'ச்சும்மா ட்டமாஷ் - 75' -க்காக ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் அளித்த பேட்டியின் முதல் பாகம் சென்ற பதிவில் வெளியானது. தொடர்ந்து இது இரண்டாவது பாகம்.
சமீப காலங்களில் திமுக -வினர் கூட விமர்சனங்களை பொறுக்க மாட்டாதவர்களாக உள்ளனர். அவர்கள் (ஒருவேளை)நினைப்பதுபோல் திமுக இல்லாவிட்டால் திராவிட சிந்தனையாளர்களும் நடுநிலையாளர்களும் அரசியல் அகதிகளா என்ன?
நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நான் உணரவில்லை. விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்; அவ்வளவே. ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம் : அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?
நடுநிலை என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நடுநிலையான கருத்து என எதுவுமே இருக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்; கட்சி சாராதவர்கள் என வேண்டுமானால் சொல்லலாம்.
வலைப்பூ உலகம் வழங்கும் சுதந்திரம் அனைத்தையும் தமிழ்மணத்தால் வழங்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழ்மண பயனர்களா? தமிழ்ச்சமூகமா? நண்பர் பைத்தியக்காரன் சொன்னதுபோல், இலவச சேவை தரும் தமிழ்மண நிர்வாகிகளின் புரவல மனப்பான்மையா?
சிம்பிள் : பாண்டிச்சேரிப் பெண் பதிவர்கள் :))
நம்முடையது ஒருமாதிரியான கட்டுப்பெட்டித்தனமான, அதே சமயம் அதை மீறவும் உள்ளுக்குள் விரும்பும் ஒரு சமூகம் என்பதாய் நான் கணித்திருக்கிறேன்.
இன்னொன்று, இணையத்தில் சில இடங்களில் பொறுப்பற்ற முறையில் சுதந்திரம் (கட்டற்ற சுதந்திரம்!) பாவிக்கப்படுகிறது. இதுவும் ஆபத்தானதே.
கட்டற்ற சுதந்திரம் விளைவிக்க வாய்ப்புள்ள ஆபத்து ஒன்றை உதாரணம் கூறி விளக்க முடியுமா?
சிலருக்கு இணையம் தரும் முகமற்ற தன்மை மிரட்டல்களை விட முடிகிறது. என்னுடைய சாரு நிவேதிதாவும் ஆபாசமும் என்ற இடுகை அப்படிப்பட்ட ஒரு வலைப்பூவைப் பார்த்த எரிச்சலில் எழுதியதுதான். மேலும், பலரும் அறிந்திருக்கும் போலிப் பிரச்சனை கட்டற்ற சுதந்திரத்தினால் வந்ததே.
உலகெங்கும் பெண்டாட்டி என்பது இன்றும் வேலைக்கார வர்க்கம் தானே?
துரதிர்ஷ்டவசமாக, ஆம்!
துணைக்கண்ட அரசியலில் அதிகார உச்சிக்கு சென்றதும் பெண்கள் கிடைத்தற்கரியது கிடைத்தது போல் அதிகாரத்தை கையாள்வதேன்?
இது மிகப் பெரிய உளவியல் ஆய்விற்குரியது.
துணைக்கண்ட அரசியலில், ஒப்பீட்டளவில் ஆண்களைவிட, அரசியல் பதவியடையும் பெண்கள் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். பெனாசீர் புட்டோ, மாயாவதி, இந்திரா காந்தியிலிருந்து நம்மூர் ஜெயலலிதாவரை நிறைய உதாரணங்கள். ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்கள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருப்பதால் தப்பிப்போனார்களோ என்னவோ!
இத்தனைகாலம் அடக்கிவைக்கப் பட்டிருந்ததால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாகக்கூட இது இருக்கலாமோ?
பெண்சீன்டலை ஆணாதிக்கமாகத்தான் கொள்ளமுடியுமா? வேறு பரிமாணங்கள் அதற்கு உண்டா?
நிச்சயமாக சீண்டல் காதலின், காமத்தின் ஓர் அங்கம்தான். ஆனால் யாரைச் சீண்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம் :)
எழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே!
உங்கள் கேள்வியில் முரண் உள்ளது :)
சரோஜாதேவிக் கதைகள் உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது. சுயமைதுனத்திற்கு மட்டுமே பயன்படுவது. அல்லது உடலுறவின்போது படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்ளப் பயன்படுவது.
