எனது வலைப்பூவின் 25 வது பதிவிற்காக செம்மைப்பதிவர் கோவி.கண்ணன் அவர்கள் எழுதும் கட்டுரை இது. இக்கட்டுரையின் பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிப்பார். மட்டுறுத்தல் உரிமையை எனக்கு வழங்கியுள்ள அவருக்கு நன்றி.
நக்கீரன் வாசகர் கடிதத்தில், "இந்துமதத்தின் அடையாளமே சாதிதான். தாய் மதத்திற்கு வந்தவர்கள், தாசில்தாரிடம் சாதியைச் சொல்லி சான்றிதழ் பெறலாம். மதம் மாறியதற்கு உறுதி மொழியும் கொடுக்கலாம்" - ஆர்.சீனிவாசன், மயிலாடுதுறை முதலில் தாய்மதம் என்பதே ஒரு நகைமுரண்...அப்படி ஒரு மதம் உலகில் கூட இல்லவே இல்லை. இதுபற்றி சிறில் அலெக்ஸ் விரிவான விவாதத்தை முன்வைத்திருக்கிறார். இஸ்லாம் கிறித்துவம் அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் கிறித்துவத்துக்கு திரும்பும் ஒரு இஸ்லாமியரை தாய் மதம் திரும்புகிறார் என்று சொல்வது எவ்வளவு முரணோ அதுபோன்றுதான் பிறமதங்களில் இருந்து 'இந்து மதம்' திரும்புவர்கள் குறித்த சொல்லாடலும். மதம் | மாறிய காலகட்டங்களில் தலித்துகள் இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனரா ? இன்னும் கூட சிறுநகரங்களில் 'நாங்க தமிழவங்க...இந்துக்கள் ... அவர்கள் பறையர்கள்' என்று உயர்சாதியினர் பெருமையாகவே சொல்லி வருகின்றனர். ஆக சூத்திரன் என்று பேதம் பிரித்துவைத்திருந்தாலும் அவன் இந்துவில் ஒரு பிரிவு என்று உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை ஒத்துக் கொண்டதே இல்லை. சென்ற நூற்றாண்டுவரை உயர்சாதிக் கடவுள் என்றே ஆகமவிதி கோவில்களில் உள்ள சாமிகள் அழைக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே நெருங்கவும் விட்டது கிடையாது. வெள்ளைக்காரர்கள் பொத்தாம் பொதுவாக இந்தியாவில் வழங்கப்படும் சமயங்களை அனைத்தையுமே இந்து என்று குறிப்பிட்டுவிட்டான். அவ்வளவுதான். |
வேதசமயம் (பார்பனர்களது), சமண சமயம், பவுத்த சமயம் என பல்வேறு சமயங்கள் ஒன்றாக இந்து என்று வழங்கப்பட்ட பிறகு இதில் தாய் மதம் என்று எதைச் சொல்வது ? பார்பனர்களிடையே இருந்த வேதசமயமா ? பார்பனர்கள் தவிர்த்து வேதங்களைப் படிப்பதற்கோ, கேட்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்ட பொழுது, அது அவர்களுக்கான தனிச் சமயமாக இன்றும் வழங்கிவரும் சூழலில் பார்பன சமயமான வேத சமயத்தை இந்துக்களின் சமயம் என்று சொல்ல முடியுமா ? சங்கராச்சாரியார், இந்து மதத்தின் பெருமையாக வருணங்களையே குறிப்பிட்டு இருக்கிறார். நால்வருணம் போற்றும் பகவத் கீதை புனித நூலாக வழியுறுத்தப்பட்டு ள்ளதாலும் நாட்டார் வழிபாடு செய் | பவர்களும் பார்பனர்களின் வேதம் புனிதமென்றும், பார்பன தெய்வங்களையும் தத்தமது தெய்வங்களாக ஏற்றுக் கொண்டதாலும் தற்காலத்தில் பார்பனர் மற்றும் பார்பனரல்லாதோருக்கு பொதுவாக இருப்பது பார்பனர்கள் கட்டமைத்துள்ள கடவுள்களே. ஆக பார்பனரின் சமயமே இந்துசமயம் என்றாகிவிட்டது. |
தாய் மதத்திற்கு திரும்பியாகிவிட்டது, தாசில்தார் அலுவலகத்தில் சென்று சாதி சான்றிதழ் பெறவேண்டும், அவர் ஒரு கேள்வித்தாள் வைத்திருப்பார், அதை நிரப்பிக் கொடுத்தால் மீண்டும் இந்து மதத்தில் ஐக்கியமாகிவிடலாம். தற்போதைய பெயர் : மரியதாஸ் தாய்மதத்திற்கு திரும்பியதும் மாற்றப்பட்ட பெயர் : இருளாண்டி குலத்தொழில் : செருப்பு தைப்பது தாசில்தார் அதை சரிபார்த்துவிட்டு "அப்படியா ? இன்றிலிருந்து நீ 'சக்கிலியன்'" என்று சான்றிதழ் தருவார், கூடவே தம்பி உங்க அப்பன் தொழில் உனக்கு தெரியுமா ? எப்படி பொழைக்கப் போகிறே ? என்று நக்கலிடிக்காமல் கேட்காதவரை நல்லதுதான் | அடுத்து, தற்போதைய பெயர் : இமாம் அலி தாய்மதத்திற்கு திரும்பியதும் மாற்றப்பட்ட பெயர் : சங்கிலி குலத்தொழில் : வெட்டியான் வெட்டியான் என்ற சாதி சான்றிதழ் கிடைக்கும். |
