பாரீசிலிருந்து எழுதும் தங்கமணி பதிவர் திருமதி "வெட்டி ஆபிசர்" எனது வலைப்பூவில் எழுதிய பதிவு இது. பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிப்பார், மட்டுறுத்தும் பணியை எனக்களித்த அவருக்கு நன்றி.
ஆண்கள் ரொம்ப நல்லவங்கங்க.....
நான் ஏன் இப்டி சொல்றேன்னா கிட்டத்தட்ட நான் சந்திச்ச ஆண்கள்ள ஒருத்தர் கூட புல் அலர்ட்ல இருந்ததில்லை. நாங்க என்ன போலீஸ்காரங்களா இல்லை போர்முனைல இருக்கரவங்கலான்னெல்லாம் உங்க நாக்குல நீங்களே சூடத்தை ஏத்திகிட்டு திரிஞ்சீங்கன்னா எந்த பயர்சர்வீஸ் வந்து என்னாத்தை செய்ய முடியும். என்னங்க நானு சொல்றத கேட்டு ஓங்குதாங்கா நடந்து பொழச்சிப்போங்க.
சரிங்க நம்ம வலையுலகத்துல நெம்ப பிரபலமான வார்த்தை தங்கமணி, ரங்கமணி.அதன் மூல ஜோக்கு என்னாது, பொண்டாட்டி ஊருக்கு போராளேன்னுட்டு ஜனகராஜ் பண்ற அளப்பரையும் கடசீல எல்லாம் புஸ்ஸாகறதும்தானே. இப்போ நீங்கல்லாம் என்னா நெனைக்கிறீங்க? பெண்கள் எல்லாம் குடும்ப இஸ்த்திரிங்க, அவங்க இந்த மாதிரில்லாம் புருஷன் ஊருக்குப்போனா குஷியாகமாட்டாங்க, நாம ஊருக்குக் கெளம்பும்போது அவங்க கண்ல உடற வாட்டர் பாக்கெட்லாம் உண்மைனுதானே? அதுதாங்க இல்லை, உங்களுக்கு மேலயே நாங்க ஜாலியாகிடுவோம். நீங்க உங்க டூர் பிளான சொன்ன நாள்ல இருந்து வித விதமா நாங்க தனி பிளான போட ஆரம்பிச்சிடுவோம். ஆனா உங்க எதிர்ல ஒரு வகை வரவழைச்ச மகிழ்ச்சிய வரவச்சா மாதிரி, அதாங்க பாக்காதப்ப ரொம்ப துக்கம் மாதிரியும்,பாக்கும்போது கஷ்டப்பட்டு உங்களுக்காக சிரிக்கிற மாதிரியும் செய்வோம். இங்கதான் நாங்க நிக்கறோம்.இப்போ தெரியுதா நடிக்கரதெப்படின்னு.இதைத்தான் பெரியவங்க செய்வதை திருந்தச்செய்யுன்னு சொன்னாங்க.
நான் ஏற்கனவே ஒருசில ஆண்கள் சொல்றதை கேட்ருக்கேன், பெண்கள் தனியா இருக்கும்போது எதையும் சமைச்சு சாப்டரதில்லை, இருக்கிற ஊறுகாய், பொடின்னு வச்சு சமாளிச்சிக்கிராங்கன்னு. இங்கதான் நீங்க ஒரு முக்கிய மேட்டர நோட்டம் விடணும். அவங்க ஏற்கனவே தன் பிரண்ட்சோட சேர்ந்து ஹோட்டல்ல புல் கட்டு கட்டிட்டு வீட்டுக்கு வந்து, இன்னும் தொண்டைக்கும் வாய்க்கும் நடுவுல சின்ன கேப் இருக்குன்னு திருப்பி கொஞ்சம் உள்ள தள்ளுவாங்க. மத்தபடி உங்க கற்பனை குதிரைய நீங்களே தட்டிவிட்டுட்டு, நாங்க உங்களுக்காகவே வாழரோம்னு நெனச்சிக்கிட்டீங்கன்னா நாங்க என்னாத்த செய்ய முடியும்.
இன்னொரு அமுக்குணி டாபிக், என் ரங்கமணி உட்பட பலர் தன்னை பேக்குன்னு தெளிவா ப்ரூவ் பண்ற ஒரு விஷயம், என்னான்னா, தன்னை நெம்ப நல்லவன், வெகுளிப்பய, மனசுல எதையுமே வெச்சுக்கரதில்லை,இந்த சீனல்லாம் போட்டு, தான் சைட்டடிக்கிற நடிகைகல்லருந்து சின்ன வயசு க்ரஷ் வரைக்கும் சொல்லி வூடு கட்ற மேட்டர். நெறைய தங்கமணிங்க நீங்க சொல்ரதயெல்லாம் காதுகொடுத்து கேக்கிறமாதிரி ஆக்ட் விடுவாங்க, இன்னும் கொஞ்சம் மேலப் போய் தானும் பாய்ண்ட் எடுத்துக்குடுக்கரதுன்னு போட்டுத் தாக்குவாங்க. இதுக்குப் பேர்தான் போட்டு வாங்கறது(give & take policy).நீங்களும் கொஞ்ச கொஞ்சமா உங்க வாயாலயே உங்களுக்கு சூனியம் வச்சிப்பீங்க. ஆனா அடுத்தடுத்த நாட்கள்ல வீட்ல சில அமானுஷ்யமான மேட்டருங்க நடக்கும். உங்க பேவரட்(அதாவது உங்க பெண்பால் கலீக் நல்லா இருக்குன்னு சொன்ன) சட்டை திடீர்னு தீஞ்சு போகும்(இத்தனைக்கும் இஸ்திரி டியூட்டி உங்கள்தா இருக்கும்), உங்க பேவரிட் dvdய எல்லாம் பையன் தெரியாம உடச்சுப்போட்ருவான்(உங்க பேவரிட் நடிகயோட கலக்ஷன்னா, பையன் வாய்கொள்ளாத சாக்லேட்டோட திரிவான்), பழைய கிரஷ்ஷோட ஞாபகார்த்தமா வெச்சிருந்த போட்டோஸ் மேல சாம்பார் கொட்டிடும்(இத்தனைக்கும் அது தனி ஷெல்ப்ல இல்ல டிரங்க் பெட்டிக்குள்ள இருந்திருக்கும்), உங்க ஸ்கூல், காலேஜ் ரீயூனியனுக்கெல்லாம் வர மூக்கால அழுதவங்க திடீர்னு ஆர்வமா (அதாவது நீங்க லோன்லியா பீல் பண்ணக் கூடாதுங்கர நல்ல எண்ணம்தாங்க) வர ஆரம்பிப்பாங்க. இதெல்லாம் சிலப்பல எடுத்துக்காட்டுகள்தான், அனுபவப்பட்ட ராசாக்கள் பின்னூட்டத்துல தாங்கள் பழிவாங்கப்பட்ட கதைகள வகைப்படுத்திப் போடுங்க!
இன்னும் ஒரு வகை கோஷ்டிங்க உண்டு. அதென்னன்னா ஒரு பொண்ணை பத்தி இன்னொருப் பொண்ணுக்கிட்ட நக்கலடிக்கறது, அட்டு பிகருங்கறது. இப்டில்லாம் சொல்லிட்டா இந்த பொண்ணு மடங்கிடும்னு நெனப்பு வேற. நெனப்புதாங்க பொழப்ப கெடுக்கும். எல்லா பொண்ணுங்களும் இன்னொரு பொண்ணோட லுக்க பத்தி ஒரு தெளிவான மதிப்பீட அவங்க அந்த ஏரியால தென்பட ஆரம்பிச்ச உடனே போட்டு வச்சிடுவாங்க. அத அந்த ஹ்ருத்திக் ரோஷனே வந்தாலும் மாத்த முடியாது. அவங்க வெளியில ரசிக்கிற மாதிரி கெக்கபெக்கேனு இளிச்சாலும், மனசுக்குள்ளே "மவனே இவ்ளோ நல்ல பிகரயே என்கிட்டே இப்டி நக்கலடிக்கிற, என்னப் பத்தி பின்னாடி என்னான்னா பேசுவ? உன்னைய வேற மாதிரி டீல் பண்ணிக்கிரேண்டா"னு தான் கருவிக்கிட்டிருப்பாங்க.
அடுத்தது, கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லைங்கரதுதான். பல வீடுகள்ல மாமியார் மருமகள், நாத்தனார்கள், கோ சிஸ்டர்கள் மத்தியில நிலவுற சுழ்நிலயப்பத்திதான். இதை மூன்று வகையா பிரிச்சிக்கலாம். முதல் வகை முடியப் பிடிச்சிக்கிட்டு சண்டை போடறவங்க, ரெண்டாம் வகை நிஜமாவே ஒத்துமையா இருக்கறவங்க, மூணாவது வகை எப்டின்னா, அப்டி ஒரு ஒத்துமை மாதிரி ஆக்ட் கொடுப்பாங்க, ஆனா உள்ளுக்கிள்ளே என்னா உள்ளடி வேலை செஞ்சு எதிராளிய காலி பண்லாம்னு தாட்ச தட்டி விட்டுக்கிட்டிருப்பாங்க. இப்போ சொல்லுங்க யார் ரொம்ப டேஞ்சரானவங்க? யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே, yes U r correct, ஆமாங்க நீங்க சரியா கண்டுகிட்டீங்க(மேஜர் ஸ்டைல்ல படிக்கவும்). அந்த மூணாவது ரகத்தை சேர்ந்தவங்க தான் பொதுவாக மிக மிக அதிகம். இந்த ரகத்தாளுங்கக்கிட்ட யாருமே கும்மி அடிச்சாட முடியாது. அதனால வழக்கமா ஆண்கள் செய்யற எட்டப்பன் வேலை இங்க எப்பவுமே ஒர்க்கவுட் ஆகாது.
