Wednesday, December 17, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக.

·

சென்ற பதிவில் முதல் பகுதியாக வெளியான மதிபாலாவின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு.


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார்

எம்.ஜி.ஆரின் பிரிவு

சினிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென்ன , எல்லாம் காற்றில் பறந்தன….அந்த மாயைதான் இன்றைக்கும் அவரது சாதனைகளென பெரிதாகச் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும் , தொலைநோக்கு திட்டங்கள் ஏதுமில்லாவிட்டாலும் அவரைப் புகழ்ந்து பேசக் காரணம் என்றால் அதில் மிகையில்லை

மூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை, தனது ஆரம்பமே தலித்களுக்கும் , தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை பெற்றுக்கொடுக்க முயற்சித்த ஒரு கட்சியை வெறும் சமபந்தி விருந்தினாலும் ,ஊடகக் கவர்ச்சியாலும் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர் என்னும் தனி மனிதர்……அத்தனி மனிதரை பின்னாலிருந்து இயக்கியது கலைஞரையும் , திமுகவையும் ஜென்ம பகைவர்களான கருதிக்கொண்டிருந்த பார்ப்பன ஊடகங்கள். அன்று திமுக பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்பதிலேயே குறியாக இருந்த காலம்..அன்றைய வன்மத்தை இன்றும் கூட மறக்காத பார்ப்பன ஊடகங்கள், இன்றும் கூட திமுகவின் செய்திகளை திரித்துக்கூற முயலும் பார்ப்பன ஊடகங்கள், எதற்குமே தகுதியில்லாத விஜயகாந்தை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக சித்தரிக்க முயலும் இந்த ஊடகங்கள் அன்றைக்கு எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் மிஸ்டர். க்ளீன் இமேஜ் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

றைந்த ஒரு தலைவரை கொச்சைப்படுத்தும் நோக்கமில்லை நமக்கு , ஆனால் தொடர்ந்து வரும் ஆரிய , திராவிடச் சண்டையில் கொஞ்சமேனும் தமிழர்களைத் தலைநிமிர வைத்த திமுகவை முடக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் தாற்காலிக வெற்றி பெற்றார்கள் என்பதைச் சொல்லும் முகமாகவே மேற்கண்ட செய்திகளைச் சொன்னோம்.

13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தும் எம்.ஜி.ஆரால் திமுகவிற்கும் , உடன்பிறப்புக்களுக்கும் இருந்த பந்தத்தை உடைக்க முடியவில்லை. திமுகவின் தொண்டர் பரப்பு அப்படியே இருந்தது…கழகத்தையும் , கலைஞரையும் உயிரெனக் கொண்டவர்கள் கழகத்திலேயே இருந்தார்கள். இன்னுஞ் சொல்லப்போனால் திமுகவிற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகவே இருந்தது. பதவிச்சுகத்திற்காக கட்சியில் திழைப்பவர்கள் யார் , உண்மையிலேயே கழகத்தின் பால் பற்றுக்கொண்டவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் அற்புத வாய்ப்பாகவே இருந்தது. அந்த அக்னிப்பரிட்சையில் திமுகவும் , அதன் தொண்டர்களும் வென்று காட்டினார்கள்


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

ரித்திரத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் காணாமல் போனதான வரலாறுதான் உண்டு இங்கே…ஆனால் அதன் பிறகும் எழுந்து நின்ற அதிசயம் தான் திமுக. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு நடந்த 1989 தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவியும் , சினிமாவில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடிய ஜெயலலிதாவும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றனர். அந்தத் தேர்தலே திமுகவின் மீள் வருகைக்கு கட்டியம் கூறிற்று.

1991ல் ஆட்சி புலிகளுக்கு ஆதரவளிப்பதாக பொய்க்குற்றச்சாட்டு சொல்லப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். ராஜிவ் கொலைக்கு கலைஞரே காரணம் என்று முக்குக்கு முக்கு பிரச்சாரம் செய்த ஜெயல்லிதா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். திமுக சொல்லவொணாத அடக்குமுறைக்கு ஆட்பட்டது. ஒரு ரூபாய் சம்பளம் பெற்று நூறு கோடி ரூபாயில் கல்யாணம் நடத்திய அதிசயமும் அப்போதுதான் நடந்தது, ஆட்டோ அனுப்பும் கலாச்சாரமும், கஞ்சா கேஸ் கலாச்சாரமும், கொஞ்சமும் அரசியல் நாகரீகமில்லாத ஒரு சூழலும் தமிழகத்தில் அப்போதுதான் தொடங்கிற்று.

வைகோவின் பிரிவு

ம்.ஜி.ஆரின் பிரிவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட மற்றொரு மாபெரும் பிளவாகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எல்லோரும் கருதினார்கள். திமுகவின் இளைஞர் பட்டாளம் வைகோவின் பின்னால் சென்று விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச்செயலாளர்கள் வைகோவின் பின்னால் அணி வகுத்தார்கள். கட்சியின் அடையாளமான உதயசூரியனே முடக்கப்பட்டுவிடக்கூடும் என்றார்கள். ஆனால அத்துணை அனுமானங்களையும் உடைத்தெறிந்து விட்டு, 1996ல் நடந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறியது. ஜெயலலிதா கூட தோற்றுப்போனார்

ஜெயலலிதாவின் மேல் தொடரப்பட்ட நியாயமான வழக்குகளை , தன் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக வழக்குப் போட்டதாக பிரச்சாரம் செய்த ஜெயலலிதா 2001 ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். அரசு ஊழியர்களும் , போக்குவரத்து கழக ஊழியர்களும் கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். மக்கள் மேல் அநியாயத்திற்கு வரிச்சுமைகள் சுமத்தப்பட்டன. அதுவரை தான் செய்ததெல்லாம் சரியெனவே வாதிட்டு வந்த செயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கேற்பட்ட வரலாறு காணாத தோல்வியால் யூ டேர்ன் எடுத்தார். பறிக்கப்பட்ட சலுகைகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவரது யூ டேர்ன் சிறிதளவு மக்களைக் கவர்ந்தாலும் தமிழக மக்கள் 2006ல் கழகத்திடம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தார்கள்…அந்தத் தேர்தல் தமிழக வரலாற்றில் முதன் முதலில் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்திற்கு அடி கோலிற்று. சில இலவச அறிவிப்புகள் பிடிக்காத சாராரும், விஜயகாந்த் அவர்களின் நுழைவும் அந்த மைனாரிட்டி அரசின் காரணாங்களாயினர்.

