Saturday, June 6, 2009

கருணாநிதியிடம் 32 -கேள்விகள்

·


தமிழ்மணத்தின் அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நட்சத்திர வாரத்தின் முதல் பதிவை வெளியிடுகிறேன். 'முப்பத்திரண்டு கேள்விகள்' என்ற இந்த சங்கிலித்தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த கோவி கண்ணனுக்கு ஒரு நன்றி. அக்கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதைவிட நம் தமிழினத்தலைவர், தமிழக முதல்வர், திமுக தலைவர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் பதில் அளிப்பது சாலப் பொருத்தம் என நான் கருதியதன் விளைவே இந்த இம்சை.


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனது உண்மையான பெயர் தட்சிணா மூர்த்தி. தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன். இது மட்டும் என்ன தமிழ் பெயரா என்று கேட்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே!. மேலும், கருணாநிதி என்று விளித்தால் பிடிக்காது கலைஞர் கருணாநிதி என்று அழைத்தால் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்போது?
நிஜமாக அழுததா அல்லது முதலைக் கண்ணீர் வடித்ததா? நிஜமாக அழுதது பல ஆண்டுகளுக்கு முன். பொய்யாக அழுதது நேற்று சாயுங்காலம். இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன். அது இரவு கலைஞர் செய்திகளில் வரும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
எனக்கு பிடிக்காமலா!! ஆனால் ஆரியர்களுக்கு இந்த தமிழனின் கையெழுத்து பிடிப்பதில்லை. பிடித்திருந்தால் நான் அனுப்பிய ஒரு கடிதத்தையாவது டெல்லிக்கார ஆரியர்கள் படித்திருப்பார்களே! எனவே தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்.

4.பிடித்த மதிய உணவு!
உண்ணா விரதத்திற்கு முன் ரெண்டு இட்லி. உண்ணாவிரதத்திற்கு பின் கொஞ்சம் ஜூஸ். தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.

5. நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனேவெல்லாம் வைக்க முடியாது. ஜாதி ஓட்டு வைத்திருக்க வேண்டும். கொடுக்கிற சீட்டை வாங்கிக்கணும். நான் சொல்லும்போது 'தமிழ் தமிழ்' என்று தெருவில் இறங்கி கத்தவேண்டும். நான் போதும் என்றால் உடனே நிறுத்தவேண்டும். இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
சேதுக்கடல், ஹோக்கேனக்கள் அருவி இரண்டும் பிடிக்கும். அதில் வந்து சேர வேண்டிய பணம் வரும் வரை பிடிக்கும். மற்ற படி அவற்றில் குளிக்கவேல்லாம் பிடிக்காது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?
சட்டைப் பையை கவனிப்பேன். கட்சி நிதிக்கு கூட காசில்லாதவர்களை கவனித்து என்ன செய்வது?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எனது நடிப்பாற்றல், திரைக்கதை புருடா வசனம் எழுதுவது போன்றவை எனக்கு பிடிக்கும். ஆனால் எனது பிள்ளைகளிடம் என் பருப்பு வேகுவதில்லை. இதுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம் என்ன?
சரிபாதி என்று சொல்லமுடியாது. சரி குவாட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களிடம் பிடித்தது ஒருவருக்கொருவர் சண்டை போடாமல் இருப்பது. பிடிக்காதது எப்போதும் சண்டை போடும் பிள்ளைகளை பெற்றது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் மஞ்சள் துண்டு. நான் தோள் துண்டிற்காக வேட்டியை இழந்துவிட்டேன் என்று விமர்சிக்கிறார்கள். அந்த நெசவாளர்கள் ... சாரி ... வசவாளர்கள் வாழ்க!!!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க!
நான் எங்கே பாட்டு கேட்கிறேன்??!! என் பாட்டைத்தான் ஊரே கேட்கிறதே!!! இதோ நீங்களும் கேளுங்கள்!!

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா! - இது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு தங்கப் பேனாவை பரிசளியுங்கள். பிறகு எந்த வண்ண பேனாவாக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறேன்!

14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.

15.நீங்க அழைக்க விருக்கும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?

உடன் பருப்பு: இவரை அறிவாலயம் வாசலில் நிற்க வைத்து டவுசர் கிழித்தாலும் அசராமல், அகலாமல் அங்கேயே நிற்பார். இதுதான் இவரை அழைக்க காரணம்.

குத்து தெலுங்கினி: இவர் நிரம்ப யோசிப்பதால் லாஜிக் இல்லாமல் திமுக -வை ஆதரிப்பார்.

பொடி டப்பா: இவர் திமுக -வை ஆதரிக்க எந்த காரணமும் தேவை இல்லை. அதனால் இவரை அழைக்க வேறு எந்த காரணமும் தேவையில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு எது?
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

17.பிடித்த விளையாட்டு?
தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும். எல்லா உடன்பிறப்புகளுக்கும் இது பிடிக்க வேண்டும்.

18.கண்ணாடி அணிபவரா?
என்னய்யா கேள்வி இது!! அதை அணியவில்லை என்றால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டரியல் ஆகும் பொது அது கண்ணில் தெரிந்துவிடாதா?!!

