Monday, November 10, 2008

தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2

·

திரு. தமிழ் சசி -வுடனான தமிழீழம் குறித்த பேட்டியின் முதல் பகுதி சென்ற பதிவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இது இரண்டாவது பகுதி.ரம்பத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் இன்றைய நிலை என்ன?

ல போராளிக்குழுக்கள் இருந்தன. சில முக்கிய போராளிக்குழுக்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

Tamil Eelam Liberation Organization (TELO) என்ற அமைப்பை குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் தொடங்கினார்கள். ஆரம்பகாலங்களில் டெலோ ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கியமான அமைப்பாக இருந்தது. 1983ல் குட்டிமணி, தங்கதுரை இருவரும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். பிறகு சிறீ சபாரத்தினம் தலைமையில் டெலோ செயல்பட்டது. ஆரம்பம் முதலே டெலோ இந்திய உளவுத்துறையான ராவின் முக்கியமான செல்லப்பிள்ளை. டெலோ உள்ளேயே சகோதரப்படுகொலைகள் நிகழ்ந்தன. அதுவே டெலோ பலவீனமடையக்காரணம்.


குட்டிமணி

தங்கதுரை
இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த நேரத்திலே இரண்டாம்நிலைத்தலைவர்களான தாஸ்-பொபி பிரச்சனையிலே, தாஸ் பொபியினாலே யாழ் வைத்தியசாலையுள்ளே வைத்துக் கொல்லப்பட்டார். அவர் விடுதலைப்புலிகளுடன் சுமுகமான உறவை வடமராச்சிப்பகுதியிலே கொண்டிருந்தவர். சிறீ சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டார். தற்பொழுது TELO விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டணியில் (TNA) அங்கம் வகிக்கிறது.

EROS (Eelam Revolutionary Organisation of Students) என்ற அமைப்பு லண்டனில் இருந்து தொடங்கப்பட்டது. இது மார்க்சிய வழியில் தமிழீழ விடுதலையை முன்வைத்தது. கடைசியாக ஈரோஸ் பிரிந்தபோது, பாலக்குமார் தலைமையிலான குழு

சிறீ சபாரத்தினம்

பாலக்குமார்

ஷங்கர் ராஜீ
விடுதலைப்புலிகளுடன் சென்றபோது, கணிசமான ஒரு பகுதி, சங்கர் ராஜி போன்றோர்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாக இருந்தனர். சங்கர் ராஜி இறந்த பின்னர், அவரின் மகனான இலங்கையிலேயே வசிக்காத நேசன் இங்கிலாந்திருந்து நானே தலைவர் என்று அப்பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.

1980ல் EROS அமைப்பு உடைந்து Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) என்ற அமைப்பு தோன்றியது. பத்மநாபா இதன் தலைவராக இருதார். EPRLF பல பிரிவுகளாக இயங்கியது. வரதராஜபெருமாள் இந்தியாவின் ஆதரவுடன் வடகிழக்கு மாகாண முதல்வர் ஆனார். பிறகு இந்தியப் படைகளுடன் சேர்ந்து அவரும் வெளியேறி இந்தியாவின் வடமாநிலத்தில் (மத்திய பிரதேசம் ??) தலைமறைவாக வசித்து வருகிறார். இதன் சில பிரிவுகள் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை சிங்கள அரசின் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய உமா மகேஸ்வரன் தொடங்கிய மற்றொரு போராளி இயக்கம் - PLOTE - People's Liberation Organisation of Tamil Eelam. போராளிக்குழுக்களுக்குள் நடந்த சண்டையில் பெரும்பங்கு கொண்ட

பத்மநாபா

வரதராஜ
பெருமாள்

டக்லஸ்
தேவானந்தா
இயக்கமென்றால், PLOTE தான். சந்ததியார் உட்பட எத்தனையோ கருத்து ரீதியிலான சிறந்த தலைமைகளைக் கொன்றதிலே இவர்களுக்குப் பங்குண்டு. PLOTE இந்தியாவின் கூலிப்படையாக செயல்பட்டது. இந்திய உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில் மாலத்தீவிற்கு சென்று அந்த அரசை சீர்குலைக்க முனைந்தது.

