Sunday, February 8, 2009

தொல். திருமாவளவன் பேட்டி

·

பதிவுலக நண்பர்களே!

தமிழகத்தில் மீண்டும் தன்னெழுச்சியாக பீறிடும் ஈழ ஆதரவு தகுந்த தலைமை இல்லாதுபோனால் அடங்கிப்போய்விடக்கூடும் என்ற அச்சம் பரவலாக உணரப்படுகிறது. தொடர்ச்சியாக ஈழ ஆதரவுடனும் உண்மையான அக்கறையுடனும் தமிழக அரசியல் அரங்கில் நிலையான திசைவேகத்தில் வளர்ந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த எழுச்சியை முன்னெடுத்துச் செல்லாதா என்ற ஏக்கம் இளைஞர்களிடம் தென்படுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் பேட்டி சில தெளிவுகளை தரக்கூடும். 'ச்சும்மா ட்டமாஷ்' வலைப்பூவிற்காக ஈழம் தொடர்பில் அவரையும், விடுதலை சிறுத்தைகளின் இயக்கம், கொள்கை தொடர்பில் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு. இரவிக்குமார் அவர்களையும் நேர்முகம் கண்டு விரைவில் வெளியிட இருக்கிறேன்.

வழக்கம்போல் உங்கள் ஆதரவையும் பின்னூட்ட விவாதத்தையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

41 comments:

நம்பி.பா. said...
February 8, 2009 at 2:17 AM  

ஈழப் பிரச்சினையில் அரசியல் சாராத ஒருவரைத் தலைமையாகக் கொள்ள தமிழக அரசியல்வாதிகள் தயாரானால் பிரச்சினை ஒரே நாளில் தீர்ந்துவிடுமே!

Anonymous said...
February 8, 2009 at 2:28 AM  

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...
February 8, 2009 at 2:34 AM  

இன்றுள்ள சூழலில் வலுவான தமிழ்தேசிய கட்சியை/ அமைப்பை திமுகவுக்கு மாற்றாக உருவாக்குவதை செய்ய திருமாவுக்குக் கிடைத்திருக்கும் இவ்வரிய வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளுவாரா? இந்தி திணிப்புப் போராட்டத்தை திமுக பயன்படுத்தி அதை வலுவான தமிழக அரசியலை உருவாக்கப்பயன்படுத்திக்கொண்டது போல இப்போது இன்னொரு தமிழ் தேசிய மாற்று வரவேண்டிய தருணத்துக்கு அவர் தயாராக இருக்கிறாரா?

இந்தக் கேள்வியை கேட்கமுடியுமா?
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 2:50 AM  

///ஈழப் பிரச்சினையில் அரசியல் சாராத ஒருவரைத் தலைமையாகக் கொள்ள தமிழக அரசியல்வாதிகள் தயாரானால் பிரச்சினை ஒரே நாளில் தீர்ந்துவிடுமே!///

நான் அவ்வாறு நினைக்க வில்லை திரு. நம்பி. கட்சி சாராதவர்களின் தலைமையை மத்திய மாநில வல்லூறு அரசுகள் எளிதில் முடக்க முடியும்.

நன்றி நண்பரே!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 2:52 AM  

//இந்தி திணிப்புப் போராட்டத்தை திமுக பயன்படுத்தி அதை வலுவான தமிழக அரசியலை உருவாக்கப்பயன்படுத்திக்கொண்டது போல இப்போது இன்னொரு தமிழ் தேசிய மாற்று வரவேண்டிய தருணத்துக்கு அவர் தயாராக இருக்கிறாரா?

இந்தக் கேள்வியை கேட்கமுடியுமா?///

இது போன்ற கேள்வி ஒன்றை அவருக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளேன்.


////உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!///

மிக்க நன்றி நண்பரே!

வெண்பூ said...
February 8, 2009 at 3:35 AM  

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மோகன் கந்தசாமி.. அரசியல்வாதிகளும் பதிவுலகிற்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்திருப்பதன் வெளிப்பாடுதான் உங்கள் பேட்டியாக இருக்கப்போகிறது. பாராட்டுகள்..

