Showing posts with label அடாவடி. Show all posts
Showing posts with label அடாவடி. Show all posts

Monday, April 27, 2009

கருணாநிதி - ஓரங்க நாடகம்

· 16 comments

அண்ணா சமாதியில் தலைவர் தலுக்காக அமர்ந்து விட, விஷயம் தெரிந்ததும் ஸ்டாலின் பதைபதைத்துப் போய் கோபாலபுரத்திற்கு தொலைபேசுகிறார்.

ஸ்டாலின்: அம்மா! அம்மா! ஐயய்யோ! இவரு திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரும்மா!!!

தயாளு: என்னாச்சுப்பா! யாரு ஆரம்பிச்சிட்டா!

ஸ்டாலின்: அப்பாதான்மா!! அவருக்கு நீயே கால் போட்டு பேசு! நான் பண்ணா எடுக்க மாட்டேங்கிறார்!!!

(கருணாநிதியின் செல் போனுக்கு தயாளு டயல் செய்கிறார்)

கருணாநிதி: அதெல்லாம் நிறுத்த முடியாது. சாயந்தரம் வரை... ச்சே சாகும் வரை உண்ணா விரதம்தான்...

தயாளு: ஐயோ! நாந்தாங்க பேசுறேன். என்ன இதெல்லாம்?!!

கருணாநிதி: அட நீயா!! நான் டெல்லி காலுக்கு வெயிட் பண்ணறேன், உன்கிட்ட அப்புறம் பேசறேன், போன வை..

தயாளு: என்னமோ போங்கோ! மதியத்துக்குள்ள டிவியில சீரியல் வந்துடனும், சொல்லிட்டேன், ஆமா!

ராமநாதன்: அய்யா! டெல்லியிலருந்து கால்...

கருணாநிதி: ரொம்ப நன்றி சோனியாஜி! என் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிப்பளித்து போரை நிறுத்தியதற்கு நன்றி. "மேரா பாரத் மாக்கான், ஜெய் ஹிந்த்!!!"

சோனியாஜி: இருங்க அவசரப் படாதிங்க! முந்தாநாள் ஒத்துகிட்டவர் இப்ப முரண்டு பிடிக்கிறார் ராஜ பக்சே!... நாங்கதான் உண்ணாவிரதத்திற்கு டைம் சொல்றோம்னு சொன்னோமே! அதுக்குள்ள ஏன் திடீர்னு ஆரம்பிச்சிங்க!

கருணாநிதி: ஏதோ தெரியாம ஆரம்பிச்சிட்டேன்... அம்மா தாயே நீங்கதான் காப்பாத்தனும்!!

சோனியா: உங்களோட ஒரே ரோதனையா போச்சு! நீங்க என்னடான்னா இங்க உண்ணாவிரதம் இருந்து உசுர வாங்குறீங்க! அவர் சீனாவில போய் உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்டுறாரு! கடைசீல என் கூந்தல முடிய பிரபாகரன் ரத்தம் இல்லாமலே போய்டும் போல இருக்கே!

கருணாநிதி: நீங்க எதுக்கு ஜெயலலிதாவுக்கு நம்ம பிளானை கசிய விட்டீங்க? அதுனாலதான் நான் அவசர அவசரமா....

சோனியா: நான் எங்க கசிய விட்டேன், ரா -வில் இருக்கிற ஜெ விசுவாசி எவனோ இந்த வேலையை செஞ்சிருக்கான்.

கருணாநிதி: அதெல்லாம் இருக்கட்டும், நாங்க என்ன போர் நிறுத்தமா கேட்டோம், போர் நிறுத்தம்னு அறிக்கைதான கேட்டோம், அதுகூட ராஜபக்சேவால் முடியாதாமா? தமிழனை என்ன கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டாரா

சோனியா: சரி.. சரி.. எல்லாரும் சேர்ந்து பிளானையே குழப்பிட்டீங்க! இனிமேலாவது ஒத்திகைப்படி நடந்துக்குங்க! "போர் நிறுத்தம் பெற்றாயிற்று, உண்ணாவிரதம் வாபஸ்" -னு தங்கபாலுவை கூப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிங்க! அதுக்குள்ள நாங்க கொழும்புக்கு கால் போட்டு பாக்கறோம்!

(10 ஜன்பத் ரோடு, டெல்லி - இத்தாலி மொழியில் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சோனியா திட்ட, மன்மோகன் சிங் அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் கொழும்புக்கு கால் செய்கிறார்)

சிங்: ஹலோ!

பக்சே: ம்ம்... இப்ப என்ன!

சிங்: टाइटलर मामले में ठुकरा दी थी अधिकारियों की राय

பக்சே: No

சிங்: मनमोहन पर जूता फेंकने का प्रयास

பக்சே: No

சிங்: जूता फेंकने वाले को मनमोहन ने किया माफ

பக்சே: No

சிங்: अच्छा चुनावी शिगूफा है काले धन का मुद्दा

பக்சே: No

சிங்: सद्दाम के नक्शेकदम पर मायावती

பக்சே: මේ සුනාමියේ සුන්බුන් මතින් නැගිටි අධිෂ්ඨානයේ කතාව කියා පාන තවත් සංකේතයකි. සුනාමියෙන් පානදුරයට කළ ලොකුම විපත වුයේ සුමංගල විද්‍යාලයට වූ හානියයි. පානදුරේ ශ‍්‍රී සුමංගල විද්‍යාලය නැවත ගොඩනඟා දීමට ඒ අතර ජපන් රජය ඉදිරිපත් විය. එහෙත් ඔවුන් කියා සිටියේ සුනාමි අනතුරු කලාපයෙන් පිටත භූමියක මේ විදුහල ගොඩනඟන්නේ නම් පමණක් ඒ සඳහා රුපියල් ලක්ෂ 5000ක මුදලක් ප‍්‍රදානය කිරීමට කැමැති බවයි.

சிங்: (எலேய்! இத்தாலியில் திட்டு வாங்கறது பத்தாதுன்னு சிங்களத்திலையும் நான் திட்டு வாங்கனுமாடா?) ரொம்ப நன்றி ஜி, நாங்க இங்க "போர் நிறுத்தம்" -னு அறிவிச்சிடறோம். எப்பவும்போல அங்க உங்க வேலைய அறிக்கையில காட்டுங்க! (உங்கள எவன் கேட்க முடியும்?) அடுத்த வாட்டி 'வென் ஜியாபோ' வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க!!!

(எல்லாம் இனிதே முடிந்ததாக எல்லோரும் அவரவர் இடங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்)

சோனியா: எப்பா! எவ்ளோ இம்சை இந்தாளு கூட! எலக்சன் முடிஞ்சதும் இந்தாள முதல்ல வீட்டுக்கு அனுப்பனும்!

சிங்: ஏம்பா செக்ரட்டரி, மொழி பெயர்க்கச்சொல்லி ஒரு சிங்கள டெக்ஸ்ட் கொடுத்தேனே, என்னாப்பா ஆச்சு!!!

கருணாநிதி: ராம நாதா!! அந்த கெட்டி சட்னி எடுத்துட்டுவா!

தயாளு: நல்லவேளை, சீரியல் மிஸ்ஸாகல!!

உடன்பிறப்பு: தலைவா! உங்க கூட சேர்ந்து மத்தியானம் வரை கொலை பட்னி இருந்தோமே! எங்கே தலைவா எங்கள் பிரியாணி??

(எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரத்திற்கு ஒரு கால் வருகிறது)

சிபிசிஐடி: சார், இங்க ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் "ராஜ பக்சேவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டுவருவேன்" -அப்படின்னு முழங்கறாங்க சார்!!!

கருணாநிதி: அய்யய்யோ! டேய் ராமனாதா சீக்கிரம் ஓடிவா, பத்திரிக்கைகளுக்கு அறிக்கை தயார் பண்ணு, "ஈழத்தமிழருக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம்னு" அறிக்கை கொடு. (நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுங்க போலருக்கே!!!)

Read More......

Tuesday, March 10, 2009

தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருணாநிதி கைது!

· 29 comments

சென்னை: 12 மார்ச், 3011: தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வருணாநிதி இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்ததற்காகவும், தமிழுணர்வாளர்களை ஒடுக்கியதற்காகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் குற்றவாளிக்கு அவர் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் மன்ற குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அவ்வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணாநிதி: மக்கள் மன்றம்..., விச்சித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. மோசமான அரசியல்வாதிகளை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் அவ்வளவு மோசமான அரசியல்வாதியும் அல்ல. தமிழக அரசியலிலே, சர்வசாதாரணமாக தென்படக்கூடிய அரசியல் வியாதிகளிலே நானும் ஒருவன். ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்தேன். தமிழுணர்வாளர்களை ஒடுக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. ஈழ ஆதரவிலே குழப்பம் விளைவித்தேன். ஆதரவு கூடாது என்பதற்காக அல்ல. திமுக அரசு கவிழக்கூடாது என்பதற்காக. தமிழுனர்வாளர்களை ஒடுக்கினேன். அவர்கள் உண்மைத்தமிழர்கள் என்பதற்காக அல்ல. தமிழுணர்வு கிளர்ந்து அது காங்கிரஸ்காரன் டவுசரை கிழிக்கக்கூடாது என்பதற்காக.

(அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வருணாநிதியிடம் ஏதோ சொல்ல முனைகிறார்.)

வருணாநிதி: உனக்கேன் இவ்வளவு அக்கறை. காங்கிரஸ்காரனுக்கே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே என் குடும்ப நலமும் கலந்திருக்கிறது. கட்சிக்காக தங்கள் குடும்பத்தை மறந்து கட்சி நலனே கதி என்று கிடக்கிறார்களே உண்மைத்தொண்டர்கள், அவர்களைபோல் அல்ல.

இதற்கே இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே, இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையிலே சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் அவன் நடத்தி வந்துள்ள நாடகங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். எளிதாக கரவொலியை பெற்றதில்லை நான். அரிதாரம் பூசி நடிக்க வேண்டியிருந்தது. எளிதாக ஓட்டுகளை பெற்றதில்லை நான். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டியிருந்தது. கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழகத்திலே, திருக்குவலையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். ஊரை ஏய்த்து சொத்து சேர்க்க இன்னொரு ஊர். தமிழக அரசியலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சென்னை...! கட்சியை எனக்கு தாரைவார்த்தது. காங்கிரஸ் கூட்டணியை தந்தது. இன்று கூட்டணிக்கு ஆளாய் பறக்கிறாளே என் தங்கை 'சாணி'யா அவளை ஜெயிக்க வைக்க மீண்டும் மக்களிடம் ஓடோடி வந்தேன். மோசடி அரசியல் அரசியல் செய்து ஓட்டு பொறுக்குகிறாளே, இதோ இந்த ஜாலக்காரி பயலலிதா, இவளது அரசியல் சதிவலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஓட்டு வங்கியை பறிகொடுத்தேன், ஆட்சியை இழந்தேன், கடைசியில் பதவிப் பைத்தியமாக மாறினேன். கூட்டணிக்கு வந்த தங்கையை சந்தித்தேன். பல் பிடுங்கிய பாம்பாக. ஆம். பொக்கையாக!