மேலே கூறிய அனைத்து போராளிக்குழுக்களும் இந்தியாவின், சிறீலங்காவின் கூலிப்படையாக அவர்களின் செல்லப்பிள்ளைகளாக காலப்போக்கில் மாறிய நிலையில் ஒரு போராளி அமைப்பு மட்டும் தமிழ் ஈழமே தன்னுடைய லட்சியம் என்ற பாதையில் உறுதியாக இருந்தது. இந்தியாவின் நிர்பந்தங்களுக்கு அடிபணியவில்லை. அந்த அமைப்பு தான் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பு. 1972ல் புலிப்படை அல்லது Tamil New Tigers என்ற அமைப்பை பிரபாகரன் தொடங்கினார். 1976ல் இது தமிழீழ விடுதலைப் படை (Liberation Tigers of Tamil Eelam - LTTE) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு படிப்படியாக மிகப் பலமான அரசியல்-இராணுவ அமைப்பாக உருவெடுத்தது. இதற்கு காரணமாக இருந்தவர் பிரபாகரன்.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

PLOTE உமா மகேஸ்வரன்

பிரபாகரன் பத்திரிக்கையாளர்
அனிதா பிரதாப் -வுடன்

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.
...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல போராளிக்குழுக்கள் இந்திய உளவு அமைப்பான ராவின் செல்லப்பிள்ளைகளாக மாறிய பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே தன்னுடைய ஆரம்பகால லட்சியங்களில் இருந்து மாறாமல் உறுதியாக இருந்தது. இது தான் இந்தியாவின் எரிச்சலுக்கும், பிரபாகரன் மீதான வெறுப்பிற்கும் காரணம். பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு என்பதை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. பிரபாகரன் இல்லாவிட்டால் மற்ற இயக்கங்கள் போலேவே விடுதலைப் புலிகள் அமைப்பையும் தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்ப மாற்றிவிடலாம் என இந்தியா நினைக்கிறது.


போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தம் குறித்து கூற முடியுமா ? கலைஞர் கூட சகோதர யுத்தம் தான் ஈழப்போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு காரணம் என கூறுகிறாரே ?

போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையை ஈழப் போராட்டத்தின் கருப்பு பக்கம் என்று தான் கூற வேண்டும். ஆனால் போராளிக்குழுக்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் ஈழப்போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா தன்னுடைய உளவு வேலைகளை இலங்கையில் நிறுத்தியிருந்தால் எப்பொழுதுதோ ஈழம் கிடைத்திருக்கும்.

சகோதர யுத்தம் என்பது தானாக உருவானது அல்ல. உருவாக்கப்பட்டது. இந்தியாவின் உளவு அமைப்பான ராவால் உருவாக்கப்பட்டது. டெலோ, ஈரோஸ், விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகள் ஒன்றாக இணைந்து கூட்டாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். திம்பு பேச்சுவார்த்தை. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய அரசாங்கம் முன்வைத்ததை அனைத்து போராளிக்குழுக்களும் நிராகரித்தன. ஆனால் இதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு தான் என இந்திய உளவுநிறுவனம் கருதியது.


ஆண்டன் பாலசிங்கம்
ஆண்டன் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதனை தொடர்ந்த காலங்களிலும், இந்திய அமைதிப்படை இலங்கை சென்ற பொழுதும் டெலோ, EPRF போன்ற அமைப்புகள் இந்தியாவின் செல்லக்குழந்தைகளாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டது என்பதை மறுக்க முடியுமா ?

இந்திய/இலங்கை அரசாங்கங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான் சகோதரயுத்தத்தை உருவாக்கியது. அதில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட வேண்டும் என்பது இந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அதில் பலம் பெற்றனர். ஏனெனில் தன்னுடைய எதிரிகளின் நடவடிக்கையை சரியாக கணிக்கும் ஆற்றல் பிரபாகரனுக்கு இயல்பாகவே இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது.

பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவை கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த முயன்றவர்கள் யார் ? கருணாவை உருவாக்கியவர்கள் யார் ?

