Friday, December 12, 2008

மூத்த பதிவருங்கெல்லாம் ரிடையராகி தொலைத்தால் என்ன!

·

அவ்வப்போது யாராவது எதையாவது கிளப்பிவிட்டு தமிழ்மணத்தை அல்லோகலப் படுத்துவதால் அச்சமயங்களில் திரட்டியின் முகப்பிற்கு வரவே பகீரென்றிருக்கிறது. சாட்டிலோ தனி மடலிலோ திட்டிக் கொள்ளும் கொள்ளும் நேரம்போக முச்சந்திக்கு வந்து முண்டாசு தட்டுவதும் ஒரு கிக்குதான் போலிருக்கு.

இந்த பரஸ்பர டவுசர் அவுத்துக்கொள்ளும் வைபோகத்தில் பங்கு பெறுவோர் தனித்தனியாகவும் கூட்டாகவும் சில வரலாற்று சாகசங்களை அரங்கேற்றி இருப்பார்கள் என கருத இடமிருக்கிறது. அவற்றை விலாவாரியாக விளக்கிவிட்டு அவர்களது குடுமிப்பிடியை தொடர்ந்தால் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வசதியாக இருக்கக்கூடும். இவர்களது ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக படித்து அர்த்தம் ஊகித்து தெரிந்த செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் நம்ம தலைக்கா எகிறி விடுகிறது என்பது சோகமான செய்தி.இருப்பினும் தற்போது சூடாக பரிமாறிக்கொள்ளப்படும் வசவுகளுக்கு மூலகாரணம் புரியாமல் தவிக்கும், தமிழ்மண அரைடிக்கட்டுகளின் சவுகரியத்திற்காக நான் ஊகித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது உசிதமாகப்படுகிறது. இந்த எபிசோடின் துவக்கம் அமெரிக்காவில் துவ்ங்குவதாகக் கொள்ளமுடியும். புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர் ஒருவர் சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் பற்றி ஒரு பிலாக்கொகிராபி பதிவை எழுதினார். அந்த சிங்கைபதிவருடன் பன்னெடுங்காலமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ள மும்மூர்த்திப் பதிவர்கள் பின்னூட்டத்தில் அதை விமர்சித்திருந்தனர். அந்த மூன்று மூத்த பதிவர்களில் வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும் தனது சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும் டெசிபல் குறைவான விமர்சனத்தை வைக்க, ஐரோப்பா பயணத்திலிருக்கும் ஒரு மூத்த மொக்கைப் பதிவர் வழக்கம் போல் சவுண்ட் பைட்டை கூடுதலாக சேர்த்திருந்தார். அமெரிக்கவாழ் மூத்த பதிவர் அபாண்ட குற்றச்சாட்டு ஒன்றை ஏற்கனவே இவர்மீது வைத்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், சிறிது காலமாக நட்புக்கரத்தை நீட்டிபார்த்து ஓய்ந்துபோன சிங்கைப் பதிவர் இந்த அதிரடி விமர்சனத்திற்கு எதிவினையாக பதிவொன்றை வெளியிட்டுவிட மைனஸ் இருபது டிகிரி சுவீடன் தட்பவெட்பத்திலிருந்து ஒரு பிழம்புப் பதிவு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இந்த பிழம்பை வேடிக்கை பார்க்கச்சென்று முடி பொசுங்கிப் போனவர்களெல்லாம் அலறி அடித்துக்கொண்டு ஓட எதிர்த்திசையில் ஒரு சூறாவளி தாக்கத்தொடங்கியது. காண்டின் உச்சத்தை அடைந்து விட்ட கஜேந்திரன் பொறுமை இழந்து சுழன்றடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட புயல்தான் அது. தனது சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின் கோபத்திற்கு காரணம் தான் வழக்கமாக ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு மற்றொரு மூத்த பதிவர் இட்ட அநாகரீகமான பின்னூட்டமேயாகும்.

அநாகரீகப் பின்னூட்டம் என்பது வலை உலகின் சாபக்கேடு என்கிற நிலையில் அப்பின்னூட்டமிட்ட அந்த மூத்த பதிவர் நியாயமான காரணத்திற்கு கீழ்த்தரமான பின்னூட்டத்தை இட்டிருக்கக் கூடாது என வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள் இப்போது கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கோலிகுண்டு விளையாட்டில் பேந்தா கட்டி தோற்றுப்போன சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போன்று ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர் தங்களது காமெடிகளால் தமிழ்மணத்தை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர் என்பது யாவர்க்கும் தெரிந்ததே. அந்த காமெடி டிராக்குகளுக்கு ஒரு குரூரத்தன்மையை தொடர்ந்து வழங்கிவரும் பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு ஒரு புதிய போர்வாள் கிடைத்திருப்பதாக வேறு சில மூத்த பதிவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஆக, பிழம்பாலும் புயலாலும் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு இடைக்கால போர் நிறுத்தத்திற்கு மூத்த பதிவர்கள் முன்வரவேண்டும். நான்காண்டு காலாமாக நடைபெற்று வரும் இந்த மூன்றாம் தமிழ்மண பாணிபட்டுப்போர் நான்கு நாட்களில் நிறுத்த முடியாது என அரசியல்வாதிகள் போல் காமெடி செய்யாமல் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மொத்தமாக எல்லோரும் ரிட்டையராகி ஆளுக்கொரு திரட்டி உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்துமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: நியூ ஜெர்சி காட்டுப் பகுதி ஒன்றில் தனது கடைசிகாலத்தில் ஐயின்ஸ்டீன் தங்கிஇருந்து மாஸ் எனர்ஜி கொள்கையையும் குவாண்டம் பிசிக்ஸையும் ஒருமைப் படுத்த முயற்சி செய்து வந்தார். அவர் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் நான் வசிப்பதால் பிழம்புப் பதிவையும் புயல் பதிவையும் ஒருமைப் படுத்த முடியுமா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். விடை கிடைத்தால் மகிழ்ச்சி. அதற்குள் இரண்டுமே கட்டுடைக்கப் பட்டு அதர பழசாகி பின் அவரவர் வேலையைப் பார்க்கச்சென்று விடுவார்களேயானால் அதுவும் மகிழ்ச்சியே.

[அமேரிக்கா.. இளா.. சிங்கப்பூர்... கோவி... ஓசை... குழலி... ரவி... சுவீடன்... லக்கி... காண்டு... டோண்டு... பெயரிலி... ஐன்ஸ்டீன்... அடச்சே]

72 comments:

Thamiz Priyan said...
December 12, 2008 at 7:31 AM  

அப்ப நீங்களும் உங்க பதிவுக்கு அருஞ்சொற்பொருள் போட மாட்டீங்களா? வாட் எ பிட்டி! வாட் எ பிட்டி!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 7:50 AM  

////அப்ப நீங்களும் உங்க பதிவுக்கு அருஞ்சொற்பொருள் போட மாட்டீங்களா? வாட் எ பிட்டி! வாட் எ பிட்டி!////

எனக்கு புரிஞ்சாத்தான பொருள் விளக்கம் தரமுடியும் தமிழ் பிரியன் சார். :-))

TBCD said...
December 12, 2008 at 7:58 AM  

அரம்ப புள்ளியில் கொஞ்சம் ஓட்டை....

மற்றப்படி நல்ல அலசல்...

ஃஃஃஃ

ஓய்வுப்பெறுவதை..கட்டாய ஓய்வாக அறிவித்தாலும் பரவாயில்லைங்குறேன்....

Anonymous said...
December 12, 2008 at 8:01 AM  

புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர்,

சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் ,

மும்மூர்த்திப் பதிவர்கள்

வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும்

சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும்

சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின்

ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு

மற்றொரு மூத்த பதிவர்

வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள்

ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர்

பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு

அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின்

ம்முடியலே...
வுடுங்கடா சாமி

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது???