தங்கையின் பெயரோ 'சாணி'யா! டெரரான பெயர். கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கண்ணிலோ பழியுணர்வு, கையிலே தமிழன் ரத்தம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அலைந்தாள், அவளுக்காக நான் அலைந்தேன். அவளுக்கு கூட்டணி ஆசை காட்டினர் பலர். அவர்களில் பேராசை பிடித்த சிலர் கைமாறாக அதிக இடங்கள் கேட்டனர். பம்மாத்து அரசியல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறானே இந்த கொடியவன் விஜயகோந்து, ஐஸ் வைத்து மடக்கமுயன்றான் என் தங்கையை. நான் மட்டும் தடுத்திராவிட்டால் அவள் அப்போதே அவனுடன் கூட்டணியை அறிவித்திருப்பாள். அவளது பதிவிரதம் பற்றி கேள்வி எழுப்பியவர்களும் கூட்டணிக்காக வந்தனர், தீவிரவாதத்தின் பெயரால், இந்திய தேசியத்தின் பெயரால். பிரதியுபகாரமாக என்னை கூட்டணியிலிருந்து கழட்டி விடச்சொன்னார்கள். மாநில அளவில் பிரச்சனை செய்தாலும் டெல்லியிலாவது என்னுடன் அனுசரணையாக இருந்திருப்பார்கள் காங்கிரசார். அவர்களை தூண்டிவிட்டது பயலலிதாதான்.

நிம்மதியிழந்த என்தங்கை அரசியலைவிட்டே செல்ல முடிவெடுத்தாள். காங்கிரசை செல்வாக்கற்ற தமிழ்நாட்டிலே அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. அவளே அழித்து முடித்து விட்டாள். சொந்த கட்சியையே அழிக்க முயல்வது ஒன்றும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அகிம்சா மூர்த்தி, ஜீவ காருண்ய சீலர், அவரே சுதந்திரத்திற்குபின் காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதத்தான் 'சாணி'யாவும் செய்து கொண்டிருக்கிறாள். அது எப்படி குற்றமாகும்?

கூட்டணிக்காக பாமக விரட்டியது, பயந்தோடினாள்; தேமுதிக துரத்தியது, மீண்டும் ஓடினாள்; அதிமுக என் தங்கையை பயமுறுத்தியது; ஓடினாள், ஓடினாள், அறிவாலயத்தின் குட்டிச்சுவர் வரை ஓடினாள். திமுகவிற்கு வேறு நாதியில்லாததால் கூட்டணியை தொடர்ந்தாள்.

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

வருணாநிதி: இல்லை அதுவும் என் வழக்குதான். காங்கிரஸ் இலங்கைக்கு ஆயுதம் தந்தது ஒரு குற்றம், ஈழ ஆதரவில் நான் குழப்பம் விளைவித்தது ஒரு குற்றம், தமிழுனர்வாளர்களை ஒடுக்கியது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார், யார் காரணம்? அப்பாவிகள் ஈழத்திலே சாகிறார்களே, அது யார் குற்றம்? எங்களின் குற்றமா? அல்லது எங்கள் மீது அபரிதமான நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்களே, அவர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர்த்தது யார் குற்றம்? குடும்பத்துக்கு ஒருபவுன் வாங்கும் வாக்காளர்கள் குற்றமா? அல்லது வாக்குகளை வாங்கி குடும்பத்துக்கு பதவிகள் தரும் எங்களின் குற்றமா? இந்த அரசியல் பெருச்சாளிகள் களையப்படும்வரை ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் படும் துயர் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் அரசியல் வரலாற்றில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் சுயநலம், சூழ்ச்சி, அக்கிரமம் நிறைந்த அரசியல் தத்துவம்.

நீதிபதி: உன்வாதம் பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் உன் மீது குற்றம் சாட்டி கூண்டிலேற்றினால், நீ எங்கள் மீதே குற்றம் சுமத்தக்கூடாது. எங்கள் பிட்டை எடுத்து எங்களுக்கே போடுவது டகால்டி வேலை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ உன்னை தமிழினத்தலைவர் என்று நீயே கூறிக்கொள்றாய் என்பது உண்மையா?

வருணாநிதி: என்னை தமிழினத்தலைவர் என்பது உங்களுக்கே வேடிக்கையாய் தெரியவில்லை!!?!

வழக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதிவரை ஒத்தி வைக்கப் படுகிறது.

Read More......

Thursday, March 5, 2009

ஜெ - சசி, ஓரங்க நாடகம்

· 45 comments


ஈழ(இலங்கை)த் தமிழருக்காக வரும் பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான உரையை முந்தைய நாள் இரவு வரை தயாரிக்காமல் இருந்தால் எவ்வாறு தவித்துப் போவார் என்று யோசித்து பார்த்ததில்...

சசி: யக்கா! என்னா இது, விளையாட்டா?

ஜெ: என்னடி சொல்ற?


சசி: உண்ணாவிரதம் -ன்னா என்னன்னு தெரியுமா? நீபாட்டுக்கு அறிக்கை உட்டிருக்க!


ஜெ: ஓ! அதுவா? உன்னாவிரதம்னா பொதுவிடத்துல போய் சாப்பிடாம ஒக்காந்திருக்கனுண்டி, அதுதான் உண்ணாவிரதம்!


சசி: செங்கோட்டையன் வேறமாதிரி சொல்ராருக்கா?


ஜெ: வெளங்காத வெண்ணை என்னா சொல்லுது?


சசி: பொதுவிடத்துல மட்டுமில்ல, மறைவாக்கூட சாப்பிடக் கூடாதாம்!


ஜெ: அதுக்கென்ன இப்ப, ஒருவேள சாப்பிடாம இருக்க மாட்டியா?


சசி: நான் இருப்பேன், நீங்க இருப்பீங்களா?


ஜெ: அதுக்கென்ன பண்றது, இருந்துதான் ஆகணும், சும்மா வருவாளா சுகுமாரி?


சசி: யாரு சுகுமாரி? அவ எதுக்கு இங்க வரணும்? அதுவும் சும்மா!, அதுதான் நான் இருக்கேனே! அவ வேற எதுக்கு?


ஜெ: இவ ஒருத்தி, கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி! நானே ஒரு பெரிய கவலையில இருக்கேன்! சும்மா நொய் நொய் -னு!


சசி: என்னக்கா கவலை? அதான் பட்டினி கிடக்கரத பத்தியே நீங்க கவலை படல! சோத்துக் கவலையைவிட பெரிய கவலை என்ன?


ஜெ: காலையில உண்ணாவிரத மேடையில என்ன பேசறதுன்னு தெரியலையே? அறிக்கை எழுதித் தர பசங்கள வேற மத்தியானமே துரத்தி உட்டாச்சி, இப்ப என்ன பண்றது?


சசி: விடுக்கா, நாமே ஏதாவது யோசிப்போம்.


ஜெ: என்ன நக்கலா?..., அதெல்லாம் வேலைக்காவது, எவனுக்காவது ஃபோன் பண்ணு! எவன் எடுத்தாலும் நாலு வரி சொல்லச் சொல்லி ஒரு பேப்பர்ல எழுதிக்கோ!


சசி: சரிக்கா!...


(யாருக்கோ ஃ போன் பண்ணுகிறார்)


சசி: யக்கா... காழியூர் நாராயணன் லைன்ல இருக்கார்... பேசுறியா?


ஜெ: நடு ராத்திரியில தூங்காம என்னா பண்ணுது அந்த இம்சை... சரி நீயே பேசு, அவன் சொல்றத எழுதிக்கோ!



எதிர் முனை: நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில்...


சசி: யோவ்... உண்ணாவிரத மேடையில பேசறத்துக்கு ஏதாவது சொல்லுய்யான்னா, பல்லு வெளக்க நல்லநேரம் பாக்க சொன்ன மாதிரி நீ பாட்டுக்கு அடிச்சு உடற...


எதிர்முனை: ஒ! அப்படியா? நீங்க சொல்லவே இல்லையே, சரி... எதுக்கு உண்ணாவிரதம்?, எத பத்தி பேசணும்?


சசி: ஒரு நிமிஷம் இரு!..., யக்கா எதுக்கு உண்ணாவிரதம் -னு கேட்கறார்?


ஜெ: கிழிஞ்சுது... அந்தாள ஃபோனை வச்சிட்டு போய் தூங்கச் சொல்லுடி... இருக்குற இம்சையில இவனுங்க வேற!,


சசி: யக்கா, யாரோ மோகன் கந்தசாமியாம், பிளாக் எல்லாம் எழுதறாராம், ஏதாவது உதவி வேணுமான்னு கேட்கறார்.


ஜெ: சரி, ஸ்பீக்கர் -ல போடு

ஸ்பீக்கர்: என்னமா நல்லாருக்கீங்களா? சாப்டிங்களா? உடம்ப பாத்துக்குங்க! ஆப்பரேசன் பண்ண உடம்பு, ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, எந்த உதவி வேனுன்னானும் ஃபோன் பண்ணுங்க, ஃபோன் பண்ண முடியலன்னா நம்ப நர்ஸ் சசி கிட்ட சொல்லுங்க, அவங்க எனக்கு போன் பண்ணி சொல்வாங்க, சரியா?...


சசி: யோவ்... என்னய்யா பேசுற நீ? நீ யாருகிட்ட பேசற தெரியுமா?


ஸ்பீக்கர்: தெரியுமே! எங்கம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, நீங்க நர்ஸ் சசி தானே?


ஜெ: டேய்! ஏண்டா இம்சை பண்றீங்க, ஃபோன வைடா!


ஸ்பீக்கர்: கவலைபடாதிங்கம்மா நான் இருக்கேன், நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன், சசி ஒழுங்கா பாத்துக்கலன்னா சொல்லுங்க வேற நர்ஸ அப்பாயிண்ட் பண்ணிடலாம், எனக்கு நீங்கதான் முக்கியம், அப்பறம்...