இந்தியாவில் மதமாற்றம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் குறிவைத்து எண்ணிக்கைக்காக அவர்களைச் சேர்த்துக் கொண்டாலும் அவர்களுக்கான மத உரிமைகள் கொடுக்கப்படாததுடன், அந்த மதத்திலேயும் அப்படியே தான் வைத்திருந்தார்கள் என்பதற்கு தாய்மதம் என்ற பெயரில் பழைய சாக்கடை சுவாசமே பரவாயில்லை மற்றும் சிறந்தது என்று திரும்புவர்களே சாட்சி. இப்படி திரும்புவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை விட மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர், நாடார் ஆகியோர்களே அதிகம். | வன்னியர்கள், நாடார்கள் ஏன் முன்பு மதம் மாறினார்கள் ? அவர்களும் திண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாலேயே, இன்று அவர்களின் சமூகம் பொருளாதார ரீதியில் வளர்ந்துவிட்டதால் பலரும் தயங்காமல் தீண்ட... இவர்களின் சாதி பெருமைக்குறியதாக மாறிவிட்டதாக நினைத்து, தனக்கும் கீழ் தாழ்ந்தவனாக தலித் சமூகம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு திரும்புகிறார்கள் | ||
நாங்கள் தீண்டாமையை ஒழித்துவிட்டோம் என்று மார்த்தட்டும் இந்திய இஸ்லாமிய அமைப்புகளும், தலித்தாக இருந்து இஸ்லாமுக்கு மாறிய இமாம் அலி (ஹைதர் அலி?) போன்றவர்கள் தவறான அமைப்புகள் மூலம் தீவிரவாதிகளாக ஆகி காவல் துறையால் மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்டதை தவிர்க்க முடியவில்லை. மதம் மாறுவது தீண்டாமையையோ, சமூக ஏற்றத்தாழ்வுகளையோ, பொருளாதார நிலையையோ உயர்த்திவிட்டதாக சொல்வது 100 விழுக்காடு சரியல்ல என்றே நினைக்கிறேன். தாய்மதம் திரும்பவதாலோ, அல்லது பிறமதத்திற்கு மாறுவதோ சமுக நிலையை என்றுமே மாற்றிவிடாது என்பதற்கு தலித்துகள் எல்லா மதங்களும் | அமிழ்த்தி வைத்திருப்பதே சாட்சி. ஒரு சாதி சமூகம் உயரவேண்டுமென்றால் அந்த சமூகத்தின் பொருளாதார நிலை உயர்ந்தால் மட்டுமே பிற சமூகங்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளும், வன்னியர்கள், நாடார்கள் ஆகியோர் தாழ்வு நிலையில் இருந்து மீண்டுவிட்டார்கள், தலித்துகள் ? அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துக் கொண்டு தானும் வளர்ந்து தம் சமூகத்தையும் மேலேற்றிவிட்டால் சமத்துவம் என்பதற்கான போராட்டமே தேவை இருக்காது. இந்துக்களில் எந்த உயர்சாதிக்காரர்களாக குறிப்பாக பிராமனர்கள் மதம் மாறி பார்த்து இருக்கிறீர்களா ? இந்துமத்தில் இருக்கும் வரை, இந்துமதம் இருக்கும் வரை அவர்கள் |
முகத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதால் அவர்களுக்கு பிறப்பால் தாழ்வு படுத்தப்படும் இழி நிலை இல்லை. இந்துமதத்தின் கேலிக் கூத்துக்களை சபை ஏற்றும் போது அவர்களுக்கு மட்டுமே கோபம் வருவதற்கு (அ)நியாயமான காரணம் இதுதான். இன்றைக்கும் உயர்சாதிக்காரர்கள் சாதிமறுப்புக்கு உடன்பட மாட்டார்கள் அதற்கு மாற்றாக சாதிகள் அனைத்தும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று சொல்வார்கள், அதில் உள்நோக்கமும் உண்டு, அதாவது அனைத்து சாதிகளுக்கும் இட ஒதிக்கீடு வழங்கபடவேண்டும் என்பதே அந்த உயர்(சாதி) நோக்கம், அப்படி கிடைத்தால், ரொம்ப கடினப்பட்டு படித்து அல்லது பணம் செலவு, செய்து இடம் பெற தேவையின்றி.... ஒதுக்கீட்டில் அதெல்லாம் கிடைத்துவிடும் |
என்பதால் தான். எல்லா சாதியும் சமம் தானே ? அவன் வீட்டில் சம்பந்தம் பேசத்தயாரா ? கேளுங்கள் வாயை மூடிக் கொள்வார்கள். | இந்துமதத்தின் அடையாளமே சாதிதான்.... அதனால் தான் சொல்கிறார்கள் .... இந்துமதத்தை ஒழிக்காமல் இந்தியாவில் சாதிகளை ஒழிக்க முடியாது. | ||
தொடர்புடைய சுட்டிகள்
சர்ச்சை இடி. சான்றிதழை பிடி.
சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?
சாதியை ஒழிக்க இந்துமதத்தை ஒழிப்பது ஏன் தீர்வாகாது?
22 comments:
தசாவதாரம் படத்த பத்தி நீங்க ஒரு கதை சொன்னீங்க. kumudham, இட்லிவடை எல்லாம் இன்னொரு கதை சொல்றங்க. படத்தை பார்த்தாத்தான் உறுதியா முடிவு பண்ண முடியும் போல்ரக்கு.
ஆமாங்க கோவிக்கண்ணன், இதை நான் என் மாமியாருக்கு(french) விளக்கப் போய் அவங்க என்ன என்னமோ நட்டு கழண்டவ மாதிரி பார்த்திட்டு, கொஞ்சமும் புரியாம அவங்கள எதிர்த்து பேசறேன்னு நெனைச்சுக்கிட்டு போய்ட்டாங்க. என்னத்த சொல்றது போங்க.
திரு.கோவி கண்ணன்,
பதிவின் முழுமை கெடாமல் வண்ணம் பூச முயற்சி செய்திருக்கிறேன். வெற்றி பெற்றேனா?
////முகத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதால் அவர்களுக்கு பிறப்பால் தாழ்வு படுத்தப்படும் இழி நிலை இல்லை////
அவர்களின் மேன்மை வாழ்வு அங்குதான தொடங்குது,
தங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
ஹாய் வெட்டி ஆபிசர்,
கோவி கண்ணன் என் வலைப்பூவில் எழுதிட்டார்,
தம்பி அடுத்த பதிவ எழுதி கொடுத்திட்டார்,
உங்க பதிவ எப்ப அனுப்பி வைக்கப் போறிங்க?
சீக்கிரமே எழுதி அனுப்பறேன் மோகன்
ஆரம்பமே அதிரடியா இருக்கே....
வாழ்த்துக்கள் மோகன்
mohan did u receive my mail?
////தசாவதாரம் படத்த பத்தி நீங்க ஒரு கதை சொன்னீங்க. kumudham, இட்லிவடை எல்லாம் இன்னொரு கதை சொல்றங்க. படத்தை பார்த்தாத்தான் உறுதியா முடிவு பண்ண முடியும் போல்ரக்கு.
////
தசாவதாரம் பற்றிய டிஸ்க்கி அடுத்த பதிவுடன் இணைக்கிறேன் வெட்டி ஆபிசர்.
////mohan did u receive my mail?//
உங்கள் மடல் (shared document) கிடைத்தது ஆபிசர். நன்றி.
ஆனால் அந்த கட்டுரையை நீங்கள் ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் பிரசுரம் செய்து விட்டீர்கள் தானே!, புதிய கட்டுரையை எழுதி தர முடியுமா?
விரிவாக தனி மடல் ஒன்றை அனுப்புகிறேன்
////ஆரம்பமே அதிரடியா இருக்கே....
வாழ்த்துக்கள் மோகன்////
ஆதரவுக்கு மிக்க நன்றி அதிஷா!, உங்கள் முந்தய பின்னூட்டந்த்தில் நீங்கள் தெரிவித்த கருத்தில் பெரும்பகுதி உடன் படுகிறேன்.
எனக்குத் தெரிஞ்சவர்களில் மூணுபேர் கிறிஸ்தவர்களா மதம் மாறி இருக்காங்க. அவுங்க நீங்க இங்கே குறிப்பிடும் பிராமின் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
//rapp said...
