Wednesday, June 4, 2008

முப்பது நாட்களில் பிகர் மடிப்பது எப்படி?

·

இவ்வவசர கதி உலகத்தில் பிகர் மடிப்பதற்கான கால அவகாசமும், இக்கலையில் இருக்கும் தற்கால ட்ரெண்ட் பற்றிய அறிதலுக்கான கையேடுகளும் மிகக்குறைவு என்பதை கருத்தில் கொண்டு ஆண்களுக்கான இவ்வழிகாட்டி தயாரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மற்றும் அதன் நகர்புற பெண்களை மையப்படுத்தி இக்கையேடு வெளியிடப்படுகிறது. பிற்காலத்தில் மற்ற பகுதிப் பெண்கள் குறித்த கையேடுகள் தகுந்த வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து பிரசுரம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

டிஸ்கிளைமர்:
இக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் வெறும் வழிகாட்டும் நெறிமுறைகளே. முயற்சிகளின் வெற்றிக்கு எவ்வித உத்திரவாதமும் உறுதி செய்யப்படாது. உலகெங்கும் உள்ள நடைமுறைகளின் பிராந்தியமயமாக்கப்பட்ட தொகுப்பே இக்கையேடு அன்றி வேறல்ல.

தகுதிகள்:
இக்கையேட்டின் பயனாளிகளுக்கு கீழ்கண்ட தகுதிகள் இருப்பதாக முன்முடிவு கொள்ளப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

1. விலையுயர்ந்த கார் (சொந்தம் / இரவல்) அல்லது ஒரு காயலான் கடை பைக். பைக் தரும் இரைச்சலையும், புகையையும் பொறுத்தே பலன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
2. சில மணி நேரங்களில் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை புரட்டும் அளவிற்கு வாய்த்திறமை மற்றும் அதற்குத்தகுந்த நட்பு வட்டாரம்.
3. சிரிக்காமல் பொய் சொல்லும் திறன்.(இல்லாவிட்டாலும் நாளடைவில் கற்க முடியும்)
4. நினைத்த மாத்திரத்தில் நண்பர்களை வெட்டிவிடும் துணிவு. அவர்கள் தயவு பிறகு தேவைப்படும் எனில் எதாவது பாரில் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
5. லேட்டஸ்ட் செல்போன். முதலில் இரவல் வாங்கி பிலிம் காட்டி விட்டு பின் அது தொலைந்துவிட்டது எனக்கூறி ரெகுலர் பஜார் போனை பயன்படுத்தலாம்.
6. இறுதியாக மொக்கைகளை காது வலிக்க பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம்.
நாள் 1 - 3: தேர்தல்
பெரும்பாலான தோல்வியில் முடியும் முயற்சிகள் தகுந்த தேர்வின்மையால் வருவதேயாகும். ஆகவே சரியான பெண்ணை தேர்ந்தெடுத்தல் அவசியமாகிறது. அடிப்படையில் இதற்கு, பெண்கள் வகை பற்றிய புரிதல் வேண்டும். பார்த்த மாத்திரத்தில் அல்லது பழகிய சில மணி நேரத்தில் அவர்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரிவில் வகைப்படுத்திவிட்டால் மற்ற அனைத்தும் 'will fall in the line'.

1. அழகு அறிவு, பணம் மற்றும் விபரம் ஆகியவற்றில் உங்களை விட உயர்ந்தவள்.
2. அழகு ஆனால் மக்கு.
3. "fantasy" பிரியை.
4. குடும்பம், கோவில், சீரியல் எக்சட்ட்ரா எக்சட்ட்ரா.....வகை.
5. "அன்னபிசியல் விரும்பிகள்"
6. இதரர்.

முதல் மூன்று நாட்களில், தேர்ந்தெடுத்த பெண்ணை ஏதேனும் ஒரு பிரிவில் வகைப்படுத்தி அல்லது ஏதேனும் ஒரு வகையை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்து முயற்சியை இனிதே தொடங்கிட வேண்டும். we strongly recommend on group #2. எனினும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஆலோசனைகள் உண்டு.

நாள் 4 - 6: கள ஆய்வு
அடுத்த மூன்று நாட்கள் பின்னணி மற்றும் கள ஆய்வுக்கானது. "டார்கெட்" -டின் நட்பு வட்டாரம் மற்றும் குடும்ப பின்னணி(பிரிவு 4 -க்கு மட்டும்) ஆகியவற்றை விரிவாக ஆராய வேண்டும். நட்பு வட்டாரத்தை நன்கு பரிட்சயப்படுத்திக் கொண்டு "டார்கெட்" இல்லாத நேரங்களில் "டார்கெட்" பற்றியே அதன் நட்பு வட்டாரத்தில் பேசவேண்டும். நீங்கள் இல்லாத நேரங்களில் இந்த நட்பு வட்டாரம் தான் "டார்கெட்" -டிடம் உங்களை பற்றி பேசும்.(சில சமயங்களில் புறம் பேசவும் செய்யும், ஆகவே நட்பு வட்டாரத்தை பகைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்).

நாள் 7: முதல் அழைப்பு.
ஒருவார முடிவில் நீங்கள் "டார்கெட்" -டிடம் இருந்து முதல் அழைப்பு அல்லது வேறுவகை சிக்னலை எதிர்பார்க்கலாம். இக்கட்டம் மிக முக்கியமானது. ஆர்வ மிகுதியால் உடனே கடலையை ஆரம்பிப்பது உங்களை நிரந்தர அடிமையாக்கி விடக்கூடும். அந்த அழைப்பை எதிர்பார்க்கவே இல்லை என்பது போன்ற ஆச்சர்யத்தை காட்டிவிட்டு விரைவில் தொடர்பை துண்டிப்பது நல்லது.

நாள் 8 - 10: முன் தயாரிப்பு.
வாகன வசதிகளை உறுதி செய்தல், பணம் வரும் வழிகளை சீரமைத்தல், உருவாக்கி வைத்துள்ள போலியான பிம்பத்திற்கு கண்சிஸ்ட்டன்ட்டான விளக்கங்களை தயாரித்தல்( உ-ம். எத்தனை அரியர் என்ற கேள்விக்கு இருவேறு சமயங்களில் இருவேறு பதில்களை தராமல், ஜாக்கிரதையாக இருக்க பழகுதல்) போன்றவை முன் தயாரிப்புகளாகும்.

நாள் 11 - 15: கேஸ் ஸ்டிரந்த்தனிங் (கடலை)
எந்த ஸ்பெஷல் மீட்டிங் பாய்ன்ட்டுகளையும் நாடாமல் அவரவர் இயல்பாகவே புழங்கும் இடங்களில் வழக்கத்தை மீறிய நேரங்கள் சந்தித்துக்கொள்ளலாம். இதுதான் குருசியலான நேரம். பெண்களின் வகைப்பிரிவுக்கு ஏற்ப செயல்பட்டாக வேண்டும். சந்தோசம், ஏமாற்றம், விரக்தி, கோபம், புளகாங்கிதம், மனவழுத்தம், தனிமை நாட்டம், பசியின்மை, தூக்கம் இன்மை போன்றவை ஏற்பட்டு ஒருவித மஹோன்னத நிலை தோன்றும்.

இக்கட்டத்தை பற்றி சற்று விரிவாக "டார்கெட்" -ட்டின் வகைப்பிரிவுக்கு ஏற்ப அடுத்த பதிவில் அலசிவிட்டு தொடர்வோம்.

14 comments:

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 6:43 PM  

முதல் பின்னூட்டத்திற்கு இக்கையேடு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

Divya said...
June 4, 2008 at 8:21 PM  

கலக்கல்ஸ்:))

Divya said...
June 4, 2008 at 8:22 PM  

\\"டார்கெட்" இல்லாத நேரங்களில் "டார்கெட்" பற்றியே அதன் நட்பு வட்டாரத்தில் பேசவேண்டும். நீங்கள் இல்லாத நேரங்களில் இந்த நட்பு வட்டாரம் தான் "டார்கெட்" -டிடம் உங்களை பற்றி பேசும்.(\\

நல்ல டெக்னிக்:))

Divya said...
June 4, 2008 at 8:23 PM  

\\1. அழகு அறிவு, பணம் மற்றும் விபரம் ஆகியவற்றில் உங்களை விட உயர்ந்தவள்.
2. அழகு ஆனால் மக்கு.
3. "fantasy" பிரியை.
4. குடும்பம், கோவில், சீரியல் எக்சட்ட்ரா எக்சட்ட்ரா.....வகை.
5. "அன்னபிசியல் விரும்பிகள்"
6. இதரர்.\\

அட பாவமே.....இப்படி வகைப்படுத்த வேற டிப்ஸா??

நல்லாயிருக்கு:)))

Divya said...
June 4, 2008 at 8:24 PM  

\\we strongly recommend on group #2.\\

மக்கு பொண்ணு வேணும்.....ஆனா அழகா இருக்கனுமா???

நினைப்புதான்:))

Divya said...
June 4, 2008 at 8:25 PM  

நல்லா எழுதியிருக்கிறீங்க மோஹன்!!

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 8:47 PM  

//////Mohan Kandasamy said...
முதல் பின்னூட்டத்திற்கு இக்கையேடு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

June 4, 2008 3:43 PM
Divya said...
கலக்கல்ஸ்:))

//////////

அடடே! முதல் பின்னூட்டம் பெண்ணிடமிருந்து வந்திருக்கே!....இக்கையேடு ஆண்களுக்கானதாயிற்றே!

