பிரபல பதிவர் ஒருவரின் வெகு சமீபத்திய பதிவில் இடம் பெற்ற ஒரு வாக்கியம் சற்று யோசிக்க வைத்தது. வாக்கியம் இதுதான். ...தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன.....
அப்பதிவில் Puthiya Pathivar என்ற பெயரில் நான் இட்ட பின்னூட்டம் ஏனோ ஏற்கப்படவில்லை என்பதாலும் (தொழில் நுட்ப பிரச்சினையாக இருக்கக்கூடும்), பதிவெழுத வேறு விஷயம் கிடைக்காததாலும் எனது பின்னூட்டத்தையே பதிவாக இடுகிறேன்.
"தொடர்ந்து பதிவேழுதியோ, பதிவர் சந்திப்பு நடத்தியோ பிரபலமாகி விட்டால் பிறகு எங்களை போன்றவர்கள் சூடான தலைப்பைத் தேடி அலையத் தேவையில்லைதான். அதன் பிறகு நட்புக்காக போடற பின்னூட்டங்கள் குவிந்து விடும், படிப்பவர் எண்ணிக்கையும் கூடும், பதிவு சூடான இடுகையிலும் இடம்பெறும். அதுவரை எங்களைப் போன்றவர்கள் தலைப்பில் யாரையாவது வம்புக்கு இழுத்துத்தான் இடுகையை சூடாக்க வேண்டியிருக்கு. நல்ல கன்ட்டேன்ட்டுன்னு நினைச்சு எதையாவது எழுதி, டீசண்ட்டா தலைப்பு வச்சா யாரு பாக்றாங்க, மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல. எங்களுக்குன்னு ஒரு கோஷ்டி சேத்து கும்மி கிம்மி எல்லாம் அடிச்சி கொஞ்சம் பிரபலமானா அப்பத்தான் அவங்க கும்மியில சேத்துக்குவாய்ங்கன்னு நினைக்கிறேன். இப்பக்கூட பாருங்க, என் பதிவு முகவரிய கொடுக்காமத்தான் பின்னூட்டம் போடறேன், கொடுத்தாமட்டும் வந்து பின்னூட்டம் போடப்போறாய்ங்களா என்ன, இல்ல இந்த பின்னூட்டத்துக்குத்தான் பதில் வரப்போகுதா!, இதுக்குப்பேருதான் "தமிழ்மண தீண்டாமை" யோ!
பதிவு பேசிய விஷயத்தை பற்றி தானே நானும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்?"
மற்றொரு விஷயம். எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்!
சரி, blog -அ பிரபலம் செய்து என்ன பண்ணப் போற, பின்னூட்டம் வந்தாதான் பதிவு எழுதுவியா நீ, இல்லன்னா எழுதமாட்டியா? என்று உள்ளே இருந்த நல்லவன் கேட்டதும், அமைதியாகத்தான் இருந்தேன். "இன்னா மச்சி ஊன் blog ஈயடிக்குது போல" என்று எவனாவுது கேட்டு வெறுப்பேத்தி உட்டுரானுங்க!
Bottom Line: அரை குறை உடையில் நான் எவரையேனும் தெருவில் கண்டால், முகம் சுழிப்பதில்லை, மாறாக முகத்தை திருப்பிக்கொள்வேன். ஏனென்றால், ........அது அப்படித்தான். முகத்தை மட்டும் திருப்பிக்கொள்வேன்.
Sunday, June 8, 2008
முகம் சுழிக்க வைக்கின்றனவா சூடான இடுகைகளின் தலைப்புகள்?
at
1:58 AM
·
Labels: அடாவடி, பீத்த பதிவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
கொடுமை! கொடுமை!
தொடர்வோர்
திரட்டு
- பேட்டி (21)
- அரசியல் (18)
- அடாவடி (16)
- நக்கல் (16)
- சில்ப்பா குமார் (15)
- ஈழம் (14)
- ச்சும்மா ட்டமாஷ்-25 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-50 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-75 (9)
- காண்டு (8)
- திமுக (8)
- காமெடி (7)
- போலிடோண்டு (7)
- சீரியஸ் (6)
- டோண்டு (6)
- தமிழ் சசி (6)
- திருமா (6)
- பெண்கள் (6)
- வீடியோ (6)
- ஆப்லெட் (5)
- கோவிகண்ணன் (4)
- சமூகம் (4)
- ஜ்யோவ்ராம் சுந்தர் (4)
- பெரியார் (4)
- வலைப்பூக்கள் (4)
- வி. சிறுத்தைகள் (4)
- அப்துல்லா (3)
- குறுக்கெழுத்து (3)
- செந்தழல் ரவி (3)
- தளபோட்ச்த்ரி (3)
- திராவிடம் (3)
- பார்ப்பனீயம் (3)
- பீத்த பதிவர்கள் (3)
- மதிபாலா (3)
- மொழிபெயர்ப்பு (3)
- லக்கி லுக் (3)
- அம்மா (2)
- அருந்ததி ராய் (2)
- இடி அமீன் (2)
- உடான்ஸ் (2)
- என் துறை (2)
- கமல் (2)
- கம்யூனிசம் (2)
- கவிதை? (2)
- கில்மா (2)
- சினிமா (2)
- சிறுகதை (2)
- ஜோதிடம் (2)
- பதிவர் சந்திப்பு (2)
- பயங்கரவாதம் (2)
- பெங்கை (2)
- மீள்பதிவு (2)
- மொக்கை (2)
- ரஜினி (2)
- ரவிகுமார் (2)
- வெட்டி ஆபிசர் (2)
- அதிஷா (1)
- இட ஒதுக்கீடு (1)
- கற்பு (1)
- கவிதை (1)
- குண்டு வெடிப்பு (1)
- குத்து (1)
- சாத்திரி (1)
- சிங்காரவேலர் (1)
- ஜனநாயகம் (1)
- ஜீவானந்தம் (1)
- தனிமாநிலம் (1)
- தமிழச்சி (1)
- தம்பி (1)
- நட்சத்திர வாரம் (1)
- பட்டமளிப்பு (1)
- மதம் (1)
- முரளிகண்ணன் (1)
- விஜயகாந்த் (1)
- ஹிந்தி (1)
கிடங்கு
-
▼
2008
(79)
-
▼
June
(18)
- என் தாக்க அறுக்க வந்த ஆன் சைட் பார்ட்டி
- நான் சார்ந்துள்ள துறை பற்றி...
- செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூ.
- காதலைச் சொல்லும் நாளதுவில்...
- லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி. (பாகம் - 2)
- லக்கி லுக் - ஒரு அதிரடி பேட்டி.
- வெட்டி ஆபிசர்: கணவன் வீட்டில் இல்லாவிட்டால் பெண்கள...
- தம்பி: சாட்டில் மாட்டிய பிகரும், தாத்தா மடித்த பெண...
- தசாவதாரம்: ஒரு பொது மன்னிப்பு
- கோவி.கண்ணன்: பார்ப்பனர்கள் மதம் மாறி பார்த்திருக்க...
- இந்த வீடியோவிலாவது ஆப்லெட் தெரியுதா?
- எனது வலைப்பூவில் எழுதும் கோவியார், உண்மைத்தமிழனார்...
- ச்சும்மா ட்டமாஷ்... -வெள்ளிவிழா சிறப்பிதழில் எழுதி...
- முகம் சுழிக்க வைக்கின்றனவா சூடான இடுகைகளின் தலைப்ப...
- முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி? Vol - 2
- கற்பு - வாரத்துக்கு ரெண்டு கிலோ.
- முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி?
- தசாவதாரம் - திரை விமர்சனம்.
-
▼
June
(18)
124 comments:
:)))
கூல் மச்சி
கலக்குற சந்துரு.....பிரமாதம் !
:)
இந்த இடுகையை சூடான இடுகை மட்டுமல்லாமல் கொதிக்கும் இடுகைக்கும் மேலாக வெற்றிபெறச்செய்ய ஆவன செய்வோம்.
////கூல் மச்சி ////
////சூடான இடுகை மட்டுமல்லாமல் கொதிக்கும் இடுகைக்கும் மேலாக /////
கூலா? ஹாட்டா??
நன்றி தம்பி, உங்களின் மூன்றாவது பின்னூட்டம் இது.
நன்றி கோவி.கண்ணன்,
எனது இரண்டாவது இடுகைக்குப் பிறகு இருபதாவது இடுகையில் தான் அடுத்த பின்னூட்டத்தொடர்பு போல!
மீண்டுமொருமுறை நன்றி!
அதாவது மோகன்
இடுகை சூடாவனும், பின்னூட்டம் வரணும்னு சொல்றதெல்லாம் சுத்த வேஸ்ட் அப்டிடு அட்வைஸ் அள்ளீ வுட எனக்கும் ஆசைதான். ஆனா உள்ளுக்குள்ள எவனும் இந்த பக்கம் வரவேல்லியா பின்னூட்டத்தையே காணுமேன்னு நீங்க மட்டுமில்ல எல்லாருமே நினைக்கறதுதான்.
சொன்னா நம்ப மாட்டிங்க.
நான் எழுத ஆரம்பிக்கும்போது தும்முனா கூட 50 100 பின்னூட்டம் வரும். இப்பலாம் எப்படி பீட்டர் உட்டாலும் பத்துக்கும் மேல தேறமாட்டேங்குது. இதுக்கு என்ன சொல்றிங்க. நானும் ரெண்டு வருசமா குப்ப கொட்ன விதத்தூல என்னைய நானே பிரபல பதிவர்னு சொல்லிகிட்டேன்னு வருத்தப்படக்கூடாது. அப்டியே உட்றனும்.
ஒரு இடுகை சூடாவுதுன்னா.
எழுதினது யாரு, எப்டி எழுதிருக்காங்க, குஜாலா இருக்கா, போட்டோ இருக்கா, ட்ரிபிள் மீனிங் இருக்கா, புதுசா வந்தவன் எழுதினானா, இல்ல கொட்ட போட்டவன் எழுதினதான்னு ஏகப்பட்ட விசயம் இருக்கு.
பிரபலமான பதிவர் கூட "இந்த பொண்ணுக்கு இவ்ளோ பெருசு"ன்னு தலைப்பு வெச்சு போட்ருக்கார்.
தலைப்பு வெக்கிறதுல இந்த மாதிரி புரட்சி பண்ணதுல எங்க அண்ணாச்சிக்கு பெரிய பங்கு இருக்கறதை இந்த இடத்தில சொல்லியே ஆகணும். அவர் நயன் தாராவின் நீலப்படம்னு போட்டத உலகே சேந்து கொதிக்கும் பதிவா மாத்தினோம்.
எல்லா அரசியலும் எல்லா நேரத்திலயும் தேவைப்படும்னு சொல்ல முடியாது.
இதுக்குமேல என்னால முடியாது. ஜோடா ப்ளீஸ்
ஐயா ராசா இந்த மாதிரி தலைப்புவெச்சு 4 பதிவு எழுது படிக்கற மாதிரி அதுக்கப்புறம் பாரு வேணாம் வேணாம்னாலும் வந்து நொங்கெடுத்துருவாய்ங்க!!
//இந்த இடுகையை சூடான இடுகை மட்டுமல்லாமல் கொதிக்கும் இடுகைக்கும் மேலாக வெற்றிபெறச்செய்ய ஆவன செய்வோம்.//
:))
repeatttyyyyy..... :)
/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/
இப்பிடி எல்லாம் இருந்தா எவன் கமெண்ட் போடுவான்!?!?!?!?
உங்க சிங் மனைவியை குடிகாரி ஆக்கிய இடிஅமீன் பதிவை ரொம்ப ரசிச்சு படிச்சேன். செம காமெடி அது. இதெல்லாம் சொல்றனேன்னு பதிவு போட்டு குமுறுனாதான் ஆறுதல் சொல்றதுக்கு இப்டி சொல்றானுவன்னு நினைக்கப்படாது. அததுக்கு நேரம் வரணும்லா.
பி.கு. உங்க பதிவை பெரும்பாலும் ரீடர்ல வாசிக்கறதுனால அப்டியே குளோஸ் பண்ணிடறேன். அங்கன இருந்தே பின்னூட்டம் போடற வசதி இருந்தா நல்லா இருக்கும்.
/
நல்ல கன்ட்டேன்ட்டுன்னு நினைச்சு எதையாவது எழுதி, டீசண்ட்டா தலைப்பு வச்சா யாரு பாக்றாங்க
/
நல்ல content - ஆ என்னங்கன்னே காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டீங்க!?
/
மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!,
/
:)))))
கூல் மச்சி
/////பின்னூட்டம் வரணும்னு சொல்றதெல்லாம் சுத்த வேஸ்ட் அப்டிடு அட்வைஸ் அள்ளீ வுட எனக்கும் ஆசைதான். ஆனா உள்ளுக்குள்ள எவனும் இந்த பக்கம் வரவேல்லியா பின்னூட்டத்தையே காணுமேன்னு நீங்க மட்டுமில்ல எல்லாருமே நினைக்கறதுதான்.///////
நிஜமாவா சொல்றீங்க!, அப்போ நாலு பின்னூட்டம் வருதுன்னா எந்த மொக்கை தலைப்ப வேணாலும் வெக்கலாமா? செஞ்சிர்றேன், செஞ்சிறேன், அப்படியே செஞ்சிர்றேன்,
/
தம்பி said...
இந்த இடுகையை சூடான இடுகை மட்டுமல்லாமல் கொதிக்கும் இடுகைக்கும் மேலாக வெற்றிபெறச்செய்ய ஆவன செய்வோம்.
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
இவ்ளோ நாயம் பேசறிங்களே. ஒரு மூத்த பதிவர்னு என்னைய மதிச்சு இதுவரைக்கும்ம் ஒரு பின்னூட்டமாச்சும் போட்ருப்பிங்களா?
இந்த கேள்விக்கு இப்ப பதில சொல்லவேண்டிய கட்டாயத்துல, நெருக்கடில, கொசுக்கடில இப்ப நீங்க இருக்கிங்கன்னு உங்களுக்கு புரியவைக்க விரும்புகிறேன்.
ஐய்யோ ஐய்யோ சொக்கா! சொக்கா! ஒரே கமேன்ட்டா வருதே! கையும் ஓடல காலும் ஓடல!
attendance!
கூல் down cool down
லைப் ல இதெல்லாம் சகஜமப்பா !!!!!
நமக்கும் டெய்லி நூறு பின்னூட்டம் வரும் காலம் வரும் !!!!!!!!!!!
////இப்பிடி எல்லாம் இருந்தா எவன் கமெண்ட் போடுவான்!?!?!?////
Moderation disable பண்ணிட்டேனே!,
நன்றி மங்களூர் சிவா!