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:03 AM  

////அரம்ப புள்ளியில் கொஞ்சம் ஓட்டை....///

ஏதோ! நம் சிற்றறிவுக்கு எட்டியது மட்டும்! :-))))

///மற்றப்படி நல்ல அலசல்...////

நன்றி,

///ஓய்வுப்பெறுவதை..கட்டாய ஓய்வாக அறிவித்தாலும் பரவாயில்லைங்குறேன்....///

ஹி ஹி...

Anonymous said...
December 12, 2008 at 8:06 AM  

மண்டைகாயுது சாமி ....
என்னைப்போன்ற தமிழ்மண வாசகர்களுக்கு தான்.....

உங்களைப்போன்ற பதிவர்கள் இந்த கலவரத்திலும் இப்படியொரு கிசுகிசு பதிவு எழுதி புகுந்து விளையாடுகிறீர்கள். எல்லாமும் போய் சூடான இடுகையில உக்காந்துக்கிடுது......
நல்ல பதிவு தமிழ்மண முகப்புல தெரிய வாய்ப்பு கொடுங்க மகராசனுங்களா.....

உங்க கம்பேனியை நடத்த எங்களை கொல்லாதீங்க சாமியோவ்.... இதுபோன்ற பதிவுகளை குறைந்த பட்சம் தமிழ்மணத்திலாவது இணைக்காதீங்க தொரைகளா....

அம்மா தாயே...
(இந்த நிலைமைக்கு கொண்டாந்து உட்டுட்டீங்களே சார்)

காய்ந்த மண்டையுடன்
தமிழ்மணவாசகன்

Anonymous said...
December 12, 2008 at 8:11 AM  

பதிவர்களின் மனோநிலையயை இந்தப் பதிவு பிரதிபலிப்பதாக இருக்கிறது.

நன்றி

-
பதிவர்களில் ஒருவன்

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:11 AM  

அனானி சார்,

விடைகள் கீழே, நான் சொல்வது சரியா சொல்றேனா பாருங்க!

/////புதிதாக திரட்டி சமைத்துள்ள அமெரிக்கவாழ் மூத்த பதிவர்,
இளா

சிங்கையில் உள்ள ஒரு மூத்த கருத்துப் பதிவரைப் ,
கோவி கண்ணன்

மும்மூர்த்திப் பதிவர்கள்

ஓசை செல்லா, குழலி, செந்தழல் ரவி

வெளியே தமிழ்த் திரட்டி நடத்திவரும் பதிவரும்
தமிழ் வெளி ஓசை செல்லா

சீரிய பதிவுகளால் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவரும்
குழலி

சுவாரசியமான பதிவுகளால் பெருமதிப்பைப் பெற்றுள்ள இந்த மூத்தப் பதிவரின்
லக்கி

ஜோவியலாக காலை வாரிவிடும் இன்னொரு மூத்த பதிவருக்கு
டோண்டு

மற்றொரு மூத்த பதிவர்
பெயரிலி

வெய்ட்டிங் லிஸ்ட்டிலிருந்த மேலும் சில மூத்த பதிவர்கள்
பலர்

ஈழத்தமிழருக்கு அறிவுரைகூறிக்கொண்டு திரியும் பலர்
வெகுவாரியானோர்


பன்மொழி வித்தகரான இந்த மூத்த பதிவருக்கு
டோண்டு

அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ்மண சிறுபான்மை பதிவர்களின்
உங்களைப்போன்று, என்னைப்போன்று

ம்முடியலே...
வுடுங்கடா சாமி
அப்படியெல்லாம் உடமுடியாது சார் :
-))))


ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது???

ஹா ஹா ஹா

வால்பையன் said...
December 12, 2008 at 8:12 AM  

இது மட்டும் என்னை மாதிரி அரை டிக்கெட்டுகளுக்கு புரியுமாக்கும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...
December 12, 2008 at 8:13 AM  

தமிழ்வெளி கடலூர் காட்டான் என்பவருடையது

கணேஷ் said...
December 12, 2008 at 8:14 AM  

நீங்கள் விளக்கி சொல்லியும் எனக்கு ஒரு எழவும் புரியலை....

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது???

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:15 AM  

////மண்டைகாயுது சாமி ....
என்னைப்போன்ற தமிழ்மண வாசகர்களுக்கு தான்.....

உங்களைப்போன்ற பதிவர்கள் இந்த கலவரத்திலும் இப்படியொரு கிசுகிசு பதிவு எழுதி புகுந்து விளையாடுகிறீர்கள். எல்லாமும் போய் சூடான இடுகையில உக்காந்துக்கிடுது......
நல்ல பதிவு தமிழ்மண முகப்புல தெரிய வாய்ப்பு கொடுங்க மகராசனுங்களா.....

உங்க கம்பேனியை நடத்த எங்களை கொல்லாதீங்க சாமியோவ்.... இதுபோன்ற பதிவுகளை குறைந்த பட்சம் தமிழ்மணத்திலாவது இணைக்காதீங்க தொரைகளா....

அம்மா தாயே...
(இந்த நிலைமைக்கு கொண்டாந்து உட்டுட்டீங்களே சார்)

காய்ந்த மண்டையுடன்
தமிழ்மணவாசகன்///

தமிழ்மணவாசகன் சார்,

ரிலாக்ஸ் பிளீஸ்,

உங்கள மாதிரிதான் நானும் கடுப்பானேன். அப்பறம் நிதர்சனம் புரிஞ்சதும் ஜோதியில ஐக்கியமாயிட்டேன்

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:18 AM  

////இது மட்டும் என்னை மாதிரி அரை டிக்கெட்டுகளுக்கு புரியுமாக்கும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

என்ன இது வால்ப்பையன்!
இப்படி பொறுப்பில்லாம பேசறிங்க ! :-)))

உங்களமாதிரிதான நானும், நான் எவ்ளோ சமத்தா செய்தி சேகரிக்கறேன் பாத்திங்கல்ல! தப்போ ரைட்டோ உள்ள பூந்து நீங்களும் ரெண்டு சோடா பாட்டில வீசுங்க!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:20 AM  

///பதிவர்களின் மனோநிலையயை இந்தப் பதிவு பிரதிபலிப்பதாக இருக்கிறது.

நன்றி

-
பதிவர்களில் ஒருவன்///

நன்றி பதிவர்களில் ஒருவன் சார்!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:22 AM  

////தமிழ்வெளி கடலூர் காட்டான் என்பவருடையது///

கடலூர் காட்டானா! எங்க போய் அவரை தேடறது இப்போ! சுட்டி ஏதாவது இருந்தா குடுங்க சாமியோவ்! :-)))

Anonymous said...
December 12, 2008 at 8:22 AM  

ஏய்..உன் மேலேயும் ஆபாச பதிவு எழுதனும்மா

Anonymous said...
December 12, 2008 at 8:25 AM  

கடலூர் காட்டானா http://kuzhali.blogspot.com

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:25 AM  

////நீங்கள் விளக்கி சொல்லியும் எனக்கு ஒரு எழவும் புரியலை....

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...
என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது???////

கணேஷ் சார்,

உங்களுக்கு புரியாதது எனக்கு அறை குறையாவாவது புரிஞ்சிருக்கு, சோ உங்களைவிட நான் மூத்த பதிவர், கரைக்டா? :-)))))

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:31 AM  

/////கடலூர் காட்டானா http://kuzhali.blogspot.காம்///

குழலி சாரா? பதிவுகள் அடிப்படையில் எனக்கு அவரை மிகப் பிடிக்கும். அவரை இத்தகைய அடைமொழியில் நீங்கள் சொல்வதை நான் ரசிக்க வில்லை. எழுத்து சுதந்திரத்துக்காக, ரொம்ப மோசமில்லாத இந்த பின்னூட்டத்தை அழிக்காமல் வைக்கிறேன்.!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:34 AM  

////ஏய்..உன் மேலேயும் ஆபாச பதிவு எழுதனும்மா///

இது ரவியின் எதிர் கோஷ்டியினரின் பின்னூட்டம் அல்லது காமெடிக்காக இட்ட பின்னூட்டம்! எப்படி இருப்பினும் எழுத்து சுதந்திரத்தின் பலன் இந்த பின்னூட்டத்திற்கு அளிக்கப்படுகிறது.

