Monday, December 8, 2008

ச்சும்மா ட்டமாஷ்-75: முரளிகண்ணன் - என்றென்றைக்குமான மாற்றத்தை தந்த படங்கள்

·

மிழ் சினிமா தொடர்பான பதிவுகள் என்றாலே வலையுலகில் நம் நினைவுக்கு வருபவர் பதிவர் முரளி கண்ணன். செறிவான செய்திகள் நிரம்பிய பதிவுகளை தொடர்ச்சியாக தந்து வரும் முரளி அவர்கள் 'ச்சும்மா ட்டமாஷ் - 75' -காக சிறப்பு பதிவு ஒன்றை அளித்துள்ளார். வலைப்பூ வாசகர்களுக்காக அப்பதிவை படங்களுடன் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தமிழ் சினிமாவில் மாற்றத்தைக் கொண்டுவந்த படங்கள்

மிழ்சினிமாவின் பயணம் 1931 ல் காளிதாஸ் படம் மூலம் ஒரு சிற்றாராய் தொடங்கி பல சிற்றோடைகளின் சங்கமத்தால் நதியாய் மாறி நம் மனத்தோட்டத்தில் பல பூக்களை பூக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நதியில் பல சாயக் கழிவுகள், சாக்கடைகள் கலந்தாலும் தொடர்ந்து புது வெள்ளம் பாய்ச்சும் சிற்றோடைகள், காட்டாறுகளால் தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த நதிக்கு கணக்கிலடங்கா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், பாடல் ஆசிரியர்கள், தொழில்னுட்ப வல்லுனர்கள் புதுவெள்ளம் பாய்ச்சியுள்ளார்கள். காட்டாறாய் வந்து இந்த திரைநதியை புதுப்பித்த சிலபடங்களைப் பற்றிய பார்வையே இது. இந்த படங்களால்தான் தமிழ்சினிமாவில் சில புதிய போக்குகள் தோன்றின.


தியாக பூமி - 1939

தற்க்கு முன் வந்த பெரும்பாலான படங்கள் ராமாயானம்,மகாபாரதம் போன்ற காப்பியங்களையும், ஏனைய புராணக் கதைகளையுமே களமாக கொண்டிருந்தன. நாடகங்கள், மற்ற


தியாக பூமி படத்தில் ஒரு காட்சி
மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகியவையும் இங்கு தயாரிக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளைப் பேசிய படங்கள் மிக குறைவே. கல்கி கிருஷ்ன மூர்த்தி எழுதிய தியாக பூமி நாவலை அடிப்படையாக கொண்டு கே சுப்ரமனியம் இயக்கிய இந்த படம் பெண்ணுரிமையையும் தீண்டாமைக் கொடுமையையும் பேசியது. திரையில் இதையும் பேசலாம் எனும் போக்கை துவக்கிய படம் இதுவே. வெள்ளையர் ஆட்சியால் பல சிக்கல்களை கடந்து இந்த படம் மக்கள் மனதில் இடம் பெற்றது.பராசக்தி – 1952

பெரும்பாலும் புராணக்கதைகளே வந்துகொண்டிருந்ததால் கதா பாத்திரங்களின் பேச்சுமொழி பிராண நாதா டைப்பிலேயே இருந்து வந்தது. அத்தி பூத்தாற்போல சில சமூக கருத்துள்ள படங்கள் வந்தாலும் அதில் பேச்சு மொழி வடமொழி கலந்தே இருந்தது. இந்த படம் அந்த வழக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. கருணாநிதியின் வசனம் சிவாஜி கணேசனால் உச்சரிக்கப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வசனங்களை புத்தகமாக போட்டு விற்கலாம் என கருணாநிதி சொன்ன போது அதை தயாரிப்பாளர்கள் கேட்கவில்லை.