மோகன் கந்தசாமி said...
June 4, 2008 at 8:57 PM  

/////நல்ல டெக்னிக்:))////
இக்கையேட்டின் ஆசிரியரின் தன் அனுபவத்தில் எழுதியிருப்பார் போல. பாராட்டை அவருக்கு தெரிவித்துவிடுகிறேன். நான் பதிப்பாளர், அம்மட்டே.

/////அட பாவமே.....இப்படி வகைப்படுத்த வேற டிப்ஸா??
நல்லாயிருக்கு:)))//////
சொல்லிடறேன் இதையும்

////\\we strongly recommend on group #2.\\
மக்கு பொண்ணு வேணும்.....ஆனா அழகா இருக்கனுமா???
நினைப்புதான்:))////
ஆனாதிக்கவாதியான இந்த இக்கையேட்டின் ஆசிரியரை கண்டித்து மேடைதோறும் முழங்குவோம்

/////நல்லா எழுதியிருக்கிறீங்க மோஹன்!!//////
நன்றி திவ்யா! மீண்டும் வருக!

Unknown said...
June 5, 2008 at 3:26 AM  

நாட்டுக்கு தேவையான பதிவு . இதெல்லாம் எங்களுக்கு தெரியும். இன்னும் ஆராய்ச்சி பண்ணி எழுது தம்பி. உனக்கு அனுபவம் பத்தாது

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 3:52 AM  

/////நாட்டுக்கு தேவையான பதிவு////
தாங்கள் இதுவரை இட்ட ஒரே பதிவில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ததை எண்ணி வியக்கிறேன்.

////இதெல்லாம் எங்களுக்கு தெரியும்/////
ஸ்ஸப்பா......

////ஆராய்ச்சி பண்ணி எழுது தம்பி////
அனுமதிக்கு நன்றி அண்ணா!

////உனக்கு அனுபவம் பத்தாது///
ஹி..ஹி..ஹி...

வருகைக்கு நன்றி ஜெய்.

கிரி said...
June 5, 2008 at 1:18 PM  

பாதி பொண்ணுக என்னை நல்லவன்ன்ன்ன்ன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி ...........நம்பி கிட்டயே வரலைன்னு சொல்ல வந்தேன் :-). பொண்ணுகளுக்கு ரவுடிகளை தான் பிடிக்குமாமே!!! நீங்க அதை சொல்லவே இல்லை ;-)

எனக்கு தெரிந்த பொண்ணு ஒண்ணு தனக்கு வரும் மாப்பிள்ளையாக வரும் பய்யன் பார்க்க முரட்டு தனமா இருக்கணும், ரவுடி லுக் இருக்கணும், புகை பிடிக்கணும் !, தண்ணி அடிக்கணும் !! சொல்லி அதிர வைத்தாள்.

அதனாலே உங்க ஆராய்ச்சியில் இதையும் சேர்த்துக்குங்க :-))))

மோகன் கந்தசாமி said...
June 5, 2008 at 1:43 PM  

//// நல்லவன்ன்ன்ன்ன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி ...........நம்பி கிட்டயே வரலைன்னு சொல்ல வந்தேன்//////
நம்மைப்போன்ற நல்லவர்களுக்கும் கோட்டா உண்டு என்பது நாம் அறிவோம் தானே.

////பொண்ணுகளுக்கு ரவுடிகளை தான் பிடிக்குமாமே!!! ////
சில பிரிவு பெண்களுக்கு மட்டும் இது நிச்சயம் பொருந்தும் என்பது என் அபிப்ராயம்

////எனக்கு தெரிந்த பொண்ணு ஒண்ணு தனக்கு வரும் மாப்பிள்ளையாக வரும் பய்யன் பார்க்க முரட்டு தனமா இருக்கணும்/////
வால்யூம் டூ -வில் இது பற்றி அலசப்படும்.

வருகைக்கு நன்றி கிரி.

rapp said...
June 7, 2008 at 4:44 PM  

இதைவிட ரெண்டாம் vol சூப்பருங்கோ, ஆனா அஞ்சாம் தேதி பதிவுதான் எனக்கு ஒண்ணும் விளங்கல

மோகன் கந்தசாமி said...
June 7, 2008 at 4:53 PM  

////இதைவிட ரெண்டாம் vol சூப்பருங்கோ ////
நன்றி வெட்டி ஆபிசர்,

////ஆனா அஞ்சாம் தேதி பதிவுதான் எனக்கு ஒண்ணும் விளங்கல////
அத விடுங்க rapp, கவிதை எழுதறேன்னு ட்ரை பண்ணா, பின்னூட்டத்துல ஒரே bulb -ஆ குடுக்கிறாங்க.

நன்றி rapp, மீண்டும் வருக.கிடங்கு