அடுத்தது மாமனார் மாமியார் கிட்ட காமிக்கிற போலி மரியாதை. இதுல பல பலப்பேர் முதல் பார்ட்ல நல்லாத்தான் ஜாங்கிரியைப் பிழிஞ்சிருப்பாங்க. ஆனா செகன்ட் பார்ட்ல தான் சொதப்போ சொதப்புன்னு சொதப்பிருப்பாங்க. நீங்க பல personality development programsல இதை கேட்டிருப்பீங்க, என்னனன்னா, பெண்களோட ஒரு அடிஷனல் குவாலிட்டி multitasking. அந்த குவாலிட்டி இருக்கிறவங்க எப்பவுமே பலதையும் யோசிச்சு, comparitive study பண்ணிகிட்டே இருப்பாங்க. இப்போப் புரியுதுங்களா, நீங்க உங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லாதப்ப "என்னங்க எப்டி இருக்கீங்க,டாக்டர போய் பார்த்துட்டீங்களா, என்ன சொன்னார்"னு கேக்கரதோட நிறுத்திருப்பீங்க(மனசுல சூழ்நிலய சூப்பரா சமாளிச்சிட்டதா இறுமாப்பு வேற) . அதுக்கு அவங்க என்ன பதில் சொன்னாங்கன்னு கூட கவனிச்சிருக்க மாட்டீங்க. இப்போ ஒண்ணும் தெரியாது. அப்பாலைக்கு ஒரு நாள் உங்க ஜாதகத்துல ஏழரை இறங்கும்போதுதான் எபெக்ட் தெரியோதெரியுன்னு தெரியும்.முதல் கட்டமா ரொம்ப நாளா உங்க வீட்டுப்பக்கமே தலைவச்சு படுக்காத உங்க தம்பியோட மாமியாரோ, இல்லை உங்க தங்கையோட மாமியாரோ திடீர்னு உங்க வீட்டுக்கு வருவாங்க. உங்க வீட்டுக்குவரும்போதுன்னு பார்த்து வழுக்கிவிழுவாங்க. நீங்களும் சனீஸ்வரனின் விஷமச்சிரிப்ப கவனிக்காம வீட்டுல இருக்கறதுலயே பொறுப்பானவன் நாந்தான்னு சீன் போடருத்துக்காக அவங்கள விழுந்து விழுந்து கவனிப்பீங்க. அப்போதாங்க ஆரம்பிக்கும். கல்கி படத்துல பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்டே, பொண்டாட்டிங்கள கத்தியின்றி ரத்தமின்றி செமையா டார்ச்சர் பண்ணி சாவடிப்பாரே, பார்த்திருக்கீங்களா?அதப்படியே இங்கே நடக்கும். இதுக்கு தேவையான multitasking குவாலிட்டி பெண்கள்கிட்ட நெம்ப ஜாஸ்தியா இருக்குன்னு நான் கொஞ்சம் முன்னாடி போட்ட மொக்கயிலயே தெரிஞ்சிருக்குமே?? இப்போ எல்லாத்தையும் சேத்து வெச்சு கேள்வியும் comparitive ஸ்டடியுமா உங்களுக்கொரு ஆப்படிப்பாங்க பாருங்க...... யப்பா!!! நெனைக்கும்போதே கண்ணகட்டுதே!!
என்னாங்க கொஞ்சமாவது அலர்ட்டாயிட்டீங்களா? இது சாம்பில்தான், இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. ஆனா இவைகள்தான் நெம்ப முக்கியமான விஷயங்கள். அப்பாலிக்கா மீதிய சொல்றேன்.
அடுத்து வருவது: பதிவர் லக்கி லுக் -இன் சீரியஸ் பேட்டி
103 comments:
//ஆனா இவைகள்தான் நெம்ப முக்கியமான விஷயங்கள். அப்பாலிக்கா மீதிய சொல்றேன்//
அப்பாலிக்கா மீதிய சொல்ல இன்னா மிச்சம் கீது? அதான் எல்லாத்தையும் சொல்லிகினியே சிஸ்டர்!!!!!!!!!
இதைத்தான் அறியாமைங்கறது அப்துல்லா. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவுனு ஒன்னாங்கிலாசுலேருந்து படிச்சும் மனசுல பதியாமப் போச்சே!
////அத அந்த ஹ்ருத்திக் ரோஷனே வந்தாலும் மாத்த முடியாது.////
இல்லையே, கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்குள்ள(பெண்களுக்குள்ளே) ஒரே பனிப்போரா இருக்குமே, ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் கூட்டணி மெகா கூட்டணி அமைச்சிடுவீன்களோ?
அடங்கொக்கமக்கா ..பதிவு உண்மை தமிழனுக்கு போட்டியா இருக்கே....துண்டு போட்டுட்டு போறேன் திரும்ப வரேன் :-))))
தலைப்பு ஒரு தங்கமணியின் வாக்குமூலம்-னு இல்ல இருந்திருக்கணும்.
இதெல்லாம் ஜுஜுபி நாங்கல்லாம் எப்படியாம்பட்ட தில்லாலங்கடிங்க!!
ஹும்
எவ்ளவோ தாங்கீட்டோம் இத தாங்க மாட்டமா !!!!
:)))))
அது அப்டி இல்லை மோகன். உள்ளுக்குள்ளே பொறாமை பனிப்போர் எல்லாம் இருக்கும். ஆனா இதோட வேரை தேடிப்போனீங்கன்னா, உண்மை வெளங்கிடும். ஏன் பனிப்போரும், புயலும் எங்களுக்குள்ளே வீசுதுன்னா, எங்களுக்கு அடுத்தவங்களை பத்தி நல்லா தெரியும். இன்னொருத்தி என்னோட அழகா இருக்கறதாலத்தான் நானே காண்டுல இருப்பேன். அப்ப வந்து ஆண்கள் தங்களோட உள்குத்து வேலைய ஆரம்பிச்சா அதோட விளைவு எப்டி இருக்கும்னு நீங்களே புரிஞ்சிக்கங்க.
கிரி அண்ணா அது என்ன என் தலைக்கு மேலயே வந்து கமெண்ட்டு போடற உன் ப்ரொபைல் போட்டோல இருக்க ஆண்ட்டி படம் பாத்து என் ப்ரொபைல்ல இருக்க குழந்தை பயந்துக்க போகுது!!
:)))))
நேரம் கிடைக்கும் போது வாங்க கிரி. எனக்கு சின்னதாவே எந்த விஷயத்தையும் சொல்லி முடிக்கத் தெரியாது. இது என்கிட்டே இருக்க பெரிய குறை. ஆனா எனக்கு உண்மைத் தமிழன் மாதிரி மத்தவங்க மேல செமக் கடுப்பும், தீவிரக் கொலைவெறியும் கிடையாது. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல:):):):)
நல்ல சமாளிப்பு சிவா. இந்த மாதிரி உதார் விடறவங்கத் தான் வாயிங்கர வாய்க்கால மூடாம, தொடர்ந்து ஊத்து ஊத்துன்னு ஊத்தி கட்சீல இவ ஏன் நமக்கு இப்டி ஆப்படிச்சிட்டானு யோசிக்கறது:):):):)
/////ஆனா எனக்கு உண்மைத் தமிழன் மாதிரி மத்தவங்க மேல செமக் கடுப்பும், தீவிரக் கொலைவெறியும் கிடையாது. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்ல:):):):)
/////
அவருக்கும் எந்த உள்நோக்கமும் இல்ல, அவரும் ஒரு ஜாலி டைப் என்பதாக அறிகிறேன்.
