Sunday, November 30, 2008

ஓ! இதுதான் பதிவர் சந்திப்பா?

· 59 comments

விஸ்பரிங் மலையையும் போண்டமாக் ஆற்றையும் கடந்து, ஒரு பெயர் தெரியாத ஏரியை சுற்றிக்கொண்டு, இரண்டு டர்ன்பைக், பல டவுன்ஷிப் சாலைகள் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய தொடர்வண்டி சேவை ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு, காரிலும், நடந்தும் சென்று, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட மோகன் கந்தசாமிக்கு அக்கூட்டத்தில் கிடைத்தது என்ன? லட்டு கொடுத்து லவடா வாங்கின கதை எவர்க்கேனும் தெரியுமா?

அது பற்றி நான் யோசிக்கத் தொடங்கும் முன், நண்பர் குருவிற்கு நன்றி சொல்வது உசிதம். மனிதர் மிகத்தெளிவாய் பேசுகிறார். சுயமரியாதை என்னும் வஸ்து என்னுள் துளிர்விட்டு ஒரு கட்டியாக வளர்ந்துவிட்ட பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நான் எந்த நண்பர் அல்லது உறவினர் வீட்டிலும் இரவு தங்கியதில்லை. குருவை சந்தித்துவிட்டு, பிறகு நூவார்க் சென்று, ரட்கர்ஸ் ஆய்வுச்சாலையில் தங்குவது என்ற எனது எண்ணத்தை நான் ஏன் சங்கடமின்றி மாற்றிக்கொண்டேன்? நண்பர் குருவின் நட்பு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்ததே காரணம்! நெஞ்சத்தகநக நட்பவர்தம் நட்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நாசரேத் நகரின் மீதான பற்றினால் நசரேயன் என்னும் பெயரில் பதிவுகள் எழுதும் பதிவர் நசரேயன் தனது நண்பரும் வருங்கால பதிவருமான சுதனுடன் சந்திப்பில் கலந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே நெருங்கிப் பழகும் நட்புக்கொள்கை கொண்டவர் போல் தெரியும் இவரிடமிருந்து இனி எனக்கு பண்பு கடத்தல் ஏற்படலாம். இவருக்கு போலி டோண்டு பற்றி எதுவும் தெரியவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

அடுத்து நான் ஜ்யோவ்ராம் சுந்தரை பேட்டி காணப்போகிறேன் என்று சொன்னபோது ச்சின்னப்பையன் முகத்தில் என்ன ரியாஸ்சன் வந்தது என நான் கவனிக்கத் தவறிவிட்டேன். எனது பேட்டிக் கொள்கை என்ன என்று அவர் விசாரித்தபோது பரவசமாக இருந்தது. பாரிஸிலிருந்து பதிவெழுதும் பள்ளி மாணவி[:-)))] ராப், சந்த்திப்பில் நான் கலந்து கொள்வது குறித்து விசாரித்ததாக சொன்னார். சர்வதேச சதிவலை ஏதும் பின்னப்படுகிறதா?

மாதவிப்பந்தலுக்கு மோகன் கந்தசாமி அர்த்தம் சொல்ல முயற்சித்தால் அதில் என்ன ஆச்சர்யம் என்று தெரியவில்லை. மாதவிப்பந்தலின் நிர்வாகி கே.ஆர்.எஸ். தன் பதிவுகள் போலவே மென்மையாக இருக்கிறார்[:-)))]. குறைந்த பட்சம், இவருக்கு ஏகவசனத்தில் கூட பேசத்தெரியாது போலிருக்கு. என் பதிவுகள் குறித்து ஆப் த ரெக்கார்ட் -ஆக விமர்சனம் செய்வதாக கூறி என் வேண்டுகோளை ஏற்றார். இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதா?

'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]. தட்ஸ் தமிழிலில் தான் இருந்ததாக அவர் சொன்னபோது குதிரைக்கார(ஸ்பானிஷ்கார) வெய்ட்டர் கூட அவரை திரும்பி பார்த்தான். அவரது சமீபத்திய பதிவில் வெறும் காழ்ப்பு மட்டும் தான் உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. உலகனாயகனை விடவும் மருதநாயகம் குழப்புறாரப்பா!

பதிவுச்சூழலைப் பொறுத்தவரை 'மூத்த' என்ற அடைமொழியை உச்சரித்தாலே என் உமிழ்நீர் கசந்து விடுகிறது. நிற்க, பதிவர் இளா மொக்கைகளை பதிவுலகில் குறைப்பது குறித்து ஒரு விவாத திட்டத்துடன் வந்திருந்தார். வெறுக்கத்தக்கதாகிய தூய்மைவாதத்திற்கு இணையானது இவ்வாதம். தமிழ்மணத்தில் மொக்கைகள் பெருகியதற்கு செந்தழல் ரவியும் மற்றொருவரும் காரணமாக சொல்லப்பட்டது. எழுத்துலகில் அவதூறு பெருகியதற்கு ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் காரணம் என்றால் எப்படி காமெடியோ, அப்படியான காமெடி இது. என் பதிவுகளை படித்ததே இல்லை என்ற ஒரு டகால்டி உண்மையைச் சொன்னார் இளா. இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.

குறுக்கெழுத்துபோட்டி புகழ் இலவச கொத்தனார்தான் சந்திப்பின் நாயகன். சவுண்ட் பைட் ஜாஸ்தியாக இருந்தாலும் கூடவே பயனுள்ளவற்றை பகிர்ந்து கொண்டார். விக்கி பசங்க, ட்விட்டர் என்று பலதை அறிந்தோம். அவர் உணவு கட்டணத்தை செலுத்தியபோது அவரது புனைப்பெயருக்கு ஏற்றார் போல் உணவும் இன்று இலவசம் என நினைத்தோம். ஆனால், இறுதியில் "ஏய், டேக் த டொண்டி பை ருபீஸ்"

மூத்த பதிவர்களும் வாசகர்களும் ஆரம்பம் முதலே பதிவர் சத்தியராஜ் குமாரை பாராட்டியதைப் பார்த்தால் இவர் சங்க காலத்திலிருந்தே பதிவுகள் எழுதி வருபவர் போல் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்து சிலாகிக்கப் படும்போது "நம்ம பதிவை யாரும் படிக்க மாட்டன்கிராய்ங்களே!" என்று நசரேயனை நான் பார்க்க, "நீரெல்லாம் எதுக்கு பதிவெழுத வந்தீர்" என்று என்னை அவர் முறைக்க ஒரே அசிங்கமாக போய்விட்டது. சரி, இதுக்கே அசிங்கப்பட்டா எப்புடி!

பல இணைய தளங்களை நடத்திவரும் கணேஷ், நெடுநாளைய வாசகர் ஜெய் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டனர். வெகுகாலமாக வலையுலகில் இயங்குபவர்களாகிய இவர்கள் பலவிஷயங்களை கலந்து கட்டி கலகலபூட்டினர். சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை கணேஷ் எல்லோருக்கும் மறுநாள் அனுப்பி வைத்தார். நன்றிகள். பிழையின்றி எழுத முடியாமையே அவர் பதிவுகள் எழுதாதன் காரணம் என்று சொன்னார் ஜெய். நம்பிட்டேன். என் பதிவுகளை படித்துள்ளதாக அவர் சொன்னபோது அவர் முகத்தை உற்று கவனித்தேன், சீரியசாத்தான் சொன்னார். காமெடி இல்லை. மேலும், ஒரு ஹார்வார்ட் பல்கலைகழக மாணவர், இந்திய, தமிழ் கலாச்சாரங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார். என்ன கொடுமை சார் இது!

உணவு முடிந்த சிறிது நேரத்தில் கன்னட வெறியுடன் எங்களை நெருங்கினார் உணவக நிர்வாகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியேறாவிட்டால் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்று எச்சரித்தார். தண்ணீர் விடுவோம் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா!?