எம்.எம்.அப்துல்லா said...
February 8, 2009 at 3:38 AM  

மோகன் அண்ணே, அண்ணன் திருமாவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரது சந்திப்பு நேரத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

superlinks said...
February 8, 2009 at 3:43 AM  

hai

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 3:45 AM  

///உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் மோகன் கந்தசாமி.////

நன்றிகள் திரு வெண்பூ.

////அரசியல்வாதிகளும் பதிவுலகிற்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்திருப்பதன் வெளிப்பாடுதான் உங்கள் பேட்டியாக இருக்கப்போகிறது. பாராட்டுகள்.///

நான் அறிந்தவரையில் திருமாவோ ரவிகுமாரோ ஈகோ இல்லாத அரசியல்வாதிகள். தற்போது விடுதலை சிறுத்தைகள் மட்டுமே சிந்திக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சி. மேலும் பதிவுலகம் அதன் வீச்சை நிரூபித்து வருகிறது.

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 3:50 AM  

///மோகன் அண்ணே, அண்ணன் திருமாவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரது சந்திப்பு நேரத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.///

அண்ணே! முதலில் உங்களைத்தான் தொடர்பு கொள்ள நினைத்தேன். பின் விடுதலை சிறுத்தைகள் எம்.எல். ஏ ரவிகுமார் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. அரசியல்வாதிகளின் ஈகோ பற்றிய எனது எண்ணம் தூளாகிப் போனது. இவர்கள் கையில் தமிழகம் வெகு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது.

Anonymous said...
February 8, 2009 at 3:52 AM  

திருமாவளவன் அவர்கள் தூர நோக்குப் பார்வையுடன் சரியான அரசியல் முடிவுகளை எடுத்துச் செயல்பட்டால் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் வலுவான ஒரு அணியை அவர் அமைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
சாதி என்ற அமைப்புக்கு வெளியில் வந்து எல்லா மக்களிடமும் அவர் செல்ல வேண்டும்.
அது மிகவும் கஷ்டம்தான்.ஆனால் சிறந்த கொள்கைககளும், சந்தர்ப்பவாதம் ஊழல் எல்லாத அரசியல், கடுமையான உழைப்பு மக்கள் நலனில் அக்கறை ,நேர்மை என்பன இருந்தால் இது சாத்தியம். பல வருடங்கள் செல்லும்தான்.ஆனால் இப்போதே அதற்கு விதை போட வேண்டும். தமிழ் நாட்டு மக்கள் இப்போது சிறந்த தலைவர்கள் இல்லாமல் ,வழி காட்ட சிறந்த மாலுமி இல்லாத கப்பல் பயணிகள் மாதிரி ஆகி விட்டர்கள்
.தமிழர்களில் பெரும்பான்மையானவர்க்கள் பாசம் , உணர்ச்சி , இரக்கம் ,உதவி செய்யும் மனப்பான்மை உள்ள மக்கள்தான். ஆனால் அவர்களின் உணர்ச்சிகளை சரியான பாதையில் அறிவுபூர்வமாக நடத்தி செல்வதற்கான தலைமை அவர்களுக்கு இப்போது இல்லை.
அந்த வெற்றிடத்தை திருமாவளவன் அவர்கள் எதிர்காலத்தில் நிரப்பலாம்.அவர் ஒரு சில தவறுகள் செய்துவிட்டார்.
சினிமாவில் நடிக்க என்று போய் சிலருடைய நக்கலுக்கு ஆளாகி விட்டார்.
ஈழத்தமிழருக்கு உண்ணாவிரதம் என்று தொடக்கி மூன்று நாளில் முடித்து இவரும் எல்லா அரசியல்வாதி மாதிரித்தான் என்ற கருத்தை உருவாக்கி விட்டார்.
கூட்டணி அரசியல் என்று தொடங்கி திமுக அதிமுக கட்சிகளின் பின்னால் போய் தனது மரியாதையைக் கொஞ்சம் குறைத்து விட்டார்.
ஆனால் இப்படியான தவறுகளை எதிர்காலத்தில் தவிர்த்து நல்ல ஒரு அமைப்பை உருவாக்க இவருக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது.
ஒரு நல்ல தலைவனுக்காக தமிழ் நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் அது இவரால் முடிந்தால் தாழ்த்தப் பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ் நாடு ,சாதியத்தக்கு எதிரான சிறந்த எடுத்துக்காட்டாகவும் உருவெடுக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...
February 8, 2009 at 3:56 AM  
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
February 8, 2009 at 11:15 AM  