ஐயயோ, நானும் ஜாலியாத்தாங்க சொன்னேன். நான் ஏன் அவரைப் பத்தி திமிரா எல்லாம் விமர்சனம் பண்ணப் போறேன். எதையோ ட்ரை பண்ணேன், எப்டியோ முடிஞ்சிடுச்சி. எல்லாரும் மன்னிச்சுக்கோங்க
>> இன்னொரு அமுக்குணி டாபிக், என் ரங்கமணி உட்பட பலர் தன்னை பேக்குன்னு தெளிவா ப்ரூவ் பண்ற ஒரு விஷயம், என்னான்னா, தன்னை நெம்ப நல்லவன், வெகுளிப்பய, மனசுல எதையுமே வெச்சுக்கரதில்லை,இந்த சீனல்லாம் போட்டு, தான் சைட்டடிக்கிற நடிகைகல்லருந்து சின்ன வயசு க்ரஷ் வரைக்கும் சொல்லி வூடு கட்ற மேட்டர் <<
கரெக்டா சொன்னீங்க போங்க. மொதோ ராத்திரியன்னிக்கு ஏதோ தன் பெருமைய பீத்திக்கிறாங்களே ('ஜட்ஜ் குடும்பத்துல இருந்து என்ன பொண்ணு எடுக்க ரொம்ப ஆர்வமா இருந்தாங்க', 'என்ன e-mail-ல பொண்ணு பாத்த அமெரிக்க டாக்டர், எல்லா வேலையும் (I mean Vacuஉm-ing etc. sort of வீட்டு வேலைகள்) தானே பண்றேன்-னுலாம் சொன்னான், எங்க அம்மாதான் வயசு வித்தியாசம் ஜாஸ்தியா இருக்கு, பின்னாடி மாப்பிள்ளைக்கு பொண்ணு மேல சந்தேகம் வரும் (என்ன லாஜிக்கோ தெரியல)-னு சொல்லி வேணான்னுட்டாங்க', 'என் ஃப்ரண்ட் இன்ட்ரொட்யூஸ் பண்ணின பையன லண்டன்ல மீட் பண்ணினேன். எனக்கு hug குட்றீ, kiss குட்றீ-னு கேட்டான்' ... இப்டியாப்பட்ட அளவுக்கு), நம்மளோட அல்ப சல்ப மேட்டர்கள சொல்லலன்னா தன்மானத்துக்கே இழுக்கு-ன்னு நெனச்சுக்கிட்டு, பத்தாம்பு படிக்கும்போது எதிர் வூட்டு பொண்ண பாத்து காதல் கவித எழுதி என் புக்கு குள்ளேயே, வெச்சுகிட்டிருந்தது (வெச்சிகிட்டிருந்தது மட்டுந்தாம், குடுக்க கிடுக்க இல்ல, அந்தளவு நமக்கு தெகிரியம் பத்தாதுன்னு வைங்க), அது தெரிய வந்து ஏற்பட்ட பின்விளைவு பத்தி லேசா சிரிப்போட சொன்னேன்.
ரெண்டு வருஷம் கழிச்சி வேற ஒரு சண்டைல இந்த விஷயம் டமால்-னு வெடிச்சிது. (இதுல என்ன கொடுமைன்னா, அவங்க தன்னோட பழைய லவ்வரோட இன்னும் தொடர்பில இருக்குறதுதான் - அது பெரிய கதை)
அப்பாலிக்கா விஸ்யம் கொஞ்சம் சீரியஸா போய்ட்டிருக்குன்னு வைங்க !
ஆங்ங்ங் ... என்ன சொல்ல வரேன் ... இந்த மாதிரி பேக்கு மாதிரிலாம் இருக்காதீங்கனிட்டு !!!
அன்புடன்
அனானி
நெம்ப நன்றி அனானி, வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு. இப்டி அப்பாவியா பலர் இருக்கப்போய்தான் நான் ஆண்களோட அறிவுக்கண்ண கொஞ்சமாவது திறக்கலாமேனு இந்தப் பதிவ போட்டேன்(இதுல எனக்கென்ன வசதின்னா, என் ரங்கமணிக்கு தமிழ் படிக்கத் தெரியாததால அவர் உஷாராக மாட்டாரு, நானும் என் பணிய தடயில்லாமத் தொடரலாம்)
//மங்களூர் சிவா said...
கிரி அண்ணா அது என்ன என் தலைக்கு மேலயே வந்து கமெண்ட்டு போடற உன் ப்ரொபைல் போட்டோல இருக்க ஆண்ட்டி படம் பாத்து என் ப்ரொபைல்ல இருக்க குழந்தை பயந்துக்க போகுது!!
:)))))//
அந்த குழந்தை பயப்படுறது இருக்கட்டும்..நீங்கள் முதல்ல ஜொள்ளு விடாம இருங்க குழந்தையை காரணம் காட்டி ஹி ஹி ஹி ஹி ஹி :-))))))))
//rapp said...
ஐயயோ, நானும் ஜாலியாத்தாங்க சொன்னேன். நான் ஏன் அவரைப் பத்தி திமிரா எல்லாம் விமர்சனம் பண்ணப் போறேன். எதையோ ட்ரை பண்ணேன், எப்டியோ முடிஞ்சிடுச்சி. எல்லாரும் மன்னிச்சுக்கோங்க//
மோகன் ஏங்க பாவம் rapp ஐ சிக்கல்ல மாட்டி விடுறீங்க...:-))))
rapp ஒன்றும் கவலை படாதீங்க..நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கன்னு எனக்கு தெரியும்.
//ஆண்கள் ரொம்ப நல்லவங்கங்க..... //
ஆரம்பமே அமர்க்களமா இருக்கே :-))) கடைசில அடி விழாம இருந்தா சரி.
//நான் ஏன் இப்டி சொல்றேன்னா கிட்டத்தட்ட நான் சந்திச்ச ஆண்கள்ள ஒருத்தர் கூட புல் அலர்ட்ல இருந்ததில்லை.//
பாராட்டி ஒரு செகண்ட் ஆகல அதுக்குள்ளே வாரிட்டாங்களே :-((((..சரி நீங்க இன்னும் என்னை மாதிரி ஆளுகளை சந்திக்கலைனு நினைக்கிறேன் :-D
//என்னங்க நானு சொல்றத கேட்டு ஓங்குதாங்கா நடந்து பொழச்சிப்போங்க//
சரி தாங்கோ
//இப்போ நீங்கல்லாம் என்னா நெனைக்கிறீங்க? பெண்கள் எல்லாம் குடும்ப இஸ்த்திரிங்க, அவங்க இந்த மாதிரில்லாம் புருஷன் ஊருக்குப்போனா குஷியாகமாட்டாங்க, நாம ஊருக்குக் கெளம்பும்போது அவங்க கண்ல உடற வாட்டர் பாக்கெட்லாம் உண்மைனுதானே?//
இல்லையே நாங்க அதுக்கெல்லாம் அசரமாட்டோம்..நம்பிட்ட மாதிரி சீன் போட்டுட்டு எஸ் ஆகிடுவோம் ஹி ஹி ஹி ஹி
//அதாங்க பாக்காதப்ப ரொம்ப துக்கம் மாதிரியும்,பாக்கும்போது கஷ்டப்பட்டு உங்களுக்காக சிரிக்கிற மாதிரியும் செய்வோம்//
இனி வீட்டுல கொஞ்சம் கூர்ந்து கவனிக்கணும் :-?
//பெண்கள் தனியா இருக்கும்போது எதையும் சமைச்சு சாப்டரதில்லை, இருக்கிற ஊறுகாய், பொடின்னு வச்சு சமாளிச்சிக்கிராங்கன்னு//
அது என்னன்னா சோம்பேறி தனம் வேற ஒன்னும் இல்ல..
//அவங்க ஏற்கனவே தன் பிரண்ட்சோட சேர்ந்து ஹோட்டல்ல புல் கட்டு கட்டிட்டு வீட்டுக்கு வந்து//
நாங்க அந்த அளவுக்கு சிட்டி ல இல்ல அதனால் இதற்க்கு வாய்ப்பு இல்லை.
//இன்னும் தொண்டைக்கும் வாய்க்கும் நடுவுல சின்ன கேப் இருக்குன்னு திருப்பி கொஞ்சம் உள்ள தள்ளுவாங்க.//
அது தான் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி பெருத்து போறாங்களா.....
//என்னான்னா, தன்னை நெம்ப நல்லவன், வெகுளிப்பய, மனசுல எதையுமே வெச்சுக்கரதில்லை,இந்த சீனல்லாம் போட்டு, தான் சைட்டடிக்கிற நடிகைகல்லருந்து சின்ன வயசு க்ரஷ் வரைக்கும் சொல்லி வூடு கட்ற மேட்டர்.//
இதுல கிரி உஷாரு ...
//நீங்களும் கொஞ்ச கொஞ்சமா உங்க வாயாலயே உங்களுக்கு சூனியம் வச்சிப்பீங்க.//
ஹா ஹா ஹா ஹா இதுக்கு பேரு தான் தூங்கிறவனை எழுப்பி தூங்கிறியான்னு கேட்டு அடி வாங்குறதா :-))))
//உங்க பேவரிட் dvdய எல்லாம் பையன் தெரியாம உடச்சுப்போட்ருவான்//
உங்க வீட்டுல எத்தனை dvd உடைத்தீங்க உண்மைய சொல்லுங்க :-)))
//பழைய கிரஷ்ஷோட ஞாபகார்த்தமா வெச்சிருந்த போட்டோஸ் மேல சாம்பார் கொட்டிடும்(இத்தனைக்கும் அது தனி ஷெல்ப்ல இல்ல டிரங்க் பெட்டிக்குள்ள இருந்திருக்கும்)//
உங்க ரங்கமணி கிட்ட போட்டு கொடுக்க போறேன்
//இன்னும் ஒரு வகை கோஷ்டிங்க உண்டு. அதென்னன்னா ஒரு பொண்ணை பத்தி இன்னொருப் பொண்ணுக்கிட்ட நக்கலடிக்கறது, அட்டு பிகருங்கறது. இப்டில்லாம் சொல்லிட்டா இந்த பொண்ணு மடங்கிடும்னு நெனப்பு வேற. நெனப்புதாங்க பொழப்ப கெடுக்கும்//
அதுல எனக்கு அதிர்ஷ்டமே இல்லைங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எல்லா பொண்ணுகளும் என்னை ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்வன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி என்னை கண்டுக்கிறதே இல்லை. இதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. எனக்கு தன்மானம் நந்தி மாதிரி முன்னால நிப்பதால கடலை போட்டு இந்த மாதிரி பிட்ட போட முடியல..: :-(((((
//மனசுக்குள்ளே "மவனே இவ்ளோ நல்ல பிகரயே என்கிட்டே இப்டி நக்கலடிக்கிற, என்னப் பத்தி பின்னாடி என்னான்னா பேசுவ? உன்னைய வேற மாதிரி டீல் பண்ணிக்கிரேண்டா"னு தான் கருவிக்கிட்டிருப்பாங்க//
இருந்தாலும் பொண்ணுக புகழ்ச்சிக்கு மயங்கிடுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்.. பல பிகர்ஸை மடக்கிய நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்
//மூணாவது வகை எப்டின்னா, அப்டி ஒரு ஒத்துமை மாதிரி ஆக்ட் கொடுப்பாங்க, ஆனா உள்ளுக்கிள்ளே என்னா உள்ளடி வேலை செஞ்சு எதிராளிய காலி பண்லாம்னு தாட்ச தட்டி விட்டுக்கிட்டிருப்பாங்க.//
இது மாமியா மருமகள் இவங்கன்னு இல்லைங்க எல்லோரும் செய்வது தான் இது..ரொம்ப ஆபத்து ..இவங்க கிட்ட எல்லாம் ஏதும் பேசக்கூடாது..பேசுனா மவனே சங்கு தான்..