நெஞ்சுக்குள்ள வெரல உட்டு கடஞ்சு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்க்கு செண்டிமெண்டா ஒரு பதிவு போடுங்க.
கலஞ்சு போன காதல், கைகூடாத காதல், பரிச்சைல பெயிலானது, ஆயா டிக்கெட் வாங்கினது இப்படிலாம் எழுதுங்க பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.
இப்ப ஜெயமோகன் ப்லாக்ல போய் பாருங்க தேர்வு குறீத்து டச்சிங்க எழுதுனதால அவ்ருக்கு ஆயிரக்கணக்குல கடிதம் வருதாம் அதையே மேலும், மேலும் மேலும், மேலும், மேலும் மேலும் னு பதிவு போடலாம். அதையும் நக்கலடிச்சு சாரு மாதிரி எதிர்வினையும் செய்யலாம்.
////அததுக்கு நேரம் வரணும்லா.////
நேரம் வந்திடிச்சின்னு நெனைக்கிறேன்!
யார் அந்த சீனியர் பதிவர்? நானில்லையே? ஏன்னா நானும் ஒரு சீனியர் பதிவராக்கும் :P
என்கிட்ட கொடுங்க 25 வது இடுகைய :P
குட்டிபாப்பாகிட்டல்லாம் வாங்கிகட்டவேண்டி இருக்கேன்னு வெறுத்து போயிடாதீங்க
/////வேணாம் வேணாம்னாலும் வந்து நொங்கெடுத்துருவாய்ங்க!!////
எடுங்கைய்யா எடுங்கைய்யா! இதுக்குத்தான் 20 பதிவா வெயிட் பண்ணேன்.
////:))
repeatttyyyyy..... :)/////
நன்றி ராம்!
//தொடர்ந்து பதிவேழுதியோ, பதிவர் சந்திப்பு நடத்தியோ பிரபலமாகி விட்டால் பிறகு எங்களை போன்றவர்கள் சூடான தலைப்பைத் தேடி அலையத் தேவையில்லைதான்//
உண்மைய இப்படி போட்டு உடைக்கறீங்களே :-))
//அதன் பிறகு நட்புக்காக போடற பின்னூட்டங்கள் குவிந்து விடும், படிப்பவர் எண்ணிக்கையும் கூடும், பதிவு சூடான இடுகையிலும் இடம்பெறும்//
எப்படிங்க இந்த மாதிரி கலக்கறீங்க ..முடியல :-)
//நல்ல கன்ட்டேன்ட்டுன்னு நினைச்சு எதையாவது எழுதி, டீசண்ட்டா தலைப்பு வச்சா யாரு பாக்றாங்க//
அதென்னவோ நீங்க சொல்றது உண்மை தான் :-(
//மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க//
கருத்து இல்லீங்க (நோ கமெண்ட்ஸ் :-)) )
//அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல//
சரி விடுங்க மதியாதார் தலைவாசல் மிதிக்காதீங்க. ச்சீ இந்த பழம் புளிக்கும்
:-))
//மற்றொரு விஷயம். எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்! //
போட்டு தாக்கறீங்க போங்க :-)))
//சரி, blog -அ பிரபலம் செய்து என்ன பண்ணப் போற, பின்னூட்டம் வந்தாதான் பதிவு எழுதுவியா நீ, இல்லன்னா எழுதமாட்டியா? என்று உள்ளே இருந்த நல்லவன் கேட்டதும்//
மனச தேத்த விட விடமாட்டாங்களே :-)))
மோகன் எனக்கும் அப்படி தான் முதலில் இருந்தது, நீங்க சொல்லியதில் பாதியாவது நானும் நினைத்து இருப்பேன். தற்போது பரவாயில்லை. மற்றவங்க பின்னூட்டம் போடுவதில்லைனு சொல்லும் நாம், மற்றவங்களுக்கு எப்படி பின்னூட்டம் போட்டு உற்சாக படுத்துகிறோம் என்றும் யோசிக்க வேண்டும். நீங்களும் மற்றவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் அதில் பாதியாவது உங்களுக்கு திரும்பி வரலாம் அல்லது வராமலும் போகலாம் அதற்கு நீங்கள் எப்படி பதிவு எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியம்.
அப்புறம் சும்மா பின்னூட்டமே வராமல் எல்லாம் பதிவு எழுதுவேன் என்று சொல்வதெல்லாம் லுளுளுலாய்க்கு தான். உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் ஒரு செயலை தொடருவது என்பது மிக சிரமம் தான். அதையும் தாண்டி தொடருகிறவர்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரா இருக்க வேண்டும்.
கடைசியாக ... உங்கள் இந்த பதிவு தாறுமாறு பதிவு போங்க.. நீங்க பேசாம அந்த பதிவர் கிட்ட கேட்டதுக்கு இதையே 25 வது பதிவா போட்டு இருந்தீங்கன்னு வைங்க..மவனே 1000 வாலா பட்டாசு தான்.
அன்புடன்
கிரி
////நல்ல content - ஆ என்னங்கன்னே காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டீங்க!?/////
அய்யயோ என்ன இப்படி திடீர்னு காமேடின்னுடீங்க!
அப்ப காமேடிதானா எழுத இருபது பதிவும்.
// மோகன் கந்தசாமி said...
ஐய்யோ ஐய்யோ சொக்கா! சொக்கா! ஒரே கமேன்ட்டா வருதே! கையும் ஓடல காலும் ஓடல!//
ஹா ஹா ஹா ஹா டாப்பு
/////ஒரு மூத்த பதிவர்னு என்னைய மதிச்சு இதுவரைக்கும்ம் ஒரு பின்னூட்டமாச்சும் போட்ருப்பிங்களா?////
அதாகப்பட்டது! பகவத் கீதயில, வர ஒரு வாக்கியம்.."யதா யதா ப்ரக்ம்த்ய" ...என்ன சொல்லுதுன்னா....
அய்யய்யோ உங்க கேள்விக்கு பதில் தெரியலைங்க தம்பி அண்ணே! விட்டுருங்க!
இனி நான் போடற முதல் வெளி பின்னூட்டம் உங்களுடையது தான்.
/
தம்பி said...
இவ்ளோ நாயம் பேசறிங்களே. ஒரு மூத்த பதிவர்னு என்னைய மதிச்சு இதுவரைக்கும்ம் ஒரு பின்னூட்டமாச்சும் போட்ருப்பிங்களா?
இந்த கேள்விக்கு இப்ப பதில சொல்லவேண்டிய கட்டாயத்துல, நெருக்கடில, கொசுக்கடில இப்ப நீங்க இருக்கிங்கன்னு உங்களுக்கு புரியவைக்க விரும்புகிறேன்.
/
இதுக்கும் ஒரு டபுள் ட்ரிபிள் ரிப்பீட்ட்டேய்
:))
////கூல் down cool down
லைப் ல இதெல்லாம் சகஜமப்பா !!!!///
நன்றி பாஸ்கர், MGR photo super.
////நமக்கும் டெய்லி நூறு பின்னூட்டம் வரும் காலம் வரும் !!!!!!!!!!!////
நிஜமாவா? எனக்கா? ம்ம்..
/
மோகன் கந்தசாமி said...
////நல்ல content - ஆ என்னங்கன்னே காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டீங்க!?/////
அய்யயோ என்ன இப்படி திடீர்னு காமேடின்னுடீங்க!
அப்ப காமேடிதானா எழுத இருபது பதிவும்.