சோமர்செட் ஹொய்சாலா உணவகத்தில் நடைபெற்ற இப்பதிவர் சந்திப்பு, முன்னதாக ஈழத்தமிழர்களுக்காகவும் மும்பை உயிர் இழப்புகளுக்காகவும் ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. சந்திப்பில் பேசிய ஏனையவற்றை பற்றி எழுதி போரடிக்காமல் ரத்தினச்சுருக்கமாக தளபோஸ்த்ரி வடிவில் கூறிவிடுகிறேன்.

சிவராஜ் பாட்டில்... கோஸ்டல் கார்ட்... எம் கே நாராயணன்... ஐயோ பாவம் ரஜினி... தட்ஸ் தமிழ்... குறுக்கெழுத்து... இலவசம்... ட்விட்டர்... பாஸ்டன் பாலா...மாதவிப்பந்தல்... பொதுச்சேவை... சிங்கப்பூர்... கோனா பதிவர்... பானா பதிவர்... போலி டோண்டு... அய்யய்யோ திராவிடமா!... மொக்கையை குறைப்பது எப்படி?... அக்குளை சொரிவது எப்படி?... வ. வ. சங்கம்... அய்யனார்... சாரு... டோண்டு... ராப்... வெண்பூ... பரிசல்காரன்... உண்மைத்தமிழன்... கூகிள் புரமோட்... பிளாக்பெர்ரி யூனிக்கோட்... இட்லிவடை... பொப்பெ... கெளம்பு காத்து வரட்டும்

இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில், புதிய பதிவர் என்ற வகையில் நான் அறிந்து கொள்ள கிடைத்தவை நிறைய. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்ற குறையை தவிர எல்லாம் நிறைவே. எனில், லவடா என்ற உருவகத்திற்கு இப்பதிவில் தேவை என்ன? ஏதுமில்லை. எல்லாம் ச்சும்மா ட்டமாஷ்!


அவதூறு / கிசு கிசு / தானே கேள்வி தானே பதில்

பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒருவரா?
மோகன் கந்தசாமி: தெரியாது
ஏனையோர்: வரவில்லை.

இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்திருந்தனரா?
மோகன் கந்தசாமி: வந்திருக்கலாம்.
ஏனையோர்: வரவில்லை.


நசரேயன், மோகன் கந்தசாமி, சத்தியராஜ் குமார்,
சோகன், இளா, மருதநாயகம்.கே.ஆர்.எஸ், நசரேயன்சுதன், இளா, மருதநாயகம், இலவச கொத்தனார்
ஜெய், குரு

Read More......

Saturday, November 22, 2008

அடல்ட்ஸ் ஒன்லி: மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் !!!

· 5 comments

ப்போதெல்லாம் சென்னையில் இன்டர்நெட் ஸ்பீட் சொம்மா தூசு கெளப்புதாமே! அதை நம்பி இந்த பதிவை வலையேற்றுகிறேன். வீடியோக்களை பார்த்து பிபீ எக்கச்சக்கமா ஏறும் சமயத்தில் யூ டியூப் திக்குச்சுன்னா அமிஞ்ச பீடி கணக்கா ஆர்வம் அடங்கிப்புடும் அல்லவா?

வேற்று மொழி பாடல்கள் பாஷை புரியலைன்னாலும் சில சமயங்கள் ஈர்ப்பதுண்டு. இதோ, என் நெஞ்சை நக்கிய ஒரு சில மாற்றான் வீட்டு கில்மாகள் உங்கள் பார்வைக்கு! கதற கதற கண்டு ரசியுங்கள்!
பாடுபவர்: நடாஷ்ஜா, மொழி: ஸ்பானிஷ்,
ஊர்: ஜாமைக்காவில் ஏதோவொரு முட்டுச்சந்து


வீடியோவில் பாடி தோன்றும் கில்மா ஒரு ஜமைக்கா பிரஜை. சென்ற ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனதாக கூகுள் கூறுகிறது. இப்பாடல் ஸ்பானிய மொழியில் வெளியாகி பிறகு ஆங்கில ரீமிக்சுடன் ஹோபோக்கன் பார்களில் பட்டையை கிளப்பி வந்தது.இந்த இணைப்பில் உள்ள ஒரு பின்னூட்டத்தில் வரிகள் ஆங்கிலத்தில் உள்ளன. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு காப்பி அனுப்பவும்.


எழுதி பாடியவர்: ஸ்பானிஷ் மைக்.
ஊர்: நியூயார்க்/உலவும் இடம்:யூ டியூப்
மொழி: அரைகுறை ஸ்பானிஷ்

ந்த வீடியோவில், மிஸ்டர் மைக், தனது ஸ்பானிய ஒன் சைட் காதலிக்காக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு அதை அவரிடமே பரிட்சித்து பார்கின்றார். அரை குறை ஸ்பானிஷ் -ல் அவர் பாடும் இந்த பாடல் மிக வேடிக்கையாக இருப்பதாக மொழி அறிந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இணைப்பில் அவரது பேட்டியையும் பார்த்துவிடுங்கள்.

இதுபோல் ப்ரீ லான்ஸ் யூ டியூப் சென்ஸ்சேசனஸ் நிறைய உண்டு. உதாரணத்திற்கு இந்த பிலிப்பினோ அமெரிக்கன் நர்சின் கைவண்ணத்தை பாருங்கள். அவரது வலைப்பூ இங்கே


பாடுபவர்கள்: திருமண கச்சேரி குழுவினர்,
ஊர்: அல்ஜீரியா, மொழி: அரபி

ரு திருமண வீட்டில் நடைபெறும் இசை கச்சேரி இது. ஆடும் பெண்கள், அந்நிகழ்ச்சிக்கு வந்த திருமணமான பெண்கள். 'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம். ஆண்ட்டிகளை ரசிப்பதில் ஆட்சேபனை உள்ளவர்கள் அடுத்த வீடியோவிற்கு போகலாம்.ஊர்: பிரேசில், மொழி: பிரேசில்

ம்பா நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலந்துகட்டி அடிக்கும் இந்த கோழிகள் எல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள். பிரேசில் மொழிப்பாடல் புரியாவிட்டாலும் மெட்டு நம்மூர் சினிமா பாடல்களை ஒத்துள்ளது. பிரேசிலுக்கே உரிய முக்கால் நிர்வாண நடனங்கள் இதில் குறைவு என்றாலும், தொடர்புடைய வீடியோக்களில் நிறைய உண்டு. அட! நிறைய என்று சம்பா நடனத்தை சொன்னேங்க!


பாடியவர்: ஹபிப் கொய்ட்டி,
ஊர்: மேற்கு ஆப்பிரிக்கா,
மொழி: மாலி

ன்ன, இந்த பாடலை எங்கோ கேட்டது போல் உள்ளதா? உங்கள் விஸ்டா ஆபரேட்டிங் சிஷ்டத்துடன் சாம்பிள் மியூசிக் சில வந்திருக்குமல்லவா, அவற்றை மறுமுறை கேட்டுப்பாருங்கள், அவற்றில் இது இருக்கும். மாலி இசைக்கலைஞரான ஹபிப் கொய்ட்டி கிட்டார் வாசிப்பதில் ஒரு விற்பன்னர். சாம்பிளுக்கு இந்த இணைப்பில் உள்ளதை கேளுங்கள்.தவற விடாதீர்கள்!பாடியவர்:என்ரிக் இக்லெஸியஸ்,
ஊர்: மாட்ரிட், ஸ்பெயின்,
மொழி: ஆங்கிலம், மூலம்: ஸ்பானிஷ்

ன்ரிக் இக்லெஸியஸை பற்றி அறிமுகம் தேவை இல்லை. இவர் 2002 -லிருந்தே இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஸ்பானிய மொழியிலமைந்த ஒரிஜினல் பாடலின் ஆங்கில வடிவத்திற்கு மூன்று விதமான பாடல் சூழல் உள்ளன. இந்த வீடியோவில் உள்ள சூழல் ஒரு மெக்சிகோ நாட்டு கிராமப்புறம். மெக்சிகன் நடிகை சல்மா ஹயாக், அக்கால நெவேடா போலீஸ்காரர் போன்ற ஷெரீப் போன்றோர் வருவதும் மெக்சிகன் சூழலுக்கு வலு சேர்ப்பவையாயிற்றே! வரிகள்பாடியவர்கள்: ரே சார்லிஸ் மற்றும் குழுவினர்
ஊர்: ஆல்பனி, ஜியார்ஜியா, அமேரிக்கா.,
மொழி: ஆங்கிலம்.

