்டும். அதற்கு சற்றே ப்ரோகிராமிங் கற்க வேண்டிவரலாம். மற்ற படி, படிப்பு காலங்களில் பெரும்பான்மையை கால்வனா மீட்டருடன் கழிக்கவேண்டியிருக்கும் (ஹா ஹா ஹா)

இன்னும் மூன்று வருடங்களில் பயோ-மெடிக்கலில் பட்ட மேற்படிப்புக்கு தயாராக விருக்கும் மாணவனுக்கு உங்கள் அறிவுரை என்ன?


இப்போதே திட்டமிடுங்கள். அனாட்டமி, பிசியாலஜி, மைக்ரோ பயாலஜி, ஜெனரல் மெடிசன், பார்மக்காலாஜி, வைராலஜி, நியூரோ சயன்ஸ், மாலிக்குலார் பயாலஜி, டிஷ்ஷு என்ஜினீயரிங், போன்ற பாடங்கள் உள்ள ஒருதுறையில் இளங்கலை பட்டம் பெறுங்கள். முதுகலையில் நீங்கள் பொறியியலை படித்துக் கொள்ளலாம்.

பயோ-மெடிக்களிலேயே இளங்கலை படித்து வேலை பெறவேண்டுமானால்?

நான் ஏற்கனவே சொன்ன பாடங்களுடன் மெடிக்கல் இமேஜிங், பயோ-ரோபாட்டிக்ஸ், கம்ப்யூட்டேசனால் நியுரோசயன்ஸ், பயோ-மெடிக்கல் இன்ஸ்றுமேன்டேசன், மேன்-மெசின் சிஸ்டம், பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் போன்றவற்றை படிக்க முன்தயாரிப்பு செய்து கொள்ளுங்கள்.

தகவல்களுக்கு மிக்க நன்றி.

பிரச்சினை இல்லை. மேலும் தகவல்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள், இரவு பதினோரு மணிக்கு பிறகே உசிதமான நேரம். நன்றி.


மைசூர் பல்கலைகழகம், Bits Pilani பற்றி தகுந்த நண்பர்களுடன் விசாரித்து எழுதவிருக்கிறேன்.

22 comments:

Anonymous said...
June 28, 2008 at 2:27 PM  

Nalla pathivu

very **** detalis and ***** useful ***** other of your ****** study
it have any ****** futre job value?? *******

yours
**** *****
:-))

Anonymous said...
June 28, 2008 at 2:40 PM  

Useful post mate.

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 2:45 PM  

Thanks Anany,
further details in coming posts..

மங்களூர் சிவா said...
June 28, 2008 at 2:59 PM  

மஞ்சூரண்ணே பிள்ளைய கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைங்க எங்கயாச்சும் பொட்டி தட்டி பிழைச்சிக்கும் (நல்ல சம்பளத்தோட).

? said...
June 28, 2008 at 3:09 PM  

நல்ல பதிவு.
பாட்டம் லைன், வாழ்க்கையில் உருப்பட வேண்டும் எனில் தயவுசெய்து யாரும் உயிரியல் சார்ந்த துறையை கற்பனைகூட செய்து பார்க்காதீர்கள்.நல்ல படியாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரும் ஒரே துறை மருத்துவம் மற்றும் அதை சார்ந்த நர்ஸிங் போன்றவைதான். அதுவும் அமெரிக்காவில் நர்ஸிங் படித்தவர்கள் கணிப்பொறியார்கள் போல் நன்றாக சம்பாதிக்கின்றனர்.ஆனால் மருத்துவர் ஆவதற்க்கு படித்து முடிப்பதற்க்குள் டிம்மி கழன்றுவிடும். இதுதான் உலகெங்கிலும் உள்ள நிலமை. காசு பற்றி கவலையில்லை,ஆராய்ச்சிதான் எனது நோக்கம் எனில் இத்துறையில் படிக்கலாம்.இல்லை எனில் ஏதாவது பொறியியல்தான் உத்தமம். பயோடெக்னாலஜி, மாலிகுலர் பயாலஜி, ப்யோஇன்பர்மேட்டிஸ் என ஜார்கன் கண்டு ஏமாந்துவிடாதீர்!