//நீங்க பல personality development programsல இதை கேட்டிருப்பீங்க//
ஹீ ஹீ ஹி நான் ஏற்கனவே personality !!! யா இருக்கேன்னு கூறி நீங்க வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க :-)))))))))
//உங்க தம்பியோட மாமியாரோ, இல்லை உங்க தங்கையோட மாமியாரோ திடீர்னு உங்க வீட்டுக்கு வருவாங்க. உங்க வீட்டுக்குவரும்போதுன்னு பார்த்து வழுக்கிவிழுவாங்க//
நமக்கு இந்த பிரச்சனை இல்லை..அதனால அடுத்ததற்கு போறேன்
//என்னாங்க கொஞ்சமாவது அலர்ட்டாயிட்டீங்களா? இது சாம்பில்தான், இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. ஆனா இவைகள்தான் நெம்ப முக்கியமான விஷயங்கள். அப்பாலிக்கா மீதிய சொல்றேன்//
ஸ்ஸூ அப்பா இப்பவே கண்ணை கட்டுதே ....
//rapp said...
நேரம் கிடைக்கும் போது வாங்க கிரி//
பாதி நேரம் வெட்டி தான்..அப்பபோ பிஸி ஆகிடுவேன்...
அலுவலகத்தில் வேலை பண்ண சொன்னா கோபம் வருமா வராதா நீங்களே சொல்லுங்க.....அலுவலகம் வருவது எதற்கு வேலை செய்யறதுக்கா வரோம் ....கொஞ்சமாவது "மனசாட்சி" படி பேசுறாங்களா ....ரத்தம் கொதிக்குது ..சரி சரி கிரி கூல் கூல்..
தமிழ் படிக்கத் தெரிஞ்ச ரங்கூஸ்கள்ன்னா......????
சொ.செ.சூ( நன்றி: வரவனை)
//இப்போ ஒண்ணும் தெரியாது. அப்பாலைக்கு ஒரு நாள் உங்க ஜாதகத்துல ஏழரை இறங்கும்போதுதான் எபெக்ட் தெரியோதெரியுன்னு தெரியும்//
இதைத்தான் 70கோடி செலவழிச்சி சமீபத்திலே ஒருத்தர் சொன்னார் - butterfly effectன்னு.
//அதனால வழக்கமா ஆண்கள் செய்யற எட்டப்பன் வேலை இங்க எப்பவுமே ஒர்க்கவுட் ஆகாது.
//
இதை நான் மென்மையா கண்டிக்கறேன். நீங்க தமிழ் சீரியல்கள் பாத்திருக்கீங்களா.. எட்டப்பி-தான் ஜாஸ்தியா இருப்பாங்க....
//அத அந்த ஹ்ருத்திக் ரோஷனே வந்தாலும் மாத்த முடியாது.//
அப்போ நான் வந்தா மாத்தமுடியும்னுதானே சொல்றீங்க... நல்லது..
வெள்ளிவிழா பதிவுகள் கலை கட்டிவிட்டது போல.
:)
கலை = களை
ஆமாம். கேக்க மறந்துட்டேன்...
இப்பெல்லாம் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பை விட்டுட்டு இந்த வேலையா பார்க்கிறார்?
///வெள்ளிவிழா பதிவுகள் --கலை-- களை கட்டிவிட்டது போல.////
எல்லாம் உங்களைப் போன்றோர் ஆதரவுதான் காரணம், உங்கள் வலைப்பூ நண்பர்களுக்கு என் வலைப்பூ அறிமுகம் கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சி.
//உங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லாதப்ப "என்னங்க எப்டி இருக்கீங்க,டாக்டர போய் பார்த்துட்டீங்களா, என்ன சொன்னார்"னு கேக்கரதோட நிறுத்திருப்பீங்க(மனசுல சூழ்நிலய சூப்பரா சமாளிச்சிட்டதா இறுமாப்பு வேற) . அதுக்கு அவங்க என்ன பதில் சொன்னாங்கன்னு கூட கவனிச்சிருக்க மாட்டீங்க. இப்போ ஒண்ணும் தெரியாது.//
உண்மையான விஷயம் ராப்.. சமீபத்துலதான் இந்த மாதிரி ஒரு சம்பவம் எங்க வீட்ல நடந்து வாங்கிக் கட்டிகிட்டேன்!!
ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
ராப், உங்க ரங்குவ தெளிய வெச்சு தெளிய வெச்சு அடி பின்னி இருக்கீங்க போலிருக்கே. :))
Rapp ...
கல்யாணம் பண்ணலாமா... வேனாமா ?
அத்த சொல்லுங்க முதல்ல...
படிச்ச பிறகு பயமா இருக்கு....
அன்புடன்
கார்த்திகேயன்
//நீங்க இன்னும் என்னை மாதிரி ஆளுகளை சந்திக்கலைனு நினைக்கிறேன்//
உங்களுக்கு சிவாவுக்கு சொன்ன அதே பதில்தான்
//இல்லையே நாங்க அதுக்கெல்லாம் அசரமாட்டோம்..நம்பிட்ட மாதிரி சீன் போட்டுட்டு எஸ் ஆகிடுவோம்//
இதத்தான் குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலங்கறது.
//அது என்னன்னா சோம்பேறி தனம் வேற ஒன்னும் இல்ல//ஆடு நனயுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்! ஏங்க உங்களைப் பட்டினிப் போட்டாத்தான அது சோம்பேறித்தனமாகும். நாங்க எங்களுக்கு பிடிச்சத சாப்டுக்கறோம். எங்களுக்கென்ன தலையெழுத்தா, நாங்க சமைச்ச சாப்பாட நாங்களே சாப்டறத்துக்கு. உங்களுக்குத்தான அந்தத் தலையெழுத்து! நீங்க இல்லாதப்பவாவது நாங்க நல்ல சாப்பாட சாப்டுக்கறோம்.
//அது தான் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி பெருத்து போறாங்களா//நீங்க என்புதோல் போர்த்திய உடம்போட இருக்கறதால மத்த ஆண்களையும் உங்களோட சேர்த்துக்கறதா? கல்யாணமான ஒரு மாசத்திலயே தொப்பையும் தொந்தியுமா எத்தனை ஆம்பளைங்க மாறிடுராங்க
//உங்க வீட்டுல எத்தனை dvd உடைத்தீங்க உண்மைய சொல்லுங்க//
என் ஸ்டைலே வேற. அவரா உளர்ற வரைக்கும் உளரட்டும்னு விட்டுட்டு, அப்புறம் தேவையானப்போ அந்த ஸ்டாக்ல இருந்து அப்பப்போ எடுத்து உபயோகப்படுத்திப்பேன்.dvd உடைக்கரதெல்லாம் ஏதாவதொரு நாள் தீர்ந்திடும். ஆனா என் ஸ்டைல்ல என்னைக்குமே ஸ்டாக் இருக்கும். அதோட இதை செய்யறத்துக்கு குழந்தைய வேற பெத்துக்கணும்
//இருந்தாலும் பொண்ணுக புகழ்ச்சிக்கு மயங்கிடுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்.. பல பிகர்ஸை மடக்கிய நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்//
நீங்க வேற அவங்களும் மயங்கரா மாதிரி நடிச்சிருப்பாங்க. அவங்க ஏற்கனவே ஒருத்தரை ஓட்டணும்னு முடிவு பண்ணிக்கிட்டு புல் ப்ளானிங்கோட தான் இப்டியெல்லாம் ரியாக்ஷன போட்டுத் தாக்குவாங்க.
//நமக்கு இந்த பிரச்சனை இல்லை..அதனால அடுத்ததற்கு போறேன்//இது சொந்தக்காரங்கதான்னு இல்லை யாரா இருந்தாலும் சேம் ப்ளட்தான். ஒரே criteria பெண்களுக்கு அப்போதைக்கு தேவையான என்டர்டைன்மென்ட்தான்.
////ஒரே criteria பெண்களுக்கு அப்போதைக்கு தேவையான என்டர்டைன்மென்ட்தான்.///
அப்ப காமெடி கீமெடி பன்னலான்னுதான் பொண்ணுங்க லவ் பண்றாங்களா?