சகோதர யுத்தம் என்ற பெயரில் ஒட்டுமொத்த பழியையும் விடுதலைப் புலிகளின் மீது போட்டு விட்டு இந்தியா தப்பித்துக் கொள்கிறது. ஆனால் போராளிக்குழுக்களுக்குள் சண்டையை ஏற்படுத்தியது இந்தியா தான். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது, வவுனியாவிலே, புலிகளின் உள்ளூர்த்தலைவர்களைக் கொல்ல ஆசீர்வாதம் செய்தது. மற்றைய இயக்கங்களை வழி நடத்தியதும் இந்தியாவின் இராணுவ தலைமை தான். தவிர, இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது, தமிழ்த்தேசிய இராணுவம் என்ற அமைப்பினை (Tamil National Army) உருவாக்கி மிகவும் சிறிய சிறுவர்களையும் கடத்திப்போய்ச் சேர்த்து, தனிநாடுப்பிரகடனம் உருவாக்கியதெல்லாம், இந்தியாவின் இலங்கை அமைதிப்படை வருகையின் வரலாற்றிலே பேசப்படுவதில்லை.

காங்கிரசின் நெருக்குதல், தமிழக கட்சிகளின் நெருக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க கலைஞர் சகோதர யுத்தம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். கலைஞர் ஈழபோராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுதெல்லாம் இந்த சகோதர யுத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.

கருணா
பிரச்சனைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முனைகிறார். கலைஞருக்கு வரலாறு தெரியாதா ? அல்லது மற்றவர்களுக்கு தெரியாது என நினைக்கிறாரா ?

அடுத்த முறை மைய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வரும் பொழுது கலைஞர் இந்திய உளவு அமைப்பான ரா இலங்கையில் செய்த குளறுபடிகள் குறித்து ஒரு முழுமையான அறிக்கையை கேட்டால், அவர்களும் கலைஞருக்கு அந்த அறிக்கையை கொடுத்தால் உண்மை தெரியவரும். ஆனால் அது எப்பொழுதும் நடக்கப் போவதில்லை.விடுதலை புலிகள் இயக்கம் தோன்றிய முதல் நாள் அதில் இருந்தவர்கள் யாவர்? இன்றைய விடுதலைப்புலிகளின் படைபலம் என்ன?

முதல் நாள் யார் இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தவர்கள் சார்லஸ் ஆண்டனி (சீலன்), செல்லக்கிளி, கிட்டு, பேபி சுப்பிரமணியன் போன்றோர். இவர்களில் பேபி சுப்பிரமணியன் மட்டும் தான் தற்பொழுது உயிருடன் இருக்கிறார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் (No. 2). ஊடகங்கள் இவர் No.2 அவர் No.2 எனக் கூறிக்கொண்டு இருந்தாலும் பேபி சுப்பிரமணியன் தான் No.2. ஆனால் இவர் தற்பொழுது இராணுவ அமைப்பில் இல்லை. தமிழ் ஈழப் பகுதிகளில் கல்வி, அனைத்து இடங்களிலும் தனித்தமிழை கொண்டு வந்தது போன்றவற்றில் பேபி சுப்பிரமணியனின் பங்கு முக்கியமானது.


சார்லஸ்
ஆண்டனி

கிட்டு

பேபி
சுப்பிரமணியன்
தற்பொழுது விடுதலைப் புலிகளின் படைபலம் குறித்து சரியாக தெரியவில்லை. ஆனால் சுமார் 25,000 பேர் இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் சிங்கள அரசாங்கம் தினசரி வெளியிட்டு வரும் விடுதலைப் புலிகளின் இழப்பு நிலவரத்தை கொண்டு கணக்கிட்டால் தற்பொழுது விடுதலைப் புலிகளின் பலம் வெறும் "0" தான்.[தொடரும்]


அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வலை ஏற்றப்படும்.

25 comments:

Anonymous said...
November 10, 2008 at 3:43 AM  

//இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த நேரத்திலே இரண்டாம்நிலைத்தலைவர்களான தாஸ்-பொபி பிரச்சனையிலே, தாஸ் பொபியினாலே யாழ் வைத்தியசாலையுள்ளே வைத்துக் கொல்லப்பட்டார்// it happened before IPKF (innocent people killing force) Era

தங்க முகுந்தன் said...
November 10, 2008 at 7:18 AM  

தங்களின் இந்தக் கட்டரையில் ஒரு தவறு இருக்கிறது 1983 ல் குட்டிமணி தங்கத்துரை போன்றோர் இராணுவத்தினரால் கொல்லப்படவில்லை. சிங்களக் கைதிகளால் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர் சுமார் 53 அரசியல் தமிழ்க் கைதிகள் இச்சம்பவத்தில் மிகமோசமாகக் கொல்லப்பட்டனர்.