(சசி ஓடிவந்து ஸ்பீக்கரை கட் பண்ணுகிறார்)


ஜெ: யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...


சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?


ஜெ: வேணான்னா விடவா போற, சொல்லு!


சசி: பேசாம அறிவாலயத்துக்கே ஃபோன் பண்ணிடுவோமா?


ஜெ: சரி போடு, ஆனா பேசறது யாருன்னு சொல்லாத!


சசி: சரிக்கா...


(ஃபோன் செய்கிறார்)


சசி: ஹலோ, அறிவாலயமா?


எதிர்முனை: ஆமா, நீங்க யாரு? என்ன விஷயம்?


சசி: நாங்க அன்டார்ட்டிகா தமிழ்ச் சங்கத்தில் இருந்து பேசறோம், தலைவருக்கு பாராட்டு விழா நடத்தனும், டேட் கிடைக்குமா?


எதிர்முனை: நிச்சயமா கிடைக்கும், எங்க விழா நடத்தப் போறீங்க?


சசி: ஆர்ட்டிக் பெருங்கடல் நடுவுல மேடை போட்டுறலாம்...


எதிர்முனை: என்ன நக்கலா?... நடுக்கடல்ல வச்சா எப்படிங்க வரமுடியும்? கடற்கரையில வைங்க... கட்டவுட், சீரியல் லைட்டெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?


சசி: அது இருக்கட்டுங்க, விழா மலர்ல போடறத்துக்கு தலைவர் உரை வேணும், அதை வாங்கி கொடுங்க, முதல்ல அச்சடிச்சிடறோம், தலைவர் கையால வெளியிட்டிடலாம்...


எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?


சசி: டெம்ப்ளேட்டா?


எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...


சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...


எதிர்முனை: சொல்றேன் எழுதிக்குங்க...


"ஈழத்தில் தினம் தினம் செத்து மடியும் எம்குல கொழுந்துகளை காக்க என் இன்னுயிரையும் தருவேன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம்; கங்கை கொண்டான், கடாரம் வென்றான்...


சசி: (ரிசீவரில் கைவைத்து பொத்திய படி) யக்கா... மேட்டர் கெடைச்சிடுச்சி...நிம்மதியா போய் தூங்கு... நான் முழுசா எழுதி வைக்கிறேன், காலையில மனப்பாடம் பண்ணிக்கலாம்...


(தொடர்ந்து பேசச்சொல்லி சசிக்கு சைகை காட்டிவிட்டு பூனைபோல(?) நடந்து படுக்கைக்கு செல்கிறார் ஜெ)

Read More......

Monday, March 2, 2009

ஈலட்டமிளர் பிளாட்ஃபார்ம் -க்கு ஸ்கோப் என்ன?

· 14 comments


மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)


காட்சி 1:
அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.


அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!


காட்சி 2:
புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.

மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?

காட்சி 3:
தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!

அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்!

மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?


அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!


திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?

டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!

காட்சி 4:
வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...

சார், மே ஐ கமின்?

வாங்க தோழர், என்ன விஷயம்?

ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?

ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.

நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?

கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!

அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!

Read More......

Monday, January 26, 2009

கருணாநிதிக்கு "அல் பச்சீனோ" -வின் அறிவுரை

· 0 comments

கருணாநிதிக்கு "அல் பச்சீனோ" -வின் அறிவுரை.

ஹாலிவுட் நடிகர் அல் பச்சீனோ தொன்னூறுகளில் நடித்த ஒரு திரைப்படத்தில் நமது தற்போதைய தமிழக முதல்வருக்கு அறிவுரை கூறும் வகையில் வசனம் பேசியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுரை அப்படத்தின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு கூறுவதுபோல் அமைந்துள்ளது. எனினும், திமுக தலைவரை பற்றி நம்மைவிட ஒரு அமெரிக்க நடிகர் இவ்வளவு அழகாக அறிந்து வைத்துள்ளதும், முன்னுனர்ந்துள்ளதும் ஆச்சர்யமளிக்கிறது. அந்த வசனத்தை நம் வசனகர்த்தாவுக்கும், வலைப்பூ வாசகர்களுக்கும் மொழிபெயர்த்துள்ளேன்.

அந்த வசனம் "சென்ட் ஆப் எ உமன்" என்ற படத்தில் வருகிறது. ஒரு பள்ளி மாணவன், ஒரு குறும்புத்தனமான செய்கைக்காக குற்றம் சாட்டப்பட்ட தனது சக மாணவ நண்பர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல கோரப்படுகிறான். பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் தனது நண்பர்களை காட்டி கொடுக்க மறுக்கிறான். முதல்வரின் ஸ்காலர்ஷிப் என்ற ஆசை வார்த்தையும் அவன் மனதை அசைக்க வில்லை. அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கும் முடிவை குழுவுக்கு பரிந்துரைக்கிறார் பள்ளி முதல்வர். அதை எதிர்த்து அந்த மாணவனின் சார்பில் அல் பச்சீனோ பேசும் அந்த புகழ் பெற்ற வசனத்தில் நமது தமிழின தலைவருக்கும் சேர்த்து அறிவுரை கூறுகிறார்.

முதல்வர் - டிராஸ்க்
அல் பச்சீனோ - சிலேய்ட்
மாணவன் - சிம்ஸ் சார்லி.

முதல்வர்: திரு. சிம்ஸ், நீர் ஒரு நாடகக்காரர் மற்றும் பொய்யர்.

அல் பச்சீனோ: ஆனால், துரோகி இல்லை.

முதல்வர்: எக்ஸ் கியூஸ் மீ!

அல் பச்சீனோ: நோ. உங்களுக்கு தயவில்லை. இது ஒரு பீச்சட்டி வாதம்.

முதல்வர்: திரு. சிலேய்ட், உங்கள் வார்த்தையை அளந்து பேசுங்கள், நீங்கள் இருப்பது "பெயர்டு" பள்ளி. உங்கள் ராணுவ முகாம் இல்லை. திரு. சிம்ஸ், நீங்கள் பேச ஒரு இறுதி வாய்ப்பை தருகிறேன்.

அல் பச்சீனோ: திரு. சிம்ஸ் அதை விரும்பவில்லை. அவருக்கு எந்த பட்ட பெயரும் வேண்டாம். "பெயர்டு மாணவன்" -ஆக இருப்பதே போதும்.

என்ன கொடுமை இது? உங்கள் பள்ளியின் லட்சிய வாசகம் என்ன? "மாணவர்களே! உங்கள் நண்பர்களுக்கெல்லாம் தெரிவியுங்கள், உங்கள் உடம்புத் தோலை காப்பாற்றிக்கொள்ளுங்களென்று!, இல்லாவிட்டால் பொசுக்கி விடுவோம்" -இதுதானே நீங்கள் எச்சரிக்க விரும்புவது?

ரகசியம் வெளியாகி மலமாக நாறும்போது, சிலர் ஓட்டமெடுப்பார்கள், சிலர் எதிர்கொள்வார்கள். இங்கே சார்லி நெருப்பை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கே ஜார்ஜ் (மற்றொரு மாணவன்) அவனது அப்பாவின் சட்டைப் பைக்குள் ஒளிந்து கொள்கிறான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஜார்ஜை பாராட்டுகிறோம். சார்லியை அரற்டுகிறோம்.

முதல்வர்: பேசி முடித்துவிட்டீர்களா சிலேய்ட்?

அல் பச்சீனோ: இல்லை, இப்போதுதான் தொடங்கியுள்ளேன்.
இங்கு யாரெல்லாம் படித்தார்கள் என்று தெரியவில்லை!! வில்லியம் ஹோவார்ட் டார்ஃப்ட், வில்லியம் ஜென்னிங், வில்லியம் டேல்... இன்னும் யாராரோவெல்லாம் படித்திருக்கட்டும். அந்த துடிப்பு இப்போது போய்விட்டது. இங்கே நீங்கள் கட்டிவருவது எலிகள் அண்டிய கப்பலைத்தான். காட்டிகொடுக்கும் பெருச்சாளிகள் பயணிக்கும் கப்பல் தான் அது. இந்த பிள்ளைகளுக்கு மனிதத்தை கற்றுத்தருகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அந்த என்னத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பள்ளி போதிப்பதாக கூறிக்கொள்ளும் அந்த அதிமுக்கிய நீதியையே நீங்கள் கொல்லுகிறீர்கள். என்ன சிறுமை அய்யா இது? என்ன மாதிரியான நாடகத்தை இன்று நடத்துகிறீர்கள்? இந்த நாடகத்தின் ஒரே சோக பாத்திரம், இதோ என்னருகில் அமர்ந்திருக்கிறது. இந்த சிறுவனின் ஆண்மை ஒர்மமானது. சமரசத்தை ஏற்காது. எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? இங்கே ஒருவர் சார்லியை விலைக்கு வாங்க முயன்றார், அது யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சார்லி தன்னை விற்க மறுத்துவிட்டார்.

முதல்வர்: சார், நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்.

அல் பச்சீனோ: வரம்பு மீறலா? வரம்பு மீறலென்றால் என்ன வென்று உங்களுக்கு தெரியவில்லை மிஸ்டர் டிராஸ்க், அது என்னவென்று என்னால் காட்டமுடியும். ஆனால் எனக்கோ வயதாகிவிட்டது. ஓய்ந்துவிட்டேன். நான் இப்போது குருடன் வேறு. நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போதும் இருந்திருந்தால் இந்நேரம் இவ்விடத்தில் அனல் பறந்திருக்கும். இது வரம்பு மீறலாம்! யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர் தெரியுமா? எனக்கும் ஒருகாலத்தில் பார்வை இருந்தது. நானும் பார்த்திருக்கிறேன். இந்த சிறுவர்களைப் போல, இதைவிடவும் சிறிய பிள்ளைகள் சதைகள் தொங்க, தோள்கள் சாய்ந்து, கால்கள் ஓய்ந்து தண்டிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் உறுதி முடமாகிபோகவில்லை.

இந்த அற்புதமான ராணுவ சிறுவனின் வாலை சுருட்டி அவனது "ஆரிகன்" வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இல்லை, உண்மையில் இவனது ஆன்மாவை சிதைக்கிறீர்கள்.

முதல்வர்: நிறுத்துங்கள் திரு. சிலேய்ட்?