இன்றைய தமிழகத்துக்கு வேண்டிய தலைமை சீமானின் உணர்ச்சியும்,உறுதியும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைமை தான்.
அவர் எந்த அரசியல் கட்சிகளுடனும் சேராது,அனைத்துத் தமிழுணர்வாளர்களையும் ஒன்றிணைத்து
ஒரு தமிழர் இயக்கமாக உருவாக்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...
February 8, 2009 at 12:06 PM  

பதிவர் நசரேயனுக்கு பின்னூட்டமிட்ட கருத்தின் ஒரு பகுதி இங்கே வெட்டலும் ஒட்டலுமாக.

நல்லதோ கெட்டதோ ஒரு புது முயற்சியாக திருமாவளவனை முன்னிறுத்தி,ராமதாஸ்,வை.கோ,நெடுமாறன் கூட்டணி உருவாகும் சாத்தியம் அமையுமானால் தமிழகத்தின் மாற்றங்களுக்கு முன் படியாக அமையும்.குறுகிய காலம்,இடம் பகிர்வு,அதனால் ஏற்படும் உட்பூசல்,பொருளாதாரப் பின்ணனி போன்ற காரணிகள் சாதகமாக இல்லாமல் இருந்தாலும் மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்ற அருமையான அஸ்திரம் சாதகமில்லா காரணிகளைப் பின் தள்ளி விடும்.

குசும்பன் said...
February 8, 2009 at 12:08 PM  

சரியான நேரத்தில் சரியான மனிதர்களில் பேட்டி..மிகச்சரியான பதிவர் மோகன் கந்தசாமியிடம் இருந்து! மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங்!

பழமைபேசி said...
February 8, 2009 at 12:20 PM  

வாழ்த்துகள் அன்பரே!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 1:27 PM  

//// நல்லதோ கெட்டதோ ஒரு புது முயற்சியாக திருமாவளவனை முன்னிறுத்தி,ராமதாஸ்,வை.கோ,நெடுமாறன் கூட்டணி உருவாகும் சாத்தியம் அமையுமானால் தமிழகத்தின் மாற்றங்களுக்கு முன் படியாக அமையும்.///

நன்றி நண்பர் நடராஜன், இது தொடர்பாகவும் திருமாவிடம் கேள்வி எழுப்பியுள்ளேன்.

மணிகண்டன் said...
February 8, 2009 at 2:01 PM  

வாழ்த்துக்கள் மோகன். நிச்சயமாக சரியான / அருமையான கேள்வி கேட்டு இருப்பீர்கள்.

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 3:06 PM  

//சரியான நேரத்தில் சரியான மனிதர்களில் பேட்டி..மிகச்சரியான பதிவர் மோகன் கந்தசாமியிடம் இருந்து! மிகுந்த ஆவலுடன் வெயிட்டிங்!///

நன்றி குசும்பன் சார்!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 3:06 PM  

நன்றி பழைமைபேசி அண்ணே!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 3:07 PM  

நன்றி மணிகண்டன்

வெற்றி said...
February 8, 2009 at 4:57 PM  

மோகன் கந்தசாமி,

நல்ல முயற்ச்சி. ஈழத் தமிழர்களின் நலனுக்காக மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களின் மேம்பாட்டிற்கும் ஒரு இயக்கம் கட்டாயம் தேவை என்றே நான் கருதுகிறேன்.

திருமா, பழ.நெடுமாறன் போன்றவர்கள் காலத்தின் தேவையறிந்து தொலை நோக்குடன் செயற் திட்டங்களை வகுத்து, இளம் சந்ததியையும் வழி நடாத்த வேணும் என்பது தான் என் அவாவும்.