/
:)))))))))
இந்த தலைப்புதான் என்னைய முதல்முறையா உங்க வலைப்பூவிற்கு வரவைத்திருக்கிறது பொறுமையா படிக்கிறேன்.
//////யார் அந்த சீனியர் பதிவர்? நானில்லையே? ஏன்னா நானும் ஒரு சீனியர் பதிவராக்கும் :ப
என்கிட்ட கொடுங்க 25 வது இடுகைய :ப/////
சத்தியமா நீங்கதான்,
நன்றி உங்க பதிவை எனக்கு எப்ப அனுப்பரிங்க!
/////செண்டிமெண்டா ஒரு பதிவு போடுங்க.
கலஞ்சு போன காதல், கைகூடாத காதல், பரிச்சைல பெயிலானது, ஆயா டிக்கெட் /////
செண்டிமேன்ட்டுதான, துலாபாரம் ரேஞ்சிக்கு எழுதிர்றேன், இனி.
இல்லன்னாலும் அவுட்சொர்சு பண்ணியாவது பக்கத்த ரொப்பிடறேன்..
cool
//நிஜமாவா? எனக்கா? ம்ம்..//
ஆமாம் . don't lose hope
is the main point - அமிதாப் பச்சன்
-பாஸ்கர்
/////தற்போது பரவாயில்லை. மற்றவங்க பின்னூட்டம் போடுவதில்லைனு சொல்லும் நாம், மற்றவங்களுக்கு எப்படி பின்னூட்டம் போட்டு உற்சாக படுத்துகிறோம் என்றும் யோசிக்க வேண்டும்.//////
உண்மைதான். யோசிக்கறேன்...பெரிய அளவில் நானும் யாருக்கும் பின்னூட்டம் இடவில்லை என்பதும் உண்மைதான்.
////உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் ஒரு செயலை தொடருவது என்பது மிக சிரமம் தான்./////
எனக்கு ரொம்பவே சிரமம்,
////கடைசியாக ... உங்கள் இந்த பதிவு தாறுமாறு பதிவு போங்க.. நீங்க பேசாம அந்த பதிவர் கிட்ட கேட்டதுக்கு இதையே 25 வது பதிவா போட்டு இருந்தீங்கன்னு வைங்க..மவனே 1000 வாலா பட்டாசு தான்./////
நன்றி கிரி,
//cool//
u mean cool down?
நன்றி முரளி கண்ணன்.
/////. don't lose hope
is the main point /////
நன்றி பாஸ்கர்
இந்த 41 பின்னூட்டத்துல 18 பின்னூட்டம் ஒங்க்ளோடது. இப்டியே பண்ணோம்னா சீக்கிரம் பெரியாளாயிடலாம்.
/
தம்பி said...
இந்த 41 பின்னூட்டத்துல 18 பின்னூட்டம் ஒங்க்ளோடது. இப்டியே பண்ணோம்னா சீக்கிரம் பெரியாளாயிடலாம்.
/
ஆமா பெரியாளாயிடலாம்
கிரி உங்க ப்ரொபைல் போட்டோ சொம்மா நச்னு கீதுபா
என்ன இது இன்னும் ஒரு 50 கமெண்ட்டு தேரலை :(
கும்மி குருப்பை கூப்பிடணுமோ!?!?
நிஜமா நல்லவன் எங்கிருந்தாலும் வரவும்
தமிழ் பிரியன் எங்கிருந்தாலும் வரவும்
சென்ஷி் எங்கிருந்தாலும் வரவும்
50
50 ஆயிடிச்சி வர்ட்ட்ட்டாஆ
///இந்த 41 பின்னூட்டத்துல 18 பின்னூட்டம் ஒங்க்ளோடது. இப்டியே பண்ணோம்னா சீக்கிரம் பெரியாளாயிடலாம்.////
அப்ப நான் வளர்கிறேனா மம்மி...ச்சே...தம்பி..
////50 ஆயிடிச்சி வர்ட்ட்ட்டாஆ////
first half century, but out -a? not out -a?
நாம எப்பவும்
நாட் அவுட் தானுங்னா
If you so concerned about visibility of your blog/posts in thamizmanam, you must install thamizmanam toolbar first. This post has received 54 comments. With the toolbar your comments will be aggregated and the posts will appear when comments are updated.
"மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல."
நூத்திலே ஒரு வார்த்தை தலை :-(
அமைதியா யோசிங்க
நீங்க எத்தன பேருக்கு பின்னூட்டம் போட்டிங்கனு,
மூத்த பதிவர்கள் பின்னூட்டம் போடலனா _____ஆ போச்சு
அவங்க படிக்கவா நீங்க எழுதறீங்க
இங்க மொத்தம் 3000 பதிவர்கள் இருக்காங்க சரிங்களா , தினமும் 2 புது பதிவர்கள் வராங்க அவங்களுக்கு யாரு பின்னூட்டம் போடறது , நம்மல மாதிரி ஆளுங்கதானங்க முதல்ல போடனும் . மூத்த பதிவர்கள் போட்டாதான் பின்னூட்டமா? , எனக்கு யாரும் பின்னூட்டம் போடல அதனால நானும் யாருக்கும் போடமாட்டேனு இப்படியே ஆளாளுக்கு சொல்லிட்டிருந்தா அப்புறம் யாருதான் பின்னூட்டம் போடறது ,
எத்தன பின்னூட்டம் வருதுன்றது முக்கியமில்ல நம்ம எழுத்த எத்தன பேரு படிக்கிறாங்கன்றது தான் முக்கியம் .
முதல்ல தமிழ்மண கருவிபட்டைய உங்க பதிவுல போடுங்க நிறைய சுவாரசியமா எழுதுங்க
அதுக்கப்புறமும் பின்னூட்டம் வரலேன்னா பிரச்சன உங்க எழுத்துலதான்.
உங்களுக்கே தெரியுது மூத்த பதிவர்கள் பின்னூட்டம் போடமாட்டங்கனு , அப்ப நம்ம போடுவோம் பின்னூட்டம் ,
நீங்க 4 பேர குஷி படுத்துங்க , உங்கள குஷி படுத்த 40 பேர் வருவாங்க
எதோ நானும் உங்கள மாதிரி புது ஆளுங்கறதால சொல்லணும்னு தோணிச்சு , தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுருங்க ,
அன்புடன் அதிஷா
ஆஹா, சூப்பர் ஐடியாவா இருக்கே, இந்த ஐடியால்லாம் அப்டியே வர்றதுதான் இல்ல!
Mr.பெரிய பதிவர் இன்னைலேர்ந்து என் பதிவுக்கும் அடிக்கடி வாங்க. எப்படிங்க, இந்த மாதிரி யோசிக்க முடியுது?
58 கமென்ட்சா!! கப கபனு யம்மா யம்மா!!
அதிஷா!
என் ஈகோ -வுக்கு தீனிபோடும் பதிவுகளை எழுதி அதில் தமிழ், தமிழன், தமிழ் உணர்வுன்னு லேபிளை ஒட்டி தமிழ்மணம் சந்தையில் விடும் ஒரு சராசரி வலைப்பதிவர் நான், அதிலும் புதியவன். (தெளிவான கருதுகோள்களுடன் தமிழ்ச்சேவை புரிபவர்களை மதிக்கிறேன்). ஆனாலும் சுவாரசியம், புரயோஜனம், தொழில்நுட்பம் என பல ஜல்லிகளை அடித்து, ஆங்கிலத்தில் கடை விரித்து கொள்வாரில்லாமல் தான், தமிழுக்கு வந்திருக்கிறேன். சூடான இடுகைகளில் இடம் பெற ஆளாய் பறப்பவர்களில் என்னைப் போன்றவர்கள்தான் அதிகம். மொக்கை உள்ளடக்கத்திற்கு ஷார்ப்பான தலைப்பை வைத்து பதிவை சூடாக்க வேண்டியது எங்களுக்கு கட்டாயம்.
