உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குகிற, தனிமனிதர்களின் சுற்றத்தை அல்லது சம்பத்தப்பட்ட வேறு எவரையுமோ தாக்குகிற பின்னூட்டங்கள் நிச்சயம் அனுமதிக்கப்படா. ஆபாசம் தவிர்த்து வேறு கருத்துக்களும் அப்பின்னூட்டங்களில் இருப்பின் அவை மட்டுறுத்தி வெளியிடப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இப்பதிவரை தாக்கியோ பாராட்டியோ வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
15. TBCD உடன் உங்களுக்கு அல்லது உங்களுடன் அவருக்கு என்ன பிரச்சினை? இருவரும் இது தொடர்பாக பதிவிட்டுள்ள போதிலும் பிரச்சினை தொடங்கியதன் உடனடிக் காரணம் என்ன?
குரங்கு கோவிகண்ணன் என்றால் அதன் வாலான டிபிசிடியும் என்னுடைய எரிச்சல்ஸ் ஆப் இண்டியா லிஸ்டில் இருப்பாரா மாட்டாரா ?
16. TBCD கோவியின் நண்பராக மட்டுமே அவர் இருந்தாரா? போலியுடன் அவருக்கு தொடர்பு இருந்தது என்ற தகவல்கள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. நீங்களும் கூறவில்லை. போலியை உளவு பார்க்கும் பொருட்டாகாக் கூட அவர் தொடர்பில் இருக்கவில்லை (இது தகவல் பிழை என்றால் விளக்க வேண்டுகிறேன்!!) போலி விசயத்தில் நீங்கள் சென்ற தூரத்தைக் கூட அவர் செல்லாத நிலையில் (சென்றிருந்தால் விளக்கவும்) அவரை ஏன் பதிவுகளில் மோசமாக தாக்கினீர்கள்?
நானும் சொல்லியிருக்கிறேன், அவரும் தன்னுடைய பதிவிலேயே சுட்டி கொடுத்தவர். அவர் எந்த தூரத்துக்கு சென்றார் என்பதை அவரே விளக்குவார். அவரை பதிவில் மோசமாக தாக்கியதாக நினைக்கவில்லை. ஆபாச தாக்குதலுக்கு உள்ளான, (இது உண்மையில் உங்களுக்கு நடந்திருதால் அதன் உண்மையான வலி தெரியும்) என்னுடைய உணர்வை புரிந்துகொள்ளாதவர். இதுவரை விடாது கருப்புவோ போலியோ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளாதவர். அதனை எதித்து ஒரு கண்டன பதிவும் போடாதவர். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
17. நீங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டும் சிலரிடமிருந்து லக்கிலுக் எவ்வாறு மாறுபடுகிறார்? மாறுபாடுகள் ஏதும் இல்லை என்று அறியமுடிவதில் உங்களது இருவேறு அணுகுமுறைகள் புரியவில்லையே?
விவகாரம் ஆபாசமாக தொடங்கியதில் இருந்தே நானும் லக்கிலுக்கும் தொடர்ந்து தொலைபேசி தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் கொடுக்க சென்றபோது அவரும் கமிஷனர் அறைக்கு வந்தார். லக்கிலுக் பற்றிய ஒரு சில ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளார்கள். ஆதாரங்களை தருபவர்கள் காவல்துறையிடம் செல்லட்டுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ? பெங்களூர் அருணுக்கும் அவருக்கும் ஏற்கனவே கருத்து மோதல் இருக்கிறது. மேலே சொல்ல எதுவுமில்லை.
18. போலி குழுவாக அல்லது அவ்வாறு சொல்லிக்கொண்டு இயங்கிய காலத்தில் ஏதேனும் புதிய தகவல்கள் அவனுக்கு கிடைத்தால் 'எங்களது பெங்களூர் / சென்னை கிளை திரட்டிய தகவல்கள்' என்று குறிப்பிடுவான். அது பற்றி உங்களுக்கு தெரியுமா? சென்னை கிளை என்றால் யார்?