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
திரைக்கதை எழுதுவதோடு சரி. அதை படத்தில் பார்த்து ஆயுளை குறைத்துக் கொள்ள என்னால் முடியாது. அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே! அத்திரைப் படங்களை பார்க்கும் அனைவருக்கும் என் இதயத்தில் மட்டுமல்லாமல் மருத்துவமனையிலும் இலவச இடமுண்டு. அவசர ஆம்புலன்ஸ் வசதியோடு!

20.கடைசியாக பார்த்த படம்?
கடைசியாக பார்த்த குத்தாட்டம் எதுவென்று கேட்டால் சரியாக இருக்கும். மானாட மயிலாட வெண் திரையில் வெளியிட்டால் அதை பார்ப்பேன். இதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமருக்கும் அன்னை சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
நேரு எழுதிய இராமாயணம்.

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தையெல்லாம் மாற்றுவது இல்லை. கொள்கையை மட்டும் தான் மாற்றுவேன். அடிக்கடி!!

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்!
ஷெல்லடிக்கும் போது மக்கள் அலறும் சத்தம் மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சதா அடித்துக்கொண்டு எழுப்பும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு!
வேறெங்கே! டெல்லிதான்.

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
எனக்குத் தெரியாது. ஆனால் இருப்பதாக உலகம் இன்னும் நம்புகிறது.

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்?
நான் தமிழினத் தலைவர் என்பதை உடன்பிறப்புகளே ஏற்க மறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது!

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்?
உள்ளே வேறு சாத்தான் வேண்டுமா? நாங்களே அப்படித்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
டெல்லியும் ஜன்பத் இல்லமும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. ஆனால் எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு என்பதை அடக்கத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
அவர்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. நிம்மதியாக உண்ணாவிரதம் கூட இருக்க முடியாது.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க!!
வாழ்க்கை ஒரு வட்டிக் கடை போன்றது. தேவையற்றதை அடகு வைத்து தேவையானதை பெறலாம். அவை மீண்டும் தேவைப்படும் போது மீட்டுக்கொள்ளலாம். இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி. கொள்கையை அடகு வைத்து மூழ்கிவிட்டதால் மீட்க முடியாமலே போய் விட்டது வேதனை.

134 comments:

இராம்/Raam said...
June 8, 2009 at 12:19 AM  

நட்சத்திர வார ஆரம்பத்திலே அலும்பா.... :)))

அருள் said...
June 8, 2009 at 12:30 AM  

தி.மு.க விற்கு எதிராக ஒரு முப்பது பயல தூண்டிவிட்டதை நவம்பர் புரட்சியாக நினைத்து புல்லரிக்கும் பொழுதுபோக்கு பொரட்சியாளா.

உங்கள மாதிரி கணினி வழியாவே கலகம் செய்யும் பொரட்சியாளய்ங்கள
தமிழக மக்கள் சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவுன பின்னாடியும் இப்பிடி பொலம்புனா எப்பூடி?

முரளிகண்ணன் said...
June 8, 2009 at 12:33 AM  

நட்சத்திர வாழ்த்துகள் மோகன் கந்தசாமி. கலக்குங்கள்.

Suresh Kumar said...
June 8, 2009 at 12:34 AM  

நக்கல் கலக்கல் நட்சத்திர வாழ்த்துக்கள்

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:37 AM  

///நட்சத்திர வார ஆரம்பத்திலே அலும்பா.... :)))//

ச்சும்மா ட்டமாஷு -க்கு,
நன்றி இராம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
June 8, 2009 at 12:40 AM  

தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:42 AM  

///பொழுதுபோக்கு பொரட்சியாளா.///

நான் பொழுதுபோக்கு புரட்சியாளன். நீர் முழுநேர அடிவருடி.

பை த வே! நீங்கல்லாம் இந்தப் பக்கம் வரப்படாது! ஒரு ஓரமா போய் உட்காருங்க! ஏதாவது செய்தி இருந்த கூப்பிட்டு சொல்றேன்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:43 AM  

///நட்சத்திர வாழ்த்துகள் மோகன் கந்தசாமி. கலக்குங்கள்.///

நன்றிகள் முரளிகண்ணன். நலமா?

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:45 AM  

////நக்கல் கலக்கல் நட்சத்திர வாழ்த்துக்கள்///

நன்றி சுரேஷ் குமார்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:45 AM  

///தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்!///

வாருங்கள் ஜோதி, மிக்க நன்றி.

குசும்பன் said...
June 8, 2009 at 12:48 AM  

ரைட்டு!

வாழ்த்துக்கள்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:56 AM  

////ரைட்டு!///
:-)))

//வாழ்த்துக்கள்!//
நன்றி குசும்பு!

Unknown said...
June 8, 2009 at 12:56 AM  

அசத்தல் பேட்டி !
அருமை ;)))

நட்சத்திர வாழ்த்துகள் மோகன்.

ஆ.ஞானசேகரன் said...
June 8, 2009 at 12:58 AM  

நட்சத்திர வாழ்த்துகள்.. மேலும் பதிவும் சூஊஊஊப்பர்

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 12:59 AM  

///அசத்தல் பேட்டி !
அருமை ;)))///

வாருங்கள் இளைய கரிகாலன்.

///நட்சத்திர வாழ்த்துகள் மோகன்.///

மிக்க நன்றி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:01 AM  

நன்றிகள் திரு. ஞானசேகரன்.