றுபதுகளின் இசைக் கலைஞர் ரே சார்லிஸ் ஒரு பார்வையற்ற பியானிஸ்ட். ஹிட் த ரோட் ஜாக் (Hit the Road Jack) என்ற இந்த பாடல் மிகச்சிறந்த ஐந்நூறு பாடல்களில் ஒன்றாக வரிசைபடுத்தப் பட்டுள்ளது. வரிகளை இங்கே பாருங்கள்


பாடியவர்கள்: ஒருவர் அரப், மற்றொருவர் யூதர்,
மொழி: ஆங்கிலம் மற்றும் அரபி பியூசன்

ருவரும் ரட்கர்ஸ் பல்கலை கழக மாணவிகள் என கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்தது இல்லை. தொன்னூறுகளில் இந்தியாவில் சக்கை போடு போட்ட 'தீ தீ' என்ற அரபு பாடல் வரிகளும் மெட்டும் லேசாக இப்பாடலில் தென்படுகின்றதா? வரிகளை இங்கே பாருங்கள்


மொழி: உய்கூர்

சீனா வியட்நாம் எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த உய்கூர் இனத்தவர். இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முழுக்கவும் வேறான தேசிய இனம் சீன வல்லரசில் எம்மாதிரியாக காலம் தள்ளுகிறது என்ற தகவல் இணையத்தில் கிடைக்கலாம். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி வேண்டாம்.

இப்பாடலில் சீன பாதிப்பு தெரிந்தாலும் இது தனித்தன்மை வாய்ந்த பாரசீக நடனமாக கூறுகிறார்கள்.பாடியவர்: நகீது அக்தர்,
ஊர்: குஜராத், பாகிஸ்தான், மொழி: உருது

பாகிஸ்தானின் மிகப்பிரபலமான பாடகர். இது ஒரு சாமி பாட்டு மாதிரி தெரியுது, மொழி தெரிந்தவர்கள் கண்டறிந்து சொன்னா தேவலைபாடியவர்: தாலேர் மெகந்தி
மொழி: பஞ்சாபி, ஊர்: பஞ்சாப், இந்தியா

தாலேர் மெகந்தி பற்றி நான் எது சொன்னாலும் அது புதிய செய்தியாக இருக்காது, எனவே அடுத்த வீடியோவுக்கு அப்பீட்டு!பாடியவர்: ஜேம்ஸ்
மொழி: ஹிந்தி, ஊர்: பங்களாதேஷ்

து ஒரு ஹிந்தி பாட்டு.(அப்படியா!)பாடியவர்: நாகூர் ஹனிபா,
ஊர்: தமிழ்நாடு, மொழி: தமிழ்

திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் குழுக்களோடும்

மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்,

முழங்கு சங்கே!!!

Read More......

அடல்ட்ஸ் ஒன்லி: மாற்றான் வீட்டு மல்லிகைகள்!

· 6 comments

ப்போதெல்லாம் சென்னையில் இன்டர்நெட் ஸ்பீட் சொம்மா தூசு கெளப்புதாமே! அதை நம்பி இந்த சில்ப்பாகுமார் வகைப் பதிவை வலையேற்றுகிறேன். வீடியோக்களை பார்த்து பிபீ எக்கச்சக்கமா ஏறும் சமயத்தில் யூ டியூப் திக்குச்சுன்னா அமிஞ்ச பீடி கணக்கா ஆர்வம் அடங்கிப்புடும் அல்லவா?

வேற்று மொழி பாடல்கள் பாஷை புரியலைன்னாலும் சில சமயங்கள் ஈர்ப்பதுண்டு. இதோ, என் நெஞ்சை நக்கிய ஒரு சில மாற்றான் வீட்டு கில்மாகள் உங்கள் பார்வைக்கு! கதற கதற கண்டு ரசியுங்கள்!
பாடுபவர்: நடாஷ்ஜா, மொழி: ஸ்பானிஷ்,
ஊர்: ஜாமைக்காவில் ஏதோவொரு முட்டுச்சந்து


வீடியோவில் பாடி தோன்றும் கில்மா ஒரு ஜமைக்கா பிரஜை. சென்ற ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து போனதாக கூகுள் கூறுகிறது. இப்பாடல் ஸ்பானிய மொழியில் வெளியாகி பிறகு ஆங்கில ரீமிக்சுடன் ஹோபோக்கன் பார்களில் பட்டையை கிளப்பி வந்தது.இந்த இணைப்பில் உள்ள ஒரு பின்னூட்டத்தில் வரிகள் ஆங்கிலத்தில் உள்ளன. யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் எனக்கொரு காப்பி அனுப்பவும்.


எழுதி பாடியவர்: ஸ்பானிஷ் மைக்.
ஊர்: நியூயார்க்/உலவும் இடம்:யூ டியூப்
மொழி: அரைகுறை ஸ்பானிஷ்

ந்த வீடியோவில், மிஸ்டர் மைக், தனது ஸ்பானிய ஒன் சைட் காதலிக்காக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு அதை அவரிடமே பரிட்சித்து பார்கின்றார். அரை குறை ஸ்பானிஷ் -ல் அவர் பாடும் இந்த பாடல் மிக வேடிக்கையாக இருப்பதாக மொழி அறிந்த நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த இணைப்பில் அவரது பேட்டியையும் பார்த்துவிடுங்கள்.

இதுபோல் ப்ரீ லான்ஸ் யூ டியூப் சென்ஸ்சேசனஸ் நிறைய உண்டு. உதாரணத்திற்கு இந்த பிலிப்பினோ அமெரிக்கன் நர்சின் கைவண்ணத்தை பாருங்கள். அவரது வலைப்பூ இங்கே


பாடுபவர்கள்: திருமண கச்சேரி குழுவினர்,
ஊர்: அல்ஜீரியா, மொழி: அரபி

ரு திருமண வீட்டில் நடைபெறும் இசை கச்சேரி இது. ஆடும் பெண்கள், அந்நிகழ்ச்சிக்கு வந்த திருமணமான பெண்கள். 'அரபு நாட்டிலா இப்படி!' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் போடலாம். ஆண்ட்டிகளை ரசிப்பதில் ஆட்சேபனை உள்ளவர்கள் அடுத்த வீடியோவிற்கு போகலாம்.ஊர்: பிரேசில், மொழி: பிரேசில்

ம்பா நடனத்தையும் மேற்கத்திய நடனத்தையும் கலந்துகட்டி அடிக்கும் இந்த கோழிகள் எல்லாம் லத்தீன் அமெரிக்கர்கள். பிரேசில் மொழிப்பாடல் புரியாவிட்டாலும் மெட்டு நம்மூர் சினிமா பாடல்களை ஒத்துள்ளது. பிரேசிலுக்கே உரிய முக்கால் நிர்வாண நடனங்கள் இதில் குறைவு என்றாலும், தொடர்புடைய வீடியோக்களில் நிறைய உண்டு. அட! நிறைய என்று சம்பா நடனத்தை சொன்னேங்க!