அல் பச்சீனோ: நான் இன்னும் முடிக்கவில்லை. நான் அரங்கில் நுழையும்போது, என் காதில் விழுந்தது, "தலைமைத்துவத்தின் தொட்டில்". எல்லாம் சரி, ஆனால் தொட்டிலின் மைய நான் முறிந்தால் தொட்டில் வீழும். இங்கே விழுந்தே விட்டது. மனிதர்களை வார்ப்பவர்களே, தலைவர்களை உருவாக்குபவர்களே! எந்த மாதிரியான தலைவர்களை இங்கே உருவாக்குகிறீர்கள் என சிந்தியுங்கள்.

இன்று காட்டிகொடுக்க மறுக்கும் சார்லியின் மவுனம் சரியா தவறா என்று எனக்கு தெரியாது. நான் நீதிமான் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரியும். தன் சுயநலத்திற்காக இவன் யாரையும் விற்க மாட்டான். அதற்குப் பெயர்தான் ஓர்மம். அதுதான் வீரம். அதுதான் தலைவர்களை உருவாக்கும்.


எனது வாழ்க்கையில் மிக குழப்பமான நெருக்கடிகளை சந்தித்துளேன். அப்போதெல்லாம் நான் தேர்ந்தெடுக்கவேண்டிய பாதை எதுவென்று எனக்கு நன்றாகவே தெரியும். சந்தேகமில்லாமில்லாமல் தெரியும். ஆனால் நான் அப்பாதையை தேர்ந்தெடுக்க வில்லை. ஏன் தெரியுமா? அப்பாதை மிகக் கடினமானது. இப்போது சார்லியும் நெருக்கடியில்தான் இருக்கிறான். இவனும் ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளான். மிகச்சரியான பாதை. கொள்கைகளால் ஆன பாதை. நடத்தையான பாதை. அவனது பயணம் தொடர வேண்டும். இவனது எதிகாலம் உங்கள் கையில் உள்ளது. விலைமதிப்பற்ற எதிர்காலம் அது. நம்புங்கள்!. அதை அழித்துவிடாதீர்கள். அதை காப்பாற்றுங்கள்! ஆதரவளியுங்கள்! ஒருநாள் உங்களுக்கு அது பெருமை சேர்க்கும். நான் உறுதியாகச் சொல்கிறேன்.


இந்த உரைக்குப் பின், பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில், நல்ல முடிவை ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிக்கிறது.


இது முழுக்கவும் தற்போது வாளாவிருக்கும் தமிழக முதல்வருக்கு அல் பச்சீனோ தரும் அறிவுரையாக கொள்ள முடியும்.

Read More......

Saturday, January 24, 2009

எங்கய்யா போனார் டகுல் பாட்சா உடன் பிறப்பு!!!

· 11 comments

எவராவது திமுக -வை விமர்சனம் செய்தால் கரைவேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு வரும் அண்ணன் "உடன்பிறப்பு", திமுக அனுதாபிகள் விமர்சனம் செய்தால் அவர்களை எதிர்(ரி)நிலையில் வைத்து ரவுண்டு கட்டுவது வழக்கம். ஈழப்பிரச்சினையில் கலைஞரின் டகுல்பாட்சா -வால் வலையுலகின் பல அரசியல் நிலைப்பாடுகள் யூ -டார்ன் அடித்துவிட்ட நிலையில் நமது உடன்பிறப்பு ஒரு வழக்கமான "அய்யகோ!!!" அறிக்கையுடன் வந்து உடனடியாக ஆஜராகும் படி "தெர்ர்ர்ர்ராவிட சமூகம்" கேட்டுக்கொள்கிறது.

ஈழம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடுகளில் ரொம்ப ஃபேமஸான ஒன்று "தமிழர் வேறு, புலிகள் வேறு" -என்பதாகும். இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் தரப்பினர் மட்டும்தான் இன்று இன்னல் படும் தமிழர் நிலை குறித்து கவலை கொள்கின்றனர். "வேறு-வேறு" -என்ற கொள்கைக்கார அண்ணாத்தைகள் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் அல்லது டமாஷ் அறிக்கை வெளியிட்டு தங்கள் டவுசரை அவுத்துக்கொள்கிறார்கள். தமிழன் செத்தால் அவர்கள் புலிகள் செத்த கணக்கில் சேர்க்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்டுகள் மற்றும் திமுக போன்றோருக்கு ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணத்திலும் தமிழர்-புலிகள் வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களை பொறுத்த வரை எல்லாம் புலிகளே!. உயிரோடு இருக்கும் போது இவர்களுக்கு அப்பாவியாக தோன்றும் தமிழன், இறக்கும்போது புலியாக தோன்றுவது விந்தைதான்.


சமீபத்தில் உருவாகி, குறுகிய காலத்திலேயே சூப்பர் ஹிட்டாகியுள்ள ஒரு நிலைப்பாடு "ராஜீவ் கொலைக்கு முன் - அதற்குப் பின்" என்ற நிலைப்பாடாகும். திமுகவின் பாசறையில் கருப்பெற்று உடன்பிறப்புகளால் மார்க்கெட் செய்யப்பட்டு வரும் இந்த சரக்கு சற்று மஜாவான சரக்கு. ஈழம் தொடர்பில் முன்பு துடிப்பாக இருந்துவிட்டு, பிறகு இத்தனை நாளாக வாளாவிருந்த உணர்வாளர்கள் எல்லாம் இந்த சரக்கை அடித்துவிட்டுத்தான் தொடர்ந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த சரக்கை காய்ச்சும் திமுக -வோ எப்போதும் கொட்டாவி தான் விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது யாராவது உண்ணாவிரதம், போராட்டம் என்று பட்டக்ஸில் ஒரு எத்து விடும்போது தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்துவிடும். உடனே, ஒரு "அய்யகோ" அறிக்கையோ, அல்லது "இறுதி எச்சரிக்கையோ" வெளியிட்டு விட்டு இழுத்து போர்த்திக் கொள்ளும்.

இவைதவிர இன்னொரு நிலைப்பாடு ஒன்றும் உள்ளது. அது ஒரு அறிவிக்கப்படாத, ஆனால் உறுதியான நிலைப்பாடாகும். "கலைஞரின் உயிருக்கு புலிகளால் ஆபத்து என்ற ரா -வின் அறிக்கைக்கு முன் - அதற்குப் பின்" என்பதுதான் அது. இதில் நம்பகத்தன்மை இருக்கிறதோ இல்லையோ, இதை நம்புவதால் திமுக -விற்கு பலன் இருந்தது. இப்போதும் இருக்கிறது. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதுவதன் மூலம் அந்த அறிக்கையை நான் நம்பவில்லை என்று கலைஞர் பம்மாத்து செய்தாலும் உண்மையில் அவர் நம்புகிறார் என்றே தோன்றுகிறது. எந்த அளவுக்கு நம்புகிறார் என்றால் போரில் சாகும் ஈழத்தமிழனுக்கும் வீரமரணம் எய்தும் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனம் மரத்துப் போகும் அளவுக்கு நம்புகிறார்.


புலி ஆதரவாளர்கள் எல்லாம் புலிகளுக்காக கவலைபடுவதுபோல் தெரியவில்லை. எந்த இக்கட்டான நிலையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று புலிகளுக்கு தெரியும். அதுபற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை. அப்பாவிகள் பற்றிய கவலையுடன் சேர்ந்து இப்போது "தமிழினத் தொலைவர்" பற்றிய கவலைதான் மிகவும் வாட்டுகிறது. "எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" -என்ற வசனம் நியாபகத்திற்கு வருகிறதா?!!?!


நெருக்கடி சமயங்களில் அவ்வப்போது வரும் கலைஞரின் அறிக்கைகள் எல்லாம் சுப்பிரமணியன் சாமியின் அறிக்கைகள் போல டமாஷ் ஆகிவிட்டதால், மிக சீரியஸாக பதிவெழுதும் உடன்பிறப்பின் டண்டனக்கா அறிக்கை வந்தால் கும்மியடித்து பொழுதை போக்க வசதியாக இருக்கும். அவர்கிட்ட யாராவது சொல்லுங்கப்பு!!!!

Read More......

Thursday, August 21, 2008

ஆம்! பெண்கள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கோழிகள்தான்.

· 43 comments

எனது முப்பது வருட வாழ்வில் நான் இதுவரை சந்தித்துள்ள என் வயதொத்த அல்லது குறைந்த பெரும்பாலான பெண்களை பற்றி எனக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நல்ல அபிபிராயம் கிடையாது. மென்மையானவர்கள், பண்பானவர்கள், உழைப்பாளிகள், அறிவாளிகள் என எல்லோரும் பெண்களை குறிப்பிட்டாலும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என சொல்வதே சரியென்று எனக்கு படுகிறது.

உதவி கேட்கும்போது பம்முவதும், மற்றவர்கள் அதை எதிர்பார்க்கும்போது கைவிரிப்பதும் பெண்களுக்கு இயல்பாகவே கைவரப்பெற்ற ஒன்று. ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் பெண்களிடம் அப்பட்டமாக தென்படுவதை பெரும்பாலானவர்கள் கவனித்திருக்க கூடும். நாகரீகமாக செய்தால் இவற்றை உள்ளரசியலின் கூறுகளாக கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஜனநாயகத்தின் சலனத்தை தீர்மானிப்பதே உள்ளரசியல் தானே! ஆனால் பச்சையாக செய்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எதிராளி இவற்றை அடாவடியாக எதிர்கொள்ள நேரும்.

என்னை பொறுத்தவரை வலிய வந்து ஈசும் பெண்ணின் முதல் பத்து வார்த்தைகளில் அவளது தற்போதைய தேவை என்ன என்பதை கணித்துவிட முயல்வேன். அதில் வெற்றி பெற்றால் உடனடியாக என் கதவை அவள் முகத்தில் இழுத்து சாதிவிட சற்றும் தயங்குவதில்லை. பெரும்பாலானவர்கள் இதை செய்வதில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு பிறகு அப்பெண்கள் தங்கள் இயல்பை காட்டியதும் அவர்கள் மீது வன்மம் கொண்டலைவார்கள்.

இவ்வளவு விவரமான பார்ட்டி போல சீன் போடும் நான் எந்த பெண்ணிடமும் உதவி பெற்றதே இல்லையா? நிச்சயம் பெற்றிருக்கிறேன். எனக்கு உதவியவர் ஆணோ பெண்ணோ எவராயினும் அவருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவிட தயாராகவே இருப்பேன். இடுக்கண் வருங்கால் நழுவுவதோ அல்லது உதவாது போக நேர்கையில் சப்பை கட்டுவதோ நான் கிஞ்சித்தும் செய்வதில்லை. எனது பெரும்பாலான நண்பர்களும் இதை செய்வதில்லை. ஆனால் தோழிகள்? அதை நான் சொல்லவும் வேண்டுமா? ஆம்! பெண்களில் பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகள் தான்.