மயாதி said...
June 8, 2009 at 1:05 AM  

soooooooooper

சென்ஷி said...
June 8, 2009 at 1:06 AM  

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.. இந்த வாரம் அக்னி தமிழ்மணத்தை தாக்கும் போல :)))

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:13 AM  

வாருங்கள் மாயாதி. நலமா! சுற்றுப்புறத்தில் நிலைமை எவ்வாறு உள்ளது?

கோவி.கண்ணன் said...
June 8, 2009 at 1:16 AM  

செம கலக்கல் !

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:20 AM  

///இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.. ///

வாருங்கள் சென்ஷி! நலமா? நன்றிகள்

///இந்த வாரம் அக்னி தமிழ்மணத்தை தாக்கும் போல :)))////

கலைஞர் ஆட்சியில்தான் இப்படி விமர்சிக்க முடியும். அம்மா ஆட்சியில் இப்படி முடியுமா!! இன்ஃபேக்ட் கலைஞர்தான் தம்மை கலாய்க்கச் சொல்லி கடிதம் எழுதியிருந்தார்! :-)))

Unknown said...
June 8, 2009 at 1:21 AM  

அட இது நல்லா இருக்கே

இதேபோல மற்ற பிரபலங்களும் பதிலலித்தா...............

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:21 AM  

////செம கலக்கல் !////

நன்றி கோவி.

சென்ஷி said...
June 8, 2009 at 1:22 AM  

//கலைஞர் ஆட்சியில்தான் இப்படி விமர்சிக்க முடியும். அம்மா ஆட்சியில் இப்படி முடியுமா!! இன்ஃபேக்ட் கலைஞர்தான் தம்மை கலாய்க்கச் சொல்லி கடிதம் எழுதியிருந்தார்! :-)))//

அல்ட்டிமேட் :)))))))

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:24 AM  

////அட இது நல்லா இருக்கே///

வாருங்கள் ராஜேந்திரன். நன்றி.

இதேபோல மற்ற பிரபலங்களும் பதிலலித்தா..............////

அதானே!, நீங்கள் ஒருவரை முயற்சி செய்யுங்களேன்! :-))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
June 8, 2009 at 1:32 AM  

நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் :)

சரவணகுமரன் said...
June 8, 2009 at 1:44 AM  

:-))

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:45 AM  

///நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் :)////

நன்றிகள் ஜ்யோவ்ராம் சுந்தர், எப்படி இருகிறீர்கள்! உரையாடி நாட்களாகின்றன!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 1:46 AM  

வாருங்கள் குமரன் குடிலாரே! நன்றி!!!

ஜெகதீசன் said...
June 8, 2009 at 1:56 AM  

நட்சத்திர வாழ்த்துகள் மோகன் கந்தசாமி!

Beski said...
June 8, 2009 at 2:06 AM  

இனி பல பிரபலங்கள் 32 கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என நம்புறேன். ஆரம்பித்து வைத்து விட்டீர்கள்.
கலக்கல்.
நட்சத்திர வாழ்த்துக்கள்.

sathiri said...
June 8, 2009 at 2:09 AM  

வாழ்த்துக்கள்...

Anonymous said...
June 8, 2009 at 2:17 AM  

:)

It looks like karunanidhi disturbing you a lot. I feel pity for you dear.

குறை ஒன்றும் இல்லை !!! said...
June 8, 2009 at 2:22 AM  

நண்பரே ..
நல்ல உண்மைகள் (கண்டீப்பாக இது கற்பனை அல்ல ) என் தளத்தையும் சற்று எட்டி பாருங்கள் .. நானும் உங்களை போலவே முயற்சி செய்துள்ளேன் !!!


http://yellorumyellamum.blogspot.com/2009/06/blog-post.html

Indian said...
June 8, 2009 at 2:27 AM  

Super and Congrats!

Tech Shankar said...
June 8, 2009 at 2:57 AM  

congrats for Tamilmanam star

லக்கிலுக் said...
June 8, 2009 at 3:01 AM  

நட்சத்திர வாழ்த்துகள்!

பதிவு அருமை! :-)

Dominic RajaSeelan said...
June 8, 2009 at 3:05 AM  

தம்பி கலைஞரை பற்றி பேசுவது உங்களுக்கெல்லாம் பொழுது போக்கா போச்சி ,
அவருடைய திறமைக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரு சாணிக்கு சமம் . இந்த தேர்தல மக்கள் உங்கள் செருப்ப களத்தி அடிச்சும் உங்களுக்கு அறிவு வரல.

Beski said...
June 8, 2009 at 3:17 AM  

//தமிழனை உசுப்பேற்ற கருணாநிதி என்ற தமிழ் பெயர் வைத்துக்கொண்டேன்

இன்று கூட ஒரு முதலைக் கண்ணீருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறேன்

தமிழனை காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு பிடித்த மாதிரி என் கையெழுத்தை மாற்றப்போகிறேன்

தமிழனின் துயர் கண்டு இப்போதெல்லாம் உணவு உண்ண முடிவதில்லை. துக்கம் தொண்டைக் குழியை அடைக்கிறது.

இப்படி இருந்தால் நட்பு வைத்துக்கொள்வது பற்றி பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பேன்.

சட்டைப் பையை கவனிப்பேன்

எனது சர்வாதிகார நண்பர் பிரபாகரன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.