பாடியவர்: ஹபிப் கொய்ட்டி,
ஊர்: மேற்கு ஆப்பிரிக்கா,
மொழி: மாலி

ன்ன, இந்த பாடலை எங்கோ கேட்டது போல் உள்ளதா? உங்கள் விஸ்டா ஆபரேட்டிங் சிஷ்டத்துடன் சாம்பிள் மியூசிக் சில வந்திருக்குமல்லவா, அவற்றை மறுமுறை கேட்டுப்பாருங்கள், அவற்றில் இது இருக்கும். மாலி இசைக்கலைஞரான ஹபிப் கொய்ட்டி கிட்டார் வாசிப்பதில் ஒரு விற்பன்னர். சாம்பிளுக்கு இந்த இணைப்பில் உள்ளதை கேளுங்கள்.தவற விடாதீர்கள்!பாடியவர்:என்ரிக் இக்லெஸியஸ்,
ஊர்: மாட்ரிட், ஸ்பெயின்,
மொழி: ஆங்கிலம், மூலம்: ஸ்பானிஷ்

ன்ரிக் இக்லெஸியஸை பற்றி அறிமுகம் தேவை இல்லை. இவர் 2002 -லிருந்தே இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஸ்பானிய மொழியிலமைந்த ஒரிஜினல் பாடலின் ஆங்கில வடிவத்திற்கு மூன்று விதமான பாடல் சூழல் உள்ளன. இந்த வீடியோவில் உள்ள சூழல் ஒரு மெக்சிகோ நாட்டு கிராமப்புறம். மெக்சிகன் நடிகை சல்மா ஹயாக், அக்கால நெவேடா போலீஸ்காரர் போன்ற ஷெரீப் போன்றோர் வருவதும் மெக்சிகன் சூழலுக்கு வலு சேர்ப்பவையாயிற்றே! வரிகள்பாடியவர்கள்: ரே சார்லிஸ் மற்றும் குழுவினர்
ஊர்: ஆல்பனி, ஜியார்ஜியா, அமேரிக்கா.,
மொழி: ஆங்கிலம்.

றுபதுகளின் இசைக் கலைஞர் ரே சார்லிஸ் ஒரு பார்வையற்ற பியானிஸ்ட். ஹிட் த ரோட் ஜாக் (Hit the Road Jack) என்ற இந்த பாடல் மிகச்சிறந்த ஐந்நூறு பாடல்களில் ஒன்றாக வரிசைபடுத்தப் பட்டுள்ளது. வரிகளை இங்கே பாருங்கள்


பாடியவர்கள்: ஒருவர் அரப், மற்றொருவர் யூதர்,
மொழி: ஆங்கிலம் மற்றும் அரபி பியூசன்

ருவரும் ரட்கர்ஸ் பல்கலை கழக மாணவிகள் என கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்தது இல்லை. தொன்னூறுகளில் இந்தியாவில் சக்கை போடு போட்ட 'தீ தீ' என்ற அரபு பாடல் வரிகளும் மெட்டும் லேசாக இப்பாடலில் தென்படுகின்றதா? வரிகளை இங்கே பாருங்கள்


மொழி: உய்கூர்

சீனா வியட்நாம் எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்த உய்கூர் இனத்தவர். இவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முழுக்கவும் வேறான தேசிய இனம் சீன வல்லரசில் எம்மாதிரியாக காலம் தள்ளுகிறது என்ற தகவல் இணையத்தில் கிடைக்கலாம். இப்போதைக்கு அந்த ஆராய்ச்சி வேண்டாம்.

இப்பாடலில் சீன பாதிப்பு தெரிந்தாலும் இது தனித்தன்மை வாய்ந்த பாரசீக நடனமாக கூறுகிறார்கள்.பாடியவர்: நகீது அக்தர்,
ஊர்: குஜராத், பாகிஸ்தான், மொழி: உருது

பாகிஸ்தானின் மிகப்பிரபலமான பாடகர். இது ஒரு சாமி பாட்டு மாதிரி தெரியுது, மொழி தெரிந்தவர்கள் கண்டறிந்து சொன்னா தேவலைபாடியவர்: தாலேர் மெகந்தி
மொழி: பஞ்சாபி, ஊர்: பஞ்சாப், இந்தியா

தாலேர் மெகந்தி பற்றி நான் எது சொன்னாலும் அது புதிய செய்தியாக இருக்காது, எனவே அடுத்த வீடியோவுக்கு அப்பீட்டு!பாடியவர்: ஜேம்ஸ்
மொழி: ஹிந்தி, ஊர்: பங்களாதேஷ்

து ஒரு ஹிந்தி பாட்டு.(அப்படியா!)பாடியவர்: நாகூர் ஹனிபா,
ஊர்: தமிழ்நாடு, மொழி: தமிழ்

திங்களொடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் குழுக்களோடும்

மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய்,

முழங்கு சங்கே!!!

Read More......

Thursday, November 20, 2008

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா... லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...

· 19 comments


படம்: டிஷ்யூம்,
பாடகர்: சுக்வந்தர் சிங், பாடகி: காயத்ரி,
இசை: விஜய் ஆண்டனி

தினமுன் தமிழ் மனத்தின் முகப்பை பார்வையிடும்முன் பழைமைபேசியின் வலைப்பூவை ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம். அவரது பதிவொன்றில் பதிவர் ஸ்ரீராம் இட்ட பின்னூட்டம் பார்த்ததும் கீழ்க்கண்ட பாடல் நினைவுக்கு வர, மாந்தனைய (மாந்தநேய?) அன்பர்களுக்காக அப்பாடல் வரிகள்!

வெல்கம் டு த டேன்ஸ்...

ம்ஹே... ம்ஹக்...
ம்ஹே... ம்ஹக்...

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


ஹேய்... கிட்ட நெருங்கி வாடி கர்லாகட்ட ஒடம்புக்காரி
பட்டா எழுதித்தாரேன் பஞ்சாம்ருதம் உதட்ட தாடி
தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி


சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

டேய்.. கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர


பொத்தி வச்ச புயலா நீ -தங்கம்
கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி -உன்னை
திங்கப்போறேன் தரியா நீ

சாத்திவச்ச கதவா நீ -உள்ள
ஊத்தி வச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ -உன்ன
என்னப்போறேன் கொடுடா நீ.

தெப்ப கொளத்துல
முங்கி குளிக்கையில்
உன்ன தொட்ட மீனு
வெந்துடிச்சே!

கட்ட எறும்புங்க
உன்ன கடிச்சதும்
சக்கர நோயில்
செத்துருச்சே!

சேட்டு முதுகுக்காராராராராரா (வர வர வர வம்சிபுக்கரு) ராராரா...

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா... (என்னடா??!!)
பஸ்ஸாங்க நிறுத்திக் கோடா...
லேக்காங்கொம்மா... லேக்காங்கொய்யா...


தொட்டபேட்டா வேணுமின்னா கூட்டிப்போறேன் கூடவாடி
கீத்துக்கொட்டா போதும்மின்னா கூத்துக்கட்ட நானும் ரெடி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

சேல
கட்டி வந்த மயிலா நீ -என்ன
முட்ட வந்த முயலா
உடம்பில மருதாணீ -இப்ப
வைக்கப் போறேன் ரெடியா நீ

சுட்டெரிக்கும் பகலா நீ -என்ன
சொக்க வைக்கும் இரவா நீ
எந்திரிச்சு மெதுவா நீ -என்ன
தாண்டி வரும் களவானீ

வங்க கடலில
வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய
தாண்டிடுச்சே!

நெஞ்சுக்கிடையில
புது புயல் சின்னம்
உன்ன இடிச்சதும்
போங்கிடுச்சே!

சேட்டு முதுகுக்காரிரிரிரிரிரிரிரி(வர வர வர வம்சிபுக்கரு)ரிரிரிரி

சேட்டு முதுகுக்காரி
சாக்லேட்டு கலருக் காரி -உன்
தேக்கு ஒடம்ப பாத்து -என்
மீசை துடிக்குதேடி

கிட்ட நெருங்கி வாடா கர்லாகட்ட ஒடம்புக்காரா (வர்றேன்...)
பட்டா எழுதித்தாடா பஞ்சாம்ருதம் உதட்ட தாடா (தர்றேன்...)
தொட்டபேட்டா நானும்வாரேன் உப்புமூட்ட தூக்கி போடா (போறேன்...)
கீத்துக்கொட்டா போதுமடா கூத்துக்கட்ட கூட வாடா

சேட்டு முதுகுக்காரா
சாக்லேட்டு கலருக் காரா -உன்
தேக்கு ஒடம்ப தாக்க -என்
ஆச துடிக்குதேடா

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர

வர வர வர வம்சிபுக்கரு
கர கர கர கம்சிகக்கரு
தள தள தள தம்சிதக்கரு
வ்வர வ்வர வ்வர..