பராசக்தி படப்பிடிப்பின் போது டைரக்டர்
கிருஷ்ணன்- பஞ்சு, மற்றும் சக நடிகர்களுடன்
சிவாஜி கணேசன்.
ஆனால் ஒருவர் இதை தியேட்டரில் கவனித்து எழுதி புத்தகமாக போட விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. அதனால் அடுத்துவந்த மனோகரா படத்தயாரிப்பாளர் இந்த தவறை செய்யவில்லை. ஒரு காலத்தால் அழியாத கலைஞனை மட்டும் இந்த படம் கொடுக்கவில்லை, நாற்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் இந்த படம் இருந்திருக்கிறது. இந்த படத்தின் வருகைக்குப் பின்னரே சமூக கருத்துள்ள படங்கள் அதிகரித்தன. வடமொழி பயன்பாடு வசனத்தில் குறைந்தது.கல்யாணப் பரிசு 1959

ராசக்தி படத்தின் மூலம் வசன மொழி மாறினாலும் உச்சரிப்பு தொனி பெருமளவு மாறவில்லை. நடிகர்கள் இயல்பாக வசனம் பேசவில்லை. அதீத உணர்ச்சிமயமாகவே இருக்கும். ஸ்ரீதரின் வருகை இதை பெருமளவு மாற்றியது. திரையில் பாத்திரங்களை


தங்கவேல், ஜெமினி,
சரோஜாதேவி

இயக்குனர்
ஸ்ரீதர்
இயல்பாக பேச வைத்தார். இவர் எடுத்துக் கொண்ட களங்களும் இதற்க்கு வாய்ப்பாய் அமைந்தன. புதிய திரைக்கதை உத்திகள், பாடல்கள் படமாக்குவதில் நளினம், மெருகேற்றப்பட்ட நகைச்சுவை காட்சிகள் என தமிழ்திரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் இதை உறுதிசெய்தன. திரைக்கதை என்ற பதத்தை முதலில் உருவாக்கியவர் இவர் என்று கூட சொல்வார்கள்.
பாமா விஜயம் 1967 / எதிர்நீச்சல் 1968

தை பாலசந்தரின் பங்களிப்பு என்றும் சொல்லலாம். நடுத்தர வர்க்கத்தின் ஆசைகள், அபிலாஷைகள், சோகங்கள் அனைத்தையும் திரையில் கொண்டு வந்தார் இவர்.


பாலச்சந்தரின்
'பாமா விஜயம்'

முத்துராமன், நாகேஷ்,
ஜெயந்தி
இதற்க்கு முன் நடுத்தர வாழ்க்கையை இந்த அளவுக்கு பிரதிபலித்த படங்கள் குறைவே. இவரது நாடகங்களே பின்னாளில் திரைப்படமாக மாறியதால், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வாங்க முடிந்தது. ஆனால் நாடகப்பாணியிலேயே அது அமைந்திருந்தது இவரின் குரை என்று சொல்லலாம். பல பரீட்சார்த்த கதை முயற்சிகளுக்கு இவரது வருகை காரணமாய் அமைந்தது.


பதினாறு வயதினிலே – 1977

துவரை கிராமப் படங்கள் வந்திருந்தாலும் அவை படப் பிடிப்பு அரங்கங்களிலேயே படமாக்கப்பட்டன. எம்ஜியார் நடித்த விவசாயி என்னும் படத்திற்க்கு கூட அரங்கில் நாற்று நட்டுதான் படம் பிடித்தார்கள். பெரும்பாலான படங்களில் பேக் டிராப்பாக திரையில் கிராம வீடுகளை வரைந்துகூட படமெடுத்தார்கள். இப்படத்திற்க்கு பின்னரே கேமரா உண்மையான கிராமத்துக்குள் நுழைந்தது. அதுவரை நேட்டிவிட்டி என்ற பரிமாணம்


