Friday, March 27, 2009

இழவு வீட்டில் சீட்டுக்கச்சேரி

· 26 comments




இறந்து கிடக்கும் ஈழத்தமிழனின் தீராப் பகையாளி ஒருவர் அவன் இழவை எடுக்க வீடுதேடி வந்திருக்கிறார். சும்மா வரவில்லை, கையில் சீட்டுக்கட்டுடன் வந்திருக்கிறார். இதுவரை பிணத்தின் அருகில் நின்று கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உறவினர் ஒருவர் சீட்டுகட்டை கண்டதும் கடைசியாக ஒருமுறை மூக்கை சிந்திவிட்டு தனக்கும் ஒரு கை போடச்சொல்லி சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார். இழவு வீட்டில் ஆரவாரமாக அரங்கேறும் சீட்டுக்கச்சேரி பிணத்தின் அருகாமையால் எவ்விதத்திலும் சோடை போகவில்லை. பகையாளி நபருடன் இழவு வீட்டுக்கு மீண்டும் வந்த முன்னாள் உறவினர் ஒருவர் எல்லோருக்கும் ரம்மி சேர்த்து கொடுத்துக் கொண்டு ஆட்டத்தின் விறுவிறுப்பு குன்றாமல் பார்த்துக் கொள்கிறார்.

இவ்வளவையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தலைவர் வெகுண்டெழுந்துவிட்டார். இழவு வீட்டில் இவர்கள் நடத்தும் சீட்டு கச்சேரி அவருக்கு மிகுந்த வேகாளத்தை உருவாக்குகிறது. தான் பலமுறை அழைத்தும் சீட்டாட வராதவர்கள் இப்போது மும்முரமாக ஆட்டத்தில் லயித்துவிட்டார்களே என்பதுதான் இவரது கோபம். இழவு விழுந்தது தன் வீட்டில்தான் என்பதை சுத்தமாக மறந்துபோனார் இந்த பிதாமகர். ஒரு பொறாமைக்காரியின் முனகலைப் போல பொறுமுகிறார்.

இதற்கிடையே பிணத்தை எடுக்கவிடாமல் அழிச்சாட்டியம் செய்யும் கடன்காரனை எப்படி சமாளிப்பது? மழுப்பலான பதிலை கடன்காரனுக்கு தந்தவாறே உள்ளக்குமுறலை அடக்கிக்கொண்டு பிணத்தை அடக்கம் செய்ய ஆகவேண்டியதை பார்த்துகொண்டிருக்கிறார் ஒரு நபர். எதிர்காலம் பற்றிய அயர்ச்சியுடனும் நிகழ்காலப் பொறுப்புடனும் அந்த நபர் நடந்து கொள்ளும்விதம் இழவு கொடுக்க வந்த அந்த சிறு கூட்டத்தின் மனத உருகச் செய்துவிடுகிறது.

-------------------


சமீபகாலமாக வலையுலக உடன்பிறப்புகளின் பதிவுகளை நோட்டம்விட்டால் அவர்கள் ஒருகருத்தை விடாமல் அங்கலாய்ப்பது புரியும். அம்மா ஆட்சியில் அடங்கி இருப்பவர்கள் இவர்களது ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்களாம்!!. இந்திய கூட்டமைப்பு தரும் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தை இவர்கள் என்னவோ கோபாலபுரத்தின் கொல்லைப் புறத்தில் உற்பத்திசெய்து அறிவாலையம் வழியாக டிஸ்ட்ரிபியூட் செய்கிறவர்கள் போல ஒரே பெருமிதம்தான் போங்கோ!! அம்மா ஆட்சியானாலும் அவங்க ஆண்டை ஆட்சியானாலும் சமூக அக்கறை உள்ளவர்களை கட்டிப்போட முடியாது. இவர்களை எதைச்செய்தாலும் சட்டவிரோதமாகத்தான் செய்யவேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சமூக விரோதிகளுக்கும் சட்டவிரோதங்களுக்கும் சராசரி இந்தியன் பயந்த காலம் மலையேறிவிட்டது என்பதை பெரிய அண்ணன்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கூடவே சிலர் ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெரும் பொறுப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு எனவும் அது கருணாநிதிக்கு வேண்டியது இல்லை என்றும் அருட்பேருரை நிகழ்த்துகிறார்கள். விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வேறுவேறு என்று கூறிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் இவர்கள் உண்மையில் இருவரும் ஒருவரே என்பதை ஆணித்தரமாக நம்புகிறவர்களாவர். போரில் ஈழத்தமிழன் செத்தாலும் விடுதலைப்புலி செத்தாலும் அதை வேறுபடுத்தி பார்க்காத ஜடங்கள். அவ்வப்போது ஈழ அவதாரம் எடுத்து ஓட்டு பொறுக்கிவிட்டு இன்று பொறுப்பை புலிகளிடம் விட்டுவிட முனைவது *******யிடம் ********விட்டு பணம் கொடுக்காமல் ஓடிவருவதற்கு சமம்.

Read More......

Tuesday, March 10, 2009

தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருணாநிதி கைது!

· 29 comments

சென்னை: 12 மார்ச், 3011: தமிழ்தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வருணாநிதி இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்ததற்காகவும், தமிழுணர்வாளர்களை ஒடுக்கியதற்காகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் குற்றவாளிக்கு அவர் தரப்பு வாதங்களை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் மன்ற குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அவ்வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணாநிதி: மக்கள் மன்றம்..., விச்சித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. மோசமான அரசியல்வாதிகளை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விச்சித்திரமும் அல்ல, வழக்காடும் நானும் அவ்வளவு மோசமான அரசியல்வாதியும் அல்ல. தமிழக அரசியலிலே, சர்வசாதாரணமாக தென்படக்கூடிய அரசியல் வியாதிகளிலே நானும் ஒருவன். ஈழ ஆதரவில் குழப்பம் விளைவித்தேன். தமிழுணர்வாளர்களை ஒடுக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. ஈழ ஆதரவிலே குழப்பம் விளைவித்தேன். ஆதரவு கூடாது என்பதற்காக அல்ல. திமுக அரசு கவிழக்கூடாது என்பதற்காக. தமிழுனர்வாளர்களை ஒடுக்கினேன். அவர்கள் உண்மைத்தமிழர்கள் என்பதற்காக அல்ல. தமிழுணர்வு கிளர்ந்து அது காங்கிரஸ்காரன் டவுசரை கிழிக்கக்கூடாது என்பதற்காக.