//அலுவலகத்தில் வேலை பண்ண சொன்னா கோபம் வருமா வராதா நீங்களே சொல்லுங்க.அலுவலகம் வருவது எதற்கு வேலை செய்யறதுக்கா வரோம்.கொஞ்சமாவது "மனசாட்சி" படி பேசுறாங்களா.ரத்தம் கொதிக்குது//
இந்த மாதிரித்தாங்க என்கிட்டயும் சிலப் பேர் நெம்ப மோசமா பேசுனாங்க.எனக்கு பயங்கரக் கோவம் வந்திடுச்சி. சர்தான் போங்கடா, நான் இப்டி கஷ்டப்படரத்துக்கா என் ரங்கமணி சின்ன வயசுலேருந்து கஷ்டப்பட்டு படிச்சி சயிண்டிஸ்டா ஆகி, என் கடன் என் தங்கமணியை ஷாப்பிங் கூட்டிட்டு போவதேனு இருக்காருன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
நெம்ப நன்றி துளசி மேடம், வந்து உங்க கருத்துக்களை பதிவு பண்ணத்துக்கு
///ராப், உங்க ரங்குவ தெளிய வெச்சு தெளிய வெச்சு அடி பின்னி இருக்கீங்க போலிருக்கே///
அப்படித்தான் போலிருக்கு!
//அப்ப காமெடி கீமெடி பன்னலான்னுதான் பொண்ணுங்க லவ் பண்றாங்களா?//
வேற எதுக்குன்னு நீங்க நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? ஒரே சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு உங்கக் கேள்வி.
அவ்வ்வ்வ்.. குடும்ப பொண்ணுங்கன்னா அதுக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா????
பதிவு கலக்கல் :)
//கல்யாணம் பண்ணலாமா... வேனாமா ?
அத்த சொல்லுங்க முதல்ல...
படிச்ச பிறகு பயமா இருக்கு//
கார்த்திகேயன், பயமே வேண்டாம். தாரளமா கல்யாணம் பண்ணிக்கங்க. உங்களைத் தெளிவாக்கத்தான் இந்தப் பதிவு. கல்யாண வாழ்க்கைய விட ஜாலியான வாழ்க்கை வேற எதுவும் இல்லை.வாழ்க்கைத் துணையை உங்களுக்கு சமமா நினைச்சு, உங்க பெண்ணை உங்க மாப்பிள்ளை எப்டி நடத்தனும்னு எதிர்பார்ப்பீங்களோ அப்டி நீங்க உங்க மனைவி கிட்ட நடந்தீங்கன்னா, உங்க கல்யாண வாழ்க்கை தோற்கவே தோற்காது
//குடும்ப பொண்ணுங்கன்னா அதுக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா//
பின்ன என்ன நினைச்சீங்க? சம்சார சாகரம்னு சொல்லுவாங்களே கேட்டதில்லையா?வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு நெம்ப நன்றி பொன்வண்டு.
//ராப், உங்க ரங்குவ தெளிய வெச்சு தெளிய வெச்சு அடி பின்னி இருக்கீங்க போலிருக்கே//
ஹி ஹி ஹி. அம்பி அண்ணே இதெல்லாம் கூட இல்லைனா கல்யாண வாழ்க்கை எப்டி நல்லா இருக்கும். எனக்கும் ஒரு பொழுதுப்போக்கு வேணாமா? அவரு மட்டும் என் சமையலை வெச்சு ஒரு மினி காமடி ஷோவே நடத்துறாரே!
//சமீபத்துலதான் இந்த மாதிரி ஒரு சம்பவம் எங்க வீட்ல நடந்து வாங்கிக் கட்டிகிட்டேன்//
krishna,பார்த்தீங்களா அதுக்குத்தான் இந்தப் பதிவு. இனிமேயாவது எல்லாரும் கொஞ்சமாவது உஷாரா இருங்க.
//இதை நான் மென்மையா கண்டிக்கறேன். நீங்க தமிழ் சீரியல்கள் பாத்திருக்கீங்களா.. எட்டப்பி-தான் ஜாஸ்தியா இருப்பாங்க//
ஏங்க அதுல வர்ற வில்லி நிஜம்னா, அதுல வர்ற கேடுகெட்ட உறவு முறைகளும் அவங்களோட லைப் ஸ்டைலும் நிஜமா? நீங்க வேற ஏங்க இதயெல்லாம் பார்த்துக்கிட்டு! சின்னப்பசங்கள்ளாம் இனிமே சீரியல் பார்க்கக்கூடாது. எல்லாம் ஒரே அடல்ட்ஸ் ஒன்லியா இருக்கு.
// //அத அந்த ஹ்ருத்திக் ரோஷனே வந்தாலும் மாத்த முடியாது.//
அப்போ நான் வந்தா மாத்தமுடியும்னுதானே சொல்றீங்க... நல்லது//
ஹ ஹ ஹ நல்ல காமடிப் போங்க!
வந்ததுக்கு நெம்ப நன்றி கோவிக் கண்ணன்
:))
///மங்களூர் சிவா said...
தலைப்பு ஒரு தங்கமணியின் வாக்குமூலம்-னு இல்ல இருந்திருக்கணும்.
இதெல்லாம் ஜுஜுபி நாங்கல்லாம் எப்படியாம்பட்ட தில்லாலங்கடிங்க!!
ஹும்
எவ்ளவோ தாங்கீட்டோம் இத தாங்க மாட்டமா !!!!
:)))))///
ரிப்பீட்டேய்....
நிஜமா நல்லவன் அப்போ உங்களுக்கும் சிவாவுக்கு சொன்ன அதே பதில்தான்.//நல்ல சமாளிப்பு நிஜமா நல்லவன். இந்த மாதிரி உதார் விடறவங்கத் தான் வாயிங்கர வாய்க்கால மூடாம, தொடர்ந்து ஊத்து ஊத்துன்னு ஊத்தி கட்சீல இவ ஏன் நமக்கு இப்டி ஆப்படிச்சிட்டானு யோசிக்கறது:):):):)
வந்து உங்க கருத்துக்களை பதிஞ்சதுக்கு நெம்ப நன்றி நிஜமா நல்லவன். (நாங்க எல்லாரும் உங்களை நல்லவன்னு நம்பரோங்க. ஏன் இப்டி சத்தியமெல்லாம் பண்ணி அழறீங்க. ஹி ஹி கோச்சுக்காதீங்க)
ஐயையோ..
இதெல்லாம் பார்த்த உடனே கல்யாணம்னாலே பயம் வருதே எனக்கு?
ஏனுங்க..எல்லாத்தங்கமணிகளுமே இப்படித்தானா? :(
ரிஷான் உங்கம்மாவப் பார்த்து உங்கப்பா பயந்தாரா? இல்லை உங்கக்காவப் பார்த்து அவங்க கணவர் பயந்தாரா? இவங்கல்லாம் பயந்திருந்தா நீங்க பயப்படறதிலையும் ஒரு அர்த்தம் இருக்கு ரிஷான். உங்களுக்கும் கார்த்திகேயனுக்கு சொன்ன பதில ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.பயமே வேண்டாம். தாரளமா கல்யாணம் பண்ணிக்கங்க. உங்களைத் தெளிவாக்கத்தான் இந்தப் பதிவு. கல்யாண வாழ்க்கைய விட ஜாலியான வாழ்க்கை வேற எதுவும் இல்லை.வாழ்க்கைத் துணையை உங்களுக்கு சமமா நினைச்சு, உங்க பெண்ணை உங்க மாப்பிள்ளை எப்டி நடத்தனும்னு எதிர்பார்ப்பீங்களோ அப்டி நீங்க உங்க மனைவி கிட்ட நடந்தீங்கன்னா, உங்க கல்யாண வாழ்க்கை தோற்கவே தோற்காது
அப்போ பண்ணிக்கிட்டாப் போச்சு.. :)
என்ன இப்பதானே இருபது வயசில இருக்கேன்..இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே.. :)
பண்ணிக்கங்க பண்ணிக்கங்க! அதுக்கான ப்ரிபரேஷன்ச(அதாவது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பணி) இப்பவே ஆரம்பிச்சிடுங்க.
//பண்ணிக்கங்க பண்ணிக்கங்க! அதுக்கான ப்ரிபரேஷன்ச(அதாவது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பணி) இப்பவே ஆரம்பிச்சிடுங்க.//
அட,என்ன ஆபிஸர் நீங்க? இங்கிட்டுப் பாருங்க.
http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_19.html
http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_11.html
நான் ஒரு வாத்தியாருங்க..நானே போய் எப்படி?
இப்படியா காட்டி கொடுக்கிறது, பாவம் இனிமே உங்க பாடு.
பனிமலர்.
ரிஷான், இப்பல்லாம் வாத்தியாருங்கதான் நல்ல நல்ல பிகரஎல்லாம் வளைச்சிடறாங்க. அதால நீங்க கவலப் பட வேண்டாம். நீங்க சொல்லிக் குடுத்த 'அந்த(பையங்களோட குணாதிசயங்கள்) ' அறிவுரைகளை வச்சே கவுத்திடுங்க.
அப்டியெல்லாம் இல்ல பனிமலர். இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கு. இங்க கொடுத்ததெல்லாம் வெறும் சாம்பிள்தான்.
