விஸ்பரிங் மலையையும் போண்டமாக் ஆற்றையும் கடந்து, ஒரு பெயர் தெரியாத ஏரியை சுற்றிக்கொண்டு, இரண்டு டர்ன்பைக், பல டவுன்ஷிப் சாலைகள் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய தொடர்வண்டி சேவை ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு, காரிலும், நடந்தும் சென்று, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட மோகன் கந்தசாமிக்கு அக்கூட்டத்தில் கிடைத்தது என்ன? லட்டு கொடுத்து லவடா வாங்கின கதை எவர்க்கேனும் தெரியுமா?
அது பற்றி நான் யோசிக்கத் தொடங்கும் முன், நண்பர் குருவிற்கு நன்றி சொல்வது உசிதம். மனிதர் மிகத்தெளிவாய் பேசுகிறார். சுயமரியாதை என்னும் வஸ்து என்னுள் துளிர்விட்டு ஒரு கட்டியாக வளர்ந்துவிட்ட பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் நான் எந்த நண்பர் அல்லது உறவினர் வீட்டிலும் இரவு தங்கியதில்லை. குருவை சந்தித்துவிட்டு, பிறகு நூவார்க் சென்று, ரட்கர்ஸ் ஆய்வுச்சாலையில் தங்குவது என்ற எனது எண்ணத்தை நான் ஏன் சங்கடமின்றி மாற்றிக்கொண்டேன்? நண்பர் குருவின் நட்பு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்ததே காரணம்! நெஞ்சத்தகநக நட்பவர்தம் நட்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
நாசரேத் நகரின் மீதான பற்றினால் நசரேயன் என்னும் பெயரில் பதிவுகள் எழுதும் பதிவர் நசரேயன் தனது நண்பரும் வருங்கால பதிவருமான சுதனுடன் சந்திப்பில் கலந்துகொண்டார். முதல் சந்திப்பிலேயே நெருங்கிப் பழகும் நட்புக்கொள்கை கொண்டவர் போல் தெரியும் இவரிடமிருந்து இனி எனக்கு பண்பு கடத்தல் ஏற்படலாம். இவருக்கு போலி டோண்டு பற்றி எதுவும் தெரியவில்லை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்!
அடுத்து நான் ஜ்யோவ்ராம் சுந்தரை பேட்டி காணப்போகிறேன் என்று சொன்னபோது ச்சின்னப்பையன் முகத்தில் என்ன ரியாஸ்சன் வந்தது என நான் கவனிக்கத் தவறிவிட்டேன். எனது பேட்டிக் கொள்கை என்ன என்று அவர் விசாரித்தபோது பரவசமாக இருந்தது. பாரிஸிலிருந்து பதிவெழுதும் பள்ளி மாணவி[:-)))] ராப், சந்த்திப்பில் நான் கலந்து கொள்வது குறித்து விசாரித்ததாக சொன்னார். சர்வதேச சதிவலை ஏதும் பின்னப்படுகிறதா?
மாதவிப்பந்தலுக்கு மோகன் கந்தசாமி அர்த்தம் சொல்ல முயற்சித்தால் அதில் என்ன ஆச்சர்யம் என்று தெரியவில்லை. மாதவிப்பந்தலின் நிர்வாகி கே.ஆர்.எஸ். தன் பதிவுகள் போலவே மென்மையாக இருக்கிறார்[:-)))]. குறைந்த பட்சம், இவருக்கு ஏகவசனத்தில் கூட பேசத்தெரியாது போலிருக்கு. என் பதிவுகள் குறித்து ஆப் த ரெக்கார்ட் -ஆக விமர்சனம் செய்வதாக கூறி என் வேண்டுகோளை ஏற்றார். இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதா?
'சகலகலாவல்லவன்' வலைப்பூ நிர்வாகிக்கும் மருதநாயகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக அவரே சொன்னார் [பத்த வச்சாச்சு!, இந்த திரி பத்தி எரிஞ்சா குளிர் காயலாம், :-)))]. தட்ஸ் தமிழிலில் தான் இருந்ததாக அவர் சொன்னபோது குதிரைக்கார(ஸ்பானிஷ்கார) வெய்ட்டர் கூட அவரை திரும்பி பார்த்தான். அவரது சமீபத்திய பதிவில் வெறும் காழ்ப்பு மட்டும் தான் உள்ளது என்ற குற்றச்சாட்டை அவர் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. உலகனாயகனை விடவும் மருதநாயகம் குழப்புறாரப்பா!
பதிவுச்சூழலைப் பொறுத்தவரை 'மூத்த' என்ற அடைமொழியை உச்சரித்தாலே என் உமிழ்நீர் கசந்து விடுகிறது. நிற்க, பதிவர் இளா மொக்கைகளை பதிவுலகில் குறைப்பது குறித்து ஒரு விவாத திட்டத்துடன் வந்திருந்தார். வெறுக்கத்தக்கதாகிய தூய்மைவாதத்திற்கு இணையானது இவ்வாதம். தமிழ்மணத்தில் மொக்கைகள் பெருகியதற்கு செந்தழல் ரவியும் மற்றொருவரும் காரணமாக சொல்லப்பட்டது. எழுத்துலகில் அவதூறு பெருகியதற்கு ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் காரணம் என்றால் எப்படி காமெடியோ, அப்படியான காமெடி இது. என் பதிவுகளை படித்ததே இல்லை என்ற ஒரு டகால்டி உண்மையைச் சொன்னார் இளா. இனி கசக்கும் உமிழ்நீரை நான் விழுங்கப்போவதில்லை.