இவ்வகைப் பதிவுகளை நீங்கள் கண்டு கொண்டதில்லை, அதாவது பின்னூட்டமிடுவதில்லை. அதை புரிந்து கொள்கிறோம். வலியச்சென்று கைகுலுக்கினால், முகத்தைத் திருப்பிகொண்டீர்கள், சரி, உங்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், இப்போது முகத்தையும் சுழிப்பது எதற்கு? விளக்குவீர்களா?
///அமைதியா யோசிங்க
நீங்க எத்தன பேருக்கு பின்னூட்டம் போட்டிங்கனு,////
நிறைய பின்னூட்டங்கள் போடவில்லைதான், ஆனால் பலருக்கு போட்டுருக்கிறேன்.
////மூத்த பதிவர்கள் பின்னூட்டம் போடலனா _____ஆ போச்சு/////
மூத்த பதிவர்கள் பின்னூட்டம் போடலனா வசதி ஆ போச்சு. கோடிட்ட இடத்த சரியா நிரப்பிட்டேனா, இல்ல வேற எதாவது வரணுமா?
////அவங்க படிக்கவா நீங்க எழுதறீங்க
இங்க மொத்தம் 3000 பதிவர்கள் இருக்காங்க சரிங்களா , தினமும் 2 புது பதிவர்கள் வராங்க அவங்களுக்கு யாரு பின்னூட்டம் போடறது , நம்மல மாதிரி ஆளுங்கதானங்க முதல்ல போடனும் . மூத்த பதிவர்கள் போட்டாதான் பின்னூட்டமா? , எனக்கு யாரும் பின்னூட்டம் போடல அதனால நானும் யாருக்கும் போடமாட்டேனு இப்படியே ஆளாளுக்கு சொல்லிட்டிருந்தா அப்புறம் யாருதான் பின்னூட்டம் போடறது////
லெட் மி திங்க் அபௌட் இட்.
////எத்தன பின்னூட்டம் வருதுன்றது முக்கியமில்ல நம்ம எழுத்த எத்தன பேரு படிக்கிறாங்கன்றது தான் முக்கியம்////
அதுக்குத்தான சூடான இடுகைல துண்டு போட்டு எடம் பிடிக்கிறது
////முதல்ல தமிழ்மண கருவிபட்டைய உங்க பதிவுல போடுங்க/////
இதோ இப்போவே.
///உங்களுக்கே தெரியுது மூத்த பதிவர்கள் பின்னூட்டம் போடமாட்டங்கனு , அப்ப நம்ம போடுவோம் பின்னூட்டம்////
அதாவது...........சரி விடுங்க! வேற பேசுவோம்.
////நீங்க 4 பேர குஷி படுத்துங்க , உங்கள குஷி படுத்த 40 பேர் வருவாங்க/////
ஏற்கனவே குஷிப்படுத்திட்டா(டீ)ங்க!
/////எதோ நானும் உங்கள மாதிரி புது ஆளுங்கறதால சொல்லணும்னு தோணிச்சு////
என்னது புது ஆளா? ரெண்டு வருஷமா பதிவேழுதரவங்கல்லாம் புது ஆளா? பொய் சொன்னிங்கன்னா என் 25 வது பதிவ உங்கள எழுதச்சொல்லிடுவேன், பி கேர்புள்!
///தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுருங்க///
தப்பா ஏதும் சொன்னீங்களா என்ன?
நன்றி அதிஷா! மீண்டும் வருக!
////இன்னைலேர்ந்து என் பதிவுக்கும் அடிக்கடி வாங்க////
என்ன இப்படி சொல்லி போட்டிங்க!, நாமெல்லாம் ஒரே இனம், உங்களக்கு தெரியாதாக்கு(ம்)?
Wow, Mohan.......orey nalila ellar attention yaiyum unga pakkam thirupiteenga, gr8 job!!
\\அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல.\\
இது கல்யாண வீட்ல 'மொய்' வைச்சா......திருப்பி மொய் வைக்கிற டெக்னிக்:)))
இதுவும் வேலைக்கு ஆகலியா?
\\அமைதியா யோசிங்க
நீங்க எத்தன பேருக்கு பின்னூட்டம் போட்டிங்கனு\\
யோசிக்க வேண்டிய விஷயம்:))
அதென்னங்க மூத்தப் பதிவர், மூத்தரப் பதிவர்னு கேட்டகிரி எல்லாம்... வலையெழுத வந்துட்டா எல்லாரும் பதிவர் தான், எழுத்தாளர்கள் உட்பட..
நல்லவேளை, உங்களுக்கு ஏற்கனவே கூட நான் பின்னூட்டம் போட்டிருக்கேன்னு நெனைக்கிறேன், நான் எஸ்கேப்பு!!!
தம்பீபீபீபீ..
மேட்டர் நல்லாயிருந்தா கண்டிப்பா எல்லாரும் ஓடி வந்து பார்ப்பாங்க.. படிப்பாங்க.. இதுல பெரியவர், சின்னவர்ன்னு வித்தியாசமெல்லாம் கிடையாது..
சில சமயம் மேட்டர் படிப்பதற்கு நன்றாக இருந்தாலும், கமெண்ட் போட வைப்பதற்கு அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவை.. அது என்ன என்று எனக்கும் இந்த நிமிடம்வரை தெரியவில்லை.
ஆனாலும் என் அனுபவத்தில் சில பதிவுகளைப் படித்தவுடன் கமெண்ட் போட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் மனம் குறுகுறுக்கும். இது எல்லாருக்கும் வாய்த்துவிடாது..
ஆகவே.. யார் மீதும் வருத்தம் வேண்டாம்.. தொடர்ந்து எழுதுங்க.. ஆனால் இரண்டு பத்திகள், மூன்று பத்திகளில் மேட்டரை முடித்தீர்களானால் அது வெறும் செய்தித் துணுக்காகப் போய்விடும்..
எதையாவது புதிதாக வலையுலகில் அதிகம் பேசப்படாத விஷயங்களைத் தேடி எடுத்துப் போடுங்கள்.. நிச்சயம் படிப்பார்கள்.
இந்த பின்னூட்டங்கள் என்பது ஒரு போதை.. ஹெராயின் தரும் போதையைவிட பன்மடங்கு அதிகமாகி உங்களை ஒரு வேலையும் செய்யவிடாமல் துன்புறுத்தும். அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.. புரிந்து கொள்ளுங்கள்..
பின்னூட்டங்களோ, படிப்பவர் எண்ணிக்கையோ தேவையில்லை..
உங்களுடைய கருத்தை உங்களது பதிவில் பதிவிட்டுவிட்டீர்கள். அவ்வளவுதான்.. படிப்பவர்கள் படிக்கட்டும்.. படிக்காதவர்கள் போகட்டும் என்று உதறித் தள்ளிவிட்டுப் போங்கள்..
உங்கள் வீட்டில் உங்களுக்கென்றே பல வேலைகள் நிச்சயம் காத்திருக்கும். அதைப் போய் செய்யுங்கள். நாளை நிச்சயம் அது உங்களுக்குப் பலனளிக்கும்.