ரொம்பவே வித்தியாசமா ரூம் போட்டு சிந்திச்சி எழுதுறீங்க..ராப் !! :))
வீட்ல பெண்களை தனியாகவே விட கூடாதுங்க.. வேலைக்கு அனுப்புங்க.. இல்லாட்டி டி.வி கனெக்க்ஷன் கொடுத்து எல்லா சேனல் களையும் பாக்க விட்டுடுங்க..இல்லேன்னா ஏதாவது நோண்டி வேலை செஞ்சிகிட்டே இருப்பாங்க.. முக்கியமா வீட்டில IDD போன் கனெக்க்ஷன் குடுக்கவே கூடாது..சொந்தமா சூனியம் வெச்சிகிரத்துக்கு சமானம் அது..
ஹீ..ஹீ.. எல்லாம் அடி பட்ட அனுபவம் தான்... :))
ஏங்க கீ-வென் நீங்க நெம்ப விவரமான ஆளுன்னு நெனைச்சேன், என்னங்க இது இப்டி //வீட்ல பெண்களை தனியாகவே விட கூடாதுங்க.. வேலைக்கு அனுப்புங்க.. இல்லாட்டி டி.வி கனெக்க்ஷன் கொடுத்து எல்லா சேனல் களையும் பாக்க விட்டுடுங்க..இல்லேன்னா ஏதாவது நோண்டி வேலை செஞ்சிகிட்டே இருப்பாங்க.. முக்கியமா வீட்டில IDD போன் கனெக்க்ஷன் குடுக்கவே கூடாது//
சொல்லி உங்க அப்பாவித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க! நீங்க நெம்ப சீரியல் பார்க்கறீங்க. ஒரு தங்கமணி தன்னோட ரங்கமணி யார்கிட்ட பேசறாருன்னு காலர் ஐடி வச்சுத்தான் தெரிஞ்சிக்கனுமா என்ன? எல்லா உங்க முக மற்றும் உடல் மொழியை வச்சே கோலம் போட்டுற மாட்டோம். அப்பாலிக்கா எல்லா டிவி கனக்ஷனும் குடுத்து விட்டுட்டா இன்னும் கிரிமினலாத்தான நாங்க மாறுவோம். பின்ன என்னங்க வர்ற எல்லா சோப்களையும் பார்த்தா அதுல வேறன்னங்க இருக்கு? என்னாது வேலைக்கு போகனுமா? கூப்பிடுங்க பெண் ஆக்டிவிஸ்டுகளை, எவ்ளவு தெகிரியம் இருந்தா நாங்கெல்லாம் வேலைக்கு போகனும்னு சொல்லுவாரு. அப்பாலிக்கா நாங்க என்னாத்துக்கு ஆண்களை கல்யாணம் கட்டிகிட்டோம்?
அப்ப உக்கார்ந்து திம்போம் ன்னு தெளிவா சொல்லுறீங்க ?? ஆகா க கா கா !! பெண்ணுரிமை பேசுதய்யா !! இதென்னடா கீ-வென் உனக்கு ..வாங்கி கட்டிகிறதே பொழப்பா போச்சுதே !!
கணவன்மார்களே !! கவனிங்க.. ரெண்டு முக்கியமான விஷயங்கள்
1. வூட்டுக்காரம்மாவுக்கு செல் போன் வாங்கி குடுத்துடாதீங்க..முக்கியமா Post-Paid.. (pre-Paid போட்டு குடுத்தாலும்..வீட்டுக்காசுல சார்ஜ் ஏத்தி மாச பட்ஜெட் ஐ கவுத்துடுவாங்க.. :)))
2. கொழுந்தியாக்கள், மச்சினிச்சிகளை வீட்டு உள்ளாரேயே (unless கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் !! :))) சேர்க்காதீங்க,, போட்டு குடுத்து கெடுக்கிறதே இவிங்க தான்.. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் இல்லையா ?? (அதாங்க நாமளும், நம்ம வூட்டுக்காரம்மாவும் ஒற்றுமையா இருக்கிறது இந்த வகையறாக்களுக்கு எப்போதுமே ஆகாது..)
ராப் : இப்போ என்ன சொல்லுறீங்க..
ஏங்க ஒரு பொண்ணு தன் வாழ்க்கயயே தியாகம் பண்ண முன் வரான்னா அதுக்கு ஒரு வெல இருக்கும்ல, எப்படி? நாங்கல்லாம் யாரு?
ஏனுங்க இந்த செல் போன் விஷயம் தான் சுத்த காமடிங்க. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் இப்டித்தான் தன் தங்கமணிக்கு வாங்கிகொடுக்காம தான் மட்டும் வெச்சிகிட்டு சுத்திக்கிட்டுருந்தாருங்க. அந்த பொண்ணும் கேட்டு கேட்டுப் பார்த்து தன்னோட திறமைய காட்ட ஆரம்பிச்சிது. என்னன்னா, கடைக்கு போறதிலருந்து எல்லாத்தையும் தன் ரங்கமனித் தலையிலயே கட்டிட்டாங்க. நீ போரதுதானேனு அவரு கேட்டா, இல்லைங்க நேத்திதான் அம்மா சொன்னாங்க, அமெரிக்கா அண்ணன் இன்னைக்கு எப்ப வேணாலும் போன் பண்ணுவானாம், லண்டன் அக்கா இன்னைக்கு எப்ப வேணாலும் போன் பண்ணுவாங்களாம், என்னங்க பண்றது செல் போன் இருந்திருந்தா அந்த நம்பர கொடுத்திருப்பேன். அதனாலதாங்கம்பாங்க. பொறுத்து பார்த்திட்டு வெறுத்துப் போன அவங்களோட வீட்டுக்காரரு அவங்களுக்கும் ஒன்னு வாங்கிக் கொடுத்திட்டாரு. post paido இல்ல pre paido எதுவேணும்னாலும் வாங்கிக்கம்மான்னுட்டாரு. இதுக்கு என்னங்க சொல்றீங்க?
// கொழுந்தியாக்கள், மச்சினிச்சிகளை வீட்டு உள்ளாரேயே (unless கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் !! :))) சேர்க்காதீங்க,, போட்டு குடுத்து கெடுக்கிறதே இவிங்க தான்//ஏங்க இது உங்க அக்கா, தங்கச்சி, அம்மாக்கும் பொருந்துமா? ஏன்னா எங்களப் பொறுத்த வரைக்கும் அவங்கதான் குடும்பத்த பிரிக்கரத்துக்குன்னே பிறப்பெடுத்தவங்க.
rapp (வெட்டி ஆபிசர்) அசராமல் அடிச்சு ஆடுறிங்க! உங்க பதிவு செம செம செம ஹிட்! பின்னூட்டங்களுக்கு உங்க ரெஸ்பான்ஸ் அபாரம். என் பொன்விழாவுக்கும் இப்பவே உங்க பதிவுக்கு சொல்லி வச்சிக்கறேன். பெரியாளா ஆனதுக்கப்பறம் கை விரிச்சிடாதீங்க!
//அசராமல் அடிச்சு ஆடுறிங்க! உங்க பதிவு செம செம செம ஹிட்//
நெம்ப நன்றிங்க மோகன். ஒரே வெக்க வெக்கமா வருது.
//பின்னூட்டங்களுக்கு உங்க ரெஸ்பான்ஸ் அபாரம்//
ஹி ஹி ஹி, என் ப்ளாக் பேரப் பார்த்தாலே தெரியல? வெட்டிஆபீசரான எனக்கு இதத் தவிர வேறன்னங்க வேலை?
//என் பொன்விழாவுக்கும் இப்பவே உங்க பதிவுக்கு சொல்லி வச்சிக்கறேன்//
நெம்ப நன்றிங்க மறுபடியும் வாய்ப்பளிச்சதுக்கு.
//பெரியாளா ஆனதுக்கப்பறம் கை விரிச்சிடாதீங்க//
இது ஆவறத்துக்கில்லை! அப்டீன்னா இப்போ நான் ப்லாகுலகில் பெரியாளு கிடையாதா? ஓகே ஓகே! ஸ்டாப் இட். காரித்துப்பினது போதும். சும்மா சொன்னேன். கண்டிப்பா என் ப்ளேடு உங்க பொன்விழாப் பதிவுலையும் தொடரும்.
//கல்யாணம் பண்ணலாமா... வேனாமா ?
அத்த சொல்லுங்க முதல்ல...
படிச்ச பிறகு பயமா இருக்கு.... //
கார்த்தி கண்டிப்ப கல்யானம் செய்ங்க. அதால உங்க efficiency improve ஆகும்.
வர்ர தங்கமணி இது மதிரி இல்லாம நல்ல தங்கமணியா இருந்திச்சுன்னா, ஆபீஸ் வேலையெல்லாம் கரெக்டா டையத்துக்கு டாண் டாண்னு முடிச்சு உங்க ஆபிசர்ட்ட நல்ல பேரு வாங்கலாம்.(சீக்கிரம் வீட்டுக்கு போகனுமில்ல)
இல்ல இது போல அமஞ்சா, ஆபிஸ்ல அடுத்த வாரம், அடுத்த மாசம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் இன்னைக்ககே முடிச்சு நல்ல பேரு வாங்கலாம். (வீட்டுக்குப்போறதத் தள்ளிப் போடலாமில்ல)
Getting married or not, either way you will regret your decision - Oscar Wild.
வருத்தப் படறதுன்னு ஆச்சு. நல்வாழ்த்துக்கள்?