ஒரு வசதிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேன் : action based கதைகளை எழுதினால் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். ஆனால் என் நோக்கம் அதுவல்ல.
இன்னொன்று, குதப் புணர்ச்சி பற்றி ஒரு கதை எழுதிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பதிவிடவில்லை. அப்படியே எழுதினால் அடிக்க வருவார்கள்! மாற்றவும் கைஓடவில்லை :)
என்னுடைய கதைகளுக்கு வந்த சில அனானிப் பின்னூட்டங்களும் சில பதிவர்களின் எதிர்ப்பையும் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது! என்னுடைய கதைகள் தோல்வி என விமர்சிப்பது வேறு, வெறும் ஆபாசம் எனப் புறந்தள்ளுவது வேறல்லவா?
எல்ஃபிரெட் ஜெலனிக்கின் Piano Teacher, ழார் பத்தேலின் Story of the Eye மாதிரியான ஒரு கதையை தமிழில் வெகுஜன ஊடகத்தில்கூட வேண்டாம், சிறுபத்திரிகை ஊடகத்திலோ அல்லது மாற்று ஊடகம் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ் இணையப் பக்கங்களிலோ ஏன் எழுத முடிவதில்லை என யோசித்துப் பார்க்கலாம்.
உங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?
முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்தச் சண்டையில
கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(
"அர்ப்பணிப்பு ஆசை இல்லாத பெண்காமமும் இரக்க உணர்வு இல்லாத ஆண் காமமும் வெறும் உடற்காரணிகளின் கைவரிசையே! அவை உங்களுக்கு விதிக்கப்பட்ட காமுறும் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது, அர்பணிப்பும் இரக்கமுமே காதலாக கொள்ளப்படும்" -என்கிறார் எங்கள் பேராசிரியர்(இந்தியாவில்). இவ்விரு உணர்வுகளும் உங்கள் காமக்கதைகளில் தென்படவில்லையே? (காலச்சுவடோ அல்லது தீராநதியிலோ நான் படித்த ஒரு சிறுகதை பேராசிரியரின் இவ்வரிகளை ஞாபகப்படுத்தியது!)
என்னங்க இப்படில்லாம் கேக்கறீங்க :( அர்ப்பணிப்பு வேணுமாம் பெண்களுக்கு, இரக்க உணர்வு வேணுமாம் ஆண்களுக்கு.. இதை உடைத்துப் பார்த்தால் வரும் அர்த்தம் பெண்கள் அடிபணிய வேண்டும், ஆண் பெண்களைக் கண்டு இரக்க உணர்வோடு கலவி செய்ய வேண்டும். காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதானே இதெல்லாம்... ஏன், பெண்ணோ ஆணோ காமத்திற்காக - உடல் தேவைகளுக்காக - மட்டுமே ஓக்கக் கூடாதா?
இம்மாதிரியான ஆணாதிக்க வெறி பிடித்த பேராசிரியர்கள் இருந்தால் விளங்கிடும் :(
"ஜனரஞ்சக எழுத்து வாசகர்களை இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக உங்களது சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுக பதிவுகளை கொள்ளலாமா? அவ்வகைப்பதிவுகள் தொடருமா?
இணையத்தில் புழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாவிதமான எழுத்துகளும் தெரிந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பிடித்த வகைமாதிரி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அவ்வளவே.
எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது.
நான் எழுத நினைத்தது சிறுபத்திரிகை வாசகர்களும் பரவலாக அறியாத பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள்.
"அடிப்படை ஆதாரம் ஏதும் தரமுடியாத ஒரு கேள்வி. தமிழிஷ் திரட்டியில் உங்களுக்கு பங்கு இருக்கிறதா?
தமிழ்மணம் போலவே அதிலும் இணைந்திருக்கிறேன் :)எனக்கு கணினி அறிவே மிகக்குறைவு. ஒரு படம் இணைக்கக்கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் திரட்டியா.. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதெல்லாம் ஒன்றுமில்லை.
'ச்சும்மா ட்டமாஷ்' -வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?
கோவியார், தமிழ் சசி, லக்கி பேட்டிகள் என்று வித்தியாசமான விஷயங்களுடன் இருக்கிறது. தள்போட்சுத்ரி படித்த ஞாபகமிருக்கிறது. ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :)