Wednesday, July 16, 2008

அடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா சாமீ!

·

காமக்கதைகளை எழுத்து சுதந்திரத்தினின்று விதிவிலக்கம் செய்வது அது பதிவுலகில் சகஜமாவதை என்றென்றைக்குமாக தடுப்பதாகவே முடியும். மழையில் நனையும் கதாநாயகி தமிழ் சினிமாவாவில் சில ஆண்டுகளுக்குமுன் சகஜமில்லை. அதுபோல் இன்று சகஜமாக இல்லாத காமம் சார்ந்த எழுத்துக்கள் நாளை சகஜமாகிவிடும். சகஜமாவதை தடுக்கும் பத்தாம் பசலிகளுக்கு தமிழ்மணம் செவிசாய்த்துவிட்டதால் அது தடைபடப்போவதில்லை.

காமக்கதைகள் ஒன்றும் புரட்சி வித்துக்கள் அல்ல என்றாலும் சமூகத்தில் உள்ள எழுத்து சுதந்திரத்தின் உயிர்ப்பை உரசிப்பார்க்க தேவையாயிருக்கின்றன. இவைகளை அசூசையாக நினைப்பவர்கள் நடந்துகொண்ட விதம் அற்பமாக உள்ளது. தமிழ்மணத்திற்கு புகாரளித்தவர்கள் தாம் நியாயம் என நினைத்தவற்றை பதிவுகளாக இட்டு காமக்கதை எழுதியவர்களை பெயர் குறிப்பிட்டே சாடியிருக்கலாம். அது ஒரு விவாதத்தையாவது தொடங்கியிருக்கக்கூடும். அதைவிடுத்து அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து தமிழ்மணத்தையும் தடுமாற வைத்துவிட்டனர்.

தமிழ்மணத்திற்கு தடுமாற்றம் இது முதன்முறையா என கேட்பவர்கள் தமிழ்மணத்தின் வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல் மற்றும் வனிகவியலை அறிந்தவர்களாக இருக்கக்கூடும். அடியேன் அறியேன். இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும். அதற்குள்ளாக தமிழ்மணம் தேவையின்றி நடவடிக்கை எடுத்து எழுத்து சுதந்தரம் விஷயத்தில் அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிட்டது. அறிவாளிகளும் வல்லுனர்களும் நடத்தும் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழுவில் ஒருவர் கூட இதை முன்னுணராதது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துசுதந்தரம் இன்றேல் வலைப்பூக்களே இல்லை என்பது அறிந்திருந்தும் தமிழ்மணம் தடுமாறியுள்ளது அதன் முன்னறிவிப்பில்லாத நடவடிக்கைகளே காட்டுகின்றன. நிருவாகவியலில் சிறந்த ஒரு நாட்டிலிருந்து இத்திரட்டி நடத்தப்படுவது முரண்.

இதை விட நகை முரண் என்னவென்றால் தமிழ்மணத்திற்கு எதிராக பதிவர் சுதந்தரத்திற்கு கொடிபிடிப்பவர்களில் சிலரது புனிதப்போர்தான். அவர்கள் தங்கள் பதிவுகளில் பின்னூடங்களை செலக்டிவாக வெளியிடுபவர்கள், பின்னூட்டம் எவ்வளவு டீசன்ட்டாக இருந்தாலும். கேட்டால் பெயரை குறிப்பிட்டு நையாண்டி செய்யும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை என பதில் வரக்கூடும். நைய்யாண்டி இல்லாத பின்னூட்டம் வேண்டுமானால் "ஹிண்டு" -வில் எழுதினால் தான் கிடைக்கும்.

அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் போல நாகரீகமான பின்னூட்டங்கள் சிலவற்றைக்கூட வெளியிட முகம்சுழிக்கின்றனர் சில மூத்த பதிவர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மன்னன் படத்தில் கவுண்டர் சொல்வதுதான் நியாபகம் வருகிறது. அடடடடடா! நாட்ல சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!