(அரசு தரப்பு வழக்கறிஞர் எழுந்து வருணாநிதியிடம் ஏதோ சொல்ல முனைகிறார்.)

வருணாநிதி: உனக்கேன் இவ்வளவு அக்கறை. காங்கிரஸ்காரனுக்கே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்திலே என் குடும்ப நலமும் கலந்திருக்கிறது. கட்சிக்காக தங்கள் குடும்பத்தை மறந்து கட்சி நலனே கதி என்று கிடக்கிறார்களே உண்மைத்தொண்டர்கள், அவர்களைபோல் அல்ல.

இதற்கே இப்படி குற்றம் சாட்டுகிறீர்களே, இந்த குற்றவாளியின் வாழ்க்கைப்பாதையிலே சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் அவன் நடத்தி வந்துள்ள நாடகங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். எளிதாக கரவொலியை பெற்றதில்லை நான். அரிதாரம் பூசி நடிக்க வேண்டியிருந்தது. எளிதாக ஓட்டுகளை பெற்றதில்லை நான். வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டியிருந்தது. கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழகத்திலே, திருக்குவலையிலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர். ஊரை ஏய்த்து சொத்து சேர்க்க இன்னொரு ஊர். தமிழக அரசியலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சென்னை...! கட்சியை எனக்கு தாரைவார்த்தது. காங்கிரஸ் கூட்டணியை தந்தது. இன்று கூட்டணிக்கு ஆளாய் பறக்கிறாளே என் தங்கை 'சாணி'யா அவளை ஜெயிக்க வைக்க மீண்டும் மக்களிடம் ஓடோடி வந்தேன். மோசடி அரசியல் அரசியல் செய்து ஓட்டு பொறுக்குகிறாளே, இதோ இந்த ஜாலக்காரி பயலலிதா, இவளது அரசியல் சதிவலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஓட்டு வங்கியை பறிகொடுத்தேன், ஆட்சியை இழந்தேன், கடைசியில் பதவிப் பைத்தியமாக மாறினேன். கூட்டணிக்கு வந்த தங்கையை சந்தித்தேன். பல் பிடுங்கிய பாம்பாக. ஆம். பொக்கையாக!

தங்கையின் பெயரோ 'சாணி'யா! டெரரான பெயர். கழுத்திலோ மாங்கல்யம் இல்லை. செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கண்ணிலோ பழியுணர்வு, கையிலே தமிழன் ரத்தம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அலைந்தாள், அவளுக்காக நான் அலைந்தேன். அவளுக்கு கூட்டணி ஆசை காட்டினர் பலர். அவர்களில் பேராசை பிடித்த சிலர் கைமாறாக அதிக இடங்கள் கேட்டனர். பம்மாத்து அரசியல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறானே இந்த கொடியவன் விஜயகோந்து, ஐஸ் வைத்து மடக்கமுயன்றான் என் தங்கையை. நான் மட்டும் தடுத்திராவிட்டால் அவள் அப்போதே அவனுடன் கூட்டணியை அறிவித்திருப்பாள். அவளது பதிவிரதம் பற்றி கேள்வி எழுப்பியவர்களும் கூட்டணிக்காக வந்தனர், தீவிரவாதத்தின் பெயரால், இந்திய தேசியத்தின் பெயரால். பிரதியுபகாரமாக என்னை கூட்டணியிலிருந்து கழட்டி விடச்சொன்னார்கள். மாநில அளவில் பிரச்சனை செய்தாலும் டெல்லியிலாவது என்னுடன் அனுசரணையாக இருந்திருப்பார்கள் காங்கிரசார். அவர்களை தூண்டிவிட்டது பயலலிதாதான்.

நிம்மதியிழந்த என்தங்கை அரசியலைவிட்டே செல்ல முடிவெடுத்தாள். காங்கிரசை செல்வாக்கற்ற தமிழ்நாட்டிலே அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. அவளே அழித்து முடித்து விட்டாள். சொந்த கட்சியையே அழிக்க முயல்வது ஒன்றும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அகிம்சா மூர்த்தி, ஜீவ காருண்ய சீலர், அவரே சுதந்திரத்திற்குபின் காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதத்தான் 'சாணி'யாவும் செய்து கொண்டிருக்கிறாள். அது எப்படி குற்றமாகும்?

கூட்டணிக்காக பாமக விரட்டியது, பயந்தோடினாள்; தேமுதிக துரத்தியது, மீண்டும் ஓடினாள்; அதிமுக என் தங்கையை பயமுறுத்தியது; ஓடினாள், ஓடினாள், அறிவாலயத்தின் குட்டிச்சுவர் வரை ஓடினாள். திமுகவிற்கு வேறு நாதியில்லாததால் கூட்டணியை தொடர்ந்தாள்.

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

வருணாநிதி: இல்லை அதுவும் என் வழக்குதான். காங்கிரஸ் இலங்கைக்கு ஆயுதம் தந்தது ஒரு குற்றம், ஈழ ஆதரவில் நான் குழப்பம் விளைவித்தது ஒரு குற்றம், தமிழுனர்வாளர்களை ஒடுக்கியது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்? யார், யார் காரணம்? அப்பாவிகள் ஈழத்திலே சாகிறார்களே, அது யார் குற்றம்? எங்களின் குற்றமா? அல்லது எங்கள் மீது அபரிதமான நம்பிக்கைவைத்து ஏமாந்து போகிறார்களே, அவர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர்த்தது யார் குற்றம்? குடும்பத்துக்கு ஒருபவுன் வாங்கும் வாக்காளர்கள் குற்றமா? அல்லது வாக்குகளை வாங்கி குடும்பத்துக்கு பதவிகள் தரும் எங்களின் குற்றமா? இந்த அரசியல் பெருச்சாளிகள் களையப்படும்வரை ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழர் படும் துயர் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் அரசியல் வரலாற்றில் எந்த பக்கத்தை புரட்டினாலும் காணப்படும் சுயநலம், சூழ்ச்சி, அக்கிரமம் நிறைந்த அரசியல் தத்துவம்.