ஆமாங்க கோவிக்கண்ணன், இதை நான் என் மாமியாருக்கு(french) விளக்கப் போய் அவங்க என்ன என்னமோ நட்டு கழண்டவ மாதிரி பார்த்திட்டு, கொஞ்சமும் புரியாம அவங்கள எதிர்த்து பேசறேன்னு நெனைச்சுக்கிட்டு போய்ட்டாங்க. என்னத்த சொல்றது போங்க.
June 12, 2008 8:56 AM
//
இதெல்லாம் நானும் என் பெற்றோர்களிடம் சொல்லிவிட...அவர்கள் என்னை வேப்பில்லை அடிக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.
:)
//துளசி கோபால் said...
எனக்குத் தெரிஞ்சவர்களில் மூணுபேர் கிறிஸ்தவர்களா மதம் மாறி இருக்காங்க. அவுங்க நீங்க இங்கே குறிப்பிடும் பிராமின் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
June 12, 2008 6:41 PM
//
துளசி கோபால அம்மா,
அப்படி மாறுபவர்கள் காதல் திருமணம் செய்தவர்களாக இருக்கும். ஒட்டுமொத்தமாக குடும்பமே, கிறித்துவம் தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு, ஏசு நாதர் தான் இதயம் தெய்வம் என்று கனவில் வந்து சொன்னார் என்றெல்லாம் சொல்ல மாட்டாங்க. எதாவது ஒரு கட்டாயத்தினால் மாறி இருப்பார்கள். மதக் கொள்கை பிடித்து மாறி இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.
காதல் திருமணம் எல்லாம் இல்லை. மற்ற பிரச்சனைகள்தான். எல்லாம் பணம் படுத்தும் பாடு:)
வேற ஒன்னும் விவரிச்சுச் சொல்ல இப்போதைக்கு முடியாது.
அவுங்க எல்லாம் தெலுங்கு மாட்லாடும் மக்கள்ஸ்.
//துளசி கோபால் said...
காதல் திருமணம் எல்லாம் இல்லை. மற்ற பிரச்சனைகள்தான். எல்லாம் பணம் படுத்தும் பாடு:)
வேற ஒன்னும் விவரிச்சுச் சொல்ல இப்போதைக்கு முடியாது.
அவுங்க எல்லாம் தெலுங்கு மாட்லாடும் மக்கள்ஸ்.
//
துளசி கோபால் அம்மா,
நான் மறுமொழி அளித்து ஒரு நிமிடத்திற்குள் மறு பின்னூட்டம் போட்டுவிட்டீர்கள்....வேகம் !!!
வியக்கவைக்கிறது.
//வேற ஒன்னும் விவரிச்சுச் சொல்ல இப்போதைக்கு முடியாது.//
நானே மறுமொழியில் சொல்ல நினைத்தேன். அவர்கள் தனிப்பட்ட முடிவு அதையெல்லாம் பொதுவில் வைக்க முடியாது. விளக்க வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன்.
மிக்க நன்றி !
ஏ.ஆர். ரஹ்மான் பிறப்பால் ஒரு பார்ப்பனர்... பின்னர் இசுலாமியத்திற்க்கு மாறினார்.
முகமது அலி ஜின்னா குடும்பமும் அடிப்படையில் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் (ஆரியர்களின் மூல இனமாக கருதப்படும் பார்சி) என்று எங்கோ படித்த நினைவு. அத்வானி அடிப்படையில் பார்சி இனத்தை சேர்ந்தவர் அதனால் ஜின்னாவை பற்றி புகழ்ந்து பேசினார் என்கிற புகைச்சல் உண்டு!
"பிரபல ரவுடி என்கவுண்ட்டர்"
"பிரபல நடிகர் கொலை"
எம்மேல எவ்ளோ கொலைவெறி இருந்தா பிரபல பதிவர்னு தினத்தந்தி ரேஞ்சுக்கு போட்டு பழிவாங்கிருப்பிங்க? நான் பிரபல பதிவர்லாம் கிடையாது.
அதெல்லாம் முடியாது, பிரபல என்ற வார்த்தையை நீக்க முடியாது, அது வசைச் சொல் இல்லை. நீங்கள் குசும்பனுக்கோ, அன்னாச்சிக்கோ பயப்பட்டால் அது உங்கள் பிரச்சினை. (ஹி ஹி)
நீங்கள் பிரபல பதிவர் தான்.
வேண்டுமென்றால் "பிரபல பதிவர்" என்ற வார்த்தையை எடுத்து விட்டு "வலையுலகின் ஒரு முக்கிய பிரமுகர்" என்று போடுகிறேன். அது இன்னும் கேவலமா இருக்கும் பரவாஇல்லையா?
Post a Comment