தந்தி அடித்து ஆடும் ஆட்டம் பிடிக்கும்.

அதற்குத்தான் உடன் பிறப்புகள் இருக்கிறார்களே!

எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு

இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி.//

**அவருடைய திறமைக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரு சாணிக்கு சமம்**

Anonymous said...
June 8, 2009 at 3:34 AM  

//லக்கிலுக் said...

நட்சத்திர வாழ்த்துகள்!

பதிவு அருமை! :-)

June 8, 2009 3:01 AM
Blogger Dominic RajaSeelan said...

தம்பி கலைஞரை பற்றி பேசுவது உங்களுக்கெல்லாம் பொழுது போக்கா போச்சி ,
அவருடைய திறமைக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரு சாணிக்கு சமம் . இந்த தேர்தல மக்கள் உங்கள் செருப்ப களத்தி அடிச்சும் உங்களுக்கு அறிவு வரல.//

ஒரு அடிமை(கருணாநிதியின் அடிமை) பதிவு அருமை என்று சொல்கிறது!
இன்னொரு அடிமை செருப்பு பருப்புன்குது.
இந்த உடன்பிரப்புகளையே புரிஞ்சுக்க முடியலையே?
இடையில் காந்தி விளையாண்டுருக்குமோ?
கரண்ட் போனதா ஒன்னும் தெரியலையே?

தமிழன்-கறுப்பி... said...
June 8, 2009 at 3:56 AM  

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...
June 8, 2009 at 3:57 AM  

பல அதிரடிகளை எதிர்பார்க்கிறேன்...

:))

Anonymous said...
June 8, 2009 at 4:14 AM  

dhesam gnanam kalvi easun poosai ellaam kaasu mun sellaathadi..

கிரி said...
June 8, 2009 at 4:19 AM  

ஆரம்பமே அதகளமா இருக்கே!..நட்சத்திர வாழ்த்துக்கள்

பதி said...
June 8, 2009 at 5:41 AM  

அருமையான ஆரம்பம்...

நட்சத்திரப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !! :)

சின்னப் பையன் said...
June 8, 2009 at 6:09 AM  

தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்!

Vishalivinh said...
June 8, 2009 at 6:09 AM  

அய்யா,
வடிவேலு சொல்வது போல் " டேய் இன்னுமாடா இந்த வுலகம் நம்ம நம்புது" அது அவங்களோட விதி- இது தான் சரியாய்இருக்கும்.

Vishalivinh said...
June 8, 2009 at 6:09 AM  

அய்யா,
வடிவேலு சொல்வது போல் " டேய் இன்னுமாடா இந்த வுலகம் நம்ம நம்புது" அது அவங்களோட விதி- இது தான் சரியாய்இருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...
June 8, 2009 at 6:30 AM  

நட்சத்திர வாழ்த்துகள் மோகன் அண்ணே. கலக்குங்கள்.

:)

சித்து said...
June 8, 2009 at 7:45 AM  

சூப்பர் அப்பு

TBCD said...
June 8, 2009 at 8:17 AM  

விண்மீன் வார வாழ்த்துக்கள் !

நசரேயன் said...
June 8, 2009 at 8:47 AM  

நட்சத்திர வாழ்த்துகள் மோகன்..அதிரடி ஆரம்பம் நடக்கட்டும்

Thekkikattan|தெகா said...
June 8, 2009 at 9:36 AM  

ஹா, ஹா ... வணக்கம் மோகன்! இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.

நட்சத்திர வாழ்த்துக்கள்!!

சகாதேவன் said...
June 8, 2009 at 9:39 AM  

சரி குவார்ட்டர், பச்சைதாள் மணம், உண்ணாவிரதம், பதில்கள் எல்லாம் அருமை.
சகாதேவன்

TAMIL said...
June 8, 2009 at 10:27 AM  

நட்சத்திர வாழ்த்துகள்.. மேலும் பதிவும் சூஊஊஊப்பர்

பனையூரான் said...
June 8, 2009 at 10:48 AM  

நல்லா இருந்தது

ILA (a) இளா said...
June 8, 2009 at 11:30 AM  

நட்சத்திர வாழ்த்துக்கள்!

5 க்கு கேள்விக்கு " ஆக மொத்தம் பா.ம.க மாதிரி இருக்கனும்"னு ஒற்றை வரி சேர்த்திருந்தால் சரியா இருந்திருக்குமோ?

gulf-tamilan said...
June 8, 2009 at 11:54 AM  

நட்சத்திர வாழ்த்துகள்!!!

Rajes kannan said...
June 8, 2009 at 12:16 PM  

நட்சத்திர பதிவு. ஜொலிக்குது.

Anonymous said...
June 8, 2009 at 1:45 PM  

karunanithi pathilalikkatha kellvikal endu oru book poodalam endu irukkiran. neenga venra.

eelathamilrkal meethu neenga solliyum kundu veesurangale?
malai vittum thoovanam vidavillai.

kevalammana neena piravi. athai nakkum arul poondra naaikal. enna saivathu tamillan appadithan iruppan.