னால் அந்தத் தேர்தலில் , தனது தேர்தல் அறிக்கையையே கதாநாயகனாக மாற்றிய திமுக இன்று வரை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறது


திமுகவின் எதிர்காலம்

திமுகவின் எதிர்காலம் என்ற கேள்வியை நாம் திமுகவின் வரலாற்றின் மூலமாகவே சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுகவின் வரலாறானது அளப்பரிய வெற்றிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் மிகப்பெரும் சரிவுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில பத்திகளில் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் தனது தோல்விகளுக்கான பதிலை தனது வெற்றிகளிலிருந்தே அக்கழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வெற்றிகளையும் தோல்விகளையும் சீர்தூக்கிப் பார்க்கையில் நமக்குத் தெரிவதெல்லாம், எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழல்களிலும் கூட கழகத்திற்கான அடித்தளம் மிக வலுவாகவே கட்டப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வீரியமான வார்த்தைகளை இன்றைக்கும் தமது உயிர்மூச்செனக் கொண்ட உடன்பிறப்புக்கள் இன்னும் மிகுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் மிக விரைவில் தோல்வியிலிருந்து திமுக மீள முடிகிறது

1972 ல் எம்.ஜி.ஆரின் அசுர பலமும், திமுகவிற்கெதிரான ஊடக எதிர்ப்பும் , சினிமாக் கவர்ச்சியும் திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தன. 1991ல் ராஜிவ் கொலை என்ற அனுதாப அலை திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தது. 2001ல் எதிர்க்கட்சி கூட்டணி பலமும் , பணப்புழக்கமில்லை என்ற பிரச்சாரமும் தோல்வியைக் கொடுத்தது. இன்று சினிமாக் கவர்ச்சியாலும், பதவி ஆசையாலும் ஒரு சில இளைஞர்கள் விஜயகாந்த் பின்னாலும் , சரத்குமார் பின்னாலும் அணி வகுத்திருக்கலாம். ஆனால் , தங்களைப் பிணைக்கும் எந்தவொரு கொள்கையும் , சக்தியுமில்லாமல் நீண்ட காலம் அவர்களைப் பிணைத்து வைக்க முடியாது. அத்தகைய திடீர் கட்சிகளால், அடித்தளம் வலுவாகவுள்ள திமுகவை அத்துணை சீக்கிரம் வீழ்த்தி விட முடியாதென்பதே உண்மை. மாறாக ஒரு சர்வாதிகார மையத்தைக் கொண்டுள்ள கட்சிகள் வீழ்வதற்கே வாய்ப்புண்டு என்றே நான் கருதுகிறேன்.


உட்கட்சி ஜனநாயகம்

ம்.ஜி.ஆர் தனது கட்சியை ஒரு நிறுவனம் போலத்தான் நடத்தினார். உட்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் இன்றும் அதிமுகவினர் கேட்பார்கள். ஆனால் அன்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகத்தான் இருந்தது திமுக. இன்றும் கூட. இன்று 2008ல் கூட, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உட்கட்சித் தேர்தலை நடந்தால் உள்குத்துக்கள் தோல்விகளைத் தர வல்லவை என்ற நிலையிலும் உட்கட்சித் தேர்தல்களை நடத்துகிறது திமுக

னால், நமது எம்.ஜி.ஆரைப் பார்த்துத்தான் நாம் கட்சிப்பதவியில் இருக்கிறோமா இல்லையா என்ற பரிதாப சூழலில் இருக்கிறது அதிமுக…எம்.ஜி.ஆரின் பார்மூலாவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் விஜய்காந்த் கட்சியிலும் அவ்வாறே. அதனாலேயே இன்று வரை கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவர்களாக திமுகவில் காட்சியளிக்கிறார்கள். ஒரு பத்து இரண்டாம் மட்டத் தலைவர்கள் திமுகவில் உடனே தெரியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவிலோ மற்ற எந்த தமிழக / தேசியக் கட்சியிலுமே தலைமையால் திணிக்கப்பட்டவர்களே இரண்டாம் மட்டத்தலைவர்களாகிறார்கள். அதனால் கட்சித்தலைமைக்கும், தொண்டர்களுக்குமிடையிலான பாலமாக செயல்பட திணிக்கப்பட்ட தலைவர்களால் இயல்வதில்லை.

ந்திரிப் பொறுப்பை இழந்த பின்பும், மாவட்டச்செயலாளராக கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி. ராஜா அவர்களின் பேட்டியே அதற்கு நல்ல சான்று. மந்திரிப் பொறுப்பைக் காட்டிலும் உயர்ந்தது கழகத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பெரியது, அதையே நான் விரும்புகிறேன்” என்று சொன்ன ஒரு வார்த்தையே திமுகவின் வலிமை என்பது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அதன் தொண்டர்களின் மன வலிவில் இருக்கிறது என்பது புலனாகிறது. தனது வலிமையென்ன என்பதை திமுக தெரிந்தே வைத்திருக்கிறது.


திராவிட முன்னேற்றக் கழகமும், கொள்கைகளும்

திமுகவின் எதிர்காலம் என்பது அது எத்துணை காலம் தனது கொள்கைகளை அடை காத்து வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. சொல்லப்போனால் இன்றைக்கும் கொள்கைகளை கொஞ்சமாவது மதிக்கும் , அதற்கு தன் கவனத்தைச் செலுத்தும் ஒரே இயக்கம் திமுகதான் என்று சொன்னால் அது மிகையில்லை. திமுகவின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையாதலால் , அந்த நிலைப்பாட்டை நாம் இன்றைய நிகழ்வுகளை கொண்டே பார்க்க வேண்டும்.

1. ரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் உரிய சம்பளத்தையும் சலுகைகளையும், போனஸ்களையும் கொடுத்து திமுக , தொழிலாளிகளின் உரிமைகளை மறுக்காமல் தொழிலாளிகளின் அரசாக இருக்கிறது.

2. ரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று ஏழைகளின் அரசாக காட்சியளிக்கிறது

3. மூக நீதிக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் பரவவும் , க்ருமி லேயரை எதிர்க்கவும் , முஸ்லீம் , கிறித்துவ மதங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அருந்ததியினருக்கான தனி இட ஒதுக்கீடு என்று தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது.

4. தாழ்த்தப்பட்ட சமூகமும் அர்ச்சகராகலாம் என்று சாதி ஒழிப்புக்கொள்கையை கொஞ்சமேனும் முன்னெடுத்துச் செல்கிறது

5. மிழுணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கும் விதமாக தமிழ்ப்புத்தாண்டு தைப் பொங்கலே என்று அறிவித்திருக்கிறது. தமிழ் மொழியை செம்மொழியாக்க இயன்ற வரை போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது

6. மிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் , தமிழீழ உணர்வாளர்களுக்கும் மாபெரும் எதிர்ப்புக்கிடையே , தனது கூட்டணிக்கட்சியே எதிர்த்தாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.

7. தேவையான சமயங்களில் , தவறிழைப்போர் மிக உயர்பதவிலியிருந்தாலும் அவர்களை தூக்கிவீசத் தயங்காமல் இருக்கிறது. அதற்கு நேற்று என்.கே.பி.ராஜாவும் இன்று வீரபாண்டியாருமே உதாரணம்.