நீதிபதி: உன்வாதம் பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் உன் மீது குற்றம் சாட்டி கூண்டிலேற்றினால், நீ எங்கள் மீதே குற்றம் சுமத்தக்கூடாது. எங்கள் பிட்டை எடுத்து எங்களுக்கே போடுவது டகால்டி வேலை! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ உன்னை தமிழினத்தலைவர் என்று நீயே கூறிக்கொள்றாய் என்பது உண்மையா?

வருணாநிதி: என்னை தமிழினத்தலைவர் என்பது உங்களுக்கே வேடிக்கையாய் தெரியவில்லை!!?!

வழக்கு அடுத்த மாதம் பத்தாம் தேதிவரை ஒத்தி வைக்கப் படுகிறது.

Read More......

Thursday, March 5, 2009

ஜெ - சசி, ஓரங்க நாடகம்

· 45 comments


ஈழ(இலங்கை)த் தமிழருக்காக வரும் பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான உரையை முந்தைய நாள் இரவு வரை தயாரிக்காமல் இருந்தால் எவ்வாறு தவித்துப் போவார் என்று யோசித்து பார்த்ததில்...

சசி: யக்கா! என்னா இது, விளையாட்டா?

ஜெ: என்னடி சொல்ற?


சசி: உண்ணாவிரதம் -ன்னா என்னன்னு தெரியுமா? நீபாட்டுக்கு அறிக்கை உட்டிருக்க!


ஜெ: ஓ! அதுவா? உன்னாவிரதம்னா பொதுவிடத்துல போய் சாப்பிடாம ஒக்காந்திருக்கனுண்டி, அதுதான் உண்ணாவிரதம்!


சசி: செங்கோட்டையன் வேறமாதிரி சொல்ராருக்கா?


ஜெ: வெளங்காத வெண்ணை என்னா சொல்லுது?


சசி: பொதுவிடத்துல மட்டுமில்ல, மறைவாக்கூட சாப்பிடக் கூடாதாம்!


ஜெ: அதுக்கென்ன இப்ப, ஒருவேள சாப்பிடாம இருக்க மாட்டியா?


சசி: நான் இருப்பேன், நீங்க இருப்பீங்களா?


ஜெ: அதுக்கென்ன பண்றது, இருந்துதான் ஆகணும், சும்மா வருவாளா சுகுமாரி?


சசி: யாரு சுகுமாரி? அவ எதுக்கு இங்க வரணும்? அதுவும் சும்மா!, அதுதான் நான் இருக்கேனே! அவ வேற எதுக்கு?


ஜெ: இவ ஒருத்தி, கொஞ்ச நேரம் சும்மா இரேண்டி! நானே ஒரு பெரிய கவலையில இருக்கேன்! சும்மா நொய் நொய் -னு!


சசி: என்னக்கா கவலை? அதான் பட்டினி கிடக்கரத பத்தியே நீங்க கவலை படல! சோத்துக் கவலையைவிட பெரிய கவலை என்ன?


ஜெ: காலையில உண்ணாவிரத மேடையில என்ன பேசறதுன்னு தெரியலையே? அறிக்கை எழுதித் தர பசங்கள வேற மத்தியானமே துரத்தி உட்டாச்சி, இப்ப என்ன பண்றது?


சசி: விடுக்கா, நாமே ஏதாவது யோசிப்போம்.


ஜெ: என்ன நக்கலா?..., அதெல்லாம் வேலைக்காவது, எவனுக்காவது ஃபோன் பண்ணு! எவன் எடுத்தாலும் நாலு வரி சொல்லச் சொல்லி ஒரு பேப்பர்ல எழுதிக்கோ!


சசி: சரிக்கா!...


(யாருக்கோ ஃ போன் பண்ணுகிறார்)


சசி: யக்கா... காழியூர் நாராயணன் லைன்ல இருக்கார்... பேசுறியா?


ஜெ: நடு ராத்திரியில தூங்காம என்னா பண்ணுது அந்த இம்சை... சரி நீயே பேசு, அவன் சொல்றத எழுதிக்கோ!



எதிர் முனை: நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில்...


சசி: யோவ்... உண்ணாவிரத மேடையில பேசறத்துக்கு ஏதாவது சொல்லுய்யான்னா, பல்லு வெளக்க நல்லநேரம் பாக்க சொன்ன மாதிரி நீ பாட்டுக்கு அடிச்சு உடற...


எதிர்முனை: ஒ! அப்படியா? நீங்க சொல்லவே இல்லையே, சரி... எதுக்கு உண்ணாவிரதம்?, எத பத்தி பேசணும்?


சசி: ஒரு நிமிஷம் இரு!..., யக்கா எதுக்கு உண்ணாவிரதம் -னு கேட்கறார்?


ஜெ: கிழிஞ்சுது... அந்தாள ஃபோனை வச்சிட்டு போய் தூங்கச் சொல்லுடி... இருக்குற இம்சையில இவனுங்க வேற!,


சசி: யக்கா, யாரோ மோகன் கந்தசாமியாம், பிளாக் எல்லாம் எழுதறாராம், ஏதாவது உதவி வேணுமான்னு கேட்கறார்.