16 வயதினிலே - ரஜினி, கமல்
இல்லாமல் இருந்த தமிழ்திரைக்கு அதை அளித்தவர் பாரதிராஜா. எம்ஜியார் இந்த ஆண்டில் தன் திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு முதலமைச்சரானார். அவரது கடைசி படமான [அவசர போலிஸ் – பாக்யராஜ் சேர்க்காமல்] 1978ல் வெளிவந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு கூட இந்த ஆண்டிலேயே முடிவடைந்தது. போட்டி இல்லாத பந்தயத்தில் ஓட யாருக்கு மனமிருக்கும்?. சிவாஜி கூட இதன்பின் 20 ஆண்டுகள் துறையில் இருந்தாலும் முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற மிக சில படங்களிலேயே தன் இருப்பை உணர்த்தினார். இதற்க்கு அவருக்கு ஏற்ற கதைகளை அவரால் உருவாக்க முடியாததே காரணம் என்றும் சொல்லலாம். ஆனால் இதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பக்கூடிய பொடென்சியல் உள்ள இருவர் இந்த படத்தின் மூலம் எழுச்சி பெற்றனர். மற்றோரு முக்கிய வரவு இளையராஜா. 1976 ல் அன்னக்கிளி மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இப்படத்தின் மூலமே தன் சாம்ராஜ்யத்தை நிறுவினார் என்று சொல்லலாம். இதன் பின்னரே நாட்டுப்புற இசை, மேற்கத்திய சாயலுள்ள மெல்லிசை போன்றவை தமிழ் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இப்படத்திற்க்கு கிடைத்த வெற்றி மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றோர் இயல்பான கதைக்களத்துடன் படம் எடுக்க வாய்ப்பாய் அமைந்தது.
மௌனராகம் – 1986

தன்முன்னர் பகல் நிலவு, இதய கோயில் ஆகிய படங்களை தமிழில் தந்திருந்தாலும் இப்படத்திற்க்கு பின்னரே மணிரத்னம் கவனம் பெற்றார். இவரின் வருகை பிண்னனி இசை,ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகிய முக்கிய துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். கச்சேரிகளில் பாடகர்கள்,


மௌனராகம் - ரேவதி, கார்த்திக்
பக்கவாத்தியக்காரர்களுக்கு தனிஆவர்த்தன வாய்ப்பு வழங்கி அவர்களை சிறப்பிப்பது போல இவர் டெக்னீஷியன்களுக்கு உரிய ஸ்கோப்பை கொடுத்தார் எனலாம். ஒளிப்பதிவு இயக்குனருக்கு உரிய அங்கீகாரம் இவர் வருகைக்கு பின்னாலேயே சரியாக கிடைத்தது எனலாம். கலை இயக்குனர் என்பவர் இவர் வருகைக்கு முன் இவ்வளவு கவனம் பெற்றதில்லை. கதாபாத்திரங்களுக்கு ஏற்ற உடைகள், அவர்கள் வசதிக்கேற்ப வீடுகள், காலகட்டத்திற்க்கு ஏற்ப பிராப்பர்டிகள் என மெனக்கெட்டு இவர் கவனித்து செய்தது தமிழ் திரையில் அதுவரை இல்லாதது. நாயகன் படத்தில் இவை உச்சம் பெற்றது எனலாம்.
ரோஜா - 1992 – ஜெண்டில்மேன் 1993

ப்படங்களின் வருகை தமிழ் பட மார்க்கெட்டை விரிய வைத்தது எனலாம். இப்படங்களின் இசை [ஏ ஆர் ரகுமான்] வட இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இதன்பின்னாலேயே மற்ற ஏரியாக்களை குறிவைத்தும் [ஷங்கர்-தெலுங்கு, மணிரத்னம்- தேசம்].


ரோஜா-அரவிந்த சாமி, மதுபாலா
படம் எடுக்கும் போக்கு தொடங்கியது. துள்ளலிசை படங்களுக்கு அவசியமாயிற்று. பிரபுதேவாவின் நடன எழுச்சி நாயகர்களை வியர்வை சிந்த வைத்தது. கிராபிக்ஸ் தொழில்னுட்பம் தேவையோ, இல்லையோ பயன்படுத்தப் படவேண்டும் என்ற போக்கு துவங்கியது. முக்கியமாக பிரமாண்டப் படங்களின் அணிவகுப்பும் துவங்கியது. கதை முக்கியமில்லை, திரைக்கதை,