Read More......

Monday, November 17, 2008

தமிழ் சசி அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள்

· 4 comments

ஈழம் பற்றி தமிழ் சசி அவர்களின் பேட்டி இந்தியத்தமிழர்கள் பெரும்பாலானோருக்கு தெரியாத பல விஷயங்களை தெளிவுற விளக்கியுள்ளது. அவரது பல வேலைகளுக்கு இடையே கணிசமான நேரத்தை இதற்காக ஒதுக்கி விரிவான மற்றும் ஆழமான பதில்களை அளித்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அவரது புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துகொள்வோம். பின்னூட்டங்கள் மூலம் ஆதரவளித்த பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

தமிழ் சசி


நசரேயன்

தமிழ் பிரியன்

கோவி.கண்ணன்

நந்தா

indian

ஜோ

வெண்தாடிதாசன்

we the people நா ஜெயசங்கர்

Pot"tea" kadai Sat

தம்பி

பொடியன்-|-SanJai

ராஜ நடராஜன்

பிருந்தன்

ஓசை செல்லா

மு.மயூரன்

Thooya

தங்க முகுந்தன்

ஜ்யோவ்ராம் சுந்தர்

சயந்தன்

கொழுவி

குடுகுடுப்பை

stanjoe

குசும்பன்

தமிழ் பால்

மற்றும் அனானிமஸ்

Read More......

Tuesday, November 11, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, நிறைவுப் பகுதி

· 8 comments

திரு. தமிழ் சசி உடனான ஈழம் குறித்த பேட்டியின் முதல் மூன்று பகுதிகளை இங்கே காணலாம்.

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3

தொடர்ந்து இது இறுதிப் பகுதி


ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கை தோல்வி அடைய காரணம் என்ன? புலிகளா? சிங்கள அரசா? அல்லது அந்த உடன்படிக்கையேதான் காரணமா?

ந்த உடன்படிக்கை முதலில் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே நடைபெற்றிருக்க கூடாது. விடுதலைப் புலிகள்-ஜெயவர்த்தனே இடையே தான் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தியா அந்த ஒப்பந்தத்திற்கு உதவி செய்திருக்க வேண்டும். அது தான் முதல் கோணல். அது போல இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது இந்தியாவின் நலன்களைச் சார்ந்து முன்வைக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகம் போன்றவை இந்த ஒப்பந்தத்திற்கு அடிப்படையான காரணமாக இருந்தது.

அது தவிர போபர்ஸ் போன்ற ஊழல் பிரச்சனைகளில் சிக்கித்தவித்த ராஜீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் பிரச்சனைகளை திசைதிருப்ப முனைந்தார். மிகவும் அவசரகோலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என முன்னாள் வெளியூறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டு இருக்கிறார்.


ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்

சோனியா, ராஜிவ்,எம்ஜியார் - மரினா, சென்னை

இன்னும் விரிவாக பேசலாம். ஆனால் ராஜீவ் காந்தி பற்றி பேசினாலே பிரச்சனை வேறு பக்கம் திரும்பி விடும். எனவே இப்போதைக்கு இது போதும்ணில் மற்றும் பேராசிரியர் பெரிஸ் முன்னெடுத்த பேச்சு வார்த்தை ஏன் தோல்வி அடைந்தது? அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? அரசுதரப்பு ஒப்புக்கொண்ட முடிவுகள் பிறகு ஏன் அரசுக்கு உவப்பளிக்கவில்லை?


ஆண்டன் பாலசிங்கம், பேரா. ஜி.எல். பெரிஸ் - ஆஸ்லோ

னில் ஆட்சிக்கு வந்த பொழுது தடுமாறிக்கொண்டிருந்த தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. புலிகளுக்கு உலகநாடுகளிடம் தங்களுக்கென ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை இருந்தது. இந்த இரண்டு நோக்கங்கள் தான் பேச்சுவார்த்தை தொடங்கியதற்கு காரணம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே சென்றன. நார்வே தலைமையில் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த சூழ்நிலையில் ஒரு பன்னாட்டு வலையத்தை ரனில் ஏற்படுத்த முயன்றார். ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்றவை நாடுகள் உள்ளிட்ட கூட்டத்தலைமை ஏற்படுத்தப்பட்டது. இது தங்களுக்காக விரிக்கப்பட்ட ஒரு வலை என புலிகள் நினைத்தனர். அது போல பேச்சுவார்த்தை புலிகளுக்கு அதிக அதிகாரங்களை தருவதாக சந்திரிகா மற்றும் சிங்கள தேசியவாதிகள் கருதினர்.


புலிகள் தங்களுக்கு தேவைப்படும் அதிகாரங்களை Interim Self Governing Authority (ISGA) என்ற பெயரில் முன்வைத்தனர். அதனைச் சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என கூறினர். இதனை சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்கமுடியவில்லை. சிந்திரிகா ரனில் வசம் இருந்த முக்கிய இலாக்காக்களை பறித்தார். இதற்கிடையே கருணா பிளவு ஏற்பட்டது. ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த சூழலை கருணாவின் பிளவு வலுப்படுத்தியது. பேச்சுவார்த்தை நின்று போனது. இது தவிர உலகநாடுகளிடம் அங்கீகாரம் கோரிய புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை, கனடா தடை என பல தடைகள் நேர்ந்தன. இந்த தடைகளே தற்போதைய போருக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்ல முடியும் (இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த சூழலை என்னுடைய பல்வேறு பதிவுகளில் விரிவாக எழுதியுள்ளேன்)


ந்தியாவின் இலங்கை அயலுரவுக்கொள்கையை நிர்ணயிப்பவை எவை? கற்பிதமான இந்திய தேசியத்தின் போலி இறையான்மையா? ராஜீவ்காந்தி படுகொலையா? சீனா, பாகிஸ்தான் முதலான நாடுகளா? தமிழின காழ்ப்பா? அசட்டையா? அல்லது வேறெதுவுமா?

மிழன் என்ற இனம் இந்திய தேசியம் உருவாவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ் தேசியம் என்பதை முன்வைத்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ் தேசியம் என்பதை வலுவாக முன்வைத்த ஒரு தேசிய இனம் தமிழ் இனம். இத்தகைய ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாட்டினை பெற்று விட்டால் அது இந்திய தேசியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என


ராஜபக்ஷே - ஹூ ஜிண்டாவோ பீஜிங்
ஆரம்பகாலங்களில் இந்தியா நினைத்தது. அதனால் ஈழப்போராட்டத்தை நசுக்க முனைந்தது. பிறகு ராஜீவ் காந்த படுகொலை காரணமும் அதனுடன் சேர்க்கப்பட்டது.

அது தவிர தற்பொழுது உலமெங்கும் பல தேசிய இனங்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள், துருக்கியில் PKK, இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் என தேசிய இனங்களின் போராட்டங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றன. இதில் எந்த ஒரு இனம் வெற்றி பெற்றாலும் அது பிற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றால் காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து போன்ற இடங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. எனவே தமிழ் ஈழம் அடைந்து விடக்கூடாது என்ற அக்கறை இந்தியாவிற்கு உள்ளது.

எப்படி இலங்கையின் சில பகுதிகள் இலங்கை

ராஜபக்ஷே - முஷாரப்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லையோ அது போல நாகாலாந்து போன்ற குட்டி மாநிலத்தின் சில பகுதிகள் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. புலிகள் பல போராளிக்குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நினைக்கின்றன.

எனவே விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விடக்கூடாது என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன.

ராணுவ நடவடிக்கைகளும் புலிகளின் எதிதாக்குதலும் இந்நேரம் எந்நிலையில் உள்ளது?


