வெற்றிகரமான ஆட்சி முறை என்று உலகங்கும் ஏற்கப்பட்டாலும் ஜனநாயகம் ஊருக்கு ஊர் மாறித்தான் கிடக்கின்றது. முற்றாக இல்லையென்றாலும் இந்திய வகை ஜனநாயகம் கிட்டத்தட்ட தனித்தன்மை வாய்ந்ததுதான். எவரும் அதை நமக்கு துப்பாக்கி முனையில் ஏற்றுமதி செய்யவில்லை. நாமே சுத்திகரித்த ஒன்றும் அல்ல. பனானா ரிபப்ளிக்கும் அல்ல. மன்னரில்லாத இந்திய வகை முடியாட்சிதான் நமது ஜனநாயகம். மன்னனை லாபி செய்யும் குழுக்கள் நடத்தி வந்த முடியாட்சியும் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற பப்பட் ஜனநாயகமும் சர்விகிதத்தில் கலந்துதான் இந்தியவகை ஜனநாயகம்.
போதிய அளவு நேர்மையில்லாத நம்மை பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளிடம் நேர்மை எப்போதும் பற்றாக்குறைதான். குட்டிக்கரண அரசியலை மன்னித்து விடுகிறோம். ஊழல் புகார்களை மூக்கைப்பிடித்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகிறோம். ஏதோ ஒன்றிற்காக யாரையாவது ஆதரித்துவிடுகிறோம். அந்த ஏதோ ஒன்றின் தேவை இல்லாதவர்கள் அல்லது தேவையான ஒன்று என்னவென்று தெரியாதவர்கள் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சலித்துக்கொள்கிறோம். சிலசமயம் பப்பூன்களாக மாறி பப்பூன்களை ஆட்சியில் வைத்து எல்லோரையும் பப்பூன்களாக்குகிறோம். இப்படி ஏதோ ஒருவகையில் ஜனநாயகத்தை சிறப்பாக நடாத்தி வருகிறோம்.
நம் ஜனநாயகத்தை கொண்டாட சிறப்பான காரணங்கள் ஏதும் இல்லை. குறைகளை பட்டியலிட்டாலும் அவற்றை நாம் நிவர்த்தி செய்யப்போவதில்லை. எனவே தமிழகத்தில் கடை விரித்திருக்கும் ஜனநாயக வியாபாரிகளின் வியாபார உத்திகளை பற்றிய எனது பார்வையை மட்டும் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வியாபாரத்தில் புதுமைகளை புகுத்தி வெற்றி கொள்வது, தனித்திறமைகளை தக்கவைத்து நீடித்திருப்பது, வெற்றிபெற்ற உத்திகளை காப்பி அடிப்பது மற்றும் போட்டியை சமாளிக்க எதிரியின் உத்தியையே பயன்படுத்துவது எல்லாமே வழமைதான். அரசியலிலும் இது அப்படியே பொருந்தும். அதேபோல் அரசியலில் புகுத்திய புதுமைகள் போனியாகாமல் போவதும், காலாவதியான கொள்கைகளை கட்டிக்கொண்டு காணாமல் போவதும், எதிரியை போலவே அரசியல் செய்து மக்களை மாற்று சக்திக்காக ஏங்கவைத்து விடுவதும் இயல்பானதே. இதை வியாபாரத்திலும் பார்க்கமுடியும்.
பணத்தையும், வன்முறையையும். அரசியலில் புகுத்தி புதுமை செய்த காமராஜருக்கு தனித்தன்மையும் இருந்தது. ஊழல் கரை படியாதவர் என்பதுதான் அது. அவர் புகுத்திய புதுமை நன்றாக போனியாகியது. மற்றவர்களால் காப்பியடிக்கப்பட்டது. அதே சமயம், தமிழகம் இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அவரே முதல் காரணம். அவரது எளிமை என்ற தனித்தன்மை இன்றும் நினைவுகூறப்படுகிறது. ஆனால் அது அவர் காலத்திலேயே காலாவதியாகிப்போன ஒன்று. அவரது நிறுவனம் திவாலாகி விடவில்லை என்றாலும் அவருக்குப்பின் அது வளரவே இல்லை.