மோகன் கந்தசாமி said...
November 10, 2008 at 7:58 AM  

ஜ்யோவ்ராம் சுந்தர் has left a new comment on your post "தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2":

முக்கியமான பணி. சரியான நேரத்தில் வந்திருக்கிறது. உங்களுக்கும் தமிழ் சசிக்கும் நன்றிகள்.

Anonymous said...
November 10, 2008 at 8:37 AM  

முதல் பகுதியில் இருந்த நடுநிலைமை, நேர்மை இதில் மிஸ்ஸிங். அதற்கு காரணம் அனிதா பிரதாப் போலவே சசி அவர்களுக்கும் இருக்கும் பிரபாகரன் மீதான அதீத ***..

ஒரு உதாரணம்

// இதன் சில பிரிவுகள் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை சிங்கள அரசின் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றன//

ஒரு வேளை சசி அவர்களின் அகராதியில் ஜனநாயகத்துக்கு திரும்புபவர்களுக்கு இதுதான் பேர் போலும்.

சயந்தன் said...
November 10, 2008 at 9:48 AM  

ஆனால் சிங்கள அரசாங்கம் தினசரி வெளியிட்டு வரும் விடுதலைப் புலிகளின் இழப்பு நிலவரத்தை கொண்டு கணக்கிட்டால் தற்பொழுது விடுதலைப் புலிகளின் பலம் வெறும் "0" தான்.//

தவறான தகவல்.

சிங்கள அரசாங்கம் தினசரி வெளியிட்டு வரும் விடுதலைப் புலிகளின் இழப்பு நிலவரத்தை கொண்டு கணக்கிட்டால் தற்பொழுது விடுதலைப் புலிகளின் பலம் மைனஸ் (-) 20 000 என்பதுதான் சரியான தகவல்.

எச்சூச்மி - ஜனநாயனத்திற்கு திரும்புறது என்றால் என்ன ?

Anonymous said...
November 10, 2008 at 10:23 AM  

தமிழ்சசி வழமையான புலிபுராணம் பாட களம் அமைத்து கொடுத்தற்க்கு நன்றி அய்யா !!

இயக்கத்தில் இருந்து கருணா மாத்தையா பிரித்தற்க்கு இந்தியா காரணமாம்? காதில் பூ சுற்றி கொண்டு இருக்கும் யாரிடமும் அதை சொல்லி கொல்லட்டும். இவர் சொல்வதற்க்கு ஆதாரம் உண்டா?


அமிர்தலிங்கம், நீலம் திருசெல்வம், சபாரத்தினம், உமாமகேசுவரன் ,மாத்தையா போன்ற என்னறவர்களை கொன்றதற்க்கு இந்தியா காரணமா?

கரும்பு தோட்டத்தில் கை கால்கள் கட்டபட்ட நிலையில் உமாவை கிட்டு என்ற விருந்தாளிக்கு பிறந்தவன் கொன்றதை மறக்க முடியுமா?

கிட்டு அந்த செயலுக்கு நல்ல பாடம் கற்றான். கால்கள் இழந்து பின் கொட்டம் அடங்காமல் இருந்தவனை பிரித்தானியா அரசு அங்கு வாழ் தமிழர்களை பணம் கேட்டு மிரட்டிய காரணத்தால் நாடு கடத்தியது. பின் நட்டநடு கடலில் இந்திய அரசால் அநாதை பிணம் ஆகி போனான் கிட்டு.

பாசிச புலிகளுக்கு நியாயம் கற்பிக்கும் தமிழ் சசியே புலிகள் பால் சரியென்று வைத்து கொள்வோம். பிரபாகரன் மட்டுமே உண்மையானவன் மற்ற அனைவரும் துரோகிகள் என்று சொல்வதில் என்ன உண்மை?

ஒருவரா இருவரா அந்த பிரபாகரனால் கொல்லபட்டவர்கள்?

இன்று வரை ஈழம் என்பது கனவாக புலம் பெயர்ந்த மக்களின் பணத்தை பறிக்கும் போராட்டமே தற்போதைய ஈழ போராட்டம்.

Anonymous said...
November 10, 2008 at 10:41 AM  

/ஜனநாயகத்துக்கு திரும்புபவர்களுக்கு இதுதான் பேர் போலும்./

ஆவ்!

உமாமகேசுவரனைக் கொன்றது உங்க ஆத்தாவா, அக்காவா மிஸ்டர். அநாமதேயம்?

கொழுவி said...
November 10, 2008 at 10:55 AM  

உமாமகேசுவரனைக் கொன்றது உங்க ஆத்தாவா, அக்காவா மிஸ்டர். அநாமதேயம்?//

யோவ்.. அது ஜனநாயகத்திற்கு திரும்ப முதல் செய்தது.
ஜனநாயகத்திற்கு திரும்பியவுடன் அனைத்து பாவங்களும் கழுவப் பட்டு விடும் என்று உங்களுக்குத் தெரியாதா?

கிட்டத்தட்ட பாவமன்னிப்பு கேட்கும் இடம் போன்றதுதான் ஜனநாயகம்.

ஜனநாயகத்தின் பவர் விளங்குகிறதா?

Anonymous said...
November 10, 2008 at 10:59 AM  

/ஜனநாயகத்தின் பவர் விளங்குகிறதா?/

அத்துதான் வெலாவாரியா குடும்ப அரிசியியல்ன்னு பாரததேசமெங்கும் தேள் கொட்டுத்தே.சூப்பர்

Anonymous said...
November 10, 2008 at 11:03 AM  

//கிட்டத்தட்ட பாவமன்னிப்பு கேட்கும் இடம் போன்றதுதான் ஜனநாயகம்.

ஜனநாயகத்தின் பவர் விளங்குகிறதா?//

அப்படியே வைத்து கொள்வோம். மன நிலை தவறிய பிரபாகரன் தான் செய்த் கொலைகளுக்கு பாவ மன்னிப்பு கிடைக்காது என்றே ஒரே காரணத்தினால் தான் இன்னமும் சர்வாதிகார வேட்டையில் உள்ளார் போலும்

Anonymous said...
November 10, 2008 at 11:03 AM  

கொழுவி அநாவசியமா குரோசா குரஸ் பயருக்குள்ளை மாட்டுறீர். தள்ளியிரும் தம்பி. உந்தப் புண்ணாக்குப்புடுங்கியளுக்கு உமாமகேஸ்வரனை ஆர் கொண்டதெண்டும் தெரியாது உமாமகேஸ்வரனுக்கு ஆர் கொடுத்தததெண்டும் தெரியாது. சும்மா வெட்டி ஒட்டுறதுதான் வேலை. டக்ளஸ் சனநாயகத்துக்கு என்ன வெள்ளை வானிலையே திரும்பினவர்.

இதுக்குள்ளை உந்தச்சின்னப்பொடி தங்கமுகுந்தன். கொண்டா கூட்டணியை எண்டு சிணுங்கிக்கொண்டு. ராசா உமக்கென்ன ஒரு கவுன்சிலர் போஸ்ற் கூட்டணி பேரிலை போல் சத்தியநாதனுக்குக் கதிரை துடைக்கத் தந்தால் சற்றே விலகிக்கிடப்பீரோ?

Anonymous said...
November 10, 2008 at 11:11 AM  

மனநிலை தவறிய ஜெஜெ, சோ, சுசுவாமி, காமெடியன் தங்கபாலு இவுங்களல்லாம் சூப்பர்ன்னு சொல்ற ஜனநாய்கவாதிகளோட மனநிலைய நெனைச்சா பயம்மாருக்குதபா. தமிழ்நாட்டு தேசியவெயாதிங்களுக்கு ஜனநாய்கடிச்சுதுப்பா. ஜனநாய் கடிச்சுதுன்னு டாக்டர் மன்மோகன் கிட்ட போனோமா, அவருக்கும் அதே ஜன்னிநாய்கடிச்சுட்டுதாம்பா. ஜனநாய் கடிச்சுதுன்னு டாக்டர் மன்மோகன் கிட்ட போனோமா, அவருக்கும் அதே ஜன்னிநாய்கடிச்சுட்டுதாம்பான்னு டாக்டர் கலாம்கிட்ட போனோமா, அவரு ஆர் எஸ் எஸுக்கு சலாம்ன்னு ஜனநாய்கம்மா கட்சாருப்பா.