8. எதிர்க்கட்சிகளின் முறையான குற்றச்சாட்டுகளுக்கும் , வாதங்களுக்கும் பொறுப்புடன் பதில் தந்து கொண்டிருக்கிறது.

9. ஜெயலலிதாவின் வருகையினால் முடிவுரை கட்டப்பட்ட அரசியல் நாகரீகத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தன் நிலையை தாழ்த்திக் கொண்டு அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாக கலைஞர் அறிவித்தது மற்றும் மின் வெட்டுப் பிரச்சினையில் அதிமுகவையும் விவாதத்திற்கு வரச்சொல்லி வலியச் சென்று அழைத்தது திமுக.

10. ன்றைக்கும் , அதிமுக தலைவி கொடநாட்டிலும் , 2011ல் முதல்வாராவேன் என்று சொல்லிக் கொள்ளும் விஜயகாந்த் பொள்ளாச்சியில் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கும்ப் போது திமுகவின் தலைமையும் , அத்துணை மட்டங்களும் மக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

11. ளைஞர் சக்தியும் , மகளிர் சக்தியும் 60 ஆண்டு காலமானாலும் தம்மிடையே கணிசமாக இருக்கிறதென்பதை கட்டியம் கூறும் முகமாய் இரண்டு மிகப்பெரிய மாநாடுகளை வரலாறு காணாத வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறது திமுக.

னது கொள்கைகளிலிருந்தோ, பார்வைகளிலிருந்தோ இன்று வரை திமுக விலகவில்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணங்களே சாட்சி. குறைகளற்ற அரசாக திமுக ஆட்சி இருக்கிறதென்பது என் கருத்தல்ல. குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு ரூபாய் அரிசியையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தாராள நிதி வழங்கலையும், இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை ஏழைகளுக்கு தருவதையும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததையும் பாராட்டும் அதே வேளை இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டத்தையும், மின் வெட்டை ஒட்டிய சொதப்பலையும் நாம் ரசிக்கவில்லை என்பதையும் பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு

தேபோல், கட்சியளவில் தயாநிதி மாறன் திணிப்பு மற்றும் விலக்கல், கனிமொழி திணிப்பு, ஈழத்தமிழர் விடயத்தில் ராஜினாமா நாடகம் இன்னுஞ்சில நிகழ்வுகள் நமக்கு ஏற்புடையதாயில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக விமர்சனங்கள் இருப்பினும் பெரிய அளவிலான உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் நிகழ்வுகள் யாதுமிருப்பதாக நாம் கருதவில்லை. அதனால் தனது உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை கலைஞரும், திமுகவும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

க, கட்சி மீது பற்றுக்கொண்ட உடன்பிறப்புக்களை தன்னகத்தே இன்றுவரை வைத்துக்கொண்டிருக்கும் திமுகவின் எதிர்காலம் வழக்கம் போலவே வெற்றிகளும் , தோல்விகளும் கலந்ததாக இருக்கும். அதைப்பற்றிய பெரிதொரு கவலை தேவையே இல்லை என்பதே எம் கருத்து. கலைஞருக்குப் பின்னும் கூட...

ன்?

பார்ப்போம்...[தொடரும்]


அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும்.

28 comments:

Anonymous said...
December 17, 2008 at 7:35 AM  

மதிபாலா அவர்களே ஒட்டு மொத்த தமிழர்களின் எண்ணங்களில் இருக்க வேண்டியது இந்த கட்டுரை...

//இயக்கத்திற்கு தலைவராக கருணாநிதி பதவியேற்றதை மட்டுமே பார்க்கிறோம்.சொல்வன்மை , செயல் வன்மை , பேச்சாற்றல் , எழுத்தாற்றல்//

மேலும் தலைமைப் பண்பு, தமிழ் உலகம் ஏற்றுக்கொள்ளும். தந்தை பெரியார் இருக்கும் பொழுது ஒரு கட்சி அதுவும் அவரேயே தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி..ஆனால் இன்று எண்ணி பாருங்கள் இதற்கு யார் காரணம் என்று...கலைஞர் மட்டும் பணத்தாசையும், குடும்ப அரசியலும் இல்லாமல் பணிசெய்திருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் வரிசையில் ஒப்பற்ற இடம் கிடைத்திருக்கும்..இப்பவும் உண்டு. ஆனால் இன்றும் மக்களில் மனங்களில் அவருக்கு நல்ல எண்ணம் கிடையாது அதற்கு அவரே காரணம்..இன்னும் உள்ள காலங்களிலாவது தமிழகத்தின் தலைவராக செயல்பட்டால் (ஏனெனில் அவரை விட்டால் யாரும் இல்லை) அவரின் வாழ்க்கை நிறைவடையும்..

காலம் தன் கடமையை செய்யும்...

Anonymous said...
December 17, 2008 at 8:52 AM  

//அதன் பிறகும் எழுந்து நின்ற அதிசயம் தான் திமுக. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு நடந்த 1989 தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவியும் , சினிமாவில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடிய ஜெயலலிதாவும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றனர். அந்தத் தேர்தலே திமுகவின் மீள் வருகைக்கு கட்டியம் கூறிற்று//

கலைஞர் அவர்கள் MGR ஆன் செல்வாக்கை பற்றி தவறாய் கணித்தார்கள் என்று சொல்வார்கள்.
1971-1972
ஆண்டுகளில் நடைபெற்ற கோவை மாணவர் மகாநாடு ,மற்றும் மதுரை மாநாடுகளில் நடை பெற்ற நிகழ்ச்சிகள் MGRன் நீக்கத்தற்கு காரணாமாயிற்று
அந்த இரண்டு மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாய்த் தெரியும் , MGR பேசி விட்டு வெளியே சென்றதும் 90 விழுக்காடு மக்கள் கூட்டம் வெளியே சென்று விட்டதை. யாவரும் அறிவர்.
MGR நீக்கம் தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அனைத்து கல்லுரிமாணவர்கள் strike செய்தார்கள்

கல்லுரிகளில் இருந்த மாணவர் திமுக கூண்டோடு கலைக்கப்பட்து.

பேரூந்துகளுக்கு MGR படம் தான் அப்போது permit/licence

தி.மு.க தலைவர்களால் பொதுக் கூட்டங்களில் பேச வெளியே வர முடியவில்லை.

கலைஞரின் படம் திரை அரங்குகளில் காட்டப்படுவதற்கு பெரிய எதிர்ப்பு.

திண்டுக்கல் பாரளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தடுக்க கலைஞர் எடுத்த அனைத்து ராஜ தந்திரங்களும் தோற்றுப் போனதை நாடறியும்.