ஜெண்டில்மேன் - படப்பிடிப்பில்
இயக்குனர் ஷங்கர், மதுபாலா, அர்ஜூன்
தொழில்நுட்பத்தால் படத்தை சரிகட்டிவிடலாம் என்ற எண்ணமும் படைப்பாளிகளிடம் ஏற்பட்டது. சில நல்ல படங்களும் வந்தன.
சேது - 1999

யல்பான கதையும், சொல்லும் விதமும் மிக முக்கியம் என்னும் போக்கை இந்தப்படம் கொண்டுவந்தது. இதன்பின் வந்த அழகி,ஆட்டோகிராப்,பருத்திவீரன் போன்ற படங்களை இதற்க்கு உதாரணமாய் கூறலாம். அதுவரை கதாபாத்திரத்துக்காக


சேது - விக்ரம்
உருவத்தை மாற்றுவது அத்தி பூத்தாற் போலவே தமிழில் இருந்தது. இப்படம் அதில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது எனலாம். இப்பட வெற்றியால் விக்ரம்,சூரியா,ஜீவா ஆகியோர் மெத்தட் ஆக்டிங் முறைக்கு மாறினார்கள். மற்ற சக நாயகர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வை கொடுத்தது எனலாம்.
ப்பொழுது இந்த ஆண்டில் வந்த படங்களில் இரண்டு படங்களை மாற்றம் கொண்டு வரத்தக்க படங்களாக பார்க்கலாம். அவை தசாவதாரம், சுப்ரமணியபுரம். இதில் எந்த படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, சில ஆண்டுகளில் தெரியவரும்.

சாவதாரம் வந்தபின் இந்த ஆறு மாதங்களில் வந்த எந்த ஆக்‌ஷன் கமர்சியல் படமும் வெற்றிபெறவில்லை. இந்த படம் கமர்சியல் சினிமாவின் தரத்தை உயர்த்தியதாக சொல்லலாம். நான் இந்த படத்தை சென்னையின் மூன்று வெவ்வேறு இடங்களில் [சத்யம்- ரூ120, உதயம் – ரூ50, வேளச்சேரி ராஜலட்சுமி – ரூ 10] பார்த்தேன். அந்த தியேட்டர்களின் கேட்ச்மெண்ட் ஏரியா மக்களில் பெரும்பாலும் மீண்டும் அத்திரையரங்குகளுக்கே செல்வார்கள். அவர்கள் சத்யம்,ஏகன் ஆகிய படங்களுக்கு செல்லும் போதும் அதே கட்டணம் தான். ஆனால் அவர்கள் மனதில் தசாவதாரம் ஏற்படுத்திய


ஆஸ்கார் ரவி
சகோதரருடன்
ஜாக்கி ஜான்

சுப்ரமணியபுரம்
படத்தில்
ஒரு காட்சி
எண்டெர்டைன்மெண்ட் கோஷண்டை இப்படங்கள் ஏற்படுத்த முடியாததால் [படம் சுமார் என்றாலும் – எதிர்பார்ப்புக்கும் அதிகமான தோல்வி] மக்கள் இவற்றை நிராகரித்தனர். சுப்ரமணியபுரம் போல இப்பொழுது வந்துள்ள படம் பூ. இப்படங்களுக்கு கிடைக்கும் கவனிப்பு,தாக்கம் என்ன என்பது சில ஆண்டுகளுக்குப் பின்னரே நம்மால் உணரமுடியும்.இந்த கட்டுரையை வெளியிட வாய்ப்பளித்த மோகன் கந்தசாமிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
ஆர் முரளிகண்ணன்

32 comments:

ஆதவன் said...
December 8, 2008 at 5:47 AM  

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Athisha said...
December 8, 2008 at 6:27 AM  

முரளிக்கண்ணன் அவர்களின் கலக்கல் கட்டுரை..

படங்கள் சூப்பரோ சூப்பர்

Anonymous said...
December 8, 2008 at 6:31 AM  

good

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:34 AM  

////நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.///

உங்கள் தளம் அருமையாக உள்ளது. என் ஆதரவு உண்டு

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 6:35 AM  

/////முரளிக்கண்ணன் அவர்களின் கலக்கல் கட்டுரை..