நசரேயன் said...
February 8, 2009 at 5:41 PM  

வாழ்த்துக்கள் மோகன்

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 9:45 PM  

///நல்ல முயற்ச்சி.///

நன்றி நண்பரே!

/// ஈழத் தமிழர்களின் நலனுக்காக மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களின் மேம்பாட்டிற்கும் ஒரு இயக்கம் கட்டாயம் தேவை என்றே நான் கருதுகிறேன்.///

உண்மை அய்யா!

///திருமா, பழ.நெடுமாறன் போன்றவர்கள் காலத்தின் தேவையறிந்து தொலை நோக்குடன் செயற் திட்டங்களை வகுத்து, இளம் சந்ததியையும் வழி நடாத்த வேணும் என்பது தான் என் அவாவும்.////


தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திருமா ஒருவரே!

மோகன் கந்தசாமி said...
February 8, 2009 at 9:45 PM  

///வாழ்த்துக்கள் மோகன்///

நன்றி நசரேயன்!

Anonymous said...
February 8, 2009 at 10:00 PM  

How come Thiruma became more eligible than Nedumaran to lead a forum in support of Tamil Eelam?

Abi

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
February 9, 2009 at 12:27 AM  

நல்ல முயற்சி. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

Anonymous said...
February 9, 2009 at 5:57 AM  

Hi Mohan,

Pls include the following Questions in your interview:

1. Why can’t PMK, DPI, MDMK and other like minded parties contest as single alliance by keeping Eezham Tamils issue as single point agenda.
2. In case PMK & MDMK form electoral alliances with DMK & ADMK, what is the stand of DPI.
a. Thiruma should form a new political outfit and to file Known personalities in Key Congress Constituencies :
i. Chidambaram – Thiruma
ii. Salem – Kolathur Mani
iii. Kovai – Thamarai
iv. Erode – Sathyaraj
v. Shivaganga - Seeman
3. By forming a different political outfit from DPI, which can accommodate all section and groups of people, Thiruma can reach all the sections and can become a mass leader. Good or bad, DPI is viewed as Dalit Party and other caste groups will have second thought in joining in DPI.
a. Can keep DPI as a Social Movement for the uplifting of Dalits under separate leadership and a New broader political party to accommodate all section of people who are all interested in Tamils Cause.
b. If Not, vested interested elements will do caste politics and spoil the unification under DPI name.

மோகன் கந்தசாமி said...
February 9, 2009 at 8:24 AM  

///Hi Mohan,

Pls include the following Questions in your interview:

1. Why can’t PMK, DPI, MDMK and other like minded parties contest as single alliance by keeping Eezham Tamils issue as single point agenda.
2. In case PMK & MDMK form electoral alliances with DMK & ADMK, what is the stand of DPI.
a. Thiruma should form a new political outfit and to file Known personalities in Key Congress Constituencies :
i. Chidambaram – Thiruma
ii. Salem – Kolathur Mani
iii. Kovai – Thamarai
iv. Erode – Sathyaraj
v. Shivaganga - Seeman
3. By forming a different political outfit from DPI, which can accommodate all section and groups of people, Thiruma can reach all the sections and can become a mass leader. Good or bad, DPI is viewed as Dalit Party and other caste groups will have second thought in joining in DPI.
a. Can keep DPI as a Social Movement for the uplifting of Dalits under separate leadership and a New broader political party to accommodate all section of people who are all interested in Tamils Cause.
b. If Not, vested interested elements will do caste politics and spoil the unification under DPI name.

///

நண்பரே!
உங்கள் கேள்விகளில் பெரும்பாலானவற்றை நான் ஏற்கனவே அவரிடம் அனுப்பிவிட்டேன். எனினும் இப்போது உங்கள் கேள்வியையும் அவருக்கு அனுப்பியுள்ளேன். ஆனால் இவற்றிற்கும் பதில் கிடைக்கும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது.
உங்கள் ஆதரவிற்கு நன்றி,

மோகன் கந்தசாமி said...
February 10, 2009 at 10:34 PM  

////How come Thiruma became more eligible than Nedumaran to lead a forum in support of Tamil Eelam?