21 comments:

குசும்பன் said...
July 16, 2008 at 7:17 AM  

செம ஹாட்டு மச்சி:)

rapp said...
July 16, 2008 at 7:19 AM  

இதுல எனக்கு வேற ஏமாற்றம் மோகன், நான் தமிழரசி கண்டிப்பா லக்கிலுக் தான்னு நினைச்சேன்:):):)
//இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும்//
இதை நானும் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன். வர வர நாட்ல கொஞ்சம் ரசிக்கிற மாதிரி ஏ ஜோக்ஸ், கதைகள் சொல்றதுக்கு ஏகப்பட்ட பஞ்சம். அவங்கவங்க அருவெறுப்பான விஷயங்களை எழுதிட்டாலே பயங்கரமான 'மேட்டர்' என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஏ ஜோக்ஸ் மற்றும் கதைகளோட அடிப்படை நாட் என்னன்னே நெறயப் பேருக்கு தெரியல. அதான் வருத்தமா இருக்கு. இதில் கூறப் பட்டுள்ளவைகள் என் சொந்த கருத்துக்கள் மட்டுமே

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 7:19 AM  

////செம ஹாட்டு மச்சி:)///

டேங்க்ஸ் மாமே!

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 7:30 AM  

ராப்,
ஜ்யோவ்ராம் சுந்தர் எழுத்தாளர் என அறிகிறேன். அவரது காமக்கதைகள் கூட ஏமாற்றமளித்தன, ஒரே ஒரு கதை தவிர. கோவிகண்ணன் அவர்கள் எழுதியவை காமக்கதைகளே அல்ல. சிறு பிராய நிகழ்வுகளின் சுவையான விவரணைதான். "ஜட்டி" என்ற வார்த்தைக்காகவெல்லாம் லக்கிலுக் பதிவுகள் மோசம் என்பது காமெடி. அவற்றில் அவரது வழமை தான் மிளிர்ந்தது.

rapp said...
July 16, 2008 at 7:39 AM  

//ஜ்யோவ்ராம் சுந்தர் எழுத்தாளர் என அறிகிறேன். அவரது காமக்கதைகள் கூட ஏமாற்றமளித்தன//
வழிமொழிகிறேன்

Anonymous said...
July 16, 2008 at 8:44 AM  

அய்யா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூத்த பதிவர்களின் நுண்ணரசியல் இன்னும் ஏகப்பட்டவை. இன்னும் பலருடைய நிஜ முகங்கள் நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. இந்த புனித போராளிகளின் பழைய இடுகைகளையும் அவை சம்பந்தப்பட்ட இடுகைகளையும் பின்னூட்டங்களையும் தேடிப் படித்தால் காறி துப்பி விடுவீர்கள்

Anonymous said...
July 16, 2008 at 9:12 AM  

// July 16, 2008 5:20 AM
Blogger ஓசை செல்லா said...

ஆஹா, செல்லாவைத் தெரியுது, என் இணைய குரு பாலாவைத் தெரியுது, தோழன் அமலாவைத் தெரிகிறது. ABC என்று அமலா, பாலா, செல்லாவை ஆயிரக்காணவர்கள் சூழ்ந்துகொண்டு பாடாய்ப்படுத்தியது அல்லது நாங்கள் ஆர்குட்டில் பட்டபாடு தெரிகிறது! எங்களுக்காக நீங்களும் போராடியிருக்கிறீர்கள் வேறு பெயரில்! சூப்பர் நண்பா! இவ்வளவும் தெரிந்தும் என்னை தமிழச்சி சொன்னதுபோல் கறிவேப்பிலை மாதிரி, தூக்கியெறிந்தேன், இருந்தால் இரு இல்லாட்டி போ என்று சொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது நண்பா. வாழ்க்கையின் பெரும்பகுதியை இணையப்போர்களிலே கழித்து நிசவாழ்வில் அன்றாடச் சூழலுக்கே கஷ்டப்படும் என்னையெல்லாம் உங்கள் இலக்காக்கி ... என்ன வன்மம் உன் மனதில்? நிச்சயம் புரியவில்லை. ஒருவேளை நேரில் சந்தித்தால் நிச்சயம் பேசுவோம் மனம் விட்டு.//

ஒரு போராளியின் பரிதாப புலம்பல்.

புதுகை.அப்துல்லா said...
July 16, 2008 at 9:25 AM  

என்னாச்சு மோகண்ணே! ரொம்ப ஜ்சூடா இருக்கு மேட்டரு?