ராஜபக்ஷே - முகம்மது அகமதினாஜாத்

ற்போதைய நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் கை ஒங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம் புலிகளுக்கு கடல்வழியே வந்து கொண்டிருந்த ஆயுதங்கள் பெரும்மளவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறன. மிக அதி நீவீன கடல் உளவு நுட்பங்களை இந்தியா/அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறீலங்காவிற்கு அளித்து உள்ளன. மிகவும் அசுர பலம் கொண்ட விமானப்படை சிறீலங்காவிடம் உள்ளது. அதன் மூலம் பாரிய தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள். கடந்த ஈழப்போர்களில் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தன. இது போரின் போக்கினை ஒரு சமநிலையில் வைத்திருந்தது. தற்போதைய போரில் அவ்வாறான நிலை இல்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருந்தாலும் அது முக்கியமான இடங்களையும், பிரபாகரனின் பாதுகாப்பிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே சிறீலங்கா விமானப்படை எந்த தடையும் இல்லாமல் குண்டு மழை பொழிகிறது.

தற்பொழுது கிளிநொச்சி நோக்கிய இராணுவ முன்நகர்வுகளில் ஒரு தொய்வு கடந்த சில வாரங்களாக தெரிகிறது. கிளிநொச்சியை விட்டு விட்டு பூநகரி நோக்கி சிறீலங்கா இராணுவம் நகர முனைவதாக தெரிகிறது. பூநகரி கைப்பற்றப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கு தற்பொழுது கடல் வழியாக சுற்றிச்செல்லும் பிரச்சனை இருக்காது. எனவே சிறீலங்கா இராணுவமே தற்பொழுது கிளிநொச்சியை கைப்பற்ற முடியாது என நினைப்பதாக தெரிகிறது. இதனை நான் சொல்லவில்லை. இந்தியாவின் உளவு நிறுவனமான ராவின் முன்னாள் அதிகாரிகளான பி.ராமனும், ஹரிஹரனும் தங்களுடைய இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் போரில் சிறீலங்கா, விடுதலைப் புலிகள் என இருவருமே வெற்றி பெற முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்கும் போர் அதைத் தான் நமக்கு தெரிவிக்கிறது. புலிகளும், சிறீலங்கா இராணுவமும் மாறி மாறி வெற்றி பெற்றிருக்கிறார்கள். தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். சந்திரிகா தலைமையில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பொழுது புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவே அனைவரும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் துரத்தப்பட்டனர்.

ஆனால் என்ன நடந்தது ? அடுத்த சில மாதங்களில் தாங்கள் இழந்த பகுதி அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறிய பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என புலிகளை எச்சரித்தன. எனவே புலிகள் தங்கள் முன்னேற்றத்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இப்பொழுது உள்ள சூழ்நிலை எப்படி மாறும் என தெரியவில்லை. ஆனால் நிச்சயமான வெற்றி யாருக்கும் கிடைக்காது என நான் நினைக்கிறேன். புலிகளால் ஒட்டு மொத்த தமிழ் ஈழத்தையும் வென்றெடுக்க முடியாது. சிறீலங்கா இராணுவத்தாலும் புலிகள் வசம் உள்ள அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற முடியாது. இது ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை தான் ஏற்படுத்தும்.

நிச்சயமில்லாத சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கொடுமையானது.விடுதலைப் புலிகள் உங்களை எவ்வாறு கவருகிறார்கள் ? எதனை எதிர்க்கிறீர்கள் ?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தது, சக போராளிக்குழுக்கள் மீதான தாக்குதல், தொடர்ச்சியாக செய்த அரசியல் ரீதியிலான தவறுகள் என எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன.

ஆனால் புலிகளை விமர்சிக்கும் தமிழ் இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிராக முன்வைக்கும் தீர்வு என்ன ?


வான் புலிகளுடன் பிரபாகரன்

www.satiyakadatasi.com/2007/06/06/நேர்காணல்-ஷோபாசக்தி-2/
ஷோபா சக்தி போன்றவர்கள் தங்களை அறிவுஞானம் மிக்க மாற்று சிந்தனையாளர்களாக கருதி முன்வைக்கும் சிங்கள இடதுசாரி-தமிழ் இடதுசாரி சார்ந்த "உளறல் கருத்தாக்கம்" எந்த வகையில் நடைமுறை சாத்தியம் மிக்கது ? ஷோபா சக்தி போன்றவர்கள் தங்கள் "உளறல் கருத்தாக்கத்தை" தார்மீக நியாயமாக கருதிக்கொண்டிருக்கலாம். அவர்களை அறிவுஞீவிகளாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே இத்தகைய கருத்துக்கள் உதவும்.

புலிகளை விமர்சிப்பதை தவிர தமிழ் இடதுசாரிகள் இந்தப் பிரச்சனையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ப்ரான்சிலும், டோரோண்டோவிலும் கூட்டம் போடுவதை தவிர இவர்கள் செய்தது எதுவும் இல்லை.

சிங்கள அதிகாரமையம், இந்திய அதிகாரமையம் என அனைத்தையும் எதிர்கொண்டு வருபவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. எனவே தான் புலிகள் மீது பல விமர்சனம் இருந்தாலும் அவர்களை நிராகரிக்க முடிவதில்லை.ழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன?

நான் டிரவுசர் போட்டு கொண்டிருந்த காலங்களில் "ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி" கொளுத்தும் நிகழ்வு தான் ஈழப்பிரச்சனை குறித்து எனக்கு நேர்ந்த முதல் அனுபவம். நெய்வேலியின் வீதிகளில் பள்ளி மாணவர்களும், பிற இளைஞர்களும் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவியை இழுத்துக் கொண்டு சென்று கொளுத்துவார்கள். ஈழத்தில் பிரச்சனை தீவிரமடையும் பொழுதெல்லாம் அரசாங்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பள்ளியில் நுழைந்து பள்ளியை மூட சொல்வார்கள். நான் படித்துக் கொண்டிருந்தது தனியார் பள்ளியில். 4வதோ, 5வது இருக்கலாம். லீவு கிடைத்த விட்ட மகிழ்ச்சியில் வீட்டிற்கு வருவதும், பிறகு ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டு கொளுத்தப்படுவதும் நடக்கும். அந்த கூட்டத்துடன் நடந்து சென்றது தான் என்னைப் இந்தப் பிரச்சனையை முதன் முதலில் கவனிக்க வைத்தது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. பல இழப்புகளை சந்தித்து விட்டோம். இன்றைக்கும் எதிர்கொண்டு வருகிறோம்.

ஈழத்தில் நடைபெறும் போர் சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து முன்பு ஒரு பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
http://blog.tamilsasi.com/2008/04/eelam-war-psychological-trauma.html


எண்பதுகளின் தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம்

போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார மையங்களால் நகர்த்தப்படும் இந்தப் போர், அந்தப் போரினை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலில் இருக்கும் சாமானிய மனிதனையே அதிகம் பாதிக்கிறது/சிதைக்கிறது.

ஈழத்திலே நடந்து வரும் போரும் ஒரு சாமானிய தமிழனையே அதிகம் பாதிக்கிறது. தன்னுடைய குடும்பத்தை இராணுவத்திடமும், புலிகளிடமும், துணை இராணுவ குழுக்களிடம் இழந்தவர்கள், விமானத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கணவன்/குழந்தைகளை இழந்த பெண்கள், உறவுகள் இல்லாமல் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் என தமிழ் ஈழம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட ஒரு நாடாக மாறிவிட்டது. இதற்கு ஒரு மாற்றம் வேண்டும்.

சில நேரங்களில் எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணம் கூட ஏற்படுகிறது. ஈழத்திலே நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. ஆனால் எனக்கே அவ்வாறு தோன்றும் பொழுது ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அவ்வாறு நடக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் அதைத் தான் ஆதரிப்பேன்.