அண்ணாதுரை அரசியலும் மேற்கண்ட தத்துவங்களில் இருந்து மாறாமல்தான் இருந்தது. காலாவதியான கொள்கைகளை கைவிட்டுத்தான் அரசியல் கரை சேர்ந்தார். நாவன்மையால் மக்களை சமாதானம் செய்து ஆட்சியை பிடித்தார். நீண்ட காலம் அவர் ஆட்சியில் இல்லாததால் வேறெவருடனும் ஒப்பிட முடியாது.
கலைஞர் நாவரசியலை அண்ணாவிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டார். காமராஜரின் பண அரசியலை காப்பியடித்தார். அரசியல் எதிரி எம்ஜியார் போலவே வன்முறை அரசியல் செய்தார். ஜெயலலிதாவை சமாளிக்க வம்ச எதிரிகளுடன் கூட்டணி வைத்து குட்டிக்கரண அரசியல் செய்தார். சமீப காலங்களில் ஜெயலலிதா போலவே இலவச அரசியல் செய்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தில் மவுன அரசியல் செய்து புதுமையை புகுத்தியுள்ளார். அதேசமயத்தில் காமராஜர் உருவாகிய அடித்தளத்தில் ஒரு கோட்டையையே உருவாக்கி பெரியார் வழியில் எல்லோரையும் அதன் பயனர் ஆக்கியுள்ளார். தமிழகம் இன்று உண்மையிலேயே ஒரு முன்னணி மாநிலம்.
எம்ஜியாரின் அரசியல் கம்யூனிஸ்டுகளின் அரசியலுடன் ஒப்பிட்டால் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏழைகளுக்கு இருவருமே குரல் கொடுத்தனர். கம்யூனிஸ்டுகள் வீதியில் இறங்கி குரல் கொடுத்தனர். எம்ஜியார் வெள்ளித்திரையில் குரல் கொடுத்தார். எனினும் ஏழைப்பங்காளன் வேடம் நன்றாகவே போனியாகக்கூடிய உத்திதான். காலாவதியான கொள்கைகளை சமரசமின்றி பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் கொள்கையே ஜனரஞ்சகம்தான். உலகம் உய்ய ஒரே வழிதான் உள்ளதென கருத்துடையவர்கள் கம்யூனிஸ்டுகள். எம்ஜியாரின் வழியில் தமிழகம் உய்த்தேவிட்டது (தமிழகம் இன்று கல்வியில் சிறந்திருப்பதன் காரணம் சத்துணவு திட்டம் மற்றும் தனியார் கல்லூரிகளின் பெருக்கம் போன்றவையே). ஒருதுறையில் பெற்ற புகழை மற்றொரு துறையில் புழக்கடை வாயிலாக நுழைய பயன்படுத்தி மோசடி செய்ததுதான் அவர் புகுத்திய புதுமை.
The More You Know The More You Think You Have To Know More. இது ஜெயலலிதாவுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் அவரது அராஜக அரசியல் அவருக்கு மட்டுமே கைவரக்கூடியது என்று பத்தாம் பசளியாய் நினைத்துக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. அவரது வகை அரசியலில் வென்றால் அவருக்கு லாபம். தோற்றால் அவருக்கு நஷ்டம். மக்களுக்கு எப்போதும் நஷ்டம் தான். 1991-1996 ஆட்சிகாலத்தில் லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? 2001-2006 ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டரை ஆண்டுகாலம் நஷ்டம் யாருக்கு? இறுதி இரண்டரை ஆண்டுகாலம் லாபம் யாருக்கு? சு.சாமி, சங்கராச்சாரியார், சோ, சசிகலா போன்றோர் பின்னிருந்து இயக்க கண் போன போக்கில் அரசியல் செய்வதுதான் அவரது புதிய உத்தி. விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்களிடம் இது போனியாகக்கூடும்.
நாவன்மை அரசியலில் வைகோவுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. காமராஜர் காலத்திலேயே காலாவதியாகிப்போன நேர்மையை தாமதமாக உதறியவர். விடுதலைப்புலிகள் தன்னை திமுக தலைவராக ஆக்குவார்கள் என தவறாக கணித்து நஷ்டகணக்கு எழுதிவைத்துள்ளவர். குட்டிகரன அரசியலில் தகுந்த தேர்ச்சியின்றி வியாபாரம் அதலபாதாளத்தில் உள்ளது. இவர் புகுத்திய புதுமைகள் எல்லாம் அட்டர் பிளாப்.