ஜெ: சரி, ஸ்பீக்கர் -ல போடு

ஸ்பீக்கர்: என்னமா நல்லாருக்கீங்களா? சாப்டிங்களா? உடம்ப பாத்துக்குங்க! ஆப்பரேசன் பண்ண உடம்பு, ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, எந்த உதவி வேனுன்னானும் ஃபோன் பண்ணுங்க, ஃபோன் பண்ண முடியலன்னா நம்ப நர்ஸ் சசி கிட்ட சொல்லுங்க, அவங்க எனக்கு போன் பண்ணி சொல்வாங்க, சரியா?...


சசி: யோவ்... என்னய்யா பேசுற நீ? நீ யாருகிட்ட பேசற தெரியுமா?


ஸ்பீக்கர்: தெரியுமே! எங்கம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க, நீங்க நர்ஸ் சசி தானே?


ஜெ: டேய்! ஏண்டா இம்சை பண்றீங்க, ஃபோன வைடா!


ஸ்பீக்கர்: கவலைபடாதிங்கம்மா நான் இருக்கேன், நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன், சசி ஒழுங்கா பாத்துக்கலன்னா சொல்லுங்க வேற நர்ஸ அப்பாயிண்ட் பண்ணிடலாம், எனக்கு நீங்கதான் முக்கியம், அப்பறம்...


(சசி ஓடிவந்து ஸ்பீக்கரை கட் பண்ணுகிறார்)


ஜெ: யப்பா, மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு...


சசி: யக்கா, சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லவா?


ஜெ: வேணான்னா விடவா போற, சொல்லு!


சசி: பேசாம அறிவாலயத்துக்கே ஃபோன் பண்ணிடுவோமா?


ஜெ: சரி போடு, ஆனா பேசறது யாருன்னு சொல்லாத!


சசி: சரிக்கா...


(ஃபோன் செய்கிறார்)


சசி: ஹலோ, அறிவாலயமா?


எதிர்முனை: ஆமா, நீங்க யாரு? என்ன விஷயம்?


சசி: நாங்க அன்டார்ட்டிகா தமிழ்ச் சங்கத்தில் இருந்து பேசறோம், தலைவருக்கு பாராட்டு விழா நடத்தனும், டேட் கிடைக்குமா?


எதிர்முனை: நிச்சயமா கிடைக்கும், எங்க விழா நடத்தப் போறீங்க?


சசி: ஆர்ட்டிக் பெருங்கடல் நடுவுல மேடை போட்டுறலாம்...


எதிர்முனை: என்ன நக்கலா?... நடுக்கடல்ல வச்சா எப்படிங்க வரமுடியும்? கடற்கரையில வைங்க... கட்டவுட், சீரியல் லைட்டெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?


சசி: அது இருக்கட்டுங்க, விழா மலர்ல போடறத்துக்கு தலைவர் உரை வேணும், அதை வாங்கி கொடுங்க, முதல்ல அச்சடிச்சிடறோம், தலைவர் கையால வெளியிட்டிடலாம்...


எதிமுனை: அப்படியா? சரி, எந்த டெம்ப்ளேட் வேணும்?


சசி: டெம்ப்ளேட்டா?


எதிர்முனை: ஆமாங்க, செம்மொழி டெம்ப்ளேட், மொழிப்போர் டெம்ப்ளேட், ஈழத்தமிழர் டெம்ப்ளேட், பகுத்தறிவு டெம்ப்ளேட்...


சசி: ஆங்..ஆங்... அந்த ஈலதமிளர் டெம்ப்லேட்ட கொடுத்திருங்க...


எதிர்முனை: சொல்றேன் எழுதிக்குங்க...


"ஈழத்தில் தினம் தினம் செத்து மடியும் எம்குல கொழுந்துகளை காக்க என் இன்னுயிரையும் தருவேன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம்; கங்கை கொண்டான், கடாரம் வென்றான்...


சசி: (ரிசீவரில் கைவைத்து பொத்திய படி) யக்கா... மேட்டர் கெடைச்சிடுச்சி...நிம்மதியா போய் தூங்கு... நான் முழுசா எழுதி வைக்கிறேன், காலையில மனப்பாடம் பண்ணிக்கலாம்...


(தொடர்ந்து பேசச்சொல்லி சசிக்கு சைகை காட்டிவிட்டு பூனைபோல(?) நடந்து படுக்கைக்கு செல்கிறார் ஜெ)

Read More......

செந்தழல் ரவி: "திமுக ஒரு கீஞ்ச டவுசர்"

· 51 comments

லையுலக ஜாம்பவானும் ஜனதா கட்சி உறுப்பினருமான திரு. செந்தழல் ரவி அவர்கள் திமுக -வை ஒரு கிழிந்த கீழாடை என்று விமர்சனம் செய்கிறார். அவர் நமது வலைப்பூவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு திமுக -வை சாடுகிறார். மேலும் அவர் கூறுகையில், "அந்த கீஞ்ச டவுசரை அணிந்திருப்பதும் அம்மனக்கட்டையாய் அலைவதும் ஒன்றுதான் என்கிறார்". அவரது பேட்டியிலிருந்து...

முதலிலேயே அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுவிடுகிறேன். போலி டோண்டுவுடன் சேர்ந்து நீங்களும் பதிவெழுதினீர்களா?

நீண்ட காலம் கழித்து மீண்டும் போலி தொடர்பான கேள்வியை சந்திக்கிறேன். பெரும்பாலான புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன்(டோண்டுவை தெரியும்). போலி டோண்டு சம்பந்தமான விடயங்களை போலி டோண்டுவே மறந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. விடாது கருப்பு என்பவர் சதீஷ் என்று அனைவரும் நம்பியிருந்த காலத்தில் ஒரு பதிவை எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். ரஷ்யர்களும் பார்ப்பனர்களே என்ற ஹிஸ்டரி பதிவு அது வோல்காவிலிருந்து கங்கைவரையின் பாதிப்பு. அது விடாது கருப்பு தளத்தில் வெளியானது.
ஆனால் பின்னாளில் இந்த பிரச்சினை தீப்பற்றி எழுந்தபோது, அந்த ஒரே பதிவுக்காக என்னையும் அந்த பதிவின் ஆசிரியர் என்ற அளவில் மதிப்பளிக்கப்பட்டது (!!) அது மட்டுமா, போலி சார் செய்த பல பணிகளில் (!!) என்னையும் ஒரு கூட்டாளியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு அது சில பலரால் நம்பவும் பட்டது. ஆனால் என்னிடம் யாரும் இதைப்பற்றி கேள்வி எழுப்பவில்லை என்பது உண்மை. நீங்கள் கேட்டதால் சொல்லிவிட்டேன். அதே சமயம் செத்து சுண்ணாம்பாய் போன இந்த விடயங்களில் உண்மையை (?) மறைத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை.