தமிழ் சசி | Tamil SASI said...
November 10, 2008 at 11:38 AM  

Just a clarification
I am not justifying any Killings or Assasinations
I am only Saying it was triggered by the intelligence agencies and Tamil Organizations fell into that trap including LTTE by killing fellow Tamils

நசரேயன் said...
November 10, 2008 at 11:39 AM  

என்ன ஒரு ஆழமான தகவல் நிறைந்த பேட்டி, வாழ்த்துக்கள் மோகன்

Anonymous said...
November 10, 2008 at 12:30 PM  

தங்கமுகுந்தன் என்பவர் ஆனந்த சங்கரியின் அல்லக்கை. இவருக்கு வேறை வேலை இல்லை.,

மோகன் கந்தசாமி said...
November 10, 2008 at 12:43 PM  

ஜ்யோவ்ராம் சுந்தர் has left a new comment on your post "தமிழீழம்: தமிழ் சசி -யின் பேட்டி, பகுதி - 2":

முக்கியமான பணி. சரியான நேரத்தில் வந்திருக்கிறது. உங்களுக்கும் தமிழ் சசிக்கும் நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
November 10, 2008 at 12:44 PM  

நண்பர் சுந்தர்,

பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதில் இருந்த சிக்கல் காரணமாக பதிவை அழித்து மீதும் பதிவிட வேண்டியிருந்தது. எனவே, கூடவே அழிந்த உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் இட்டுள்ளேன்.

நன்றி

Anonymous said...
November 10, 2008 at 1:31 PM  

//டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை சிங்கள அரசின் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றன.//
பிரபாகரனின் புலிப்படை மாதிரி தமிழர்களின் அழிவுக்கு அவர்கள் காரணமாக இருக்கவில்லை. தமிழர்கள் பணத்தை அவர்கள் பறிக்கவும் இல்லை. தமிழர்கள் வாழ உதவி செய்கிறார்கள்.

Anonymous said...
November 10, 2008 at 2:16 PM  

/டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கவில்லை. தமிழர்கள் பணத்தை அவர்கள் பறிக்கவும் இல்லை. தமிழர்கள் வாழ உதவி செய்கிறார்கள்./

ஏன்னா தினமலர், இந்து, துக்ளக் அப்பாலேயும் படியுங்கோன்னா. பூஷணிகாயை தயிர்சாதத்துள்ளே எப்படின்னா அப்படியே பொதைக்கிறேள்?

Anonymous said...
November 10, 2008 at 2:26 PM  

அத்திம்பேர் அநாமதேயம் மகேஸ்வரன் எம்பியை கொன்னது யாருவேய்? தினக்குரல் அற்புதனைக் கொன்றது யாருவேய்? திண்ணைல அதெல்லாம் சீட்டாடிக் கெடக்கட்டும். இப்போ வன்னியிலே குண்டு போடவே இல்லேன்னு கோடம்பாக்கத்துல நம்மவாக்கு லெட்டர் போடரானே இந்த டக்ளஸ் அம்பி. அதவிட தமிழ்மக்களுக்கு என்ன கொடுமை இவனும் ஆனந்தசங்கரி மாமாவும் செய்யமுடியுமின்னேன்.

ஏன்னா விடுதலைப்புலி ஒத்துமை இல்லைன்னு சொல்றேளே. நம்ம மாதிரி வடகலை தென்கலை கோத்திரமுன்னு சாஸ்திரபடி காஸ்ட் கிளாஸ் செக்ஷன் இல்லாமத்தான் இருக்கட்டும். எதுக்கு ஈபிஆர்எல்லெப்பு டக்ளஸு தேவானந்தமிர்தமும் எம்பெருமான் வரதராட்ஷஸபெருமாளும் ஒன்னா ஒன்னுக்கடிக்காம ரெண்டா நின்னு அடிபடுறாள்? கேட்டு ஸொன்னீங்கன்னா விஷேஷமா இருக்குமேன்னா?