குறுக்கெழுத்துபோட்டி புகழ் இலவச கொத்தனார்தான் சந்திப்பின் நாயகன். சவுண்ட் பைட் ஜாஸ்தியாக இருந்தாலும் கூடவே பயனுள்ளவற்றை பகிர்ந்து கொண்டார். விக்கி பசங்க, ட்விட்டர் என்று பலதை அறிந்தோம். அவர் உணவு கட்டணத்தை செலுத்தியபோது அவரது புனைப்பெயருக்கு ஏற்றார் போல் உணவும் இன்று இலவசம் என நினைத்தோம். ஆனால், இறுதியில் "ஏய், டேக் த டொண்டி பை ருபீஸ்"
மூத்த பதிவர்களும் வாசகர்களும் ஆரம்பம் முதலே பதிவர் சத்தியராஜ் குமாரை பாராட்டியதைப் பார்த்தால் இவர் சங்க காலத்திலிருந்தே பதிவுகள் எழுதி வருபவர் போல் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்து சிலாகிக்கப் படும்போது "நம்ம பதிவை யாரும் படிக்க மாட்டன்கிராய்ங்களே!" என்று நசரேயனை நான் பார்க்க, "நீரெல்லாம் எதுக்கு பதிவெழுத வந்தீர்" என்று என்னை அவர் முறைக்க ஒரே அசிங்கமாக போய்விட்டது. சரி, இதுக்கே அசிங்கப்பட்டா எப்புடி!
பல இணைய தளங்களை நடத்திவரும் கணேஷ், நெடுநாளைய வாசகர் ஜெய் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டனர். வெகுகாலமாக வலையுலகில் இயங்குபவர்களாகிய இவர்கள் பலவிஷயங்களை கலந்து கட்டி கலகலபூட்டினர். சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை கணேஷ் எல்லோருக்கும் மறுநாள் அனுப்பி வைத்தார். நன்றிகள். பிழையின்றி எழுத முடியாமையே அவர் பதிவுகள் எழுதாதன் காரணம் என்று சொன்னார் ஜெய். நம்பிட்டேன். என் பதிவுகளை படித்துள்ளதாக அவர் சொன்னபோது அவர் முகத்தை உற்று கவனித்தேன், சீரியசாத்தான் சொன்னார். காமெடி இல்லை. மேலும், ஒரு ஹார்வார்ட் பல்கலைகழக மாணவர், இந்திய, தமிழ் கலாச்சாரங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார். என்ன கொடுமை சார் இது!
உணவு முடிந்த சிறிது நேரத்தில் கன்னட வெறியுடன் எங்களை நெருங்கினார் உணவக நிர்வாகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியேறாவிட்டால் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என்று எச்சரித்தார். தண்ணீர் விடுவோம் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா!?
சோமர்செட் ஹொய்சாலா உணவகத்தில் நடைபெற்ற இப்பதிவர் சந்திப்பு, முன்னதாக ஈழத்தமிழர்களுக்காகவும் மும்பை உயிர் இழப்புகளுக்காகவும் ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. சந்திப்பில் பேசிய ஏனையவற்றை பற்றி எழுதி போரடிக்காமல் ரத்தினச்சுருக்கமாக தளபோஸ்த்ரி வடிவில் கூறிவிடுகிறேன்.
சிவராஜ் பாட்டில்... கோஸ்டல் கார்ட்... எம் கே நாராயணன்... ஐயோ பாவம் ரஜினி... தட்ஸ் தமிழ்... குறுக்கெழுத்து... இலவசம்... ட்விட்டர்... பாஸ்டன் பாலா...மாதவிப்பந்தல்... பொதுச்சேவை... சிங்கப்பூர்... கோனா பதிவர்... பானா பதிவர்... போலி டோண்டு... அய்யய்யோ திராவிடமா!... மொக்கையை குறைப்பது எப்படி?... அக்குளை சொரிவது எப்படி?... வ. வ. சங்கம்... அய்யனார்... சாரு... டோண்டு... ராப்... வெண்பூ... பரிசல்காரன்... உண்மைத்தமிழன்... கூகிள் புரமோட்... பிளாக்பெர்ரி யூனிக்கோட்... இட்லிவடை... பொப்பெ... கெளம்பு காத்து வரட்டும்
இனிதே நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில், புதிய பதிவர் என்ற வகையில் நான் அறிந்து கொள்ள கிடைத்தவை நிறைய. தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்ற குறையை தவிர எல்லாம் நிறைவே. எனில், லவடா என்ற உருவகத்திற்கு இப்பதிவில் தேவை என்ன? ஏதுமில்லை. எல்லாம் ச்சும்மா ட்டமாஷ்!
அவதூறு / கிசு கிசு / தானே கேள்வி தானே பதில்
பதிவர் சந்திப்பிற்கு வந்தோரில் பாஸ்டன் பாலாவும் ஒருவரா?
மோகன் கந்தசாமி: தெரியாது
ஏனையோர்: வரவில்லை.
இட்லி வடைக்கு செய்தி தருவோர் சந்திப்பிற்கு வந்திருந்தனரா?
மோகன் கந்தசாமி: வந்திருக்கலாம்.
ஏனையோர்: வரவில்லை.
நசரேயன், மோகன் கந்தசாமி, சத்தியராஜ் குமார்,
சோகன், இளா, மருதநாயகம்.
கே.ஆர்.எஸ், நசரேயன்
சுதன், இளா, மருதநாயகம், இலவச கொத்தனார்
ஜெய், குரு