எல்லாம் சரி! பெண்களுக்குள்ளே எப்போதும் ஓயாமல் நடக்கும் பனிப்போருக்கு நான் மேலே சொன்ன காரணமும் ஒன்றா?

Read More......

Friday, August 8, 2008

பயமாயிருக்கு: ரஜினியை விமர்சிக்காமல் தண்ணி தெளிச்சு விட்டுட்டோம்.

· 16 comments

சமீப காலமாக ரஜினி அவர்களைப்பற்றி லகுவாக விமர்சிக்கும் எங்கள் குரல்களின் நியாயங்களை வெறிபிடிக்காத ரஜினி ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எனினும், இதனால் எங்களுக்கே ஒரு புறம் சலிப்பு ஏற்படுவதாலும் சில அன்பான எச்சரிக்கைகள் எங்களை பீதி கொள்ளச்செய்வதாலும் சந்தேகக் கண்களில் இருந்து ஓடி ஒளிந்து கொள்ளலாமென முடிவெடுக்கிறோம்.

"ரஜினி பாஸ்டு அனதர் டெஸ்ட் ஆப் லாயல்டி" -என செய்தி வெளியிட்ட தமிழ் துவேஷிகளாகட்டும், தன்மையான ரசிகராகிய கிரி, இவ்வளவுக்குப்பிறகும் பாலால் கட்டவுட் கழுவிய கோஷ்டிகளாகட்டும் எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தார்கள்.



ரொம்ப நோகாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா போயஸ் கார்டன் பக்கம் பார்த்து கும்பிடுங்க.....நாங்க யாரையும் கும்பிடாம எங்க பொழப்ப பாக்க ஒதுங்கிக்கறோம்.....உங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு மகாநடிகர் !!! அடுத்தமுறை ரோபோவா வந்து மக்களை ஏமாற்றட்டும்...அதுவரை அவரை கண்டுக்கறதா இல்லை !!!!

ச்சும்மா ட்டமாஷ்: தனித்திரு விழித்திரு பசித்திரு.....: எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

Read More......

Saturday, July 26, 2008

குண்டு வெடிப்பு: "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

· 81 comments


மக்கள் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றி பெறாது என்ற அரிச்சுவடி கூட தெரியாத சில அடிப்படைவாத முட்டாள்களே! உங்களுக்கு பிரச்சினையின் மையம் எதுவென்று விளக்க ஒரு மக்கள் தலைவனும் இல்லையா? எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேல் முஸ்லீமல்லாதோர் வாழும் நாட்டில் அவர்களுக்கெதிரான வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. முதலில் உங்கள் எதிரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மையில் உங்கள் எதிரிகள் பலசாலிகள் அல்ல. எண்ணிக்கையும் மிகக்குறைவு. ஆனால் அவர்கள் மிகக் கொடூரமான சூத்திர தாரிகள். ஒட்டுன்னியைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அடுத்தவனை ஏய்த்து, அவன் உழைப்பில் வாழும் சமூக ஒட்டுண்ணிகள் பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? இனப்பெருக்கம் மட்டும்தான் அவைக்கு தெரியும். உண்ணுவது, உறைவது, உபாதைகளையும் அரிப்புகளையும் தீர்த்துக்கொள்வது அடுத்தவர் தயவில் தான். அவ்வொட்டுன்னிகளை ஆதார உயிர்களில் இருந்து பிரித்து பார்க்கத்தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

2002 படுகொலைகளில் பாதிக்கப்பட்டது யார்? படுகொலைகளுக்கு காரணமான அந்த ரயில் எரிப்பில் இறந்தவர்கள் யார்? இரண்டுமே அந்த சமூக ஒட்டுண்ணிகள் அல்ல. ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் சூத்திரதாரிகள். ஐம்பது வருட காஷ்மீர பிரச்சினையானாலும் சரி! இன்றைய இந்தியாவின் துரதிஷ்ட சூழ்நிலையானாலும் சரி! அவர்கள் தான் உங்களுக்கும் எதிரிகள். அவர்களின் வலிமை என்ன? அவர்களின் திரைமறைவு வேலைகள் என்ன? அவர்களுக்கு எதிரான வியூகம் ஏதேனும் உள்ளதா உங்களிடம்? நிச்சயமாக இல்லை.

அவர்களின் வலிமையே அரசியல் அதிகாரமும் ஏவலாட்களுடனான அவர்கள் அணுகுமுறையும்தான். அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரத்திற்கு எதிராக என்ன செய்துள்ளீர்கள் நீங்கள்? வன்னியர் சமுதாயத்தை விட எண்ணிக்கையில் அதிகமான நீங்கள் அவர்கள் போல பதினேழு எம்.எல்.ஏ. -க்கள் வைத்திருக்கிறீர்களா? அவர்களிடம் ஆறு எம்.பி. -க்களும் இரு மத்திய மந்திரிகளும் உள்ளனர். இது எப்படி சாத்தியம்? சாதியம் என்பது கேவலம் என்று கருதப்படுவதாக சொல்லக்கூடிய தமிழகத்தில்தான் வன்னியர்கள் அரசியல் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதுநாள் வரை அடுத்தவன் கையையே எதிர் பார்த்துவந்த பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சியை இன்று நீங்களும் காண்கிறீர்கள் தானே?
தமிழ் தேசிய உணர்வு தானே தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தந்தது! 40 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல், இன்று தமிழனுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவனுக்கு தெரியும் தானே! ஆனால் தமிழருக்குள்ளே உயர்சாதியினரிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியை இப்போது பார்த்து வருகிறோம்.

ஆகவே, அரசியல் எழுச்சி பெறுங்கள். மத ஒற்றுமை, தேச பக்தி போன்ற சமூக விழுமியங்களை அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். அவ்விழுமியங்களை போதிக்கும் எந்த அரசியல்கட்சியும் தன்னளவில் பின்பற்றுவதில்லை. எனவே, உங்களில் ஒரு மக்கள் தலைவனை கண்டு பிடியுங்கள்.

இன்று நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்களின் அடிப்படை பிரச்சினை என்ன என்பது நாம் அறிவோம்தானே! அவர்களைப் பார்த்து மீண்டுமொரு முறை கூறுவோம். "டேய், நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?"

சில கொண்டைகள் கேட்க்கக்கூடும், "உனக்கேன் அக்கறை, அவர்களுக்கு இல்லாத அக்கறை" என்று. சில முஸ்லீம் நண்பர்கள் கேட்க்கக்கூடும், "இந்த ஈரோட்டு வேலையெல்லாம் உங்களுக்குள்ளே வச்சிக்கோ, அதிங்க பிரசங்கி வேலை வேண்டாம்" என. அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்று தான். "என்னைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம் ரெண்டும் ஒரே புண்ணாக்கு தான், இப்போதைக்கு அந்த புண்ணாக்குகள் அரசியல் அதிகாரத்துக்கு உதவுமா என்று பார்ப்போம், வன்முறைக்கு அல்ல"

Read More......

Wednesday, July 16, 2008

அடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா சாமீ!

· 20 comments

காமக்கதைகளை எழுத்து சுதந்திரத்தினின்று விதிவிலக்கம் செய்வது அது பதிவுலகில் சகஜமாவதை என்றென்றைக்குமாக தடுப்பதாகவே முடியும். மழையில் நனையும் கதாநாயகி தமிழ் சினிமாவாவில் சில ஆண்டுகளுக்குமுன் சகஜமில்லை. அதுபோல் இன்று சகஜமாக இல்லாத காமம் சார்ந்த எழுத்துக்கள் நாளை சகஜமாகிவிடும். சகஜமாவதை தடுக்கும் பத்தாம் பசலிகளுக்கு தமிழ்மணம் செவிசாய்த்துவிட்டதால் அது தடைபடப்போவதில்லை.

காமக்கதைகள் ஒன்றும் புரட்சி வித்துக்கள் அல்ல என்றாலும் சமூகத்தில் உள்ள எழுத்து சுதந்திரத்தின் உயிர்ப்பை உரசிப்பார்க்க தேவையாயிருக்கின்றன. இவைகளை அசூசையாக நினைப்பவர்கள் நடந்துகொண்ட விதம் அற்பமாக உள்ளது. தமிழ்மணத்திற்கு புகாரளித்தவர்கள் தாம் நியாயம் என நினைத்தவற்றை பதிவுகளாக இட்டு காமக்கதை எழுதியவர்களை பெயர் குறிப்பிட்டே சாடியிருக்கலாம். அது ஒரு விவாதத்தையாவது தொடங்கியிருக்கக்கூடும். அதைவிடுத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து தமிழ்மணத்தையும் தடுமாற வைத்துவிட்டனர்.

தமிழ்மணத்திற்கு தடுமாற்றம் இது முதன்முறையா என கேட்பவர்கள் தமிழ்மணத்தின் வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல் மற்றும் வனிகவியலை அறிந்தவர்களாக இருக்கக்கூடும். அடியேன் அறியேன். இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும். அதற்குள்ளாக தமிழ்மணம் தேவையின்றி நடவடிக்கை எடுத்து எழுத்து சுதந்தரம் விஷயத்தில் அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிட்டது. அறிவாளிகளும் வல்லுனர்களும் நடத்தும் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் ஒருவர் கூட இதை முன்னுணராதது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துசுதந்தரம் இன்றேல் வலைப்பூக்களே இல்லை என்பது அறிந்திருந்தும் தமிழ்மணம் தடுமாறியுள்ளது அதன் முன்னறிவிப்பில்லாத நடவடிக்கைகளே காட்டுகின்றன. நிருவாகவியலில் சிறந்த ஒரு நாட்டிலிருந்து இத்திரட்டி நடத்தப்படுவது முரண்.

இதை விட நகை முரண் என்னவென்றால் தமிழ்மணத்திற்கு எதிராக பதிவர் சுதந்தரத்திற்கு கொடிபிடிப்பவர்களில் சிலரது புனிதப்போர்தான். அவர்கள் தங்கள் பதிவுகளில் பின்னூடங்களை செலக்டிவாக வெளியிடுபவர்கள், பின்னூட்டம் எவ்வளவு டீசன்ட்டாக இருந்தாலும். கேட்டால் பெயரை குறிப்பிட்டு நையாண்டி செய்யும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை என பதில் வரக்கூடும். நைய்யாண்டி இல்லாத பின்னூட்டம் வேண்டுமானால் "ஹிண்டு" -வில் எழுதினால் தான் கிடைக்கும்.

அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் போல நாகரீகமான பின்னூட்டங்கள் சிலவற்றைக்கூட வெளியிட முகம்சுழிக்கின்றனர் சில மூத்த பதிவர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மன்னன் படத்தில் கவுண்டர் சொல்வதுதான் நியாபகம் வருகிறது. அடடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!

Read More......

Wednesday, June 25, 2008

செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூ.

· 56 comments

நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா -வின் வலைப்பூவை பதிவுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் உள்ளபடியே பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வெகு நாட்களாக வலைப்பூவை தொடங்குவது குறித்து ஜெயலலிதா அவர்கள் யோசித்து வந்தாலும் இப்போதுதான் அவரது எண்ணம் கைகூடியிருக்கிறது. வழக்கறிஞர் ஜோதியின் துரோகத்திற்கு பிறகு, ஆலோசனை கூற தகுந்த ஆட்கள் கிடைப்பதில் சற்றே சுணக்கம் இருந்த போதிலும் இப்போது வெற்றிகரமாக வலைப்பூ தொடங்கப் பெற்றிருக்கிறது. புரட்ச்சித்தலைவி கொடநாட்டில் ஓய்வில் இருப்பதால் ஊட்டியில் இருந்தபடியே வலைப்பூவை நிர்வகிப்பார்

தற்போது வலைப்பூ முழுதும் திராவிட திம்மிகளின் ஆதிக்கம் நிலவுவதால் தலைவியின் பெயரில் வலைப்பூ தொடங்குவது சற்றே ஆபத்தாய் முடியும் என்று கருதி வலைப்பூ வேறொரு பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனையின் பேரில் Valentina என்று ஆங்கிலத்திலும் சகோதரர் வைகோ வின் கெஞ்சுதலின் பேரில் "தமிழரசி" என்று தமிழிலும், அதிமுக ஆஸ்த்தான சோதிடர் "நம்புங்கள்" நாறவாயன் வழிகாட்டுதலின் பேரில் இரண்டையும் கலந்து தமிங்கிலீஷில் ஒரு வலைப்பூ தொடங்கப்பட்டிருக்கிறது. ஆறுகொடியே எண்பத்தெட்டு லட்சத்து பண்ணிரெண்டாயிரத்து நூற்றி பதினோரு அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் பெயரில் புரட்சித்தலைவியின் "தான்தோன்றித்தன" தனியியல்புகள் தெறிக்கும் வண்ணம் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தற்குறி கமலகாசனைப் பற்றி அவரது “ஒலக நாயக்கன் “ கொட்டம் அடங்கும் பொருட்டு சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தனியொருவராக சட்டமன்றத்தை கதிகலக்கிய அம்மா இப்போது அதே பாணியில் எதிரிகளை பின்னூட்டங்களில் கலாய்த்து வருகிறார். இதுவரை தன்னை பீனிக்ஸ் பறவையாக காட்டி வந்த தானைத்தலைவி, சிங்க நிகர் செல்வி, புறநானூற்று தாய், நம் புரட்சித்தலைவி அம்மா இப்போது தன்னை அமிஞ்ச பீடி என்று blog caption -ல் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.

“பீடியைப்போலவே மீச்சிறு அளவினள்! புகைக்க நினைத்தால்(உங்களால் முடிந்தால்) நாறடிப்பேன், அமிஞ்ச பீடியாய், நனஞ்ச சுருட்டாய்!”

மகோன்னத மேதா விலாசம் ஸ்திரீ வாலன்டீனா தமிழரசியின் ஆன்லைன் பத்ரிகா -விற்கு இன்றே விஜயம் பண்ணுங்கள்.

....இருங்க இருங்க....இங்க பின்னூட்டம் போட்டுட்டு அங்க போங்க.

டிஸ்க்கி1: பதிவுலகின் புதிய வரவு வாலன்டீனா தமிழரசியை வருக வருக என இருகரம் கூப்பி தமிழ்மண அரை டிக்கட்டுகள் சார்பாக வரவேற்கிறேன்.

டிஸ்க்கி 2: பதிவில் நான் குறிப்பிடும் பார்ப்பனியம் சார்ந்த கிண்டல்கள் ஜெயலலிதாவைச் சுட்டுவன மட்டுமே. பதிவர் வாலண்டினா, ஜெயலலிதா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என நான் கருதுவது தான்தோன்றித்தன தனியியல்புகள் முதலானவை மட்டுமே அன்றி வேறெதுவும் இல்லை.
I don't indulge in targeting people".

இணைப்பு(ஜூன்-26):

செல்வி ஜெயலலிதா, செல்வி வாலண்டினா ஒற்றுமைகள்:

1) இருவரும் கான்வென்ட் ஸ்கூல்

2) தற்போது வாசம்: முன்னவர் கொடநாடு, பின்னவர் ஊட்டி.

3) தலைக்கனம்:
பெரியவர்(1998): "என்னை கேள்வி கேட்பவர்கள் கோர்ட்டுக்கு கருணாநிதி வந்த போது இதே கேள்வியை கேட்டீர்களா?, நீங்களெல்லாம் எடுபிடிகள், உண்மையான பத்திரிக்கைக்காரர்களுக்கு பதில் சொல்லிக்கொள்கிறேன், இங்கிருந்து கிளம்புங்கள் எல்லோரும்"
சின்னவர்: "to see the achievements .... .... .... before scribling here. Any real Film Critics here?"

4) கெக்கே பிக்கே தனம்:
முன்னாள் முதல்வர்: "சேது சமுத்திரம் நிறைவேறினால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சுனாமி வரும்"
இந்நாள் உலற்வர்: ".....அப்படியே ஒரு மளிகைக்கடக்காரரின் பையனாக நடிக்காமல் வாழ்ந்துகாட்டிய பரத், பருத்திவீரன் கார்த்தி சரவனன், நாசர், சீயானாகவே மாறிய... அந்நியன் ரெமோ அம்பி என்று தம்மாத்தூண்டு ஷாட்களில் கலக்கிய விக்ரம், பிதாமகன், ஆறுச்சாமி என்று அசத்திய விக்ரம், பாலக்காட்டு சமையல் காரனாக வந்த மாதவன்...."

5) இங்கிலீஷ்-தமிழ் குழப்பம்:
இரும்பு பெண்மணி: ஓட்டு கேட்க தமிழும் சட்டமன்றத்தில் ஆங்கிலமும் பத்திரிக்கைகாரர்களுக்கு ரெண்டும் கலந்தும் என இவர் கலக்குவது நாம் அறிந்ததுதான்.
இம்சைப் பெண்மணி: "For Lucky once again.. from my post
ஆனால் நம் ஒலகத்த்ரப் படத்தில் முறூக்கேறிய"


6) அப்பீட்டு:
மூத்த செல்வி: "நான் பெண் என்பதால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன்"
இளைய செல்வி: "இன்று புதிதாக எழுதவந்திருக்கிறேன். அதற்குள் ”கேணத்தனமாக எழுதுகிறாள்” என்றெல்லாம் உற்சாகப்படுத்துவது அவசியம் தானா?"


7)

Read More......

Sunday, June 8, 2008

முகம் சுழிக்க வைக்கின்றனவா சூடான இடுகைகளின் தலைப்புகள்?

· 124 comments

பிரபல பதிவர் ஒருவரின் வெகு சமீபத்திய பதிவில் இடம் பெற்ற ஒரு வாக்கியம் சற்று யோசிக்க வைத்தது. வாக்கியம் இதுதான். ...தமிழ்மண முகப்பில் இருக்கும் சூடான இடுகையில் வர வேண்டி பலர் வைத்த தலைப்புகள் நம்மை முகம் சுழிக்கவும் வைத்தன.....

அப்பதிவில் Puthiya Pathivar என்ற பெயரில் நான் இட்ட பின்னூட்டம் ஏனோ ஏற்கப்படவில்லை என்பதாலும் (தொழில் நுட்ப பிரச்சினையாக இருக்கக்கூடும்), பதிவெழுத வேறு விஷயம் கிடைக்காததாலும் எனது பின்னூட்டத்தையே பதிவாக இடுகிறேன்.

"தொடர்ந்து பதிவேழுதியோ, பதிவர் சந்திப்பு நடத்தியோ பிரபலமாகி விட்டால் பிறகு எங்களை போன்றவர்கள் சூடான தலைப்பைத் தேடி அலையத் தேவையில்லைதான். அதன் பிறகு நட்புக்காக போடற பின்னூட்டங்கள் குவிந்து விடும், படிப்பவர் எண்ணிக்கையும் கூடும், பதிவு சூடான இடுகையிலும் இடம்பெறும். அதுவரை எங்களைப் போன்றவர்கள் தலைப்பில் யாரையாவது வம்புக்கு இழுத்துத்தான் இடுகையை சூடாக்க வேண்டியிருக்கு. நல்ல கன்ட்டேன்ட்டுன்னு நினைச்சு எதையாவது எழுதி, டீசண்ட்டா தலைப்பு வச்சா யாரு பாக்றாங்க, மூத்த பதிவர்கள் அல்லது பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவதை கவுருவ குறைச்சலா நினைக்கிறாங்க. அட பதிவு நல்லால்லன்னு கூட பின்னூட்டம் போட மாற்றாங்க!, அவர்கள் பதிவில் போய் பின்னூட்டம் போட்டா பதிலாவது போடறாங்கலான்னா அதுவும் இல்ல. எங்களுக்குன்னு ஒரு கோஷ்டி சேத்து கும்மி கிம்மி எல்லாம் அடிச்சி கொஞ்சம் பிரபலமானா அப்பத்தான் அவங்க கும்மியில சேத்துக்குவாய்ங்கன்னு நினைக்கிறேன். இப்பக்கூட பாருங்க, என் பதிவு முகவரிய கொடுக்காமத்தான் பின்னூட்டம் போடறேன், கொடுத்தாமட்டும் வந்து பின்னூட்டம் போடப்போறாய்ங்களா என்ன, இல்ல இந்த பின்னூட்டத்துக்குத்தான் பதில் வரப்போகுதா!, இதுக்குப்பேருதான் "தமிழ்மண தீண்டாமை" யோ!

பதிவு பேசிய விஷயத்தை பற்றி தானே நானும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்?
"

மற்றொரு விஷயம். எனது 25 வது பதிவு நெருங்குவதால், அதை எதாவது ஒரு சீனியர் பதிவரிடம் எழுதி வாங்கி பதிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவரிடம் மடல் அனுப்பினால் இதுவரை பதில் இல்லை. எஸ், நோ, மேபி, கான்ட் சே, டைம் இல்ல, ந்கொய்யாள இப்படி எதாவது பதில் சொன்னா கொறஞ்சா போய்டும்!