இது ஓய்வு நேரத்தில் வேறு வேலை இல்லாத போது செய்ய வேண்டியது..
எனக்குப் பதிலாக இந்தப் பதிவில் தம்பி சிவா பின்னூட்டத்தில் கொளுத்தியிருப்பது தெரிகிறது.. அவருக்கு எனது நன்றி..
வாழ்க வளமுடன்..
////நூத்திலே ஒரு வார்த்தை தலை :-(////
அப்போ "இது என் கருத்து மட்டுமல்ல, பொதுவாக புதிய பதிவர்கள் பெரும்பாலானோரின் கருத்துமாகும்" என்பது புரிகிறது கரிகாலன்.
நன்றி மீண்டும் வருக!
////Wow, Mohan.......orey nalila ellar attention yaiyum unga pakkam thirupiteenga, gr8 job!!////
நன்றி திவ்யா!, முதல் அரை சதம் இப்பதான், உங்களைமாதிரி ரெட்டை சதம்?
/////////இது கல்யாண வீட்ல 'மொய்' வைச்சா......திருப்பி மொய் வைக்கிற டெக்னிக்:)))
இதுவும் வேலைக்கு ஆகலியா?////
பெரிய அமவுன்ட்டு உள்ள வச்சி, கவர்ல பேரெல்லாம் எழுதி மொய் வச்சிட்டுதான் இருந்தேன், ஆனா யாரும் நம்ம வீட்டு விசேஷத்துக்கே வரதில்ல, வந்தாலும் மொய் வக்கிரதில்ல, அதனால விட்டுட்டேன், ஆனா இப்பத்தான் தெரியுது நம்ம வீட்டு பங்க்ஷன்ல சாப்பாடு சரியில்லன்னு!
////\\அமைதியா யோசிங்க
நீங்க எத்தன பேருக்கு பின்னூட்டம் போட்டிங்கனு\\
யோசிக்க வேண்டிய விஷயம்:))////
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா!...
ஆமா, எனக்கு ஒரு டவுட்டு, நீங்க ஒரு மூத்த பதிவரா?, அப்படின்னா கவுருத பாக்காம எனக்கு பின்னூட்டமெல்லாம்(முந்தய பதிவுகளுக்கு) போட்டீங்களே, நீர் வாழ்க!/////
/////அதென்னங்க மூத்தப் பதிவர், மூத்தரப் பதிவர்னு கேட்டகிரி எல்லாம்... வலையெழுத வந்துட்டா எல்லாரும் பதிவர் தான், எழுத்தாளர்கள் உட்பட.////
உண்மை நிலவரம் அப்டி இருக்க மாதிரி தெரியலையே!, ஒருவேள என் பார்வையில் பிரச்சினையா!, இருக்கலாம்.
நன்றி லக்கிலுக், மீண்டும் வருக
திரு உண்மைத்தமிழன்,
////சில சமயம் மேட்டர் படிப்பதற்கு நன்றாக இருந்தாலும், கமெண்ட் போட வைப்பதற்கு அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவை.. அது என்ன என்று எனக்கும் இந்த நிமிடம்வரை தெரியவில்லை.////
அப்படியென்றால், தேவுடு காக்கரத விட்டுட்டு, அடுத்த பதிவ ரெடி பண்ண வேண்டியதுதானா?
/// யார் மீதும் வருத்தம் வேண்டாம்.. தொடர்ந்து எழுதுங்க..////
வருத்தம் இல்லை நண்பரே!
///எதையாவது புதிதாக வலையுலகில் அதிகம் பேசப்படாத விஷயங்களைத் தேடி எடுத்துப் போடுங்கள்.. நிச்சயம் படிப்பார்கள்.
கரைட்டுதான!
///இந்த பின்னூட்டங்கள் என்பது ஒரு போதை.. ஹெராயின் தரும் போதையைவிட பன்மடங்கு அதிகமாகி உங்களை ஒரு வேலையும் செய்யவிடாமல் துன்புறுத்தும். அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.. புரிந்து கொள்ளுங்கள்.////
அயய்யோ! நிஜமாவா சொல்றீங்க!,
/////பின்னூட்டங்களோ, படிப்பவர் எண்ணிக்கையோ தேவையில்லை..
உங்களுடைய கருத்தை உங்களது பதிவில் பதிவிட்டுவிட்டீர்கள். அவ்வளவுதான்.. படிப்பவர்கள் படிக்கட்டும்.. படிக்காதவர்கள் போகட்டும் என்று உதறித் தள்ளிவிட்டுப் போங்கள்..
உங்கள் வீட்டில் உங்களுக்கென்றே பல வேலைகள் நிச்சயம் காத்திருக்கும். அதைப் போய் செய்யுங்கள். நாளை நிச்சயம் அது உங்களுக்குப் பலனளிக்கும்...///////
....சரி பரவாயில்ல, இன்னும் ஒன்னரை மாசத்துக்கு வேற முக்கியமான வேலை இல்ல,
நன்றி மீண்டும் வாருங்கள்.
////எனக்குப் பதிலாக இந்தப் பதிவில் தம்பி சிவா பின்னூட்டத்தில் கொளுத்தியிருப்பது தெரிகிறது.. அவருக்கு எனது நன்றி..////
எனது நன்றியும்.
\\ஆமா, எனக்கு ஒரு டவுட்டு, நீங்க ஒரு மூத்த பதிவரா?, அப்படின்னா கவுருத பாக்காம எனக்கு பின்னூட்டமெல்லாம்(முந்தய பதிவுகளுக்கு) போட்டீங்களே, நீர் வாழ்க!/////
அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க,
சக பதிவரின் பதிவில் நம்ம கருத்தையும் , பாராட்டையும் சொல்றதுல என்ன பெருசா கவுரவம் குறைஞ்சிடப்போகுது!!
100 பின்னூட்டம் வாங்க என் வாழ்த்துக்கள் மோஹன்!!
அட ஓப்பனாயிருக்குதா :))
அப்ப சரி.. 100 அடிச்சுட்டுதான் மறு வேல :))
//தம்பி said...
இந்த இடுகையை சூடான இடுகை மட்டுமல்லாமல் கொதிக்கும் இடுகைக்கும் மேலாக வெற்றிபெறச்செய்ய ஆவன செய்வோம்.
//
ரிப்பீட்டே :))
//பதிவெழுத வேறு விஷயம் கிடைக்காததாலும் எனது பின்னூட்டத்தையே பதிவாக இடுகிறேன்.
//
நல்ல விசயம்தான் :)
//மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க.//
சொற்பிழை இருக்குதே...
கவுரவர்கள் 100 பேர். +1
வேணும்னா பாண்டவ குறைச்சல்ன்னு மாத்திப்படிச்சுக்கலாமா :))
//எங்களுக்குன்னு ஒரு கோஷ்டி சேத்து கும்மி கிம்மி எல்லாம் அடிச்சி கொஞ்சம் பிரபலமானா அப்பத்தான் அவங்க கும்மியில சேத்துக்குவாய்ங்கன்னு நினைக்கிறேன்.//
அந்த மாதிரில்லாம் உடனே சேர்த்துக்கமாட்டோம்ப்பா. அதுக்கு நெறைய்ய டெஸ்ட்டு இருக்குது. அதுல நீ தேறுறியான்னு பார்க்கணும் :)
//இப்பக்கூட பாருங்க, என் பதிவு முகவரிய கொடுக்காமத்தான் பின்னூட்டம் போடறேன், கொடுத்தாமட்டும் வந்து பின்னூட்டம் போடப்போறாய்ங்களா என்ன, இல்ல இந்த பின்னூட்டத்துக்குத்தான் பதில் வரப்போகுதா!, இதுக்குப்பேருதான் "தமிழ்மண தீண்டாமை" யோ!