சிங்கப்பூருக்கும் பெங்களூருக்கும் பனிப்போர் இருப்பது பற்றி தெரியாதவர்களுக்காக அவ்வப்போது காண்டுப் பதிவுகள் எழுதி தெரியப்படுத்துகிறீர்கள். இந்த சேவை இனியும் தொடருமா?

தொடர வேண்டாம் என்று தான் இப்போதைக்கு நினைக்கிறேன். தொப்பையும் தொந்தியுமாக அசிங்கமாக இருக்கும் ஒரு வயசானவரிடம் போய் எதுக்கு வேண்டாத வம்பு. ஹி ஹி...(விழுந்து விழுந்து சிரிக்கிறார்). மொபைலை கழுத்தில் மாட்டுவதாக நான் ஓட்டியதில் இருந்து மொபைலை பாக்கெட்டில் வைக்கிறார் போல. அந்த மொபைல் தொலையாமல் இருக்க 1001 வயசு கொடைக்கானல் குஜிலிசாமியை வேண்டுகிறேன்.

இந்த பனிப்போருக்கு அடிப்படை காரணம் அடிப்படை நேர்மையின்மை தான் என்றாலும் இவரால் மனக்காயத்துக்கு உள்ளானதுதான் என்னுடைய கோபங்களுக்கு காரணம். 'காலம்' அதை மாற்றும் என்று நினைக்கிறேன்.

போலிடோண்டு பிரச்சினைதான் முடிந்துவிட்டதே! நீங்கள் ஏன் இன்னும் பார்ப்பன அடியை வருடிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த காலத்தில் பார்ப்பனீய அடிவருடிகள் பார்ப்பனரை 'சுவாமி' என்று அழைப்பார்கள். இந்த காலத்தில் அவர்களை 'ஸார்' என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சுரணையே கிடையாதா?

றுபடியுமா?.

பார்ப்பணீயம் என்பது போலிடோண்டுவில் ஆரம்பித்து, போலிடோண்டுவில் முடிவதில்லையே. இன்றைக்கும் இரட்டைக்குவளை முறைகளும், ஊருக்கு வெளியே சேரிகளும் இருந்துகொண்டேதானே இருக்கிறது? சாதியம் மற்றும் தன்னுடைய பிறவியால் பெருமை அடைவது பலரிடம் இன்றும் இருந்துகொண்டுதானே இருக்கிறது ? இணையத்தை மட்டும் சொல்லவில்லை, பொது தளத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். எப்படி கடவுள் நம்பிக்கை என்பது நமக்கு தெரியாமலேயே நம்முள் பெற்றோர்களால் புகுத்தப்படுகிறதோ, அதே போல இந்த உயர்சாதீயமும் புகுத்தப்படுகிறதே? பார்ப்பணீயம் என்பதை பல தளங்களில் விளக்கியிருக்கிறார்கள், நானும் முயற்சி செய்திருக்கிறேன். பார்ப்பணீய சக்திகளை அடியோடு வெறுத்து ஒதுக்கவே நான் விரும்புகிறேன். நான் நினைப்பது சரி என்றால் நீங்கள் யாரை குறித்து கேட்கிறீர்கள் என்று விளங்குகிறது. அவர்' போன்றவர்களை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் காமெடி பீஸ் ஆக எடுத்துக்கொள்வதே பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பதற்கு சமம் ஆகும்.

சுரணை பற்றிய கேள்விக்கு நீங்க பதில் சொல்லவேயில்லையே, எஸ்கேப்பாகாமல் பதில் சொல்லுங்கள்.

ய்யோ தாங்கலைடா சாமீ....(சுவற்றில் முட்டிக் கொள்கிறார்). சுரணை இல்லாதவர்கள் என்று யாரை சொல்கிறீர்கள் ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களையா ? அல்லது அவர்களை அடிவருடுபவர்களையா ? பார்ப்பணீயத்தை பின்பற்றுபவர்களுகு சுரணை என்பது சிறிதும் இருக்காது என்பது ஊர் அறிந்த (??) ரகசியம். தீட்டு என்பார்கள். தொட்டுவிட்டால் இரண்டு முறை குளிப்பார்கள். ஆனால் கை நீட்டி காசு வாங்க வேண்டும் என்றால் தீட்டு எங்கோ பறந்துவிடும். "நாய் வித்த காசு குலைக்கவாடா போவுது அம்பீ" என்றும் "மீன் வித்த காசு வீச்சமா அடிக்கப்போவுது" என்றும் பல பழமொழிகளை உருவாக்கி பூசி மெழுகுவார்கள். வீட்டிலே குளிச்சு பூஜை முடிச்சுட்டாத்தான் சாப்பிடுவார்கள், ஆனால் ட்ரெயினில் பல்லு கூட விளக்காமல் காபியை ஷாப்பிடுவார்கள்.

ஆக சமயத்துக்கு தகுந்த மாதிரி, ஆபீஸ்ல ப்ளக்ஸி டைமிங் என்று ஒன்று உண்டு அல்லவா, அது மாதிரி ப்ளக்ஸி ஆச்சாரம் கடைபிடிப்பார்கள். எண்ட் ஆப் த டே, பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு நோ சுரணைஸ்.