Anonymous said...
December 12, 2008 at 8:35 AM  

look at the blog heading my dear !! http://kuzhali.blogspot.com

மதிபாலா said...
December 12, 2008 at 8:38 AM  

நியாயமான கேள்விதான்.ஆனால் நீங்க வாரமலருக்கு கிசு கிசு எழுதப் போலாம் மோகன் கந்தசாமி அண்ணே , பிச்சு உதர்றீங்கோ

உதட்டசைவு நடிகையும் , ஊட்டம் சாப்பிடாத நடிகரும் இரவில் கொண்டாட்டடாம் , அதனால் நட்சத்திர நடிகரின் மகள் கலக்கம்னு எழுதிப் போட்டீங்கண்ணா சும்மா பிச்சிகிட்டுப் போவும்.

என்ன நான் சொல்றது? ( நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் படிக்காதீர்கள்.)

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:39 AM  

////look at the blog heading my dear !! http://kuzhali.blogspot.காம்////

ஒ! அப்படியா? உங்கள் முந்தைய பின்னூட்டத்தைப் பற்றிய எனது கருத்து வாபஸ்!

ஹி ஹி சாரி!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 8:52 AM  

////நியாயமான கேள்விதான்.ஆனால் நீங்க வாரமலருக்கு கிசு கிசு எழுதப் போலாம் மோகன் கந்தசாமி அண்ணே , பிச்சு உதர்றீங்கோ///

ஹி ஹி மதிபாலாசார், ஜில்லுன்னு இருக்குங்க!

////உதட்டசைவு நடிகையும் , ஊட்டம் சாப்பிடாத நடிகரும் இரவில் கொண்டாட்டடாம் , அதனால் நட்சத்திர நடிகரின் மகள் கலக்கம்னு எழுதிப் போட்டீங்கண்ணா சும்மா பிச்சிகிட்டுப் போவும்.///

ஹா ஹா, மிக முக்கிய மான உங்க கட்டுரைக்கு லே அவுட் தயாரித்து வைத்து விட்டு வெளியிட காத்திருந்தால், தமிழ் மனத்தில் வேறொரு அக்கப்போர் நடந்து வருகிறது. இதற்கிடையில் நல்ல கட்டுரையை காவு கொடுக்க விரும்பாமல் தான் இந்த மொக்கைப் பதிவு. :-(((

என்ன நான் சொல்றது? ( நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் படிக்காதீர்கள்.)////
பதினாறு வயதினிலே பரட்டை ஸ்டைலில் படிக்கலாமா? :-))))

பழமைபேசி said...
December 12, 2008 at 8:55 AM  

உங்க எழுத்தாளுமை நல்லா இருக்கு! கூடவே, இலைமறை காய் விபரங்களும் தெரிஞ்சுகிட்டேன்.

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 9:15 AM  

////உங்க எழுத்தாளுமை நல்லா இருக்கு! ////

பழமை சார்!

பார்த்தீங்களா! நீங்ககூட கிண்டல் பண்றீங்க!!!! :-)))

நன்றி

பரிசல்காரன் said...
December 12, 2008 at 9:25 AM  

பதிவின் அடக்கம் பற்றி...

நோ கமெண்ட்ஸ்.

நீங்க எழுதியிருந்த விதம் கலக்கல் சீனியரே!

அருமையான நடை.. ச்சான்ஸே இல்ல போங்க!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 9:36 AM  

////பதிவின் அடக்கம் பற்றி...

நோ கமெண்ட்ஸ்///

ஐ அண்டர் ஸ்டாண்டு!

////நீங்க எழுதியிருந்த விதம் கலக்கல் சீனியரே!///

வாணாம்! அழுதுருவேன்! :-)))))

/////அருமையான நடை.////
இதுதான வானாங்கிறது! :-)))))

நன்றி பரிசல் சார்!

ரவி said...
December 12, 2008 at 9:49 AM  

அற்புதமான பதிவு...!!!

குடுகுடுப்பை said...
December 12, 2008 at 9:56 AM  

எது எப்படியோ தனிமனித தாக்குதலை ஒழிந்தால் சரி.

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 10:03 AM  

///அற்புதமான பதிவு...!!!///

நன்றி ரவி

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 10:09 AM  

//எது எப்படியோ தனிமனித தாக்குதலை ஒழிந்தால் சரி.///

அது எப்புடி! ஒழிய விட்டுடுவமா? நாம எதுக்கு இருக்கிறோம்! :-)))

நன்றி குடுகுடுப்பை,

நசரேயன் said...
December 12, 2008 at 10:21 AM  

ஒண்ணுமே புரியலை மோகன், ஏதாவது கோனார் உரை கிடைக்குமா இந்த பதிவுக்கு

அர டிக்கெட்டு ! said...
December 12, 2008 at 10:32 AM  

//இருப்பினும் தற்போது சூடாக பரிமாறிக்கொள்ளப்படும் வசவுகளுக்கு மூலகாரணம் புரியாமல் தவிக்கும், தமிழ்மண அரைடிக்கட்டுகளின் சவுகரியத்திற்காக நான் ஊகித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது உசிதமாகப்படுகிறது.//

பைட் சீன்ல மிஸ்ஸிங் லிங் தேடி டவுசர் கழன்டு உழர நேரத்தில் மேட்டர சுருக்கமாக சொல்லி என் டவுசர காப்பாத்துனத்து தேங்க்ஸ்....
அப்புறம் இந்த போலி பிரச்சனை பத்தியும் ஏதாவது இன்பர்மேசன் குட்தீங்கன்னா....பிளீஸ் ஜென்டில்மேன்...நம்ம வரலாறில்லையா...

Unknown said...
December 12, 2008 at 10:43 AM  

நீங்கள் போட்ட பதிவிற்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா?

ILA (a) இளா said...
December 12, 2008 at 10:44 AM  

எல்லாப் மூத்தப் பதிவர்களுக்கும் தெரியும். எல்லாம் கடந்து போவும். இதுக்கு காரணமான் என்னுடைய சோம்பேறித்தனத்தினை இன்றோடு மூட்டைக்கட்ட வேண்டும். நசரேயன் சொன்னாரு. பதிவ போட்டா பின்னூட்டம் படிங்கன்னு, அதைக்கேட்டு இருந்தாலே பல பிரச்சினை முடிஞ்சிருக்கும். பதிவ போட்டுட்டு, மட்டுறத்தலையும் தூக்கிவிட்டுட்டு தூங்கப்போனதால வந்த வினை. இப்பவும் சொல்றேன் இதை வெச்சி நீங்களும் கும்மி அடிக்கிறதை போல எல்லாரும் அடிங்க. எப்படி நிறுத்துறதுன்னு முடிவுக்கு வராதீங்க.:(

Athisha said...
December 12, 2008 at 10:45 AM  

நீங்களும் மூத்தப்பதிவராகீட்டீங்க போலருக்கே.. தலைவா..!!

சகபதிவர்களுக்கு அறிவுரைலாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க

கலக்குங்க

நானும் கேட்டுக்கறேன்

Athisha said...
December 12, 2008 at 10:46 AM  

இது

பி
ன்
னூ
ட்


டு
பு
ரி
த்


ம்

ஹி
ஹி

ILA (a) இளா said...
December 12, 2008 at 10:47 AM  

//Labels: பீத்த பதிவர்கள்//
ரவி, திட்டிப் பின்னூட்டம் போட்டதுக்கும் உங்க லேபிலுக்கும் வித்தியாசம் இல்லே. ஆனாலும் அவர் திட்டினது கூட என்னைத்தான். அப்புறம் நாங்க சேட்ல சமாதானம் ஆகிட்டோம். பல விஷயம் எல்லார் கூடயும் பேசியாச்சு. நீங்க போட்ட லேபில் மட்டும் சிந்துசமவெளி நாகரிகமாங்கண்ணா? அடுத்தவங்க முதுகுதான் தெரியுமா..