எனக்கு தெரியாது. ஒரு வேளை டோண்டு சாரை கேளுங்களேன் ?
19. சல்மா அயூப் விவகாரம் குறித்தும் புகாரளிக்க பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்ட நிலையிலும் உண்மைத்தமிழன் இதுபற்றியும் புகாரளிக்க வேண்டும் என்று எப்போதாவது கூறியிருந்தாரா? ஆம் எனில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா?
தெரியாது.
20. காவல்துறையில் புகார் அளித்தபின் அதற்காக அலைந்தவர்கள் யாவர்? போலிடோண்டு முடக்கப்பட்டதில் டோண்டுவின் பங்கு என்ன?
உண்மைத்தமிழன். உண்மைத்தமிழன் மட்டுமே. நான் வெளிநாடு செல்லும் வேலை இருந்ததால், ஏராளமான டாக்குமெண்டேஷன்களை கொண்ட எங்கள் புகார்களை பிரித்து வைத்து நடத்துகிறார்கள். சமரசமாக போகும்படி எவ்வளவோ கேட்டும் உண்மை அண்ணன் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் உண்மைத்தமிழன் போலிக்கு ஒரு நைட்மேர் என்றால் அது மிகையில்லை. டோண்டுவும் உண்மைத்தமிழனுக்கும் முழு அளவில் சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்து நீங்கள் கேட்கவேண்டியது உண்மை அண்ணனை மட்டுமே.
21. இந்திய சைபர் கிரைம் சட்டம் மற்றும் காவல் துறை முற்றிலும் வலிவானதில்லை என்றாலும் நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தனிநபர் தாக்குதல் தொடர்பான சட்டம் குறித்த எச்சரிக்கைகளை இங்கு வரிசைப் படுத்த முடியுமா?
என்னுடைய போலி வலைப்பதிவு tvbravi, கவனிக்க, உண்மையான வலைப்பதிவு tvpravi. இதனை சென்னை சைபர் க்ரைம் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு வந்த மறுநாள், செய்தி தாள்களில் வந்த செய்திகளை பார்த்துவிட்டு, பயந்த மூர்த்தி அதனை அழித்தான்.
மதிய உணவுக்கு முன் அதனை ஒரு முறை பரிசோதித்த எனக்கு அதிர்ச்சி. என்னுடைய போலி வலைப்பதிவு அழிக்கப்பட்டிருந்தது. புதிதாக உருவாக்கவா என்று கேட்டது கூகிள். சரி என்று வேறு யாரும் உருவாக்கிவிடக்கூடாது என்ற பயத்தில் tvbravi என்ற பெயரிலும் நானே பதிந்துகொண்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் அழைத்தார். என்ன மிஸ்டர் ரவி, கூகிள் நிறுவனம் சொல்கிறது உங்கள் வலைப்பதிவை உருவாக்கியது LG நிறுவத்தில் Node 148 என்று ? உங்கள் சிஸ்டம் அட்மின் துறை அது உங்கள் கணினி என்று சொல்கிறார்களே என்று. பிறகு அவரிடம் உண்மையை விளக்கினேன்.
ஆகவே சைபர் க்ரைம் சட்டம் பற்றி நான் சொல்வது இதுதான். தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். கூகிள் நிறுவனமும் யாஹூ நிறுவனமும், ஸ்கைப்பும், மற்ற ப்ராக்ஸி தளங்களும் 48 மணி நேரத்தில் தமிழக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல்களை தந்துவிடுகிறார்கள். உங்கள் அனானி பின்னூட்டம் கூட உங்களை காட்டிக்கொடுத்துவிடும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
22. போலிடோண்டு விவகாரத்தில் எல்லோரும் கற்கவேண்டிய பாடம் என்ன?
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாகவேண்டும்.