அதே சமயம் இந்த பார்ப்பண அம்பிகள், அம்மாஞ்சிகளாக இருப்பதலேயே, அய்யோ அப்பா, சரக்கா, நானா, அய்யகோ, பொண்ணுங்க எல்லாம் சிகரெட்டு ஊதறாளுங்க தெரியுமா? நான் ரொம்ப நல்லவன் என்று எல்லாம் நவீன பெண்ணடிமைத்தனத்தையும், கட்டுப்பெட்டித்தனத்தையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பொது தளத்தில் வைப்பார்கள். இந்த விதத்தில் பார்த்தால் வரவணையானிடம் கடன் வாங்கி கிங்ஸ் புகைத்த டோண்டு சார் ரொம்ப நல்லவர்

ப்போதெல்லாம் திமுக -காரன் என்று வெளியே சொன்னால் கேவலமாக பார்க்கிறார்களாம். இந்நிலையில் நீங்கள் ஜனதா காட்சியில் இருந்து திமுக -வுக்கு தாவப் போகிறீர்கள் என்ற செய்திகள் வருகின்றன. அதை நீங்கள் மறு பரிசீலனை செய்யக் கூடாதா?

திருத்தம்... நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சார்ந்தவன் என்று அனைவருக்கும் தெரிந்ததே. சூ.சாமி மற்றும் அவருடைய கட்சியின் ஓரே பெண் உறுப்பினரான சந்திரலேகா நடத்தும் ஜனதா கட்சியில் என்னை இணைத்து இந்த கேள்வியை எழுப்பியதில் இருந்து எப்படிப்பட்ட நுண் அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. அதே சமயம், லக்கிலூக், வரவணையான் போன்ற திராவிட முன்னேற்றக்கழக தோழர்களின் கடுமையான பரப்புரையால் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டை பெறலாம் என்ற முன் முயற்சியில் ஈடுபட முனைந்தபோது, ஈழ பிரச்சினையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலையால் அதனை தள்ளிப்போட்டிருக்கிறேன்.

மேலும் இன்றைய தேதியில் திமுக ஒரு கீஞ்சி போன டவுசர், அதை அணிவதும் அம்மனகட்டையாய் அலைவதும் ஒன்றுதான்"

நீங்க ஜனதா கட்சியில் இல்லையென்றால் அக்கட்சியின் அதிகாரப் பூர்வ வலைதளத்தில் உங்கள் பெயர் உறுப்பினராக சேர்க்கப் பட்டுள்ளதே எப்படி?

வெளக்கெண்ணை மாதிரி கேள்விகள் கேட்காமல் உருப்படியாய் வேறு ஏதாவது கேட்கவும். மொக்கை போடுவதில் எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை. சீரியசாய் எதுவும் கேட்க தோன்றவில்லை என்றால் தி ஹிந்து பத்திரிக்கையை ஒரு முறை படிக்கவும். தானாய் சீரியசாகி விடுவீர்கள்.

திமுக -வுக்கு கூலிவாங்காமல் மாரடிக்கும் 'உடன் பருப்பு', 'குத்து தெலுங்கினி' மற்றும் 'பொடி டப்பா' போன்றோரை கேவலமாக திட்டி ஓரிரு வார்த்தைகள் கூறமுடியுமா?

தில் ஒரு கொடுமை என்னவென்றால், இப்போது தி.மு.க ஆட்சி மட்டும் இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி (மம்மி ஆட்சி) இருந்தது என்றால், திருமா, சீமான், நெடுமாறன், கொளத்தூர் மணி என்று அனைவரையும், ஏதாவது த்ராபை சட்டத்தை வைத்து உள்ளே அனுப்பியிருந்திருப்பார்கள். திமுக இருப்பதால் அட்லீஸ் திமுக ஒழிக என்றாவது கோஷம் இடமுடிகிறது. ஆனால் திமுகவும் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலை நாட்டுவதிலேயே குறியாக நிற்கிறது. கைகளில் அதிகாரம் இல்லை என்றால் ஆப்பு என்பது அவர்களுக்கு லேட்டாக புரிந்துவிட்டது என்றும் கொள்ளலாம். ஏற்கனவே ஈழ பிரச்சினைக்காக ஆட்சியை இழந்து ஒரு கந்தாயமும் பெயரவில்லை என்பதும் அவர்களுக்கு நினைவில் வந்து தொலைத்திருந்திருக்கலாம். இல்லையென்றால் இன்னோரு "அய்யோ கொல்றாங்களே" சீனரி ஆகியிருக்கும். முக்காவாசி ஈழ ஆதரவு உண்ணாவிரதங்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தான் நடந்தேறியிருக்கும்.

மேலும் குடும்பம் பெரிதாகிவிட்டது. அனைவரும் இணைந்துவிட்டதால் இதயம் இனித்து கண்களும் பனித்து, எல்லாருக்கும் குச்சு முட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்து சமாதானப்படுத்த முடியுமா என்ன? அட்லீஸ்ட் ஒரு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியாவது தரவேண்டாமா?

இந்த கேள்வியில் பக்கி லூக் பெயர் இல்லாதது ஆச்சர்யம் தான். ஆனால் எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கும் அவரே எரிச்சலடைந்து ஒரு நடுநிலை பதிவு போட்டுவிட்டது தான் காரணம் என்றால், வைரம் இங்கிலிஷினி, பபி பொப்பாவை கூட ஒரு நடுநிலை பதிவு போடுமாறு என்னால் கேட்டுக்கொள்ளமுடியும். கிடன் திருப்புவிடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை

மிழகத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரே நபர் ஜெயலலிதா தான். அதன் பிறகு உங்கள் கட்சித்தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு தெரியும் என்ற பேச்சு அடிபடுகிறது. உங்களுக்கு தெரியுமா?