Anonymous said...
December 12, 2008 at 10:47 AM  

இது பின்னூட்ட ஆபாசத்தனத்துக்கு ஒரு சாட்சி ...

யோவ் தயவுசெஞ்சு கேட்ட மூடுங்கய்யா...

அப்புறம் ஆபாசப்பின்னூட்டம் போட்டு தாலி அறுப்பானுங்க...''அனானியா''

நானேதான்...

Athisha said...
December 12, 2008 at 10:50 AM  

மேலே இருக்கும் அனானி பின்னூட்டம் நான் போட்டது ஐயா..

ILA (a) இளா said...
December 12, 2008 at 11:01 AM  

எனக்கு இருக்கிற அதே சோம்பேறித்தனம் உங்களுக்குமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
December 12, 2008 at 12:22 PM  

தலையைச் சுத்துதே.. தெரியாம உள்ள வந்துட்டனா? :)

ILA (a) இளா said...
December 12, 2008 at 12:23 PM  

//எழுத்து சுதந்திரத்தின் பலன்//
உங்கப் பதிவா இருந்தா எழுத்துச் சுதந்திரம், அடுத்தவங்க பதிவுன்னா ரிடையர்- உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 1:33 PM  

///ஒண்ணுமே புரியலை மோகன், ஏதாவது கோனார் உரை கிடைக்குமா இந்த பதிவுக்கு///

எட்டாம் நம்பர் பின்னூட்டத்த பாருங்க நசரேயன், புரிஞ்சா சொல்லுங்க!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 1:42 PM  

////பைட் சீன்ல மிஸ்ஸிங் லிங் தேடி டவுசர் கழன்டு உழர நேரத்தில் மேட்டர சுருக்கமாக சொல்லி என் டவுசர காப்பாத்துனத்து தேங்க்ஸ்....////

நான் சொன்னது முழுமையான தகவல் அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது அரடிக்கட்டு சார்.

///அப்புறம் இந்த போலி பிரச்சனை பத்தியும் ஏதாவது இன்பர்மேசன் குட்தீங்கன்னா....////

முயற்சி செய்து கிட்டுதான் இருக்கேன், இன்னும் முழுமை பெறவில்லை.

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 1:45 PM  

///நீங்கள் போட்ட பதிவிற்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா?////

ரவிசங்கர்,
பின்னூட்டம் நம்பர் எட்டை பார்க்கவும்,

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:10 PM  

////இதுக்கு காரணமான் என்னுடைய சோம்பேறித்தனத்தினை இன்றோடு மூட்டைக்கட்ட வேண்டும். ///

இளாசார்,
உங்கபதிவு இல்லன்னா வேறொரு பதிவுல அல்லது அவங்கவங்க பதிவுல மல்லு கட்டப்போறாங்க, இதுக்கு ஏன் நீங்க டரியல் ஆவுறீங்க!

///இப்பவும் சொல்றேன் இதை வெச்சி நீங்களும் கும்மி அடிக்கிறதை போல எல்லாரும் அடிங்க. எப்படி நிறுத்துறதுன்னு முடிவுக்கு வராதீங்க.:(///

நம்மால ஒன்னும் பண்ணமுடியாது சார். அடுத்தவன திருத்தறது நம்ம வேலையில்ல. நமக்கு அந்த தகுதியுமில்லை, அதிகாரமுமில்லை. நாம சொன்னாலும் திருந்தப் போவதுமில்லை. நாம் பத்தரை மாற்றும் அல்ல.

ஒன்னே ஒண்ணுதான் நாம பண்ண முடியும். கண்டனம் அல்லது கிண்டல் செய்யலாம். கண்டனம் செய்தால் நம்மை கிண்டல் செய்வார்கள். கிண்டல் செய்தால் யோசிக்கவாவது செய்வார்கள் அல்லவா?

அதைத்தான் செய்தேன்!

Anonymous said...
December 12, 2008 at 2:11 PM  

இலாவின் பதிவில் ஒரு தவறும் தெரியவில்லை. அவர் அறிஞ்சதை அவர் சொல்லிவிட்டிருக்கார். தவறை சொல்லாதது அவர் தவறு ஒன்றும் இல்லை. 'பீத்த' என்ற வார்த்தையும் செந்தழல் ரவியின் பதிவுக்கு சரிநிகரான சொல்லே.

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:36 PM  

//இது

பி
ன்
னூ
ட்


டு
பு
ரி
த்


ம்

ஹி
ஹி///


துதி
ல்


பி
ன்
னூ
ட்

ப்
பு
த்ம்


ஹி
ஹி

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:48 PM  

///ரவி, திட்டிப் பின்னூட்டம் போட்டதுக்கும் உங்க லேபிலுக்கும் வித்தியாசம் இல்லே. ///

அப்படியா? இளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, இந்த லேபிளில் என்ன அநாகரீகத்தை கண்டீர். சில மூத்த பதிவர்களின் பின்னூட்டம் மற்றும் பதிவுகளுக்கு இது ஆயிரம் மடங்கு தேவலாம். 'மூத்த' என்பது பொதுத்தன்மை உடைய வார்த்தை. தனியோருவரையோ அல்லது குடும்பத்தினரையோ சுட்டுவது அல்ல.

///சிந்துசமவெளி நாகரிகமாங்கண்ணா///
சிந்து சமவெளி நாகரீகமில்லை தான். ஆனால் கண்டிப்பாக அநாகரீகம் இல்லை.

///அடுத்தவங்க முதுகுதான் தெரியுமா..///

ம்க்கும்..! :-(((

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:50 PM  

/////இது பின்னூட்ட ஆபாசத்தனத்துக்கு ஒரு சாட்சி ...

யோவ் தயவுசெஞ்சு கேட்ட மூடுங்கய்யா...

அப்புறம் ஆபாசப்பின்னூட்டம் போட்டு தாலி அறுப்பானுங்க...''அனானியா''

நானேதான்...////

////மேலே இருக்கும் அனானி பின்னூட்டம் நான் போட்டது ஐயா..///


அதிஷா என்ன இது! குபீர் சிரிப்பை வரவைக்கிறீர்கள். :-))))))

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:51 PM  

/////எனக்கு இருக்கிற அதே சோம்பேறித்தனம் உங்களுக்குமா?////

அட விடுங்க சாமி, கிடக்கட்டும்!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 2:57 PM  

/////தலையைச் சுத்துதே.. தெரியாம உள்ள வந்துட்டனா? :)///

ஹி ஹி, வந்தது வந்துட்டீங்க! உங்க பங்குக்கு ரெண்டு சோடா பாட்டில வீசிடுங்க!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 3:39 PM  

//////எழுத்து சுதந்திரத்தின் பலன்//
உங்கப் பதிவா இருந்தா எழுத்துச் சுதந்திரம், அடுத்தவங்க பதிவுன்னா ரிடையர்- உங்க காமெடிக்கு அளவே இல்லையா?////

இளா,

/////
Anonymous நொந்தழல் பீவி கொலைவெறிப்படை said...

ஏய்..உன் மேலேயும் ஆபாச பதிவு எழுதனும்மா

/////

மேற்கண்ட இந்த பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கும்போது எழுத்து சுதந்திரம் பற்றி சொன்னேன். உண்மையில் இப்பின்னூட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு கும்மி பின்னூட்டம். மிரட்டலாக கொள்ள முடியாது. மேலும் யாரையும் திட்டி இடப்பட்டது அல்ல. மாறாக ரவியை கிண்டல் தான் செய்கிறது இந்த பின்னூட்டம். எனினும் இதில் ஒரு பதிவரின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளதால் இதை வெளியிட எழுத்து சுதந்திரத்தின் பலன் வேண்டும் என்பது அவசியம்.