Anonymous said...
November 10, 2008 at 4:01 PM  

//Anonymous said... November 10, 2008 1:31 PM
//டக்ளஸ் தேவானந்தாவின் EPDP போன்றவை சிங்கள அரசின் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றன.//
பிரபாகரனின் புலிப்படை மாதிரி தமிழர்களின் அழிவுக்கு அவர்கள் காரணமாக இருக்கவில்லை. தமிழர்கள் பணத்தை அவர்கள் பறிக்கவும் இல்லை. தமிழர்கள் வாழ உதவி செய்கிறார்கள்.
//

எடங்கொய்யால டக்கிநாய் வெள்ள வானிலா வந்தா தமிழர்களுக்கு உதவி செய்யிறான்.

Anonymous said...
November 11, 2008 at 1:26 AM  

மிகமிக மேலோட்டமான அறிமுகக் கட்டுரை. ஒரு முக்கிய விடயத்தை மறந்து எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. புலிகளுக்கும் மற்ற இயக்கங்களுக்கும் அன்று ஒரு பெரிய வேறுபாடு உண்டு என்று சொல்லப்பட்டது சம்பந்தமான ஒரு விடயம்! அதுதாங்க "இடதுசாரி" விசயம். புலிகள் எந்தச்சாரிக்குள்ளும் சிக்காமல் இந்த மோதலை சிங்கள தமிழ் மோதலாக சரியாக கணித்தது. அதே சமயம் பெரியார் போன்று சாணக்கியத்தனமற்று துப்பாக்கிமுனை வெற்றிகளாலேயே மாற்றுக்கருத்துக்காரர்களை, மரணமடையச் செய்துவிட்டால் தமிழர்களின் ஏக நாயகர்களாகிவிடலாம் என்று வரட்டுத்தனமான கொள்கைத் தவறை கையிலெடுத்தது.. என்று இப்போராட்டத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும் எடுப்பார் கைப்பிள்ளைகள் ஆக அவர்கள் என்றுமே இருந்ததில்லை என்பதை திம்பு முதல் இன்றுவரை யாரும் மறக்கவோ மறுக்கவோ இயலாது. மற்றபடி புலிப்போராட்டத்தில் அதன் வெற்றிகளில் கருணாவின் பங்கு மிகமிக குறிப்பிடத்தக்கது என்பது கடந்தகால உண்மை. இன்று அவர் ராஜபக்சேவிடம் சரணாகதி அடைந்திருப்பதற்கும் புலிகளின் பய அரசியலும் ஒரு காரணம். நாசூக்காக கையாளப்படவேண்டிய விசயங்களை கடுமையாக கையாண்ட தவறை புலிகள் அடிக்கடி செய்துவந்தார்கள். நேற்றுவரை அவர்கள் மற்றவர்கள் மீது பிரயோகித்த ஆயுதம் இன்று அவர்களுக்கே பிரச்சினை ஏற்படுத்திவிட்டது எனலாம்!

அன்புடன்
ஓசை செல்லா

மு. மயூரன் said...
November 11, 2008 at 2:48 AM  

சர்ச்சைக்குரிய கருத்தாக பின்னூட்டமிடுபவர்களால் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரிகளை தமிழ் சசியின் அனுமதியோடு பேட்டியில் highlight பண்ணிக்காட்டுவது பயன்படும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...
November 11, 2008 at 2:49 AM  

Origins

PLOTE was founded in 1980 by an ex-surveyor Uma Maheswaran alias Mukundan, who became its general secretary. He was the chairman of the Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers or LTTE) from 1977–1980. He was trained in Lebanon and later in Syria under the Palestinian nationalist Popular Front for the Liberation of Palestine. After a bitter rivalry with Velupillai Prabhakaran, Uma Maheswaran left the LTTE in 1980 and formed PLOTE.

International cooperation

PLOTE was active in cultivating international connections: it established links with the Popular Front for the Liberation of Palestine (PFLP) under George Habash, the Tunisian Communist Party, the Democratic and Social Movement communist party of Algeria, the Turkish Organisation for Solidarity with Palestine, the African National Congress, the Farabundo Martí National Liberation Front of El Salvador, the Sandinistas of Nicaragua, and the ruling Mauritian Militant Movement in Mauritius and Communist Party in Cuba.[citation needed] These links were later picked up by the LTTE.

