Friday, December 19, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: அருந்ததி ராய் - நவம்பர் செப்டம்பரல்ல!

·

ழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட்டுரை அவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே!


ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல!

மது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.

ப்பிராந்தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

னால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்காவும் அல்ல.

னவே, நம் சீரழிவிலிருந்து நாமே மீளவேண்டும்; சிதிலங்களிளிருந்தும், நம் உடைந்த இதயங்கள் வழியாகவும் நமது முடிவுகளை நாமே கண்டடைய வேண்டும்.

டம்பர இந்தியாவின் பணக்கார பட்டினம் காஷ்மீரிலேய மிக மோசமாக சீரழிந்த குப்வாரா நகரம்போல் காட்சியளிக்க, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் கண்காணிப்பில் நவம்பர் இறுதிவாரம் நடந்த காஷ்மீர் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வந்திருப்பார்கள் என நினைத்தால் அது முரணாக தோன்றுகிறது.

மும்பை தாக்குதலானது இந்திய நகரங்களிலும் மாநகரங்களிலும் நடைபெறும் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களில் மிக சமீபத்திய ஒன்று, அவ்வளவே. அகமதாபாத், பெங்களூர், தில்லி, குவகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் மலேகான் போன்றவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சாதாரண மக்கள் இறக்கவும் காயமடையவும் காரணமாயிருந்த தொடர் குண்டு வெடிப்புகளை சந்தித்துள்ளன. இந்திய முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என காவல்துறை சரியானவர்களைத்தான் விசாரனைகைதிகளாக கைது செய்துள்ளது என்றால், இந்த நாட்டில் ஏதோ மோசமான தவறு நடைபெறுவதாகவே அர்த்தம் ஆகிறது.

ம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்களானால், மும்பையில் சாதாரண மக்கள் கூட இறந்தார்கள் என்பதை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். ஒரு பரபரப்பான தொடர்வண்டி நிலையத்திலும் ஒரு பொது மருத்துவமனையிலும் அவர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பணக்காரர்களையும் ஏழைகளையும் வேறுபடுத்தவில்லை. எல்லோரையும் ஒரே கொடூரத்துடன்தான் கொன்றனர். ஆனால் ஒளிரும் இந்தியாவின் பளபளப்புத் தடுப்பான்களை சீரும் தீவிரவாதம் தகர்த்தெறிந்தது கண்டு இந்திய ஊடகம் விக்கித்துப்போனது. ஒரு யூத மையத்தையும் இரு ஆடம்பர விடுதிகளின் பளிங்கு முகப்பு மற்றும் கண்ணாடி நடன அரங்குகளையும் இந்த தீவிரவாத முடை வீச்சம் வியாபித்ததால் விழி பிதுங்கி நின்றது. அவ்விரு விடுதிகளும் மும்பையின் அடையாளங்கள் எனவும் நமக்கு சொல்லப்பட்டது. அது முற்றிலும் சரியே. சாதாரண இந்தியர்கள் அனுதினமும் அல்லலுறும் அநியாயத்தின், நேரும் அசிங்கத்தின் உடனடி அடையாளம் அவைகள்தான். அழகான மேன்மக்கள் தாங்கள் தங்கி இருந்த அறைகள், தங்கள் மனங்கவர்ந்த உணவு விடுதிகள், தங்களுக்கு பணிவிடை செய்த பணியாளர்கள் பற்றியெல்லாம் மனதுருக்கும் இரங்கல்களால் நிறைத்திருந்த அன்றைய செய்தித்தாளின் இடது உச்சியில் ஒரு பீட்சா கம்பனியின் விளம்பரம் கட்டம் கட்டப்பட்டிருந்தது. "ஹங்கிரி கியா?" (பசிக்கிறதா, ம்?). சர்வதேச பசிக்குறியீட்டில் (International Hunger Index) இந்தியா சூடானுக்கும் சோமாலியாவுக்கும் கீழே இடம்பெற்றுள்ளதை விளக்கத்தான் அந்த விளம்பரம் என நாம் கொள்ளலாம். ஆனால் இது அதற்கான போரல்ல. அந்த போர் கிராமங்களிலுள்ள தலித் பண்ணைகளிலும், நர்மதா மற்றும் கோயல் காரோ ஆற்றங்கரைகளிலும், செங்காரா ரப்பர் தோட்டத்திலும், நந்திகிராம், சிங்கூர், லால்கர் போன்ற மேற்கு வங்க கிராமங்களிலும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களிலும், பெருநகர குப்பங்களிலும் நடத்தப்படுவது. அது தொலைகாட்சிகளில் நடைபெறப்போவதில்லை.