//இன்னும் சில நாட்களில் காமக்கதை பதிவுகளெல்லாம் சீசன் பதிவுகள் போல் காணாமல் போயிருக்கும், அல்லது தரமானவையாகியிருக்கும் அல்லது சகஜமாகியிருக்கும்//
இதை நானும் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்//

ரிப்பீட்டுடுடு

//கோவிகண்ணன் அவர்கள் எழுதியவை காமக்கதைகளே அல்ல//

கோவி.கண்ணன் ஒருமுறை மூத்த பதிவர்கள்னு யாரும் இல்லை,மூத்திரப் பதிவர்கள் தான் உண்டு என்று எழுதி இருந்தார் :)

மற்றபடி மோகன் அண்ணே என்ன சொன்னாலும் என்னிடம் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் இருக்கும்

வெண்பூ said...
July 16, 2008 at 12:37 PM  

நல்ல கருத்தாழம் மிக்க கட்டுரை மோகன். வாழ்த்துக்கள்.

//சில மூத்த பதிவருங்க தொல்ல தாங்கலடா, சாமீ! fake id -ல பதிவு போடறவன், பின்னூட்டத்த பாத்து அலற்றவன் எல்லாம் மூத்த பதிவராம்!
//

ஹா...ஹா..ஹா..

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:28 PM  

////அய்யா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூத்த பதிவர்களின் நுண்ணரசியல் இன்னும் ஏகப்பட்டவை. இன்னும் பலருடைய நிஜ முகங்கள் நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. இந்த புனித போராளிகளின் பழைய இடுகைகளையும் அவை சம்பந்தப்பட்ட இடுகைகளையும் பின்னூட்டங்களையும் தேடிப் படித்தால் காறி துப்பி விடுவீர்கள்//////

அனானி நண்பரே!
நீங்கள் எவ்வளவு எச்சரித்தாலும் சம்பந்தப்பட்ட இடுகைகளைத் தேடிபடித்து ஒரு புலனாய்வு பதிவை போடத்தான் போகிறேன். :-))))
நன்றி.

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:29 PM  

///ஒரு போராளியின் பரிதாப புலம்பல்.////
அச்சச்சோ!, பாவம்

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:36 PM  

////என்னாச்சு மோகண்ணே! ரொம்ப ஜ்சூடா இருக்கு மேட்டரு?////

அந்த பதிவில் இருந்த சில அநாகரீக வரிகளை விட மிக நாகரீகமான எனது பின்னூட்டம் வெளியிடவே இல்லை புதுகை. செம காண்டாயிடுச்சு எனக்கு.

///மற்றபடி மோகன் அண்ணே என்ன சொன்னாலும் என்னிடம் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் இருக்கும்////

குத்தால அருவியிலே குளிச்சதுபோல் இருக்கு புதுகை :-))))

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:37 PM  

/////நல்ல கருத்தாழம் மிக்க கட்டுரை மோகன். வாழ்த்துக்கள்////
மிக்க நன்றி வெண்பூ!

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 4:40 PM  

///////ஜ்யோவ்ராம் சுந்தர் எழுத்தாளர் என அறிகிறேன். அவரது காமக்கதைகள் கூட ஏமாற்றமளித்தன//
வழிமொழிகிறேன்////

ராப்,
நான் சாட்டில் உரையாடியபோது சில நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள்.

பெருசு said...
July 16, 2008 at 7:06 PM  

..

பெருசு said...
July 16, 2008 at 7:08 PM  

//அம்மணம் மட்டுமே அநாகரீகமான உடை என சட்டம் சொல்லும்போதும் பெண்களுடையை பார்த்து முகம் சுழிக்கும் சில பெருசுகள் //

அண்ணா ! என்னைக் குறிப்பிட்டு சொல்லலியே.

மோகன் கந்தசாமி said...
July 16, 2008 at 7:24 PM  

///அண்ணா ! என்னைக் குறிப்பிட்டு சொல்லலியே.////

ச்சே ச்சே, உங்கள சொல்வேனா! வேரவைங்களை சொன்னேன்.
:-))))

லக்கிலுக் said...
July 17, 2008 at 6:30 AM  

Nice post in an opt situation

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 7:06 AM  

நன்றி லக்கிலுக்

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 8:33 PM  

:-))) check!

மோகன் கந்தசாமி said...
July 17, 2008 at 8:35 PM  

this is to check the status of this post on tamizmanam