கார்த்தி, ஒன்னு மட்டும் உறுதிங்க, வடகரை வேலன் மாதிரியான ஆளா நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்க கல்யாண வாழ்க்கை தோல்விதான். முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண, அது இதுனு சொல்றாருன்னா, அவரு வீட்ல எப்டி இருப்பாரு? இப்டி கொழுப்பெடுத்தாடுரவங்களுக்கு வாழ்க்கைத் துணை கிட்ட என்ன மரியாதை கிடைக்கும்? இந்த மாதிரி மட்டமான எண்ணமுள்ளவங்கதான் மணவாழ்க்கை தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம். நீங்க இவர மாதிரிப் பட்டவங்கக் கிட்ட இருந்து தள்ளி இருந்தாலே உங்க மணவாழ்க்கைல வசந்தம் ஏற்படும்.
//கார்த்தி, ஒன்னு மட்டும் உறுதிங்க, வடகரை வேலன் மாதிரியான ஆளா நீங்க இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்க கல்யாண வாழ்க்கை தோல்விதான். முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ண, அது இதுனு சொல்றாருன்னா, அவரு வீட்ல எப்டி இருப்பாரு? இப்டி கொழுப்பெடுத்தாடுரவங்களுக்கு வாழ்க்கைத் துணை கிட்ட என்ன மரியாதை கிடைக்கும்? இந்த மாதிரி மட்டமான எண்ணமுள்ளவங்கதான் மணவாழ்க்கை தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம். நீங்க இவர மாதிரிப் பட்டவங்கக் கிட்ட இருந்து தள்ளி இருந்தாலே உங்க மணவாழ்க்கைல வசந்தம் ஏற்படும்.//
இது மாதிரி - என்பது இந்த மாதிரி என்று எழுதுவதற்குப் பதிலாக வந்துவிட்ட ஒன்று.
அது, இது என்று பெண்களைக் கூப்பிடும் அளவுக்குத் தரம் குறைந்தவன்னல்ல.
என் பேக்டரியில் வேலை செய்யும் 10 பெண் தொழிலாளிகளையும் வாப்பா போப்பா என்றுதான் பேசுவேன்.
நகைச்சுவையாக் எழுதப்போய் உங்கள்ப் புண்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.
தவறுக்கு மண்ணிக்கவும்
இதத்தான் கூர ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்னு சொல்லுவாங்க. பொண்டாட்டியே தண்ணி தெளிச்சி விட்டப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிரதில என்ன பெரும வேண்டிக் கிடக்கு?
வடகரை வேலன், நகைச்சுவைனா என்ன வேணாலும் எழுதலாம்னு இல்லைங்க. இருந்தாலும் நீங்க வருத்தம் தெரிவிச்சப்புரம் நான் முரண்டு பிடிக்க விரும்பல. ஜாலியா இருங்க. எனக்கு இந்த மாதிரி பெண்களை யாராவது குறைச்சு மதிப்பிட்டா மாதிரி தெரிஞ்சிதுன்னா நெம்ப கடுப்பாகிடும். அதுதானேத் தவிர வேறதுவும் இல்லை.
நகைச்சுவையாக எழுதிய ஒன்றை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கத் தேவை என்ன?
குறைவா மதிப்பிடறது நோக்கமில்லீங்க. நான் சொன்ன முறையில்தான் தவறு இருக்கிறது.
ஜாலியா சொன்னத ரெம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்க.
//எனக்கு இந்த மாதிரி பெண்களை யாராவது குறைச்சு மதிப்பிட்டா மாதிரி தெரிஞ்சிதுன்னா நெம்ப கடுப்பாகிடும். அதுதானேத் தவிர வேறதுவும் இல்லை//
அது உங்க பல பின்னூட்டங்கல்லையே தெரியுது ;-)
அப்புறம் rapp வடகரை வேலன் அந்த மாதிரி எண்ணத்தோடு கூறி இருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்க்கு உங்கள் கோபம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.
வார்த்தை தவறுவது அல்லது விளையாட்டாக கூறி வேறு மாதிரி முடிவது என்பது அனைவருக்கும் இயல்பு தான். அனைவரும் அனைத்து நேரங்களிலும் 100% சரியாக இருக்க முடியாதே! என் மனதில் பட்டதை கூறினேன்.
இந்த விவாதத்தை தொடராமல் இதோடு நிறுத்துவது நல்லது என்பது என் கருத்து.
நன்றி கிரி.
//வர்ர தங்கமணி இது மதிரி இல்லாம நல்ல தங்கமணியா இருந்திச்சுன்னா, ஆபீஸ் வேலையெல்லாம் கரெக்டா டையத்துக்கு டாண் டாண்னு முடிச்சு உங்க ஆபிசர்ட்ட நல்ல பேரு வாங்கலாம்.(சீக்கிரம் வீட்டுக்கு போகனுமில்ல) இல்ல இது போல அமஞ்சா, ஆபிஸ்ல அடுத்த வாரம், அடுத்த மாசம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் இன்னைக்ககே முடிச்சு நல்ல பேரு வாங்கலாம்//நீங்க எழுதினத படிச்சுப் பாருங்க. ஏகப்பட்ட இடத்துல அஃறினைலதான் எழுதி இருக்கீங்க. நீங்க எழுதறத வெச்சுத்தானே நான் பதில் போட முடியும். உங்க மனசுல இருக்கறதயோ இல்ல நீங்க வெளி இடங்கள்ல எப்படி நடந்துப்பீங்கன்னோ எனக்கெப்படிங்கத் தெரியும். இத்தனை பின்னூட்டத்துல எங்கேயாவது நான் கடுப்பா பதில் போட்ருக்கேனா? பின்ன உங்க மேல எனக்கென்ன தனிப்பட்ட கோவமா? உங்களோட மனசை கஷ்டப் படுத்தனும்னு சொல்லலீங்க, என் மனசுக்கு கஷ்டமா இருந்ததால சொன்னேன்.மத்தபடி அந்த ஜோக்கை நான் பலபேர் சொல்லி ஏற்கனவே கேட்டுருக்கேன்.அதை நான் சீரியசா எடுத்துக்கலை. தப்பா எடுத்துக்காதீங்க.
கிரி எனக்கொண்ணும் அவர் மேல கடுப்பெல்லாம் இல்லைங்க. அந்த பின்னூட்டத்துல அவரு ஒரு இடத்திலக் கூட உயர்திணைல பெண்களை சொல்லாததுதான் என் மனசை கஷ்டப் படுத்திடுச்சி. நான் அவரை தனிப்பட்ட முறைல எரிச்சல்படுத்தனும்னு பதில் போடலங்க. எல்லாரும் என்ன தப்பா நெனச்சிடாதீங்க
வடகரை வேலன் சீரியசா எடுத்துக்காதீங்க. நான் ஏதோ கடுப்புல அப்படி சொல்லிட்டேங்க. உங்க மனச நான் கஷ்டப்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். மன்னிச்சுக்கங்க
எனக்கு உங்கள் இருவரிடமும் இருந்து வந்த பின்னூட்டங்களில் இருந்தும், உங்கள் இருவரின் பதிவுகளை படித்த பிறகும், உங்கள் இருவரை பற்றிய இருந்த நல்ல கண்ணோட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு அறிவுக்கு எட்டிய வரை, நீங்கள் இருவருமே சூப்பர் டைப் ங்க. இருவருமே தவறான கண்ணோட்டத்தில் கூறி இருக்க மாட்டீர்கள் என்று தெரியும். அதனாலேயே இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என்று கூறினேன்.
சரி சரி.... நான் பேசுறது தான் காமெடியா இருக்கும்..பார்க்கும் போது டெர்ரர் ஆகி விடுவேன் :-))))))))))))))))))))
பதிவுலக அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ...
அதனால ஸ்டார்ட் மியூசிக் :-))))
டேய் கிரி காமெடி டைம் நீயே சீரியஸ் டைம் ஆகிட்டையே ..அவ்வ்வ்வ்வ்வ்வ்
rapp திரும்ப பேட்ட ராப் ஆகுங்க..:-)))
இத இதுக்கு மேல நா வளர்த்த விரும்பல.
//நல்ல தங்கமணியா இருந்திச்சுன்னா//
அம்மிணி வந்திச்சு, தூங்குது, படிக்குது என்பதெல்லாம் கோவை வட்டார வழக்கு.
அஃறினைல குறிப்பிடறதா அர்த்தமில்ல. செல்லமாச் சொல்றது.
பாப்பா என்ன படிக்குது. காலேசு போகுது. யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை.
நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளும்படி எழுதியது என் தவறுதான்.
அதற்கு என் குடும்ப வாழ்க்கையைக் குறித்து நீங்கள் எழுதியிருக்க வேண்டியதில்லை.
//சரி சரி.... நான் பேசுறது தான் காமெடியா இருக்கும்..பார்க்கும் போது டெர்ரர் ஆகி விடுவேன் :-))))))))))))))))))))//
பிஞ்சு முகத்தையும் பஞ்சு நெஞ்சையும் வைச்சுக்கிட்டு டெர்ரராமில்ல டெரர்.
(ஆக்சுவலா அது பிஞ்சு மூஞ்சி பஞ்சு நெஞ்சு (காத்தவராயன்). வம்பு வேணம்னு முகம் ஆக்கீட்டன்)
நான் என்னங்க உங்க குடும்ப வாழ்க்கையப் பத்தி எழுதினேன், எப்டி நீங்க என்னை மாதிரி தங்கமணி கிடைச்சுதுன்னா/கிடைக்கலன்னானு எழுதினீங்களோ, அதே மாதிரி நானும் உங்களைச் சொன்னேன். பார்த்தீங்களா உங்களையும் சில விஷயங்கள் கடுப்பேத்துல்லைங்க? அந்த மாதிரி தான் எனக்கும் ஆச்சு. பாத்தீங்களா வட்டார வழக்குகள் படுத்தும் பாட! சரிங்க எல்லாம் என் தப்புதான். மன்னிப்பு கேட்டுக்கிறேன். தயவு செய்து மன்னிச்சுக்கங்க. எனக்கு நீங்க வட்டார வழக்கில் எழுதறீங்கன்னு கூடப் புரியல. வேறப்படி மன்னிப்பு கேக்குறதுன்னு தெரியலங்க
வேலன், அதான் மன்னிப்பு கேக்குறேன்ல ஏங்க இப்படி ஓட்றீங்க
ஏங்க ஓடறதா இருந்தா இவ்வளவு நேரம் இங்க இருப்பனா.
இந்த பதிவுல நாம எப்படி ஆளுன்னு ஒரு ஜோசியம் சொல்றாங்க பாருங்க.
http://timeforsomelove.blogspot.com/2008/06/blog-post_20.html
கிரி அண்ணே உங்களோட திடீர் நாட்டாமை அவதாரம் சூப்பர்! நெம்ப நெம்ப நன்றிண்ணே! அதேன்னண்ணே டெர்ரர் ஆகறது, நரசிம்மா படத்துல விஜயகாந்த் பல ரியாக்ஷன்களப் போட்டுத் தாக்குவாரே அத மாதிரியா, இல்ல அதப் பாத்திட்டு மக்கள் ஆனாங்களே அது மாதிரியா?
//பிஞ்சு முகத்தையும் பஞ்சு நெஞ்சையும் வைச்சுக்கிட்டு டெர்ரராமில்ல டெரர்.//
அட! நீங்க வேறங்க ..இப்படி தான் பல பேர் நம்பி ஏமாந்துட்டு இருக்காங்க..
நான் நல்லவன் இல்லை நல்லவன் இல்லை நல்லவன் இல்லை.
இப்ப பாருங்க உங்க இரண்டு பேரையும் நல்லவங்கன்னு கூறி எல்லோரையும் ஏமாத்திட்டு இருக்கேன் ஹி ஹி ஹி ஹி ஹி
இப்ப சொல்லுங்க நான் நல்லவனா கெட்டவனா ...தெரியலையேப்பான்னு சொன்னீங்க இந்த வரியை ஒருமுறை நினைவு படுத்திக்கோங்க "பார்க்கும் போது டெர்ரர் ஆகி விடுவேன் " ஹி ஹி ஹி ஹி
கிரி / ராப்,
இந்த சுட்டியப்பாத்துட்டு உங்க கருத்தச் சொல்லுங்க.
http://bleachingpowder.blogspot.com/2008/06/one-extra-bedroom.html
இங்க இப்ப மணி 2.00. காலேல லேட்டா எந்திரிச்சா தங்கமணி சாத்திரு(ம்)வாங்க.
//rapp said...
கிரி அண்ணே உங்களோட திடீர் நாட்டாமை அவதாரம் சூப்பர்! நெம்ப நெம்ப நன்றிண்ணே! அதேன்னண்ணே டெர்ரர் ஆகறது, நரசிம்மா படத்துல விஜயகாந்த் பல ரியாக்ஷன்களப் போட்டுத் தாக்குவாரே அத மாதிரியா, இல்ல அதப் பாத்திட்டு மக்கள் ஆனாங்களே அது மாதிரியா?//
இப்ப தாங்க பதிவுலக தாரக மந்திரமான மொக்கைக்கு வந்து இருக்கீங்க...:-))))) ஐ மீன் உங்க பதிவு தலைப்புக்கு வந்து இருக்கீங்க ஹா ஹா ஹா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க இரண்டாவதே சொன்னீங்களே அதே தான் :-)))
//You consider yourself important, but no more important than anyone else. You love attention, but you don't feel like you deserve more of it than anyone else.
You are very community oriented. You like to buy local, know your neighbors, and live in a neighborhood that matches your personality.
You are creative, expressive, and bright. You are always in the middle of some amazing project.
You take good care of your physical appearance. You dress well, stay in shape, and do your best to look great.
You are moved by romance and love. You are optimistic about people, and you love hearing about happy endings.//
வேலன் இதோ பாருங்க நீங்க கொடுத்த லிங்கோட முடிவுகள் என்னைப்பற்றி.இதப் போட்டும் பிரயோஜனம் இல்ல, யாரும் நம்பவும் மாட்டாங்க. நக்கலடிக்க வேணா உதவலாம்.
//கிரி / ராப்,
இந்த சுட்டியப்பாத்துட்டு உங்க கருத்தச் சொல்லுங்க.
http://bleachingpowder.blogspot.com/2008/06/one-extra-bedroom.html //
அவ்வ்வ்வ் இங்கிலிபீச்சுல இருக்கு ...
ஆமா! இரண்டு பேரும் நிறுத்த மாட்டீங்களா ...யப்பா கண்ணை கட்டுது ..என்னால முடியல ..யாராவது சோடா குடுங்க
சரி சரி இந்த ஜோக்கப் படிச்சிட்டுச் சிரிங்க.
http://jackiesekar.blogspot.com/2008/06/blog-post_20.html
நாந் தூங்கறேன்.
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கடைசியா காமெடி டைம் ஆக்கிட்டு போய்ட்டீங்க :-))))
//இந்த சுட்டியப்பாத்துட்டு உங்க கருத்தச் சொல்லுங்க. http://bleachingpowder.blogspot.com/2008/06/one-extra-bedroom.html
// நெம்ப நல்ல பதிவுங்க. ஆனா என்னால இந்த விஷயத்தில சொல்ல முடியிற கருத்து ஒன்னே ஒண்ணுதான். அது என்னன்னா, இவரு இந்த கடிதத்தில் எழுதியிருக்கறதில பாதிக்கும் மேல வெறும் சாக்குகள். இவர் இந்தியாவுக்குள் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார், சில இன்றியமையாத சூழ்நிலைகளை தவிர்த்து. சும்மா தில்லி, கல்கத்தாவில் இருந்துகிட்டும் நிறையப் பேர் இப்படி செய்கிறார்கள். இது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் வித்தியாசப்படும்னு நான் நினைக்கிறேன். இதை எங்கள் குடும்பத்தின் சொந்த அனுபவத்தில் எழுதுகிறேன். மற்றபடி தாய் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் அல்லது பெற்றோரை வரவழைக்க வேண்டும்ங்கர எண்ணத்தில்,தனி அக்கவுண்டே ஆரம்பித்து சேமித்து வருபவர்கள் தான் பெரும்பான்மை என்பது என் சொந்த கருத்து.
செம நக்கலான ஜோக்குங்க
கிரி அண்ணே இன்னும் எத்தனப் பேரு கெளம்பப் போறாங்க இப்படி. வெளிநாட்டுக்கு போனாலே நாம பிரியமானவளே விஜய் ஆகிடுவோமா? பல்லேலேக்கா சிவாஜிப் பட ரஜினியாக ஆக மாட்டோமா? இப்படி சென்டிமென்டலா பதிவெழுதியே நம்மள வில்லனாக்கிடுறாங்க.
ஓகே கிரி, வேலன் உங்கள மேலும் போரடிக்க விரும்பல. பை பை
//இப்படி சென்டிமென்டலா பதிவெழுதியே நம்மள வில்லனாக்கிடுறாங்க//
அதுக்கு தான் டென்ஷன் ஆக கூடாது அப்படியும் ஆகற மாதிரி இருந்தா எஸ் ஆகிடனும்.. இது நம்ம கொள்கை :-)
சண்டை போட்டு, பொறாமை பட்டு, அரசியல் செய்து, கேவலமாக பேசி இப்படி எல்லாம் செய்து என்னத்தை சாதிக்க போறோம்..
என்னோட சமீப பதிவுகளை பார்த்தாலே தெரியும்.. சீரியஸ் விசயமாக தான் இருக்கும் ஆனா வேற மாதிரி சொல்வேன்..
அதுனால எனக்கு நம்ம கவுண்டர் கொள்கை தான் "லெஸ் டென்ஷன் மோர் வொர்க்" ஹி ஹி
ஆஹா 97 பின்னூட்டம் ஆச்சா :-)))
மீதியையும் முடித்து விடுவோம் (99)
மேட்டர் ஓவர் 100
அப்பீட்டு :-))))
என்ன கொடும இது நண்பர்களே!
கொஞ்சம் கண்ண அசந்ததுக்குள்ள ஒரு களேபரமே நடந்து முடிஞ்சிடுச்சி,
விவாதத்துக்கும், கும்மிக்கும் நன்றி நண்பர்காள்!
ஆஹா, நெம்ப நன்றி கிரி அண்ணே. கலக்கிட்டீங்க.
ஆ ஆ ஆ ஆ (ஒரு வலியும் இல்லைங்க, நாட்டாம பாட்டோட ஹம்மிங்)
நாட்டாமக் கையா வச்சா அங்க நூறு பின்னூட்டம் விளையுமுங்க.
சிங்கப்பூர் வாழ் நாட்டாமை கிரி அண்ணனுக்கு நெம்ப நன்றி.
மோகன் எப்படி இருந்துச்சி எங்களோட பீம்சிங் சினிமா? நல்ல மசாலாவோட சென்டிமேன்டக் கலந்து ஒரு சூப்பர் பிலிம ஓட்டிட்டோம்ள!
Post a Comment