//
லிங்கே கொடுக்காம இந்த சவுண்டா...
நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்குத்தாம்பா மொதோ மருவாதி. :))
தீண்டாமையப்பத்தி எனக்கு தெரியாது.
//அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, //
அதுக்கு நல்லாயில்லாம பதிவு எழுத தெரியணுமப்பு :))
//எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்!
//
ங்கொய்யால.. அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ.. :)
25க்கு வாழ்த்துக்கள் :)
//எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்!
//
ங்கொய்யால.. அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ.. :)
25க்கு வாழ்த்துக்கள் :)
//"இன்னா மச்சி ஊன் blog ஈயடிக்குது போல" என்று எவனாவுது கேட்டு வெறுப்பேத்தி உட்டுரானுங்க!
//
இப்ப பாருங்க.. நிறைய்ய ஈ பறக்குதா :))
//Bottom Line: அரை குறை உடையில் நான் எவரையேனும் தெருவில் கண்டால், முகம் சுழிப்பதில்லை, மாறாக முகத்தை திருப்பிக்கொள்வேன். ஏனென்றால், ........அது அப்படித்தான். முகத்தை மட்டும் திருப்பிக்கொள்வேன்.//
அவ்ளோ நல்லவங்களா நீங்க... :)
என்னத்த சொல்றது போ.. இன்னும் நீ கத்துக்க வேண்டியது நிறைய்ய இருக்குது போல... :))
கும்மி அடிக்க வந்துட்டு அட்வைஸ் பண்றது எனக்கு பிடிக்காத வேல. சோ ஒன்லி கும்மிங்... ஓகே :))
//நான் எழுத ஆரம்பிக்கும்போது தும்முனா கூட 50 100 பின்னூட்டம் வரும். இப்பலாம் எப்படி பீட்டர் உட்டாலும் பத்துக்கும் மேல தேறமாட்டேங்குது. இதுக்கு என்ன சொல்றிங்க. நானும் ரெண்டு வருசமா குப்ப கொட்ன விதத்தூல என்னைய நானே பிரபல பதிவர்னு சொல்லிகிட்டேன்னு வருத்தப்படக்கூடாது. அப்டியே உட்றனும்.
//
தும்மறது உனக்கு மட்டும் தும்மணும். ஊருக்கே சேர்த்து தும்மினா அப்பிடித்தான் விசாரிப்பாங்க.. :))
இப்ப நீ எளக்கியவியாதி ஆயிட்டேன்னுல்ல அனானி அங்கங்க அலறிக்கிட்டு வாந்தி எடுக்குது :)
//லக்கிலுக் said...
அதென்னங்க மூத்தப் பதிவர், மூத்தரப் பதிவர்னு கேட்டகிரி எல்லாம்... வலையெழுத வந்துட்டா எல்லாரும் பதிவர் தான், எழுத்தாளர்கள் உட்பட..
//
பார்த்தியா.. அவ்ளோதான்.. இதுக்குபோய் ஒரு போஸ்ட்ட வீணாக்கிட்டியே. சப்பை மேட்டரு மாப்ள இது :)
//மங்களூர் சிவா said...
ஐயா ராசா இந்த மாதிரி தலைப்புவெச்சு 4 பதிவு எழுது படிக்கற மாதிரி அதுக்கப்புறம் பாரு வேணாம் வேணாம்னாலும் வந்து நொங்கெடுத்துருவாய்ங்க!!
//
ஆமா. இல்லாட்டியும் சிவா வந்து போட்ட கமெண்டையே நுட்பமா காப்பி பேஸ்ட் செஞ்சுட்டு போவாரு :)
//தம்பி said...
இவ்ளோ நாயம் பேசறிங்களே. ஒரு மூத்த பதிவர்னு என்னைய மதிச்சு இதுவரைக்கும்ம் ஒரு பின்னூட்டமாச்சும் போட்ருப்பிங்களா?
இந்த கேள்விக்கு இப்ப பதில சொல்லவேண்டிய கட்டாயத்துல, நெருக்கடில, கொசுக்கடில இப்ப நீங்க இருக்கிங்கன்னு உங்களுக்கு புரியவைக்க விரும்புகிறேன்.
//
ரொம்ப கெஞ்சுறான்யா. போனாப்போகுது. ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு வந்துடு :)
//இந்த மாதிரி புரட்சி பண்ணதுல எங்க அண்ணாச்சிக்கு பெரிய பங்கு இருக்கறதை இந்த இடத்தில சொல்லியே ஆகணும். அவர் நயன் தாராவின் நீலப்படம்னு போட்டத உலகே சேந்து கொதிக்கும் பதிவா மாத்தினோம்.
//
நீ எங்க போனாலும் அண்ணாச்சிய வுடவே மாட்டியா :))
//கலஞ்சு போன காதல், கைகூடாத காதல், பரிச்சைல பெயிலானது, ஆயா டிக்கெட் வாங்கினது இப்படிலாம் எழுதுங்க பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.
//
அப்படியா.. மத்தத லிஸ்ட் போடாம விட்டுட்ட்யே தம்பி :)
//நிலா said...
குட்டிபாப்பாகிட்டல்லாம் வாங்கிகட்டவேண்டி இருக்கேன்னு வெறுத்து போயிடாதீங்க
//
இதுக்குத்தான் ஓவரா உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு சொல்றது. பாப்பா அட்வைஸ் பண்ற அளவுக்குத்தான் நீங்க எழுத்து இருக்கு போலருக்குது :)
//ARUVAI BASKAR said...
கூல் down cool down
லைப் ல இதெல்லாம் சகஜமப்பா !!!!!
நமக்கும் டெய்லி நூறு பின்னூட்டம் வரும் காலம் வரும் !!!!!!!!!!!
//
வந்துடுச்சுல்ல :)
//மோகன் கந்தசாமி said...
/////வேணாம் வேணாம்னாலும் வந்து நொங்கெடுத்துருவாய்ங்க!!////
எடுங்கைய்யா எடுங்கைய்யா! இதுக்குத்தான் 20 பதிவா வெயிட் பண்ணேன்.
//
அவ்ளோ காஞ்சு போச்சா நெலம :(
//கடைசியாக ... உங்கள் இந்த பதிவு தாறுமாறு பதிவு போங்க.. நீங்க பேசாம அந்த பதிவர் கிட்ட கேட்டதுக்கு இதையே 25 வது பதிவா போட்டு இருந்தீங்கன்னு வைங்க..மவனே 1000 வாலா பட்டாசு தான்.
அன்புடன்
கிரி//
அதோ வந்துட்டே இருக்காரு உண்மைத்தமிழன் உங்க பதிவுக்கு :))
//மோகன் கந்தசாமி said...
/////தற்போது பரவாயில்லை. மற்றவங்க பின்னூட்டம் போடுவதில்லைனு சொல்லும் நாம், மற்றவங்களுக்கு எப்படி பின்னூட்டம் போட்டு உற்சாக படுத்துகிறோம் என்றும் யோசிக்க வேண்டும்.//////
உண்மைதான். யோசிக்கறேன்...பெரிய அளவில் நானும் யாருக்கும் பின்னூட்டம் இடவில்லை என்பதும் உண்மைதான்.