ஆனால் உங்கள் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம் அவ்வாறானது அல்ல. மேலும் அதை வெளியிட கூடாத அளவுக்கு மிக மோசமானதும் அல்ல. அதை வெளியிட்டதற்காக உங்களை யாரும் குறை சொல்ல முடியாது. அதை இட்டவரை கடிந்து கொள்ளலாம் அவ்வளவே. அதைத்தான் நான் செய்தேன். உங்களை குறை சொல்லவில்லை. ரிடையர் பற்றி கூறுவது சமீபத்திய டெவலப்மன்ட்டுகளுக்காகத்தான். உங்கள் பதிவில் அரங்கேறியவைகளுக்காக அல்ல.

தவிரவும், இதுபோன்ற தாக்குதளுக்காகவென டெடிக்கேட்டட் பதிவு போடுவதற்கு பெரிதாக ஒன்றும் ஸ்கில் தேவையே இல்லை. எல்லாராலும் போட முடியும். மேனியள் ஆக்டிவிட்டி என்று ஆங்கிலத்திலே சொல்வார்களே அதுபோன்றது இது. மூத்த பதிவர்கள் என்று தங்களை தாங்களே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்பவர்கள் இது போன்ற பதிவுகள் இடுவதால் ஏனையோருக்கு உற்சாகத்தை அளித்துவிடுகின்றனர். பிறகு, கலவரம் மூண்டால் கதவை இழுத்து சாத்துவது போல பின்னூட்ட பெட்டியை நாம் பூட்டி வைக்கவேண்டும். எந்நேரமும் திகில் கவ்வியது போலவே அலையவேண்டிய வரும். அதுபோன்ற சூழல் மீண்டும் வருவதற்கு பதில் இவர்கள் ரிடையராகிவிட்டால் நல்லதுதானே!

மோகன் கந்தசாமி said...
December 12, 2008 at 3:42 PM  

////இலாவின் பதிவில் ஒரு தவறும் தெரியவில்லை. அவர் அறிஞ்சதை அவர் சொல்லிவிட்டிருக்கார். தவறை சொல்லாதது அவர் தவறு ஒன்றும் இல்லை. ////

மிகச்சரி.

'பீத்த' என்ற வார்த்தையும் செந்தழல் ரவியின் பதிவுக்கு சரிநிகரான சொல்லே.////
இதை ஏற்க முடியாது. பீத்த என்றசொல் விமர்சனச்சொல், வெறும் கிண்டலோ, ஆபாசம் உடையதோ அல்ல.

இராம்/Raam said...
December 12, 2008 at 3:51 PM  

:))

dondu(#11168674346665545885) said...
December 12, 2008 at 9:22 PM  

//பிறகு, கலவரம் மூண்டால் கதவை இழுத்து சாத்துவது போல பின்னூட்ட பெட்டியை நாம் பூட்டி வைக்கவேண்டும்.//
பின்னூட்ட மட்டுறுத்தல் என்று ஏன் இருக்கிறதாம்? எல்லாவற்றையும் திறந்து போட்டு ஒரு மாதம் பதிவு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

ஒண்ணு ஓபனா விடறது இல்லேன்னா பின்னூட்டப் பெட்டியை மூடறதுங்கறது வச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கறதுக்கு சமம்.

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

Pot"tea" kadai said...
December 12, 2008 at 10:33 PM  

இப்பதிவை இரவுக்கழுகாரும் இரவுக்கழுகார்1 ம் அனாசயமாக நிராகரிப்பர் என நம்புகிறேன்.
இந்த மாதிரிபதிவு போடணும்னா நீங்க இரவுக்கழுகார் கிட்ட டியூசன் போவனும்.

என்னது இரவுக்கழுகார் யாரா?
இரவுக்கழுகார் முகவரி பெயரிலி அண்ணைக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.

உங்களது தகவல்களில் பல தாறுமாறான தவறுகள் உள்ளது.

தற்போதைய அசாதாரண உலகளாவிய உலகமயமாக்கல் கொள்கைகளின்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரவீழ்ச்சியில் என்னுடைய இரண்டணாவை வீண்விரயம் செய்யயியலாது எனக்கூறி எஸுகேப்பூ...

லக்கிலுக் said...
December 12, 2008 at 11:51 PM  

அட்டகாசமான பதிவு மோகன் :-)

நீண்டநாள் கழித்து ஒரு பதிவினை மனமார ரசித்தேன். நன்றி!

அன்புடன்
லக்கி

-/பெயரிலி. said...
December 13, 2008 at 12:52 AM  

அடேங்ப்பா! இன்னும் பொட்"டீ" அண்ணா-கம்-தம்பிக்கு கூனி மந்ராலோசனை தொடர்கிறது போல. ச்சோ! ச்சோ! ரெண்டுவருசமா மரமுள்ளா தானாய் கற்பனை செய்து வந்த வலி குத்திக்கிட்டேருக்கோ.

======
இதெல்லாம் கழுகு போடும்போது எங்கேயிருந்தாரோ? :-)

Sunday, January 21, 2007
kazugu.blogspot.com/2007/01/blog-post.html
========================================================

புதிய வேலை, புதிய நாடு...நல்ல சூழ்நிலை..காழுகார் கடுமையான உறக்கத்தில் !! காலை மணி ஐந்து இருக்கும்..வைப்புரேட்டரில் போட்டுவைத்த அலைபேசி டர் புர் என்று ஒலி எழுப்புகிறது...அட புது எண்ணுக்கு யாரது குறுஞ்செய்திகள் அனுப்புவது என்று ஆச்சர்யமாக பார்க்கையில்...ஏகப்பட்ட குறுஞ்செய்திகள்...ஒவ்வொன்றாக வெளியிட்டுக்கொண்டிருந்தால் மக்கள் எரிச்சல்ஸ் ஆப் அமெரிக்கா ஆகமாட்டாங்களா ? சரி அனைத்தையும் இப்பவே போட்டுறலாம்..இன்னா ஓக்கேவா..மக்கள்

* இரவுக்கழுகு போலி தான் என்று நம்புகிறதாம் போண்டா மாதவன் மற்றும் மாங்காமரத்தான் குரூப்.


* நோண்டு பதிவில் ஏகப்பட்ட போலி முகவரிகளை உருவாக்கி பின்னூட்டம் இடுவதற்கு உதவுவது போலியாரால் ஆப்பு வைக்கப்பட்ட லம்பாடி அருண் என்ற பதிவராம். இவர் திருச்சி 007 என்ற பெயரில் நிறைய கருத்துக் களங்களில் எழுதி வருபவராம்.

* பெரியார் வழி சரிபட்டு வராது, கருணாநிதி வழி தான் சரிபட்டு வரும் என்று முடிவெடுத்ததால் திராவிடத் தமிழர்கள் வலைப்பூவுக்கு உடன்பிறப்பு அதிஷ்டப்பார்வை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாராம்.

* readynotify மூலமாக மாயவரத்தானால் சாம்புவை சரியாக அடையாளம் காணமுடியவில்லையாம். வைரம் (இங்கிலிஷினி) தான் சாம்பு என்று தவறாக கணித்து விட்டாராம். நாமக்கல்லார் இந்த வதந்தியால் மகிழ்ச்சியாக இருப்பதாக கேள்வி...

* வலைப்பதிவர் சந்திப்பு நடத்தினால் முன்புபோல் ஆதரவு இருக்குமா என்று தெரியாமல் போண்டா மாதவன் குழம்பிப் போய் இருக்கிறாராம். சென்னைப் பட்டினத்தார் மீது போண்டா மாதவன் இதனால் பயங்கர கடுகடுப்பு அடைந்திருக்கிறார்.