Abi////

தெரியவில்லை அபி, நீங்களே சொல்லுங்கள்!

மோகன் கந்தசாமி said...
February 10, 2009 at 10:35 PM  

///வாழ்த்துக்கள் மோகன்///

நன்றி நசரேயன் அண்ணாத்தே!

மோகன் கந்தசாமி said...
February 10, 2009 at 10:35 PM  

////நல்ல முயற்சி. வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.////

நன்றிகள் ஜ்யோவ்ராம் சுந்தர்

மதிபாலா said...
February 10, 2009 at 11:07 PM  

மோகன் கந்தசாமி அவர்கள் ஒரு முக்கியமான பேட்டியை நமக்குத் தரப்போகிறார். அதற்கான பாராட்டுக்கள். நிச்சயமாக சரியான தலைமையில்லையென்றால் போராட்டம் சிதறிப்போய் விடும். திருமாவளவன் அவர்கள்தான் சரியான தலைமையாக இருக்க முடியுமா என்று அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்புதான் இது.

திறந்த மனதுடன் காத்திருக்கிறோம் ஆவலாக.

கோவி.கண்ணன் said...
February 10, 2009 at 11:32 PM  

நல்ல முயற்சி ! சிறுத்தை சீற்றத்தைப் பார்க்க ஆவல் !

மோகன் கந்தசாமி said...
February 11, 2009 at 10:31 PM  

///திருமாவளவன் அவர்கள்தான் சரியான தலைமையாக இருக்க முடியுமா என்று அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்புதான் இது. ///

உண்மைதான் மதிபாலா.

நன்றி.

மோகன் கந்தசாமி said...
February 11, 2009 at 10:31 PM  

நன்றி கோவி அவர்களே!

Anonymous said...
February 13, 2009 at 12:41 PM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

நம்பி.பா. said...
February 13, 2009 at 12:47 PM  

மோகன்,
ஒரு உண்மையான கேள்வி, இதை திருமா-விடம் கேட்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி.
தமிழகமெங்கும் தட்டிகளிலும், விளம்பரப் பலகைகளிலும் 'தமிழகத்தின் சே' என தொண்டர்கள் எழுதிவருவதை திருமா தடுக்க முயல்வாரா? - 'சே'-விற்கு தேவை விளம்பரம் அல்ல, போராட்ட குணமும், தெளிவும் மனித இனத்தின் மீதான பரிவும் தானே?

Anonymous said...
February 16, 2009 at 8:16 AM  

எங்க சார் திருமா பேட்டி. எவ்ளோ நாள் தான் உங்கள சுத்தி சுத்தி வரது. டக்கு-னு போடுங்க சார்.

மோகன் கந்தசாமி said...
February 16, 2009 at 9:16 AM  

////தமிழகமெங்கும் தட்டிகளிலும், விளம்பரப் பலகைகளிலும் 'தமிழகத்தின் சே' என தொண்டர்கள் எழுதிவருவதை திருமா தடுக்க முயல்வாரா? - 'சே'-விற்கு தேவை விளம்பரம் அல்ல, போராட்ட குணமும், தெளிவும் மனித இனத்தின் மீதான பரிவும் தானே?///

இதற்கு திருமாவையோ அவரது தொண்டர்களையோ குறை கூறமுடியாது. உலகெங்கும் ஜனநாயகம் செயல் படும் விதம் அப்படியானது என்பது என் கருத்து.

மேலும் கேள்விகளை இனிமேல் அனுப்பினால் அவை அவரது கவனம் பெறாது என நினைக்கிறேன்.

மோகன் கந்தசாமி said...
February 16, 2009 at 9:17 AM  

///எங்க சார் திருமா பேட்டி. எவ்ளோ நாள் தான் உங்கள சுத்தி சுத்தி வரது. டக்கு-னு போடுங்க சார்.///

கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்.