அதிலிருந்து 1980 பாரளுமன்றத் தேர்தலைத் தவிர ,MGR மறையும் வரை ,கலைஞரால் MGR ஐ வெற்றிக் கொள்ளவே முடிய வில்லை.
1980 தேர்தல் தோல்விக்கு பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 9000 ஆண்டு வருமானம் வரைதான் -என்ற க்ரிமிலேயர் மூறை கொண்டு வந்ததுதான் என்பார்கள்.
கடைசியில் MGRன் உடல் நலக் குறைவால்,அவர் அமெரிகாவிலிருந்து வருவாரா ,மாட்டாரா என்ற சந்தேகம் வந்த போது,கலைஞர் "என்னை தண்டித்து போதாதா? மீண்டும் ஒரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு தாருங்கள்,MGR திரும்பி வந்ததும் ஆட்சியை அவரிடம் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லி பார்த்தார்.மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.

MGR ஐ வெற்றி கொள்ள முடியாதற்கு சொல்லபட்ட காரணங்கள்.

1.கலைஞரின் எதிர்ப்பு ஓட்டு வங்கி( முற்பட்ட சமுதாயம்-100 %)
2.தலித் ஓட்டு வங்கி
3.தேவர்,கவுண்டர்,நாயுடு,நாடார் ஓட்டு வங்கிகளில் அவர் வசம் -80%
4.இஸ்லாம்,கிருஸ்துவ ஓட்டு வங்கியிலும் -50%
5.பெண்கள் ஒட்டு வங்கியில்-90 %
6. சினிமா ரசிகர்கள் 60 %
7.கட்சி சேராத ஒட்டு வங்கி-90 %

MGR இன்னும் உயிரோடிருந்தால் அவரை கலைஞர் வெற்றி பெற்றுப்பாரா என்பது இன்று எல்லோர்மனதில் எழும் ஒரு கேள்விக் குறி.


MGR ன் மறைவுக்குப் பின் ஜா அனி,ஜெ அணிகள் கலைஞரிடம் தோற்றது.

*****************************
இன்று வரை புரியாத புதிர்.

அதன் பின் அமைந்த கலைஞரின் ஆட்சி எல்லோரும் பாராட்டும் படி இருந்தது என்பது 100 % உண்மை.

ஆனாலும் ஜெயலலிதா மேலே சொன்ன அனைத்து MGR வாக்கு வங்கியில் 90 % தன் வசப் படுத்தி, காங்கிரஸின் துணையோடு ஆட்சியை பிடித்தார்.

ஆனால் MGR ஐ மறந்தார்
எல்லாம் தனக்காக என தப்புக் கணக்கு
போட்டார்.

அடுத்த தேர்தலில் மீண்டும் கலைஞர்
அவரது முழு சொந்த பலத்துடன்.

அண்ணா மறைந்ததும்,கலைஞர் முதல்வர் ஆனதிற்கு ஆதித்த்னாரும்,MGR ம் முக்கிய காரணம் என்பர்.

அடுத்து மீண்டும் ஜெ. கூட்டணி பலத்தில்

அடுத்து மீண்டும் கலைஞர் அதே கூட்டனி பலத்துடன்

2009-கூட்டணிகள் மாறியுள்ள நிலைகள்
கருப்பு MGRன் பலம் தெரியாச் சூழ்நிலை

என் கணிப்பு மீண்டும் கலைஞருக்கே( தளபதி ஸ்டாலின்)வாய்ப்பு,காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகாதவரை.

திமுகவில் இருக்கும் போது கலைஞரை பிடிக்காதவர்கள்,MGR ன் நீக்கத்தின் போது நடு நிலை வகித்தவர்கள், ஜெயலலைதாவை பிடிக்காத MGR ரசிகர்கள்.இவர்களில் பெரும் பகுதி இபோது கலைஞரின் ஆதரவாளராய் உள்ளது உண்மை.

ஆனாலும் மின்வெட்டு,விலைவாசி,கூட்டணிகட்சிகளின் விலகல்கள்,ஆட்சி எதிர்ப்பு ஒட்டு வங்கி என்ன செய்யப் போகிறதோ?

என் கணிப்பு மீண்டும் கலைஞருக்கே( தளபதி ஸ்டாலின்)வாய்ப்பு,காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகாதவரை.

திருமங்கலத் தேர்தல் முடிவு,திமுக வாங்கும் ஒட்டு எண்ணிக்கை,ஒட்டு வித்யாசம்,நியாயமான் தேர்தலின் போக்கு

இதை முடிவு செய்ய்லாம்.

-அரசு

குழலி / Kuzhali said...
December 17, 2008 at 10:14 AM  

அதிமுக மற்றும் திமுகவின் உட்கட்சி சனநாயகம் பற்றி ஒரு முறை ஏதோ ஒரு வலைப்பதிவில் படித்தது,

அதிமுக தலைமை பதவி - நிரந்தரமாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது....

திமுக தலைமை பதவி - சில ஆண்டுகளுக்கொருமுறை கலைஞருக்கு ரெனியூ செய்யப்படும்....

பழமைபேசி said...
December 17, 2008 at 10:42 AM  

எனக்குத் தெரிந்த தகவல்களும், நினைவும்:

முதல் தேர்தல்: முழுக்க முழுக்க தி.மு.க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு, மேலும் MGR அவர்களது தனிப்பட்ட கவர்ச்சி

இரண்டாவது தேர்தல்: 50:50 என்று காங்கிரசோடு கூட்டணி வைத்தமை

மூன்றாவது தேர்தல்: முழுக்க முழுக்க அனுதாப அலை, MGR அவர்களின் மருத்துவமனைக் காட்சிகள் தமிழகமெங்கும் வியாபித்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிகளில் அ.தி.மு.க மரண அடி வாங்கியதையும் நினைவில் கொள்ளவும். அது மட்டுமா, மேல்சபையில் தி.மு.க தான் ஆளும் கட்சி. அதன் மூலம் தி. மு. க, அரசை ஆண்டது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. அதனால்தானே, மேல்சபைக்கே ஆப்பு வைக்கப் பட்டது. 1980, 1984 தேர்தலில் நூலிழையில் தி.மு.க தோற்றது, அதுவும் அனைத்து எதேச்சதிகாரத்தையும் மீறி, தஞ்சை, கோவை, சென்னை, மற்றும் திருச்சிப் பகுதி மக்கள் கலைஞர் பின்னால் அணி வகுத்து நின்றதுதான் வரலாறு.

பழமைபேசி said...
December 17, 2008 at 10:45 AM  

அருமையான கட்டுரை, ஆனாலும் பேராசிரியர் பெருந்தகை மற்றும் சாதிக்பாட்சா அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் தி.மு.க வின் அந்த 13 ஆண்டு கால வரலாறு முழுமை அடையாது.

பழமைபேசி said...
December 17, 2008 at 10:49 AM  

//MGR ஐ வெற்றி கொள்ள முடியாதற்கு சொல்லபட்ட காரணங்கள்.