படங்கள் சூப்பரோ சூப்பர்///

வாங்க அதிஷா,
நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...
December 8, 2008 at 6:49 AM  

பராசக்தி படத்தின் மூலம் வசன மொழி மாறினாலும் உச்சரிப்பு தொனி பெருமளவு மாறவில்லை. நடிகர்கள் இயல்பாக வசனம் பேசவில்லை. //ஜெ. கணேசனின் நடிப்புத்திறமையும்

அவருக்கு சிறப்புப் பெயரும் உண்டு

anujanya said...
December 8, 2008 at 6:58 AM  

முரளி,

பாரதி ராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள்' படங்கள் ஒரு நல்ல இயக்குனரின் படத்திற்கு எதிர்பார்ப்போடு சென்ற இரசிகர்களை ஏமாற்றாமல், மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்த படங்கள். உங்களின் இந்தப் பதிவும் அதே வகையைச் சார்ந்ததுதான். மிகத் தரமான பதிவு. வாழ்த்துக்கள் முரளி.

மோகன், நீங்க கலக்குறீங்க!

அனுஜன்யா

அக்னி பார்வை said...
December 8, 2008 at 7:02 AM  

உங்கள் சேவை நாட்டிற்க்கு தேவை

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 7:20 AM  

சுரேஷ்,

///ஜெ. கணேசனின் நடிப்புத்திறமையும்

அவருக்கு சிறப்புப் பெயரும் உண்டு////

சாம்பார் என்ற நையாண்டிப்பெயரை சொல்கிறீர்களா?

நன்றி

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 7:21 AM  

////மோகன், நீங்க கலக்குறீங்க!

அனுஜன்யா////

நன்றி அனுஜன்யா!

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 7:21 AM  

////குட்///

நன்றி அனானி

மோகன் கந்தசாமி said...
December 8, 2008 at 7:22 AM  

////உங்கள் சேவை நாட்டிற்க்கு தேவை///

ஹா ஹா! :-)))

காமடி ஒன்னும் இல்லையே! :-))

நன்றி அக்னி பார்வை அவர்களே!

சரவணகுமரன் said...
December 8, 2008 at 8:01 AM  

சிறப்பு பதிவு ரொம்ப சிறப்பாத்தான் இருக்கு...

கோவி.கண்ணன் said...
December 8, 2008 at 9:17 AM  

முரளிகண்ணன் ஒரு திரைத் தகவல் பெட்டகம்.

அனைத்துத் தகவல்களையும் அவர் தொகுத்து தருவது பெரும் வியப்பளிக்கிறது. இதில் மேலும் பாராட்டத்தக்கச் செயலாக நான் கருதுவது எந்த ஒரு நடிகரின் சார்பு நிலையில் இல்லாமல் தகவல்களாக அவர் தருபவை அனைத்துமே திரைப் பூக்களின் தொகுப்புகள்.

நசரேயன் said...
December 8, 2008 at 12:29 PM  

தமிழ் சினிமாவை வாழும் தமிழ் சினிமா கட்டுரை வடிவில் சொன்னது அருமை

பரிசல்காரன் said...
December 8, 2008 at 11:15 PM  

கலக்கல் முரளி.

அதை அருமையான லேஅவுட்டில் எங்களுக்குப் படைத்ததற்கு நன்றி மோகன்.

ஆதவன் said...
December 9, 2008 at 1:33 AM  

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 1:36 AM  

////சிறப்பு பதிவு ரொம்ப சிறப்பாத்தான் இருக்கு...///

முதல் வருகைக்கு நன்றி சரவணகுமரன்

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 1:40 AM  

///நடிகரின் சார்பு நிலையில் இல்லாமல் தகவல்களாக அவர் தருபவை அனைத்துமே திரைப் பூக்களின் தொகுப்புகள்.////

கமலகாசன் பற்றிய அவரது பதிவுகளும் புகழ்ச்சி ஏதும் இன்றி செய்திகள் நிறைந்து இருக்கும்.