சரி, blog -அ பிரபலம் செய்து என்ன பண்ணப் போற, பின்னூட்டம் வந்தாதான் பதிவு எழுதுவியா நீ, இல்லன்னா எழுதமாட்டியா? என்று உள்ளே இருந்த நல்லவன் கேட்டதும், அமைதியாகத்தான் இருந்தேன். "இன்னா மச்சி ஊன் blog ஈயடிக்குது போல" என்று எவனாவுது கேட்டு வெறுப்பேத்தி உட்டுரானுங்க!

Bottom Line: அரை குறை உடையில் நான் எவரையேனும் தெருவில் கண்டால், முகம் சுழிப்பதில்லை, மாறாக முகத்தை திருப்பிக்கொள்வேன். ஏனென்றால், ........அது அப்படித்தான். முகத்தை மட்டும் திருப்பிக்கொள்வேன்.

Read More......

Thursday, May 22, 2008

சிங்கை, பெங்கை மற்றும் மங்கள் பாண்டே டொப்பி

· 5 comments




சிங்கப்பூர் ஸ்காட்ஸ் டவர்

ஒட்டு வாங்கி பின் ஆட்சிக்கு வந்ததும் அல்வா பல்க் ஆர்டர் செய்து கடைக்கோடி குடிமகனுக்கும் கிடைக்கும்படி விநியோகிப்பது தான் உலகெங்கும் உள்ள ஜனநாயக நெறிமுறை. ஆனால் கர்நாடகத்தை பொறுத்தவரை அல்வா வழங்கும் காண்ட்ராக்ட் இப்போதே சி.என்.என்-ஐ.பி.என் -கு கொடுக்கப்பட்டு விட்டது. யார் வந்து சாங்க்ஷன் செய்வது என்பதுதான் முடிவு செய்ய வேண்டும்.

"என்ன பிரச்சினை -னு நீ இதுவரைக்கும் சொல்லல..." என்று கோபப்படுபவர்கள் சற்றே பொறுங்கள். நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா கட்சிகளும் தங்கள் அல்வா வகைப்பட்டியலில் மறக்காமல் சேர்த்திருந்த அல்வா "அடுத்த 5 ஆண்டுகளில் பெங்கையை சிங்கை ஆக்குவோம்" என்ற அல்வா தான். சிங்கப்பூர் சிங்கை என்றால் பெங்களூர் பெங்கை தானே? கோதாவில் உள்ள ஒரு முக்கிய கட்சி ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவாக தனது 5 ஆண்டுகால மத்திய ஆட்சியில் மாற்றி சாதனை படைத்திருக்கிறது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்து "யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் இண்டியா" என பெயர் மாற்றம் செய்வதுதான் பாக்கி. கூடவே பெங்களூருக்கும் பெயர் மாற்றம் செய்து "பெங்கை" ஆக்கிவிட்டால் பணி முற்றுப்பெறும்.



பெங்களூர்

இவர்கள் மனசில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பன்னாட்டு சாப்ட்வேர் பசங்களுக்கு சிட்டி -யை வாடகைக்கு விட்டுவிட்டால் பெங்களூர் சிங்கப்பூர் ஆகிவிடுமா? அல்லது பிரிகேட் ரோட்டில் எலக்ட்ரானிக் பார்க்கிங் மீட்டர் வைத்துவிட்டால் போதுமா? சில சாப்ட்வேர் புனிதப்பசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை மிரட்டும் அளவிற்கு நிலைமை கொண்டுவந்து விட்டபிறகு சிங்கப்பூர் என்ன, கோயம்புத்தூர் -மாதிரி கூட ஆகமுடியாது.

"சென்னையை ஐ.டி -யில் முதன்மை நகரமாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட போது ஒருமுறை தமிழக ஐ.டி செயலர் சொன்னார், "வி டோன்ட் வான்ட் டு பி எ குயின் இன் த மிடில் ஆப் த க்வாலம்ஸ் (qualms)". ஆனால், பெங்களூர் இப்படித்தான் இன்றைய தேதியில் இருக்கிறது. உள்ளாடைகள் ஏதும் போடாமல் கோட் சூட் போட்டுக்கொண்டு வெளியே வந்தாயிற்று. இப்போது திரு திரு விழிகளுடன் நெளிந்து கொண்டு நிற்கிறது. இனி கோட் கோட் சூட் கழற்றாமல் உள்ளாடைகளை போட முடியாது, உள்ளாடைகளை போடாமல் இப்படியே தொடரவும் முடியாது. கோட் சூட் கழற்றினால் டைரக்டா அம்மனம்தான். ஐ.டி. இல்லன்னா பெங்களூர் ஜீரோ தான்.


மங்கள் பாண்டே டொப்பி

இதுல, உல்ட்டா ஜால்ரா போடரத்துக்குன்னே ஒரு கும்பல் எப்பவும் தயாரா இருக்கும். யாருன்னு நான் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தே ஆர் நன் அதர் தேன் நார்த் இண்டியன்ஸ் லைக் சி.என்.என்-ஐ.பி.என். இவனுங்களுக்கு சவுத் இந்தியான்னா பெங்களூர் -வும் ரஜினிகாந்த்தும் தான். இப்படி கூலிவாங்காம மாரடிக்கிரவனுங்க லிஸ்ட் ரொம்ப பெருசு. டைம்ஸ் நவ், எக்கானமிக்ஸ் டைம், இந்தியா டுடே மற்றும் பெரும்பாலான ஆங்கில, இந்தி மொழி பேப்பர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாக்கள்.


ஒருமுறை சஞ்சய் மன்ஜ்ரேக்கர் சின்னசாமி ஸ்டேடியம் கமெண்ட்ரி பாக்ஸ் -ல உட்காந்துகிட்டு சொல்றார், "பெங்களூர், அன்-டிஸ்பூட்டட் ஐ.டி. கேபிட்டல் ஆப் இண்டியா". என்னவோ மத்த சிட்டி எல்லாம் இந்த விசயத்தை டிஸ்பூட் பண்ற மாதிரியும், இவுரு சொம்புல தண்ணி புடிச்சுகிட்டு, தோள்ல துண்ட போட்டுக்கிட்டு, ஆலமரத்தடிக்கு பஞ்சாயத்து பண்ண வந்த மாதிரியும் இருக்கு இவர் பேச்சு.


சரி, இவனுங்கள பத்திதான் தெரியுமே, உருப்படியா வேற எதாவது பேசுவோம். இப்ப, பெங்கையை எப்படி சிங்கையா மாத்தரதுன்னு நம்ம குத்து ரம்யா தாத்தாவுக்கும்(S.M. கிருஷ்ணா), நம்ம எட்டு பாட்டி ராசாவுக்கும்(எட்டியூரப்பா) ஐடியா கொடுப்போமா?

1. சிங்கையில் சீனாக்கார்கள் ஜாஸ்த்தி என்பதால் ரெண்டு லோடு சீனாக்காரங்கள இம்போர்ட் பண்ணி சிட்டி புல்லா சுத்த விட்டா இம்மீடியட்டா சிங்கப்பூர் லுக் வந்துடும்.



2. சிட்டி ட்ராபிக் போலிஸ் தொப்பி மங்கள் பாண்டே டொப்பி போல இருப்பதால் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்கள் தொழில் தொடங்க வந்து விடுகிறார்கள். காஷ்ட்யூமை சிங்கப்பூர் போலிஸ் மாதிரி மாற்றுவது நல்ல தீர்வு.



3. இந்தமாதிரி படங்களை கிராபிக்ஸ் செய்து நெட் முழுக்க பரப்பிவிட்டு இதுதான் பெங்களூர் என்று மொள்ளமாரித்தனம் செய்துவிட்டால் பிறகு சிங்கை எப்படி பெங்கை ஆவது என யோசிக்க ஆரம்பித்துவிடும். நாமும் நிரந்தரமாக காவிரிபிரச்சினையிலேயே பொழுதை கழிக்கலாம்.

உங்ககிட்ட ஏதும் ஐடியா இருக்கா?

Read More......

Tuesday, May 20, 2008

தமிழன் - மற்றவர் பார்வையில் மற்றும் மற்றவர் - தமிழன் பார்வையில்.

· 10 comments

தமிழனை பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டால் என்ன பதில் வரும் என்று ஒரு சிறு கற்பனை...

மலையாளி பார்வையில்: தமிழன் ஒரு ஏமாளி...
தெலுங்கர் பார்வையில்: தமிழன் ஒரு தற்பெருமை பார்ட்டி...
கன்னடர் பார்வையில்: தமிழன் ஒரு ஈனப்பிறவி...
பொதுவாய் வடவர் பார்வையில்: தமிழன் ஒரு பிரிவினைவாதி...
குறிப்பாய் குஜராத்தி பார்வையில்: தமிழன் ஒரு தேச துரோகி...
பம்பைகாரன் பார்வையில்: தமிழன் ஒரு கலீஜ் பார்ட்டி...
பெங்கால்காரன் பார்வையில்: தமிழன் ஒரு அறிவாளி...
மற்ற வடவர் பார்வையில்: தமிழன் ஒரு வெளிநாட்டுக்காரன்...
வட கிழக்கு மாகானத்தவர்: தமிழன் ஒரு முன்னுதாரணம்...
பிராமணர் பார்வையில்: தமிழன் தீண்டத்தகாதவன்...
சிங்களன் பார்வையில்: தமிழன் ஒரு தீவிரவாதி...
பாகிஸ்தானி பார்வையில்: தமிழனா? இவன் ஏதோ பரவாயில்ல...
மலேசியாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு கலகக்காரன்...
வெள்ளைக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு உழைப்பாளி...
ஸ்பானிஷ் காரன் பார்வையில்: தமிழன் ஒரு பெரிய மனுஷன்...
சைனாக்காரன் பார்வையில்: தமிழன் ஒரு சாப்ட்வேர் கை...
கருப்பன் பார்வையில்: தமிழனா?...யார்ராவன்?
பொதுவாய் அனைவர் பார்வையும்: தமிழன் ஒரு மொழி வெறியன்....