ராம கிருஷ்ணன் said...
June 8, 2009 at 2:21 PM  

வலையுலக கலக கண்மணிகளின் அக்குரும்பு தாங்க முடியவில்லை. அவர்களை பற்றிய கொலைஞரின் எண்ணங்களை அறிந்ததும் மனசுக்கு இதமாக இருந்தது. உங்கள் பதிவு ஒரு ஆறுதல்.

குடுகுடுப்பை said...
June 8, 2009 at 3:53 PM  

வாழ்த்துக்கள் மோகன்.

எம்.எம்.அப்துல்லா said...
June 8, 2009 6:30 AM

நட்சத்திர வாழ்த்துகள் மோகன் அண்ணே. கலக்குங்கள்.

:)
//

அந்த மூன்று பதிவரோடு அப்துல்லாவை ஏன் சேர்க்கவில்லை.?

துளசி கோபால் said...
June 8, 2009 at 5:39 PM  

ஹைய்யோ:-)))))))

கலக்கலோ கலக்கல்!!!


நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:23 PM  

///நட்சத்திர வாழ்த்துகள் மோகன் கந்தசாமி!//

மிக்க நன்றி ஜெகதீசன்!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:26 PM  

////இனி பல பிரபலங்கள் 32 கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என நம்புறேன். ///

நாம் நேரடியாகவும் கேட்க முடியாது. ஜால்ரா பத்திரிக்கைகளும் கேட்காது. இப்படித்தான் நாமே கேட்டு பதில் பெற்றுக்கொள்ளவேண்டும் போலிருக்கு. இவ்வாறு ஏனைய அரசியல் பிரபலங்களும் பதிலளிக்க வேண்டும்!!!!

///கலக்கல்.
நட்சத்திர வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி எவனோ ஒருவன்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:27 PM  

///வாழ்த்துக்கள்...///

வாருங்கள் சாத்திரி! நலமா?

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:31 PM  

////:)
It looks like karunanidhi disturbing you a lot. I feel pity for you dear.///

அவர் உங்களையெல்லாம் பார்த்து 'பாவம் பச்ச புள்ளைங்க, கள்ளங்கபடமில்லாம காலடியில கிடக்குதுகள்' என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்னிடத்தில் பாவப் படுகிறீர்களே! நன்றி நன்றி!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:34 PM  

////நண்பரே ..
நல்ல உண்மைகள் (கண்டீப்பாக இது கற்பனை அல்ல ) என் தளத்தையும் சற்று எட்டி பாருங்கள் .. நானும் உங்களை போலவே முயற்சி செய்துள்ளேன் !!!///

உங்கள் அந்த பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன். ஜெ -வுக்கு துரோகப்பட்டம் கட்டி தன் வாரிசுகளுக்கு பட்டாபிசேகம் செய்பவர். நீங்கள் சொல்லியதுதான் நடந்திருக்கும்.

நன்றி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:35 PM  

///Super and Congrats!///

நன்றி இந்தியன்! பல நாள் கழித்து மீண்டும் வந்துள்ளீர்கள்! பிஸியா??!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:37 PM  

////congrats for Tamilmanam star//

நன்றி தமிழ்நெஞ்சம்!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 6:38 PM  

////நட்சத்திர வாழ்த்துகள்!//

வாங்க லக்கி!!

பதிவு அருமை! :-)///

நன்றி!! நன்றி!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:20 PM  

////தம்பி கலைஞரை பற்றி பேசுவது உங்களுக்கெல்லாம் பொழுது போக்கா போச்சி//

ஆமாண்ணே!

///அவருடைய திறமைக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரு சாணிக்கு சமம் .///

நீங்களும்மான்னே சாணி! வேணாம்னே அது ரொம்ப நாறும்! வேற எதற்காகவது சமானமா இருங்கண்ணே!

///இந்த தேர்தல மக்கள் உங்கள் செருப்ப களத்தி அடிச்சும் உங்களுக்கு அறிவு வரல.//

அதே மக்கள் அதே செருப்பால உங்கள எத்தனை முறை அடிச்சிருக்காங்க! அப்பவெல்லாம் உங்களுக்கு அறிவு வந்துச்சா வரலையான்னு நாங்க கேட்டோமா? என்னன்னே நியாயம் இது!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:27 PM  

///எப்படி இருந்தாலும் பதவி மட்டும் இருக்கவேண்டும் என்கின்ற ஆசையுண்டு

இப்போதைக்கு தேவையற்றது தமிழின அரசியல். தேவையானது பதவி.//

**அவருடைய திறமைக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரு சாணிக்கு சமம்**///

எவனோ ஒருவன் சார்! நீங்க சுட்டிக்காட்டிய அந்த 'திறமை'களுக்கு முன்புதான் நாம் சாணியாம்! என்ன கொடுமை சாணி... ச்சே..சார், இது!!

நன்றி எவனோ ஒருவன்!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:29 PM  

////ஒரு அடிமை(கருணாநிதியின் அடிமை) பதிவு அருமை என்று சொல்கிறது!
இன்னொரு அடிமை செருப்பு பருப்புன்குது.
இந்த உடன்பிரப்புகளையே புரிஞ்சுக்க முடியலையே?///

இது சரி.

///இடையில் காந்தி விளையாண்டுருக்குமோ?
கரண்ட் போனதா ஒன்னும் தெரியலையே?///

இது சரியா??

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:30 PM  

////நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணன்..///

நன்றி தமிழன் கறுப்பி.