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 1:42 AM  

/////தமிழ் சினிமாவை வாழும் தமிழ் சினிமா கட்டுரை வடிவில் சொன்னது அருமை////

முரளி கண்ணன் = வாழும் சினிமா?
பர்பஃக்ட் !!!

மோகன் கந்தசாமி said...
December 9, 2008 at 1:54 AM  

/////கலக்கல் முரளி.

அதை அருமையான லேஅவுட்டில் எங்களுக்குப் படைத்ததற்கு நன்றி மோகன்.////

நன்றி பரிசல்காரன்

rapp said...
December 9, 2008 at 3:54 PM  

சூப்பர் சூப்பர் சூப்பர்:):):) கலக்கலோ கலக்கல்:):):) இப்டி தொகுக்கரத்துக்கே உங்களுக்கு எப்டி சூப்பரா தோணுதோ?:):):):)

rapp said...
December 9, 2008 at 4:20 PM  

தியாகபூமிப் படம் பத்தி சொல்லும்போது இது ஞாபகம் வருது. அதுல வருகிற சரோஜா என்ற பெண் குழந்தைப் பாத்திரம் அப்போ வெகு பிரபலமாச்சாம். செமக் கிரேசாம்:):):) கலைஞர் ஒரு கட்டுரையில் இது பத்தி சொல்லிருந்தார். என்னன்னா, மாறன் அவர்கள் படம் பாத்துட்டு இந்தக் குழந்தயக் கல்யாணம் பண்ணிக்கனும்னு அப்போ அடம் பண்ணாராம்:):):)

பராசக்தி பத்தி சொல்வதற்கு முன் திரு. இளங்கோவன்(மிகப் பிரபலமான ஒன்று, பாய கண்ணகி படம்) பத்தி குறிப்பிட்டிருக்கலாம். அவர்தான் திரையுலகில், 'அவா வந்தா இவா போனா' பாணியை மாற்றியவர். செங்கல்பட்டை சேர்ந்தவர். இவர் அவ்வூரைச் சேர்ந்தவர் என்ற காரணமும் ஸ்ரீதர்(இவரும் செங்கல்பட்டல்லவா) தனக்கு திரைத்துறையின் மீது காதல் வரக் காரணம் என்று பல சமயம் கூறியுள்ளார்.

பராசக்தி படத்தைக்கூட அரசாங்கம் தடை செய்து காமடி செஞ்சுதில்லையா?:):):)
//
பராசக்தி படப்பிடிப்பின் போது டைரக்டர்
கிருஷ்ணன்- பஞ்சு, மற்றும் சக நடிகர்களுடன்
சிவாஜி கணேசன்.ஆனால் ஒருவர் இதை தியேட்டரில் கவனித்து எழுதி புத்தகமாக போட விற்பனை பிய்த்துக் கொண்டு போனது//

கலைஞரோட சென்று அதைக் கையும் மெய்யுமாகப் பிடித்தது கண்ணதாசன்
அவர்கள்:):):)

ஸ்ரீதர் அவர்களோட படங்களைப் பத்தியும், பாலச்சந்தர் அவர்களோட படங்களைப் பத்தியும் உங்க விமர்சனங்கள் சூப்பர்:):):)

அதிலும் பாமா விஜயம் சான்சே இல்ல:):):) சூப்பர் படம்:):):)

பதினாறு வயதினிலே பத்தி சொல்லிருக்கறதும் சூப்பர். எனக்கு ரொம்ப ஆச்சர்யமான விஷயம்னா, பாரதிராஜா அவர்கள் கிட்டயும், இளையராஜா அவர்கள் கிட்டயும் இருந்து சிறந்த படைப்புகள் வரும். அதே சமயம் மிகக் குறுகிய காலக்கட்டத்துக்குள் அதனை சிறப்பாக வெளிக்கொண்டுவந்துவிடுவார்கள். செம ஸ்பீடு. அதுக்கு இந்தப் படமும் ஒரு சூப்பர் உதாரணம்:):):)
கிராமங்கள்னா அப்டியே பச்சப் பசேல்னு இருக்கும்னு இருந்த போக்கை மாத்தினவர்னு நீங்க சொல்லிருக்கறது சூப்பர்:):):)