ஹஃபிஸ் சயீத்

பாபு பஜ்ரங்ஜி

நரேந்திர மோடி

ற்கால பயங்கரவாதத்தின் போக்கு ஒரு தீவிரமான, மன்னிக்கமுடியாத தவறுகள் நிறைந்த பாதையில் திரும்பிவிட்டது. ஒரு புறத்தில் உள்ளவர்கள் (இதை பிரிவு - அ எனக்கொள்வோம்) தீவிரவாதத்தை, குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை, வெறுப்பால், சுவாதீனமின்றி, தனியான அச்சில் தனக்கேயுரிய வட்டப்பாதையில் சுழலக்கூடிய, புறவுலகில் தொடர்பில்லாத, வரலாறு, புவியியல் மற்றும் பொருளாதார காரணிகள் ஏதும் இல்லாத ஒன்றாக பார்ப்பவர்களாவர். எனவே அத்தீவிரவாதத்தை அரசியல் ரீதியாக தீர்க்க முயல்வது, புரிந்து கொள்ள முயல்வது கூட அதை நியாயப்படுத்துவதற்குச் சமம்; மேலும் அது ஒரு குற்றம் என்பது இவர்களது வாதம்.

தீவிரவாதத்தை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது எனினும், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலிலேயே இருக்கின்றது. அக்காரணிகளை கவனிக்கத் தவறினால் அது பிரச்சினையை மோசமாக்குவதுடன் மேலும் அதிக மக்களை துன்பத்தில் தள்ளும்; இதுவும் ஒரு குற்றமே என்று பிரிவு - ஆ நம்புகிறது.

1990 -ல் லஷ்கர் - இ - தோய்பா(தூய்மையின் போர்ப்படை) -வை தோற்றுவித்த, அடிப்படைவாத சலாஃபி முஸ்லீம் பாரம்பரியத்தை சேர்ந்த, ஹஃபிஸ் சயீத் நிச்சயம் பிரிவு அ -வினரின் வாதத்தை வலிமைப் படுத்துபவர்கள். ஹஃபிஸ் சயீத் மனித வெடிகுண்டை அங்கீகரிப்பவர்; யூத, ஷியா மற்றும் ஜனநாயக வெறுப்பை கொண்டவர்; அவரது இஸ்லாம் இந்த உலகை ஆளும் வரை புனிதப்போரை நடத்தவேண்டும் என நம்புபவர்.

வர் கூறியவற்றில் சில: "இந்தியா ஓர்மத்துடன் இருக்கும் வரை அமைதி இராது; அவர்களை சிதை; கருணைகேட்டு, உன் முன்னாள் அவர்கள் மண்டியிடும்வரை தொடர்ந்து சிதை."

மேலும், "இந்தியா இந்த வழியை நமக்கு காட்டியுள்ளது. தகுந்த பதிலடியை நாம் தருவோம். அது காஷ்மீரில் முஸ்லிம்களை கொள்வதைப்போல் இந்துக்களை கொன்று பழி வாங்குவோம்."

னால், தன்னை ஜனநாயகவாதி என்றும் தீவிரவாதி அல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் பாபு பஜ்ரங்கி எந்த இடத்தில் பிரிவு - அ -வினருடன் ஒத்துப்போகிறார்? 2002 குஜராத் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இவர் காமிரா முன் கூறுகிறார்: "ஒரு முஸ்லீம் கடையைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை, அனைத்திற்கும் தீவைத்தோம், ....தாக்கினோம், போசுக்கினோம், தீயிட்டோம், ...இந்த பாஸ்டர்டுகள் தாம் சிதையாவதை விரும்பவில்லை; மேலும் அது குறித்து மிகவும் பயந்தனர்; இதனாலேயே அவர்களை தீயிலிட்டோம். ...எனக்கு ஒரு இறுதி ஆசை உள்ளது... எனக்கு மரண தண்டனை தாருங்கள்... தூக்கில் தொங்குவதில் எனக்கு கவலை இல்லை. ...அதற்கு முன் எனக்கு இரண்டே இரண்டு நாட்களை மட்டும் தாருங்கள். ஏழெட்டு லட்சம் எண்ணிக்கையில் இவர்கள் உள்ள ஜுஹோபுரா பகுதிக்கு செல்வேன். ...அவர்கள் கதையை முடிப்பேன். ...இன்னும் கொஞ்சம் பேர்தான் சாகட்டுமே! ...குறைந்தது இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம்பேர் வரை சாகவேண்டும்.