///பல அதிரடிகளை எதிர்பார்க்கிறேன்...

:))///

கைவசம் இருக்கு! இறக்கிடுவோம்.!!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:32 PM  

////dhesam gnanam kalvi easun poosai ellaam kaasu mun sellaathadi..///

அவர் பிட்ட எடுத்து அவருக்கேவா! நச்!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:34 PM  

////ஆரம்பமே அதகளமா இருக்கே!..நட்சத்திர வாழ்த்துக்கள்////

அதகளம் தான் கிரி, எனினும் எல்லை அறிவேன்.
நலமா!!, நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:35 PM  

///அருமையான ஆரம்பம்...

நட்சத்திரப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !! :)///

வாங்க பதி!! நன்றி நன்றி!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:36 PM  

///தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்!///

அடடடடா!!! வாங்க ச்சின்ஸ்

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:45 PM  

////அய்யா,
வடிவேலு சொல்வது போல் " டேய் இன்னுமாடா இந்த வுலகம் நம்ம நம்புது" அது அவங்களோட விதி- இது தான் சரியாய்இருக்கும்.///

ஹாஹா!! வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கிட்டீன்களே, வைஷாலிவின். நன்றி!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:46 PM  

/////நட்சத்திர வாழ்த்துகள் மோகன் அண்ணே. கலக்குங்கள்.

:)/////

ஹேஏஏ.... , வாங்க அப்து அண்ணே!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:47 PM  

///சூப்பர் அப்பு//

நன்றி சித்து!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:48 PM  

////விண்மீன் வார வாழ்த்துக்கள் !///

வாங்க முன்னோடி டிபிசிடி!!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:49 PM  

////நட்சத்திர வாழ்த்துகள் மோகன்..அதிரடி ஆரம்பம் நடக்கட்டும்///

ஆசீர்வாதம் அண்ணாச்சி!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:50 PM  

////ஹா, ஹா ... வணக்கம் மோகன்! இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.///

ஜமாய்ப்போம், தெகி!!!

நட்சத்திர வாழ்த்துக்கள்!!////

நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:51 PM  

////சரி குவார்ட்டர், பச்சைதாள் மணம், உண்ணாவிரதம், பதில்கள் எல்லாம் அருமை.///

நன்றி சகாதேவன்!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:52 PM  

////நட்சத்திர வாழ்த்துகள்.. மேலும் பதிவும் சூஊஊஊப்பர்///

நன்றி தமிழ்!!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:55 PM  

வாங்க பனையூரான்!!

////தமிழன் என்று கூறிக்கொள்கிறோம்.
எத்தனை பேர் தமிழில் கையெழுத்திடுகின்றோம்(கையொப்பம்)????///

நான் தமிழில் தான் கையோப்பமிடுவேன். தமிழன் என்பதற்காக அல்ல. தமிழ் எப்போதும் வசீகரமானது. கம்பீரமானது. அதற்காக!!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:56 PM  

////நட்சத்திர வாழ்த்துக்கள்!///

நன்றி இளா!!

5 க்கு கேள்விக்கு " ஆக மொத்தம் பா.ம.க மாதிரி இருக்கனும்"னு ஒற்றை வரி சேர்த்திருந்தால் சரியா இருந்திருக்குமோ?//

பாய்ண்ட்!!!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:58 PM  

////நட்சத்திர வாழ்த்துகள்!!!///

நன்றி கல்ஃப் ஜி!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 7:59 PM  

////நட்சத்திர பதிவு. ஜொலிக்குது.///

நன்றி சிங்கை கண்ணன்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 8:03 PM  

///karunanithi pathilalikkatha kellvikal endu oru book poodalam endu irukkiran. neenga venra.

eelathamilrkal meethu neenga solliyum kundu veesurangale?
malai vittum thoovanam vidavillai.

kevalammana neena piravi. athai nakkum arul poondra naaikal. enna saivathu tamillan appadithan iruppan.///

நம் எந்த கேள்விக்கும் பதில் வராது நண்பா! வசவாளர்கள் வாழ்க என்று பதில் வரும். அல்லது மற்றவர்கள் யோக்கியமா என்று எதிர் கேள்வி வரும். அவ்ளோதான்!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 8:04 PM  

///. உங்கள் பதிவு ஒரு ஆறுதல்.///

நன்றி ராம கிருஷ்ணன்.

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 8:12 PM  

///வாழ்த்துக்கள் மோகன்.//

நன்றி குடுகுடுப்பையார் !!!

////

///அந்த மூன்று பதிவரோடு அப்துல்லாவை ஏன் சேர்க்கவில்லை.?///

அவரும் தலைவரின் பல்டியை பார்த்து வேதனைதான் அடைந்தார்.
சாட்டில் பேசினோமே இது பற்றி!!

மேலும் இவர்களது ருக்குமணி வண்டி நன்றாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் கருணாநிதி பற்றி நாம் வாயைத் திறந்தாலே சில உடன் பருப்புகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அப்து அண்ணே அப்படியல்லவே!

மோகன் கந்தசாமி said...
June 8, 2009 at 8:13 PM  

///ஹைய்யோ:-)))))))
கலக்கலோ கலக்கல்!!!///

வாங்க திருமதி. துளசி.

///நட்சத்திர வாழ்த்து(க்)கள்.///

நன்றிகள். மீண்டும் வாருங்கள்!!