ய்யகோ... இந்த கொடுமையை கேட்க நாதியில்லையா? இந்த கேள்வி உண்மையில்லை என்பது ஊருக்கே தெரியும். அவரது கட்சியில் சந்திரிக்காவை தவிர யாரும் இல்லை என்பது சோ ராமசாமிக்கே தெரியும்.
அப்படி இருக்கையில் அவர் கட்சியில் (?) என்னை இணைத்து மீண்டும் கேள்வியா?
ஜெயலலிதா சர்ச் பார்க்கு பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட்டீர்கள். சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கு சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே தெரியும் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஊ.ஓ.து.பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய துவக்க) படிப்பை ஆரம்பித்த நான் ஏழாவது படிக்கும்போது ஆங்கில பாடத்தில் பள்ளியிலேயே முதல் மாணவனாக (நூத்துக்கு இருபத்து எட்டு) வாங்கியவன்.

பா(ல).பா(ரதி).பிளாக் ஷீப் அவி எனி உல்.
எஸ்ஸார் எஸ்ஸார் திரீ பேக்ஸ் புல்.
குவாட்டர் பார் வால் பையன்.
குவாட்டர் பார் வரவணையான்.
குவாட்டர் பார் ஜ்யோராம் சுந்தர்.
ஆல் அதர் சரக்கு ஒன்லி பார் மீ...
எப்புடி ரைஸு...சாரி ரைம்ஸு...

டெபுடேஷனுக்காக ஐரோப்பா பயணத்தில் இருக்கிறீர்கள். இந்திய சிலிகான் வேலியில் ஓணான் அடிப்பதற்கும் ஐரோப்பிய வேலியில் ஓணான் அடிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

ந்த கேள்விக்கு சீரியசாகவே பதில் சொல்ல முடியும். அலுவலகத்தில் எதிர்ப்பட்டால் புன்னகை பூக்கிறார்கள்...வணக்கம் செலுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஏற்படும் இடையூறுகளை தங்கள் பிரச்சினை போல விசாரித்து தீர்வு சொல்கிறார்கள். உதவும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளிகள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாலு மணி நேரம் வேலை பார்த்தாலும், மெயில், பிலாகு போன்றவற்றில் நேரத்தை செலவிடாமல் முழுமையாக பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.

ஓனான் என்றவுடன் சின்ன வயதில் ஓனான் அடித்தது நியாபகம் வந்து தொலைகிறது. ஓனானை அடித்து புதைத்து வைத்து ரெண்டு நாள் கழித்து எடுத்தால் அந்த குழியில் ஒரு ரூபாய் இருக்கும் என்று என்னுடைய சகோதரன் சொன்னதால் நூற்றுக்கணக்கான ஓனான்களை குழிக்குள் அனுப்பினேன். கடைசி வரை பத்து பைசா கூட கிடைக்கவில்லை..ஓனான் ஸ்கெலட்டன்கள் தான் கிடைத்தது.

ட்டு பிகரை டாவடிப்போர் சங்கத்துக்கும் ராம் சேனாவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த நார்வே தூதுக் குழு முயற்சி செய்துவருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில், அக்குழுவை சங்கத்தின் சார்பில் ரகசியமாக சந்திப்பதற்காகத்தான் இப்போது நார்வே சென்றுள்ளீர்கள் என்று துக்ளக் செய்தி வெளியிட்டுள்ளது. இதை மறுக்கிறீர்களா?

நானூத்தைம்பது சந்தா கட்டிய வாசகர்களுக்காக வெளிவரும் துக்ளக் இதழோடு என்னை சம்பந்தப்படுத்தி, அந்த கந்தாயத்தில் என்னைப்பற்றிய செய்தி என்று சிரீலங்கா அரசாங்கம் போன்றதொரு போலி பரப்புரையை செய்வதை கண்டதும் வாழை மரத்தில் தூக்கிலிட்டுக்கொள்ளலாம் போலுள்ளது.

அட்டு பிகர் கூட கிடைக்காதவன் தான் இப்போது ராம் சேனாவில் இருக்கிறான் என்பது உண்மை என்றாலும், அந்த அட்டு இந்துத்துவ கம்பேனிக்கு சமாதானம் செய்துவைப்பதைவிட மாட்டு மூத்திர கூல் ட்ரிங்சை குடித்து தொலையலாம்



செந்தழல் ரவி போன்றவர்களிடம் பேட்டி காண்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் திடீரென கடுப்பாகி ஏக வசனத்தில் திட்டிவிடுவார்கள். அது போன்ற சூழல் இந்த பேட்டியிலும் ஏற்பட்டது. எனக்கு தாவு தீர்ந்து போய் பதிலுக்கு நானும் திட்ட, ஒரே கலவரமாகிப் போனது. அந்த சம்பவத்தை வரி மாறாமல் அடுத்து பகுதியில் வெளியிடுகிறேன்.



[தொடரும்]

Read More......

Monday, March 2, 2009

ஈலட்டமிளர் பிளாட்ஃபார்ம் -க்கு ஸ்கோப் என்ன?

· 14 comments


மூன்றாவது அணியில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் பிறருக்கு முடிந்தவரை அரசியல் மாற்றத்தை எடுத்து சொல்லவேண்டும். அப்படி ஒரு முன் முயற்சியில் ஒரு நண்பர் இறங்கினார். அவர் எதிர்கொண்டவைகளை பாருங்கள்! (ச்சும்மா கற்பனைதான்)


காட்சி 1:
அட ஏம்ப்பா உசர வாங்குறீங்க! எங்களால ஓட்டு தான் போடமுடியும். தெருவுல எறங்கி கத்தவெல்லாம் முடியாது, வி கான்ட் புராட்டஸ்ட் இன் த ஸ்ட்ரீட் யு நோ!!! ட்டமில்னு ஏதோ சொல்ற, நம்ம தாய்மொளி, அதுக்காக ஓட்டுபோடறேன்! அப்பறம் இந்த பிராமின்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு. எப்பபாரு தயிர்சாதம், பட்டுபோடவை -ன்னு ஒரே அலப்பறையா இருக்கு! அவனுங்களுக்கு எகைன்ஸ்ட்டா ஏதாவது பண்ணுவியா சொல்லு ஃபேமிலியோட வந்து ஓட்டுபோடறேன். மத்தபடி ஈலம், எர்ணாகுளம் -ன்னு சொல்லி வெறுப்பேத்தாத!!!, கலைஞரைப் பாரு! இந்த வயசுலயும் எவ்வளவு ஒலைக்கிராறு! இந்தி பாஸ்டர்ட்ஸ் இன்னைக்கு வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்கன்னா அவர் தான் காரணம். தமிழினத் தலைவர் -ன்னா அவர்தான். ஸ்ரீலன்காவுல மக்கள் கஷ்டப்டுராங்கன்னு எவ்ளோ ஒதவி செய்றாரு. ஜெயலலிதாவுக்கு இவ்ளோ பெருந்தன்மை கிடையாது.