ஈழத்திலே எது நடைமுறை சாத்தியமோ அது தான் நடக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. ஆனால் முன்வைக்கப்படும் எந்த தீர்வும் நடைமுறை சாத்தியம் இல்லாமல் போவது தான் வேதனையான சூழ்நிலை. புலிகளின் முழுமையான தமிழ் ஈழம் நடைமுறை சாத்தியம் அல்ல. சிறீலங்கா அரசியல்வாதிகள் கூறும் Unitary setup என்பதும் நடைமுறை சாத்தியம் அல்ல.

தமிழருக்கும், சிங்கள மக்களுக்கும் சரிசமமான அதிகாரங்களை கொண்ட ஒரு கூட்டாட்சி அமைப்பே தீர்வாக முடியும். இந்த கூட்டாட்சி அமைப்பினை பேச்சுவார்த்தைகள் மூலமே எட்ட முடியும். போரினால் சாதிக்க முடியாது. தற்போதைய போர் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடக்ககூடிய வாய்ப்பு ஏற்படும். சிங்கள இராணுவம், புலிகள் இருவருமே இந்தப் போரில் தாங்கள் வெற்றி பெற முடியும் என நினைக்கின்றனர். அது தான் இங்கு பிரச்சனை.

சிங்கள இராணுவம் இந்தப் போரினை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிரடியாக இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது. புலிகள் இந்தப் போரில் சிறீலங்காவின் முன்னேற்றத்தை எவ்வளவு தூரம் தடுக்க முடியுமோ அந்தளவுக்கு தடுப்பதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். தொடர்ச்சியான போர் இராணுவத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொழுது தாங்கள் அவர்களை தாக்கலாம் என நினைக்கிறார்கள். அதன் மூலம் வெற்றி பெற முடியும் என நம்புகிறார்கள்.

அது தான் இங்கு பிரச்சனை.[முற்றும்]


.

Read More......

Monday, November 10, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 3

· 9 comments

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகள் கடந்த இரண்டு பதிவுகளாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது மூன்றாவது பகுதி.


ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஒப்பிட முடியுமா?

ந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இலங்கை அரசியலைப்புச் சட்டத்தையும் ஒப்பிட கூடிய அரசியல் சட்டமைப்பு குறித்த அறிவு எனக்கு இல்லை.
"ஏட்டளவில் (On Paper)" இந்திய அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமான உரிமையை வழங்குகிறது.

இலங்கையில் உள்ளது போலவே இந்தியாவிலும் மாநிலங்களுக்கு பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. ஆனால் ஒரளவுக்கு அதிகாரங்கள் உள்ளன. இந்தியாவின் அரசியல் அமைப்பில் உள்ளது போன்ற அதிகாரங்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கும் திட்டம் கூட சிங்கள அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது இலங்கைக்கு பொருந்தாது. இந்தியாவின் தற்போதைய அதிகாரப் பரவல் என்பது இந்தியாவின் பிராந்திய கட்சிகள் பலம் பெற்றதாலும், தேசிய கட்சிகள் பலம் இழந்ததாலும் தான் அடைய முடிந்தது. இந்தியா போன்று பெரிய நாட்டில், பல்வேறு பிராந்தியங்கள் உள்ள சூழ்நிலையில், பிராந்திய கட்சிகள் வலுப்பெறும் பொழுது தான் இந்த மைய கூட்டாட்சி நிலை ஏற்படுகிறது.

ஆனால் இலங்கை போன்ற சிறிய நாட்டில் இது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால் இந்தியா போன்று அதிகாரப்பரவலாக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை.

இலங்கையில் இந்தியாவைப் போன்ற மாநில அதிகாரங்களை வழங்க முனைந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால சூழ்நிலை தான் இலங்கையில் ஏற்படும்.
இந்தியாவில் ஆரம்ப காலங்களில் மைய அரசு தான் பலம் பொருந்தி இருந்தது. மாநில ஆட்சிகளை கலைக்கும் அதிகாரங்களை பெற்றிருந்தது. மைய அரசின் அசுர பலம் காரணமாகவே கட்சத்தீவினை தமிழகத்தின் கடும் எதிர்ப்பினை மீறியும் இலங்கைக்கு

அன்றைய இந்தியாவின் மைய அரசு தாரைவார்த்தது. ஆனால் இன்றைய கூட்டாட்சி முறையில் அது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.

எனவே இந்தியா போன்ற அதிகாரங்களை கொண்ட மாநிலங்களை இலங்கையில் உருவாக்குவது என்பது ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக முடியாது.

இவை தவிர இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்ட வரப்பட்ட பல மாற்றங்களே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம். குறிப்பாக 1956ம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டம் (Official Language Act or Sinhala Only Act), ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது. இந்திய அரசியல் சட்டத்தில் அவ்வாறான ஒரு நிலை இல்லை. என்றாலும் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று கூறுவதை என்னால் என்றைக்கும் ஜீரணம் செய்து கொள்ள முடிவதில்லை. அப்படியெனில் மற்ற மொழிகள் எல்லாம் எதற்கு?

ழத்தமிழர் பற்றி அண்ணாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

ண்ணா காலத்தில் ஈழப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகம் இருந்தது இல்லை என நினைக்கிறேன். அதனால் அண்ணாவின் நிலைப்பாடு குறித்த எந்த தகவலும் இல்லை


விடுதலை புலிகளுக்கு எம்ஜியார் செய்த உதவிக்கும் இந்திய அரசு செய்த உதவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அல்லது வித்தியாசம் இல்லையா?

மிழீழ விடுதலை குறித்து உண்மையிலேயே அக்கறை கொண்டு உதவி செய்த ஒரே தமிழக தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும் தான். எம்.ஜி.ஆர் ஆரம்பகாலங்களில் செய்த உதவி தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வலுவாக கொண்டு வந்தது.


இந்திரா, அமிர்த லிங்கம்,
நரசிம்ம ராவ்

எம்.ஜி.ஆர்., பிரபாகரன்
இந்திய அரசு ஒரு உதவியும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்கவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. தமிழ் போராளிக்குழுக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே இந்திய அரசு நினைத்தது. தமிழ் ஈழத்தை ஒரு போதும் இந்திய அரசாங்கம் ஆதரித்தது இல்லை. இதன் காரணமாக இந்திய அரசு அளித்த பயிற்சியில் தமிழ் போராளிக்குழுக்களுக்கு மிகவும் தரம் குறைந்த ஆயுதங்களும், மிதமான பயிற்சிகளும் தான் வழங்கப்பட்டன. இது தமக்கு எந்த வகையிலும் உதவாது என பிரபாகரன் நினைத்தார் (பாலசிங்கம் எழுதிய "War and Peace" என்ற புத்தகம் இதனை விரிவாகவே விளக்குகிறது). அந்த சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆர் வழங்கிய பெரும் நிதி பிரபாகரனுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல நவீன ஆயுதங்களை வாங்க முடிந்தது. தரமான பயிற்சிகளை தாங்களாகவே புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர்.


வ்விஷயத்தில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் கலைஞரின் நிலைப்பாடு என்ன? கலைஞர் யாரை ஆதரித்தார்? எண்பதுகளின் இறுதியில் அவரது நிலைப்பாடு புலிகள் பக்கம் சாய்வாக இருந்ததா?

முதன் முதலில் 1970களில் தான் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் நுழைந்தது. செல்வநாயகம், தொண்டமான் போன்றோர் அப்போதைய முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் பெரியாரை சந்தித்தனர்.

கலைஞர் ஒரு குழப்பமான நிலைப்பாட்டினை தான் ஈழப்பிரச்சனையில் தொடர்ந்து செய்து வருகிறார். தமிழனத்தலைவர் என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என விரும்பும் கலைஞர் தன்னுடைய அரசியல் சுயநலத்தைச் சார்ந்தே தன்னுடைய நிலைப்பாட்டினை அமைத்து கொண்டிருக்கிறார். 80களில் எம்.ஜி.ஆர் விடுதலைப்


தொண்டைமான்
புலிகளுக்கு நிதி வழங்கிய பொழுது கலைஞர் அதற்கு போட்டியாக டெலோ (TELO) அமைப்புக்கு நிதி வழங்கினார். அங்கும் அரசியல்.