1.கலைஞரின் எதிர்ப்பு ஓட்டு வங்கி( முற்பட்ட சமுதாயம்-100 %)
2.தலித் ஓட்டு வங்கி
3.தேவர்,கவுண்டர்,நாயுடு,நாடார் ஓட்டு வங்கிகளில் அவர் வசம் -80%
4.இஸ்லாம்,கிருஸ்துவ ஓட்டு வங்கியிலும் -50%
5.பெண்கள் ஒட்டு வங்கியில்-90 %
6. சினிமா ரசிகர்கள் 60 %
7.கட்சி சேராத ஒட்டு வங்கி-90 %//

இதன்படி பார்த்தால், தி.மு.க எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகை கூடப் பெற்றிருக்காதே?

thiru said...
December 17, 2008 at 12:28 PM  

//இன்றும் அதிமுகவினர் கேட்பார்கள். ஆனால் அன்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகத்தான் இருந்தது திமுக. இன்றும் கூட. இன்று 2008ல் கூட, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உட்கட்சித் தேர்தலை நடந்தால் உள்குத்துக்கள் தோல்விகளைத் தர வல்லவை என்ற நிலையிலும் உட்கட்சித் தேர்தல்களை நடத்துகிறது திமுக//

உட்கட்சி ஜனநாயகத்தை பொறுத்தவரையில் தி.மு.க தேர்தலை நடத்துகிறது. அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் போன்றவை நியமனம் செய்கிறது. எல்லாவற்றிலும் அதிகாரம் தலைமையிடம் குவிந்து கிடக்கிறது. கட்சியின் உறுப்பினர்களது கருத்தை அறிந்து மதித்து தி.மு.க முடிவுகளை எடுத்த காலம் அண்ணாவுடன் முடிந்தது. இப்போதெல்லாம் தீர்மானங்கள் தலைமை, தலைமைக்கு அருகில் இருப்பவர்களால் நிர்வாகக்குழு, பொதுக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்டன. உட்கட்சி ஜனநாயகம் இருப்பது போன்ற தோற்றத்தை இக்கூட்டங்கள் உருவாக்குகின்றன.

கலைஞர் தலைவர், பேராசிரியர் பொதுச்செயலாளர் என்று வாழ்நாளெல்லாம் கட்சிப் பதவியில் இருப்பதில் உட்கட்சி ஜனநாயகம் எங்கேயிருக்கிறது? கலைஞர் அவருக்கு பின்னர் தளபதியா? அண்ணன் அழகிரியா என்னும் போதே ஜனநாயகம் மரித்து நாளாயிற்று. இந்திய கட்சிகளில் ஜனநாயகம் என்பது விவாதத்திற்குரிய விசயம்.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 5:02 PM  

////பணத்தாசையும், குடும்ப அரசியலும் இல்லாமல் பணிசெய்திருந்தால்///

ஊழல் மற்றும் குடும்ப அரசியல் என்பது திமுக பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய, அல்லது குறைந்தபட்சம் நாடு தழுவிய பிரச்சினை. திமுக வை விமர்சிக்கையில் ஏனையவற்றை விமர்சித்தால் பயனாக இருக்கும். அன்றேல் திமுக -வை தெரிவு செய்து குற்றம் சாட்டுவதுபோல் ஆகிவிடக்கூடும்.

நன்றி பரூக்

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 5:04 PM  

நண்பர் அனானி,

செய்திகள் நிறைந்த பின்னூட்டம் உங்களுடையது. பெயர் குறிப்பிட்டிருந்தால் பாராட்ட வசதியாக இருந்திருக்கும், உங்களுக்கு ஒரு புதிய வாசகனும் கிடைத்திருப்பான்.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 5:07 PM  

குழலி,

///அதிமுக தலைமை பதவி - நிரந்தரமாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது....

திமுக தலைமை பதவி - சில ஆண்டுகளுக்கொருமுறை கலைஞருக்கு ரெனியூ செய்யப்படும்////

பெயரளவு ஜனநாயகமாவது திமுக வில் இருக்கிறதே என திருப்தி கொள்ள செய்வது உண்மை.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 5:19 PM  

நண்பர் பழைமைபேசி,

நலமா?

////அது மட்டுமா, மேல்சபையில் தி.மு.க தான் ஆளும் கட்சி. அதன் மூலம் தி. மு. க, அரசை ஆண்டது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.////

மேலவை செயல் படும் விதம் பற்றி இந்த தலைமுறையினர் பெரும்பான்மையானோருக்கு தெரியாது எனவே நினைக்கிறேன். மேலவையை ரத்து செய்து அப்படி ஒன்று சட்டத்தில் இருப்பதையே நினைவிலிருந்து அளித்து விட்டது அதிமுக

////1980, 1984 தேர்தலில் நூலிழையில் தி.மு.க தோற்றது, அதுவும் அனைத்து எதேச்சதிகாரத்தையும் மீறி, தஞ்சை, கோவை, சென்னை, மற்றும் திருச்சிப் பகுதி மக்கள் கலைஞர் பின்னால் அணி வகுத்து நின்றதுதான் வரலாறு///

என்னை பொறுத்த வரை இது புதிய செய்தி. மற்றும் ஆர்வத்தை தூண்டும் விஷயம். தங்களுக்கு நேரம் இருந்தால், வாய்ப்பு கிடைத்தால் இதுபற்றி விபரத்தை பின்னூட்டமாக அளிக்கமுடியுமா?

////பெருந்தகை மற்றும் சாதிக்பாட்சா அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் தி.மு.க வின் அந்த 13 ஆண்டு கால வரலாறு முழுமை அடையாது.////

வனவாசம் என்று விளிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில் நடந்தவற்றை பற்றி எனக்கு நிறைய தெரியாது . சாதிக்பாட்ஷா பற்றி அறியவும் வேண்டும்

////இதன்படி பார்த்தால், தி.மு.க எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகை கூடப் பெற்றிருக்காதே?///

நான் நினைத்தேன். நீங்கள் கேட்டே விட்டீர்கள்.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 5:24 PM  

நண்பர் திரு,

////
உட்கட்சி ஜனநாயகத்தை பொறுத்தவரையில் தி.மு.க தேர்தலை நடத்துகிறது. அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் போன்றவை நியமனம் செய்கிறது. எல்லாவற்றிலும் அதிகாரம் தலைமையிடம் குவிந்து கிடக்கிறது. கட்சியின் உறுப்பினர்களது கருத்தை அறிந்து மதித்து தி.மு.க முடிவுகளை எடுத்த காலம் அண்ணாவுடன் முடிந்தது.///

பளீர் உண்மை.


///கலைஞர் அவருக்கு பின்னர் தளபதியா? அண்ணன் அழகிரியா என்னும் போதே ஜனநாயகம் மரித்து நாளாயிற்று.///

குற்றுயிருடன் இருந்த ஜனநாயகமும் சமீப கால செயல்பாடுகளால் அமரராகிப் போனது.