* கருப்பு பதிவை கிழுமாத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் டிரான்ஸ்பர் செய்வதாக பிலிம் காட்டி மீண்டும் தமிழ்மணத்தில் இடம்பெற வைத்துவிட்டதில் கருப்பானவர் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்போது கருப்பாக செயல்படுவது கிழுமாத்தூர் எக்ஸ்ப்ரஸ் அல்ல. பழைய கருப்புவே தான். இதெப்படி கீது நைனா ??

* சிங்கப்பூர் பெரியார் மைய கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று இன்வெஸ்டிகேஷன் செய்து வருகிறதாம் மாங்காமரத்தான் குரூப். இதற்காக போலியான திராவிட ஐடிக்கள் ஏகப்பட்டது ரெடி செய்யப்பட்டிருக்கிறதாம்..அங்கே சென்று மீன் தலை கறி குழம்பு தின்ற ஒரு பதிவரை இதுக்காக துளைத்து எடுக்கிறதாம் மாங்காமரத்தான் அணி..!!

* கரு. மூர்த்தி என்ற பெயரில் செயல்படுவது மாங்காமரத்தானே. கரு என்றால் கருப்பு. மூர்த்தி என்றால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா? அஜுக்கு இன்னா அஜுக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்.

* நல்ல பெயர் எடுத்திருக்கும் செந்தமிழ் மணி பதிவரை எப்படியாவது கொச்சைப்படுத்தி லவ் அண்டு லவ் மில்க்கின் (காலாகாலத்துக்கும் மில்க்கா) இமேஜை தக்கவைத்துக் கொள்ள போண்டா மாதவன் குரூப் முடிவு செய்திருக்கிறதாம். முதற்கட்டமாக செந்தமிழ் மணியை சிறுபான்மை மதவெறியர் என்று முத்திரை குத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்..

* யெல்லேரூம் தான் மூஞ்சுமூடி என்று ஆப்பு வைத்தபோது கடுமையாக மறுத்தவர் தன் பதிவு ஒன்றிலேயே விவரம் தெரியாமல் தன் லாஸ் ஏஞ்சல்ஸ் இருப்பிடத்தை தெளிவுபடுத்தி விட்டாராம். கடுப்பான பாஸ்டன்காரர் லாஸ் ஏஞ்சல்ஸ் காரரை கொஞ்சம் கவனமாக இருக்க சொல்லியிருக்கிறாராம்..பாஸ்டன்காரரின் புது மொபைல் நெம்பர் வந்தாலே யெல்லோரூம் கொஞ்சம் டார்ச்சராகிறாராம் இதனால்..

* சென்னைப் பட்டினம் குழுவில் ஏகப்பட்ட சச்சரவாம். ஒத்த கருத்தில்லாதவர்கள் ஒன்று சேர்ந்தால் குட்டை குழம்பித்தானே போய்விடும் ? இதனால் பெரிதும் மகிழ்ந்திருப்பது போண்டா மாதவனாம்..இனிமேல் வாடகைகாரில் சென்றால் ஒசி போண்டா வாராவாரம் கிடைக்கும் என்ற நப்பாசைதான் காரணமாம்...

இந்த தகவல் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேனுமா ?
posted by இரவுக்கழுகார் at Sunday, January 21, 2007

1 Comments:
Anonymous said...
கேட்டசெய்தி பாப்பானைப் பற்றி ஏதும் இல்லையா?

3:31 PM
=====================

Saturday, January 27, 2007
kazugu.blogspot.com/2007/01/blog-post_27.html

======================


இரவுகழுகுக்கு செய்திகள் தர உலகமெல்லாம் நிருபர்கள் தோன்றிவிட்டார்கள் போல தோன்றுகிறது.

பாஸ்டனில் இருந்த வந்த குட்டி கழுகு ஒன்று நம் அலுவலகத்துக்கு வந்தது. தேநீர் கொடுத்து உபசரித்தோம். சிறகுகள் கழுகுக்கு படபடப்பாக அடித்து கொண்டிருந்தது. செய்தியின் வேகம் தந்த படபடப்பு அதுவாம்.

இனி பாஸ்டன் கழுகின் நேரடி ரிப்போர்ட் - குன்ஸான பெண்பதிவரை வுட்டது ரெட்டில் போட்டு வாட்டி எடுத்தது ப்ரீயாக வூடு கட்டி கொடுப்பவராம். இவரும் வுட்டது ரெட்டில் ஆரம்பத்திலிருந்தே பார்ட்டிசிபேட் செய்து வருபவராம். வாலிபர் சங்கத்து ஆளுங்களுக்கு இவரும் ரொம்ப நெருக்கமானவர் தானாம். ஏற்கனவெ சங்கத்தில் இருந்த குன்ஸை மேஸ்திரி வூடு கட்டி அடித்ததை சங்கத்து சிங்கங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளுக்குள் ரசித்தது குன்ஸு வட்டாரத்தை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது என்கிறார்கள்

இரவுக்கழுகு குட்டி கழுகின் செய்தியை அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு வுட்டது ரெட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றார்

குட்டிகழுகு - இதுகூட தெரியாதா? வுட்டது ரெட் ஆரம்பித்தது இஸ்ரேல் பஞ்சர். ஆரம்பத்தில் எழுதி கொடுத்தது ஆன்மீகமும், பாலியலும் எழுதும் பெருசும், மூஞ்சுமூடியும். இப்போது குழு பெருசாகி விட்டது. இலவச மேஸ்திரி, மாங்காமரத்தான், மவுசு என்று ஏகப்பட்ட பேர் வுட்டது ரெட்டுகாக உழைச்சிக்கிட்டு இருக்காங்க என்றது.

ஆஹா. மேஸ்திரி நீ தானா அந்த சாஸ்திரி?

* - * - * - * - * - * - * - * - * - * -

மெட்ராசில் இருந்து வந்த பிளாஷ் நியூஸ்

தி. ராஸ்கோல்கள் குழு ஒன்று குடியரசு தினம் அன்று வலைபூக்களில் பெரியவர் மீதும், தி. ராஸ்கோல்கள் மீதும் நடக்கும் ஆபாச தாக்குதல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பெரியவர் திடலுக்கு போய் தி.ரா.க்களின் பெரிய தலைவரை (எண்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் பெயர் கொண்டவர்) நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்களாம். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் சிங்கப்பூரில் வாங்கப்பட்டதாம்.

ஜறிகரன், கடாயு, போண்டா மாதவன், கால்மாரி, கரவெட்டி ப்ளூகண்டன், மாங்காமரத்தான், மூஞ்சுமூடி, உட்டது ரெட்டு போன்றவர்கள் எழுதிய பதிவுகள் அந்த பிரிண்ட் அவுட்டில் இருந்ததாம். விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

* - * - * - * - * - * - * - * - * - * -

கழுகில் வந்த கிசுகிசுவினை கண்டு இராமர் பெயர் கொண்ட சிங்கம் கொந்தளித்து விட்டதாம். உடனே சங்கத்தை கூட்டி மறுபடியும் கலக்க ஆரம்பித்து விட்டார்களாம். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி.

ஆனாலும் இன்னமும் பட்டணத்து கோஷ்டி தூங்கி வழிந்து கொண்டிருப்பது கழுகாருக்கு மனசஞ்சலத்தை கொடுக்கிறது.

* - * - * - * - * - * - * - * - * - * -

ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்திருப்பவரும், கரவனையில் வசிக்கும் செந்திலாண்டவரும் புது கூட்டணி வைத்திருக்கிறார்களாம். தி. ராஸ்கல்கள் துணையில்லாமல் ஆறிய கோஷ்டிகளை வகுந்தெடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

* - * - * - * - * - * - * - * - * - * -

போண்டா விற்பவருக்கும், போளி விற்பவருக்கும் ஏதோ உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இரு கொலைவெறி பதிவர்கள் புரோக்கர் வேலை செய்ததாக தெரிகிறது.