1989ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கலைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு காரணம் சென்னையில் வைத்து பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது தான் காரணம். மற்றொரு காரணம் கலைஞர் இலங்கையில் தமிழர்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த இந்திய இராணுவத்தை வரவேற்கவில்லை. இது இந்திய தேசியவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

உண்மையில் கலைஞர் எந்தக் காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை. ஆனால் அவ்வாறான ஒரு பிம்பம் எழுப்பபட்டது. இந்த அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கலைஞர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கும் பொழுது அந்த குற்றச்சாட்டினை மறுக்க வேண்டிய நிலைக்கு கலைஞர் தள்ளப்படுகிறார். He is on Defensive. அதுவும் கலைஞர் போன்று அரசியல் அதிகாரங்களை மையப்படுத்தி "மட்டுமே" அரசியல் செய்பவர்களை அவ்வாறான Defensive நிலைக்கு தள்ளுவது என்பது ஒரு சரியான உத்தி. கலைஞருக்கு எதிராக மற்றொரு ஈழவிடுதலை ஆதரவாளர் இருந்திருந்தால் இந்த உத்தி வேலை செய்திருக்காது. ஆனால் ஜெயலலிதா இருந்ததால் கலைஞரை குற்றம்சாட்டிக் கொண்டே அவரை நெருக்கடி நிலையில் வைத்து ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்படாமல் செய்து விட்டனர். தற்பொழுது கூட ஜெயலலிதா திடீர் என்று தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதும், பிறகு கலைஞர் களத்தில் இறங்கியதும், நிலைமை வலுத்ததும் ஜெயலலிதா பின்வாங்கி கலைஞரை குற்றம்சாட்டியது, இந்திய தேசியவாதிகள் அலறுவதும், பிறகு கலைஞர் பின்வாங்குவதும்...என்னய்யா அரசியல் இது.

திருச்செல்வம், கலைஞர்

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்போராட்டம் இலங்கையில் சிங்களனுக்கும்-தமிழனுக்கும் நடக்கும் யுத்தம். அந்த ஈழப்போராட்டத்தின் மற்றொரு பரிமாணம் தமிழகத்தில் உண்டு. தமிழகத்திலே ஈழப்போராட்டம் என்பது தமிழனுக்கும் - பார்ப்பானுக்கும் நடக்கும் யுத்தமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் ஈழப்போராட்டத்தை வலுவாக எதிர்ப்பதையும் அவர்களின் நிலைப்பாட்டையே இந்திய நடுவண் அரசு முன்வைப்பதும் எதனை குறிக்கிறது ?

வைகோ புலித்தோல் வரித்தவரா அல்லது போர்த்தியவரா? அவரை திமுக தலைவராக ஆக்குவதாக எப்போதாவது புலிகள் உறுதி கொடுத்தனரா?

வைகோவை திமுக தலைவராக மாற்ற விடுதலைப் புலிகள் சதி செய்வதாக இந்திய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. உளவுத்துறைக்கு தான் திமுக மேல் என்ன கரிசனம் !! இந்திய உளவுத்துறை தமிழ் ஈழப்போராட்டத்தை நசுக்க பல வேலைகளை செய்து வந்தது/வருகிறது. அதில் ஒன்று தான் இந்த வேலை. கருணாநிதிக்கும் - வைகோவுக்கும் பகை உண்டாக்கியவர்களும், கருணாவை உருவாக்கி விடுதலைப் புலிகள்


ராமதாஸ்

வைகோ, பழ. நெடுமாறன்
இயக்கத்தை உடைத்தவர்களும் ஒருவர் தான்.
அவர்கள் இந்திய உளவுத்துறையினர் - ரா (RAW)


பாமக மற்றும் திருமா ஆகியோரின் விடுதலை புலிகள் தொடர்பான அணுகுமுறை என்ன? பொதுவுடமைவாதிகள் என்ன சொல்கிறார்கள்?


பாமக ஆரம்பகாலத்தில் தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்தது. ஆனால் தற்பொழுது அதன் நிலையில் சறுக்கல் தெரிகிறது. காங்கிரசை பகைத்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் அடக்கி வாசிக்கிறார்கள். இது தான் தமிழகத்தின் தலையெழுத்து. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு பெரும் சக்தியாக ஏனோ தொடர்ந்து மதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் காங்கிரசுக்கு ஓட்டு போடுபவர்களில் பெரும்பகுதியினர் எப்பொழுதோ சுடுகாட்டிற்கு போய் சேர்ந்து விட்டனர். தமிழக அரசியல் கட்சிகள் இதனை உணர்ந்து தங்கள் கூட்டணிகளை அமைக்க வேண்டும். ஆனால் அதனை எவரும் செய்வதில்லை.

ஈழப் பிரச்சனை என்பது தமிழக அரசியல் கட்சிகளின் அரசியல் சுயநலம் சார்ந்த பிரச்சனையாக காலப்போக்கில் மாறிவிடும் என்பதற்கு திமுக முதல் உதாரணம் என்றால் பாமக சமீபத்தைய உதாரணம்.

திருமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இந்தப் பிரச்சனையில் காட்டி வரும் ஈடுபாடு தான் இந்தப் பிரச்சனையை தமிழகத்தில் அதிகளவில் பேசவைத்துள்ளது என நான் நினைக்கிறேன். டி.ராஜா போன்றோர் இந்தப் பிரச்சனையை இந்தியா அளவில் முன்வைத்துள்ளனர்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு பாரதீய ஜனதா கட்சியாக மாறிவருகிறது என்பது தேசிய அளவில் என்றோ வெளிபட்டு விட்டது என்பதால் அதனைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படவேண்டியதில்லை.

பொதுவாக பல கட்சிகள் முன்வைக்கும் எந்த முயற்சிக்கும் பெரிய பலன் இருக்கப்போவதில்லை என்பது வேறு விடயம். என்னைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சனை தமிழக மக்களின் முன்வைக்கப்பட வேண்டும். 18 வருடங்களாக அது நடக்கவில்லை. மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சனை குறித்து பேசப்படவேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய விருப்பம்.


கருத்துரிமை மீட்பு மாநாட்டில் திருமா

மற்றபடி, ஈழப்போராட்டத்தை புலிகள் தான் வென்றெடுக்க வேண்டும். இங்கு அகதியாக வந்து சேரும் மக்களுக்கும், ஈழத்திலேயே அகதியாக உள்ள மக்களுக்கும் பொருளுதவியும், நிதியுதவியும் செய்வது தவிர தமிழக மக்கள் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்பது தான் யதார்த்தமான சூழ்நிலை/அவலம்.

ஜெயலலிதாவின் பிரதமர் கனவிற்கும் அவரது தனிஈழ எதிர்ப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஜெயலலிதா பிரதமர் ஆவதெல்லாம் கனவில் தான் நடக்கும். அதற்கும் ஈழ எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோ, என்.ராம் போன்றோர் எதற்காக ஈழத்தை எதிர்க்கிறார்களோ, அந்த காரணம் தான் ஜெயலலிதாவிற்கும்.


மூகத்தின் மையத்தில் உள்ள இண்டலக்ச்சுவல்களில் விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் யாவர்?

ண்டலக்ச்சுவல்களா ? யார் அவர்கள் ?
இங்கு ஊடகத்தில் பலம் கொண்டவர்கள் யாரை முன்நிறுத்துகிறார்களோ, அவர்கள் தான் இண்டலக்ச்சுவல்கள். அவர்கள் ஆதரித்தால் என்ன ? எதிர்த்தால் என்ன ?


தெற்காசிய தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஏகமனதாக ஏற்கின்றனரா?


ம். ஏற்கிறார்கள். தெற்காசியா என்னும் பொழுது தமிழகம் மற்றும் இலங்கை மட்டும் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் கருத்துகணிப்புகள் அதைத் தானே சுட்டி காட்டுகிறது.[தொடரும்]அடுத்த பகுதியுடன் தொடர் பேட்டி முற்றுப்பெறும்

Read More......


கிடங்கு