//
டூ லேட் :))
//மங்களூர் சிவா said...
சென்ஷி் எங்கிருந்தாலும் வரவும்
//
நம்மளையும் மதிச்சு ஒருத்தரு கூப்புடுறப்போ நாம வரலைன்னா எப்படி.. வந்துட்டோமுல்ல :)
//karikalan said...
"மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல."
நூத்திலே ஒரு வார்த்தை தலை :-(
//
அடுத்த பதிவுக்க்கு யோசிச்சுட்டு இருக்காங்கப்பூ :))
இது 100.. திருப்திதானே:))
//எனக்குப் பதிலாக இந்தப் பதிவில் தம்பி சிவா பின்னூட்டத்தில் கொளுத்தியிருப்பது தெரிகிறது.. அவருக்கு எனது நன்றி..
வாழ்க வளமுடன்..//
நல்லவேளை தப்பிச்சுட்டீங்க :)
இங்கன பாருங்கப்பு.. ஏதோ நெட்டு பிரச்சினைங்கறதால எல்லோர் வூட்டுப்ப்பக்கமும் எட்டிப்பார்க்க முடியறதில்ல. எட்டிப்பார்க்கபோற சமயத்துலயும் இந்த மாதிரி தம்பிங்க வடிவேலு கணக்கா கண்ண கசக்கிட்டு நின்னா மனசு தாங்க மாட்டேங்குது. அட்றா கும்மிய அடிக்க கை துடிக்குது.
இதுதான் சாக்குன்னு எல்லோருமே மொக்கய போட ஆரம்பிச்சுடாதீங்க. அண்ணன் கொஞ்சம் பிசி. எதாயிருந்தாலும் வெள்ளிக்கிழமையில வச்சுக்கலாம். ஆனாலும் லேட் நைட்டுல கும்மி அடிக்கறது உடம்புக்கு நல்லதில்லைன்னு தல சொல்லியிருக்காரு.
அப்ப நான் வரட்டுமா :))
எலேய்.. பொங்க வச்சு கொடுத்துருக்கோம். நாளை பின்ன மறுக்கா அண்ணன் வரல, ஆட்டுக்குட்டி வரலன்னு பதிவு ஏதும் மறுக்கா வந்துச்சு. அவ்வளவுதான்..
தாங்கமாட்டேன். அண்ணனும் சேர்ந்து அழுதுடுவேன். அப்புறம் நானும் உன் கூட சேர்ந்து மொக்கய போட ஆரம்பிச்சா தமிழ்மணம் தாங்காது. அவ்ளோதான் சொல்லிப்புட்டேன் :))
அப்ப வரட்டா போய்ட்டு :))
கும்மி அடிக்க ஆரம்பிச்சா இதான் பிரச்சினை. லேசுல வுட முடியாது :((
108தான் நல்ல நம்பர் ன்னு சொல்றாங்களே அத பத்தி உன் கருத்து என்ன :))
106
ஹைய்யா...!!
நாந்தான் நூத்தியெட்டு!!!
எல்லோருக்கும் குட் நைட்டு!!!!! :))
வாழ்த்துக்கள்
anbudan
KRP
வாழ்த்துக்கள்
anbudan
KRP
http://visitmiletus.blogspot.com/
Ullen ayya...
(Tamil ezuthum vasathi tharatha ambaani ozigha)
அடடே சென்ஷியா! வாங்க
என்னோட அடுத்த பதிவ பாத்தீங்களா?
திவ்யா,
/////அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க,
சக பதிவரின் பதிவில் நம்ம கருத்தையும் , பாராட்டையும் சொல்றதுல என்ன பெருசா கவுரவம் குறைஞ்சிடப்போகுது!!////
அப்படியா? அப்ப கவுருவம் பாக்காம ஒரு பதிவ எழுதி (உங்க ஸ்டைல்ல) எனக்கு அனுப்பிடுங்க, உங்க பேருல போட்டுடறேன், (ஹி, ஹி, ஒரு விளம்பரந்தான்)
என்னோட அடுத்த பதிவ பாத்திங்களா?
சென்ஷி,
ஒரே அதகளம் செஞ்சிருக்கீங்க போல!
மகிழ்ச்சி
சென்ஷி,
////இப்ப பாருங்க.. நிறைய்ய ஈ பறக்குதா :))///
:-)
//////////அந்த மாதிரில்லாம் உடனே சேர்த்துக்கமாட்டோம்ப்பா. அதுக்கு நெறைய்ய டெஸ்ட்டு இருக்குது. அதுல நீ தேறுறியான்னு பார்க்கணும் :)/////
அப்படியா?, டெஸ்ட் பேப்பர அனுப்பி வையுங்க!, கூடவே ஒரு ஸ்பெசல் கும்மி பதிவ எழுதி அனுப்புங்க,
/////ஹைய்யா...!!
நாந்தான் நூத்தியெட்டு!!!
எல்லோருக்கும் குட் நைட்டு!!!!! :))///
தூங்காமல் கும்மிய சென்ஷியே!,
நன்றி, மீண்டும் வாருங்கள்
////////Ullen ayya...
(Tamil ezuthum vasathi tharatha ambaani ozigha)////
நெடு நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள், நன்றி.
////
/
TBCD said...
Ullen ayya...
(Tamil ezuthum vasathi tharatha ambaani ozigha)
/
யோவ்
நீங்க தமிழ் எழுத முடியலைங்கிறதுக்கும் அம்பானிக்கும் என்னய்யா சம்பந்தம்!?!?!?
இது கேவலமான கம்யூனிசமா இருக்கே!!
புரியலை தயவு செய்து விளக்கவும்.
முடியல!
நான் சொன்ன `முடியல'க்கு டபுள் மீனிங் இருக்கு.. புர்தா?
/////`முடியல'க்கு டபுள் மீனிங் இருக்கு.. புர்தா?////
என் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருப்பதாக எடுத்துக்கொள்கிறேன், திரு பரிசல்காரன்.
நன்றி, மீண்டும் வாருங்கள்
century comments ku oru special vaazththu Mohan:))
keep rocking & keep bloggin!!
////century comments ku oru special vaazththu Mohan:))
keep rocking & keep bloggin!!////
நன்றி, என் blog -ல ஒரு கட்டுரை எழுதினீங்கன்னா, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு என் blog அறிமுகம் ஆகும், நன்றி.
அன்பு மோகன்,
தாங்கள் பின்னுட்டத்தை எதிர்பார்த்து எழுதுபவர் எனில் தங்கள் எழுத்தை தாங்களே நம்பவில்லை என்றாகின்றது. சுவையாக, சுவாரஸ்யமாக எழுதுபவர் எனில் எங்கிருந்தாலும் தாங்கள் கவனம் பெறுவீர். எனவே எழுத்தை வலிமைப்படுத்திக் கொண்டே இருங்கள்.
மலர் மணந்து மணம் வீசுகையில், வண்டுகள் வந்தே சேரும்.
பினூட்டம் கொடுக்க ஃபிரண்டுகள் அற்றவிடத்து
தன்னூட்டமே சாலத் தகும்.
////மலர் மணந்து மணம் வீசுகையில், வண்டுகள் வந்தே சேரும்.
பினூட்டம் கொடுக்க ஃபிரண்டுகள் அற்றவிடத்து
தன்னூட்டமே சாலத் தகும்.////
ஆகா! பின்னூட்டமே நளினமா இருக்கே! பதிவ போய் படிக்கிறேன்
நன்றி வசந்த குமார்
Post a Comment