பழமைபேசி said...
December 17, 2008 at 7:12 PM  

//////1980, 1984 தேர்தலில் நூலிழையில் தி.மு.க தோற்றது, அதுவும் அனைத்து எதேச்சதிகாரத்தையும் மீறி, தஞ்சை, கோவை, சென்னை, மற்றும் திருச்சிப் பகுதி மக்கள் கலைஞர் பின்னால் அணி வகுத்து நின்றதுதான் வரலாறு///

என்னை பொறுத்த வரை இது புதிய செய்தி. மற்றும் ஆர்வத்தை தூண்டும் விஷயம். தங்களுக்கு நேரம் இருந்தால், வாய்ப்பு கிடைத்தால் இதுபற்றி விபரத்தை பின்னூட்டமாக அளிக்கமுடியுமா?//

வணக்கம் நண்பா! நான் உடன்பிறப்போட அனுதாபி அல்ல. போன வாரம் நான் எழுதின, வாசித்தல் அனுபத்துல சொன்ன மாதிரி, சின்ன வயசுல உடன்பிறப்போட வீட்ல இருக்குற செய்தித்தாள்களைப் படிச்ச அனுபவம். அவ்வளவே!

1980-ல அ.தி.மு.க: 50.67%, தி.மு.க: 45.33%

1984-ல அ.தி.மு.க 37.03%, தி.மு.க 29.34%

அந்த கால கட்டத்துல, தி.மு.கவுக்கு எந்த நிதி ஆதாரமும் கிடையாது. வெறும் தொண்டர் பலமே அவங்க சொத்து. ஆனால், எதிரணிக்கோ, இமாலய உதவி, எட்டுத்திக்கும் இருந்து. அதை வெச்சிட்டு, பேனைக் கூடப் பெருமாள் ஆக்கலாம், ஆக்கினாங்க! அப்பிடியும், நகர்ப் புறங்களிலும், தொழிற்சாலைகள் இருக்குற இடங்கள்லயும், கல்விச்சாலைகள் இருக்குற இடங்கள்லயும், தி.மு.கவே வாகை சூடியது. மேலும், கட்சியின் பலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், வாக்கு சதத்தையே கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவேதான், அந்த விபரம் மேலே தரப்பட்டுள்ளது. 2/3 என்ற எண்ணிக்கையில் வென்றிருந்தால், அவர்களைத் தி.மு.கவால் வென்றிருக்க இயலாது என்றும் எங்கும் சொல்கிற வாதம் சரி. என்னைப் பொறுத்த வரையில், அந்த நேரத்தில் வாய்க்கப் பெற்ற சந்தர்ப்பம் சூழ்நிலை, தி.மு.க அதிக அளவில் உறுப்பினர்களைப் பெற்றிருக்கவில்லை. அவ்வளவுதான்! 1980 தேர்தலைப் பொறுத்த மட்டில், காங் கட்சிக்கு 50% இடங்களைத் தர வைத்த சூத்திரதாரிகளைக் கலைஞர், தாமதமாகத் தெரிந்து கொண்டதும் ஒரு காரணம். நான் இதற்குள் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை, காரணம், இன்றைக்கு அவர்கள் எல்லாம் உயிருடன் இல்லை.

பழமைபேசி said...
December 17, 2008 at 7:52 PM  

//////பெருந்தகை மற்றும் சாதிக்பாட்சா அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் தி.மு.க வின் அந்த 13 ஆண்டு கால வரலாறு முழுமை அடையாது.////

வனவாசம் என்று விளிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில் நடந்தவற்றை பற்றி எனக்கு நிறைய தெரியாது . சாதிக்பாட்ஷா பற்றி அறியவும் வேண்டும்//


S.J சாதிக்பாட்சா

இவர் அண்ணா காலத்து அமைச்சர்களில் ஒருவர். அதே சமயத்துல பெருந்தகையின் மாணவருங்கூட, ஒத்த வயதாயிருந்தும்! உடுமலைப் பேட்டைக்காரரும் கூட. கடைசி வரையிலும் பொருளாளராக இருந்து, கட்சிக்கு இருக்கிற நிதி ஆதாரங்களை செம்மையாக நிர்வாகம் செய்தவர். அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்து கடமையாற்றினதுல இவருக்கு நிகர் இவரே! ஆனா, ரொம்ப பிரபலம்ன்னு சொல்ல முடியாது.

மோகன் கந்தசாமி said...
December 17, 2008 at 9:17 PM  

திரு பழைமை பேசி,

///அந்த கால கட்டத்துல, தி.மு.கவுக்கு எந்த நிதி ஆதாரமும் கிடையாது. வெறும் தொண்டர் பலமே அவங்க சொத்து. ஆனால், எதிரணிக்கோ, இமாலய உதவி, எட்டுத்திக்கும் இருந்து. அதை வெச்சிட்டு, பேனைக் கூடப் பெருமாள் ஆக்கலாம், ஆக்கினாங்க!///

அரசியல் ஊழலின் தோற்றுவாய் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

சாதிக் பாட்ஷா பற்றிய அறிமுகம் உங்களால் கிடைத்தது. இனி அவரைப்பற்றிய செய்திகளையும் தேடிப் படிப்பேன்

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பழைமை பேசி அவர்களே!

Anonymous said...
December 17, 2008 at 10:22 PM  

//பழமைபேசி said...
//MGR ஐ வெற்றி கொள்ள முடியாதற்கு சொல்லபட்ட காரணங்கள்.

1.கலைஞரின் எதிர்ப்பு ஓட்டு வங்கி( முற்பட்ட சமுதாயம்-100 %)
2.தலித் ஓட்டு வங்கி
3.தேவர்,கவுண்டர்,நாயுடு,நாடார் ஓட்டு வங்கிகளில் அவர் வசம் -80%
4.இஸ்லாம்,கிருஸ்துவ ஓட்டு வங்கியிலும் -50%
5.பெண்கள் ஒட்டு வங்கியில்-90 %
6. சினிமா ரசிகர்கள் 60 %
7.கட்சி சேராத ஒட்டு வங்கி-90 %//

இதன்படி பார்த்தால், தி.மு.க எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகை கூடப் பெற்றிருக்காதே?//


பழமை பழமைபேசியின் கேள்வி நியாயமனது.

ஆதரவு ஒட்டு வங்கியில் 60 % வரைதானே ஓட்டளிக்கிறார்கள்.

பொதுவாக ஓட்டளிப்பு விகிதம் அதிகமாகும் போது MGR ம் அதிமுகாவும் வெற்றி பெற்று வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் சொல்வார்கள்.

இன்றும் கலைஞரின் ஆதரவு ஓட்டு வங்கியை விட அவரது எதிர்ப்பு ஓட்டு வங்கி வலிமையானது.( திமுக வை பிடிக்கும் ஆனால் கருணாநிதியை பிடிக்காது+முற்பட்ட மக்களின் ஓட்டு வங்கி+ஆட்சி மீது உள்ள எதிர்ப்பு+பொதுவாய் ஆட்சி மற்றத்தை விரும்பும் மக்கள் மனம்+விலைவாசி, குறிப்பாய் அரிசி விலை)

ஆனால் அது பிளவு பட்டுக் கிடக்கிறது என்று சொல்லப் படுவதை மறுக்க முடியாது.