மற்றவரை பற்றி தமிழன் என்ன நினைக்கிறான் என்ற கற்பனை கீழே:

மலையாளி ஒரு சந்தர்பவாதி...
தெலுங்கன் ஒரு ஜாதி வெறியன்...
கன்னடர் ஒரு அடியாள் கூட்டம்...
வடவர் ஆதிக்கவாதிகள்...
குஜராத்தி ஒரு மத வெறியன்...
பம்பைகாரன் ஒரு ச்சில்ற...
பெங்கால்காரன் ஒரு பொழைக்க தெரியாதவன்...
வட கிழக்கு மாகானமா? அது எந்த டைம் சோன்?
பிராமணன் ஒரு விசச்செடி...
சிங்களன் ஒரு பொட்டபய...
பாகிஸ்தானி ஒரு வட இந்தியன்
மலேசியாக்காரன் ஒரு ஓரவன்ஜன பார்ட்டி
வெள்ளைக்காரன் ஒரு கொள்ளைக்காரன்...
ஸ்பானிஷ் காரன் ஒரு தத்தி...
சைனாக்காரன் பொழைக்க தெரிஞ்சவன்...
கருப்பன் ஒரு காட்டு மிராண்டி...
பொதுவாய் எல்லாரும் நமக்கு கீழே...

Read More......

Monday, March 3, 2008

அமெரிக்க மாப்பிள்ளைக்கு என்ன ரெண்டா இருக்கு?

· 8 comments

ட்ட்ர்ர்ர்ர்....ட்ட்ர்ர்ர்ர்...ட்ட்ர்ர்ர்ர்...ட்டர்
ஹலோ...

...............

ஆங்....ஹலோ மச்சி...சொல்லு

................

இல்லையே மச்சி, மிஸ்டு கால் எதும் வரலையே...

................

இல்லையே மச்சி

.......

இம்ம்...ஒரு வேளை பேட்ரி போயிருக்கும்....

....................

ம்ம்ம்...சரி சொல்லு. அப்றம் எப்டி இருக்க....

.................

எங்க மச்சி....ஏதோ போவ்து.....அப்றம்...மெட்ராஸ் எப்டி இருக்கு....

....................

அப்டியா.....ஏன்...அங்க எதுக்கு போன?

...................

ங்கும்...உனுக்கு மசாலவே கெடையாதுடா...ஏற்கனவே........ம்....என்னது?

.................

அதான்...ஏற்கனவே அவ அப்பன் உன்ன எந்த ஸ்கூல்ல படிக்கிறன்னு கேட்ட்டான். இப்ப இது வேறயா......

....................

ம்ம்..

.......................

ம்ம்.....

.................

நீ...சொல்ல வேண்டியத்தான....உன் பொன்னாலதான் இப்டி ன்னு

............................

அவ அப்டிதாண்டா சொல்வா....உனுக்கு எங்க போச்சி.

..............................

ஏ....இவ்ளுங்கலாம்....இப்டித்தாண்டா....துட்டும் சம்பாரிக்கணும், கூடவேயும் இருக்கணும்...இப்பபாரு

...................

டேய்....நீ சொல்லிருக்கனும்டா...உன் பொன்னாலதான் அமெரிக்கா சான்ஸ் போச்சுன்னு, இப்பபாரு அமெரிக்கா மாப்பிள்ளைக்குதான் பொண்ணுன்றான், அவ பொண்ணு என்னவோ வெள்ளக்காரனுக்கு பொறந்த மாதிரி.

........................

ஆமாண்டா, அமெரிக்க மாப்பிள்ளைக்கு என்ன ரெண்டா இருக்கு?.

............................

பின்ன என்னடா, அப்பன் மாதிரியா பேசறான்,

..............................

இவ கிட்டதாண்டா பிரச்சினையே இருக்கு, லவ் என்ன இவ அப்பன்கிட்டயா கேட்டு பண்ணா?.

.........................

என்னா நொள்ள மச்சி......இவ்ளுங்கல்லாம் யோக்கியமா?.....லவ் பண்ணும்போது சம்பாரிக்ற காசெல்லாம் வீட்ல குடுத்துடுவாளுக....நம்ம காஸ்லே டிரசலருந்து, மேக்கப்லருந்து எல்லாம் பண்ணிப்பாளுக.

.....................

டே டே....நான் தப்பா சொல்லல டா....அப்பன் சொல்ரதான் முக்கியம்னு நெனச்சா...அவுர் சொல்ரவனையே கட்டிக்கணும்....நம்மகிட்ட கண்ணகசக்குனா, அவுளுக்கும் சேர்த்து அவ அப்பன்கிட்ட நாம போராட முடியுமா?

.....................

தைரியம் லாம் இல்லாம இல்ல மச்சி இவ்ளுகளுக்கு.....எல்லாம் அடிம புத்தி

.......................

ஆமாடா.....எல்லா கால கட்டத்திலையும் எதோ ஒரு ஆம்பலகிட்ட அடிமையா இருந்து இருந்து இவ்ளுகளுக்கு பழகிடுச்சி...பொருளாதார சுதந்தரம் இருந்தாக்கூட அடிமையா இருக்கறதுதான் இவுங்களுக்கு சுகமே

..................................

அப்பயும் இப்ப்டிதாண்ட இருப்பாளுங்க....கல்யாணம் ஆனாமட்டும் சுதந்தரம் கொடுத்தா எடுத்துப்பாளுகளா....இப்படியேதான் இருப்பாளுக

..................................

போடா வெண்ணெய்....பொண்டாட்டி என்னும் வேலைக்கார வர்க்கம் எந்த காலத்திலயும் சோறாக்கி, துணி தொவச்சி, பணிவிடை செஞ்சி..................இப்படியேதான். வேலைக்கு போனாலும் இதையேதான் வீட்ல பண்ணுவாளுங்க. எவ்ள அறிவிருந்தாலும் பணம் சம்பாதிக்க மட்டும் தான் அதை யூஸ் பன்னுவாளுக.....அதையும் கொண்டாந்து ஊட்டுக்காரன்கிட்ட குடுத்திட்டு அடுப்பங்கரைல பூந்துக்குவாளுக

............................

அறிவு ஜீவிங்களும் இப்டித்தாண்டா இருப்பாளுங்க.....டிரான்ச்க்ரிப்ட்ட்ல செம கிரேடு வச்சிருப்பாளுக....அதெல்லாம் எட்டுமணிநேரம் வேல செய்ய மட்டும் யூஸ் பண்ணுவாளுங்க

....................................

ம்கும்...கிழிச்சாளுங்க.....இவ்ளுங்களுக்கெல்லாம் கர்ரியர்ந்னு ஒன்னு கடையவே கடியாது

........................

கரைட்டுதான்....ஒத்துக்கறேன்.....எத்தன பேரு அப்படி...அதெல்லாம் பத்தாது மாமு....ரொம்ப ஸ்லோ..

..........................

சரி சரி ....இவளுங்க எப்டினா போராளுக....போவுட்டும்...வுடு, இவ அப்பன எப்டி சமாளிக்க போற...அமெரிக்கா வர போறியா?

.....................

பாத்து மச்சி....

உன்ன இங்க அனுப்பிட்டு அவுளுக்கு அங்க டும் டும் டும் கொட்டிட போறான் அவுங்க அப்பன்.

.................................

செஞ்சாலும் செய்வான்.....இவளுங்க...பூம் பூம் மாடுங்க தான்

.....................

சரி மச்சி....என்ன ஆனாலும் சொல்லு..... வச்ச்சிட்டா

...............

சரி பை.

..........................

ம்ம்...

சரி ...மச்சி...பரவா இல்ல.

.........

பை.

Read More......

Monday, December 24, 2007

மெட்ராஸ் -னா நக்கலா பூடுச்சா!

· 8 comments

சில பேரு இருக்கான் மீடியா-ல, கரிட்டா சொல்நோன்னா இங்கிலீஷ் மீடியா-ல, அவுன்லுக்கு மெட்ராஸ்-ஸ நக்கல் பன்றதான் வேலையே! பெங்களுருன்னா ஒஸ்தி, மெட்ராஸ்-னா சொம்மா. நார்த்தின்டியா காரனுங்கதான் சிஎன்என்-ஐபிஎன்-ல நல்லா ஆக்குபை பண்ணிக்கிட்டு நம்மள தெனம் தெனம் வெறுப்பேத்திகிட்டு இருக்கானுங்கோ. பெங்களூரு ஒரு டப்பா ஊரு. அத போய் சிங்கபூர் ரேஞ்சிக்கி பேசரானுங்கோ. இப்டிதான் பம்பாய கொஞ்ச கொஞ்சமா அவுனுங்க ஊராவே ஆக்கி மராட்டி காரனுங்கள ஓரமா குந்த வச்சானுங்க. இப்போ பெங்களூருக்கு வந்துருக்கானுங்கோ. மராட்டி காரனுங்க கதி தான் கன்னடா காரனுங்களுக்கும் ஆவப்போவுது. அந்த டிவில ஒரு டபரா தலையன் சொல்றான் "பேங்கலூர் இஸ் ஏ நோர்த்-இன்டியன் சிட்டி இன் சௌத்-இன்டியா" ன்னு. வெவரம் புரியாம கெஸ்டா வந்த ரெண்டு அர லூசு கன்னடா காரனுங்க "கேகேகே" ன்னு சிரிச்சிக்கினு க்ரானுங்கோ. அம்பது வருசமா நோர்த்ல பப்பு வித்து போநியாவுல. சௌத்ல நாமலாம் அம்பது வருஷமா கஷ்டப்பட்டு (எவ்ளோ ஓரவன்ஜன பன்னானுங்க இந்தி பசங்க) நம்ம ஊருங்கள டெவலப் பண்ணி வச்சா, இவனுங்க வந்து கூடாரம் போட்ருவானுங்கோ போல்ருக்கே! இதுல இவ்னுங்களுக்கொஷ்ரம் நாம இந்தி படிக்கணுமாம்! பொட்டி படிக்கை யோட சென்ட்ரல் ல வந்து இவனுங்க நிக்கும் போது அவனுங்களுக்கு அட்ரஸ் சொல்ரதுக்கொஷ்ரமெல்லாம் நாம இந்தி படிக்க முடியுமா? அது சரி! கன்னடா காரனுங்கல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்குங்கோ. மெட்ராஸ்-ஸ நக்கல் பண்ணா ஜில்லுன்னு தான் இருக்கும் உனுக்கு இப்போ. மெட்ராஸ் ல கேம்ப் அடிக்க முடியாத எரிச்சல்ல "ச்சேய் இந்த பயம் புய்க்கும்" ன்ற மாதிரி நக்கல் தான் அடிப்பனுங்கோ. ஆனா உங்க ஊர அவுனுங்க ஊரா ஆக்கி உங்கள "செகண்டரி சிடிசன்" ஆக்கிடுவானுகோ ஜாக்ரத, அவ்ளோதான் சொல்வேன்.

Read More......