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 3:17 PM  

மிகச்சரி மங்களூர் சிவா,
ஆனால் ஆர்வம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதே! அமெரிக்க்காவில் ஆர்வத்திற்குத்தான் முதலிடம் தருகிறார்கள்.
சோற்றுக்கு பிரச்சினை இல்லாத மக்கள்.

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 3:24 PM  

///வாழ்க்கையில் உருப்பட வேண்டும் எனில் தயவுசெய்து யாரும் உயிரியல் சார்ந்த துறையை கற்பனைகூட செய்து பார்க்காதீர்கள்.///
நான்கைந்து ஆண்டுகளுக்கு பிறகு நிலைமை எவ்வாறு இருக்கும் என இப்போதே சொல்லிவிட முடியாது. ஒரு புதிய கண்டு பிடிப்பு நிலைமையை மாற்றிவிடக்கூடும். ஆனால் அதைக் கூட அரசியலும், பெரு வணிகர்களும்தான் இதை நிர்ணயிக்க முடியும்.

வெட்டிப்பயல் said...
June 28, 2008 at 4:58 PM  

நல்ல பதிவு...

நான் ப்ளஸ்-டூ முடிக்கும் போது பயோடெக்னாலஜி தான் படிக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா அப்ப இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி மட்டும் தான் இஞ்சினியரிங்ல இருந்தது. அதுவும் இந்தியாவுலயே ஒரே காலேஜ்ல.

அதுல நமக்கு கிடைக்கல :-(

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 6:30 PM  

வெட்டிப்பயல்,
///அதுல நமக்கு கிடைக்கல :-(///
நல்லவேளை அது கிடைக்க வில்லை எனத்தோன்றுகிறதா, இப்போது? :-)

மென்பொருள் துறை இவ்வளவு வேலை வாய்ப்புகளை தராமலிருந்தால், கணிசமானோர் இன்று பயோ டெக்னாலஜி படித்திருப்பார்கள், என நினைக்கிறேன். ஏனெனில் 12 முடிக்கும் போது இயல்பாகவே நிறைய பேருக்கு பயோ டெக்னாலஜி -யில் ஆர்வம் இருக்கிறது. எனக்கும் இருந்தது.

இப்போது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் முழுத்திருப்தி இனிமேல் தான் ஏற்படணும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
June 28, 2008 at 7:38 PM  

நானும் ஒரு B.Tech உயிரித் தொழில்நுட்ப மாணவன் என்ற முறையில் வரிக்கு வரி வழிமொழிகிறேன். எங்கள் வகுப்பில் சேரும் போது இருந்த ஆர்வம் கல்லூரி முடியும் போது பலருக்குப் போய் விட்டது. மற்ற துறைகளில் இல்லாத ஒரு fantasy கூறே மாணவர்களைப் பெரும்பாலும் இத்துறை பால் ஈர்க்கிறது. இத்துறையில் ஏதேனும் ஒரு நிலைக்கு வர குறைந்தது 27 வயது, ஒரு முனைவர் பட்டமாவது தேவைப்படும். கணினித் துறை போல் இளங்கலை, முதுகலை முடித்தவுடன் கை நிறைய ஊதியம், பொறுப்பு உயர்வு என்பவற்றை எதிர்ப்பார்க்க முடியாது.