Coup in Maldives

In late 1988, a coup to overthrow the Maumoon Abdul Gayoom's government in Maldives with the help of mercenaries from PLO was foiled by Sri Lanka and India.[1]

The People's Liberation Organization was reported to have been offered at least $1 million - some estimates run as high as $10 million. Officials said they were not certain whether money was the only reward the guerrillas were to get for their part in the coup. There have been suggestions that the Tamils may have been promised one of the small Maldivian islands as a base, possibly for narcotics smuggling.

LTTE vs PLOTE

On May 19, 1982, a shootout occurred at about 9:45 p.m. at Pondy Bazaar, Mambalam, Madras between LTTE and PLOTE members. V. Prabhakaran and Raghavan (alias Sivakumar) of the LTTE, armed with revolvers, opened fire on Jotheeswaran and Mukundan (alias Uma Maheswaran) of the PLOTE. In the mid-1970s, both Prabhakaran and Uma Maheswaran were members of the LTTE. During the gunfire, Jotheeswaran sustained bullet injuries both in his right and left thighs. Mukundan was also shot at but escaped unhurt. The accused V. Pirabhakaran and Sivakumar were arrested and remanded. Both of them were proclaimed offenders of the Sri Lankan government with a reward on their head of Rs. 5 lakhs each.

On May 25, 1982, Uma Maheswaran was arrested near Gummidipoondi railway station. At the time of arrest, he opened fire with his revolver and another case was registered against him under the Indian Arms Act.

In the meantime, on May 23, 1982 Sivaneswaran (alias Niranjan), an accomplice of Mukundan, was also arrested at Saidapet, Madras and an unlicensed revolver seized from him. All these accused remained in custody until August 5, 1982 when they were released by the orders of the court on conditional bail. The LTTE cadres including their leader V.Pirabhakaran had taken up residence at Mylapore Madras, while the leaders and members of the PLOTE had been staying at Saidapet, Madras.

Anonymous said...
November 11, 2008 at 8:30 AM  

பிரபாகரனின் புலிப்படை மாதிரி தமிழர்களின் அழிவுக்கு அவர்கள் காரணமாக இருக்கவில்லை. தமிழர்கள் பணத்தை அவர்கள் பறிக்கவும் இல்லை. தமிழர்கள் வாழ உதவி செய்கிறார்கள்.//

அவர்கள் செய்யும் உதவிகளை பார்ப்போமா ?

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் 13 அகவையுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் துணைப்படை ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஆயுதம் தரித்த நால்வர் அடங்கிய குழுவினர் சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பதாக அவருடன் கூடச்சென்ற ஏனைய சிறுமிகள் தெரிவித்தனர்.

கொழும்பு புனித மரியாள் பாடசாலையில் கல்வி கற்கும் இவரை, கப்பம் பெறும் நோக்குடன் துணைப்படை ஆயுதக் குழு உறுப்பினர்கள் கடத்தியிருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

E.P.D.P என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தகரான இவரது தந்தையிடம் பலமுறை கப்பம் கேட்டு மிரட்டியதாகவும், பல இலட்சம் ரூபாய்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் கப்பம் கேட்டு மிரட்டியதாகவும், கொடுக்க மறுத்த நிலையில் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர் கூறியதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி கொழும்பில் தங்கியுள்ள வர்த்தகர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்களை மீண்டும்
மூன்று இலடம்சம் ரூபாய்களை கப்பமாகத் தருமாறு கேட்டு, துணைப்படை E.P.D.P ஆயுதக் குழுவினர் மிரட்டி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

//
இன்னொரு உதவியை பார்ப்போமா?
ஈ.பி.டி.பி குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் சமூக சேவைகள் அமைச்சின் ஊடாக, கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கப்படுவதற்கென்று யாழ்ப்பாணம் எடுத்து வந்த 750 தையல் மெசின்களை ஈ.பி.டி.பியினர் யாழில் தனியார் கடை ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு சிறிலங்கா படையினரால் பொருட்கள் சூரையாடப்பட்டுள்ளன.//


ஐய்யோ ஐய்யோ
ஜனநாய்அகம் வாழ்க வாழ்க வாழியவே:)கிடங்கு