அண்ணே! நான் வேண்ணா என் சம்பளத்திலருந்து ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு உங்க குடும்பத்துக்கு கொடுத்திடறேன்! தயசெஞ்சு எலக்சன் அன்னிக்கு பூத் பக்கம் நீங்கல்லாம் வந்திராதீங்கன்னே!


காட்சி 2:
புலிகளெல்லாம் ஸ்ரீலங்காவில் அட்டூழியம் பண்றா! கோயிலை எல்லாம் சூறை ஆடுறா! கொழந்தைங்களை எல்லாம் சுட்டுக்கொல்றா! அவாளுக்கு தனிநாடு வேணுன்னா ஆர்மிகூட சண்ட போடவேண்டியதுதானே! எதுக்கு கொழந்தைகள கொல்றா! அடிபட்டு கிடக்கிற கொழந்தைகள டிவில பாக்கறச்சே மனச போட்டு பெசயறது! அவாள அடக்குனுன்னா ஜெயலலிதாவாலதான் முடியும்.

மாமி, உங்க ஏரியாவுல எலக்சன் ஏப்ரல் பத்தாந்தேதி வருது. ஆர்யா படம் அன்னைக்குதான் ரிலீசு, அன்னைக்கி உங்க ஆபிஸ் லீவுதான? ரெண்டு டிக்கெட்ட எப்படியாவது புடிச்சிட்டு வந்திடறேன், மாமாவ கூட்டிண்டு ஷோ -வுக்கு போயிட்டு வந்துடுங்கோ. மறக்காம அவரோட செவுட்டு மிசின எடுத்துட்டு போங்க! அப்பறம் படம் புரியலன்னு எலக்சன் பூத் பக்கம் போயடப்போறாரு. படம் முடிஞ்சதும் உடனே வந்துராதேழ், சாப்டு கீப்டு ஏழு மணிக்கா வாங்கோ, சரியா?

காட்சி 3:
தனிஈழம் வேண்டும் என்று முதல்ல குரல் கொடுத்தவர் எங்க தலைவர்தான். எந்த அரசியல் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கா? அவர் எலெக்சன்ல நின்னா அவர பிரதமரா ஆக்கிடுவோம்!

அவர்தான் எலக்சன்ல நிக்கலையே! போனா போவுதுன்னு இப்ப மூன்றாவது அணிக்கு ஓட்டு போடுங்களேன்!

மூன்றாவது அணியா? அப்படின்னா?!!?


அதாவது, திருமாவோட முயற்சியில அதிமுக, திமுக தவிர்த்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருவேளை மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றேன்!


திருமாவா? அவர் எப்ப ஸ்ரீலன்காவுல இருந்து வந்தாரு? ஏன், அங்க எலக்சன்ல அவர் நிக்க முடியாதா?

டேய்! நாசமாபோரவனே! நீயெல்லாம் எதுக்குடா உசுரோட இருக்க, எலக்சன் வரத்துக்குள்ள நீயே செத்துபோயிறு!

காட்சி 4:
வல்லாதிக்க அரசுகள் உலகெங்கும் தங்கள் பொருளாதார அடியாட்களை ஏவி விட்டுள்ளன. தொழிலாளர்களை கசக்கி பிழியும் முதலாளிகள் அரசாங்கத்துடன் கூட்டுக்களவாணித்தனம் செய்கின்றனர். எதிர்வரும் புரட்சியில் எல்லாம் தலைகீழாய் மாறும். பெரும் எழுச்சி...

சார், மே ஐ கமின்?

வாங்க தோழர், என்ன விஷயம்?

ஒண்ணுமில்ல, பிரச்சாரம் பன்றதில கில்லாடி நீங்க, மூன்றாவது அணிக்கு பிரச்சாரம் பண்ற காண்ட்ராக்ட் ஒன்னு வந்திருக்கு, ரேட் பேசிருவமா?

ஓட்டரசியல்ல எங்களுக்கு நம்பிக்கை இல்லை தோழர்.

நீங்க ஓட்டு கேக்க வேணாம். வல்லாதிக்கம், இந்திய அரசு, கொடுங்கோல் அரசுன்னு பிரச்சாரம் மட்டும் பண்ணுங்க. ஒவ்வொரு மேடையிலையும் நீங்க பேசி முடிச்ச பிறகு நாங்க மேடையேறி ஓட்டு கேட்டுக்கிறோம். என்ன சொல்றீங்க?

கொள்கைன்னு ஒன்னு இருக்கே தோழர்!

அது இருக்கட்டும். அத நாங்க எந்த தொந்தரவும் பண்ணமாட்டோம். அத கையோட நீங்க கூட்டிட்டு வாங்க, கையோட கூட்டிட்டு போங்க, பிரச்சினையே இல்ல!

Read More......

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

· 60 comments

விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.

ணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?

நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.

போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?

போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.

விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?

விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.

ர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

ர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.

டேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

டேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?

மிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.

மிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்

றிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.



கோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?

டுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)

ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?

ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.

ழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?

ண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.

னிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?

மிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.

னிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.

1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது

முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!

முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?

80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.

க்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?

தாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.

லைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

மிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?

நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.

நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.

ங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.

நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.

Read More......