மேலும், பிரிவு - அ, தனது செயல் திட்டத்தில் எவ்விடத்தில் ஆர்.எஸ். எஸ். -இன் பைபிலான "நாம் அல்லது நமது தேசியம்" பொருந்திவருகிறது? இதை வரையறை செய்த எம். எஸ். கோல்வாக்கர் 'குருஜி' 1944 -ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். அது மேலும் கூறுகிறது: முஸ்லீம்கள் இந்துஸ்தானத்தில் முதலில் காலடி வைத்த அந்த தீய நாளிலிருந்து இந்த நொடிவரை இந்து தேசம் அந்த சூரையாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிறது. இன உணர்வு எழுச்சி பெற்று வருகிறது"

ல்லது: "இன மற்றும் கலாச்சார தூய்மைக்காக யூதக்களையை எடுப்பதன் மூலம் ஜெர்மனி உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. இனப்பெருமை அங்கே உச்சம் பெற்றது. அந்த நல்ல பாடத்தை கற்பதன் மூலம் இந்துஸ்தானம் பலன் பெறமுடியும்"

ண்மையில் இந்து வலதுசாரிகளின் துப்பாக்கி முஸ்லீம்களை நோக்கியது மட்டுமல்ல, தலித்துகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரிசாவின் காந்தமாலில், கிறித்துவர்களுக்கெதிரான இரண்டரை மாதகால வன்முறை நாற்பது பேர் வரை கொன்றுள்ளது. நாற்பதாயிரம் பேர்வரை தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிபேர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.கோல்வாக்கர்

த்தனை காலமும் லஸ்கர் - இ - தோய்பா -வின் முன்னணி அமைப்பான ஜமாத் - உத் -தாவா -வின் தலைவராக ஹஃபிஸ் சயீத் ஒரு மதிப்பான வாழ்க்கையை லாகூரில் வாழ்ந்துவந்துள்ளார். வெறியுடன் கூடிய திரிபுவாத போதனைகள் மூலம் இளைஞர்களை தனது காட்டுமிராண்டி புனிதப்போருக்கு தயார்படுத்தி வந்துள்ளார். டிசம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. ஜமாத் - உத் -தாவா -க்கு தடைவிதித்தது. சர்வதேச நிர்பந்தத்தால் ஹஃபிஸ் சயீத் -ஐ பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால், பாபு பஜ்ரங்ஜியோ பிணையில் வெளியே வந்து மதிப்பான வாழ்க்கையை குஜராத்தில் தொடர்கிறார். படுகொலைகள் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.ஹச்.பி -இலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். பஜ்ரங்ஜி -யின் முன்னாள் குருவான நரேந்திர மோடி இன்னமும் குஜராத் முதல்வர்தான். ஆக, குஜராத் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளான ரிலையன்ஸ், டாடா-வால் வெகுவாக போற்றப் படுபவருமாவார்.கார்பரேட்டுகளின் செய்தித்தொடர்பாளரும், ஒரு தொலைக்காட்சியின் அரங்கு முன்னவருமான ஸொஹைல் சேத் சமீபத்தில் 'மோடி ஒரு கடவுள்' என விளித்துள்ளார். குஜராத்தில் இந்துக் கும்பல்களின் சூறையாட்டத்தை மேற்பார்வை செய்த, சமயங்களில் உதவியும் செய்த போலீஸ்காரர்களுக்கு பரிசுகளும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.[தொடரும்]

பகுதி-2

6 comments:

Thamiz Priyan said...
December 19, 2008 at 1:42 AM  

நல்ல தொடர்! மொழி மாற்றி தந்தற்கு நன்றி மோகன்!

Anonymous said...
December 19, 2008 at 2:58 AM  

காலம் கோரும் இந்தக் கட்டுரையை உடனே மொழிபெயர்க்கத் துவங்கியமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்

வினவு

வினோத் கெளதம் said...
December 20, 2008 at 1:54 AM  

இறுதிய என்ன சொல்ல வராங்க.

மோகன் கந்தசாமி said...
December 20, 2008 at 2:10 AM  

///நல்ல தொடர்! மொழி மாற்றி தந்தற்கு நன்றி மோகன்!////

நன்றி தமிழ் பிரியன்

மோகன் கந்தசாமி said...
December 20, 2008 at 2:11 AM  

///////நல்ல தொடர்! மொழி மாற்றி தந்தற்கு நன்றி மோகன்!////

நன்றி தமிழ் பிரியன்///

நன்றி வினவு, தொடர்ச்சிகளை விரைவில் வெளியிடுகிறேன்

மோகன் கந்தசாமி said...
December 20, 2008 at 2:13 AM  

///இறுதிய என்ன சொல்ல வராங்க///

இப்பதிவு தவிர இன்னும் மூன்று பதிவுகள் உள்ளன. அவற்றை படித்தால் அவர் சொல்ல வருவது புரியும் வினோத்.கிடங்கு