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 8:26 PM  

ரவிசங்கர்,
வருகைக்கு நன்றி,
பலருக்கும் கல்லூரி இறுதியாண்டில் ஆர்வம் போய்விட்டிருக்கும் என்பதை நானும் கண்கூடாக பார்த்திருக்கிறேன். வேலை வாய்ப்புகள் பெருகும்போது நிலைமை மாறவேண்டும். ஆர்வம் இன்னும் இருப்பவர்கள் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல் மாற்றங்களை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

கிரி said...
June 28, 2008 at 9:53 PM  

மோகன் கந்தசாமி விளக்கமாக கூறி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

ஐ டி துறையின் மீதுள்ள கவர்ச்சி, கிடைக்கும் பணம், பல நாடுகள் செல்லும் வாய்ப்பு, போன்றவற்றால் பலரும் இந்த துறையே தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பல துறைகளில் நீங்கள் குறிப்பிட்ட துறை போல ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோரின் வற்புறுத்துதல் போன்றவற்றால் தங்கள் விருப்ப துறையை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

இந்த துறை பற்றிய உங்கள் பதிவு, பலரின் சந்தேகத்தை தெளிவு படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

மோகன் கந்தசாமி said...
June 28, 2008 at 10:58 PM  

///மோகன் கந்தசாமி விளக்கமாக கூறி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.////
///இந்த துறை பற்றிய உங்கள் பதிவு, பலரின் சந்தேகத்தை தெளிவு படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.///
மிக்க நன்றி கிரி,
நான் சொல்வதையும் கருத்தில் கொண்டு, அவர்களும் ஆய்வு செய்து தக்க துறையை தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

Anonymous said...
June 29, 2008 at 12:35 AM  

அருமையான துறை சார்ந்த பதிவு. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

மோகன் கந்தசாமி said...
June 29, 2008 at 12:46 AM  

///அருமையான துறை சார்ந்த பதிவு. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.///
நன்றி திரு குமார் ,

Unknown said...
June 29, 2008 at 8:15 AM  

நான் என் பாட்டிக்கு எழுதிய கடிதத்தை அடுத்த பதிவாக போடபோறேன்

புதுகை.அப்துல்லா said...
June 29, 2008 at 11:42 AM  

அண்ணே நா டெக்னிகல் ஆளு இல்லண்ணே கமர்சியல் ஆளு(ஏம்.பி.ஏ., சி.எப்.ஏ). ஆனா நம்ப மர மண்டைக்கும் புரிஞ்ச மாதிரி ரொம்ப தெளிவா,எளிமையா எழுதி இருக்கீங்க. என்னைய மாதிரி ஆளுகளுக்காக இந்த மாதிரி டெக்னிகல் சம்மந்தமான மேட்டரா அடிக்கடி எழுதுங்கண்ணே.

மோகன் கந்தசாமி said...
June 29, 2008 at 11:51 AM  

/////கமர்சியல் ஆளு(ஏம்.பி.ஏ., சி.எப்.ஏ). ஆனா நம்ப மர மண்டைக்கும் புரிஞ்ச மாதிரி ரொம்ப /////
ஏம்.பி.ஏ., சி.எப்.ஏ படிச்ச ஆளு மரமண்டையா? என்னை என்ன மர மண்டைன்னு நெனைச்சிங்களா? :-))))
நன்றி புதுகை, உருப்படியா எழுத முயற்சி பண்றேன்.

மோகன் கந்தசாமி said...
June 29, 2008 at 11:54 AM  

////நான் என் பாட்டிக்கு எழுதிய கடிதத்தை அடுத்த பதிவாக போடபோறேன்///
உங்க பாட்டி எந்த துறை சார்ந்தவங்க ஜெய்? :-)))))

Unknown said...
June 30, 2008 at 1:32 AM  

//உங்க பாட்டி எந்த துறை சார்ந்தவங்க ஜெய்? //
கிச்சன் கேபினட். அதாவது சாப்பாடு சூப்பரா செய்வாங்க

Bharath said...
June 30, 2008 at 9:41 AM  

மோகன்,

மிக அழகாக கூறியுள்ளீர்கள். Technical விஷயங்களை மிக எளிமையாக தந்துள்ளீர்கள். I really appreaciate the simplicity in your language in explaining complicated stuff. hats off to u dude.

மோகன் கந்தசாமி said...
June 30, 2008 at 12:26 PM  

////I really appreaciate the simplicity in your language in explaining complicated stuff. hats off to u dude.////
நன்றி திரு அனலிஸ்ட், வருகைக்கு நன்றி.



கிடங்கு