இன்றக்கும் ஜெ.யும்+ வி.காந்தும்+பாமகா அல்லது மதிமுக,இடது அல்லது வலது.
இவர்கள்
கூட்டணி அமைத்தால் கலைஞரின் நிச்சயிக்கப் பட்ட தேர்தல் வெற்றி சாத்யமா தெரியவில்லை.( ஒரு யூகம் தான்)

காங்கிரஸ் வேறு மதில் மேல் பூனையாய்

திமுக அல்லது வி.காந்த் என்று இருப்பதாக செய்திகள் உள்ளதே?

பா.ஜ.க மறைமுகமாய் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பிருக்கிறது
என்ன இருந்தாலும் அவர்களுக்கு, ஜெ கலிஞரை விடப் பராவாயில்லை.
ஆயிரம் இருந்தாலும் ஜெ !

திருமங்கலத் தேர்தல் முடிவு இதன் போக்கை சொல்லலாம்.

ஆனாலும் திமுக தான் இதுவரை நடந்த தேர்தல்களில் செய்யாத கடும் முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். பணமும் வெள்ளமாய் ஒடும். என்ற பத்திரிக்கை செய்திகள் உண்மையாக்கபடுமா?
காலம் பதில் சொல்லும்.

காங்கிரஸும் அதன் பங்குக்கு இடையிறு செய்யலாம்
பா.ம.க பிகு பண்ணுகிறது.
திருமங்கலம் திருக்குவளையாருக்கு திருப்தியைத் தருமா?

அரசு

Anonymous said...
December 17, 2008 at 10:55 PM  

//காங்கிரஸும் அதன் பங்குக்கு இடையிறு செய்யலாம்
பா.ம.க பிகு பண்ணுகிறது.
திருமங்கலம் திருக்குவளையாருக்கு திருப்தியைத் தருமா?

அரசு//

கலைஞருக்கு மாற்று வரும் வரை திமுக வின் வெற்றி/ தோல்விகளை யாரும் அறுதியிட்டிச் சொல்லமுடியாது.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் மற்றொரு MGR ஆவாரா?

கலைஞரின் ஆயுட் காலம் வரைக்கும் ரஜினியின் அரசியல் பிரவேசம் "நோ"
எனபதில் ரஜினி திடமாய் இருக்கிறார்.

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சகோதரர்கள்/பேரன்கள் ஒற்றுமை காக்கப் படும் வரை அவரை வெற்றி கொள்வது என்பது ...........

மதிபாலாவின் பதிவுகளுக்கு பாரட்டுகள்

கல்லுரிக் காலங்களில் திமுக மாநாடுகளில் கலந்து கொண்ட நினைவுகளையும்,குறிப்பாக கோவை,மதுரை மாநாடுகள்(1970-1972), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சேரன் மகாதேவி திமுக வேட்பாளருக்காக காலை முதல் நள்ளிரவுவரை லாரிகளில்
"போடுகங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து"
"ஒரு லாரி போறுமா? ஒன்பது லாரி வேணுமா?"
" உங்கள் சின்னம் உதயசூரியன்"

தொண்டை கட்டும் வரை கோஷம் எழுப்பிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.


மீண்டும் மதிபாலாவுக்கு நன்றிகள்.

Anonymous said...
December 18, 2008 at 12:01 AM  

//ஊழல் மற்றும் குடும்ப அரசியல் என்பது திமுக பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய, அல்லது குறைந்தபட்சம் நாடு தழுவிய பிரச்சினை. திமுக வை விமர்சிக்கையில் ஏனையவற்றை விமர்சித்தால் பயனாக இருக்கும். அன்றேல் திமுக -வை தெரிவு செய்து குற்றம் சாட்டுவதுபோல் ஆகிவிடக்கூடும்.

நன்றி பரூக்//

தோழா சரிதான், தி.மு.க வின் பாரம்பரியத்துக்கும் கொள்கைக்கும் இது அழகல்ல..அண்ணாவே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்..

தி.மு.க இல்லையேல் தமிழ்நாட்டின் நிலை பீகார் போல் மாறிருக்கும் சந்தேகமே இல்லை .ஆனால் கலைஞரின் வாழ்க்கை பயணம் தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர்,அறிஞர் அண்ணா அவர்களோடு சமகாலங்களில் ஆரம்பதித்தது.. ஆனால் இவர் மட்டும் ஏன் குடும்பத்துக்காக சேக்கலாம் தப்பே இல்லை அதுக்காக இப்படியா?..

மனது ஏத்துக்கொண்டாலும் புத்தி மறுக்கிறது...

தமிழைக் கொண்டு தமிழர்களை அடிமை ஆக்கினால் அந்த தமிழையும் தூக்கி எறிவேன் இதன் உண்மை நிலை இன்று தெரிகிறது, இதை சொன்னவர் திராவிட இனத்தின் தந்தை பெரியார்...செம்மொழி ஆக்கி விட்டோம் என்று மார்த்தட்டினார்கள், இன்று நமது மொழியில் இருந்து பிறந்த தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழி ஆகிவிட்டது..

உலக அளவில் லத்தின், சைனீஸ், அரபிக் வரிசையில் இடம் பிடிக்க வேண்டிய நாம் இன்று அண்டை மொழிகளுடன் சண்டை போடும் நிலை வந்து விட்டது..

யோசித்துப் பாருங்கள் மதராஸ் மாகணத்தை தமிழ்நாடாக மாற்றிய கழகத்தின் தலைவருக்கு இது அழகல்ல..


காலம் அதன் பதில் (பலன்) தரும்

மோகன் கந்தசாமி said...
December 19, 2008 at 2:16 AM  

வாவ், மிஸ்டர் அனானி,

செய்தி அலசலோடு உங்கள் அனுபவத்தையும் சேர்த்து வாசிப்பை சுவாரசியமாக்கிவிட்டீர்கள். பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

மோகன் கந்தசாமி said...
December 19, 2008 at 2:18 AM  

பரூக்,

உங்கள் கருத்துக்கள் பல ஏற்றுக்கொள்ளும்படி உள்ளன.

///தமிழைக் கொண்டு தமிழர்களை அடிமை ஆக்கினால் அந்த தமிழையும் தூக்கி எறிவேன் இதன் உண்மை நிலை இன்று தெரிகிறது,///

இது நச்!!