* - * - * - * - * - * - * - * - * - * -
posted by இரவுக்கழுகார் at Saturday, January 27, 2007

19 Comments:
Anonymous said...
//மெட்ராசில் இருந்து வந்த பிளாஷ் நியூஸ்//

உண்மையா?

1:04 AM
Anonymous said...
//குட்டிகழுகு - இதுகூட தெரியாதா? வுட்டது ரெட் ஆரம்பித்தது இஸ்ரேல் பஞ்சர். ஆரம்பத்தில் எழுதி கொடுத்தது ஆன்மீகமும், பாலியலும் எழுதும் பெருசும், மூஞ்சுமூடியும். இப்போது குழு பெருசாகி விட்டது. இலவச மேஸ்திரி, மாங்காமரத்தான், மவுசு என்று ஏகப்பட்ட பேர் வுட்டது ரெட்டுகாக உழைச்சிக்கிட்டு இருக்காங்க என்றது.//

இதெல்லாம் ஒரு கிசுகிசுவா? எல்லோருக்கும் தெரிஞ்ச மேட்டர் தானே? போண்டா தான் அந்த குழுவுக்கு ஆர்கனைசர்.

1:06 AM
Anonymous said...
iravukazugar yaarunnu nan padhivu podattumaa?

1:32 AM
மாசிலா said...
என்னா எழவோ!

1:35 AM
ILA(a)இளா said...
//கழுகில் வந்த கிசுகிசுவினை கண்டு இராமர் பெயர் கொண்ட சிங்கம் கொந்தளித்து விட்டதாம். உடனே சங்கத்தை கூட்டி மறுபடியும் கலக்க ஆரம்பித்து விட்டார்களாம். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி.//

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இதுவும். பீட்டா பிலாகரால் எங்களால் பதிவிட முடியாமல் இருந்தது. பிறகு ஒரு தகிடுதத்தம் வேலை செய்து வ.வா.சங்கத்தை மீட்ட நாளில் வந்ததுதான் உங்கள் பதிவு.

//நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி//
எனினும் ஹிட் குடுக்க உதவியதற்கு நன்றி நாரதரே.

1:57 AM
ILA(a)இளா said...
//இன்னமும் பட்டணத்து கோஷ்டி தூங்கி வழிந்து கொண்டிருப்பது கழுகாருக்கு மனசஞ்சலத்தை கொடுக்கிறது.//
இதைத்தான் சிண்டு முடிவதுன்னு சொல்றதா? பால பாரதி வாங்க வந்து பதில் சொல்லுங்க

1:59 AM
Hariharan # 26491540 said...
//தி. ராஸ்கோல்கள் குழு ஒன்று குடியரசு தினம் அன்று வலைபூக்களில் பெரியவர் மீதும், தி. ராஸ்கோல்கள் மீதும் நடக்கும் ஆபாச தாக்குதல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பெரியவர் திடலுக்கு போய் தி.ரா.க்களின் பெரிய தலைவரை (எண்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் பெயர் கொண்டவர்) நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்களாம். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் சிங்கப்பூரில் வாங்கப்பட்டதாம்.

ஜறிகரன், கடாயு, போண்டா மாதவன், கால்மாரி, கரவெட்டி ப்ளூகண்டன், மாங்காமரத்தான், மூஞ்சுமூடி, உட்டது ரெட்டு போன்றவர்கள் எழுதிய பதிவுகள் அந்த பிரிண்ட் அவுட்டில் இருந்ததாம். விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.//

சூரமணி இப்படிப் பழையபேப்பர் வாங்கியா பொழப்பு நடத்துற நிலமை?


பழைய (பதிவுபிரிண்ட் அவுட்) பேப்பர சேல்ஸில் கிடைக்கும் காசுக்கு வெங்காயபஜ்ஜி, வெங்காய போண்டா வெங்காய ஊத்தப்பம் சாப்பிடச் சொல்லுங்க :-)))

//விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்//

டாஸ்மாக் சிரப்பு அடிச்சு அடிச்சுவிட்டுட்டார் :-))

ஐரிகரன்

3:46 AM
இரவ௠க௠கழ௠கார௠said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜரிகரன் அவர்களே

6:27 AM
இரவ௠க௠கழ௠கார௠said...
இளா அவர்களே!

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

6:52 AM
Anonymous said...
தமாசு.. தமாசு...

6:55 AM
Anonymous said...
உனக்கெல்லாம் வேலை வெட்டி இல்லையாடா?

7:08 AM
திராவிட தமிழர௠கள௠said...
//தி. ராஸ்கோல்கள் குழு ஒன்று குடியரசு தினம் அன்று வலைபூக்களில் பெரியவர் மீதும், தி. ராஸ்கோல்கள் மீதும் நடக்கும் ஆபாச தாக்குதல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பெரியவர் திடலுக்கு போய் தி.ரா.க்களின் பெரிய தலைவரை (எண்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் பெயர் கொண்டவர்) நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்களாம். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் சிங்கப்பூரில் வாங்கப்பட்டதாம்.

ஜறிகரன், கடாயு, போண்டா மாதவன், கால்மாரி, கரவெட்டி ப்ளூகண்டன், மாங்காமரத்தான், மூஞ்சுமூடி, உட்டது ரெட்டு போன்றவர்கள் எழுதிய பதிவுகள் அந்த பிரிண்ட் அவுட்டில் இருந்ததாம். விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.
//
இது தவறான தகவல். பார்க்க திராவிட தமிழர்கள் பதிவு

12:47 PM
வரவனையான் said...
//ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்திருப்பவரும், கரவனையில் வசிக்கும் செந்திலாண்டவரும் புது கூட்டணி வைத்திருக்கிறார்களாம். தி. ராஸ்கல்கள் துணையில்லாமல் ஆறிய கோஷ்டிகளை வகுந்தெடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.//

5:14 PM Varavanai: iravukazhu padinga
nammala ezhuthirukanuga
5:15 PM Pot"tea": nethe padichitten
damaasu

YAIN INTHA RATHAVErI

:))))))))))))))))))))))))

4:12 AM
Anonymous said...
Super Maaamoov...!!!

5:24 AM
Anonymous said...
//போண்டா விற்பவருக்கும், போளி விற்பவருக்கும் ஏதோ உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இரு கொலைவெறி பதிவர்கள் புரோக்கர் வேலை செய்ததாக தெரிகிறது.//

அப்படி ஏதும் இல்லை என்றும் சமீபத்தில்(இரு நாட்களுக்கு முன்) போண்டாவுக்கு போன் செய்து வாயில் வந்ததை எல்லாம் போலி திட்டித் தீர்த்ததாக ஆப்பு கூறினாரே?

5:46 PM
Anonymous said...
கலக்கல்...அருமையாக செல்கிறது உங்கள் இரவுக்கழுகு. ஆமாம், வரவனையும் பொட்டியாரும் அடித்த சேட்டு மெஸேசை வெளியிட்டு உலகத்தில் எதுவுமே நிலையில்லை என்று நிலையாமை தத்துவத்தை பின் நவீனத்துவ பாணியில் வெளியிட்டது அருமை.

12:33 AM
Anonymous said...
// Anonymous said...

உனக்கெல்லாம் வேலை வெட்டி இல்லையாடா?//

வேலை இருந்தா குடுடா!

2:05 AM
Pot"tea" kadai said...
//வரவனையான் said...

//ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்திருப்பவரும், கரவனையில் வசிக்கும் செந்திலாண்டவரும் புது கூட்டணி வைத்திருக்கிறார்களாம். தி. ராஸ்கல்கள் துணையில்லாமல் ஆறிய கோஷ்டிகளை வகுந்தெடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.//

5:14 PM Varavanai: iravukazhu padinga
nammala ezhuthirukanuga
5:15 PM Pot"tea": nethe padichitten
damaasu

YAIN INTHA RATHAVErI

:)))))))))))))))))))))))//

இருவருக்கிடையேயான உரையாடலை வெளியிட்ட வரவனையான் மீது "தி ஹேக்" இண்டர்னேஷனல் கோர்ட் ஆஃப் ஜஸ்டீஸில் வழக்கு தொடுப்பேன் என்று கழுகார் மூலமாக நோட்டீஸ் விடுகிறேன்.

(((((((((((((((-:-)))))))))))))))))))))

2:08 AM
Anonymous said...
//போண்டா விற்பவருக்கும், போளி விற்பவருக்கும் ஏதோ உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

அப்படி தான் நானும் நெனைக்கிறேன். இவ்ளோ களேபரம் நடக்குது. போளி வியாபாரி ஆளையே காணுமே?

6:06 AM
Post a Comment

<< Home

PRABHU RAJADURAI said...
December 13, 2008 at 6:19 AM  

எனக்கு இதுவும் முழுவதும் புரியவில்லையெனினும்,பொருத்தமான படம் சூப்பர்...

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:14 AM  

நன்றி இராம்!

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:24 AM  

////பின்னூட்ட மட்டுறுத்தல் என்று ஏன் இருக்கிறதாம்? ///

ஓ அப்படியா! அப்ப சரி, எல்லாரும் கலவரத்த கண்டினியூ பண்ணுங்கப்பா!

///எல்லாவற்றையும் திறந்து போட்டு ஒரு மாதம் பதிவு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.///

யாரச்சொல்றீங்க?

ஒருவேளை, முரளிக்கு அட்வைஸ் படலம் முடியலையா இன்னும்!

////ஒண்ணு ஓபனா விடறது இல்லேன்னா பின்னூட்டப் பெட்டியை மூடறதுங்கறது வச்சா குடுமி சிரைச்சா மொட்டைங்கறதுக்கு சமம்.////

கண்டிப்பா பின்னூட்டம் பொட்டி மாறி வந்திருச்சின்னுதான் நினைக்கிறேன்!

நன்றி டோண்டு ராகவன்

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:40 AM  

////இரவுக்கழுகார் கிட்ட டியூசன் போவனும். //

ஏதோ என்னால முடிஞ்சது!

///என்னது இரவுக்கழுகார் யாரா?///

யாரு! எமர்ஜன்சி காலத்துல மிட் நைட் பத்திரிகை நடத்தினாரா?

////உங்களது தகவல்களில் பல தாறுமாறான தவறுகள் உள்ளது.///

தற்போதைய எபிசோடின் உடனடி காரணத்தை மட்டும்தான் ஊகம் செய்தேன். நூற்றாண்டுப் பிரச்சினைப் பற்றி ஏதும் தெரியாததால் தவறுகள் தாறுமாறாக இருக்கக்கூடும்.


////தற்போதைய அசாதாரண உலகளாவிய உலகமயமாக்கல் கொள்கைகளின்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரவீழ்ச்சியில் என்னுடைய இரண்டணாவை வீண்விரயம் செய்யயியலாது எனக்கூறி எஸுகேப்பூ...////

பொருளாதார நெருக்கடி நீங்கியதும் ஒரு கால் பண்ணுங்க! அதுவரைக்கும் போன் பக்கத்துலேயே வெயிட் பண்றேன்

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:41 AM  

////அட்டகாசமான பதிவு மோகன் :-)

நீண்டநாள் கழித்து ஒரு பதிவினை மனமார ரசித்தேன். நன்றி!

அன்புடன்
லக்கி////

நன்றி லக்கி லுக்!

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:49 AM  

-/பெயரிலி சார்,

பின்னூட்டம் புரியுதோ இல்லையோ! ஆனா சுவாரசியமா இருக்கு! 2004 -ல சுனாமி வங்கக்கரை தாக்குச்சுன்னுதான் நெனச்சிட்டு இருந்தேன்! அது வலை உலகையும் துவம்சம் செஞ்சதுன்னு இப்போதான் தெரியுது!

மோகன் கந்தசாமி said...
December 14, 2008 at 3:51 AM  

////எனக்கு இதுவும் முழுவதும் புரியவில்லையெனினும்,பொருத்தமான படம் சூப்பர்..///

நன்றி வக்கீல் சார்!

dondu(#11168674346665545885) said...
December 15, 2008 at 4:33 AM  

///எல்லாவற்றையும் திறந்து போட்டு ஒரு மாதம் பதிவு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.///

//யாரச்சொல்றீங்க?//
உங்களைத்தான் சொல்லறேன்.
“//பிறகு, கலவரம் மூண்டால் கதவை இழுத்து சாத்துவது போல பின்னூட்ட பெட்டியை நாம் பூட்டி வைக்கவேண்டும்.//”-ன்னு நீங்க சொன்னதுக்குத்தானே நான் எதிர்வினை கொடுத்தேன். சரியா பாருங்க என்னோட பின்னூட்டத்தை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மோகன் கந்தசாமி said...
December 15, 2008 at 5:09 AM  

/////பின்னூட்ட மட்டுறுத்தல் என்று ஏன் இருக்கிறதாம்? ///

இது ஏன் இருக்குன்னு தெரியாமா யாரும் இல்லை. மட்டுறுத்தல் தேவைப்படும் போது அறிவுரை தேவையின்றியே அதை செய்து விடுவேன். செய்தும் இருக்கிறேன். எனவே இத அறிவுரையா கொள்ளாம எதிர்வினையா எடுத்துக்கலாம். ஆனால்....

///எல்லாவற்றையும் திறந்து போட்டு ஒரு மாதம் பதிவு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.////

.....இத யாருக்கு சொன்னீங்க? பதிவு பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தேன் -ன்னு எப்படி முடிவு பண்ணீங்க?....

///இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்////

.....என்ன நடந்தது எனக்கு? எவர்மீதான அவதூரையாவது (எது அவதூருன்னு நானே முடிவு பண்ணிக்கறேன்..இதுக்கு ஏதாவது அறிவுரையோடு வராதீர்கள்!) எப்போதாவது விட்டு வைத்திருந்தேனா?....

////இன்னமும் நடக்கும்////

....அப்படி நடக்கும்போது உங்களை தனிமடலில் அழைக்கிறேன், தவறாமல் வந்து அறிவுரை கூறிவிட்டு செல்லுங்கள்.

Anonymous said...
December 16, 2008 at 1:02 PM  

2:05 AM
Pot"tea" kadai said...
//வரவனையான் said...

//ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்திருப்பவரும், கரவனையில் வசிக்கும் செந்திலாண்டவரும் புது கூட்டணி வைத்திருக்கிறார்களாம். தி. ராஸ்கல்கள் துணையில்லாமல் ஆறிய கோஷ்டிகளை வகுந்தெடுப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.//

5:14 PM Varavanai: iravukazhu padinga
nammala ezhuthirukanuga
5:15 PM Pot"tea": nethe padichitten
damaasu

YAIN INTHA RATHAVErI

:)))))))))))))))))))))))//

இருவருக்கிடையேயான உரையாடலை வெளியிட்ட வரவனையான் மீது "தி ஹேக்" இண்டர்னேஷனல் கோர்ட் ஆஃப் ஜஸ்டீஸில் வழக்கு தொடுப்பேன் என்று கழுகார் மூலமாக நோட்டீஸ் விடுகிறேன்.

(((((((((((((((-:-)))))))))))))))))))))

கோவி.கண்ணன் said...
December 22, 2008 at 12:40 AM  

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்து தான் தமிழ்மணம் நால்வரை சூடான இடுகையில் இருந்து நீக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மோகன் கந்தசாமிதான் காரணம் !
:)கிடங்கு