கானா பிரபா said...
June 8, 2009 at 11:12 PM  

கலக்கல் :)

நட்சத்திர வாழ்த்துக்கள்

goma said...
June 8, 2009 at 11:56 PM  

அப்படி போடு போடு பிளாகாலே...
இந்த போடு போதுமா இன்னும் கொஞ்சம் போடணுமா...

ttpian said...
June 9, 2009 at 2:28 AM  

தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்....

குழலி / Kuzhali said...
June 9, 2009 at 8:02 AM  

சிரிச்சி சிரிச்சி முடியலையா...ஏன்? ஏன்னு கேட்க்கிறேன்...

வாழ்த்துகள்

Unknown said...
June 9, 2009 at 8:49 AM  

சூப்பர் அப்பு

Unknown said...
June 9, 2009 at 8:50 AM  

தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்....

வால்பையன் said...
June 9, 2009 at 12:13 PM  

:)

ஆரம்பமே அதிரடியா இருக்கே!

Santhosh said...
June 9, 2009 at 3:51 PM  

ஹஹஹ.. மோகன் கலக்கல்.. ஆரம்பமே அசத்தலா இருக்கு :)..

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:00 PM  

///கலக்கல் :)

நட்சத்திர வாழ்த்துக்கள்///

நன்றி பிரபா!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:05 PM  

////அப்படி போடு போடு பிளாகாலே...
இந்த போடு போதுமா இன்னும் கொஞ்சம் போடணுமா///

எவ்வளவு போட்டாலும் தகும். இன்னும் கொஞ்சம் போடலாம் அடுத்த பதிவில்!!:-)))

நன்றி goma!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:08 PM  

///தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்.////

நேரடியாய் தாக்குவது ஓநாய், கமுக்கமாக கழுத்தை கவ்வுவது குள்ளநரி; ஒன்று ஓநாய், இன்னொன்று குள்ள நரி!!

நன்றி ttpian!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:10 PM  

///சிரிச்சி சிரிச்சி முடியலையா...ஏன்? ஏன்னு கேட்க்கிறேன்...

வாழ்த்துகள்///

வாருங்கள் குழலி! நன்றி! நலமா?

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:12 PM  

///சூப்பர் அப்பு///

நன்றி ஸ்ரீ!

///தி.மு.க/ அ.தி.மு.க- இந்த இரன்டு ஓநாய்களும் 20 வருடன்கலாக ஒன்ட்ருடன் ஒன்ரு சண்டை பிடிக்கும்:கடித்து குதரும்....
இந்த இரண்டுக்கும் எந்த ஆபத்தும் இல்லை...
ஆனால் அழிந்ததது தமிழ் இனம்தான்....///

இன்னம் கொஞ்சம் மிச்சம் இருக்கே! அதற்குள்ளாகவா!!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:14 PM  

///:)

ஆரம்பமே அதிரடியா இருக்கே!///

வாங்க மிஸ்டர் வால்! நீங்கள் எதிர்பார்க்கும் பேட்டியும் விரைவிலேயே! பூர்வாங்க வேலைகள் பாக்கி உள்ளன! மிக்க நன்றி!

மோகன் கந்தசாமி said...
June 9, 2009 at 7:15 PM  

///ஹஹஹ.. மோகன் கலக்கல்.. ஆரம்பமே அசத்தலா இருக்கு :)..///

அது அப்படியே தொடரும் சந்தோஷ்! நன்றி!!

தீபக் வாசுதேவன் said...
June 10, 2009 at 2:24 AM  

ஒரு முப்பது கேள்வியில தி. மு. கழகத்தின் ஜாதகத்தையே அலசி எடுத்திருக்கே. சூப்பர்!!

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...
June 10, 2009 at 6:20 AM  

அப்பு....


//14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.//

சிகப்பு நோட்டு மணம் தான் பிடிக்கும்...

Unknown said...
June 10, 2009 at 7:04 AM  

poya mokai beladeu

Anonymous said...
June 10, 2009 at 7:05 AM  

poya mokai blade du

Muthu said...
June 10, 2009 at 7:24 AM  

ஹிஹி..இப்பத்தான் பார்த்தேன்.

லாஜீக்கா? துரை என்னென்னவோ பேசுது.அது ஏன்னாக்கா..............................


இந்த பதிவின் ரெண்டாவது காமெண்ட்வை படிக்கவும்.

Muthu said...
June 10, 2009 at 7:25 AM  

பி.கு...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

ஸ்வாதி said...
June 10, 2009 at 2:01 PM  

அவருடைய மெனுவைப் பற்றிய கேள்வியும் பதிலும் தான் எனக்கு பிடிச்சது..உலக பிரசித்தி பெற்ற உண்ணாவிரதமாச்சே..!! :):)

பதிவுக்கும், நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கும் வாழ்த்துகள் சகோதரரே!