மதிபாலா said...
December 21, 2008 at 11:18 PM  

கலைஞர் அவர்கள் MGR ஆன் செல்வாக்கை பற்றி தவறாய் கணித்தார்கள் என்று சொல்வார்கள்.//

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

கலைஞர் தவறாகக் கணித்தது எம்.ஜி.ஆரின் செல்வாக்கை அல்ல. மக்கள் புத்திசாலிகள் என்றுதான் தவறாகக் கணித்தார்.ஆனால் தாங்கள் அபப்டி அல்ல என்று நிருபித்தார்கள் மக்கள்!!

மதிபாலா said...
December 21, 2008 at 11:20 PM  

அதிமுக தலைமை பதவி - நிரந்தரமாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது....

திமுக தலைமை பதவி - சில ஆண்டுகளுக்கொருமுறை கலைஞருக்கு ரெனியூ செய்யப்படும்....

//

இயல்பிலேயெ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குள்ள அதிகப்படியான விளம்பரமும் ஒரு காரணம்.

தவிர்த்து இது தமிழர்களின் எண்ணவோட்டத்தில் உள்ள பிரச்சினை.

மதிபாலா said...
December 21, 2008 at 11:24 PM  

அருமையான கட்டுரை, ஆனாலும் பேராசிரியர் பெருந்தகை மற்றும் சாதிக்பாட்சா அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் தி.மு.க வின் அந்த 13 ஆண்டு கால வரலாறு முழுமை அடையாது.//

பேராசிரியராக இருக்கட்டும் , நாவலராக இருக்கட்டும் , நாஞ்சிலாராக இருக்கட்டும் , சம்பத்தாக இருக்கட்டும் , சாதிக் பாட்ஷா வாக இருக்கட்டும். யாரையும் குறிப்பிடமாலிருக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஒரு சில குறிப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறேன் என்றே சொல்லியிருக்கிறேன். சுட்டிக்காட்டியதன் மூலம் பல வாசகர்களுக்கு அச்செய்திகள் போயிருக்கும் , அதற்கான பாராட்டுக்கள்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள் பல நண்பர் பழமைபேசி.

மதிபாலா said...
December 21, 2008 at 11:28 PM  

கலைஞர் தலைவர், பேராசிரியர் பொதுச்செயலாளர் என்று வாழ்நாளெல்லாம் கட்சிப் பதவியில் இருப்பதில் உட்கட்சி ஜனநாயகம் எங்கேயிருக்கிறது? //

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திரேலியாவின் ஜான் ஹோவர்ட் தொடர்ச்சியாக பலமுறை மக்களால் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவும் அவ்வாறே.

அதற்காக அதெல்லாம் ஜனநாயகமில்லை என்று சொல்லிவிட முடியுமா நண்பரே????

இன்றைக்கு தலைவர் பதவிக்கோ , பொதுச் செயலாளர் பதவிக்கோ யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது உண்மைதானே? யாரும் போட்டியிடவில்லை என்றால் அது வேறு விடயம்.

உங்கள் கருத்திற்கு நன்றிகள் திரு.திரு. ( திருதிரு அல்ல , ஹிஹிஹி_)

மதிபாலா said...
December 21, 2008 at 11:31 PM  

காங்கிரஸும் அதன் பங்குக்கு இடையிறு செய்யலாம்
பா.ம.க பிகு பண்ணுகிறது.
திருமங்கலம் திருக்குவளையாருக்கு திருப்தியைத் தருமா?
//

திருமங்கலம் அனேகமாக திமுகவிற்கு சாதகமாய் இராது போலத்தான் தோன்றுகிறது.

பார்ப்போம்!

மதிபாலா said...
December 21, 2008 at 11:32 PM  

மதிபாலாவின் பதிவுகளுக்கு பாரட்டுகள்

கல்லுரிக் காலங்களில் திமுக மாநாடுகளில் கலந்து கொண்ட நினைவுகளையும்,குறிப்பாக கோவை,மதுரை மாநாடுகள்(1970-1972), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சேரன் மகாதேவி திமுக வேட்பாளருக்காக காலை முதல் நள்ளிரவுவரை லாரிகளில்
"போடுகங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து"
"ஒரு லாரி போறுமா? ஒன்பது லாரி வேணுமா?"
" உங்கள் சின்னம் உதயசூரியன்"

தொண்டை கட்டும் வரை கோஷம் எழுப்பிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.


மீண்டும் மதிபாலாவுக்கு நன்றிகள்.//

நன்றிகள் திரு.அனானி,

அதே நினைவுகளுடன் நானும் இன்னும் கொஞ்சம் நம்பிககையுடனும்.

மதிபாலா said...
December 21, 2008 at 11:37 PM  

மனது ஏத்துக்கொண்டாலும் புத்தி மறுக்கிறது.../

அதேதான் பாருக்

//

தமிழைக் கொண்டு தமிழர்களை அடிமை ஆக்கினால் அந்த தமிழையும் தூக்கி எறிவேன் இதன் உண்மை நிலை இன்று தெரிகிறது, இதை சொன்னவர் திராவிட இனத்தின் தந்தை பெரியார்...செம்மொழி ஆக்கி விட்டோம் என்று மார்த்தட்டினார்கள், இன்று நமது மொழியில் இருந்து பிறந்த தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழி ஆகிவிட்டது..

உலக அளவில் லத்தின், சைனீஸ், அரபிக் வரிசையில் இடம் பிடிக்க வேண்டிய நாம் இன்று அண்டை மொழிகளுடன் சண்டை போடும் நிலை வந்து விட்டது..


//

அதில் நாமென்ன செய்ய முடியும் திரு.பாருக். நமது மொழி செம்மொழியாகவேண்டும் என்று நாம் பாடுபட்டோம் , அது போலவே மற்றவர்களும். நாம் எந்த உரிமையுடன் போராடுகிறோமோ அதே உரிமையுடன் அவர்களும் போராடுகிறார்கள்.

ஆனால் அந்த மக்கள் அப்படிப் போராடுபவனுக்கு பின்னால் நிற்கிறார்கள். நமது மக்கள் அதையும் ஒரு செய்தியாகப் படித்துவிட்டு மெகா சீரியலில் மூழ்கி விடுகிறார்கள் அவ்வளவுதான்.

//

யோசித்துப் பாருங்கள் மதராஸ் மாகணத்தை தமிழ்நாடாக மாற்றிய கழகத்தின் தலைவருக்கு இது அழகல்ல..


காலம் அதன் பதில் (பலன்) தரும்

//

விமர்சனங்களில்லாத மனிதன் இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லை நண்பா.

சாய்ஸ்களில் ஏதேனும் ஒரு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சாய்ஸில் எந்த சாய்ஸ் நல்லசாய்ஸ் என்று மட்டுமே பார்த்தலே ப்ராக்டிகல்.

மதிபாலா said...
December 21, 2008 at 11:38 PM  

செய்தி அலசலோடு உங்கள் அனுபவத்தையும் சேர்த்து வாசிப்பை சுவாரசியமாக்கிவிட்டீர்கள். பின்னூட்டத்திற்கு நன்றிகள்.//

ரிப்பீட்டேய்.கிடங்கு