தசாவதாரம் மாதிரி ஒரு சூப்பர் என்டெர்டெயினிங் படம் இந்த வருஷம் வரவே இல்ல:):):)

rapp said...
December 9, 2008 at 4:25 PM  

எங்க தல அகிலாண்ட நாயகனோட 'நாயகன்' படத்தைப் பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டுட்டீங்களே. அவர் படம் எப்புடி இந்த வருஷம் டெர்ரரக் கெளப்புச்சு:):):) இதை எங்க மன்றம் சார்பாக கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன்:):):)

இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

rapp said...
December 9, 2008 at 4:25 PM  

me the 25th:):):)

ILA (a) இளா said...
December 9, 2008 at 4:42 PM  

ஒவ்வொரு வருசமும் ஒரு படம் கட்டாயம் மாற்றமான முறையில் வரும். ஆனா அது எல்லாம் வணிக ரீதியா வெற்றி அடையாம போறது வருத்தம். பேசும்படம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பூவிழி வாசலிலே, இதயத்தைத் திருடாதே, தண்ணீர் தண்ணீர் இப்படி பெரிய பட்டியலே இருக்கு

Bharath said...
December 11, 2008 at 4:16 AM  

சூப்பர் கலெக்‌ஷன்.. ஆனால் லிஸ்டல “காதலிக்க நேரமில்லை” மிஸ் ஆனது ஆச்சரியமாக உள்ளது.. என்னளவில் அது ஒரு trendsetter..

Cinema Virumbi said...
December 12, 2008 at 5:55 AM  

நல்ல தொகுப்பு!

Trendsetter என்று எல்லாவற்றையும் சொல்ல முடியா விட்டாலும் வெளியான போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படங்களும் உண்டு. ரத்தக் கண்ணீர், திருவிளையாடல், புகுந்த வீடு , சவாலே சமாளி , அரங்கேற்றம், மறுபிறவி, அன்னக்கிளி, அவர்கள், பத்ரகாளி, மரோ சரித்ரா (தமிழல்ல என்றாலும்) , ஒரு தலை ராகம், ராஜ பார்வை , மூன்றாம் பிறை, நூறாவது நாள், சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள்.... சொல்லிக் கொண்டே போகலாம்!

நன்றி!

சினிமா விரும்பி

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 7:38 AM  

///சூப்பர் சூப்பர் சூப்பர்:):):) கலக்கலோ கலக்கல்:):):) இப்டி தொகுக்கரத்துக்கே உங்களுக்கு எப்டி சூப்பரா தோணுதோ?:):):):)//

ஹை ராப் ஹவ் ஆர் யூ !

சினிமா பத்தி நீங்க ஒரு மினி களஞ்சியம் போல இருக்கு

அப்பறம், ரித்தீஸ் அளப்பரையவிட மன்ற நிர்வாகிகள் அலப்பறை அதிகமாயிருக்கு, !:-)))))

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 7:40 AM  

////ஒவ்வொரு வருசமும் ஒரு படம் கட்டாயம் மாற்றமான முறையில் வரும். ஆனா அது எல்லாம் வணிக ரீதியா வெற்றி அடையாம போறது வருத்தம். பேசும்படம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பூவிழி வாசலிலே, இதயத்தைத் திருடாதே, தண்ணீர் தண்ணீர் இப்படி பெரிய பட்டியலே இருக்கு///

தண்ணீர் தண்ணீர் அப்படின்னு ஒரு படம் வந்ததா? ஐயோ இவ்ளோ மக்கா நானு! :-)))

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 7:41 AM  

////சூப்பர் கலெக்‌ஷன்.. ஆனால் லிஸ்டல “காதலிக்க நேரமில்லை” மிஸ் ஆனது ஆச்சரியமாக உள்ளது.. என்னளவில் அது ஒரு trendsetter.///

வாங்க பரத்,

நலமா?

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 7:41 AM  

நன்றி சினிமா விரும்பிகிடங்கு