மருத்துவர் அய்யாவின் குட்டிக்கரண அரசியல் வெகு பிரசித்தம். ஆனால் இவர் இதில் சுயம்பு அல்ல. மொழியரசியல், ஈழத்தமிழர் அரசியல் போன்றவைகளும் காப்பி அடித்த வியாபாரத் தந்திரங்களே. இப்போது தீவிரமாக மார்க்கெட் செய்யப்பட்டு வரும் அவ்வுத்திகள் எவ்வாறு பலனளிக்கும் என அவர் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்ற அவரது பில்போர்டு தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வியாபாரம் ஜகத்ஜோதியாக நடைபெறும். சாதி சங்க அரசியல் அவரது புதுமை. மிகப்பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பேண கட்சி தொடங்கி இப்போது அவர்களின் பெருமை பேசும் அமைப்பாக மாறியிருப்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?
"புகழ் மோசடி" உத்தியை எம்ஜியாரிடமிருந்து காப்பி அடிப்பவர் யார் என்பது தெளிவு. பப்பூன் போன்ற சொல்லாடல்களை மீண்டும் இங்கு பயன்படுத்த விரும்பவில்லை.
எனது ஒரே நம்பிக்கை திருமாவளவன் மட்டுமே.
Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts
Friday, October 3, 2008
டெமாக்ரசி இண்டியன் ஸ்டைல்
at
5:46 AM
·
18
comments
Labels: அரசியல், சீரியஸ், ஜனநாயகம் 18 comments
Subscribe to:
Posts (Atom)
கொடுமை! கொடுமை!
தொடர்வோர்
திரட்டு
- பேட்டி (21)
- அரசியல் (18)
- அடாவடி (16)
- நக்கல் (16)
- சில்ப்பா குமார் (15)
- ஈழம் (14)
- ச்சும்மா ட்டமாஷ்-25 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-50 (9)
- ச்சும்மா ட்டமாஷ்-75 (9)
- காண்டு (8)
- திமுக (8)
- காமெடி (7)
- போலிடோண்டு (7)
- சீரியஸ் (6)
- டோண்டு (6)
- தமிழ் சசி (6)
- திருமா (6)
- பெண்கள் (6)
- வீடியோ (6)
- ஆப்லெட் (5)
- கோவிகண்ணன் (4)
- சமூகம் (4)
- ஜ்யோவ்ராம் சுந்தர் (4)
- பெரியார் (4)
- வலைப்பூக்கள் (4)
- வி. சிறுத்தைகள் (4)
- அப்துல்லா (3)
- குறுக்கெழுத்து (3)
- செந்தழல் ரவி (3)
- தளபோட்ச்த்ரி (3)
- திராவிடம் (3)
- பார்ப்பனீயம் (3)
- பீத்த பதிவர்கள் (3)
- மதிபாலா (3)
- மொழிபெயர்ப்பு (3)
- லக்கி லுக் (3)
- அம்மா (2)
- அருந்ததி ராய் (2)
- இடி அமீன் (2)
- உடான்ஸ் (2)
- என் துறை (2)
- கமல் (2)
- கம்யூனிசம் (2)
- கவிதை? (2)
- கில்மா (2)
- சினிமா (2)
- சிறுகதை (2)
- ஜோதிடம் (2)
- பதிவர் சந்திப்பு (2)
- பயங்கரவாதம் (2)
- பெங்கை (2)
- மீள்பதிவு (2)
- மொக்கை (2)
- ரஜினி (2)
- ரவிகுமார் (2)
- வெட்டி ஆபிசர் (2)
- அதிஷா (1)
- இட ஒதுக்கீடு (1)
- கற்பு (1)
- கவிதை (1)
- குண்டு வெடிப்பு (1)
- குத்து (1)
- சாத்திரி (1)
- சிங்காரவேலர் (1)
- ஜனநாயகம் (1)
- ஜீவானந்தம் (1)
- தனிமாநிலம் (1)
- தமிழச்சி (1)
- தம்பி (1)
- நட்சத்திர வாரம் (1)
- பட்டமளிப்பு (1)
- மதம் (1)
- முரளிகண்ணன் (1)
- விஜயகாந்த் (1)
- ஹிந்தி (1)