அன்புடன்
சுவாதி

Kannabiran, Ravi Shankar (KRS) said...
June 10, 2009 at 11:40 PM  

நட்சத்திர வார அலம்பல் வாழ்த்துக்கள் மோகன்! :)

அது என்ன 32? கூட்டுத் தொகை 5! கலைஞர் ராசி எண்ணோ? :))

அப்பாலிக்கா... மீள்பதிவு எல்லாம் நட்சத்திர வாரத்தின் கடைசீல போடணும்! மொதல்லயே போட்டா எப்படி? ஒழுங்கா கண் முழிச்சி கிடு கிடு-ன்னு பதிவு எழுதுங்க!
நட்சத்திர நேர்காணல் ஒன்னு வையுங்க! :)

நாகு (Nagu) said...
June 11, 2009 at 7:40 AM  

32ம் 32 நச்! அருமையான ஆரம்பம். நட்சத்திர வார வாழ்த்துக்கள்....

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:15 PM  

////ஒரு முப்பது கேள்வியில தி. மு. கழகத்தின் ஜாதகத்தையே அலசி எடுத்திருக்கே. சூப்பர்!!///

நன்றி தீபக்! மீண்டும் வருக!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:17 PM  

///அப்பு....


//14.பிடித்த மணம்?
பணப்பெட்டியை திறந்ததும் வரும் அந்த பச்சை தாளின் மனம்.//

சிகப்பு நோட்டு மணம் தான் பிடிக்கும்...///

குரு சிஷ்யன் -ல ரஜினி சொல்ற ரெட் மணியா?

நன்றி அப்பு!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:18 PM  

//poya mokai beladeu//

நாராயணா! இந்த கொசுத்தொல்ல தாங்கலடா சாமி!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:20 PM  

///ஹிஹி..இப்பத்தான் பார்த்தேன்.

லாஜீக்கா? துரை என்னென்னவோ பேசுது.அது ஏன்னாக்கா..............................///

:-)))

///இந்த பதிவின் ரெண்டாவது காமெண்ட்வை படிக்கவும்.//

நீங்க http://mohankandasami.blogspot.com/2009/05/blog-post.html இந்த பதிவின் முதல் பாராவை படிக்கவும்

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:22 PM  

///பி.கு...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.//

அப்பிடியா! நன்றி! :-))

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:24 PM  

////அவருடைய மெனுவைப் பற்றிய கேள்வியும் பதிலும் தான் எனக்கு பிடிச்சது..உலக பிரசித்தி பெற்ற உண்ணாவிரதமாச்சே..!! :):)//

பின்ன கலைஞர் -ன்னா சும்மாவா??!!

//பதிவுக்கும், நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கும் வாழ்த்துகள் சகோதரரே!///
அன்புடன்
சுவாதி//

மிக்க நன்றி சுவாதி!!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:25 PM  

///உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/bcorner.asp//

நன்றி கலையரசன்! மீண்டும் வாருங்கள்!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:27 PM  

///நட்சத்திர வார அலம்பல் வாழ்த்துக்கள் மோகன்! :)///

நன்றி KRS! நலமா??!!

///அது என்ன 32? கூட்டுத் தொகை 5! கலைஞர் ராசி எண்ணோ? :))///

முப்பத்திரண்டு கேள்விகள் என்று தொடர் ஓட்டம் போகுது, அதான்! :-))

///அப்பாலிக்கா... மீள்பதிவு எல்லாம் நட்சத்திர வாரத்தின் கடைசீல போடணும்! மொதல்லயே போட்டா எப்படி? ஒழுங்கா கண் முழிச்சி கிடு கிடு-ன்னு பதிவு எழுதுங்க!///

ஹி ஹி!!!

///நட்சத்திர நேர்காணல் ஒன்னு வையுங்க! :)///

ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் நண்பரே! மிக்க நன்றி !!

மோகன் கந்தசாமி said...
June 11, 2009 at 9:33 PM  

///32ம் 32 நச்! அருமையான ஆரம்பம். நட்சத்திர வார வாழ்த்துக்கள்....///

நன்றி நாகு!

Muthu said...
June 11, 2009 at 11:57 PM  

//இந்த பதிவின் முதல் பாராவை படிக்கவும்
மோகன் கந்தசாமி //

ஏற்கனவே படிச்சதுதான்:)


///நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.//

அப்பிடியா! நன்றி! :-))//

பேட் டேஸ்ட்..நான் இதை எதி்ர்ப்பார்க்கவில்லை.புரிய வைத்ததற்கு நன்றி.

என் கடைசி காமெண்ட்.

விக்னேஷ்வரி said...
June 12, 2009 at 6:49 AM  

ரொம்ப சரியா எழுதிருக்கீங்க. இதை அப்படியே அவர் வீட்டுக்கும் ஒரு காப்பி எடுத்து அனுப்புங்க. ;)))))))

மங்களூர் சிவா said...
June 13, 2009 at 9:53 AM  

:))))))))))))))
ROTFL

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 9:28 PM  

///பேட் டேஸ்ட்..நான் இதை எதி்ர்ப்பார்க்கவில்லை.புரிய வைத்ததற்கு நன்றி.
என் கடைசி காமெண்ட்.///

பதில் மடல் எங்கே?!

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 9:29 PM  

////ரொம்ப சரியா எழுதிருக்கீங்க. இதை அப்படியே அவர் வீட்டுக்கும் ஒரு காப்பி எடுத்து அனுப்புங்க. ;)))))))///

ஹா ஹா! அப்படியா சொல்றிங்க!?

மோகன் கந்தசாமி said...
June 15, 2009 at 9:29 PM  

////:))))))))))))))
ROTFL

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!///

நன்றி சிவா!